Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

 'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற படைய அரண்களின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

இதற்குள் பல்வேறு காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டப்பட்ட மண்ணரண்கள், காவலரண்கள், காப்பரண்கள், பதுங்ககழிகள் ஆகியவை தொடர்பான படிமங்களுடன் என்னால் தன்னறியப்பட்ட விளக்கங்களும் உள்ளன.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிககளால் இறுதிப்போரில் கட்டப்பட்ட அகழியுடைய மண்ணரண்கள்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மண்ணரண்கள் & அகழிகள்

 

நிலத்தைத் தோண்டி அதிலிருந்து பெறப்படும் மண்ணால் இவை கட்டப்படுவதால் மண்ணரண் எனப்பட்டன. தவிபுவின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகளாகத் தொழிற்பட்ட இவை எமது நாட்டின் எல்லைகளில் பல கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு மண்ணரணின் உயரமும் அதுவமைந்துள்ள தரைத்தோற்றத்திற்கும் அமைப்பவர்களின் நேரவசதி மற்றும் பகைப்படை நெருங்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபட்டிருந்தன. இவை 5 முதல் 20 அடி அளவு உயரம் கொண்டவையாக இருந்தன. இவை தொடர்ச்சியாக பல கிமீ-களுக்கு நீண்டிருந்தன. இதன் சில இடங்களில், எதிரியின் பக்கத்தில், வலுவெதிர்ப்பிற்காக மிதிவெடிகள் மற்றும் சூழ்ச்சிப்பொறிகள் புதைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கு முன்பக்கத்தில் - எதிரியின் பக்கம் தாண்டி - அகழி காணப்பட்டது. அந்த அகழியானது 5 முதல் 15 அடி வரை ஆழம் கொண்டதாக இருந்தது. அந்த அகழி தோண்டப்படும் போது எடுக்கப்படும் மண்ணும் இந்த மண்ணரண் கட்டுவதற்குப் பயன்பட்டது. பெரும்பாலான வேளைகளில் தோண்டப்படும் அகழியின் மண்ணே மண்ணரண் கட்டப் பாவிக்கப்பட்டது.

இந்த அகழிக்கான நீரானது இடங்களைப் பொறுத்து பெறப்பட்டது. ஆழமாகத் தோண்டும் போது சில இடங்களில் நீர் வெளிப்பட்டு அது பயன்பட்டது. நீர்நிலைகளிற்கு அருகிலெனில், அவற்றிலிருந்து வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அங்கிருந்து அகழிக்கு நீர் கொணரப்பட்டது. அகழியின் எதிரியின் பக்கத்தில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள், சூழ்ச்சிப்பொறிகள் மற்றும் தகரி எதிர்ப்புக் கண்ணிவெடிகள் என்பன புதைக்கப்பட்டு மண்ணரணின் வலுவெதிர்ப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்தது. 

10_12_08_28.jpg

'2008ஆம் ஆண்டு புதுமுறிப்பில் கட்டப்பட்டிருந்த அகழியுடைய மண்ணரண் ஒன்று. அருகில் இருந்த குளம் ஒன்றிலிருந்து வாய்க்கால் மூலம் அகழிக்கு நீர் கொணரப்படுவதைக் காண்க. இதில் அகழியினுள் உள்ள சிங்களப் படைஞனின் சடலத்தைக் கொண்டு அவ்வகழியின் ஆழத்தை மனக்கணக்கிடுக | படிமப்புரவு: தவிபு'

 

முறிகண்டி அதிரடி வலிதாக்குதல்.png

'2008ஆம் ஆண்டு முறிகண்டியில் பகைவரால் பரம்பப்பட்ட புலிகளின் முன்னரங்க நிலையானது மற்றொரு அதிரடி வலிதாக்குதலில் மீட்கப்பட்ட பின் அகழிக்குள் கிடக்கும் பகைவரின் சடலங்கள். | படிமப்புரவு: தவிபு'

 

bund.jpg

'கட்டையான மண்ணரணும் நீரற்ற அகழியும். இம்மணரணின் நடுவில் பதுங்ககழியுடன் கூடிய காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க'

சில இடங்களில் அகழிகளின் அகலமும் ஆழமும் நன்கு விரிவுபடுத்தப்பட்டு தகரி எதிர்ப்புக் கிடங்குளாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளின் அகழியுடைய மண்ணரண் (1).jpg

'இப் புதுமுறிப்பு அகழி தகரி எதிர்ப்புக் கிடங்குகளாகவும் பயன்படுத்தப்பட்டது. | படிமப்புரவு:defence.lk'

 

விடுதலைப்புலிகளின் அகழியுடைய மண்ணரண் (2).jpgவிடுதலைப்புலிகளின் அகழியுடைய மண்ணரண் (1).png

'தகரி எதிர்ப்புக் கிடங்குகளாக பயன்படுத்தப்பட்ட அகழியொன்று.'

மண்ணரண்களின் மேற்பக்கத்தில் - '∧' - தடிகள் நடப்பட்டு அவற்றில் ஓலைகள் வேயப்பட்டு கயிறால் வரியப்பட்டிருந்தன. அந்த ஓலைகளானவை தென்னோலை முதல் பனவோலை என்று வேறுபட்டிருந்தன. சில இடங்களில் வேய்வதற்கு கால அமையம் இல்லாத போது மொட்டையான மண்ணரணில் நின்றபடியே போராளிகள் வலுவெதிர்ப்புக் கொடுத்தனர். சில இடங்களில் சாதாரண தரப்பாள்கள் மறைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டன.

18_05_08_mnr_20.jpg

' 19-05-2008 அன்று மன்னார் இருங்காண்டாள்குளத்தில் இருந்து வண்ணாக்குளம் நோக்கி முன்னேறிய சிங்களப் படைகளுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலின்போது 'எமது பக்கத்தில்' வீழ்ந்துகிடக்கும் படையினரின் சடலத்தைப் பார்க்கும் பெண் போராளி. அவரின் பின்னால் உள்ள மண்ணரணின் மேல் தடிகள் நடப்பட்டு அவற்றில் தென்னோலைகள் வேயப்பட்டு கயிறால் வரியப்பட்டிருப்பதை நோக்குக.

 

14012009 silaavaththai_Moment4.jpg

'சிலாவத்தை முன்னரங்க வேலியில் 14/01/2009 இருந்த மண்ணரணில் தென்னோலை கொண்டு மறைப்புக் கட்டப்பட்டுள்ளதை பார்க்குக. அத்தோடு அந்த தென்னோலை மறைப்பின் நடுவே ஒரு காவலரண் ஒன்றும் உள்ளதைக் காண்க.'

 

puthumurippu counter attack.jpg

'புதுமுறிப்பில் கட்டப்பட்டிருந்த அகழியுடைய மண்ணரண் ஒன்றின் கீழ் நோக்கியதான பார்வை. | நீல அம்புக்குறி: இது அகழியின் ஆழத்தை குறிக்கும் படியாக அகழியின் எதிரியின் பக்கத்தை காட்டும்படியாக குறித்துள்ளேன். அம்புக்குறியிட்ட பகுதியையும் சூழலையும் நோக்குக. பச்சை நிறமானது மேற்றரையாகும். அந்தக் கபில நிறமானது அகழப்பட்ட அகழியின் எதிரிப்பக்க அடிநிலமாகும்; கறுப்பு அம்புக்குறி: இது மண்ணரணைக் குறிக்கிறது.  கறுப்புக்கும் நீலத்திற்குமான உயர வேறுபாட்டையும் நோக்குக. மேலும் இதுவும் ஒரு தகரி எதிர்ப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் அறிந்துகொள்க.| படிமப்புரவு: தவிபு'

 

விடுதலைப்புலிகளின் அகழியுடைய மண்ணரண்.jpg

'ஒரு அகழியுடைய மண்ணரண். நிழற்படம் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பின் எடுக்கப்பட்டது ஆகும். இதன் வேலிகளாக தடிகள் நடப்பட்டு அதில் தரப்பாள்கள் கட்டப்பட்டிந்தன என்பதை எதிரியின் பக்கம் வீழ்ந்து கிடக்கும் தரப்பாள்கள் காட்டுகின்றன.'

 

trench deep more than 8 feet filled with water.jpg

'8 அடிக்கும் ஆழமான அகழியைக் கொண்ட மண்ணரண்'

 

விடுதலைப்புலிகளின் அகழியுடைய மண்ணரண் (4).jpg

front side of ltte bund after overran by SLA.jpg

'அகழியுடைய மண்ணரண்கள். நிழற்படம் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பின் எடுக்கப்பட்டது ஆகும். அந்த பச்சை நிறச் சாக்கு மண்மூட்டைகள் எம்மவர் மண்ணரண் கைப்பற்றப்பட்டபின் 'எதிரியின் பக்கத்தில்' சிங்களவரால் போடப்பட்ட காவலரண்களாகும். | படிமப்புரவு: army.lk'

 

விடுதலைப்புலிகளின் அகழியுடைய மண்ணரண் (3).jpg

'ஒரு அகழியுடைய மண்ணரண். நிழற்படம் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பின் எடுக்கப்பட்டது ஆகும். மண்ணரண் மேலே பனையோலைகள் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதைக் காண்க.| படிமப்புரவு:army.lk' 

 

14012009 silaavaththai_Moment11.jpg

'சிலாவத்தையில் (14/01/2009) அமைக்கப்பட்டிருந்து மண்ணரணின் உயரத்தை அதற்கு அருகில் நிற்கும் புலி அண்ணாக்களின் உயரத்தை வைத்து அண்ணளவாக மனக்கணக்கிடுக'

 

இந்த மண்ணரண் கட்டுவதற்கு அகழிகள் தோண்டுவதற்கும் இடிவாருவகம்(bulldozer) மற்றும் கொடுங்கைவகம்(backhoe) ஆகியன விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு இவை பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவை சேதமடைந்தாலோ அல்லது மீளப் பயன்படுத்த இயலாத நிலைக்கு ஆளானாலோ அவை அவ்விடத்திலேயே புலிகளால் கைவிடப்பட்டுவிடும். அவ்வாறானவை பெரும்பாலான வேளைகளில் பின்னகர்த்தப்படும். சில வேளைகளில் களமுனையிலேயே விட்டுச்செல்லப்படும்.

earth-moving-equipment-ltte-bund-construction.jpg

'சேதமடைந்ததால் புலிகளால் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட கொடுங்கைவகம் | படிமப்புரவு:defence.lk'

மண்ணரண்களின் 'எமது பக்கத்தின்' மேற்பரப்பில் திறந்தவெளி 'காவலரண்கள்' அமைக்கப்பட்டிருந்தன. இவை சாக்கு மண்மூட்டைகளாலும் சில இடங்களில் வெறும் ஓரிரு மரக்குற்றிகளை மட்டும் முன்காப்பிற்கு வைத்துவிட்டு அதன்பின் கரந்து ஊறான நிலையிலும் சமராடுவர், புலிவீரர். சில இடங்களில் 'காப்பரண்கள்' மண்ணரணிற்கு உள்ளேயே அமைக்கப்பட்டிருந்தன. அவை மண்சாக்குகளாலும் வலுவான மரக்குற்றிகளாலும் அரணப்படுத்தப்பட்டிருந்தன. அம்மரத் துண்டுகளானவை பனை, தென்னை, முதிரை மற்றும் பலவாகும். 

FuPgztKXsAESR8o.jpg

'புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் உள்ள மண்ணரணுக்குள் இருக்கும் காப்பரண் ஒன்று, 2008. இக்காப்பரணின் வலது பக்கத்தில் இரு 'எமது பக்கத்தில்' ஏவறைகள் உள்ளதைக் காண்க | படிமப்புரவு:defence.lk'

ltte bund and a point surrounded by boobytraps and mines.webp

'புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் உள்ள மண்ணரணுக்குள் இருக்கும் காப்பரண் ஒன்று, 2008 | படிமப்புரவு:defence.lk'

 

ltte-women-10.jpg

'ஓரிரு மரக்குற்றிகளை மட்டும் முன்காப்பிற்கு வைத்து அதைக் காவலரணாக்கிவிட்டு அதன்பின் கரந்து ஊறான நிலையிலும் காவலிருக்கும் பெண்போராளிகள். 11-12-2008  கிளிநொச்சி | படிமப்புரவு: தவிபு'

இம்மண்ணரண்களின் 'எமது பக்கத்தில்' போராளிகள் சில வேளைகளில் 'நரிக்குழிகள்' தோண்டி அதற்குள் அமர்ந்தும் சமராடுவர்.

16_12_08_kili_04.jpg

'எமது பக்கத்தில் 'நரிக்குழி' தோண்டி அதற்குள் அமர்ந்துள்ள பெண்போராளியைக் காண்க. 11-12-2008  கிளிநொச்சி | படிமப்புரவு: தவிபு'

சில மண்ணரண்கள் அடிக்கும் பொழுது குறுக்குக்காக வலுவான மரங்கள் நிற்குமாயின் அவையும் மண்ணரணிற்குள் உள்வாங்கப்பட்டு அதைச்சூழ மண்ணரண் அடிக்கப்படுவதுண்டு. ஆனால் அம்மரத்தின் இலைகுழைகள் தறிக்கப்பட்டுவிடும். இதன்மூலம் அம்மரமானது ஒரு காப்புமறைப்பாக சமரின் போது அடிப்பாட்டாளரால் பயன்படுத்தப்படும்.

540962_395098720564434_202511038_n.jpg

'21-12-2008 அன்று முறிகண்டி அதிரடி வலிதாக்குதலின் போது மண்ணரணின் மேலே போராளியொருவர் மரமொன்றைக் காப்புமறைப்பாக பயன்படுத்திச் சுடும் காட்சியைக் காண்க. | படிமப்புரவு: தவிபு'

இந்த மண்ணரண்களின் மேல்தான் கனவகை சுடுகலன்கள் வைக்கப்பட்டு முன்னேறும் பகை மீது வேட்டுகள் தீர்க்கப்பட்டன. 

10_12_08_35 ecovering SLA dead bodies - 5 kilo m west of kili.jpg

'9-12-2008 கிளிநொச்சிக்கு 5கிமீ மேற்கே நடந்த சமரொன்றில் புலிகளின அதிரடிப்படையினர் கனவகை சுடுகலன் (W85) ஒன்றை மண்ணரண் மேலே வைத்து இயக்கும் காட்சி'

 

14012009 silaavaththai_Moment.jpg

'சமர் ஓய்விற்குப் பின்னர் முன்னரங்க வேலிக்கு அருகிலேயே அமர்ந்திருந்து சிற்றோய்வெடுக்கும் போராளிகள், சிலாவத்தை 14/01/2009'

 

மேலும், இவ்வாறாக கட்டப்பட்ட மண்ணரண்களில் காவல் போடுவதற்கு தமிழர் தரப்பில் ஆளணிப் பற்றாக்குறை இருந்ததால் மண்ணரணில் அடிக்கொரு ஆளாக காவல் போடப்பட்டிருப்பதில்லை. குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலேயே காவல்போடப்பட்டிருந்தது.

இவ்வாறாக நான்காம் ஈழப்போரில் புலிகளால் அமைக்கப்பட்ட மண்ணரண்களானவை முதன்மையாக சிங்களத் தரைப்படையை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு கட்டப்பட்டிருந்தாலும் பல இடங்களில் அகழிகள் நன்கு விரிவாக்கப்பட்டு தகரி எதிர்ப்புக் கிடங்குகளாகவும் பயன்படுத்தப்பட்டன.

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காவலரண்கள்

 

இவை காவல் காக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருக்கும் அரண்கள் ஆகும். களமுனைகள், களநிலைகள் மற்றும் ஊர்வழியவும் அமைக்கப்பட்டிருந்தன.

இவை மரக்குற்றிகள், மண்மூட்டைகள், மண் ஆகியவை கொண்டு அரணப் படுத்தபடுவதோடு இவற்றின் மேற்பக்கம் சிலவேளைகளில் பனைவோலைகளால் வேயப்பட்டிருக்கும், சிலவேளைகளில் மரக்குற்றிகள் கொண்டு அரணப்படுத்தப்பட்டிருக்கும். 

இவை பல்வேறு வடிவங்களில் இருந்தன. இவை மண்ணரண்கள் மேல் ஆங்கொன்று இங்கொன்றாக அமைக்கப்பட்டிருக்கும் (வலுவான காப்பரண் அல்லாதவை). இவற்றின் படிமங்களை மேலுள்ள மறுமொழிப்பெட்டியில் நீங்கள் காணலாம்.

 

sentry point vidaththalthiivu.jpg

'விடத்தல்தீவில் புலிகள் அமைத்திருந்த காவலரண் ஒன்று'

 

270585_133837873366562_5313202_n.jpg

'நான்காம் ஈழப்போரில் மழை காலத்தில் காவலரணினுள் நீர் புகுந்த போதும் நின்று காவலில் ஈடுபடும் புலிவீரி. துமுக்கி ஏவறை வழியாக வெளியில் நீண்டபடி நிற்பதைக் காண்க'

 

09_05_08_Ka'rukkaaykku'lam in Mannaa_12.jpg

'2008, கருக்காய்க்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்பு வேலியை அண்டிய காவலரண்'

 

ltte-soldiers.jpg

'2007, வடபோர்முனை முன்னரங்க வலுவெதிர்ப்பு வேலியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் காவலரண் ஒன்று'

 

529206_333098863479045_108657526_n.jpg

'2008, முறிகண்டியில் எல்லையோரமாக இருந்த திறந்த பதுங்ககழியுடனான ஒரு காவலரண்'

 

14012009 silaavaththai_Moment7.jpg

2008 இல் சிலாவத்தை முன்னரங்க வேலியில் இருந்த மண்ணரணோடு சேர்த்து இரு காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதைக் காண்க

 

118125709_201478404700508_3255189948393703531_n.jpg

'இது போன்ற காவலரண்களைப் படைத்தளங்களினுள் பெரும்பாலும் காணலாம். களநிலைகளிலும் அமைக்கப்படுவதுண்டு'

 

female-tamil-tiger-rebels-gather-at-their-base-after-overnight-guard-duty-in-kilinochchi-sri-lanka-july-12-2007.jpg

'2007, இதுதான் ஊர்வழிய அமைக்கப்பட்டிருக்கும் காவலரணின் தோற்றம் (வெறும் காவலரண் மட்டுமல்லாது காவலரணிற்குப் பின்னால் சிறு முகாமொன்றும் கூடவே இருக்கும்).  | படிமப்புரவு: Alamy'

 

large.unnamed.png.6b42fed4c3687a0cc74f20

இவை நிலத்திற்கு மேலே அமைக்கப்பட்டிருந்தன. அந்த இரு திறப்புகளுமே இதன் ஈரடுக்குக்குள் நுழையும் வழிகளாகும். உள்ளிருந்த அடுக்கானது மரங்களால் மூடப்பட்டு எறிகணை வீச்சை தாங்கும் அளவிற்கு வலுப்படுத்தப்பட்டிருந்தது. வெளியடுக்கில் ஆங்காங்கே ஏவறைகள் (நான் வட்டமிட்டிருக்கும் இடங்கள்) மரக்குத்திகளுக்கு இடையில் இருந்தன. இவற்றின் மூலம் உள்ளிருந்தபடி வெளிநோக்கி சுடுவர்.

நான் மேற்கூறிய காவலரண்களில் உள்ள ஏவறைகளை இப்படிமத்தில் காணலாம்:

large.12657189_10208805719723039_2770959

 

இதுவொரு திறந்தவெளி காவலரண் ஆகும்:

large.710773374_ta015.jpg.5bdfc0299aeefb

 

காவலரணின் வாசலில் காவல்கடமையில் ஈடுபட்டிருக்கும் பெண் போராளி:

large.The-Bunker-is-Where-You-Sleep-Maav

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இரும்புக் காவலரண்

 

இவை புலிகளால் பொதுவாக அமைக்கப்படும் மரக்குற்றிகளாலான காவலரண்கள் போலல்லாமல் இரும்பாலான காவலரண்கள் ஆகும்.

இவை முன்னரங்க நிலைகளிலும் சில முக்கிய படைத்தளங்களிலும் மேற்குறிபிடப்பட்டுள்ள தலைவர் மாமாவின் கமுக்கப் பணிமனையிலும் அமைக்கப்பட்டிருந்தன.

sentry point.webp

sentry point.jpg

'தலைவர் மாமாவின் கமுக்கப் பணிமனையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் காவலரண்'

 

ltte bullet proof sentry point in sampoor.jpg

'மட்டக்களப்பில் ஓர் முன்னரங்க நிலையில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் காவலரண். | படிமப்புரவு: சிங்களப் படைத்துறை'

முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளில் அமைக்கப்பட்ட காவலரண்களைச் சுற்றிலும் மண்ணாலான அணைகள் ஏற்படுத்தப்பட்டு அதைச் சுற்றிலும் சுருள்கம்பிகள் போடப்பட்டிருந்தன. 

 

இது வடபோர்முனை கட்டளையாளர் பிரிகேடியர் தீபன் அவர்களால் பாவிக்கப்பட்ட மூடு பதுங்ககழி ஆகும். இது தண்டவாளங்களின் மேல் மண்மூட்டைகள் அடுக்கப்பட்டு - இவ்வாறு அரணப்படுத்தப்பட்டிருந்தது. இப்பதுங்ககழியானது கொங்கிரீட் கொண்டு முற்றாக (சுற்றுச்சுவர் உட்பட) கட்டப்பட்டிருந்தது. இது களமுனையில் அமைக்கப்பட்டிருந்தது.

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் படைய அரண்களின் படிமங்கள் | Tamil Tigers' Military Fortifications' images
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காப்பரண்கள்

 

இவை எதிரியின் பாரிய எறிகணை வீச்சுகள் மற்றும் தகரிகளின் நேரடிச் சூட்டை தாங்கிநிற்கும் வலுவோடு கட்டப்பட்டவையாகும். இவை மிகவும் வலுவாக அரணப்படுத்தப்பட்டிருக்கும். இவை படைத்தளங்களினுள்ளும் சமர்க்களங்களிலுமே கட்டப்பட்டிருக்கும். 

இவை மரக்குற்றிகள், மண்மூட்டைகள், மண் மற்றும் மண் நிரப்பப்பட்ட தகர உருள்கலன்கள் கொண்டு அரணப் படுத்தபட்டிருக்கும். அவற்றின் மேல் ஏதேனும் ஓலைகள் மரக்கிளைகளால் உருமறைக்கப்பட்டிருக்கும். இவை பல்வேறு வடிவங்களில் காணப்படும். இவை நிலத்தின் மேலும் கட்டப்பட்டிருக்கும், கீழும் கட்டப்பட்டிருக்கும்.

 

 

prote.jpg

'வீடொன்று காப்பரணாக மாற்றப்பட்டிருப்பதைக் காண்க'

 

10153130_798976653447000_4202670634489406427_n.jpg

'நான்காம் ஈழப்போரில் காப்பரண் முன்னே புலிவீரர் நின்று கலந்தாலோசிப்பதைக் காண்க'

 

padaiyuruppukaL.png

'நான்காம் ஈழப்போரில் வடபோர்முனையில் நகர்வகழியுடனான புலிகளின் காப்பரண். இக்காப்பரணானது ஓலைகளால் உருமறைக்கப்பட்டிருப்பதைக் காண்க'

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பதுங்ககழிகள்

 

இவை மூடு பதுங்ககழிகள் மற்றும் திறந்த பதுங்ககழிகள் என இரு முதன்மை வகைப்படும்.

திறந்த பதுங்ககழிகள் சில வேளைகளில் வெறுமனே மண்ணைத் தோண்டியதாகவும் சில வேளைகளில் பக்கவாடுகளில் ஓரிரு அடுக்குகளுக்கோ அல்லது ஆங்கொன்று இங்கொன்றாக மண்மூட்டைகள் அடுக்கப்பட்டதாகவும் காணப்படும். பதுங்ககழியின் உட்புறத்தில் மரத்தண்டுகள் குத்தாக தாட்டப்பட்டு அதிலிருந்து கிடக்கும் முட்டின்/தாங்கின் மூலம் சில திறந்த பதுங்ககழிகளின் பக்கவாடுகளில் வலுவான மொத்தமான மரக்குற்றிகள் கிடத்தப்பட்டிருக்கும். உள்ளே மரக்குற்றிகள் இருப்பது வெளியில் இருந்து பார்க்கும் போது தெரியா வண்ணம் முன்புறம் மண் கொண்டு மூடப்பட்டிருக்கும்.

திறந்த பதுங்ககழிகள் 'ட', 'ப' மற்றும் தொடர் 'Z' வடிவிலே பெரும்பாலும் தோண்டப்பட்டிருந்தன, நான் கண்டவரை. 'ட, ப' ஆகிவற்றின் 'I' இல் தான் பெரும்பாலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. சமர்க்களத்தில் அமைக்கப்பட்டவற்றில் சிலது ஒரு கோடு போன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் படிக்கட்டுகள் சிலவற்றில் இருந்தது, சிலவற்றில் இல்லை. 

பதுங்ககழி.jpg

' 'Z' வடிவில் வெட்டப்பட்டுள்ள திறந்த பதுங்ககழி'
 

பதுங்ககழி 2.jpg

'திறந்த பதுங்ககழியின் பக்கவாடுகளில் மண்மூட்டைகள் போடப்பட்டிருப்பதைக் காண்க'

 

022008 ltte bunker.jpg

'2008 பெப்ரவரி மாதமளவில் புலிகளால் தோண்டப்பட்டிருந்த நரிக்குழிகள் அல்லது பதுங்ககழிகள்'

 

armour-plated-bunker.webp

'இரும்புத் தகட்டாலான நரிக்குழி ஒன்று'

 

மூடு பதுங்ககழிகள் பல வகைப்படும். அவை மண்மூட்டை, மரக்குற்றிகள் (தென்னை, பனை, முதிரை, பாலை போன்றவை) மற்றது மண் நிரப்பப்பட்ட தகர உருள்கலன்கள் ஆகியவற்றால் அரணப்படுத்தப்பட்டிருந்தன. சில மூடு பதுங்ககளில் மேற்குறிப்பிடப்பட்ட மூன்றுமே பயன்படுத்தப்பட்டிருந்தன. 

இவை சில இடங்களில் பெரிய அகலமாக சதுர வடிவில் தோண்டப்பட்டு, நடுவில் வலுவன மரக்குற்றிகள் நடப்பட்டு, அதன் முட்டால் மேலே மரக்குற்றிகள் மற்றும் மண்மூட்டைகள் கொண்டு மூடப்பட்டிருக்கும்.  இவ்வாறான பதுங்ககழிகளில் - முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகளில் அமைக்கப்பட்டிருப்பவற்றில் - வரும் பகை நோக்கி சுடுவதற்காக ஏவறைகள் அமைக்கப்பட்டிருக்கும். 

பதுங்ககழி 3.jpg

'மூடு பதுங்ககழியின் மேல் உருமறைப்பிற்காக கொட்டில் போடப்பட்டிருப்பதைக் காண்க'

 

village of Andankulam in the Manalaaru sector. It is located south of Kumalamunai. bunker nov 2008.jpgvillage of Andankulam in the Manalaaru sector. It is located south of Kumalamunai. bunker nov 2008 2.jpg

'2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் குமுழமுனைக்குத் தெற்கே ஆண்டான்குளத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மூடு பதுங்ககழி'

மேலுள்ள இரு படிமங்களும் ஒரே பதுங்ககழியை வெவ்வேறு கோணத்தில் இருந்து காட்டுகின்றன. ஒன்றிலிருந்து மற்றொரு பதுங்ககழிக்கு நகர்ந்து செல்ல 'ட' வடிவில் நகர்வகழி அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க. மழை காலமென்பதால் புலிகளின் மூடு பதுங்ககழியினுள் ஒழுக்கு ஏற்படாமல் இருக்க பனையோலை போடப்பட்டு, அதன் மேல் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு, அதன் மேல் (களி) மண்கொண்டு பூச்சு பூசப்பட்டிருப்பதையும் உற்று நோக்குக.

outer bunker vp house.jpg

'தலைவர் மாமாவின் கமுக்கப் பணிமனையில் உருமறைப்பிற்காக வலையும் தகரக் கொட்டிலும் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மூடு பதுங்ககழி'

 

Mavilaru ltte bunker.jpg

'மாவிலாற்றில் மூடு பதுங்ககழியின் மேலதிக வலுவூட்டத்திற்காக கணைப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருப்பதையும் மரக்குற்றிகளைத் தாங்குவதற்காக கணைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காண்க.'

 

jeevan base.jpg

'புலிகளின் ஜீவன் முகாமினுள் நன்கு வலுவான மூடு பதுங்ககழியின் மேல் உருமறைப்பிற்காக கொட்டில் போடப்பட்டிருப்பதைக் காண்க'

 

bunker 2008.jpg

'இரு ஏவறைகளுடன் கூடிய மூடு பதுங்ககழி'

 

large_dqw.jpg.8a6d97f8cb9e26e3b6ec82d5d0

'ஏவறைகளுடன் கூடிய மூடு பதுங்ககழி''

 

20080818 jeevan base.jpg

'2008 ஆம் ஆண்டில் புலிகளின் ஜீவன் முகாமினுள்ளிருந்த ஒரு மூடு பதுங்ககழி'

 

palmyra camoflaged bunker.webp

'பற்றை போன்று ஒடிந்த மரக்கிளைகள் கொண்டு உருமறைக்கப்பட்டிருந்த மூடு பதுங்ககழி'

 

1187010_798976733446992_7487030851306205976_n.jpg

'நகர்வகழிக்குப் பின்னால் வேலிக்கருகே புலிகளின் மூடு பதுங்ககழி அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க'

 

532291_119218004949169_1071764079_n.jpg

'மூடு பதுங்ககழியினுள் நின்று காவலில் ஈடுபடும் புலிவீரிகள். துமுக்கிகள் ஏவறை வழியாக வெளியில் நீண்டபடி நிற்பதைக் காண்க'

 

மேற்கண்டதை போன்றவற்றை வெளியில் இருந்து பார்ப்பதற்கு இவ்வாறு இருக்கும்:

large.sentry.png.faf0463ae2edd3db38d9cee

 

பெரும்பாலான பதுங்ககழிகளின் படிக்கட்டுத் தொடக்கங்கள் நீர் உட்புகுந்து விடாமல் இருக்கவும் படிக்கட்டு இடிந்து விழாமல் இருக்கவும் வாசலிற்கு மண்மூட்டைகள் அடிக்கப்பட்டிருந்தன. 

அனைத்துப் பதுங்ககழிகளையும் வண்டின் வேவிலிருந்து காப்புமறைப்பதற்காக அவற்றின் மேலே சின்னக் கொட்டிலோ அல்லது உருமறைப்பு வலையோ அல்லது தரப்பாளோ போடப்பட்டிருக்கும். பொதுமக்களாயின் கண்டிப்பாக சின்னக் கொட்டில் அல்லது தரப்பாள்தான் போடப்பட்டிருக்கும். படைய பதுங்ககழிகளாயின் மேற்குறிப்பிட்ட அனைத்துமோ அல்லது சிலதோ போடப்பட்டிருக்கும்.

மக்களால் அமைக்கப்பட்ட பதுங்ககழிகளின் உட்புறம் மாட்டுச் சாணத்தால் பூசி மெழுகப்பட்டிருந்தது, வீட்டை மெழுகுவது போன்று. சிலவற்றின் உட்புறம் மின் பிறப்பாக்கி கொண்டு மின்விளக்குகள் பூட்டப்பட்டிருந்தன. எங்கள் வீட்டில் அமைக்கப்பட்டதில் இவையிரண்டுமே இருந்தது. 2009 பெப்ரவரி இறுதிவரை (இரணைப்பாலை வரை) மின்விளக்கு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் பூசி மெழுகுவதெல்லாம் 2008 டிசம்பரோடு கைவிடப்பட்டாயிற்று. 

இவ்விரு வகை பதுங்ககழிகளும் போராளிகளாலும் பொதுமக்களாலும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் போராளிகளால் பயன்படுத்தப்பட்ட மூடு பதுங்ககழிகள் பெரும்பாலும் பொதுமக்களினதைக் காட்டிலும் நன்கு உறுதியுடையவனாக காணப்பபட்டன. அவை பகைத் தகரிகளின் நேரடிச் சூட்டால் கிளம்பாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஓரிரு நன்கு வசதி படைத்த பொதுமக்களும் போராளிகளினது பதுங்ககழிகளைப் போன்றே நன்கு வலுவான பதுங்ககழிகளைக் கூட கட்டியிருந்தனர், இவற்றில் சிலவற்றில் நான் உள்ளிருந்திருக்கிறேன். 

சில மூடுபதுங்ககழிகள் கணையெக்கி (Mortar) ஏவுநிலைகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. ஏவிவிட்டு காதற்ப்பிற்கு பதுங்ககழியினுள் சென்றுவிடுவர், புலிவீரர். படைக்கலனையும் பதுங்ககழியினுட்தான் வைத்திருப்பர்.

Akkarayan september 2009.jpg

'அக்கராயனில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் கணையெக்கி ஏவுநிலையுடனான மூடுபதுங்ககழி, 2008'

 

கீழே உள்ள மூடு பதுங்ககழியில் கீழே இருப்பது உள்நுழைவதற்கான வாசல். மேலே இருக்கும் வாயின் பாவனை தெரியவில்லை.

large_safs.jpg.0e9b762c0b87650bd28787fe3

'நான்கு படிமங்களை ஒன்றாக இணைத்துத்தான் இம்முழுப் படிமத்தையும் உருவாக்கினேன்'

பதுங்ககழியில் இருப்பவர்கள் தமக்கான தேநீரை தாமே தயாரித்துக்கொள்வர். இப்பதுங்ககழியினுள்ளே  முகம்பார்க்கும் கண்ணாடிகள், கதிரைகள், மேசைகள் போன்றவை கூட வைக்கப்பட்டிருக்கும்.
large.102559310_2685133408441079_1039111

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிலக்கீழ் பதுங்ககழிகள்

 

நிலத்திற்குக் கீழே மண் தோண்டி அங்கே சீமெந்து கொண்டு கட்டப்படும் பதுங்குகுழிகளே இவையாகும். இவை தமிழீழத்தில் புலிகளின் படைதளங்களின் உள் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவரின் வீடு என்பனவற்றில் அமைக்கப்பட்டிருந்தன. 

நிலத்திற்குக் கீழே இவை கட்டப்படும் போது நிலம்-மேல் கட்டப்படும் கட்டடங்கள் போலல்லாது மிகவும் கவனமாக பதுங்ககழி தகர்ப்பான் போன்றவற்றிலிருந்து காப்பு அழிக்கும் வகையில் மிகவும் இரும்புகள் கொண்டு அரணப்படுத்தப்பட்டதாக, அறைகள் முதற்கொண்டு, கட்டப்பட்டிருக்கும். வெளிச்சத்திற்கும் வெப்பம்/புழுக்கத்தைப் போக்க காற்று வசதிக்கும் நிலத்திற்குக் கீழேயே மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டது. அங்கேயே தங்கும் வசதிகள் மற்றும் கூட்டம் நடத்துவதற்கான வசதிகள் என்று பற்பல வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மழைக்காலத்தில் பதுங்ககழியின் சுவர்களில் ஏற்படும் ஈரளிப்பைப் போக்க சுவர்களில் நெஞ்சளவு உயரத்திற்கு 'Tiles' பதிக்கப்பட்டிருந்தன.

இவற்றின் நுழைவு வாசலும் சீமெந்தால் கட்டப்பட்டு சுற்றிவர மண் நிரப்பப்ட்ட உரப்பைகளால் அரணப்படுத்தப்பட்டிருந்தன. 

மணாலாற்றில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த முன்னகம் படைத்தளத்திலிருந்த நிலக்கீழ் பதுங்ககழியைக் காண்க.

Munagam Base underground bunkers.jpg

'சன்னத்தகை கஞ்சுகம் (Bullet Resistant vest) அணிந்த சிங்களப் படைவீரனின் தலைமேல் ஒரு மின்விசிறி தெரிவதைக் காண்க | படிமப்புரவு: சன்டே லீடர்ஸ் '
 

Munagam Base underground bunkers 1.jpg

'அதன் வாசலைக் காண்க | படிமப்புரவு: சன்டே லீடர்ஸ்'

 

ltte bunkers underground (2).jpg

'யாழ்ப்பாணம் கொக்காவிலில் 1995இற்கு முன்னர் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த ஒரு நிலக்கீழ் பதுங்ககழிக்கான நுழைவு வாயில்'

 

ltte bunkers underground (4).jpg

'புலிகளால் அமைக்கப்பட்டிருந்த ஒரு நிலக்கீழ் பதுங்ககழிக்கான நுழைவு வாயில்'

 

தலைவர் மாமாவின் கைவிடப்பட்ட பணிமனை ஒன்றிலும் இது போன்ற நிலக்கீழ் பதுங்ககழி அமைக்கப்பட்டிருந்தது. அது நன்கு உருமறைக்கப்பட்டிருந்தது, அதாவது ஒரு குடில் போன்ற உருமறைக்கப்பட்ட வீட்டின் அடிப்பகுதியில் அது கட்டப்பட்டிருந்தது. இந்த நிலக்கீழ் பதுங்ககழியின் நீள அகல ஆழம்: 50*50*40 ஆகும் (Dossier on LTTE). தரையிலிருந்து கொஞ்ச ஆழத்திற்கு குண்டுத்தகை கற்காரையால் (Bomb proof concrete) மேற்கூரை போடப்பட்டு (நிலத்திற்குள்ளேயே) பின் அதன் கீழ் இரண்டு அடிக்கு கற்காரை சுவர் அமைத்து அதனுள்ளே அறைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த அறைக்கு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. அதனுள் மேலிருந்து கீழே செல்ல இரும்பாலான சுருள் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்படிக்கட்டுகளின் நுழைவுவாயில் சீமெந்தால் ஒரு சிறு வீடு போன்று உருமறைத்து கட்டப்பட்டிருந்தது. இதே போல குடிலினுள்ளும் ஒரு படிக்கட்டு இருந்தது.

ltte bunkers underground (1).jpg

'சுருள் படிக்கட்டு'

 

ltte bunkers underground (5).jpg

'குடிலினுள் இருந்த படிக்கட்டு.'

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நகர்வகழிகள்

 

பொதுவாக ஒரு நகர்வகழி எப்படி இருக்குமோ அதே போலத்தான் தமிழீழத்தின் முன்னரங்க நிலைகளிலும் நகர்வகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நகர்வகழிகள் முதலாம் இரண்டாம் உலகப்போரில் பாவிக்கப்பட்டதைப் போன்று பகையால் இலகுவில் அடையாளம் காணவியலாத படி கோணல்மாணலாக அமைக்கப்பட்டிருந்தன. அவை ஒரே சீரான வரியில் இருக்காமல் அலங்கோலமான கோட்டில் தோண்டப்பட்டிருந்தன. இவற்றின் நடுவே ஆங்காங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

march 2009 நகரகழி.jpg

'சிங்களப் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் நகர்வகழி ஒன்று. இதில் வலுவெதிர்ப்பு வேலி வெள்ளி நிறத் தகரம் கொண்டு வேயப்பட்டிருப்பதைக் காண்க. | படிமப்புரவு: சிங்களப் படைத்துறை'

 

fasdw.png

'வடபோர்முனையில் எல்லை வேலியோடு ஒட்டிய தமிழரின் நகர்வகழியைக் காண்க'

 

அந்தப் பனங்குற்றிகளின் பயன்பாட்டை அறிந்தோர் தெரிவித்துதவவும்.

 

27067526_211019242790733_2295052936049871450_n.jpg

'வடபோர்முனை களமுனையில் எல்லை வேலிக்கருகே தொடராக அமைக்கப்பட்டுள்ள மூடு பதுங்ககழிகள் / காப்பரண்கள். அத்துணை மூடு பதுங்ககழிகளும் நகர்வகழியால் இணைக்கப்பட்டுள்ளதை உற்றுநோக்குக. அந்தப் புலிவீரன் இறங்குவதே உள்நுழையும் வாசலாக இருக்கலாம் (இதில் படிக்கட்டுகள் இல்லை.) இவ்வேலியில் பனங்குற்றிகள் நடப்பட்டு அதில் ஓலைகளால் வேயப்பட்டுள்ளதையும் காண்க.'

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் படைய அரணங்களின் படிமங்கள் | Tamil Tigers' Military Fortifications' images


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.