Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 நலத்திட்டம் இலவசமா ?   -  சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                        நலத்திட்டம் இலவசமா ?

                                                                                   -  சுப. சோமசுந்தரம் 

          'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ :
 
வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பாராத ஒரு இந்திய ஒன்றிய அரசு மதவெறியைத் தூண்டுவதும், மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் மாற்றங்களையே தொழிலாகக் கொண்டு திரிவதும் வாடிக்கையாக்கிப் போன ஒன்று. 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாண்டா ஆண்டி !' என்ற கதையாக சமீபத்தில் திருவாய் மலர்ந்து சமூக நலத்திட்டங்களை 'இலவசங்கள்' என்று குறிப்பிட்டு அவற்றைத் தவிர்க்க அறிவுரை சொன்னது அந்த ஒன்றிய அரசு. அதிலும் தனது முகமான பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் வாயிலாகவே. இது போதாதென்று இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கவலை வேறு; அதன் தொடர்ச்சியாக இலவசங்களை ஒழுங்குபடுத்த ஒரு வல்லுனர் குழு பற்றிய ஆலோசனையும் வழங்கியது. தமிழக நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் 'இந்தியா டுடே' தொலைக்காட்சி விவாதத்தில் பதிலடி கொடுத்தது இந்தியத் திருநாடு முழுவதும் பேசு பொருளானது வரலாற்று நிகழ்வு.
 
செல்வந்தரிடம் நியாயமான வரியாகப் பொருள் பெற்று வறியோர்க்குப் பகிர்ந்தளிப்பது சோஷலிச ஜனநாயகம். 'ஜனநாயகம்' என்பது சோஷலிசத்திற்கான பாதை என்ற காரல் மார்க்ஸின் கூற்றுப்படி பார்த்தால், 'சோஷலிச ஜனநாயகம்' என்ற ஒரு பொருள் பலமொழி அவசியம் இல்லைதான்.
 
1920 ல் நீதிக்கட்சி ஆட்சியில் அன்று மேயராக இருந்த திரு பி.டி. தியாகராஜன் அவர்களால் சென்னையில் சில நகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் 1925 ல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. பிற்காலத்தில் காமராஜர், திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் இருவரின் ஆட்சிக் காலங்களில் தங்களின் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் பெரும் அளவில் போராடி இத்திட்டத்தினை அமல்படுத்தினர். காமராஜர் காலத்தில் பொதுவுடமைவாதிகளே எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கேள்வி. ஆனால் எம்.ஜி.ஆர் காலத்தில் பெரிய கட்சிகளில் பொதுவுடமைவாதிகள் மட்டுமே ஆதரித்தனர். ஆதரித்ததற்கு அவர்கள் சொன்ன காரணம் அன்று கல்லூரி மாணவனாய் இருந்த எனக்கு மிகவும் ஏற்புடையதாய்த் தோன்றியது; இன்றும் தோன்றுகிறது : "வளர்ச்சித் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய நீண்ட காலமாகும்; சென்றடையாமலும் போகலாம். ஆனால் நலத்திட்டங்கள் அவர்களை நேரிடையாகச் சென்றடைபவை". அதன்பின் கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று இந்தியத் திருநாட்டிற்கே முன்னோடியாய்த் திகழ்வது வரலாறு. இதன் மூலமாக மாணவர் கல்வி இடைநிற்றல் பெருமளவில் குறைந்ததும், மாணவர்தம் ஊட்டச்சத்து முன்னேற்றமும் ஆய்வுகளில் நிறுவப்பட்டமை திட்டத்தின் பெருவெற்றி. இந்த நலத்திட்டத்தையும் இவர்கள் இலவசத்தில்தானே வரிசைப்படுத்துவார்கள் !
 
'இலவசங்கள்' என்று கூச்சலிடும் பலர் அரசுக் கல்வி நிலையங்களிலோ அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களிலோ குறைந்த கல்விக் கட்டணத்தில் படித்தபோது அவர்களுக்கு உறைத்ததில்லை அரசு அவர்களின் கல்விக்காகக் கொடுத்த மானியம் 'இலவசம்' என்று. அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதியை 'இலவசம்' என்று பார்த்தவர்கள், கொரோனா காலத்தில் தனியாரிடம் செல்லப் பயந்து அரசு மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்குத் தெரியவில்லை அரசிடம் அவர்கள் வேண்டி நிற்கும் உயிர்ப்பிச்சை ஒரு 'இலவசம்' என்று. தமிழக அரசின் நியாயவிலைக் கடையில் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கும் அன்பர் ஒருவர் தற்போது சர்ச்சையான 'இலவச' பேசுபொருளை கையில் எடுத்து ஒன்றிய அரசை நியாயப்படுத்தியது பெரும் வேடிக்கை. வரிசையில் நின்ற இன்னொருவர், "அப்படிங்களா சார் ? இந்த வரிசையில் கால் கடுக்க நின்று சர்க்கரை கிலோவுக்கு ரூபாய் 13.50 என்று வாங்குவதற்குப் பதிலாக பக்கத்துக் கடையில் ரூபாய் 45 க்கு நீங்கள் வாங்கலாமே ! இங்கே உங்களுக்குக் கிடைக்கும் ஐந்து கிலோவில் குறைந்தது 150 ரூபாய் இலவசம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?" என்று 'இலவச' எதிர்ப்பாளருக்கு இலவசமாய்க் கணக்குப் பார்த்துச் சொன்னது மனதிற்கு ஆறுதல். (இலவசம் என்று பொருமியவரின் இலவச லாபத்தை குறைக்கும் நோக்கிலோ என்னவோ அரசு சர்க்கரை விலையை ரூபாய் 25 என உயர்த்தி உள்ளதாகப் பெட்டிச் செய்தி கூறுகிறது. அவரைப் போன்றோர் அதிகப் பிரசிங்கித்தனத்தால் ஏழைகளின் வயிற்றில் அடித்து சர்க்கரைப் பையுடன் பாவமூட்டையையும் சேர்த்துச் சுமப்பதாக !)
 
மாணாக்கர்க்குப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, காலணி எனத் தருவதால் கிராமப்புற, நகர்ப்புற என்று அனைத்து ஏழை மாணவர்களும் பயன் பெறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. கல்வி சார்ந்த இத்தகைய உதவிகள் வளர்ந்த நாடுகளிலேயே அளிக்கப்படுகின்றன. ஐரோப்பியக் கூட்டமைப்பினுள் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இல்லாத இத்தாலி போன்ற நாடுகளிலேயே பல்கலைக்கழக உணவகங்களில் மாணாக்கர்க்குச் சலுகை விலையில் உணவு அளிக்கப்படுகிறது. சமீபத்தில் வல்லரசான அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடனை ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது செய்தியானது. அங்கு அது வாடிக்கையான நலத்திட்டமாகவும் இருக்கலாம். இவ்வளவிற்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஆட்சிக்கட்டிலில் இருப்பவை சிறிய, பெரிய அளவில் வலதுசாரி அரசுகளே என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறே முதியோர் நலத் திட்டங்களும் வளர்ந்த, வளரும் நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
 
"தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை அடிப்படைத் தேவைகள் அல்லவே ! பின் இவற்றை வழங்குவது இலவசம் அன்றி வேறென்ன ?" என்ற கேள்வி எழலாம். ஏழையொருவன் அடிப்படைத் தேவைகள் பெற மட்டுமே தகுதியானவன் என்பதே ஒரு பொருளாதார உயர்வர்க்கச் சிந்தனை; சமத்துவத்திற்கு எதிரான சிந்தனை. கேளிக்கை உரிமையோ தகவலறியும் உரிமையோ அவனுக்கு இல்லை என்னும் கருத்து எவ்வகையில் சரி ? அவன் வாழ்நாளில் எண்ணிப் பார்க்க முடியாத இவற்றை ஒரு ஜனநாயக அரசால் அவன் வரை கொண்டு போக முடிவதும் சிறப்புதானே ! அதுவும் தமிழக நிதி அமைச்சர் சொன்னது போல இவற்றைக் கொடுக்காத மாநில அரசுகளை விட கொடுக்கும் தமிழக அரசு எந்தத் துறையிலும் பின்தங்கி விடவில்லையே ! இப்பொருட்களைக் கொடுப்பதை விட இவற்றை வாங்கும் திறனை அவனுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்வது கொள்கை அளவில் சரிதான். நடைமுறையில் ? அந்த நீண்ட கால முயற்சியும் ஒருபுறம் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த இலக்கை அடையும்வரை அவனை இலவு காத்த கிளியாக வைத்தே அழகு பார்க்க வேண்டுமா ? இம்மாதிரியான நலத்திட்டங்கள் பொருளாதாரத்தில் ஓரளவு மேம்பட்டோரையும் சென்று சேர வாய்ப்புள்ளதே எனலாம். எந்தத் திட்டத்திலும் முழு நிறைவு (perfection) என்பது சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களில் கூட கமிஷன், அதன் காரணமாகத் திறமின்மை என்பவை ஏற்படவே செய்கின்றன. நிறைவை நோக்கிய நகர்வும் இருக்கத்தான் வேண்டும். பதருடன் நெல்மணியும் வீணாகிறது என்பதால் நெற்பயிரை வளர்க்காமல் விடுவோமா ?
 
அரிசி, கோதுமை போன்ற அடிப்படைத் தேவையான பொருட்களின் விலையை அரசு கட்டுக்குள் வைப்பது என்பது ஒருவகையில் விவசாயியின் வயிற்றில் அடித்து ஏனையோருக்காக முட்டுக் கொடுப்பதேயாம். இதன் பயனை அனுபவிப்போர், உழைப்புக்கான முழுப்பயனையும் தராத விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது தமக்கான இலவசமே என்பதை உணராமல் போவது எங்ஙனம் ? தனியாருக்குத் தாரை வார்த்ததற்கு முந்தைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கான அரசு மானியத்தால் பெரிதும் பயனடைந்தோர் பொருளாதார நடுத்தர வர்க்கத்தினரும் உயர் மட்டத்தினருமே என்பதை அவர்களே உணர்ந்ததில்லை. எனவே தமக்கான சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை மட்டுமே வளர்ச்சித் திட்டங்கள் என்று கணிப்பதை விடுத்து, ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களே என்பதை சமூகம் உணர்தல் வேண்டும்.
 
தமக்கு உகந்த ஒரு முதலாளித்துவ அரசு 'இலவசங்கள்' என்று நலத்திட்டங்களுக்கு எதிராகப் பேசினால் தாமும் அவ்வாறே பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர், மன்னர்கள் காலத்திலிருந்தே அளிக்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்களைப் பற்றியோ கோயில்களில் வழங்கப்பட்ட சட்டிச்சோறு உரிமையைப் பற்றியோ பேசுவதில்லை. பெரும் முதலாளிகளின் இலட்சம் கோடி வங்கிக்  கடன்களை எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி சுயலாபத்துக்காகத் தங்களின் மனம் கவர்ந்த அரசு தள்ளுபடி செய்வதைக் கண்டுகொள்வதில்லை. பரம்பரை பரம்பரையாகத் தனக்கு வேலை செய்ய ஒரு அடிமை வர்க்கம் வேண்டும்; அவ்வர்க்கத்தினர் மேலே எழுந்து வர உருவாக்கப்படும் நலத்திட்டம் எதுவும் தனக்கு எதிரானது என்னும் எண்ணம் கொண்டதே முதலாளித்துவம். அம்முதலாளித்துவத்திற்கு நமது கையறு நிலையில் வள்ளுவனின் வாசகமே பொருந்தி அமைவது :
  "
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்"
               (குறள் 166; அதிகாரம் : அழுக்காறாமை)

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2022 at 16:00, சுப.சோமசுந்தரம் said:

நல்லதொரு கட்டுரை.  சுப.சோமசுந்தரம் அவர்களுக்கு நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.