Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரமேஷ்பாபு பிரக்யானந்தா: உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இவரின் சிறப்பு என்ன? #Praggnanandhaa

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரமேஷ்பாபு பிரக்யானந்தா: உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இவரின் சிறப்பு என்ன? #Praggnanandhaa

  • பிரதீப் குமார்
  • பிபிசி செய்தியாளர்
6 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆர் பிரக்யானந்த்

பட மூலாதாரம்,ANI

எந்தவொரு ஆட்டத்திலும் உலகின் நம்பர் ஒன் வீரருக்கு ஒரு அடி முந்தியிருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். சில வீரர்கள் தங்களுடைய லட்சியமாக நம்பர் ஒன் வீரரை தோற்கடிப்பதை வாழ்நாள் கனவாகவும் கருதியிருப்பர்.

ஆனால், யதார்த்தத்தில் எத்தனை வீரர்களும் இந்த விஷயங்களை சாத்தியப்படுத்தியிருப்பார்கள் என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கே இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த பிரக்யானந்தா தனக்கு முன்னால் இருந்த உலக செஸ் சாதனையாளரை ஒரு முறை அல்ல இரண்டு முறை வீழ்த்தி சதுரங்க உலகையை தன் பக்கம் பார்க்க வைத்திருக்கிறார். அதுவும் முதல் முறை வெற்றி பெற்ற பிறகு அடுத்த மூன்றே மாதங்களில் இரண்டாம் முறையாகவும் அதே உலக சாம்பியனை வீழ்த்தியிருக்கிறார் பிரக்யானந்தா.

சதுரங்க போட்டிகள் மீது 17 வயது கூட ஆகாத பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த பிறகு, ஊடகங்கள் முன்பு தோன்றியபோது தமது வெற்றி குறித்த சுய விமர்சனத்தை அவரே வெளியிட்டார்.

"இப்படி நான் வெற்றி பெற விரும்பவில்லை," என்று பிரக்ஞானந்தா கூறினார்.

விளையாட்டில் வீரர்கள், வீராங்கனைகள் வெற்றி பெறுவதும், வெற்றி மற்றும் தோல்வியை சமமாக அடைவதும், தோல்வியையே தழுவுவதும் அங்கம்தான். அது அவர்களுக்கு புதிய அனுபவங்களைத் தரும்.

ஆனால் விளையாட்டின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்பவர்களுக்கு பிரக்ஞானந்தா தமது ஆடுதிறன் மூலமாகவே அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை செசபிள்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

40 போட்டிகள் கொண்ட அந்தப் போட்டியில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. ஆனால் நாற்பதாவது ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் தவறிழைத்ததால், 'செக்மேட்' என்ற சூழ்நிலை உருவாகி, வேறு வழியில்லாத வகையில் குதிரையை அகற்றினார்.

நாற்பது சவால்களுக்குப் பிறகு, அத்தகைய விரைவான போட்டியில் வீரர்கள் 10 விநாடிகள் அதிகரிப்பு நேரத்தைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் இந்த போட்டியில் பிரக்யானந்தா வெற்றி பெற்றார்.

ஆனால், மிகவும் மகிழ்ச்சியாக இந்த வெற்றியை வெளிப்படுத்தாதவராக பிரக்ஞானந்தா இருந்ததற்கு இதுவே காரணம், உலகின் நம்பர் ஒன் வீரரை கொஞ்சம் ஆரோக்கியமான நிலையில் வெல்லவே பிரக்ஞானந்தா விரும்புவார் என்கிறார்கள் அவரை நன்கறிந்தவர்கள்.

 

ஆர் பிரக்யானந்த்

பட மூலாதாரம்,R PRAGGNANANDHAA

செஸ் உலக உணர்வு

திறமை மற்றும் தன்னம்பிக்கை, இவை இரண்டும் பிரக்ஞானந்தாவிடம் காணலாம். தூரத்தில் இருந்து பார்த்தால், அவரது கண்ணோட்டம் ஒரு சாம்பியனாகத் தெரியவில்லை, வெறுமனே எண்ணெய்யில் அழகுபடுத்தப்பட்ட முடி போல அவர் ஜொலிக்கிறார். ஆனால், நிஜத்தில் எளிமையாகவும் இயல்பான மாநிறத்துடன் நம்பிக்கை நிறைந்தவராக இருக்கிறார். செஸ் உலகின் மிகப்பெரிய நாயகனாக இப்போது இவர் மீதான பார்வை விரிந்திருக்கிறது.

முன்னதாக கடந்த பிப்ரவரியில், ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் 39வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.

அவரது ஆட்டத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வரும் மூத்த பத்திரிக்கையாளரும், தி இந்து நாளிதழின் துணை ஆசிரியருமான ராகேஷ் ராவ், "பிரக்யானந்தா நிச்சயமாக மகத்தான ஆற்றலைப் பெற்றவர். இதை அவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிரூபித்துள்ளார். அவரது மிகப்பெரிய அம்சம், எதிராளியின் கணக்கிடும் அடுத்தடுத்த நகர்வுகளை முன்பே ஊகித்துச் செயல்படுவதுதான். எதிரில் உள்ள வீரரின் நகர்வைப் பார்த்து தமது நகர்வை எவ்வாறு கணக்கிடுவது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்," என்கிறார்.

பிரக்ஞானந்தா சதுரங்க உலகில் நம்பர் ஒன் வீரரை மூன்று மாதங்களுக்குள் இரண்டு முறை தோற்கடித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செஸ் உலகம் பிரக்ஞானந்தா பற்றி அறியத் தொடங்கியபோது, அவர் 12 வயது மற்றும் 10 மாதங்களை அடைந்திருந்தார். அதற்கு முன்பு எந்த இந்தியனும் செய்ய வெளிப்படுத்தாத ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.

 

ஆர் பிரக்யானந்த்

பட மூலாதாரம்,AFP

இளம் வயது, பெரிய சாதனைகள்

இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற சாதனையை இரண்டாவது முறையாகவும் நிழ்த்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

இவருக்கு முன்பாக, இதுபோன்ற சதுரங்க உலகின் கவனத்தை ஈர்த்தவர் யுக்ரேனின் செர்கே கர்ஜாகின். 2002 இல் அவர் தமது சாதனையை நிகழ்த்தினார்.

அந்த வகையில் பதின்ம வயதுக்குள் நுழைவதற்கு முன்பே கிராண்ட் மாஸ்டராகும் தகுதியை நிரூபித்தவர்கள் இந்த இரண்டு வீரர்கள் மட்டுமே.

செர்கே கிராண்ட் மாஸ்டர் சாதனையை 12 வயது 7 மாதங்களிலும், பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதங்களிலும் எட்டினர். ஆனால் பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் ஆனதும், சூசன் நைனன் பிரபல விளையாட்டு இணையதளமான ஈஎஸ்பிஎன்-இல் "ராஜாவாக இருக்கக்கூடிய ஒரு பையன்" என்று ஒரு கட்டுரை எழுதினார்.

இந்த வீரரின் பெயரில் தாங்கியுள்ள எழுத்துப்பிழை, செஸ் உலகமே கலங்கி நிற்கும் வகையில் உள்ளது என்று அந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிப்படையாக, ஒரு பெயர் அழைக்கப்படுவதை வருணித்த ஆசிரியரின் குறிப்பு, அதிர்ச்சியூட்டும் தரத்தை நோக்கியதாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர்.

பிரக்ஞானந்தாவின் சாதனையை இரண்டு வழிகளில் பார்க்கலாம், ஒருபுறம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேகமாக முத்திரை பதிக்கிறான். இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர். தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இது ஒரு அம்சம்.

பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவரது நான்கு வயது சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்பதுதான்.

அதாவது பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்கான வசதி, வாய்ப்புகளை அவரது சகோதரி வீட்டிலேயே செய்து கொடுத்திருக்கிறார். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்களின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் செஸ் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

பிபிசி தமிழுக்கு ரமேஷ் பாபு அளித்த பேட்டியில், "ஆரம்ப நாட்களில் சதுரங்க வகுப்பிற்கு எனது மகளின் பெயரை எழுதியிருந்தேன். அவள் நன்றாக விளையாடுவாள். ஆனால் போட்டிகளில் விளையாடுவதற்கு நிறைய பயணம் செய்ய வேண்டியிருந்தது, மேலும் செலவுகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. நிலைமை சரியில்லை. அதனால் என் மகனை சதுரங்க விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைக்க விரும்பினேன். ஆனால் நான்கு வயதிலிருந்தே தன் சகோதரியுடன் சதுரங்கம் விளையாட பிரக்ஞானந்தா தொடங்கினான். அவனுக்கு செஸ் தவிர வேறு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இல்லை. சதுரங்கத்திற்கு முன்னால் மணிக்கணக்கில் செலவழித்தான். சதுரங்க பலகையைப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டே இருப்பான். அவன் சிந்தனையை அதுவே மாற்றியிருக்க வேண்டும்," என்றார்.

 

ஆர் பிரக்யானந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்கா சதுரங்கத்திலும் மாஸ்டர்

பிரக்ஞானந்தாவுக்கும் அவரது அக்காவுக்கும் இடையிலான வயது வித்தியாசம் நான்கு வருடங்கள். ஆனாலும் அந்த வேறுபாடுகளைக் கடந்து சதுரங்கத்தின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் சகோதரனுக்கு கற்றுக் கொடுத்தார் அவரது சகோதரி. விரைவில் ஒரே வீட்டிலேயே இருவரும் பரஸ்பர போட்டி விளையாட்டுகளை ஆடத் தொடங்கினர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியேயேயும் திறமைகளை வெளிப்படுத்தினர். அதன் விளைவாக வீட்டில் வெற்றிக் கோப்பைகள் குவிந்தன. 2015இல் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது தங்களுடைய வெற்றிக் கோப்பைகளில் சிலவற்றை இந்த சாதனை சகோதர, சகோதரிகள் இழந்தனர்.

ஸ்பான்சர்களுக்கு பஞ்சமில்லாத வகையில் இருவரின் ஆட்டமும் அமைந்தது. ஆனால் போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தை, குழந்தைகளுடன் வெளியூருக்கு அனுப்பி ஆட வைக்க வெளியே கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளியது. பணப்பற்றாக்குறை பிள்ளைகளுக்கு இடையூறாக மாறிவிடக்கூடாது என்று ரமேஷ் பாபு நினைத்திருந்தார்.

பிரக்ஞானந்தா முதலில் 2013இல் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினார், பின்னர் இரண்டு ஆண்டுகளில் 15 வயதுக்குட்பட்டோருக்கான உலக பட்டத்தை வென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம். சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஆவது எவ்வளவு சவாலானது என்பதை நீங்களே அளவிடலாம். அது ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதற்கு நிகரானதாக சக வீரர்கள் ஒப்பிடுகிறார்கள்.

1987ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு இந்திய சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர் எவரும் இல்லாத நிலை இருந்தது. 1987ஆம் ஆண்டு டிசம்பரில் அந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த தமிழரான விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். அவருக்குப் பிறகு கடந்த 35 ஆண்டுகளில் இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் செஸ் வீரர்களின் எண்ணிக்கை 73ஐ எட்டியது. அந்த அளவுக்கு இந்த விளையாட்டில் விஸ்வநாத் ஆனந்த் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இது குறித்து ராகேஷ் ராவ் கூறும்போது, "சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்தின் பங்களிப்பு குறித்து நாடு முழுவதும் அதிகம் பேசப்படவில்லை. ஆனாலும் நிச்சயமாக அவர் ஒரு சிறந்த வீரராகக் கருதப்படுகிறார். இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்கள் பட்டாளத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தவர் ஆனந்த் என்பதுதான் உண்மை," என்றார்.

தற்போது இந்தியாவில் வியக்கத்தக்க செஸ் திறமை வெளிப்படுத்தப்படுவதற்கும் இதுவே காரணம். கார்ல்சனை தோற்கடித்ததும் பிரக்ஞானந்தாவின் பெயர் சதுரங்க உலகின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. ஆனால் அவரது வயது மற்றும் சாதுர்யத்தை அர்ஜுன் இகிர்காசி, டோமராஜு குகேஷ், நிஹால் சரின் போன்ற பதின்ம வயது கிராண்ட் மாஸ்டர்கல் கூட அண்ணாந்து பார்க்கிறார்கள்.

 

ஆர் பிரக்யானந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்ப ரீதியாக வேகமான விளையாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் ஆரம்பத்திலிருந்தே கொடுக்கப்படுகின்றன. மேலும் ஆக்ரோஷமாக விளையாடுபவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஏனெனில் காலப்போக்கில் அந்த வீரருக்கு விளையாட்டில் முதிர்ச்சி வரும் என்று நம்பப்படுகிறது.

இந்த வித்தியாசத்தை மும்பையில் நடந்த ஒரு விளையாட்டு இதழின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பாக விளக்கினார்.

இளம் செஸ் சாம்பியனான நிஹால் சரினுக்கு விருதை வழங்கிப் பேசுகையில், "என் காலத்தில் நான் மிக வேகமாக விளையாடுவேன். ஆனால் ஐந்து நிமிடத்தில் விளையாடும் ஆட்டத்தை நிஹால் ஒரு நிமிடத்தில் ஆடுகிறார்," என்றார்.

இந்த அம்சம்தான் இந்த இளம் வீரர்களின் பலம். பிரக்ஞானந்தா கார்ல்சனை தோற்கடித்த போட்டிகள் 15 நிமிடங்களில் நடந்தன. மேலும் அவை ஆன்லைன் போட்டிகள்.

இந்தியாவின் இளம் வீரர்களும் மவுஸ் மற்றும் கணினி மூலம் குழந்தைப் பருவத்தின் பலனைப் பெறுவதற்கு இதுவே காரணம். ஆனால், பிரக்யானந்தா போன்ற சாம்பியன் வீரர்களின் பெருமை இன்னும் தொடர வேண்டுமானால், அவர்கள் 90 நிமிட முழுப் போட்டியில் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த உலக செஸ் சாம்பியன் இந்தியாவிலிருந்து உருவாவாரா என்பது நிரூபணமாகும்.

பிரக்ஞானந்தாவின் ஆட்டம் எவ்வளவு பெரிய சவாலாக உள்ளது என்பது குறித்து அவரது பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஒரு சதுரங்க விளையாட்டில், தொடக்க நேரத்தில் பிரக்ஞானந்தா தவறு செய்யவில்லை என்றால், அவர் நடுத்தர மற்றும் இறுதிப் பகுதிகளில் மிகவும் வலுவாக விளையாடுவார் என கருதலாம். கார்ல்சனுக்கு எதிரான இரண்டு வெற்றிகளிலும் அதைத்தான் அவர் நிரூபித்தார், ஆனால் உலக சாம்பியனைப் பொருத்தவரையில் அந்த இலக்கு மிகப்பெரியது," என்கிறார்.

https://www.bbc.com/tamil/sport-61539949

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.