Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21இன் மூலம் 19 ஐ உணர்வற்ற விதத்தில் கொல்லுதல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21இன் மூலம் 19 ஐ உணர்வற்ற விதத்தில் கொல்லுதல் !

 

Austin-Fernando_850x460_acf_cropped-300x

-ஒஸ்ரின் பெர்னாண்டோ-

ரசியலமைப்புரீதியான பொருளாதார மறுசீரமைப்புகளை ஆதரிப்பவர்கள் தற்போதைய சமூக-பொருளாதார-அரசியல் குழப்பத்திற்கான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு போராடுகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு முதலில் தீர்வு காணப்பட்டு பின்னர் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும் என பூமொட்டு பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ரொமேஷ் டி சில்வா குழுவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுகூலங்களைக் கொண்டுள்ளார்.

ஜனதா விமுக்தி பெரமுன , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன மேம்படுத்தப்பட்டதும் பரந்துபட்டதுமான அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளன.

‘கோத்தா கோ ஹோம்’ எதிர்ப்பாளர்கள் மற்றும் பலர் கோருகின்ற தீவிரமான மாற்றங்கள் குறித்து அரசாங்கம் ஒவ்வாமையுடன் இருக்கின்றது . கடுமையான அழுத்தத்தின் காரணமாக, 19ஆவது திருத்தத்திற்கு (19ஏ ) புத்துயிர் அளிக்கும் வகையில் 21ஆவது திருத்தம் (21ஏ ) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என் மனதில், அது அரை வேக்காடான 19ஆவது திருத்தத்திலும் குறைவானது. இது 19ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளது, 19 ஆவது திருத்தம் ஏனைய விடயங்களுடன் , ஜனாதிபதி அமைச்சு இலாகாக்களை வைத்திருப்பதைத் தடுத்ததுடன் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையையும் மட்டுப்படுத்தியது. ஜனாதிபதி 42 நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார். அதேவேளையில், தான் பாரிய தவறுகளை இழைத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பல பொறுப்புகளை பொறுப்பேற்கும் தகுதியை இழந்துள்ளார்.

ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் கோருவது என்னவெனில் ஜனாதிபதிக்கான விதிவிலக்கு நீக்கப்பட வேண்டும் மற்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் மற்றும் ஒத்திவைக்கும் அதிகாரங்கள் இல்லாமல் செய்யப்படவேண்டும், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது போன்ற விடயங்களில் தொலைநோக்குடனான மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதாகும். தோல்வியுற்ற ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய ஓர் அரசியல் குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவந்து 225 எம்.பி.க்களும் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து 225 பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி கெட்டவர்களாக இருந்தாலும் சரி இலகுவாக வீட்டிற்கு அனுப்ப முடியும்!

Rajapakshas-300x210.png

 

மேலும், புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.தேசிய கொள்கையை உருவாக்கும் குழுவை உருவாக்குதல், அரசியல் மயமற்றதாக்குவதன் மூலம் பொதுச் சேவையை வலுப்படுத்துதல், நிதிப் பொறுப்புணர்வை மேம்படுத்துதல் (பிரிவு 148) பொது நிறுவனங்களின் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிதிக் குழு போன்றவற்றின் மூலம் பாராளுமன்றத்தில் நியமனம். அரசியலமைப்பு சபையின் அனுமதியுடன் நாணயச் சபை மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், தூதுவர்கள் மற்றும் பலர் நியமனம், அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து பிரதமரின் ஆலோசனையின் பேரில் எதையும் 21 ஆவது திருத்தம் உள்ளடக்கவில்லை. இவை மற்றும் இன்னும், அரசாங்க அரசியல்வாதிகள் மற்றும் சில சிவில் சமூக பேச்சாளர்கள் 21ஆவது திருத்தத்தை சிறந்ததாகக் கருதுகின்றனர்!

இரட்டை பிரஜாவுரிமையை மூன்றில் இரண்டுபெரும்பான்மை தீர்மானிக்கிறது !

சர்ச்சைக்குரிய கோரிக்கையொன்று இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அரச பதவியில் இருப்பதைத் தடுக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பாதிக்கப்படுவார் என்பதால் பூமொட்டு குழுவின் ஒரு பிரிவினர் இதனை எதிர்க்கின்றனர். உதாரணமாக குறிப்பிட்ட ஆட்களை இலக்கு வைத்து அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாதென பூமொட்டு பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார். அதே பசில் ராஜபக்ஷவின் நலனுக்காக 20ஆவது திருத்தும் இரட்டைக் குடியுரிமைக்கான தடையை நீக்கியதை அவர் கவனிக்கவில்லை.

இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள் அரச பதவிகளை வகிப்பதை எதிர்க்கும் பலர் பிரதமர்/ஜனாதிபதி கனவுகளைக் கொண்டிருப்பதாகவும், பசில் ராஜபக்ஷவை தங்களுக்கு முட்டுக்கட்டையாகக் கருதுவதாகவும் இலகுவான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழம்பிய குட்டையின் நீரில் மீன் பிடிக்கிறார்கள்!

19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்த இந்த வகையான சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளை திரும்பப் பெற வேண்டியிருந்தது. மறுபுறம், 21ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி, 19ஆவது திருத்தத்தின் மூலம் வெட்டப்பட்ட சில அதிகாரங்களை திரும்பப் பெறுவதாகும். அமைச்சர்களை நியமிப்பதில் உள்ள “அறிவுரை கூறுவதை” “கலந்தாலோசிப்பதாக” மாற்றுவதன் மூலம் ஜனாதிபதியின் கரத்தை மேலும் வலுப்படுத்துவது, பிரதமரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை அனுமதிப்பது போன்றவற்றை தற்போதைய பிரதமர் கூட ஒப்புக்கொண்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஏழு வருடங்கள் கடந்தும் இவ்வளவு நல்லாட்சிக்காகப் போராடிய பிரதமருக்கு என்னதொரு பரிதாபம்?

21.jpg

இவையனைத்தும் பூமொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை உளவியல் ரீதியாக சௌகரியமாக வைத்திருப்பதற்கும் , 21ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க தூண்டுவதற்குமாகும். அரசியல் சாசனங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ற வகையில் மட்டும் உருவாக்கப்படவில்லை என்பதை அனைவரும் முக்கியமான தாக கருதுவதில்லை. அரசியலமைப்பு நீண்ட காலத்திற்கானது. 2015 மே மாதம் போலவே இந்த முறையும் நடக்கலாம் என்று நினைக்கிறேன்.

“இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கான ஏற்பாடு வெறும் முன்மொழிவு” என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறியதாக தினக்குரல் தெரிவிக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்காக குழுநிலையில் அதை வாபஸ் பெறுவதற்கு பேரம் பேசுவதற்கான சமிக்ஞையாக இது இருக்கலாம். வரலாறு மீண்டும் திரும்பி வரலாம், விஜேதாச ராஜபக்ச இரட்சகராகஇருப்பார் ! என்ன நடக்கிறது என்பது தொடர்பாக அவருக்கு நிச்சயமாக சிறப்பான பகுத்தறிவு இருக்கும்.

நான் சட்டத்தரணி இல்லையென்றாலும், பசில் ராஜபக்ஷவிற்கும் கம்பெனிக்கும் ஒரு தடையாக எனது உள்ளுணர்வைக் கொண்டி ருக்கிறேன் . 20ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 78(3) வில் இது உள்ளது. அது பின்வருமாறு கூறுகிறது:
78(3)பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றிற்கு முன்மொழியப்பட்ட எந்தவொரு திருத்தமும் அந்த சட்டமூலத்தின் தகைமைகள் மற்றும் கொள்கைகளில் இருந்து விலகாது.”

விஜேதாச ராஜபக்ஷவோ அல்லது பசில் ராஜபக்ஷ ஆதரவாளர்களோ அரசியலமைப்பு ரீதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அனுமதியைப் பெறுவதற்கான “முன்மொழிவை” (முன்னவர் தின க்குரலில் கூறியது போல) வாபஸ் பெற முற்பட்டால்,எதிரணிக்கு அதை எதிர்க்க முடியாத, புனிதமான உரிமையாக இருக்கும். சட்டமூலத்தை “தகைமைகள் ” மற்றும் “கொள்கைகள்” சவாலுக்கு உட்படுத்தப்பட்டு தீர்மானிக்கப்படும் போது அது சபை அல்லது நீதிமன்றத்தால் ஒரு நாள் தீர்மானிக்கப்படும். சபையில், தகைமை மற்றும் கொள்கைகள் கோலோச்சும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எவ்வாறாயினும், 19ஆவது திருத்தத்தில் தகைமை மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் இல்லாதிருந்தால், குழுநிலையில் எவரும் திருத்தம் கொண்டு வருவதைத் தடுக்க பாரா ளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தலாம். பெறுபேறுகளில் வெற்றியைப் பார்ப்பதற்கு நாம் தயாராக இருப்போம் !

sri_lanka_19th_athavaneng-300x200.jpg

21ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், ஜனாதிபதி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். சில சிவில் சமூக ஆட்கள், 19ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளை விமர்சிக்காமல், நாட்டின் மிக உயர்மட்ட அரசியல் தலைவர்களை தாங்கள் அணுகியதாகக் கூறுகின்றனர். மேலும் அவர்களின் முன்மொழிவுகளுக்கு அனைவரும் உடன்பட்டுள்ளனர். ஆனால் அதே சமயம் பின்னையவர்களிடமிருந்து மாறுபட்ட குரல்களைக் கேட்கிறோம், யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பது எம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
பொருளாதார மற்றும் அரசியலமைப்பு ரீதியான குழப்பம்!

அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆதரிப்பவர்கள் பலர், பொருளாதார வீழ்ச்சியானது தவறான அரசியல்நிர்வாகத்தால் ஏற்பட்டது என்று உறுதியாக நம்புகிறார்கள், இது 20ஆவது திருத்தத்தால் மோசமாக்கப்பட்டது, இது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் அதிக அதிகாரம் குவிவதற்கு வழிவகுத்தது. 19ஆவது திருத்தத்தை அதன் பலவீனங்களுடனும் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். மற்றொரு காரணம், 21ஆவது திருத்தம் என்பது ஜனாதிபதியின் பதவியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அரைவாசி நடவடிக்கை என்ற எண்ணப் பாடாகும்.. இதற்கிடையில், சிலர் ஒட்டுமொத்த முறைமை மாற்றத்தைக் கோருவதுடன் அது ஒரே நேரத்தில் அரசியலமைப்பு ரீதியாக செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஜனாதிபதி ராஜினாமா செய்யாத வரையில் எந்த ஒரு மாற்றமும் நடக்காது என்று பல விமர்சகர்கள் நம்புகின்றனர். போராட்ட[அரகலயா ]பிரதிநிதிகளும் கலந்து கொண்ட ஒரு செயலமர்வில், இந்தக் கருத்து வேறு எதையும் விட அதிகமாக வலியுறுத்தப்பட்டது. சிரமங்கள் பற்றி குறிப்பிடப்பட்டபோது,பிரதமர் மகி ந்த ராஜபக்சவின் பதவி நீக்கம் அரசாங்கத்தின் மீது கொண்டு வரப்பட்ட அழுத்தத்தின் வினைத்திறனுக்கான சான்றாகக் குறிப்பிட்ட அவர்கள், ஜனாதிபதியும் அவ்வாறே கையாளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முன்கூட்டியே நீக்க வேண்டுமென விரும்புகிறது. ஜனாதிபதி உடனடியாக பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என பொதுமக்கள், சிவில் சமூகம், அரகலயா ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதி பதவியை ஒழிக்க அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்பவர்கள் ஏன் தோல்வியுற்ற ஜனாதிபதியை பதவியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆயினும்கூட, நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இது கடினம். இதனால் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லுமாறு அரகலய கோரிக்கை விடுத்தது.யதார்த்தம் உண்மையில் அவர்களை அவசியம் கவலையடையச் செய்ய வேண்டு மெனினும் ஜனாதிபதியை ஆதரிப்பவர்கள் அவர் 69 இலட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

20ஆவது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கருதுவதாகவும், ஜனாதிபதியின் இராஜினாமா பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார். உண்மை.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் திட்டங்கள் மிகவும் வலுவாக உள்ளன, ஆனால் அவை புனிதமானவை அல்ல. அரகலயாவின் கருத்துகளோ அல்லது சிவில் சமூகத்தின் பார்வைகளோ அதற்கானவை அல்ல! 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு, 19ஆவது திருத்தத்தை மீட்டெடுத்து, பாராளுமன்றத்தை பலப்படுத்திய பின்பு பிரதமர், அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் எதிர்கால நடவடிக்கையைத் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். எல்லாமே சாதகமாக இருந்ததாகத் தெரிகிறது கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பும்போது அவர் பதவியை விட்டு விலகுவார் என்று பிரதமர் நம்புகிறார். மடமைத்தனமானதும் நடைமுறை சாத்தியமற்றதுமான சிந்தனை!

ஆனால் நீதி அமைச்சர் 19ஆவது திருத்தத் தை 21ஆவது திருத்தம்ஊடாக மீட்டெடுக்க விரும்பவில்லை. எனவே, 21ஆவது திருத்தம் எவ்வாறு பாராளுமன்றத்தை பலப்படுத்துகிறது என்பது ஒரு பிரச்சினை. உதாரணமா க , அயோக்கியத்தனமாக சீனி இறக்குமதி செய்யும் வர்த்தகர்களைப் பாதுகாக்க அல்லது ‘பிணைமுறி போக்கிரிகளை’ காப்பாற்ற அல்லது மற்றொரு அரசியல்வாதியைக் காயப்படுத்த பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். ஜனாதிபதிக்கு அவ்வாறு வழங்குவதற்கான 21ஆவது திருத்தம் , பாரா ளுமன்றத்தை பலப்படுத்தும் என்பது வெறும்விருப்பத்தை வெளிப்படுத்துவது தான் .குற்றவாளிகளை மன்னிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், இலங்கை சட்டத் தர ணிகள் சங்கம் பரிந்துரைத்த பரிசீலனைகள் மற்றும் சமப்படுத்தல் இல்லாமல் அத்தகைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நகர்வுகள் பிரயோசனம ற்றவை.

ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் ஆளுகைக்கான அணுகுமுறைகள்

சர்வதேச உதவியுடன் பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான முயற்சிகளின் வெற்றியானது பொருளாதார சீர்திருத்தங்களை மட்டுமல்லாமல் அரசியல் சீர்திருத்தங்களை செயற்படுத்துவ தையும் சார்ந்துள்ளது. எனவே,இரண்டின் கலவையையும் ஆதரிக்கும் அணுகுமுறையின் தேவை “சென்மதிநிலுவை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வலுவான மற்றும் சாதகமான சூழல் நாட்டை கட்டமைப்புச் சீர்திருத்தங்களின் திட்டத்திற்கு வழிநடத்துவதாக இருக்கும்” என்ற அழைப்பில் தெளிவாகத் தெரிகிறது. வேறு வழியில் அல்லாமல் அவை ஒன்றுடனொன்றுஇணைந்து செல்ல வேண்டும்.

உதாரணமாக,சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் அறிக்கை, நிதி நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல் ,நாணயவியல் கொள்கை மற்றும் மாற்று வீத கட்டமைப்பு, நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல்,நம்பகத்தன்மையை உறுதி செய்வது பற்றி பேசுகிறது; மேலும் வளர்ச்சியை அதிகரிக்கவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவுமான கட்டமைப்பு சீர்திருத்தங்களைப் பற்றிக் கூறுகிறது. எனவே பொருளாதார மற்றும் அரசியல் நிர்வாகம் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலில் இருப்பதைக் காணலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜோர்ஜியவா, நாம் இப்போது “தவறான நிர்வாகத்தின் விளைவு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையை மீண்டும் ஒரு சிறந்த பொருளாதார அடித்தளத்தில் வைப்பதே மிக முக்கியமான விடயம். பரும்படியாக்க பொருளாதார அடித்தளத்தை யார் முறியடித்தார்கள் மற்றும் யார் ‘தவறுகளை’ ஒப்புக்கொண்டார்கள், எனவே தவறான நிர்வாகத்திற்கு யார் பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். தற்போதைய குழப்பத்திற்கு காரணமானவர்கள் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கு அதே அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு 21ஆவது திருத்தம் முயற்சிக்கிறது!

பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகள் குறித்து இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்குவதற்கு திட்டமிடவில்லை எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. பரும்படியாக்க பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பில் அரசியல் நிர்வாக மறுசீரமைப்புகளும் அடங்கும்.

மக்கள் விரும்பும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் சபாநாயகருடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார். புதிய பிரதமர் உட்பட அரசாங்கம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் முடியுமென தான் நம்புவதாக தூதுவர் கூறியுள்ளார்.
யூ எஸ் எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் இலங்கையர்களுக்கான தனது ஆதரவு தொடர்பாகவும் நாடு நெருக்கடியை சமாளிக்கவும் யூஎஸ் எயிட் உதவும் என்று உறுதியளித்துள்ளார் . அதே நேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார் . சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற ஏனைய நன்கொடையாளர்களுடன் இணைந்து இலங்கையை ஆதரிப்பதற்கான சமந்தா பவரின் ஆற்றல் உறுதியானது. ஆனால் அவரது மேற்கூறிய கவலைகள் அவரது சிந்தனையில் செல்வாக்கை செலுத்தும்.

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்தும் இலங்கையர்களுடன் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பொருளாதார மறுமலர்ச்சியுடன் அரசியல் ஸ்திரத்தன்மையையும் இணைத்துள்ளார்.
அனைத்து வெளிநாட்டு பிரமுகர்களும் அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர் , ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவசம் வேறுவிதமாக நம்புகிறார். இது அவரது அரசியல் எஜமானை பாதுகாப்பதற்காகவே என்பது புரிந்துகொள்ளத்தக்கது. அரசியல் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்த ஜனாதிபதியிடம் கூட அவர் முரண்படுகிறார். இந்தப் பின்னணியில், நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் விக்ரமசிங்கவிடம் உள்ளது.

முன்னோக்கிச் செல்வதற்கான வழி

21ஆவது திருத்தம் தொடர்பாக அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. அரசாங்கக் குழுவிற்குள்ளும் முரண்பட்ட கோரிக்கைகள் உள்ளன. சிவில் சமூகம் ஒரே குரலில் பேசுவதில்லை. ஜனாதிபதியின் விருப்பம் 21ஆவது திருத்தத்தில் பிரதிபலிக்கிறது, ஏனெனில் இது அவரது ஒப்புதலுடன் முன்மொழியப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் . 20ஆவது திரு த்தத்திலுள்ள அதிகாரத்தை எந்தவொரு ஜனாதிபதியும் தாமா க முன்வந்து விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அரசியல் அதிகாரத்தைப் பற்றி கலந்துரையாடும்போது ‘அரசியல்வாதிகளின் அதிகாரம்’ தொடர்பான ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது.

“அதிகாரத்தைத் தேடித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை ஒருபோதும் நீங்காது, அதன் காரணமாகவே எமது அரசியல் தலைவர்கள் ஊழலுக்கு ஆளாக நேரிடுகிறது. … ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கு, ஒவ்வொரு அபிவிருத்தி கொள்கை ஞானத்திற்கான ஒவ்வொரு விருப்பத்க்கும் பக்கபலமாக இருப்பது ஆட்சியைப் பெறுவதில் அல்லது தக்கவைத்துக் கொள்வதில் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது பற்றிய சிந்தனையாகும்.
கோத்தாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச போன்றோருக்கு விதிவிலக்கு இல்லாமல் இது பொருந்தும். அதிகாரத்தைப் பெறுவதற்கும், ஆட்சியைத் தக்கவைப்பதற்கும் அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள். எனவே, பசிலின் நகர்வுகளைஜனாதிபதி மற்றும் பிரதமர் தோற்கடித்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரசியல் பதவிகளில் அமர்வதைத் தடுப்பது போன்ற விதிகளை சமரசம் செய்து, பல கையாளுதல் களுடன், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ 21ஆவது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறலாம்.

21ஆவது திருத்தத்தை அமைச்சர் ராஜபக்சவும் பிரதமரும் அங்கீகாரத்துக்கு முன் மதிப்பாய்வு செய்வதன மூலம் வெகுஜன எதிர்ப்பைத் தடுக்கலாம். சிவில் சமூகம் மற்றும் அரகலயாவில் உள்ளவர்களும் “அரசியலமைப்பு மூலம் நரகத்திற்கு” என்று கூறாமல் இந்த நடைமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஜனநாயக ரீதியில் மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலை அரகலயா பெற வேண்டும், தக்கவைத்துக் கொள்ள வேண்டும், எனவே மேற்கூறிய மேற்கோள் அதற்கும் பொருந்தும்.

எதிர்ப்பு அரசியல் தொடர்பாக எலைன் கிளாசர் சொல்வதிலிருந்து அனைத்து அரசியல்வாதிகளும் பாடம் கற்க முடியும்: “… அரசியல் என்பது அதிகார வரம்பின் ஒரு பொதுத்தன்மையைப் பற்றியது, விட யங்கள் எவ்வாறு செயற் படுகின்றன என்பதை கூட்டாக ஒழுங்கமைக்க ஒரு சமூக விருப்பம்- தனியாக , ஒப்புக்கொண்ட விட யங்களைச் செய்ய வேண்டும்.” தற்போது நாம் அத்தகைய அரசியலுக்கு இலக்காகவில்லை மாறாக சூழ்ச்சித்தனமான வக்கிரமாக இருக்கிறோம். இதனை அனைத்து அரசியல் குழுக்களும் கேட்கட்டும்.

ஹிருணிகா பிரேமச்சந்திர மிரிஹானவில் ஆரம்பித்து வைத்தது என்ற வகையில் அவர்களுக்கு எதிரான விமர்சனங்களையும் சிவில் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். 21ஆவது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு, ஜனாதிபதியின் அதிகாரங்களை பின்னர் குறைப்பதெ ன்ற வாக்குறுதிகளுடன் அரசியல்வாதிகள் சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

. அரசாங்கத்திலோ அல்லது எதிர்க்கட்சியிலோ இந்த கொடூரமான அதிகாரங்களைப் பயன்படுத்த விரும்பினாலோ இல்லாவிடிலோ அரசியலில் இது இடம்பெறாது , மேலும் முக்கியமான கட்டத்தில் அவர்கள் பின்வாங்குவார்கள், ஏனெனில் மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, அவர்கள் அதிகாரத்தை ‘பெற்றுக்கொள்ளவும் ‘ ‘தக்கவைக்க’வும் வேண்டிய தேவை உள்ளது.

“ஐயா, நல்லாட்சியை யதார்த்தமாக்குவதற்கு இதுவே உங்களுக்குக் கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம், சூழ்ச்சிகளால் அதனைஇல்லாமல்செய்ய அனுமதிக்காதீர்கள். நீங்கள் இப்போது அதை அடையவில்லை என்றால், நீங்கள் ஜனநாயக நல்லாட்சி விழுமியங்களுக்கு எதிராக பாவம் செய்த தோல்வி என்று அழைக்கப்படுவீர்கள், அவ்வாறு நீங்கள் சர்வதேச அரங்கில் கூட பார்க்கப்படுகிறீர்கள்” என்று பிரதமர் விக்கிரமசிங்கவிடம் ஒருவர் கூறக்கூடும்
நாங்கள் கோருவதை பிரதமர் கேட்டாரா என்பதைப் பொறுத்திருந்து நாம் பார்ப்போம்!

கொழும்பு டெலிகிராப்

https://thinakkural.lk/article/182429

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.