Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலர்... தொழில்களை இழக்கும், அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இரண்டாம் உலகயுத்தத்துக்கு முன்னரே, பிரிட்டன் ஒரு பொருளாதார வல்லரசு. பென்ஸ் போன்ற கார்களை தயாரிக்கும் அளவுக்கு, பெரும் படையெடுப்பை நடாத்துமளவுக்கு ஜேர்மன் பொருளாதாரம் கொண்டிருந்தது.

அணைத்துக்கும் மேலே, ஜப்பானிய, பிரிட்டிஸ், ஜேர்மன், பிரெஞ்சு மக்களிடம் மீளவேண்டும் என்ற ஓர்மம் இருந்தது.

எடுத்தவுடன் தீ வைப்பதே நம் கடன் என்றழையும் சிங்களவருடன் டீல் போட வேண்டும் என்று எங்கே சொன்னேன்?

எந்த டீலுமே கிழித்து வீசப்படும் என்பது பட்டறிவு. இந்திய மத்தியஸ்துவ டீல் படும் பாடும் பார்கிறோமே.

நான் சொல்வது, புலம் பெயர் தமிழர், அரசியல், பொருளாதார பலத்துடன் மேற்கின் ஊடான தீர்வு. அதே வேளை மேற்கின் பொருளியல் மைய தேவை குறித்த பார்வை. (நான் பொருளாதார மையம் குறித்து பேசினால், நீங்கள் திருகோணமலை இராணுவ மையம் குறித்து அல்லவா பேசுகிறீர்கள்.)

புத்திமான் பலவான் - தமிழ் பழமொழி.

இந்த மையம், அதன் தேவை குறித்து சொல்வதன் காரணம், பச்சைப்புள்ளிகள் அல்ல.

கருத்துருவாக்கம். உங்களுக்கு புரியும் பங்கு.👌

இந்த தேவையை, எமது போராட்டத்துடன் லாவகமாக இணைப்பதே எமது அரசியலாக இருக்க வேண்டும்.

ஓரே ஒரு கனடிய தமிழ் எம்பி, ஒட்டுமொத்த கனடிய பாராளுமன்றத்தை எதிர்ப்பே இல்லாத தீர்மானம் நிறைவேற்ற வைத்தார்.

ஒரு நாட்டின் இறைமையுள்ள பாராளுமன்ற தீர்மானத்தை மீறி, கனடிய அரசு இலங்கையின் இன்றைய அரசுக்கு உதவ முடியாது.

சிங்களவர் தாமும் வாழார்.... தீவில் சேர்ந்து வாழவும் விடார்.

மறைந்த கோப்பாய் எம்பி கதிரவேற்பிள்ளை சொன்னது போல, தென் ஆப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி தோலின் ஆழமாயின், சிங்களத்தின் இனவெறி எலும்பு வரை ஆழமானது.

அது விலகும், ஒரு சிறந்த தலைவன் வந்தாலும் மாறும் என்பது தான் உங்கள் wishful thinking என்றேன் அய்யா.

படித்த பண்டா, தனது தவறை உணரந்து திருத்திக் கொண்டோட முயன்ற போது சுடப்பட்டார். அவரது மணைவி, மகளே.... அவரின் பட்டறிந்த வழியே போகவில்லை.

கோத்தா பதவிக்கு வர, ஈஸ்டர் குண்டுகளை வைத்தார் என்கிறார் பாதர் மல்க்கம்.

இவர்களுடன் டீலா?

பென்ஸ்மட்டும் இல்லை நாதம், போர்ஷ, வி டபிள்யூ இப்படி நிறுவனங்களின் முன்னோடிகள் கூட யுத்தத்துக்கு முன்பே இருந்தது. ஆனால் யுத்தம் எல்லாவற்றையும் வழித்து துடைத்து இருந்தது.

அதே போல்தான் பிரித்தானியாவும். தனது காலனிகளை கூட சிலதை அவர்கள் அதிகம்  கேட்காமலே கூட விட்டு விட்டு வரும் வங்குரோத்து நிலையில் இருந்தது.

ஜேர்மனிக்கு உதவ அமெரிக்கா வைத்த நேரடி நிபந்தனை de nazification எனில். பிரித்தானியாவுக்கு உதவ வைத்த மறைமுக கோரிக்கை gradual de colonisation.
 (காலனியத்துவ அழிவுக்கு பல காரணங்கள் அதில் இதுவும் ஒன்று).

அதை ஒத்த ஒரு அணுகுமுறையையே மேற்கு இலங்கையிலும் எடுக்கிறது. இலங்கையை ஒரு ஒரு பல்லின, inclusive நாடாக மாற்ற வேண்டும் என்ற அண்மைய பரிஸ் கிளப்புக்கான யூகே அறிக்கை காட்டி நிற்பது இதையே.

அதை நாம் புரிந்து நடக்க வேண்டும் என்பதே நான் சொல்வது.

தவிர இந்த அணுகுமிறை இலங்கையில் செல்லுமா? அந்த ஓர்மம் இலங்கைக்கு உள்ளதா என்பதெல்லாம் சாத்திரம் பார்ப்பவர்கள்தான் சொல்ல முடியும்.

மேலே சொன்னபடி இலங்கை ஜப்பான் வழியிலும் போகலாம், ஆப்கனிஸ்தான் வழியிலும் போகலாம்.

நாம் தமிழர்கள் இந்த இரு வழியிலும் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெளிவுற, முதலில் என்ன நடக்கிறது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

**********
 
டீல் - என்ன நாதம் நான் சொன்னதையே திருப்பி சொல்கிறீர்கள்?

கரி ஆனந்த சங்கரி செய்வதை போன்ற அரசியல் நகர்வுகளைதான் நாம் செய்ய வேண்டும் என நான் பல காலமாக எழுதி வருகிறேன். 

நீங்கள்தான் நாம் மேற்கிடம் திருகோணமலையை தாரம் எமக்கு சுயாட்சி தாருங்கள் என்று டீல் போடலாம் என்றும்.

புலம்பெயர் தமிழர் பொருளாதார பலத்தை (அப்படி கணிசமான பலம் இருக்கா, இருந்தாலும் ஒருமுகபட்டு பாவிக்க முடியுமா என்பதை விட்டு விட்டாலும் கூட) வைத்து சிங்களவனுட்ச்ன் டீல் பேசலாம் எனவும் எழுதினீர்கள்.

இதைதான் இங்கே நகைப்புக்குரியது என அன்றும், இன்றும் சொல்கிறேன்.

இந்த திரியில் எனது முதலாவது பதிவில், முதல் வரியிலேயே சொல்லி உள்ளேன் “  இது (இப்போ கரி ஆனந்த சங்கரி எடுக்கும் அணுகுமுறை) அல்ல நீங்கள் பிரேரித்த அணுகுமுறை” என்று.

நான் முன்பு எழுதியபோது நகைத்தார்கள் என நீங்கள் எழுதியதால்தான் சொல்கிறேன், நீங்கள் பிரேரித்தவை இன்றும் நகைப்புக்குரியனவே.

தவிர இப்போ நீங்கள் கரி ஆனந்த சங்கரி வழிமுறையைதான் முன்மொழிகிறீர்கள் என்றால் - உங்கள் தற்போதைய அணுகுமுறைக்கும், எனது (எப்போதுமே) அணுகுமுறைக்கும் அதிக வேறுபாடில்லை.

உண்மையை சொல்ல போனால் - நீங்கள் வசி எழுதிய வேறு ஒரு விடயத்தை மேற்கோளிட்டு, நானும் முன்பு இதையே சொன்னேன், ஆனால் சிரித்தர்கள் என்று எழுதியிராவிட்டல் நான் இதில் பதிலே எழுதி இருக்க மாட்டேன். 

நீங்கள் எழுதி நகைபுக்குள்ளான விடயம், திருகோணமலை டீல் போன்றவையே. மேலே வசி எழுதியதை ஒத்த கருத்துகக்கள் என்றும் யாழில் நகைப்புக்கு உள்ளாகவில்லை.

பச்சைபுள்ளி - என்னை பொறுத்தவரை அவரவர் தம் நிலைப்பாட்டை புள்ளிகள் மூலம் சொல்கிறார்கள்.  அதை விட அதில் வேறு ஒன்றும் இல்லை.

என்னை போலவே நீங்களும் இந்த பச்சைபுள்ளிகளை இட்டு அலட்டி கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்🙏🏾.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில  நாடுகளை

அந்த நாட்டு  மக்களை  உதாரணம்  காட்டியபோது 

எனக்குப்பட்டது

அந்த  நாடுகளிலெல்லாம் மக்கள்  தெளிவாக உணர்வு  பூர்வமாக நாட்டுப்பற்றோடு  இருந்தார்கள்

இலக்கு  நோக்கி ஒற்றுமையாக உறுதியோடு அர்ப்பணிப்போடு  நாட்டுக்காக உழைத்தார்கள்

ஆனால்  இலங்கையில்  அப்படி  இல்லை

சொந்த  மக்களே தாங்கொணா  வலிகளை

சொந்த  அரசாலே அனுபவித்து

மறக்காமல்  மன்னிக்கமுடியாமல்

எப்பொழுது  சந்தர்ப்பம்  வரும்

பிரிந்து  செல்லலாம் ஆளை  விட்டால்  காணும் என்று இருக்கும்  ஒரு நாடு  உருப்பட  வாய்ப்பே  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

பென்ஸ்மட்டும் இல்லை நாதம், போர்ஷ, வி டபிள்யூ இப்படி நிறுவனங்களின் முன்னோடிகள் கூட யுத்தத்துக்கு முன்பே இருந்தது. ஆனால் யுத்தம் எல்லாவற்றையும் வழித்து துடைத்து இருந்தது.

அதே போல்தான் பிரித்தானியாவும். தனது காலனிகளை கூட சிலதை அவர்கள் அதிகம்  கேட்காமலே கூட விட்டு விட்டு வரும் வங்குரோத்து நிலையில் இருந்தது.

ஜேர்மனிக்கு உதவ அமெரிக்கா வைத்த நேரடி நிபந்தனை de nazification எனில். பிரித்தானியாவுக்கு உதவ வைத்த மறைமுக கோரிக்கை gradual de colonisation.
 (காலனியத்துவ அழிவுக்கு பல காரணங்கள் அதில் இதுவும் ஒன்று).

அதை ஒத்த ஒரு அணுகுமுறையையே மேற்கு இலங்கையிலும் எடுக்கிறது. இலங்கையை ஒரு ஒரு பல்லின, inclusive நாடாக மாற்ற வேண்டும் என்ற அண்மைய பரிஸ் கிளப்புக்கான யூகே அறிக்கை காட்டி நிற்பது இதையே.

அதை நாம் புரிந்து நடக்க வேண்டும் என்பதே நான் சொல்வது.

தவிர இந்த அணுகுமிறை இலங்கையில் செல்லுமா? அந்த ஓர்மம் இலங்கைக்கு உள்ளதா என்பதெல்லாம் சாத்திரம் பார்ப்பவர்கள்தான் சொல்ல முடியும்.

மேலே சொன்னபடி இலங்கை ஜப்பான் வழியிலும் போகலாம், ஆப்கனிஸ்தான் வழியிலும் போகலாம்.

நாம் தமிழர்கள் இந்த இரு வழியிலும் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெளிவுற, முதலில் என்ன நடக்கிறது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

**********
 
டீல் - என்ன நாதம் நான் சொன்னதையே திருப்பி சொல்கிறீர்கள்?

கரி ஆனந்த சங்கரி செய்வதை போன்ற அரசியல் நகர்வுகளைதான் நாம் செய்ய வேண்டும் என நான் பல காலமாக எழுதி வருகிறேன். 

நீங்கள்தான் நாம் மேற்கிடம் திருகோணமலையை தாரம் எமக்கு சுயாட்சி தாருங்கள் என்று டீல் போடலாம் என்றும்.

புலம்பெயர் தமிழர் பொருளாதார பலத்தை (அப்படி கணிசமான பலம் இருக்கா, இருந்தாலும் ஒருமுகபட்டு பாவிக்க முடியுமா என்பதை விட்டு விட்டாலும் கூட) வைத்து சிங்களவனுட்ச்ன் டீல் பேசலாம் எனவும் எழுதினீர்கள்.

இதைதான் இங்கே நகைப்புக்குரியது என அன்றும், இன்றும் சொல்கிறேன்.

இந்த திரியில் எனது முதலாவது பதிவில், முதல் வரியிலேயே சொல்லி உள்ளேன் “  இது (இப்போ கரி ஆனந்த சங்கரி எடுக்கும் அணுகுமுறை) அல்ல நீங்கள் பிரேரித்த அணுகுமுறை” என்று.

நான் முன்பு எழுதியபோது நகைத்தார்கள் என நீங்கள் எழுதியதால்தான் சொல்கிறேன், நீங்கள் பிரேரித்தவை இன்றும் நகைப்புக்குரியனவே.

தவிர இப்போ நீங்கள் கரி ஆனந்த சங்கரி வழிமுறையைதான் முன்மொழிகிறீர்கள் என்றால் - உங்கள் தற்போதைய அணுகுமுறைக்கும், எனது (எப்போதுமே) அணுகுமுறைக்கும் அதிக வேறுபாடில்லை.

உண்மையை சொல்ல போனால் - நீங்கள் வசி எழுதிய வேறு ஒரு விடயத்தை மேற்கோளிட்டு, நானும் முன்பு இதையே சொன்னேன், ஆனால் சிரித்தர்கள் என்று எழுதியிராவிட்டல் நான் இதில் பதிலே எழுதி இருக்க மாட்டேன். 

நீங்கள் எழுதி நகைபுக்குள்ளான விடயம், திருகோணமலை டீல் போன்றவையே. மேலே வசி எழுதியதை ஒத்த கருத்துகக்கள் என்றும் யாழில் நகைப்புக்கு உள்ளாகவில்லை.

பச்சைபுள்ளி - என்னை பொறுத்தவரை அவரவர் தம் நிலைப்பாட்டை புள்ளிகள் மூலம் சொல்கிறார்கள்.  அதை விட அதில் வேறு ஒன்றும் இல்லை.

என்னை போலவே நீங்களும் இந்த பச்சைபுள்ளிகளை இட்டு அலட்டி கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்🙏🏾.

திருகோணமலை டீல் குறித்து நான் ஒரு போதுமே சொல்லவில்லையே. இதென்ன புதுக்கதை?

பாரிய விமானம் தாங்கி கப்பல்கள் வந்துவிட்டதால், திருகோணமலை முக்கியத்துவம் இழந்து விட்டது என்று எழுதி இருக்கிறேன்.

நான் எழுதியது, எழுதுவது, எழுதப்போவது, பொருளாதார மையம் தொடர்பில் மட்டுமே..... 😉

நகைப்புக்குரியவை என்று கருதியவை, நிஜமாகும் காலமையா இது.

மாவீரர் கல்லறைகளை உடைத்து, நிணைவுகூறலை தடுத்தவர்களது, பெற்றோர் கல்லறைகள் தகரும் என்று சொலலியிருந்தால், கெக்கலம் கொட்டி சிரித்திருப்பீர்கள், இல்லையா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

திருகோணமலை டீல் குறித்து நான் ஒரு போதுமே சொல்லவில்லையே. இதென்ன புதுக்கதை?

திண்ணையில் என்னோடும் மருதரோடு பேசும் போது சொன்னீர்கள். பின்னர் அதே கருத்து பட திரிகளிலும் சொல்லி உள்ளீர்கள்.

இல்லை எண்டால் பரவாயில்லை - தேடி எடுத்து எல்லாம் போட எனக்கு ஆர்வம் இல்லை - அப்படி சொன்னது நாதமுனி அல்ல, நடுக்காட்டு முனி எண்டு விட்டு விடுவோம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

திண்ணையில் என்னோடும் மருதரோடு பேசும் போது சொன்னீர்கள். பின்னர் அதே கருத்து பட திரிகளிலும் சொல்லி உள்ளீர்கள்.

இல்லை எண்டால் பரவாயில்லை - தேடி எடுத்து எல்லாம் போட எனக்கு ஆர்வம் இல்லை - அப்படி சொன்னது நாதமுனி அல்ல, நடுக்காட்டு முனி எண்டு விட்டு விடுவோம்🤣.

நான் இன்றல்ல, எப்போதும் சொல்வது பொருளாதார மைய தேவை குறித்து மட்டுமே. 

இல்லை என்கிறேன்..... அடம் பிடிக்கிறீர்கள்..... சரி.... அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.... என்ன கெட்டுது... அடிக்கிற காத்திலை, அம்மிக்கல்லே.... திருகோணமலை காம்பிக்குள போய் விழுது.... நடுக்காட்டு முனி எம்மாத்திரம் ? 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

நகைப்புக்குரியவை என்று கருதியவை, நிஜமாகும் காலமையா இது.

மாவீரர் கல்லறைகளை உடைத்து, நிணைவுகூறலை தடுத்தவர்களது, பெற்றோர் கல்லறைகள் தகரும் என்று சொலலியிருந்தால், கெக்கலம் கொட்டி சிரித்திருப்பீர்கள், இல்லையா?

உண்மைதான். மாறாதது என்பது மாறாதது என்ற வார்த்தை மட்டுமே என்பதை புரிந்து கொண்டால், ஆனானப்பட்ட லெனின், ஸ்டானிலின் பெயரால் அமைந்த நகர்களே பெயர்மாறியது, சிலைகள் சிதறியது என்பதை கண்ட வரலாற்றின் மாணாக்கருக்கு இத்தகைய மாற்றங்கள் என்றும் நகைப்புக்கிடமாக இருக்காது.

நிற்க,

இதனால் மட்டுமே சிங்கள பெளத்த மேலாதிக்க மனோநிலை மாறிவிட்டது என்பது அர்த்தம் இல்லை. திண்ணையில் சொன்னது போல் இது பாண், பருப்பு இல்லை என்ற கடுப்பில் அந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் மீது காட்டபட்ட கோபம்.

ஆனால் இந்த நிலையில் கூட ஒரு அமைப்பும், யாரும் தமிழருக்கு தீர்வு என மூச்சு கூட விடவில்லை. இதுதான் பாலா அண்ணை சொன்ன மஹாவம்ச மனோ நிலை.

இதுவும் மாறலாம். இதை மாற்ற மேற்கு முயலப்போவதாக தெரிகிறது (அவர்கள் நலனுக்க்காக) - இதை எப்படி கையாள்வது என நாமும் சிந்திக்க வேண்டும். 

3 minutes ago, Nathamuni said:

நான் இன்றல்ல, எப்போதும் சொல்வது பொருளாதார மைய தேவை குறித்து மட்டுமே. 

இலங்கைக்குக்குரிய பொருளாதர தேவையை பயன்படுத்த வேண்டும் என்பது சரிதான்.

ஆனால் அந்த தேவையை நிவர்த்தி செய்யும் இயலுமை, ஓர்மம் (ability and willingness) புலம் பெயர் தமிழரிடம் இருக்கிறது என நீங்கள் சொல்வதைதான் கற்பனாவாதம் என்கிறேன்.

இந்த இயலுமை இருப்பது மேற்கிடமே. நாம் செய்ய கூடியது எப்படி லாவகமாக மேற்கின் முதுகில் ஏறி நாம் போகும் இடத்து போய் சேரலாம் என் சிந்தித்து, ஒருங்கிணைந்து செயக்படுவதே.

இது என் நிலைப்பாடு மட்டுமே. இதுதான் வேதவாக்கு என்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

ம்..... நான் அப்படி சொல்லவில்லையே....

எனது பார்வையை புரிய வைப்பதில் தடுமாறுகிறேனோ? 🤔

நான் சொன்னது, இலங்கைகான பொருளாதார மையம் அல்ல. மேற்குக்கான பொருளாதார மையமும், அதற்கான தேவையும் குறித்தே....

அந்த தேவையுடன், எமது தாயக பிரதேசத்தையும், எமது புலம் பெயர் அரசியல் பலத்தை இணைத்து பயணிப்பது.

சிங்களத்துடன் எதுவுமே வேலைக்காகாது. இன்று வேலையிடத்துக்கு தீ வைத்துவிட்டு, நாளை, வேலை இல்லையே என்று தவிக்கும் மரமண்டையலுக்கு, மோட்டுச் சிங்களம் என்ற பெயர் உள்ளது.

***

நான் நிணைக்கிறேன், மேற்கின் பொருளாதார மைய தேவை, எனது கற்பனை வாதம் என்று நிணைக்கிறீர்கள் போலுல்லது.

அது கற்பனை அல்ல, நிஜமானது.

ஆனால் அது, எமது பகுதியில் அமைந்தால் எமக்கும், அவர்களுக்கும் நல்லது என்பதே எனது அவா. அது Wishful Thinking ஆக கூட இருக்கலாம்.

ஆனால் சாத்தியமாகலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

எனது பார்வையை புரிய வைப்பதில் தடுமாறுகிறேனோ?

இல்லை. நான் புரிந்து கொண்ட வரையில் தனியே வடக்கு-கிழக்க்கை ஒரு அலகாக கொண்டு, மேற்கின் தேவைக்காக உதவுவதாக கூறி நாம் மேற்குடன் டீல் போடலாம் (திருகோணமலையை கொடுக்கலாம், வடக்கு-கிழக்கை ஹொங்கொங் ஆக்கலாம்) என்பதே உங்கள் யோசனை. சரிதானே?

ஆனால் இந்த அணுகுமுறை (வடக்கு கிழக்கை தனியான அலகாக டீல் பண்ணுவது) முன்னரும் புலிகள் முயற்சித்து மேற்கு நிராகரிக்க அணுகுமுறை.

இந்த அணுகுமுறைக்கு மேற்கு வர முதலில் இந்தியா விடாது. அடுத்து வடகிழக்கில் தாம் ஒரு ஹொங்கொங்கை உருவாக்கி விட்டு, பொருளாதார, அரசியல் ஸ்திரமற்ற ஏனைய இலங்கையை உருவாக்குவதில் அவர்களுக்கு நன்மையை விட தீமைதான் அதிகம்.

வடக்கு கிழக்கை தனி அலகாக எடுத்து டீல் பண்ணுவது என்றால் மேற்கு 2009 க்கு முன்பே அதை செய்திருக்கும்.

நாம் எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமாக இருக்க வேண்டும்.

மேற்கின் இலங்கை சம்பந்தமான நீண்ட கால அணுகுமுறை என்பது ஒட்டு மொத்த தீவையும் தம் வட்டத்துள் கொண்டு வருவதே - அதை அடிப்படையாக வைத்தே நாம் நகர முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

நான் நிணைக்கிறேன், மேற்கின் பொருளாதார மைய தேவை, எனது கற்பனை வாதம் என்று நிணைக்கிறீர்கள் போலுல்லது.

இல்லை இந்த தேவை மேற்குக்கு இருப்பது நிஜமே.

ஆனால் இந்த தேவைக்காக தனியே வட கிழக்கை மட்டும் எடுத்து, நாட்டில் எந்த ஆளுமையும் அற்ற புலம் பெயர் சமூகத்துடன் மேற்கு ஒரு டீலுக்கு வரும் என்பதைதான் கற்பனை வாதம் என்கிறேன்.

இங்கேதான் நவ காலனியத்தின் இயல்பை கவனிக்க வேண்டும். காலனிதுவ காலம் போல் அன்றி ஒட்டு மொத்த இலங்கையையும் அவர்கள் விரும்பி தமது ஆளுகைக்குள் வந்தது போல ஆக்க வேண்டுமென்பதே நவகானிய அணுகுமுறை.

காலனிய காலத்தில் பிரித்து ஆள்வார்கள். வலு கட்டாயமாக பிடிப்பார்கள்.

நவகாலனியத்தில், அட்மட்டம் வரை வீழ விட்டு, பயத்தை கண்ணில் காட்டி, பின்னர் சுய விருப்பில் தம்மோடு இணைவதாக ஆக்குவார்ர்கள். ஜப்பான், கொரியா, ஜேர்மனி, போலந்து எல்லாருக்கும், இப்போ உக்ரேன், சுவீடன், பின்லாந்துக்கும் நடப்பது இதுதான். 

இந்த நவ காலனிய வட்டத்துக்குள் வந்த நாடுகள் தாம் சுயவிருப்பில் இணைந்ததாயும், தொடர்ந்தும் சுதந்திரமாகவே இருப்பதாயும் நம்பும். நவ காலனிய எஜமானும் தன்னை எஜமான் என காட்டி கொள்ளாமல் - ஒரு நண்பனாக காட்டி கொள்வார். 

இப்படி ஒரு திட்டம்தான் ஒட்டுமொத்த இலங்கைக்கும் விதிக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன். 

இதில் நாம் இப்ப போய் எம்மை தனி அலகாக டீல் பண்ணுங்கள் என கேட்டால், புலிகள் மீது காட்டிய அதே அணுகுமுறையைத்தான் கேட்பவர்கள் மீது மேற்கு காட்டும் என்பது என் கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இல்லை. நான் புரிந்து கொண்ட வரையில் தனியே வடக்கு-கிழக்க்கை ஒரு அலகாக கொண்டு, மேற்கின் தேவைக்காக உதவுவதாக கூறி நாம் மேற்குடன் டீல் போடலாம் (திருகோணமலையை கொடுக்கலாம், வடக்கு-கிழக்கை ஹொங்கொங் ஆக்கலாம்) என்பதே உங்கள் யோசனை. சரிதானே?

ஆனால் இந்த அணுகுமுறை (வடக்கு கிழக்கை தனியான அலகாக டீல் பண்ணுவது) முன்னரும் புலிகள் முயற்சித்து மேற்கு நிராகரிக்க அணுகுமுறை.

இந்த அணுகுமுறைக்கு மேற்கு வர முதலில் இந்தியா விடாது. அடுத்து வடகிழக்கில் தாம் ஒரு ஹொங்கொங்கை உருவாக்கி விட்டு, பொருளாதார, அரசியல் ஸ்திரமற்ற ஏனைய இலங்கையை உருவாக்குவதில் அவர்களுக்கு நன்மையை விட தீமைதான் அதிகம்.

வடக்கு கிழக்கை தனி அலகாக எடுத்து டீல் பண்ணுவது என்றால் மேற்கு 2009 க்கு முன்பே அதை செய்திருக்கும்.

நாம் எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமாக இருக்க வேண்டும்.

மேற்கின் இலங்கை சம்பந்தமான நீண்ட கால அணுகுமுறை என்பது ஒட்டு மொத்த தீவையும் தம் வட்டத்துள் கொண்டு வருவதே - அதை அடிப்படையாக வைத்தே நாம் நகர முடியும். 

ஒட்டு மொத்த இலங்கைக்குள் என்று நிணைத்தால், குழப்பம் தானே வரும்.

நான் சொன்னது..... வடகிழக்கு தனி அலகல்ல.... தனிநாடு.....

மேற்கு அப்படி நிணைத்தாலும் (இலங்கைத்தீவு ஒரே அலகாக), பெரும் முதலீட்டை செய்துவிட்ட, சீனா சும்மா இருக்குமா என்ன?

அதனால் தான் சொன்னேன், இலங்கை, இந்தியா விரும்பினாலும் கூட அதன் கையில் இல்லை.

சீன, மேற்கு ஆட்டத்தில் தீவு சிக்கிவிட்டது. அந்த வல்லரசுகள்  போட்டியால், நிணைக்காதது நடக்கிறது, நடக்கப்போகிறது.

நேற்று கேட்ட அதே கேள்வி தான்..... சீனா.... தீடீரென்று.... இலங்கைக்கு.... இருபது பில்லியன் தருகிறோம் என்றால், நிலைமை தலைகீழாக மாறுமா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

மாலைதீவில் சீனாவின் தற்போதைய நிலை என்ன?

இதற்குத்தான் துறைமுக நகர காலத்து யாழ் கள கருத்துகளை ஒப்பிட்டு நோக்க கோரினேன். 

மிக கெட்டிகாரத்தனமாக ராஜபக்ச களவில் கூட்டு சீனாவும்தான், ஆபத்தாண்டவர் இந்தியாவும் மேற்கும், உலக வங்கியும் எ எம் எவ்வும் என இலங்கையில் பரப்பபடுகிறது. 

கோட்ட கோகவின் அமைவிடம் தற்செயலானதல்ல. அதற்கான ஆதரவும் தன்னெழுச்சியானதல்ல. ரணில் வருகையும், சில்வாவின் நழுவலும் கூட தனியே பதவி மோகத்தால் மட்டும் அல்ல.

கோட்ட கோ கள போராடகாரர், 21ம் திருத்தம் வேண்டி நிற்க்கும் ஜனநாயக, வெளிப்படை தன்மையான அரசு, சுயாதீன குழுக்கள் எல்லாம் - சீனாவை நெருக்கி தள்ளும் வழிகள்.

இப்போதைக்கு சீனா கடன் காரன். கடனை அடைக்க உதவும் “நல்லவர்கள்” மேற்கும், இந்தியாவும் என்பதுதான் இலங்கையில் பரப்பவும், நம்பவும் படும் விசயம்.

இப்போ சீனாவுக்கு உள்ள தெரிவுகள்

1. நாட்டை மீட்கும் திட்டத்தில் - கொடுத்த கடனுக்குரிய சலுகை/பணத்தை பெற்று நடையை கட்டுவது.

2. அல்லது மேலும் இறங்கி ஆடுவது. ஆனால் இது 20 பில்லியன் விடயம் அல்ல. அதை விட பெரிது. சீனாவில் நான் அறிந்தவரை பல உள்நாட்டு பொருளாதார சிக்கல்கள் தலைதூக்க்கி உள்ளன. மிக பெரும் கட்டுமான அரச நிறுவனம் திவாலாகும் நிலை. தவிர மேலே ஜப்பான், கீழே அவுஸ்ரேலியா என அடிமடியிலேயே பிரச்னைகள் ஏராளம். தாய்வானில் அமெரிக்கா நேரடியாக சவால் விடுகிறது.

அண்மைய சொலமன் ஐலண்ட் ஒப்பந்தம். பசிபிக் தீவு பயணங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். சில சமயம் அதிக தொலைவில் உள்ள மேற்கு இந்து சமுத்திரத்தை விடுத்து, பசிபிக்கில், கிழக்கு இந்து சமுத்திரத்தில் கவனம் செலுத்த சீனா முயல்கிறதோ தெரியவில்லை.

நிச்சயமாக இப்போதைக்கு மாலைதீவை போல இலங்கையிலும் சீனா அடக்கித்தான் வாசிக்கிறது. இப்படியே நிலைக்கும் என்பதல்ல.

மாலைதீவு மட்டும் அல்ல, சில ஆபிரிக்க நாடுகளிலும் சீனா பிரசன்னத்தை குறைப்பதாக சொல்கிறார்கள்.

தவிர சீனாவும் இலங்கையை பிரித்து எம்மோடு தனிநாட்டு டீல் போடுவதாக இல்லைத்தானே.

ஆகவே சீனா இறங்கி ஆடினாலும் கூட தனிநாடு என்பது கற்பனைவாதம்தான். 

இது யாழ்களத்தில் நிச்சயம் உங்களை கதாநாயகனாக்கும் ஆனால் நடைமுறை சாத்தியமான தீர்வை மக்களுக்கு தராது என்பது என் கருத்து.

தமிழர்களுக்கு காட்ட படும் மாய மான்களில் மிக பெரிய மாயமான் இப்போதும் தனிநாடு சாத்தியம் என நம்ப வைப்பது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

மாலைதீவில் சீனாவின் தற்போதைய நிலை என்ன?

இதற்குத்தான் துறைமுக நகர காலத்து யாழ் கள கருத்துகளை ஒப்பிட்டு நோக்க கோரினேன். 

மிக கெட்டிகாரத்தனமாக ராஜபக்ச களவில் கூட்டு சீனாவும்தான், ஆபத்தாண்டவர் இந்தியாவும் மேற்கும், உலக வங்கியும் எ எம் எவ்வும் என இலங்கையில் பரப்பபடுகிறது. 

கோட்ட கோகவின் அமைவிடம் தற்செயலானதல்ல. அதற்கான ஆதரவும் தன்னெழுச்சியானதல்ல. ரணில் வருகையும், சில்வாவின் நழுவலும் கூட தனியே பதவி மோகத்தால் அல்ல.

கோட்ட கோ கள போராடகாரர், 21ம் திருத்தம் வேண்டி நிற்க்கும் ஜனநாயக, வெளிப்படை தன்மையான அரசு, சுயாதீன குழுக்கள் எல்லாம் - சீனாவை நெருக்கி தள்ளும் வழிகள்.

இப்போதைக்கு சீனா கடன் காரன். கடனை அடைக்க உதவும் “நல்லவர்கள்” மேற்கும், இந்தியாவும் என்பதுதான் இலங்கையில் பரப்பவும், நம்பவும் படும் விசயம்.

இப்போ சீனாவுக்கு உள்ள தெரிவுகள்

1. நாட்டை மீட்கும் திட்டத்தில் - கொடுத்த கடனுக்குரிய சலுகை/பணத்தை பெற்று நடையை கட்டுவது.

2. அல்லது மேலும் இறங்கி ஆடுவது. ஆனால் இது 20 பில்லியன் விடயம் அல்ல. அதை விட பெரிது. சீமாவில் நான் அறிந்தவரை பல உள்நாட்டு பொருளாதார சிக்கல்கள் தலைதூக்க்கி உள்ளன. மிக பெரும் கட்டுமான அரச நிறுவனம் திவாலாகும் நிலை. தவிர மேலே ஜப்பான், கீழே அவுஸ்ரேலியா என அடிமடியிலேயே பிரச்னைகள் ஏராளம்.

அண்மைய சொலமன் ஐலண்ட் ஒப்பந்தம். பசிபிக் தீவு ஒப்பந்தம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில சமயம் அதிக தொலைவில் உள்ள மேற்கு இந்து சமுத்திரத்தை விடுத்து, பசிபிக்கில் கவனம் செலுத்த சீனா முயல்கிறதோ தெரியவில்லை.

மாலைதீவு மட்டும் அல்ல, சில ஆபிரிக்க நாடுகளிலும் சீனா பிரசன்னத்தை குறைப்பதாக சொல்கிறார்கள்.

தவிர சீனாவும் இலங்கையை பிரித்து எம்மோடு தனிநாட்டு டீல் போடுவதாக இல்லைத்தானே.

ஆகவே சீனா இறங்கி ஆடினாலும் கூட தனிநாடு என்பது கற்பனைவாதம்தான். 

இது யாழ்களத்தில் நிச்சயம் உங்களை கதாநாயகனாக்கும் ஆனால் நடைமுறை சாத்தியமான தீர்வை மக்களுக்கு தராது என்பது என் கருத்து.

சீனா விட்டும் விடும் என்பது கற்பனைவாதம்.

இந்த வல்லரசுகள் மோதல் இலங்கைத்தீவுக்கு புதியதல்ல.

போர்த்துக்கேயர் காலத்தில் இருந்தே பார்க்கிறோம்.

வரலாறு திரும்புவது இயல்பு.

இப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது.

இப்படி நடக்க வேண்டும் என்று விரும்புவது தவறு அல்லவே.

அதுவே கற்பனைவாதம்.... என்று நிராகரிக்க முடியாது.

ஏனைனில் நிணைக்காதது நடக்கும் காலமிது.

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க வியடங்களை உங்கள்  இருவரதும் கருத்துக்கள்  மூலம் அறியமுடிகிறது

கத்திக்கு  போகாமல்  பார்த்துக்கொள்ளுங்கள்  ராசாக்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

கனக்க வியடங்களை உங்கள்  இருவரதும் கருத்துக்கள்  மூலம் அறியமுடிகிறது

கத்திக்கு  போகாமல்  பார்த்துக்கொள்ளுங்கள்  ராசாக்கள்😂

கத்திக்கு போறளவுக்கு யாரையும் தாக்கி பேசவில்லையே...

இது கருத்தாடல்.... அவ்வளவு தான். 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

சீனா விட்டும் விடும் என்பது கற்பனைவாதம்.

இந்த வல்லரசுகள் மோதல் இலங்கைத்தீவுக்கு புதியதல்ல.

போர்த்துக்கேயர் காலத்தில் இருந்தே பார்க்கிறோம்.

வரலாறு திரும்புவது இயல்பு.

இப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது.

இப்படி நடக்க வேண்டும் என்று விரும்புவது தவறு அல்லவே.

அதுவே கற்பனைவாதம்.... என்று நிராகரிக்க முடியாது.

ஏனைனில் நிணைக்காதது நடக்கும் காலமிது.

வல்லரசு போட்டியில் போத்துகேயர், ஒல்லாந்தர், திருமலையில் குறுகிய காலம் பிரான்சு, கடைசியில் அமெரிக்க மறைமுக அழுத்தத்தில் பிரிட்டன் எல்லாருமே ஒவ்வொரு கட்டத்தில் இலங்கையை விட்டு தோற்று வெளியேறியோரே.

அப்படி சீனாவும், ஏன் மேற்கும் கூட வெளியேற வேண்டி வரலாம். ஆகவே எதுவுமே ஒரு கட்டத்தில் கற்பனைவாதம் அல்ல.

ஆனால் நடக்கும் விஅயங்களை வைத்து நடைமுறை சாத்தியமான, எமக்கு இயல கூடிய நாம் ஓரளவுக்கேனும் அழுத்த கூடிய தரப்புகளுடன் இணங்கி செயல்படல் வேண்டும். 

லொட்டரி யாருக்காவது விழும். அதுக்காக லொட்டரி விழுந்ததும் எப்படி வீடு வாங்கலாம் என பிளான் பண்ணினால அது கற்பனைவாதம்தான்.

பாங் மனேஜரிடம் கதைத்து, பாங்குக்கும் வருமானம், எமக்கும் வீடு என்ற அடிப்படையில் மோர்ட்கேஜுக்கு முயல்வது கற்பனைவாதம் அல்ல:

நான் பிரேரிப்பது மோட்கேஜ் ஒப்சன். 

தனிநாடு - லாட்டரி ஜாக்பொட்

9 minutes ago, Nathamuni said:

கத்திக்கு போறளவுக்கு யாரையும் தாக்கி பேசவில்லையே...

இது கருத்தாடல்.... அவ்வளவு தான். 😁

அண்ணைக்கு இது “தற்காலிக” பதட்டம் 🤣. நியாயமானதுதான். 

நிப்பாட்டுவம்.

13 minutes ago, விசுகு said:

கனக்க வியடங்களை உங்கள்  இருவரதும் கருத்துக்கள்  மூலம் அறியமுடிகிறது

கத்திக்கு  போகாமல்  பார்த்துக்கொள்ளுங்கள்  ராசாக்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

அண்மைய சொலமன் ஐலண்ட் ஒப்பந்தம். பசிபிக் தீவு பயணங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். சில சமயம் அதிக தொலைவில் உள்ள மேற்கு இந்து சமுத்திரத்தை விடுத்து, பசிபிக்கில், கிழக்கு இந்து சமுத்திரத்தில் கவனம் செலுத்த சீனா முயல்கிறதோ தெரியவில்லை.

இங்கே RN breakfast showல் இதுதான் hot topic.. 

சீனா, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 10 நாடுகளுடன்(குறைந்தது) சேர்ந்து ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட முனைகிறது.. பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களை உள்ளடக்கி..

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் Solomon Islandsலாம் அவுஸ் வெளிவிவகார அமைச்சர் Fijiஇலும்.. பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள்.. 

சீனா, திடீரென இலங்கையை கைவிட்டு இங்கே வந்தபொழுதே சந்தேகங்கள் வரத்தொடங்கிவிட்டன.. 

இங்கே Fiji,  Solomon Islands அல்லது Kiribati Island ஆகட்டும், climatic changeனால் அதிகம் பாதிப்படுவதால் அதனை நோக்கியே அவர்களது முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கலாம்.. 

அதே நேரம் இந்த நாடுகளுக்கு சீனா சில ஆபிரிக்க நாடுகளிலும் இலங்கையிலும் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் யோசனை உண்டு.. 

அவுஸ்திரேலியா சீனா உறவுகள் கூட இந்த புதிய அரசாங்கத்தில் மாற்றமடையலாம்.. 

இன்னுமொரு கொஞ்ச நாளைக்கு பசுபிக் பிராந்தியமும் கலக்கத்தில்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கிழக்கு இந்து சமுத்திரம்/பசிபிக் தீவுகளில் மினக்கெடுவது சீனாவின் உடனடி பாதுகாப்புக்கு உகந்தது என நினைக்கிறேன்.

மேற்கு இந்து சமுத்திரத்தில், ஆபிரிக்காவில் மினக்கெட நீண்டகால சாம்ராஜ்ய கனவும், எண்ணை வரும் பாதையுமே காரணங்கள். 

ஆகவே சீனா மேற்கு இந்து சமுத்திரத்தை விட கிழக்கு இந்து சமுத்திரத்துக்கு முக்கியதுவம் கொடுப்பது லாஜிக்கல்தான்.

சில வேளை அவர்களின் உண்மையான இலக்கே பசிபிக் தீவுகள்தான், இலங்கை மாலைதீவில் மேற்கை திசை திருப்பி விட்டார்களோம் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.