Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலும் கடைசியுமா சொல்லிறன்..

Featured Replies

வணக்கம்!

சில உறவுகள் அடிக்கடி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காணாமல் போகின்றார்கள். இதனால் இவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் யாழில் கூறிய கருத்துக்களை இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். இதன்மூலம் இவர்கள் மீண்டும் யாழுக்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்ப்போம். ஒருவர் சொல்வதில் முதலாவதாகவும், கடைசியாகவும் சொல்பவை எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த கருத்துக்களை மாத்திரம் இங்கு மீட்டுப் பார்க்கின்றேன்.

உங்களுக்கும் விருப்பமான கள உறவுகளை காணவில்லையானால் நீங்களும் அவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் கூறிய கருத்துக்களை இங்கு இணைக்கலாம். [குவோட்டை பாவிக்கலாம்]

நன்றி!

இது லிசான் சொன்னவை.. லிசானை இப்போது அடிக்கடி காணக்கிடைக்கிது இல்லை. இதனால் லிசான் முதலாவதாகவும், கடைசியாகவும் யாழில் சொன்னவை இங்கு வருகின்றன...

லிசான் யாழில் முதலாவதா சொன்னது:

"அதுக்குத்தான் தலைவரோட நேரடியாக் கதைக்கோணுமெண்டுடுறாங்களோ"

லிசான் யாழில் கடைசியா சொன்னது:

"தமிழர்கள் யாவரும் அவசியம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலகட்டம்.

ஆக்கத்திற்கு நன்றிகள், இன்னுமொருவன்."

நான் தேடும் மற்றைய கள உறவுகள் சொன்னவை தொடர்ந்து வரும்... நீங்களும் தொடருங்கள்...

நன்றி!

பி/கு: முதலாவதாகவும், கடைசியாகவும் சொன்னவற்றை தவிர, வேறு எதைப்பற்றியும் இங்கு விவாதிக்காது இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்

முதல் கூறியது: வணக்கம்!

இறுதியாக கூறியது: நன்றி!

பி/கு: முதலாவதாகவும், கடைசியாகவும் சொன்னவற்றை தவிர, வேறு எதைப்பற்றியும் இங்கு விவாதிக்காது இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி!

என்னால முடியல்ல( ஐ மீன் பாராட்டாமல் இருக்க)... :):(

Edited by Danklas

நல்லா செய்கிறீர்கள்...... ;)

அருமையான முயற்சி.... காலம்கடந்தாலும்.... :)

இன்றுவரை ஒரு சொல் எழுதுகிறோம்.... அவ்வகையில்....

இன்று கருத்துக்களம் என்பது உங்களுக்கும் எமக்கும்.... கஸ்ரம்தான்.... எல்லாவற்றையும் அவதானிக்க அல்லது கவனிக்க.... :lol::(

  • தொடங்கியவர்

ஹாஹா... எல்லாரும் பகிடி விடிறியள்... :( பரவாயில்லை.. ஆனால் நான் ஒரு காலத்தில யாழில் காணாமல் போனால் எனது முதல் கருத்தை போடவேண்டாம். :) கடைசி கருத்தை மட்டும் போட்டால் காணும்.. :P

நான் யாழில் எழுதிய அந்த முதலாவது கருத்து மொட்டைக்கறுப்பன் என்றால் என்ன? என்று ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். அதற்கு கு.சா அண்ணா ஏதோ பதில் அளித்து இருந்தார்.. :lol:

இது சின்னப்பு யாழில் முதலாவதும் கடைசியுமா சொன்னது. சின்னப்பு தனது கடைசி கருத்த செல்வன் ரீவி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்ற தலைப்பில் எழுதி இருந்தார். இப்ப சின்னப்புவ நினைக்க மீண்டும் செல்வனை நாளைக்கு மிச்சம் போடவேணும் போல இருக்கு.

சின்னப்பு யாழில் முதலாவதா சொன்ன கருத்து:

<span style='font-size:25pt;line-height:100%'>º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ இத எப்பிடி ஆங்கிலத்தில எழுதுறது</span> :P

சின்னப்பு யாழில் கடைசியா சொன்ன கருத்து:

கிளிஞ்சிது போ விடிய விடிய போக்கிரி விடிஞ்சா பிசின் சின்னாவுக்கு என்ன முறை

:lol:

என்ன மகள் முறியேல்லையோ ..... :P

எஸ் துத் மீ ஏ சேர் லைட் மைன புறொன்ட் சோண் போ பை நெக்ஸ்த லேபன் தூ முஸ் புறொபியறன் அபர் சினல்

கககககககக்க போாாாாாாாாாா

:P :lol:

ஓய்ய்ய் கூ ஆர் யுயுயுயுயுயு???? :angry:

பி/கு: இங்கு சின்னப்பு தனது முதலாவது கருத்தில 07 முகக்குறிகளையும், கடைசி கருத்தில 35 முகக்குறிகளையும் பாவிச்சு இருக்கிறார். இத அப்படியே போட முடியாது உள்ளது. இப்படி ஒரு மெசேஜ் இத போஸ்ட் பண்ணேக்கா வருது..

You have posted a message with more emoticons that this board allows. Please reduce the number of emoticons you've added to the message

எண்டபடியால் சின்னப்பு சொன்ன கருத்துக்களில் உள்ள முகக்குறிகளின் எண்ணிக்கையை குறைத்து இருக்கின்றேன்...

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

கடுவன் யாழில் இப்போது எழுதுவது குறைவு.. வருவதும் குறைவு.. எனவே, கடுவனை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்...

கடுவன் யாழில் முதலாவதாக சொன்ன கருத்து:

நான் கட்டுவனிலை இருந்து கடுவன் வணக்கம்.

கடுவன் யாழில் கடைசியா சொன்ன கருத்து:

வான்புலிகளினால் சிங்கள விமானப்படைத் தலைமைத்தளமான கட்டுநாயக்கா மீது நடாத்தப்பட்ட வரலாற்றுப் பெருமை வாய்ந்த வான்பாய்ச்சலின் பின்பு, சிங்கள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவும், சிங்கள அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்கலவும் காணாமல் போயிருப்பதாக சிங்கள புலனாய்வுத்துறையினர் நெருப்புக்குத் தெரிவித்தனர். இவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதி பயிற்சி பெற்ற நாய்கள் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும்் தெரிய வருகிறது. இத்தேடுதல் நடவடிக்கைக்காக உலகநாடுகளிலிருந்து மேலதிகமாக அதி பயிற்சி பெற்ற பல மோப்ப நாய்களை தருவிப்பதற்காக சிங்கள அரசின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் தெரிய வருகிறது.

.....

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்

இப்போது பிருந்தனை யாழில் சிலமாதங்களாக காணவில்லை..

பிருந்தன் யாழில் முதலாவதாக சொன்ன கருத்து:

சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும்? :roll:

மதம் கொண்ட யானையிடம் மடிந்து போகும் :mrgreen: :mrgreen:

பிருந்தன் யாழில் கடைசியா சொன்ன கருத்து:

கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

இவர் Aug 17 2005, 01:27 PM அன்று யாழில் தான் இணைத்த பிருந்தனின் கவிதைகள் என்று தலைப்பிடப்பட்ட கருத்தாடலிற்கு பதில் கருத்து எழுதியதற்காக இதை கூறி இருந்தார். பிருந்தனின் கவிதைகளில் இருந்து..

அம்மா

அம்மா என்காத உயிர் இல்லையே

அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!

எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்

எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!

எம்மை காக்க அரும்பாடுபட்டாள்

எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!

திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்

நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!

எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள்

எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!

தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க

தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு!

நாம் உண்ணும் அழகு கண்டு

தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்!

தன் உயிர் கொடுத்து

எம் உயிர் வளர்த்தாள் அன்னை!

அவள்தான் நான் உலகில் வந்து

கண்ட முதல் தெய்வம்.

லிபரேஷன் ஒப்பரேஷன்

வீதி எங்கும் சடலம்

எத்தனை போர் எடுப்பு படலம்!

உருண்டு செல்லும் தலைகள்

பிணங்களால் எத்தனை மலைகள்!

தனித்தனியாக எத்தனை கைகால்கள் தெரியும்

இது யார் யாருடையது என்று எங்குபுரியும்!

சிதறிய கண் துடிக்குது

அது யாரை எண்ணி ரத்தம் வடிக்குது!

எங்கும் ஈயக்குண்டின் ரீங்காரம்

எத்தனை உடல்களை துளையிட்டு செல்லும் சிங்காரம்!

திடீர் திடீரென பெரும் இடிகள்

இவைகள் நம்மை நோக்கிவரும் பீரங்கிவெடிகள்!

விமானங்கள் கூட போடுது குண்டு

எம் தலைகளை சரியாகக் கண்டு!

எதற்கு இந்த வெறி ஆட்டம்

பிணங்களின் மணமோ தாங்கவில்லை நாற்றம்!

எமது மண்ணை தனதாக்க

நடக்குது யுத்தம்!

இவர்களுக்கு மண்பறிப்புப் போராட்டம்

எமக்கு மரணப்போராட்டம்.

காதல்அவஷ்த்தை

உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்

நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!

தூரத்தில் உனது உருவம் கண்டால்

என் உடல் குளிர்ந்திருக்கும்!

உன் தரிசனம் கிடைத்துவிட

தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!

நீ அருகில் நெருங்க நெருங்க

எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!

உன்னை அருகில் கண்டவுடன்

எனது இரத்தம் உறைந்துவிடும்!

உனது தலை எனது பக்கம் திரும்ப

எனது விழிகள் படபடத்து மூடும்!

உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்

என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!

உன்னுடன் பேச நினைக்கையிலே

நா உலர்ந்து பேச மறுக்கும்!

உனது நடை வேகம் குறைய

எனது கைகள் பிசைந்திருக்கும்!

என்னை தாண்டி நீ செல்கையில்

மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!

முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்

எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.

வெளிநாடு

வெளிநாடு வந்து விட்டால்

பலநோடு உழைத்திடலாம் என்றார்!

ஒருநோடும் இங்கில்லாது

கடநோடு இங்கிருக்கின்றோம்! இன்று

சிலநோடு உழைப்பதற்க்கு

பலனேதும் இல்லாது!

பலமோடு பார்த்திருப்போம் பலகாலம்!

வருடம் பலதாகியும் வேலையில்லை!

நிரந்தரமானதொரு விசாவுமில்லை!

இல்லை என்ற வார்த்தை எம்வாழ்வில் இல்லை!

என்று இறுமாந்திருந்த எமக்கு வாழ்வே இல்லை.

அக்கரை

எம்மின மக்கள் இங்கு படும்பாடு

வேற்ரொரு மக்கள் பட்டதில்லை!

பாடுபட்டு உழைத்த மக்கள் எல்லாம்

இங்கு படாத பாடுபடுகின்றனர்!

சொகுசு வாழ்வு வாழ வந்த மக்கள்

கொசு வாழ்வு வாழுகின்றனர்!

ஒடுங்க ஒரு இடமில்லாது

ஓடித்திரிகின்றனர் வீதியிலே!

வீடு வேலை என்று ஓடிகின்றனர்

இவர் ஓட்டம் எதுவரை!

உயிர் ஓட்டம் உள்ளவரை

அலுத்துவிட்டது வெளிநாடு!

இவர் இனி சொர்க்கமென கருதுவது

இவர் தம் தாய் நாடே!

அக்கரைக்கு இக்கரை பச்சை

என ஓடிவந்தவர்க்கு

இப்போது அக்கரை

பச்சையாகத் தெரிகின்றது.

இயற்கை காதல்

இறைவன் படைப்பில் எத்தனை புதுமை

அத்தனையிலும் வைத்தான் இளமை!

நீலவானத்தில் ஓடித்திரியும் நிலவு

அதற்கு தோழியர் எத்தனபேர் முகில்களாக!

வாணத்து தேவதைக்குக் கூடநடக்குது வலைவீச்சு

எத்தனை நட்சத்திர இளைஞர் கண்சிமிட்டும் போட்டி!

அவள் உடுத்திக்கொள்ள ஏழுவர்ணத்தில் சேலை

அச்சேலைக்குக்கூட எத்தனை அலங்கரிப்புவேலை!

பன்னீர் தூவும் பனித்துளிகள்

அவள் குளிப்பதற்கு மழைத்துளிகள்!

இளம்காலைப்பொழுதில் வந்துவிட்டான் அவளது காதலன்

அவன்வருகையை பறைசாற்ற எத்தனைஉயிர்களின்ஆர்பரிப்பு!

காதலனை கண்டஅவளோ வெட்கத்தில் ஒளிந்து கொள்ள

அவளைக்காணாத கோபத்தில் அவனோ

எம்மை சுட்டெரிக்கிறான்.

இழப்பு

கடற்கரை ஓரத்தில்

கற்பாறையில் கடல் அடித்திருக்கும்!

நெஞ்சின் ஓரத்திலே

உன்நினைவுகளை இதயம் சுமந்திருக்கும்!

சில்லிடும் கடற்காற்றில்

நான் காத்திருந்தேன்!

நீ என்னை கடந்து செல்கையில்

என் கண்களைப் பார்த்திருந்தாய்!

என்னை கண்டவுடன்

மலரும் உன் முகமென்ன!

ஆனந்தத்தில் தாவி ஓடும்

உன் நடை என்ன!

உன்னிடத்தில் எனக்கோ மயக்கம்

ஆயினும் பேச தயக்கம்!

பேசாத என்னைக்கண்டு உனக்கு கோபம்

ஆயினும் என்னைக்கண்டு நாணம்!

காலம் என்னை உன்னிடத்தில்

இருந்து பிரித்துவிட்டது!

நீயோ உன் நெஞ்சில் இருந்து

என்னை தூக்கி எறிந்து விட்டாய்!

காதலை வெளிப்படுத்தத் தெரியாத எனக்கு

இப்பேரிடி தேவையான ஒன்றுதான்.

இயந்திர மனிதன்

குளிர்ந்த காலைவேளையில்

பனித்துளிகள் மூடி நிற்கும்!

பனித்துளியின் பாரம் தாங்காது

இளம்தளிர்கள் தலை சாய்த்திருக்கும்!

அவற்றுக்கு விடுதலை கொடுப்பதற்கு

புறப்பட்டான் இளம் சூரியன்!

அவன் கதிர்பட்டவுடன் உருக்கிய

வெள்ளி போன்று கரைந்தோடியது பனி!

கதிரவனின் வருகையினால்தான்

எத்தனை ஆர்ப்பாட்டம்!

அவனை வரவேற்க

ஒவ்வொரு உயிரினமும் கானம்பாடின!

குஞ்சுகள் கூட தமது

சின்னவாயால் வரவேற்பு கொடுத்தன!

மொட்டுக்கள் அவிழ்ந்தன

பூ மணம் பரப்பின!

விலங்கினங்கள் கூட

கண் விழித்தன!

மனிதன் மட்டும்

போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!

அவனை எழுப்ப வேண்டும்

கடிகார சத்தம்!

இன்ப ஓசையில் எழும்பாத அவன்

இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.

கவிதைக் காதல்

காதல் என்பது இயற்கையானது

அது எல்லோருக்கும் சொந்தமானது!

எனது காதல் மாறுபட்டது

மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!

என் காதலியின் இளமை மறைவதில்லை

எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை!

எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது

அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்!

அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர்

இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்!

அவள் தேவர்குல தாசியுமல்ல

பூவுலக மாதவியுமல்ல!

அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன்

அவன் சரியான வம்பன்!

கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு

கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு!

பாரதி அவளுக்கொரு தாசன்

பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்!

வாலி போடுவார் அவளுக்கு வேலி

முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து!

அவளே என்றும்

எனது பெரிய சொத்து!

அவளை வரையும்போது

சிலிர்க்குது எனது சித்து!

அவளே கவிதை நாயகி

எனது காதல் நாயகி.

கால நதி

காதலெனும் தீவினிலே

நான் ஓடமாய் காத்திருந்தேன்!

ஓடம் நான் ஓட்டிடவே

கடல் தன்னை கானவில்லை!

தண்ணீர் இல்லா ஓடமெதற்கு

காதல் இல்லா வாழ்வெதற்கு!

காத்திருந்தேன் தீவினிலே

உனை நான் பாத்திருந்தேன்!

காத்திருந்தும் நீ வரவில்லை

கடல் மட்டும் வந்து சேர்ந்தது!

வந்த கடல் கதை கூறி சென்றது

அது உன் கண்ணீரென்று சொன்னது!

கடல் அளவு கண்ணீர் வடித்திடவே

உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது!

ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி

ஓடி வந்த ஓடம் தன்னும் நின்றுவிட்டது!

ஓடிய ஓடம் நின்றதேன்

உன் கண்ணீரும் உறைந்ததேன்!

உப்புப் பாறையில் நான்

துக்கப் பார்வையில் நீ!

தூள் தூளாகாதோ இப்பாறை

திறந்திடாதோ உன் சிறை.

சொந்தம் ஆகிவிட்ட காதல்.

உன் பார்வை எனக்கு கிடைத்துவிட

என் பாதையை நான் மறந்து விட்டேன்!

அவ்வழி நீபோவது கண்டால்

இவ்வழி நான் ஏங்குவது உண்டு!

சேர்ந்து நீ உன் அண்ணனுடன் போகையில்

சோர்ந்து இருப்பேன் அன்று முழுதும்!

கடைக்கண் பார்வை கிடைத்திடவே

கடை வீதியில் காத்திருப்பேன்!

தூரத்தில் நீ வருதல் கண்டால்

ஓரத்தில் நான் பார்த்திருப்பேன்!

பார்வைதன்னும் கிடைத்து விட்டால்

பாரயே வென்றவன் போலாவேன்!

இன்று கிடைத்தது உன் பார்வை

அன்று பெற்றேன் நான் ஜனித்த பலனை!

பார்த்திருந்தேன் நாளை விடியலுக்காக

போர்த்திருந்தேன் இரவுமுழுதும் போர்வைக்குள்ளே!

கடிதமொன்று தந்து விட்டாய்

படி எல்லாம் தடுமாறி நிலைமாறுதே!

படித்து விட்டேன் உன் கடிதத்தை

முடித்து விட்டாய் என் வாழ்கையை!

கொடுத்து விட்டேன் நீ அண்ணனுக்கு எழுதியகடிதத்தை

கொழுந்து விட்டு எரியுதே என் நெஞ்சக்கணல்!

பொறுத்து விட்டேன் நீ

என் அண்ணி என்பதால்.

போராட்டம்

பேறுகாலத்தில்

பிள்ளைகளை,பிரசவிக்க

தாய் நடத்துவாள்,

ஈழத்தில்

தாயைப் பிரசவிக்க

பிள்ளைகள் நடத்துகிறார்கள்.

பிருந்தனை காதல் சுனாமி இழுத்துக்கொண்டு போய்விட்டதோ? :lol:

நீங்கள் பதிவு போட்ட நேரம்..எங்க சின்னப்பு வந்திட்டார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிருந்தனை அடிக்கடி எம்எஸ்என்னில் காணமுடிகின்றது. ஏன் யாழ் வருவதில்லை என்று தெரியவில்லை. அங்கும் முன்பு போலக் கதையில்லை.

குருவே இந்த பக்கத்தில நானும் எழுதலாம் தானே...........அதனால் நானும் ஒருவரை போடுறேன்............... :lol:

மதிப்புக்குரிய இராவணண் அண்ணாவை காணவில்லை................... :P

அவர் எழுதிய முதல் கருத்து...........

கறுப்பி இணைத்த இலங்கயர்கள் இருவருக்கு இவ்வாண்டின் மார்டின் எனால்ஸ் மனித உரிமைகள் விருது என்ற செய்தி ஏற்கனவே பெப்சி எழுதிய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0

அவர் எழுதிய கடைசி கருத்து..........

கூடுதலாக மற்றய இணையத்தள செய்திகளும் தகவல்களுமே இப்பகுதியில் இடம் பெறுவதால். Breaking News என்ற இப்பகுதி. செய்திகள் தகவல்கள் பகுதிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.

சிரமத்திற்கு மன்னிக்கவும்

அவரின் பிரிவால் வாடும் ஜம்மு பேபி............ :o .

குருவே இந்த பக்கத்தில நானும் எழுதலாம் தானே...........அதனால் நானும் ஒருவரை போடுறேன்............... :(

மதிப்புக்குரிய இராவணண் அண்ணாவை காணவில்லை................... :P

அவர் எழுதிய முதல் கருத்து...........

கறுப்பி இணைத்த இலங்கயர்கள் இருவருக்கு இவ்வாண்டின் மார்டின் எனால்ஸ் மனித உரிமைகள் விருது என்ற செய்தி ஏற்கனவே பெப்சி எழுதிய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0

வெட்டு வாங்கிறதுக்கு ஆவலாக இருக்கிறாப்போல தெரியுது

Edited by vvsiva

சிவா அண்ணா அவர் கண்டிப்பா எனி வருவார் அது தான் கூப்பிட்டேன்............... :P :P

ஜஙரழவந யெஅநஸ்ரீ'துயஅரயெ' னயவநஸ்ரீ'யுரப 12 2007இ 11:59 யுஆ' pழளவஸ்ரீ'333594'ஸ

சிவா அண்ணா அவர் கண்டிப்பா எனி வருவார் அது தான் கூப்பிட்டேன்............... :P :P

ஜஃஙரழவநஸ

ஏன் சின்னப்பு வந்ததாலேயா?

ஏன் சின்னப்பு வந்ததாலேயா?

ஆமாம் சிவா அண்ணா எனி பேபி கூட குழப்படி செய்யும் ஆனபடியா அவர் வருவார்........... :P :P

  • தொடங்கியவர்

வடிவேலுவை காணவில்லை... [007 அல்ல மற்றையவர்.. ஆய்வாளர், மருத்துவர், யாழுக்காக தனது கோவணத்தை தொலைத்தவர்.. :( ]

வடிவேலு யாழில் முதலாவதா சொன்ன கருத்து:

அடே தம்பிமார்களே அண்ணான் ஒன்று சொன்னா கேட்பிர்களா?

மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த நான் திரும்ப மதுரைக்கு இருப்பன ? உண்மையை சொன்னா இல்லை போக மாட்டன். எனேக்கே இப்படி இருக்கும் போது நீண்ட காலமாய் குடிபெயர்ந்து ஜரோப்பாவில் பிள்ளைகள் தொழில்கள் அப்படி நிலை எடுத்து விட்ட ஈழத்தமிழரை ஈழம் கிடைத்தால் திரும்பி போவிர்கள என்று கேட்டா? ஏன் ஈழத்துக்கு போய்தான் ஈழத்தை கட்டி எழுப்பனுமா? இப்ப செய்யுற மாதிரி தொடர்ந்து செய்யலாம் தானே?

நம்ம நாட்டுகாரன் என்ன செய்யகிறன் இங்கு கஷ்டப் பட்டு உழைத்த காசை வெளிநாட்டி கொண்டு போய் போடுகிறான்கள், ஆனால் ஈழத்தமிழன் ஜரோப்பாவில் கஷ்டப்பட்டு ஊழைத்த காசை ஈழத்தில் போடுகிறான் அப்படி பட்டவர்களை யாரோ ஒருத்தி இலவச காசில் ஜரோப்பாவை சுற்றி விட்டு ஈழத்தமிழரின் மனநிலை பற்றி சொல்லி இருக்கிறாள் என்றால் அவளை பேட்டி கண்ட செய்திட்தாள் பற்றி சொல்லதேவைஇல்லை............

எப்படி இஸ்ரேல் உருவாக உலகத்தில் உள்ள யூதர் பாடுபட்டார்களோ அப்படி தான் இந்த ஈழத்தமிழ் இனமும்

இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் ஜரோப்பிய நாடுகளில்

ஒரு நாட்டில் ஒரு தமிழ் எம்.பி.யாவது இல்லாட்டி பாரும்

அண்ணான் சும்மா சொல்லவில்லை நடக்கபோறதை தான் சொன்னேன்

சும்மா யாரோ ஒருத்தி சொன்னாளாம் அதுக்கு சிலர் வால்பிடி வேர சின்னபிள்ளையாட்டம்

சொந்த ஊரில் இருந்து சென்னைக்கே வந்துட்டு திரும்பா ஊருக்கு போற வழியைகானோம் இதுக்குள்ள ஜரோப்பாவில் பிறந்த பிள்ளை குட்டிகளை கொண்டு போ என்று அட்வயஸ் வேற...........

வடிவேலு யாழில் கடைசியா சொன்ன கருத்து:

குறிப்பிட்ட நாட்களுக்கு யாழில் கருத்து எழுத முடியாம இருக்கலாம் வேறு இடம் செல்கிறோம்

அங்கு நெற் இருப்பது போல தெரியவில்லை தேட வேண்டாம் அண்ணனை

நெற் இல்லை, தன்னை தேடவேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு போய் இருக்கிறார். பாப்பம் எப்ப திரும்பி வாறார் எண்டு... :P

மதிப்புக்குரிய இராவணண் அண்ணாவை காணவில்லை...................

ஓய் ஏனப்பா அந்தாளைத்தேடுறீங்கள்

:angry: :angry:

இப்போது பிருந்தனை யாழில் சிலமாதங்களாக காணவில்லை..

பிருந்தன் யாழில் முதலாவதாக சொன்ன கருத்து:

சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும்? :roll:

மதம் கொண்ட யானையிடம் மடிந்து போகும் :mrgreen: :mrgreen:

பிருந்தன் யாழில் கடைசியா சொன்ன கருத்து:

கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

இவர் Aug 17 2005, 01:27 PM அன்று யாழில் தான் இணைத்த பிருந்தனின் கவிதைகள் என்று தலைப்பிடப்பட்ட கருத்தாடலிற்கு பதில் கருத்து எழுதியதற்காக இதை கூறி இருந்தார். பிருந்தனின் கவிதைகளில் இருந்து..

அம்மா

அம்மா என்காத உயிர் இல்லையே

அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!

எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்

எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!

எம்மை காக்க அரும்பாடுபட்டாள்

எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!

திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்

நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!

எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள்

எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!

தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க

தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு!

நாம் உண்ணும் அழகு கண்டு

தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்!

தன் உயிர் கொடுத்து

எம் உயிர் வளர்த்தாள் அன்னை!

அவள்தான் நான் உலகில் வந்து

கண்ட முதல் தெய்வம்.

லிபரேஷன் ஒப்பரேஷன்

வீதி எங்கும் சடலம்

எத்தனை போர் எடுப்பு படலம்!

உருண்டு செல்லும் தலைகள்

பிணங்களால் எத்தனை மலைகள்!

தனித்தனியாக எத்தனை கைகால்கள் தெரியும்

இது யார் யாருடையது என்று எங்குபுரியும்!

சிதறிய கண் துடிக்குது

அது யாரை எண்ணி ரத்தம் வடிக்குது!

எங்கும் ஈயக்குண்டின் ரீங்காரம்

எத்தனை உடல்களை துளையிட்டு செல்லும் சிங்காரம்!

திடீர் திடீரென பெரும் இடிகள்

இவைகள் நம்மை நோக்கிவரும் பீரங்கிவெடிகள்!

விமானங்கள் கூட போடுது குண்டு

எம் தலைகளை சரியாகக் கண்டு!

எதற்கு இந்த வெறி ஆட்டம்

பிணங்களின் மணமோ தாங்கவில்லை நாற்றம்!

எமது மண்ணை தனதாக்க

நடக்குது யுத்தம்!

இவர்களுக்கு மண்பறிப்புப் போராட்டம்

எமக்கு மரணப்போராட்டம்.

காதல்அவஷ்த்தை

உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்

நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!

தூரத்தில் உனது உருவம் கண்டால்

என் உடல் குளிர்ந்திருக்கும்!

உன் தரிசனம் கிடைத்துவிட

தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!

நீ அருகில் நெருங்க நெருங்க

எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!

உன்னை அருகில் கண்டவுடன்

எனது இரத்தம் உறைந்துவிடும்!

உனது தலை எனது பக்கம் திரும்ப

எனது விழிகள் படபடத்து மூடும்!

உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்

என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!

உன்னுடன் பேச நினைக்கையிலே

நா உலர்ந்து பேச மறுக்கும்!

உனது நடை வேகம் குறைய

எனது கைகள் பிசைந்திருக்கும்!

என்னை தாண்டி நீ செல்கையில்

மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!

முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்

எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.

வெளிநாடு

வெளிநாடு வந்து விட்டால்

பலநோடு உழைத்திடலாம் என்றார்!

ஒருநோடும் இங்கில்லாது

கடநோடு இங்கிருக்கின்றோம்! இன்று

சிலநோடு உழைப்பதற்க்கு

பலனேதும் இல்லாது!

பலமோடு பார்த்திருப்போம் பலகாலம்!

வருடம் பலதாகியும் வேலையில்லை!

நிரந்தரமானதொரு விசாவுமில்லை!

இல்லை என்ற வார்த்தை எம்வாழ்வில் இல்லை!

என்று இறுமாந்திருந்த எமக்கு வாழ்வே இல்லை.

அக்கரை

எம்மின மக்கள் இங்கு படும்பாடு

வேற்ரொரு மக்கள் பட்டதில்லை!

பாடுபட்டு உழைத்த மக்கள் எல்லாம்

இங்கு படாத பாடுபடுகின்றனர்!

சொகுசு வாழ்வு வாழ வந்த மக்கள்

கொசு வாழ்வு வாழுகின்றனர்!

ஒடுங்க ஒரு இடமில்லாது

ஓடித்திரிகின்றனர் வீதியிலே!

வீடு வேலை என்று ஓடிகின்றனர்

இவர் ஓட்டம் எதுவரை!

உயிர் ஓட்டம் உள்ளவரை

அலுத்துவிட்டது வெளிநாடு!

இவர் இனி சொர்க்கமென கருதுவது

இவர் தம் தாய் நாடே!

அக்கரைக்கு இக்கரை பச்சை

என ஓடிவந்தவர்க்கு

இப்போது அக்கரை

பச்சையாகத் தெரிகின்றது.

இயற்கை காதல்

இறைவன் படைப்பில் எத்தனை புதுமை

அத்தனையிலும் வைத்தான் இளமை!

நீலவானத்தில் ஓடித்திரியும் நிலவு

அதற்கு தோழியர் எத்தனபேர் முகில்களாக!

வாணத்து தேவதைக்குக் கூடநடக்குது வலைவீச்சு

எத்தனை நட்சத்திர இளைஞர் கண்சிமிட்டும் போட்டி!

அவள் உடுத்திக்கொள்ள ஏழுவர்ணத்தில் சேலை

அச்சேலைக்குக்கூட எத்தனை அலங்கரிப்புவேலை!

பன்னீர் தூவும் பனித்துளிகள்

அவள் குளிப்பதற்கு மழைத்துளிகள்!

இளம்காலைப்பொழுதில் வந்துவிட்டான் அவளது காதலன்

அவன்வருகையை பறைசாற்ற எத்தனைஉயிர்களின்ஆர்பரிப்பு!

காதலனை கண்டஅவளோ வெட்கத்தில் ஒளிந்து கொள்ள

அவளைக்காணாத கோபத்தில் அவனோ

எம்மை சுட்டெரிக்கிறான்.

இழப்பு

கடற்கரை ஓரத்தில்

கற்பாறையில் கடல் அடித்திருக்கும்!

நெஞ்சின் ஓரத்திலே

உன்நினைவுகளை இதயம் சுமந்திருக்கும்!

சில்லிடும் கடற்காற்றில்

நான் காத்திருந்தேன்!

நீ என்னை கடந்து செல்கையில்

என் கண்களைப் பார்த்திருந்தாய்!

என்னை கண்டவுடன்

மலரும் உன் முகமென்ன!

ஆனந்தத்தில் தாவி ஓடும்

உன் நடை என்ன!

உன்னிடத்தில் எனக்கோ மயக்கம்

ஆயினும் பேச தயக்கம்!

பேசாத என்னைக்கண்டு உனக்கு கோபம்

ஆயினும் என்னைக்கண்டு நாணம்!

காலம் என்னை உன்னிடத்தில்

இருந்து பிரித்துவிட்டது!

நீயோ உன் நெஞ்சில் இருந்து

என்னை தூக்கி எறிந்து விட்டாய்!

காதலை வெளிப்படுத்தத் தெரியாத எனக்கு

இப்பேரிடி தேவையான ஒன்றுதான்.

இயந்திர மனிதன்

குளிர்ந்த காலைவேளையில்

பனித்துளிகள் மூடி நிற்கும்!

பனித்துளியின் பாரம் தாங்காது

இளம்தளிர்கள் தலை சாய்த்திருக்கும்!

அவற்றுக்கு விடுதலை கொடுப்பதற்கு

புறப்பட்டான் இளம் சூரியன்!

அவன் கதிர்பட்டவுடன் உருக்கிய

வெள்ளி போன்று கரைந்தோடியது பனி!

கதிரவனின் வருகையினால்தான்

எத்தனை ஆர்ப்பாட்டம்!

அவனை வரவேற்க

ஒவ்வொரு உயிரினமும் கானம்பாடின!

குஞ்சுகள் கூட தமது

சின்னவாயால் வரவேற்பு கொடுத்தன!

மொட்டுக்கள் அவிழ்ந்தன

பூ மணம் பரப்பின!

விலங்கினங்கள் கூட

கண் விழித்தன!

மனிதன் மட்டும்

போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!

அவனை எழுப்ப வேண்டும்

கடிகார சத்தம்!

இன்ப ஓசையில் எழும்பாத அவன்

இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.

கவிதைக் காதல்

காதல் என்பது இயற்கையானது

அது எல்லோருக்கும் சொந்தமானது!

எனது காதல் மாறுபட்டது

மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!

என் காதலியின் இளமை மறைவதில்லை

எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை!

எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது

அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்!

அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர்

இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்!

அவள் தேவர்குல தாசியுமல்ல

பூவுலக மாதவியுமல்ல!

அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன்

அவன் சரியான வம்பன்!

கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு

கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு!

பாரதி அவளுக்கொரு தாசன்

பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்!

வாலி போடுவார் அவளுக்கு வேலி

முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து!

அவளே என்றும்

எனது பெரிய சொத்து!

அவளை வரையும்போது

சிலிர்க்குது எனது சித்து!

அவளே கவிதை நாயகி

எனது காதல் நாயகி.

கால நதி

காதலெனும் தீவினிலே

நான் ஓடமாய் காத்திருந்தேன்!

ஓடம் நான் ஓட்டிடவே

கடல் தன்னை கானவில்லை!

தண்ணீர் இல்லா ஓடமெதற்கு

காதல் இல்லா வாழ்வெதற்கு!

காத்திருந்தேன் தீவினிலே

உனை நான் பாத்திருந்தேன்!

காத்திருந்தும் நீ வரவில்லை

கடல் மட்டும் வந்து சேர்ந்தது!

வந்த கடல் கதை கூறி சென்றது

அது உன் கண்ணீரென்று சொன்னது!

கடல் அளவு கண்ணீர் வடித்திடவே

உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது!

ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி

ஓடி வந்த ஓடம் தன்னும் நின்றுவிட்டது!

ஓடிய ஓடம் நின்றதேன்

உன் கண்ணீரும் உறைந்ததேன்!

உப்புப் பாறையில் நான்

துக்கப் பார்வையில் நீ!

தூள் தூளாகாதோ இப்பாறை

திறந்திடாதோ உன் சிறை.

சொந்தம் ஆகிவிட்ட காதல்.

உன் பார்வை எனக்கு கிடைத்துவிட

என் பாதையை நான் மறந்து விட்டேன்!

அவ்வழி நீபோவது கண்டால்

இவ்வழி நான் ஏங்குவது உண்டு!

சேர்ந்து நீ உன் அண்ணனுடன் போகையில்

சோர்ந்து இருப்பேன் அன்று முழுதும்!

கடைக்கண் பார்வை கிடைத்திடவே

கடை வீதியில் காத்திருப்பேன்!

தூரத்தில் நீ வருதல் கண்டால்

ஓரத்தில் நான் பார்த்திருப்பேன்!

பார்வைதன்னும் கிடைத்து விட்டால்

பாரயே வென்றவன் போலாவேன்!

இன்று கிடைத்தது உன் பார்வை

அன்று பெற்றேன் நான் ஜனித்த பலனை!

பார்த்திருந்தேன் நாளை விடியலுக்காக

போர்த்திருந்தேன் இரவுமுழுதும் போர்வைக்குள்ளே!

கடிதமொன்று தந்து விட்டாய்

படி எல்லாம் தடுமாறி நிலைமாறுதே!

படித்து விட்டேன் உன் கடிதத்தை

முடித்து விட்டாய் என் வாழ்கையை!

கொடுத்து விட்டேன் நீ அண்ணனுக்கு எழுதியகடிதத்தை

கொழுந்து விட்டு எரியுதே என் நெஞ்சக்கணல்!

பொறுத்து விட்டேன் நீ

என் அண்ணி என்பதால்.

போராட்டம்

பேறுகாலத்தில்

பிள்ளைகளை,பிரசவிக்க

தாய் நடத்துவாள்,

ஈழத்தில்

தாயைப் பிரசவிக்க

பிள்ளைகள் நடத்துகிறார்கள்.

பிருந்தனை காதல் சுனாமி இழுத்துக்கொண்டு போய்விட்டதோ? :(

என்னையும் ஒருவர் தேடியதற்கு நன்றி :( என்னப்பு செய்யிறது குடும்பம் பெருத்து போய் விட்டது :rolleyes: ஒரு குழந்தை, ஒரு குட்டி ஆகிபோச்சு. அத்தோடு ஒரு கலியாணமும் செய்து கொண்டேன், குடும்பம் பெருத்து விட்டது குடும்ப பாரம் கூடிவிட்டது நேரம் கிடைப்பதில்லை, அத்தோடு இங்கு அனைவரும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள் யாரையும் எதிர்த்து கருத்து கூறமுடியவில்லை, மணம் ஒடிந்து விடுகிறார்கள், ஆதலால் ஹீ........ஹீ........மேலும் சொல்லத்தான் வேண்டுமா?? :o:o

மதிப்புக்குரிய இராவணண் அண்ணாவை காணவில்லை...................

ஓய் ஏனப்பா அந்தாளைத்தேடுறீங்கள்

:angry: :angry:

ஓய் சின்னா தாத்தா.............அவர் வந்தா தானே கொஞ்சம் திரிலிங்கா இருக்கும்...............தாத்தாவை ஒரு பக்கத்தில என்னை ஒரு பக்கத்தில தேட அந்த் மாதிரி இருக்கு..அது தான் வர சொன்னனான்...........அவருக்கு ரெஸ்ட் காணும்.........உது விளங்கவில்லையோ......வர வர தாத்தாவிற்கு ஒன்றும் விளங்குது இல்லை வயசு போயிட்டு.............. :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

யாழ்வினோவை சில கிழமைகளாக காணவில்லை. எங்காவது சுற்றுலா பயணம் போய்விட்டாரோ தெரியாது..

யாழ்வினோ யாழில் முதலாவதா சொன்ன கருத்து:

இது வெறும் கண் துடைப்பு மட்டும் தான். எமக்கு மட்டுமல்ல சர்வ தேசத்துக்கும் இது நன்றாக புரியும்.

யாழ்வினோ யாழில் கடைசியா சொன்ன கருத்து:

விடைகள்:

01) கூற்று பிழையானது.

02) வரலாற்றில் முதல் தடவையாக மனிதர்களுடன் சந்திரனை நோக்கி சென்ற Apollo 8 விண்கலம் சந்திரனில் தரையிறங்கலவில்லை: :lol::D

21 December 1968 அன்று Apollo 8 விண்கலத்தில் Frank Borman, James Lovell, William Anders ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சந்திரனை நோக்கிய முதலாவது பயணத்தை மேற்கொண்டனர். புறப்பட்டு ஆறு நாட்களின் பின் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையை (Moon's Orbit) சென்றடைந்த விண்கலமானது 20 மணித்தியாளங்கள் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் (Moon's Orbit) சந்திரனை வலம் வந்தது. அதன் போது விண்கலத்தினுள் இருந்த விஞ்ஞானிகள் சந்திரனின் மேற்பரப்பினை புகைப்படங்கள் பிடித்தனர். Good Bye!! :huh::lol:

பி/கு: லிசான் தான் யாழைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன் என்று தனிமடலில் அறிவித்து இருந்தார். மிகவும் நன்றி! சின்னப்பு வந்துள்ளார். இரட்டிப்பு மகிழ்ச்சி. பிருந்தனும் பதில்போட்டு உள்ளார். மிகவும் மகிழ்ச்சி. கடுவன், இராவணன், வடிவேலின் பதில்களை, சத்தத்தை காணவில்லை. :D யாழ் உறவுகள் எல்லோரும் தினமும் கருத்துக்கள் எழுதாவிட்டாலும், தொடர்ந்தும் வாசகர்களாக இருந்து இதை எல்லாம் வாசிப்பார்கள், தொடர்ந்தும் நேரம், காலம், சூழ்நிலைகள் சரியாக வரும்போது கருத்தாடலில் தொடர்ந்து இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் முதலும் கடைசியுமா சொன்னவற்றை தொடர்கின்றேன்... நீங்களும் தொடருங்கள்... நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

வசியண்ணாவையும் காணவில்லை.

  • தொடங்கியவர்

இவர் தானே அவர்? http://www.yarl.com/forum3/index.php?showuser=14

வசி யாழில் முதலாவதா சொன்ன கருத்து:

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி தேவகுரு :)

வசி யாழில் கடைசியா சொன்ன கருத்து:

நன்றாக உள்ளது உங்கள் வலைத்தளம்.

[சிவராஜாவின் புளக்கை வாசித்துவிட்டு எழுதிய கருத்து என நினைக்கின்றேன்..]

  • தொடங்கியவர்

யாழ் களத்தின் விஜய் வினித்தை பல காலமாக காணவில்லை...

வினித் யாழில் முதலாவதா சொன்ன கருத்து:

¦¾Ã¢Ôõ «Éø þòÄ ±Ö¾ ±ýÉÌ ¼Á¢ø ¸ºðÁ þÕÌ

வினித் யாழில் கடைசியா சொன்ன கருத்து:

போடலாம் தப்பு இல்லை ஆனா யாழ்களம் போன்ற லட்சக்கனக்கான் வாசகர்கள் பார்க்கும் இடத்தில் வேண்டாம்......

வினித்திற்கு யாழிற்கு வந்து கருத்து எழுதமுடியாத அளவிற்கு குடும்ப பாரம் - சுமை கூடி விட்டதோ?

  • தொடங்கியவர்

பல கவிதைகள் எழுதியா வர்ணனை பல மாத காலமாக காணவில்லை...

வர்ணன் யாழில் முதலாவதா சொன்ன கருத்து:

முகத்தார் அவர்களே

சிரிச்சு சிரிச்சு வயிறே நோகுது.

என்னதான் கள உறவுகளுக்காக பொன்னம்மாக்கா பற்றி நீங்கள் கதை அளந்தாலும் நிஜவாழ்க்கையில் எதிர்மாறாய் தான் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.முகம் தெரியாத உறவுகளையே இப்பிடி சந்தோச படுதுறீங்கள்.

சொந்த வாழ்வில் உங்க மேல எல்லாரும் உயிராதான் இருப்பாங்க என்பது என் நம்பிக்கை!

நல்ல படைப்பாளி நீங்கள் தொடருங்கள். :unsure:

வர்ணன் யாழில் கடைசியா சொன்ன கருத்து:

வணக்கம் வாருங்கள் - ஜஸ்ரின்!! :D

வர்ணனின் சில கவிதைகள்:

நடு நிலமை!!

நாங்கள் நிறைய பேசுகிறோம்!

ஆனாலும்........

வரிகளால் - வரிசை வரிசையாய்- யுத்தம்!

நாலு மூலையிலும் தீ மூண்டாச்சு........

நடுவிலிருந்து கொண்டு ....

நடு நிலமை பேசுகிறோம்!

எலும்புகள் முறியும்போது .....

ஒலிவம் இலைகளை பற்றி புராணமா?

போர் வெறி எதுவும் இல்லை.....!!

உங்கள் சீரிய சிந்தனைகள்.......

சிதறும் இரத்ததுளிகளை,,,,

நிறுத்த முடியுமானால்.....

தங்கத்தாம்பாளத்தில் நீங்கள்

சமாதானத்தை வைத்து தர முடியும்

என்றானால்..................

நம்புவோம் - உங்கள் வீரம்

நாவில் மட்டும் இருந்ததில்லை!

உணரு!

உனக்கென்று - ஒரு

கொள்கை உள்ளவரை

உன்னை யாரும்

கொல்ல முடியாது!

தரிசாய் கிடந்தாலும்

எரிந்து போக துணியும் !

அடுத்தவன் வந்து........

எம் நிலத்தில்

ஆர்பாட்டமாய் .........

ஏதும் செய்ய நினைத்தால் .......

மொத்தமாய் வெறுக்கும்!

முடியாமல் போனாலும்..

மோதி முக்கி

தன்னை அழிக்கும்.......

தாயை விற்று பிழைக்க நினைக்காது!

கோவம் கொள்வாய்

நீ முடக்கிய விரல்களில்

கோவம் - நீளம்..

கொன்றுதான் ஆகணும்.........

யாரை -? தெளிவில்லை!

அது இருக்கட்டும்-

அண்ணாக்கு திவசம் கொடுக்கணுமே

இன்று- முடிந்ததா?

கவனம் - சடங்கு

என்று ஏதோ செய்கிறாய்

உன் சமையல் அறையில்

சிங்களன் ஏவிய செல்- விழகூடும்!

மொத்தமாய் - உன் சந்ததி

முடிய போகலாம் -

உணரு!

ஏதாவது செய் !

தகராறு!

காட்டுவழி பயணம்...

கஸ்டப்படுறோம்....

கட்டைவண்டிதான்....

துடுப்பும் படகும்...!!

சலங்கைகளை ...

கழற்றிவிட்டு தூரம் போகலாம்....

யானை மிதித்து ..........

இழுத்தவர் இறக்கலாம்...

இன்னொருவன் ...........

நானே அடுத்து என்று....

தானாய் செத்துபோக ...

எம்மவர் தவம் கிடக்கலாம்!

புரிகிறோமா?

இழப்புகளின் மேடையில்..

"கதை" கச்சேரி ஏற்பாடு....!

பாடகனே கிடைக்கவில்லை...

இதில் பல்லவி சரணம் தகராறு!

சஹாராவில்

சஹாராவில் பூக்களா?

பாலைவனத்தில் ...

பா(ழ்) ல் பண்ணை ...?

நிறுவ முடியுமா?

முடிந்தாலும் ...

பச்சை வயலை எரித்துவிட்டு,,,,

பாலைவனத்தில்...

பன்னீர் மழையா?

வீணே போகுமே!!

சூரியனுக்கு...

கறுப்படிக்க நினைக்கிறானாம்.!.

முடிந்தாலும்........(???)

சுற்றி வர - இருட்டாகுமே ...

கவலையில்லையா?!

(யாருக்கோ)

விரும்புறேன்!

விட்டகுறை தொட்ட குறை.....

நாடும் சொந்தமாயில்லை..

நாமும் நாமாயில்லை.......

எங்கோ பிறந்தோம்

எங்கோ வாழ்கிறோம்......

உடையாதா மனசு?

ஈசல் இறப்பிற்கும் எல்லை ....

இருக்குமாம் சொல்வார்........

ஈழத்தமிழன் எமக்கு???

நாடிழந்த பறவைக்கெலாம்....

ஒரு கூடு தந்தீர்.

சுய நலத்தில் ...

பொது நலம் காணுமாம் உலகம்...

மாறாய் உம் பொது நலத்தில்...

நாம் சுய நலம் கொண்டோம்!

எம் முகத்தை நாமறிய...

எம் அறிவை நாம் அறிய...!

விழுதுவிட்ட ஆலமரமே...

குடை தந்தாய் ....!

பழங்களை தின்றுவிட்டு ...

எச்சம் போட்டாலும்...

தாயென தாங்கி நிற்பாய்....

ஆதலால்..........

உம் உடலில்...

ஓடி மகிழும் ஒரு அணிலாய்...

என்றும் வாழ......

விரும்புகிறேன் உனை!!

(யாழின் 9 வது அகவைக்காய்)

ஜெயக்குமார் ஐயாவுக்காக!!

கடலால் பிரிந்த தேசத்திலிருந்து -

கண்ணீரின் பெயரால் சிதறினோம்...........

கடலால் பிரிந்த கண்டத்துள்ளிருந்து........ .......

முடிந்ததெல்லாம் - முடித்துவிட்டு...........

முடிந்தது கடமையென்றே ...........

முற்றாய் விழி மூடினீரோ?

காரிருள் ..........

படகுப் பயணம்..............

கஸ்டப்பட்டு கரை நெருங்க

துடுப்பு வலித்தோம்- கிட்ட வருகையில்.........

துறைமுகமாய் - இருந்த நீர் ........

தொலைந்துபோனது - ஏன் தானோ?

உம்மை அறிந்ததில்லை .........

உம் குரல் கேட்டதில்லை........

சுவாசமாய் - ஏதோ ஓரிடத்தில்............

எமக்காய் இருந்தீர்!

அப்போ நன்றி சொன்னதில்லை .....

இப்போ சொல்கிறோம்.............!

காற்றுக்கு உடனே நன்றி சொல்லி ...

எம்மில் யாருக்குத்தான் பழக்கம்?

காற்றாய் இருந்தீர் - சென்றுவாரும்!!

ஏனோ!

சுமையிழுக்கும் காளைகளுக்கு.........

புல்லு கூட கொடுத்ததில்லை...

வக்கணையாய் .............

காத தூரம் நடந்தே நொய்ந்துபோன

அதன் - கால்களில் பிழை பிடிப்பார்..............!

களிம்பு தடவ - நினைத்ததுண்டா?

முகில்களுக்கு இறுதி அஞ்சலியாம்..............

மழைவந்தால்மட்டும் -பிறந்த நாள் வாழ்த்தாம்!

என்னயிதுவோ -கருத்து கப்பலோ?

வயிறுகிழிந்து கொட்டிய வான .......

குருதி உடலில் ஏனோ

கறையான் கள் பெயரில் கப்பல்?

தாய் தேசமது விடியலையே

தந்தை தேசமெதுவென்று தெரிந்தாலும்.......

அவர்களெமை நம்பலையே...........!

போகயெண்ணிய வாகனம்............

விரைவு பாதை நடுவே உருளைகள் ........

செயலற்றதால் உடைந்ததாய் ஆச்சு வாழ்வு..!

நீ வெட்டி வீரம் காட்டு .......

வெள்ளத்தின் மேல் வாளால் வெட்டி...........

உன்வெட்டி வீரம் காட்டு!

நாமேதான்!!

ஓடுமீன் ஓடுமோ.......

உறுமீன் வருமோ..........

வாடி நிற்குமாம் கொக்கு..........

வயிறு காய காய!

கூரிய முள்ளு தொண்டை...............

கிழித்தால் - கொக்கும் செத்துபோகும்!

ஏர் கொண்டு உழுத நிலமல்ல.........

எலும்புகூடுகளின்மேல்

எழுகின்ற பூமி...

அத்திவாரத்தின் கீழிருந்து.....

அவசரமாய் நீர் அதிர்ந்தால்.......

அழிந்து போவது...........

யாருமல்ல- நாமேதான்!!

(இது மட்டுறுத்தினர் - யாழ்பிரியாவுக்கு)

மேலாம்!

வென்றால் சிரி..............

வெள்ளம் கால் நனைத்தால்.....

சிரி............

முழங்கால்மேலது உயர்ந்தால்...........

முற்றும்போனதென்று புலம்பு...!

ஒண்டும் காணம் ...

ஒண்டும்காணமென்றே அழு.,...

ஏதும் நடந்தால்......

இடுப்பை குலுக்கி குலுக்கி........

என்னமோ பண்ணு......

நான் என்ன சொல்ல..........

சிலவிடத்தில்........

சத்தம் போட்டு அழுவதை விட...

மெளனமாய் சிரிப்பது மேலாம்!

தத்தெடு!!

செத்தவீட்டில் சிரிப்பாய்......

கல்யாண நாளில் நீ அழுவாய்........

வயிறு கிழியும் வரை ...

கத்து கத்து ... தவளையே.....

வரம்புகள் எதுவென்றே ...

தெரியா உமக்கு.............

நெடுக்கால போக ..

எப்படித்தான் முடியுமோ?

எரிகிறவீட்டுக்கு....

தீயணைக்க வழியும் சொல்லாய்......

தேம்பி அழுகிறவருக்கு ..

ஆறுதலும் சொல்லாய்...

மிருக உலகே....உலகே.........

உறவுகள் உடல் கருகும்

வாசம் வேண்டியா புலம்பல்?

வேணுமா....... வேணுமா...........

வேணுமென்றால்... இந்த

இந்த உதவாகரைகளையும்

உச்சிமுகர்ந்து தத்தெடு!!

கனவு

நெருப்பாய் - உழைத்தவரெல்லாம்.........

விடை பெறுங்கள்!

ஈரலித்துப்போன விறகுகள்...

இனி பேசட்டும்!!

தவிர்க்க முடியாதென்றறிந்தும்...

வாசலை படிகள் பழிக்கும்...!

எடுத்து அடிவைக்க முடியாவிடினும்...

ஏளனம் செய்யும் .............!

கோலமிருக்குமிடத்தில்...

கொத்து கொத்தாய் - பிணம்!

நரகவேதனை ...

இதுவென்றறிந்தும்....

நமக்கென்ன குறையென்று

நாக்கை பல்லால் வழித்தபடி பேசும்...!

பூமியின் துன்பம் புரியுமா?

கலீலியோவையே - தின்று ...

தொலைத்த கூட்டம்....

திருந்துமா?-கனவு!

வியாபாரி

22ம் திகதி வருதாமோ?

இறக்கை முளைக்கிறதா?

தங்க ரதத்தில்

தாய் நிலத்தை வைத்தா இழுத்தோம்?

சொல்லி வைத்தவர் யாரோ

விடிந்தால் சொர்க்கபுரியென்றே

உன்மனசை சீரழித்தே போன

அந்த செம்மல்தான் யாரோ?

சிங்க தேசத்துக்கு உன் வாயாலே

உணவளிக்கிறாய் கவனம்...

இரத்தவாடை உன் நாவில்....

இதை உனக்கு சொல்லாமல்

விட்டது யாரோ?

வெட்டவெளியை ஒரு

துளி மழை நனைத்தால்...

பொட்டல்காடெல்லாம்...

புஸ்பனவனமாகுமென்றே

சொல்லி வைத்தது யாரோ?

அமைதியில் நாட்டமில்ல..

போர் அவர் பிறவிக்குணம்...

ஆவிபிரிப்பதே அவர் தொழில்..

அடுக்கடுக்காய் புலிக்கு

அவப்பெயராம்....!

இந்த நாளில் போரென்றே கொள்வாயா?

இருந்த கூட்டுக்கு நீயே

இடியாய் ஆவாயா?

சொல்லி வைத்தது யாரடா...

இன சுடுகாட்டுக்கு -உனை

விறகு வியாபாரியாக்கிய

அந்த வித்தகன் தான் யாரடா?

போ

பணக்காரன்....... நீ!

இருப்பதை இழிப்பதில்!

ஏழை நீ......

விரல்களை கருக்கியபின்

புல்லாங்குழல் வாசிப்பதில்!

ஆமையும் ஓடிச்சாம்.......

முயலும் ஓடிச்சாம்...........

அது வென்றதோ....

இல்லை - இது வென்றதோ.......

நீ வெல்லமாட்டாய் - நம்பு!

வெற்றிக்கும் தோல்விக்கும்

எல்லைகளிருக்குமாம்....

உனக்கு?

இடுப்பிலிருந்த துணி அவிழ்த்து...

கண்ணைக்கட்டினால்.......

இருட்டாகிடுமா பூமி?

அம்மணமாய் ஆனாய் போ!

வெங்காயம்!

ஒன்பது தசாப்தங்கள் -கடந்து..

செத்தொழிந்து...

மேலும் - மூன்று தசாப்தம் முடிந்தும்...

ஏன் அந்த - உற்சாக கிழவன்...

உன் மனசில் - துருத்திகொண்டே

கிடக்கிறான்??

வெளிப்படையாய் -பேசினாலென்ன...

அந்த வெள்ளி - தாடி ..

நாத்திகனுக்கு-.......

ஆத்திகனாய் - இருப்பவர் தரும்...

அதரவு - அதிகம் ..!!!

எல்லாம்.....

அவர் கருத்து......

அதிலொரு சிறு குழப்பம்...

பட்டு சேலையை சாமிக்கு

உடுத்தி.......

அழகு பார்த்து....

பக்கத்து உறவுகள் ...

ஊத்தை - துணியுடன்

கிடப்பதை ரசிப்பதில்

உனக்கென்ன பெருமை??

அவர் - வார்த்தையில்

சொல்லுறேன் -கேளேன்...

நீ வெங்காயம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்...வர்ணன் அண்ணாவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கும்.... :)

ஒரு கேள்வி எங்க இருந்து முதல் எழுதிய கருத்து எடுக்கிறீங்க? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.