Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைத்தியர் ஷாபிக்கு நிலுவை சம்பளம் வழங்கி வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.எப்.எம்.பஸீர்)

சிங்கள தாய்மருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கான காசோலை தனக்கு கிடைக்கப் பெற்றதனை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வீரகேசரிக்கு உறுதி செய்தார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளர் கே.சி.எம்.முதனாயக்கவின் கையொப்பத்துடன் 337496 எனும் இலக்கத்தை உடைய காசோலை ஊடாக இந்த சம்பள நிலுவை செலுத்தப்பட்டுள்ளது.

2 மில்லியன் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதம் ( 2675816.48) இவ்வாறு நிலுவை சம்பளம் கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் SEC.MINISTRY OF HEALTHCARE & NUTRITION எனும் பெயரில் மக்கள் வங்கியில் உள்ள 012200139025195 எனும் இலக்கத்தைக் கொண்ட கணக்கிலிருந்து இந்த நிலுவை செலுத்தப்பட்டுள்ளது.

 முன்னதாக எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குள் வைத்தியர் ஷாபியின் சம்பள, கொடுப்பனவு நிலுவைகளை பூரணமாக செலுத்தி முடிப்பதாக சுகாதார அமைச்சு மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் ஊடாக கடந்த 07 ஆம் திகதி அறிவித்தது.

சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்தாணை ( ரிட்) 7 ஆம் மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு இவ்வாறு பரிசீலிக்கப்ப்ட்டது.  

இதற்கு முன்னர் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது அரச நிர்வாக அமைச்சின் நிறுவங்கள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகத்தின் கடிதம் ஒன்றினை மன்றில் முன்னிலைப்படுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரசன்னமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில், அவருக்கு செலுத்தப்படவேண்டிய அடிப்படை சம்பளம், கொடுப்பணவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே, கடந்த 7 ஆம் திகதி மனு பரிசீலனைக்கு வந்த போது, குறித்த அடிப்படை சம்பளம்,  கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு,  இடைக்கால கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றை ஜூலை 10 ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்துவதாக சுகாதார அமைச்சின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த எழுத்தாணை மனுவில், குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ,  அவ்வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர்  ஏ.எம்.எஸ். வீரபண்டார,  சுகதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,  சுகாதார அமைச்சின் செயலர்  மேஜர் ஜெனரல் வைத்தியர்  எஸ்.எம். முணசிங்க,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல குணவர்தன  ஆகியோர்  பிரதிவாதிகளாக  பெயரிடப்பட்டுள்ளனர்.

இம்மனு கடந்த பெப்ரவரி  10 ஆம் திகதி முதன் முதலாக ஆராயப்பட்ட நிலையில் பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன கோரிய கால அவகாசத்துக்கு அமைய,  பின்னர் பெப்ரவரி 17 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டிருந்தது.

இதன்போது  போது,  மனுதாரரான  வைத்தியர் ஷாபி சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த  சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க, தனது சேவை பெறுநருக்கு எதிராக முன்னெடுக்கபப்படும்  அடிப்படை ஒழுக்காற்று விசாரணைகள், தற்போதைய குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ  ஊடாக முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைப்பதாக கூறினார்.  குறித்த பணிப்பாளர் பக்கச்சார்பான நபர் எனவும்,  அவர் தொடர்பில் அரச சேவை ஆணைக் குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க குறிப்பிட்டிருந்தார்.

 எனினும் 7 ஆம் திகதி பரிசீலனைகளின் போது,  வைத்தியர் சந்தன கெந்தன் கமுவ முன்னிலையில்  ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்க்கொள்ள வைத்தியர் ஷாபிக்கு ஆட்சேபனை இல்லை சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.

 அதற்கமைய, மனுவின் ஊடாக கோரப்பட்ட நிவாரணங்கல் கிடைத்துள்ளதன் பின்னணியில், இந்த ரிட் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள வைத்தியர் சாபி சிஹாப்தீன் தரப்பு கோரிய நிலையில், வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்தது.

சட்டத்தரணி சஞ்ஜீவ குல ஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய இம்மனுவில் மனுதாரர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்காக  சட்டத்தரணிகளான புலஸ்தி ரூபசிங்க,  ஹபீல் பாரிஸ் ஆகியோருடன் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜரானார்.

பிரதிவாதிகளுக்காக  அரச சட்டவாதி மெதக    மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன ஆஜராகின்றார்.

 குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக தான் சேவையாற்றியதாகவும், இதன்போது சட்ட விரோத கருத்தடை தொடர்பில் ஆதரமற்ற, இன ரீதியிலான  வெறுக்கத் தக்க பிரச்சாரங்களை மையப்படுத்திய  குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தான்  கட்டாய விடுமுறையில்  அனுப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மகப்பேற்று துறையில் நிபுணர்கள் பலரும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அறிவியல் ரீதியாக சாத்தியமற்றவை எனவும் பொய்யானவை எனவும் ஆதாரபூர்வமாக விளக்கியும், தன் மீதான பொய்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய  சம்பள நிலுவை மற்றும் கொடுப்பணவுகள் இதுவரைக் கிடைக்கவில்லை எனவும்  தாபன விதிக் கோவையின் 20 (2) ஆம் பிரிவின் படி, கட்டாய விடுமுறையில் உள்ளவருக்கு சம்பளம்  வழங்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள

 மனுதரரான வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அவற்றை செலுத்த உடனடியாக பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், தனக்கு கிடைக்கப் பெற்ற சம்பளம், கொடுப்பணவு நிலுவைகளை அத்தியவசிய மருந்து கொள்வனவுக்காக சுகாதார அமைச்சுக்கே வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

வைத்தியர் ஷாபிக்கு நிலுவை சம்பளம் வழங்கி வைப்பு | Virakesari.lk

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பள நிலுவையை நன்கொடை வழங்கிய டொக்டர் ஷாபி

குருநாகல் போதனா வைத்தியசாலை கடமையாற்றிய மகப்பேற்றியல் நிபுணரான டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், தனக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவையான 26 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளார்.

அவருடைய சம்பள நிலுவையை கடந்த வெள்ளிக்கிழமைக்கு (10) முன்னர் வழங்குவதாக சுகதார அமைச்சு ஒப்புக் கொண்டிருந்த நிலையில், 9ஆம் திகதியன்று நிலுவைத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையையே நன்கொடையாக வழங்குவதற்கு டொக்டர் ஷாபி தீர்மானித்துள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியபோது, பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சட்டவிரோதமான முறையில் பணத்தை சேர்த்தாகவும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

அவர் மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இதுவரை நிரூபிக்கவில்லை என்று 2019ஆம் ஆண்டு ஜூலை  மாதம் குருநாகல் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தமைக்கு அமைய அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

தனக்கு வழங்க வேண்டிய சம்பளம் நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

தன்னிச்சையாகவும் சட்ட விரோதமாகவும் நியாயமான காரணமின்றி, தனது வேலையிலிருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || சம்பள நிலுவையை நன்கொடை வழங்கிய டொக்டர் ஷாபி

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்" என்பதை, தன்னை பயங்கரவாதியாக் காட்ட முயன்ற இனவாத அரசுக்கும் சுகாதார அமைச்சுக்கும், குருணாகல் மருத்துவமனைக்கும் தன் செயல் மூலம் காட்டியுள்ளா டொக்டர் ஷாபி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் ஷாபிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பாராட்டு

குருநாகல்வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை  அத்தியாவசிய  மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

cbk1.jpg

அவர் பணி இடைநிறுத்தப்பட்ட காலத்திற்கான ஊதியத்தை முழுமையாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,தான் பணியாற்றிய மருத்துவமனைக்கு அவர் தனது சம்பளம் முழுவதையும் வழங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொய்பொறாமை வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்களதீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உங்கள் மீது உமிழப்பட்ட வெறுப்பிற்கு நீங்கள் வழங்கிய பதிலிற்காக வைத்தியர் ஷாபி அவர்களே உங்களிற்கு பாராட்டுக்கள், சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் உங்களை வணங்குகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஷாபிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பாராட்டு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் உங்களை வணங்குகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருக்கட்டும், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும் கூறுவது....

10 hours ago, பிழம்பு said:

பொய்பொறாமை வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்களதீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டது

அது அழித்தது கொஞ்சமா ...  நஞ்சமா? இன்னும் பசி அடங்கவில்லை அதற்கு, அலையுது! நீங்கள் வளர்த்துவிட்டது ஊதிப்பெருத்து நிக்குது விழுங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.