Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்,

உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு யாழ் இணையம் எனும் கருத்துக்களத்தை, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்து கட்டியமைத்த சிற்பி மோகன் அவர்கள் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார்.  யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு எமது நன்றிகள் என்றென்றும் இருக்கும்.

கடந்த மாதத்தின் இறுதியுடன் யாழ் கருத்துக்களத்தை முற்றாக மூடி வாசிப்புக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க முடிவு எடுத்திருந்தும், அது தொடர்பான கள உறுப்பினர்களின் ஆதங்கங்களை உள்வாங்கிக்கொண்டு, கருத்துக்களத்தை மூடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்ததும் யாழ் இணைய உறுப்பினர்கள் ஏலவே அறிந்த விடயம். பல்வேறு சமூகவலைத் தளங்கள் உலவும் இன்றைய ஆசுவாசமற்ற அவசர உலகில், ஆழமானதும், காத்திரமானதுமான உரையாடல்களை எதிர்பார்ப்பாகக்கொண்ட யாழ் இணையமானது தனது சேவையின் அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டுவருகின்றது என்பது ஓர் கசப்பான யதார்த்தம்.  

முகநூல், ற்விற்றர் போன்ற சமூகவலைத் தளங்களில் வருகையினால் கருத்தாடல்களின் கண்ணியம் குறைந்தது ஒரு சமூகமாற்றமாகவே உள்ளது. அத்தகைய கண்ணியமில்லாத கருத்துக்களும் யாழ் கருத்துக்களத்தில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதும், காத்திரமான விவாதங்கள் இல்லாதததும், யாழ் இணையத்தின் ஆக்கற்களத்தில் கள உறுப்பினர்களின் படைப்புக்கள் அருகிவருவதும் கண்கூடு.

களவிதிகளை மீறும் பதிவுகளை நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்ட ஒவ்வொரு பதிவுகளிலும் முறைப்பாடு வசதி உள்ளது. எனினும் கள உறுப்பினர்கள் விதிகளை மீறும் பதிவுகளை முறைப்பாடு செய்வது ஏறக்குறைய பூச்சியமாகவே உள்ளது. மாறாக, சில கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறும் பதிவுகள் உள்ள திரிகளில் தொடர்ச்சியாக விதிகளை மீறும் பதிவுகளை இடுவதும்,  அவை நிர்வாகத்தின் பார்வைக்கு வந்து மட்டுறுத்தப்பட்டால் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டுவதையும் ஒரு வழமையாகக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதற்கு முக்கிய காரணம் யாழ் கருத்துக்கள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் வாசிக்காமல் உள்ளமைதான்.

அத்தோடு யாழ் இணையத்தின் பார்வையாளர்களிலும், கருத்தாடலில் பங்குகொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் சரிவு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. மேலும், யாழ் கருத்துக்களம் மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டபோது, தொடர்ந்தும் நடாத்தவேண்டும் என விரும்பிய கள உறுப்பினர்களில் பலர்கூட கருத்தாடலில் பங்குகொள்ளாமல் பார்வையாளர்களாக அல்லது யாழ் இணையத்தைப் பார்க்காமலேயே உள்ளனர். நேரமின்மை என்பதுதான் முக்கிய காரணம் என்பதை நிர்வாகம் உணர்ந்துகொள்கின்றது. இதே நேரமின்மையால்தான் நிர்வாகமும் களவிதிகளை மீறும் பதிவுகளை மட்டுறுத்தமுடியாமல் உள்ளது.

இவ்வாறான யதார்த்த நிலைகளைப் புரிந்திருந்தும்,  தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும்,  யாழ் கருத்துக்களம் பிற இணையச் செய்திகளினதும், ஆக்கங்களினதும் திரட்டியாக மட்டும் இல்லாது தமிழ் சமூகத்திற்கு தேவையான ஆக்கபூர்வமானதும் தரமானதுமான கருத்தாடல் தளமாகவும் ஓர் குறிப்பிட்ட காலம் வரை தொடர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

இம்முடிவு பற்றிய முக்கிய குறிப்புக்கள்:

  • யாழ் கருத்துக்களம் 25ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கும் நாள் (30.03.2023) வரை இப்போது உள்ள யாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0 க்கு அமைய நடாத்தப்படும்.
  • கருத்துக்களத்தில் தொடர்ந்தும் கருத்தாடலை அனுமதிப்பதா அல்லது தனியே பார்வைக்கு மட்டும் அனுமதிப்பதா என்பது பற்றிய தீர்மானம் யாழ் களம் 25 ஆவது அகவைக்குள் செல்லும் நாளில் (30.03.2023) தெரியப்படுத்தப்படும். யாழ் கருத்துக்களத்தின் போக்கு, கருத்துக்களின் பார்வை எண்ணிக்கை, கருத்தாடல்களின் தரவுகளின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
  • இணையவன், நிழலியுடன், நியானியும் யாழ் கருத்துக்களப் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். நுணாவிலான் தொடர்ந்தும் கருத்துக்கள நிர்வாகத்தில் இருந்து மட்டுறுத்தலுக்கு துணைபுரிவார்.
  • யாழ் இணையத்தை நடாத்த கள உறுப்பினர்களிடம் இருந்து பண உதவி ஏதும் கோரப்படமாட்டாது. கள உறுப்பினர்கள் கட்டண விளம்பரங்களைப் பெற்றுக்கொள்ள உதவ முடிந்தால் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • கருத்தாடலில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமலும், களவிதிகளை மதிக்காமலும் கருத்துக்கள் வைக்கும் கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையாகவோ, நிரந்தரத் தடையாகவோ கூட இருக்கலாம்.

யாழ் கருத்துக்களம் தொடர்ந்தும் இயங்க யாழ் கள உறவுகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

"நாமார்க்கும் குடியல்லோம்"


நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
    • கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார்.  அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு  இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
    • ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்    ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார். மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார்.  இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.   1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.  அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது.  https://www.virakesari.lk/article/198112
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.