Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அய்மன் அல் ஜவஹிரியின் கொலையும் - புவிசார் அரசியல் தாக்கங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அய்மன் அல் ஜவஹிரியின் கொலையும் - புவிசார் அரசியல் தாக்கங்களும்

By RAJEEBAN

26 AUG, 2022 | 04:25 PM
image

 

By Sanjay Pulipaka and Shreyas D Deshmuk

 

 

https://economictimes.indiatimes.com

அல்ஹைதாவின் தலைவரானஅய்மன் அல் ஜவஹிரி ஜூலை மாதம் 31 ம் திகதி இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 11 தாக்குதல் உட்படஅமெரிக்காவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களில்  ஒசாமா பி;ன்லேடனுடன்  இணைந்து சூத்திரதாரியாக இவர் விளங்கினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரி;க்கா படைகளை விலக்கி தலிபான ஆப்கானை கைப்பற்றி ஒருவருடத்தின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு தசாப்தகாலமாகிவிட்ட போதிலும் அதில் ஈடுபட்டவர்களை தளர்ச்சியற்று அமெரிக்கா இலக்குவைக்கின்றது என்பதை அய்மன் அல் ஜவஹிரியின் கொலை வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு ஹெல்பயர் ஆர்9எக்ஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த நடவடிக்கை துல்லியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது போல தோன்றுகின்றது.பொதுமக்கள் இழப்புகள் ஏற்படவில்லை.

இலக்குவெற்றிகரமாக தாக்கப்பட்டமை பிராந்தியத்தில் புலனாய்வு அடிப்படையில் செயற்படுவதற்கான தனது பலத்தை பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் திறன் தொடர்வதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல் அமெரிக்காவால் ஆப்கானில் உள்ள இலக்குகளை தனது விருப்பத்திற்கு ஏற்ப தாக்கமுடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

வெற்றிகரமான இந்த தாக்குதல் அமெரிக்காவின் உள்நாட்டு கொள்கைகளின் கீழ் சாதகமான தாக்கத்தினை செலுத்தக்கூடியது.

கடந்த வருடத்தின் மோசமாக கையாளப்பட்ட அமெரிக்க விலக்கலிற்கு பின்னர் தற்போது தனது ஆப்கான் கொள்கை குறித்து சாதகமான தகவலை தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஜோ பைடனிற்கு கிடைத்துள்ளது.

அய்மன் அல் ஜவஹிரி மீதான தாக்குதலை தொடர்ந்து பைடனிற்கான மக்கள் ஆதரவு( ஜூலை மாத இறுதிவாரத்தில் 36 வீதமாக காணப்பட்டது) நவம்பர் 8 ம் திகதி இடம்பெறவுள்ள இடைக்கால தேர்தலிற்கு முன்னர்  அதிகரிக்கலாம.

ஒசாமா பின் லேடன் மே 2011 இல் பராக்ஒபாமாவின் காலத்தில் கொல்லப்பட்டார்,பைடன்காலத்தில் அய்மன் அல்ஜவஹிரி கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 11 தொடர்பான இரண்டு குறிப்பிடத்தக்க பயங்கரவாத எதிர்ப்பு வெற்றிக்கதைகளை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதிகளே உருவாக்கினார்கள் என பைடனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கி;னறனர்.

அதிகளவு பணவீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்கள்  காரணமாக அய்மன் அல்ஜவஹிரி கொலை தொடர்பாடன கதைகள் குறுகிய காலத்திற்கு ஜோ பைடன் வலுவான ஜனாதிபதியாக விளங்குவதற்கு உதவும்

வெற்றிகரமான ஆளில்லாவிமானதாக்குதல்; தலிபானிற்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் கடந்த வருடம் மதபோதனைகளை பிற்போக்கான விதத்தில் அர்த்தப்படுத்தி ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கமொன்றை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தலிபான் அல்ஹைதாவுடன் தொடர்புடைய பல உறுப்பினர்களை விடுதலை செய்துள்ளது. போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளது.

தலிபானை சேர்ந்த பலர் குறிப்பாக கஹானி பிரிவை சேர்ந்தவர்கள் அல்ஹைதாவுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளனர் என்பது நன்கறியப்பட்ட விடயம்.

அய்மன்அல் ஜவஹிரி தனது குடும்பத்தவர்களுடன்  ஆப்கானில் தங்கியிருந்தமை தலிபான் தனக்கு  போதிய பாதுகாப்பை வழங்கும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்ததை வெளிப்படுத்தியுள்ளது.அல்ஹைதா தலைவர்களிற்கு பாதுகாப்பையும் புகலிடத்தையும் வழங்கும் நீண்டகால வரலாறு தலிபானிற்குள்ளதை கருத்தில்கொள்ளும்போது அய்மன் அல் ஜவஹிரி தனது பாதுகாப்பு குறித்து நம்பிக்கை கொண்டிருந்தமை குறித்து எந்த சந்தேகமும் எழவில்லை.

எனினும் அய்மன் அல் ஜவஹிரி மீதான வெற்றிகரமான தாக்குதல் அவரின் மறைவிடம் குறித்து தலிபானை சேர்ந்த எவராவது அமெரிக்காவிற்கு தகவல் வழங்கினார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இந்த சந்தேகம் தலிபானின் கடும்போக்காளர்கள் மத்தியில் மேலும் கருத்துவேற்றுமையையும் பிளவையும் ஏற்படுத்தும்.

மேலும் சலாபிஸ்ட் கொள்கையை தீவிரமாக பின்பற்றும் உறுப்பினர்களை தலிபான் புறக்கணிக்கின்றது என்ற கரிசனையும் காணப்படுகின்றது.இதன் காரணமாக இந்த பிரிவை சேர்ந்தவர்கள் ஐஎஸ்கேபி அமைப்புடன் நெருக்கமாகியுள்ளனர்.

இந்த பிளவுகள் தலிபான் நாட்டில் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதை மேலும் சவால்மிகுந்த விடயமாக்கும்.

அதேவேளை இந்த விடயங்கள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களிற்கு ஆப்கானில் இடமளிக்கப்போவதில்லை என்ற் வாக்குறுதியை நிறைவேற்றும் திறன் தலிபானிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக நியாயபூர்வமான பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான தலிபானின் முயற்சிகள் பாதிக்கப்படலாம்.

அல்ஜவஹிரி வெற்றிகரமாக இலக்குவைக்கப்பட்டுள்ளமை பாக்கிஸ்தானின் முயலுடனும் வேட்டை நாயுடனும் சேர்ந்து ஓடும் தந்திரோபாயத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா இந்த நடவடிக்கைக்கான தளமாக பாக்கிஸ்தானை பயன்படுத்தியதா கட்டாரை பயன்படுத்தியதா என்ற கேள்விகளிற்கு அப்பால் ஆளில்லா விமானம் பாக்கிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தியிருக்கவேண்டும்.

அது உறுதி என்றால் ஆளில்லா விமானங்களின் நடமாட்டம் பாக்கிஸ்தானிற்கு தெரிந்திருக்கவேண்டும்,இது இந்த நடவடிக்கையில் பாக்கிஸ்தானிற்கு தொடர்புள்ளது என்ற ஊகங்களை நம்பகத்தன்மை மிக்கதாக மாற்றுகின்றது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதால் தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காணப்படும் என பாக்கிஸ்தான் கருதியிருக்கலாம்.

யேமனின் தென்பகுதியில் மீள் எழுச்சியை அல்ஹைதா வெளிப்படுத்தியுள்ள அதேவேளை வயதான அல்ஜவஹிரி அந்த அமைப்பின் ஆன்மீக கொள்கை தலைவராக மாத்திரம் காணப்பட்டார்,அதன் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாகயிருக்கவில்லை.

இதன் காரணமாக அய்மன் அல் ஜவஹிரியை அமெரிக்காவிடம் கையளிப்பது அல்ஹைதாவின் ஏனைய தலைவர்களின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பாக்கிஸ்தான் கருதியிருக்கலாம்.

சமீபத்தைய நிகழ்வுகளிற்கு பின்னர் பாக்கிஸ்தான் - சமீபத்தைய பூகம்பத்தின் பின்னர் அமெரிக்கா ஐநாவிடமிருந்து தலிபானிற்கு மிகவும் அவசியமாகவுள்ள நிதி உதவி கிடைக்கலாம் என தெரிவிக்கலாம்.ஜூனில் இடம்பெற்ற பூகம்பத்தின் காரணமாக 1100பேர் கொல்லப்பட்டனர்.

அய்மன் அல் ஜவஹிரியை கொலை செய்வதற்காக அமெரிக்கா தனது வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாக்கிஸ்தான் அனுமதித்திருந்தால் அல்லது புலனாய்வு தகவல்களை வழங்கியிருந்தால் பாக்கிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் தவிர்க்க முடியாத சகாவாக மாறும். பாக்கிஸ்தானிற்கு அதிகளவு நிதி உதவியை வழங்குமாறு அமெரிக்கா சர்வதேச நிதியமைப்புகளை கேட்டுக்கொள்ளவேண்டும்என பாக்கிஸ்தான் எதிர்பார்க்கும்.சீனா சவுதி அரேபியாவிலிருந்து பாக்கிஸ்தானிற்கு கிடைக்கும் கடன்கள் மலிவாக கிடைக்கவில்லை-தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பாக்கிஸ்தானிற்கு ஐரோப்பிய ஓன்றியம் உட்பட பல்வேறு தரப்பட்டவர்களின் உதவி தேவைப்படுகின்றது.

பாக்கிஸ்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை இலகுவாக அணுகுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி சலுகைகள் தொடர்ந்தும்கிடைப்பது அந்த நாட்டிற்கு அவசியம்.

பாக்கிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவ தலைமை முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள தருணத்தில் குறிப்பிடத்தக்க நிதி பொருளாதார உதவிகள் பெரும் உதவியாக அமையும்.

அய்மன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டமை அமெரிக்காவை பொறுத்தவரை பெறும்வெற்றியாகும்.

எனினும் இதற்கும் அப்பால் ஆப்கான் பாக் பிராந்தியத்திற்கான தனது அணுகுமுறை குறித்து அமெரிக்கா தீவிரமாக சிந்திக்கவேண்டியிருக்கும்- ஒசாமாபி;ன் லாடன் அபொட்டாபாத்தில் பாக்கிஸ்தானின் இராணுவதளத்திற்கு அருகில் தங்கியிருந்தார்.

தற்போது அய்மன் அல்ஜவஹிரி காபுலில் இலக்குவைக்கப்பட்டுள்ளார் அவர்  தலிபானின் பாதுகாப்பின் கீழ் இருந்திருக்கவேண்டும்.தலிபான் பாக்கிஸ்தானிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றுள்ளது. ஆப்கான் பாக்கிஸ்தானில் இந்த முக்கிய பயங்கரவாதிகளிற்கு ஒரு தசாப்தகாலத்திற்கும் மேல் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு தான் அளித்த வாக்குறுதிகளை பாக்கிஸ்தான் நிறைவேற்றும் என்பது குறித்த மதிப்பீடுகளை மீளாய்வி;ற்கு உட்படுத்தவேண்டும்.

மேலும் ஆப்கான் பாக்கிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள பயங்கரவாதிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அவசியமான கொள்கை ரீதியிலான அர்ப்பணிப்பு பாக்கிஸ்தான் இராணுவத்திடம் இல்லை.

அல்ஹைதா தலைவர் கொல்லப்பட்டதால் இந்தியாவின்; அயலில் பாதுகாப்பு நிலவரம் உடனடியாக மாற்றமடையப்போவதில்லை.

செப்டம்பர் 11 தாக்குதலின் போது ஆப்கானை ஆட்சி செய்த பிற்போக்கு கொள்கை கட்டமைப்புகள் கடந்த ஒருவருடமாக ஆப்கானை மீண்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன என்பது கருத்தில் எடுக்கப்படவேண்டிய விடயம்.

பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர்களை அழிக்கும் நடவடிக்கையை அமெரிக்கஜனாதிபதி ஜோ பைடன் முன்னெடுத்துள்ளார்.

எனினும் கடந்த ஒரு வருடத்தில் பல பயங்கரவாத அமைப்புகளையும் தனிநபர் பயங்கரவாதிகளையும் உருவாக்கும் பிற்போக்கான தீவிர இஸ்லாமிய கொள்கையை கட்டுப்படுத்துவதற்கான வலுவான கொள்கையை  அமெரிக்க நிர்வாகம் முன்வைக்கவில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது தொடர்ச்சியான சர்வதேச நடவடிக்கைகள் இல்லை மாறாக அது ஒரு கொள்கை ரீதியிலான போராட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். https://www.virakesari.lk/article/134455

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.