Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயேசுநாதர் தெரிந்தெடுத்த 12 சீடர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுநாதர் தெரிந்தெடுத்த 12 சீடர்கள்!

இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம். இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம்.

இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

இஸ்ரேலின் பெத்லகேம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை யோசேப்பு, தாயார் மரியாள் ஆவர்.

இயேசுபிரான் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில் கடைசி மூன்றரை ஆண்டுகள் அவரே தெரிந்தெடுத்த 12 சீடர்கள் அவருடன் இருந்தனர்.

12 சீடர்களின் பெயர்கள் : (மத்தேயு 10 : 2-4)

1. பரிசுத்த சீமோன் (பேதுரு என்று அழைக்கப்பட்டவர்)

2. பரிசுத்த அந்திரேயா

3. பரிசுத்த யாக்கோபு (செபெதேயுவின் குமாரன்)

4. பரிசுத்த யோவான்

5. பரிசுத்த பிலிப்பு

6. பரிசுத்த பர்த்தலேமியு

7. பரிசுத்த தோமா

8. பரிசுத்த மத்தேயு

9. பரிசுத்த யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்)

10. பரிசுத்த ததேயு

11. பரிசுத்த சீமோன் (கானானியன்)

12. யூதாஸ் காரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இவரின் பெயருக்கு முன்பு பரிசுத்த என்ற வார்த்தை சேர்க்கப்படமாட்டாது.)

யூதாஸ் காரியோத் சீடர் பங்கினை இழத்தல் :

இயேசுநாதரின் போதனைகளை அன்றிருந்த ரோமானிய அரசும், யூத மதவாதிகளும் சிறிதும் விரும்பவில்லை. இயேசுவை பழித் தீர்க்க வகை தேடினர். அவரைப் பிடித்து பழி சுமத்த சதி செய்தனர். இத்திட்டத்தின் படி இயேசுநாதரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்தை அணுகி 30 வெள்ளிக்காசுகளை கொடுத்தனர். இதற்கு கைமாறாக காரியோத், இயேசுநாதரைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டு அதன்படியே செய்தான். ரோமானிய அரசு, குற்றமற்ற இயேசுவின் மேல் பழி சுமத்தியது, இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

இப்பாவச் செயலைக் கண்ட யூதாஸ் மனமுடைந்தான். குற்றமில்லா இரத்தத்திற்கு பழியாகிவிட்டதை எண்ணி வேதனையடைந்து தான் வாங்கிய 30 வெள்ளியை வாங்கியவர்களிடம் கொடுக்கச் சென்றான். அவர்களோ மறுத்துவிட, அப்பணத்தை தேவாலயத்தில் எறிந்துவிட்டு தூக்குக் கயிற்றில் உயிர் விட்டான். (மத். 27 : 5)

பின் வந்த 2 சீடர்கள் :

1. பரி. மத்தியா : இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, தம் சீடர்களுக்கு காட்சித் தந்து விடை பெற்றுச் சென்றார். இந்நிலையில் இச்சீடர்கள் தம்முடன் இல்லாத யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவனை 12-ம் சீடனாகச் சேர்த்துக் கொண்டனர். (அப்போஸ்தலர் 1 : 26)

2. பரி. பவுல் : பன்னிரெண்டு சீடர்களைத் தவிர மேலும் ஒருவர் இயேசுநாதரின் மனமார்ந்த சீடனாக வாழ்ந்தார். அவர்தான் பரி. பவுல் என்பவர்.

இவர் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் இயற்பெயர் சவுல். தன் இள வயதிலிருந்து யூத மதக் கோட்பாடுகளில் வைராக்கியமுள்ளவராக இருந்தார். சொல்லப் போனால் ஒரு யூத மத வெறியனாகவும் இருந்தார். இயேசுநாதரின் மறைவிற்குப் பின் வந்த தலைச்சிறந்த குழுத் தலைவர்களில் ஒருவரான ஸ்தேவான் என்பவரின் கொலையில் பங்கு உள்ளவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்.

தன் 35-ம் வயதில் இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். வரலாற்றின்படி கி.பி. 54-68க்கிடையில் நீரோ மன்னனாட்சியில் தியாக மரணமடைந்தார்.

விவிலியத்தில் (பைபிள்) இயேசுநாதர் பிறப்பும், பிறப்பிற்கு பின் நடந்தவைகளை குறித்து எழுதிய நூல்கள் பகுதிக்கு புதிய ஏற்பாடு என்று பெயர். இதில் 27 நூல்கள் உள்ளன. இவற்றில் 13 நூல்கள் பரி. பவுல் எழுதியனவாகும்.

இயேசுநாதர் உரைத்தபடி, அவர் மறைவுக்குப் பின் இறைச் செய்தியை பல நாடுகளுக்கும் ஏந்திச் சென்றவர் பரி. பவுல் என்பதை விவிலியத்தில் காணலாம்.

சீடர்களின் பின்னணி :

பன்னிருவரில் பரி. பேதுரு, பரி. யாக்கோபு, பரி. யோவான் என்பவர்கள் இயேசுவிடம் நெருக்கமானவர்களாகக் கருதப்பட்டார்கள். இதற்குச் சான்றாக இயேசுபிரான் சிலுவையில் அறைவதற்கு நள்ளிரவில் அவரைப் பிடிக்க வந்தபோது அவருடன் இருந்தவர்கள் இம்மூவரே. பரி. அந்திரேயா என்பவர் பரி. பேதுருவின் சகோதரர். இந்நால்வரும் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். இயேசு இவர்களை தெரிந்து கொண்டு, "என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாக்குகிறேன்" என்றழைத்தார்.

பரி. மத்தேயு சீடராவதற்கு முன் வரி வசூலிப்பவராகயிருந்தார். பன்னிரு சீடரில் பெரும்பாலோர் இஸ்ரேல் நாட்டிலுள்ள, கலிலேயா, கப்பர்நகூம், பெத்சாயிதா பட்டணங்களைச் சேர்ந்தவர்கள்.

தலைவன் எவ்வழியோ சீடர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்றாற்போல் இவர்களும் இயேசுநாதர் கொடுத்த அதிகாரத்தின் பேரில் இறை போதனையை செய்யலாயினர். நோயுற்றோரை, ஊனமுற்றோரை, அசுத்த ஆவி பிடித்தோரை குணமாக்கினர்.

பரி. தோமா இயேசுநாதரின் கட்டளைப்படி இறைச் செய்தியை உலகிற்கு அறிவித்தார். இந்திய நாட்டிற்கும் அவர் வந்ததையும், சென்னையிலுள்ள மயிலாப்பூரில் அவர் கொலை செய்யப்பட்டு மரித்தார் என்பதையும் சரித்திர வாயிலாக அறியலாம்.

பரி. சீமோன் (பேதுரு), பரி. யோவான், பரி. மத்தேயு, பரி. யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்), பரி. ததேயு ஆகியோர் எழுதிய நூல்கள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன.

பன்னிருவரில் யூதாஸ் காரியோத் இயேசுவைக் காட்டிக் கொடுத்து தூக்கிலிட்டுக் கொண்டான். மற்றவர்களில், பரி. மத்தேயு தவிர எவரும் இயற்கை மரணம் எய்தவில்லை. சிலர் தியாக மரணம் எய்தினர். பலர் சிலுவையில் அறையப்பட்டனர். கி.பி. 100 இறுதிக்குள் சீடர்கள் அனைவரும் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தனர் என்று வரலாறு தெரிவிக்கிறது.

தகவல்களிற்கு மிக்க நன்றி! :lol: வாசிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. நான் படித்தது பரி.யோவான் (சென்.ஜோன்ஸ்) கல்லூரியில். நீங்கள் கூறிய 4வது சீடரின் பெயரில் அமைந்த கல்லூரியில் என்று நினைக்கின்றேன். மதங்கள் என்பவை எமக்காக - மனிதருக்காக உருவாக்கப்பட்டவை. எந்த மதத்தில் என்ன நல்ல விடயம் கூறப்பட்டாலும் அதைப் பின்பற்றுவதும், என்ன கூடாதவிடயம் கூறப்பட்டாலும் அதைப் புறக்கணிப்பதும் எனது கொள்கை. எனக்கு தனிப்பட மதம் என்று ஒன்றும் இல்லை. யூத மதவாதிகளிற்கும் யேசுவிற்கும் இடையில் நடந்த பிரச்சனைகளை பற்றி கொஞ்சம் கூறமுடியுமா? யூதாஸ் காரியோத் என்று ஒரு சீடனுக்கு பெயர் வைக்கப்பட்டது அவன் யூத மதத்தை சார்ந்து இருந்ததாலா? யூத மதம் பற்றியும் கொஞ்சம் கூறமுடியுமா? யூத மதம் யேசுவின் கொள்கைகளில் இருந்து விலகி இருந்ததா? இப்போதும் யூதர்கள் இயேசுவை காட்டிக்கொடுத்தவர்கள் என்றவகையில் பிரச்சனைப்படுத்தப் படுவதாக எங்கோ வாசித்த நினைவு [அந்த கடைசியாக வந்த இயேசு சம்மந்தமான ஒரு ஆங்கிலப் படத்தில் அவ்வாறு காட்டப்பட்டது என நினைக்கின்றேன்]. நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பைபிள் பற்றிய உங்கட தகவலுக்கு நன்றிகள்.

இருந்தாலும் எனக்கும் சில சந்தேகங்கள் இருக்குது. பழைய பைபிள் ஏற்பாட்டில உந்தப் 12 சீடர்களும் தொகுத்து வழங்கின அதிகாரங்களும் இருக்குது. ஆனா அவை சொல்லுகின்ற ஒரே வரலாறுகள் குழப்பாக இருக்குது ஏன். ஒருத்தர் வம்சவழியில் 20 தலைமுறைகள் இருக்குது எண்டால் மற்றவர், 14, 10 என்று ஒவ்வொருவங்களுக்கிடையேயும், வம்ச வழி வேறுபடுதே ஏன்?

அவ்வாறே, சண்டைக்குப் போகுறது பற்றிச் சொன்னா, ஒருத்தர் 10,000 பேர் சண்டைக்குப் போகுது எண்டு சொன்னால், மற்றவர் ஒரு லட்சம் பேர் சண்டைக்குப் போகுது என்கின்றார். ஒரு சைபர் கூடினதால வந்த பிரச்சனை எண்டு சொல்லாதிங்கோ. ஏனென்றால் சைபரைக் கண்டு பிடிச்சது, இந்தியர்கள். பைபிள் தொகுக்கின்ற நேரம் சைபர் இருந்ததில்லை.

அந்தச் சண்டை எண்டது தாவிது மன்னர் காலத்தில் நடந்த சண்டை போல. வடிவாக ஞாபகமில்லை. அந்த மன்னர் வரலாற்றில் தான், படைவீரன் ஒருத்தரின் மனுசி மேல அவர் கண்ணு வைச்சதாகவும், படைவீரனைச் சண்டைக்கு அனுப்பி போடச் சொல்லிப் போட்டு, அவரின் மனுசியை அனுபவித்தாகவும் பைபிள் சொல்லுது.

அடுத்தவன் மனுசி மேல கண்ணு வைச்சாலும் பரவாயில்லை. தந்தைக்கு அவரின் மகள்மார் மது அருந்தக் கொடுத்துப் போட்டு, அவர் கூட குற்றம் புரிந்தாகவும், சகோதரி கூட தவறாகத் தமையன் நடந்ததாகவும் முறைதவறிய அசிங்கத்தை எல்லாம் பைபிள் கொண்டிருக்குதே?

புனித நூல், தலையில் வைச்சுப் படுத்தால் நோய் குணமாகும் என்ற ஐதீகம் இதனால் பொருந்துமோ?

பைபிளில் பார்த்தால் ஜேசுநாதர் பிறந்த பின்னர், அவற்ற 27ம் வயது வரைக்கும், இடைப்பட்ட காலத்தைப் பற்றிச் சொல்லவே இல்லை. எங்க அவற்ற இடைப்பட்ட வரலாறு போனது. சிலர் சொல்லுகினம், இடைப்பட்ட வரலாறு என்றால் சாதாரணவாழ்க்கை வாழ்ந்தவர் அது தான் அதைப் பற்றிக் காணோம் எண்டு. அப்படிப் பார்த்தாலும் பிறக்கும்போது வரலாறு சொல்லப்படுவதால், அப்போது ஞானம் இருந்ததாகவும், இடையில் விட்டுப் போய் 27 வயதில் வந்ததாகவும் அர்த்தப்படுமோ?

கடைசியாக இஜேசு நாதர் எங்கட பாவங்களைச் சுமந்து கொண்டு மரித்தார் என்றாங்கள். அப்படிப் பார்த்தால் எங்களுக்கு ஒரு பாவமும் இப்ப இருக்கக்கூடாதே? ஏன் இருக்குது?

புனித நூல், தலையில் வைச்சுப் படுத்தால் நோய் குணமாகும் என்ற ஐதீகம் இதனால் பொருந்துமோ?

பல மதத்தவர்கள் தமது புனித நூலுக்கு மிகுந்த மதிப்பு கொடுக்கின்றனர். சீக்கிய மதத்தவர்கள் புனிதநூலை தமது வீட்டில் உள்ள ஒரு குழந்தையாக - குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினராக பாவனை செய்தே வழிபடுவார்கள். அந்த நூலுக்கு ஆடை, படுப்பதற்கு கட்டில் என்று கூட உள்ளது. தினமும் எழுந்ததும் அவர்கள் புனிதநூலிலேயே முழிப்பார்கள். இதேபோல் படுக்குமுன் அந்த புனிதநூலையே கடைசியாக பார்ப்பார்கள். குழந்தை ஒன்று பிறந்தால் அவர்களின் மத குரு அந்த புனிதநூலின் ஒரு பக்கத்தை எழுந்தமானமாக புரட்டும் போது அந்த பக்கத்தில் என்ன எழுத்து இருக்கின்றதோ அந்த எழுத்திலேயே குழந்தைக்கு பெயரும் வைப்பார்கள். இந்த புனிதநூலை மனிதர்களிற்கு மரியாதை செய்து கதைப்பது போல் அந்த நூலை அவர் படுத்து இருக்கிறார், அவர் சாப்பிடுகின்றார் என்று சொல்லியே கதைப்பார்கள். ஏனென்றால் இந்த நூலை அவர்கள் சீக்கிய மதத்தை உருவாக்கிய ஞானியாகவே பார்க்கின்றார்கள். எனவே, புனிதநூலை வழிபடுவதும், வருத்தம் மாறுவதும் எல்லாம் எமது நம்பிக்கையிலேயே இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவிலியத்தின் விளக்கம் விவிலிய நூல் (BIBLE) கிறித்துவர்களின் புனித நூலாகும். ஆங்கிலத்தில் பைபிள் என்பது கிரேக்க வார்த்தையான பிப்லியா (BIBLIA)வின் மொழிபெயர்ப்பாகும். பிப்லியா என்றால் புத்தகங்கள் என்று கிரேக்க மொழியில் கூறுவர். இப்புனித நூல் பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament) என்று இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் பிறப்புக்கு முன் நடந்தவைகளின் தொகுப்பு பழைய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பும், அதன்பின் ஏறக்குறைய 100 ஆண்டுகள் வரை நிகழ்ந்தவைகளின் தொகுப்பு புதிய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பின் அடிப்படையில்தான் இன்றைய உலக சரித்திரமும் கி.மு. (BC), கி.பி. (AD) என்று பிரித்துக் காண்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ஏற்பாடு : இப்பகுதி உலக தோற்றமுதல் பல நிகழ்ச்சிகளை காலப் பகுதிக்கேற்ப பலரால் எழுதப்பட்ட தொகுப்பாகும். இது பழம் பெரும் நிகழ்வுகளை கொண்டுள்ளதால் தொன்றுதொட்டு வாய்மொழி வாயிலாகவும், பின்னர் மனிதன் எழுதும் திறனைப் பெற்றபோது காலப் பகுதிக்கேற்ப எபிரேயு (Hebrew), அரமைக் (Aramaic), சிரியாக் (Syriac), லத்தீன் (Latin), கிரேக்கம் (Greek) என்னும் மொழிகளில் எழுத்து வடிவம் பெற்றது. இதில் சில மொழிகள் இப்போது வழக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் :I. ஆகமம் (PENTATEUCH) (5) :1. ஆதியாகமம் 2. யாத்திராகமம் 3. லேவியாகமம் 4. எண்ணாகமம் 5. உபாகமம். II. சரித்திரம் (HISTORICAL) (12) :1. யோசுவா 2. நியாயாதிபதிகள் 3. ரூத் 4. I சாமுவேல்5. II சாமுவேல்6. I ராஜாக்கள்7. II ராஜாக்கள்8. I நாளாகமம்9. II நாளாகமம்10. எஸ்றா 11. நெகேமியா 12. எஸ்தர் III. பாடல் (POETICAL) (5) : 1. யோபு 2. சங்கீதம் 3. நீதிமொழிகள் 4. பிரசங்கி 5. உன்னதப்பாட்டு IV. தீர்க்கதரிசனம் (PROPHETICAL) : பெரிய தீர்க்கதரிசிகள் (MAJOR PROPHETS) (5) :1. ஏசாயா 2. ஏரேமியா 3. புலம்பல்4. எசேக்கியல் 5. தானியேல் சிறிய தீர்க்கதரிசிகள் (MINOR PROPHETS) (12) :1. ஓசியா 2. யோவேல் 3. ஆமோஸ் 4. ஓபதியா 5. யோனா 6. மீகா 7. நாகூம் 8. ஆபகூக்9. செப்பனியா 10. ஆகாய் 11. சகரியா 12. மல்கியா பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் (Books of Apocrypha) : கத்தோலிக்க கிறித்துவர்கள் (Catholics) மேலே குறிப்பிட்ட 39 புத்தகங்களுடன் 7 புத்தகங்களை சேர்த்து மொத்தம் 46 புத்தகங்களை பழைய ஏற்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 1. தொபியாசு ஆகமம் 2. யூதித் ஆகமம் 3. ஞான ஆகமம் 4. சீராக் ஆகமம் 5. பாரூக் ஆகமம் 6. I மக்கபே ஆகமம்7. II மக்கபே ஆகமம்இது கிறித்துவர்களிடையே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் யூதர்களின் 46 புத்தகங்களடங்கிய கிரேக்க மொழி பெயர்ப்பு (Greek Translation) பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்கள் (Protestant-Christians) 39 புத்தகங்களடங்கிய எபிரேயு பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர். புதிய ஏற்பாடு : புதிய ஏற்பாட்டில் 27 ஆகமங்கள் உள்ளன. அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் : I. வாழ்க்கை வரலாறு (BIOGRAPHICAL) (5) :1. மத்தேயு 2. மாற்கு 3. லூக்கா 4. யோவான்II. வரலாறு (HISTORICAL) (1) :(1) அப்போஸ்தலருடைய நடபடிகள்III. பரி. பவுலின் நிரூபம் (PAULINE EPISTLES) (14) :1. ரோமர் 2. I கொரிந்தியர்3. II கொரிந்தியர்4. கலாத்தியர் 5. எபேசியர் 6. பிலிப்பியர் 7. கொலொசெயர் 8. I தெசலோனிக்கியர்9. II தெசலோனிக்கியர்10. I தீமோத்தேயு11. II தீமோத்தேயு12. தீத்து 13. பிலமோன் 14. எபிரேயர் IV. மற்றைய நிரூபம் (GENERAL EPISTLES) (7) :1. யாக்கோபு 2. I பேதுரு3. II பேதுரு4. I யோவான்5. II யோவான்6. III யோவான்7. யூதா V. தீர்க்கதரிசனம் (PROPHETICAL)(1) வெளிப்படுத்தின விசேஷம் ஆக, பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் சேர்த்து கத்தோலிக்க கிறித்துவர்கள் 73 (46+27) புத்தகங்களடங்கிய விவிலிய நூலை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்களின் விவிலிய நூல் 66 (39+27) புத்தகங்களை கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் என்றாலே பரலோகத்தில் (Heaven) மகிழ்ச்சி. பூலோகத்தில் (Earth) சமாதானம் என்பதாகும். கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனுசரிக்கும் நாளாகும். ஆதிச் திருச்சபையினர் கிறிஸ்துவின் பிறப்பை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடுவது என்று முடிவெடுத்தனர். இந்நாள் சரித்திரத்தில் புகழ்பெற்ற நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இயேசுவின் பிறப்பை வைத்துதான் கி.மு. என்றும், கி.பி. என்றும் வரலாற்றின் காலம் கணிக்கப்படுகிறது.உலக இரட்சகர் :இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகிற்கு முதன்முதல் அறிவித்தவன் கர்த்தருடைய தூதன் என்பதை விவிலிய நூலில் இவ்வாறு காணலாம். "இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்". (லூக் 2 : 10-11)இயேசு இவ்வுலகின் ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் செய்தியிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. இயேசுபிரான், இஸ்ரேல் நாட்டிலுள்ள எருசலேம் நகருக்கு 10 கி.மீ. தெற்கே உள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் புறநகர் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கோ, சாதியினருக்கோ, இனத்திற்கோ, உலகில் உள்ள ஒரு பகுதியினருக்கோ சொந்தமானவர் அல்ல. இதில் ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அவர் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமான ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் நற்செய்தி தெளிவாகக் கூறுவதைக் காணலாம். சமாதானப் பிரபு :இந்த தூதர்கள் கூறிய மற்றுமொரு பிறப்பின் செய்தி என்னவென்றால், "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்பதாகும். (லூக் 2 : 14).இச்செய்தியில் பூமிக்கு பொதுவாக குறிப்பிட்டிருப்பது சமாதானமாகும். இச்சமாதானம் இப்பிரபஞ்சத்தின் இயல்பான எதிர்பார்ப்பு என்பதில் ஐயமில்லை. நமக்கு மனதில் சமாதானம் வேண்டும். உடலில் சமாதானம் வேண்டும். குடும்பத்தில் சமாதானம் வேண்டும். அயலகத்தில் சமாதானம் வேண்டும். நம் நாட்டில், உலகில் சமாதானம் என்று எங்கும் சமாதானம் தேவை என்பதை நாம் அறிவோம். இயேசுபிரான் பிறந்த நாட்களில் ரோம அரசனாக இருந்தவர் அகஸ்துராயன் (Agustus Ceasar). அன்று வாழ்ந்த எழுத்தாளர்களில் எபிக்டெடஸ் (Epictetus) என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் ரோம அரசனைப் பற்றி குறிப்பிடும்போது, அகஸ்துராயனால் தரையிலும், கடலிலும் நடக்கும் யுத்தங்களிலிருந்து மக்களுக்கு சமாதானம் கொடுக்க முடியுமே தவிர, மக்களின், கவலை, உணர்ச்சி, வேதனை நிமித்தம் சமாதானம் கொடுக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார்.எனவே, இந்த உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கவே இயேசு இவ்வுலகில் வந்தார் என்பதை நாம் விவிலிய நூலில் காணலாம். (யோவான் 14 : 27)மேலும், இயேசுபிரான் உலகில் பிறக்கப் போகிறார் என்று அவர் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசியான ஏசாயா, இயேசுவை சமாதானப் பிரபு என்று கூறியிருப்பதையும் விவிலிய நூலில் இவ்வாறு காணலாம்.அவர் நாமம் : அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும். (ஏசாயா 9 : 8)முன் குறிக்கப்பட்டவர் :உலக வரலாற்றில் இப்போது எத்தனையோ தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். ஆனால் யாருமே அவர்களை குழந்தையாகப் பாவித்துக் கொண்டு கொண்டாடுவதை நாம் காண்பதில்லை. இயேசு இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பதை வரலாற்றின் மூலம் அறிகிறோம். இது ஒரு எதிர்பாராத விபத்தல்ல. அவரின் பிறப்பை உலகம் முழுவதும் பேச்சு, நடை, பாடல் என்று பல வழிகளில் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்று இயேசுவை குழந்தையாக கொண்டாடப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவர் பிறக்கும்போதே மீட்பராக வெளிப்பட்டார். இயேசு என்னும் மன்னர்களின் மன்னன் யாரிடத்தில், எந்த வம்சத்தில், எங்கு பிறக்கப் போகிறார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்டுவிட்டதை விவிலியம் இவ்வாறு கூறுகிறது.ஏசாயா 7 : 14 - "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்".மீகா 5 : 2 - "இஸ்ரேலை ஆளப் போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்".ஏசாயா 9 : 7 - "தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி... சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்".இது மட்டுமல்ல. இயேசு பிறப்பதற்கு முன், அவருடைய தகப்பனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் தோன்றி சொப்பனத்தில் வெளிப்படுத்தியதாவது : மத்தேயு 1 : 21 - "அவள் (மரியாள்) ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" என்றான், என்பதாகும்.பிரபஞ்ச மன்னனும், பூலோக மன்னனும் :இப்பிரபஞ்ச அரசனான இயேசுவுக்கு பிறப்பிலிருந்தே எதிர்ப்பு இருந்தது. இயேசு பிறந்தபோது ஏரோது மன்னன் ஆட்சியிலிருந்தான். இப்பிரபஞ்ச அதிகாரியான இயேசுவின், அவரின் படைப்பான நட்சத்திரம் ஒன்று இவ்வுலகிற்கு இயேசுவை வரவேற்பது போல வானில் தோன்றியது. இதைக் கண்ட அந்நாட்டு ஞானிகள் ஏதோ, அரசர் பிறந்துவிட்டார் என்று ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு அரச புதல்வன் பிறக்கவில்லை என்பதை அறிந்தனர். இச்செய்தியை கேட்ட ஏரோது மன்னன் கலக்கமடைந்தான். தன் நாட்டில் வேறொரு அரசன் பிறந்திருப்பது அவனுக்கு திகிலை உண்டாக்கியது. ரகசியமாக ஞானிகளை அழைத்து, பிள்ளை பிறந்த காலத்தை கேட்டறிந்தான். பிள்ளையை அவர்கள் விசாரித்துக் கண்டபின் அவனிடம் அறிவிக்கச் சொல்லி அனுப்பிவைத்தான்.ஞானிகள் நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து இயேசு பிறந்த இடத்தை அடைந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் போன்ற காணிக்கைகளை வைத்து வணங்கினர். ஆனால், திரும்ப ஏரோதுவிடம் போக வேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டனர். ஆகவே, வேறு வழியாக தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள். இந்நிலையில் கர்த்தரின் தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கும் காணப்பட்டு, ஏரோது கொலைச் செய்யத் தேடுவான். ஆகையால் பிள்ளையை கூட்டிக் கொண்டு எகிப்துக்கு ஓடிவிடச் சொன்னான். யோசேப்பும் அப்படியே செய்தான். ஏரோது, தான் ஞானிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபமடைந்து, ஞானிகளிடம் விசாரித்த காலத்தின்படி இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைச் செய்தான். ஏரோதின் ஆணை இறையரசர் இயேசுவின் உலக வாழ்க்கைப் பயணத்தை தடுக்க முடியவில்லை.இயேசுபிரான் வாழ்ந்த நாட்களில் அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை பின்பற்றும் மக்கள் தங்கள் எண்ணங்களும் செயல்களும் மாறி அவர்கள் புதிய வாழ்க்கைமுறையை பின்பற்றுகின்றனர். அது மக்களின் செயல்களுக்கு விளக்கம் கூறி தீமையிலிருந்து விலகி வாழ்வதற்கு வழி செய்கிறது. இதனால் உலக பண்பாட்டில் மாற்றமும், நாகரீக வளர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. உலகமெங்கிலும் டிசம்பர் 25-ம் தேதி கிறித்துவர்களும், அவரைப் பின்பற்றுவோரும் இயேசுவின் பிறப்பை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக, தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்து தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் இயேசு பிறந்தது டிசம்பர் 25 ம் திகதி. அவர் பிறந்ததை வைத்தே ஆங்கில வருடங்கள் கணிக்கப்படுகிறது. அதாவது ஆங்கிலப் புதுவருடங்கள் வருகிறது. ஆனால் ஆங்கிலப் புதுவருடம் ஜனவரி முதலாம் திகதி தானே வருகிறது. ஏன் டிசம்பர் 25 ம்திகதி வருவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பைபிளை கிறிஸ்தவர்களின் புனித நூல் என்கின்றியள். ஆனால் அது எழுதப்பட்ட மூலநூலோ, மொழியோ இண்டைக்குப் பாவனையில் இல்லையே. அது எங்க போட்டுது?

சொல்லப் போனா, ரோமராட்சியத்திற்குப் பிறகு,

அதைத் தங்கட கைக்குள்ள கொண்டு வந்த, வத்திக்கான் அதில நிறைய மாற்றங்களைச் செய்து போட்டுது. உண்மையான பைபிளே இப்ப இல்லை. தங்களுக்கு விருப்பமான பொருத்தமான வகையில திருத்தங்கள் செய்திட்டனம்.

இயேசுபிரான்இ இஸ்ரேல் நாட்டிலுள்ள எருசலேம் நகருக்கு 10 கி.மீ. தெற்கே உள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் புறநகர் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கோஇ சாதியினருக்கோஇ இனத்திற்கோஇ உலகில் உள்ள ஒரு பகுதியினருக்கோ சொந்தமானவர் அல்ல. இதில் ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அவர் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமான ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் நற்செய்தி தெளிவாகக் கூறுவதைக் காணலாம். சமாதானப் பிரபு :இந்த தூதர்கள் கூறிய மற்றுமொரு பிறப்பின் செய்தி என்னவென்றால்இ "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும்இ மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்பதாகும். (லூக் 2 : 14).இச்செய்தியில் பூமிக்கு பொதுவாக குறிப்பிட்டிருப்பது சமாதானமாகும்

ஜேசுநாதர் எல்லோருக்கும் பொதுவானவர் என்று கதையைத் திரிக்கின்றியள். ஆனால் மத்தேயுவில் இப்படிச் சொல்லுது

21. பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.

26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

அவற்ற உலகமும், நினைப்பும் இஸ்ரவேல் என்ற யூதரின் உலகமாகவே இருந்தது. அவர்களை நல்வழிப்படுத்தவமும், அவங்க தான் உலகத்தில் உயர்ந்தவர்கள் எண்ட எண்ணப்பாடும் அவருக்கு இருந்தது. மற்றவங்களை 3ம் தரப் பிரஜைகளாகத் தான் அவர் மதித்தார். அப்படி இருக்கேக்க எல்லோருக்கும் பொதுவானவர் எண்டு எப்படிச் சொல்லுறியள்.

இதிலேயே வடிவாகத் தெரியும். ஜேசுநாதரின் கருத்துக்கள் மாற்றப்பட்டதாலும், அவை மாற்றப்பட்டு உண்மை அர்த்தம் சிதைக்கப்பட்டதாலும் தான் இறைவன், குரானைப் பூமிக்கு அனுப்பி வைச்சதாக இசுலாமியர்கள் சொல்லுகின்றார்கள். அதிலும் ஒரு நியாயம் இருக்குது. அங்க ஈஸா என்று வாற நபிகள் தான் இயேசு நாதர். இப்படி நிறைய ஒற்றுமை இருக்குது.

இசுலாமியர்கள் இப்ராகிம் என்று பெயர் உச்சரிச்சா, அதைக் கிறிஸ்தவர்கள் ஆப்ரகாம் என்று உச்சரிப்பாங்கள். சொல்லப்போனால் உண்மையான கிறிஸ்தவங்கள் என்று யாரும் சொல்ல விரும்பின அவங்க குரானைத் தான் பின்பற்ற வேண்டி வரும்.

ஆனா என்ன சோகம் எண்டால் யூதர்கள் கெட்டுப்போனார்கள், அவர்களைத் திருத்த வந்தேன் என்று சொன்ன ஜேசுநாதரால கடைசி வரைக்கும் தன்னுடைய வழிக்கு யூதரைக் கொண்டுவர முடியல்ல. அவங்க இன்று வரைக்கும் ஜேசுநாதரை மதிக்கல்ல. ஆனா மற்றவங்க அவரைப் பின்பற்றி தாங்க 2ம் பிரஜைகள், எஜமானின் கோப்பையில் இருந்து விழுகின்ற உணவைத் தின்னும் எச்சில் நாய்க்குட்டிகள் எண்டு நிருபிக்கின்றார்கள்.

என்னங்க, பைபிளை மாத்தி தங்களுக்கு ஏற்ற மாதிரி எழுதி வைத்து இருக்கின்றார்களா? அப்படி என்றால் திருவள்ளுவரின் திருக்குறள், மற்றும் பகவத் கீதை போன்றவையும் ஒரிஜினலில் இருந்து வேறானவையாக இருக்க சந்தர்ப்பம் இருக்கின்றதா?

சரி, நான் ஒரு கேள்வி கேட்கின்றேன், தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். பைபிள் வேதாகமத்தில் குறிப்பிடப்படாத நமக்கு தெரிந்த ஒரு முக்கியமான விலங்கு எது? [இந்த கேள்வியை பொது அறிவு சோதனை ஒன்றில் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் கேட்டார்கள்]

சரி, நான் ஒரு கேள்வி கேட்கின்றேன், தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். பைபிள் வேதாகமத்தில் குறிப்பிடப்படாத நமக்கு தெரிந்த ஒரு முக்கியமான விலங்கு எது? [இந்த கேள்வியை பொது அறிவு சோதனை ஒன்றில் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் கேட்டார்கள்]

பூனை :)

ஓம் சரியான பதில்... கெட்டிக்காரன்.. :) எப்படி தெரியும்? சும்மா ஒரு ஊகமா இல்லாட்டி பைபிள் வேதாகமத்தை படித்து உள்ளீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன். அக்காலத்தில் பூனை என்பது மனிதனின் செல்லப்பிராணியாக இருந்ததில்லை போல. அது தான் அது இடம்பெறவில்லை.

எனக்கு ஒரு சந்தேகம் இயேசு பிறந்தது டிசம்பர் 25 ம் திகதி. அவர் பிறந்ததை வைத்தே ஆங்கில வருடங்கள் கணிக்கப்படுகிறது. அதாவது ஆங்கிலப் புதுவருடங்கள் வருகிறது. ஆனால் ஆங்கிலப் புதுவருடம் ஜனவரி முதலாம் திகதி தானே வருகிறது. ஏன் டிசம்பர் 25 ம்திகதி வருவதில்லை.
அதுவும் நல்லதற்கே. இல்லை என்றால் அதற்கும் மதச்சாயம் பூசி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டைக் கதைப்பார்கள். பிறகு குழப்பமாகப் போடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.