Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமல் வீரவன்ஸ தலைமையில்... புதிய கட்சி, அங்குரார்ப்பணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ஸ தலைமையில் புதிய கட்சி அங்குரார்ப்பணம்!

விமல் வீரவன்ஸ தலைமையில்... புதிய கட்சி, அங்குரார்ப்பணம்!

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்துள்ளன.

இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்தப் புதியக் கூட்டணி உருவாகியுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

தலைவர் – விமல் வீரவன்ஸ
செயலாளர் – கலாநிதி ஜி.வீரசிங்க
தேசிய அமைப்பாளர் – வாசுதேவ நாணயக்கார
பிரதித் தலைவர் – உதய கம்மன்பில
பிரதித் தலைவர் – திஸ்ஸ விதாரண
பிரதி செயலாளர் – கெவிந்து குமாரதுங்க
புரவலர் – வண. அதுரலியே ரத்தன தேரர்

https://athavannews.com/2022/1297523

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களையும் தனி குடும்பத்தையும் மன்னர்களாக்கியகாலம் நிறைவடைந்து விட்டது - கம்மன்பில

By Digital Desk 5

05 Sep, 2022 | 10:22 AM
image

(இராஜதுரை ஹஷான்)

 

தலைவர்களையும், தனி குடும்பத்தையும் மன்னர்களாக்கிய காலம் நிறைவடைந்து விட்டது. மக்களை தலைவர்களாக்குவதற்காகவே மேலவை இலங்கை கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

சிங்களவர்களே,முஸ்லிம்களே,தமிழர்களே வாருங்கள்,பற்றியெறியும் தாய் நாட்டை ஒன்றிணைந்து பாதுகாப்போம் என மேலவை  இலங்கை கூட்டணியின் உப தலைவர் உதய கம்மன்பில நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மஹரகவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மேலவை  இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1947ஆம் ஆண்டு முதல் நாட்டில் அரசியல் கூட்டணிகள் பல தோற்றம் பெற்றுள்ளன.இதுவரையில் உதயமாகிய அரசியல் கூட்டணிகள் மக்களின் அடிப்டை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.2019ஆம் ஆண்டு பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டது.

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2019ஆம் ஆண்டு மக்களாணையை மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கினார்கள்.மக்கள் கொள்கைக்கு பதிலாக தனிப்பட்ட குடும்ப கொள்கையை அரச நிர்வாகத்தில் முன்னெடுத்ததால் மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை முழுமையாக பலவீனத்தடுத்தப்பட்டது.

தவறான பேருந்தில் ஏறி விட்டோம்,ஆகவே இறங்க வேண்டும் என்பதால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தற்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கொள்கை திட்டத்துடன் பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

தவைர்களையும்,குடும்பத்தையும் மன்னர்களாக்கிய காலம் முடிவடைந்து விட்டது.மக்களை தலைவர்களாக்கும் ஆரம்பத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்.தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தோற்றத்தை 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமைச்சரவையில் குறிப்பிட்டோம்.பொய்யுரைக்க வேண்டாம்,மக்களை அச்சமடைய செய்ய வேண்டாம் ,அப்படி ஒன்றும் நிகழாது என்பதே எமது கருத்திற்கான எதிர் பதிலாக அமைந்தது.

நாடு மிக மோசமான வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என்பதை 2021ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஊடக சந்திப்பை நடத்தி குறிப்பிட்டோம்.நாங்கள் பொய்யுரைக்கிறோம்,எமக்கு போதுமான அளவு டொலர் உள்ளது,ஆகவே அச்சமடைய வேண்டாம் என்பதே அரசாங்கம் குறிப்பிட்டது.

நெருக்கடியான சூழ்நிலையிலும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.கடன் பெறுவதை அரசாங்கம் பெருமையுடன் குறிப்பிடுகிறது.பெற்றுக்கொள்ளும் அனைத்து டொலர்களையும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிடம் கடன் பெறுவதை விடுத்து வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்த வேண்டும்.மன்னார் பகுதியில் மண்ணெண்ணெய் அகழ்வு தொடர்பிலான 6 நிபந்தனைகளை ஒருவருட காலத்திற்குள் நிறைவேற்றினோம்,இருப்பினும் தற்போத அது குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை.பொருளாதார மீட்சிக்கான எந்த முறையான திட்டங்களும் அரசாங்கத்திற்கும் கிடையாது,அரசாங்கத்திற்கும் கிடையாது.

ஒருவரை ஒருவர் விமர்சித்து.மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை மாத்திரம் எதிர்தரப்பினர் புனருத்தாபனம் செய்கிறார்கள்.பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எமது கூட்டணியில் பிரதான நோக்கமாகும்.தமிழ்ரகள் வாருங்கள்,முஸ்லிம்கள் வாருங்கள்,சிங்களவர்கள் வாருங்கள் நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

https://www.virakesari.lk/article/135046

 

ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது - விமல் வீரவன்ச

By T. Saranya

05 Sep, 2022 | 09:39 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எமது அரசியல் பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் வெகுவிரைவில் சிறிய அரசியல் கட்சிகளாகும். மக்கள் பலம் எதனையும் மாற்றியமைக்கும் ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது.

தவறான ஆலோசனைகளுக்கு செவி சாய்த்ததால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று இந்நிலையை எதிர்கொண்டுள்ளார் என மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆசிய பலத்துடன் ஒன்றிணைந்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். மேற்குலகத்தவர்களின் ஆதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிய முடியாது. ஊழலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாவிடினும் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்க முடியும்.முற்போக்கான ஜனநாயக அரசியல் கட்சிகள் அனைவரும் எம்முடன் இணைந்துக்கொள்ளலாம் என அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

மஹரகவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மேலவை  இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரலாற்று காலம் முதல் நாடு என்ற ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.நாட்டின் பூகோள அமைவிடத்தின் காரணமாகவே இலங்கை பல்வேறு ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் தேசிய வளங்களினால் பல்வேறு ஆக்கிரமிப்புக்களுக் நாடு உள்ளாகியுள்ளது.அனைத்து சவால்களையும் வெற்றிக்கொண்ட வரலாறு காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் நாடு தற்போது மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.உணவு நெருக்கடி,எரிபொருள் நெருக்கடி முழு உலகத்தையும் சவாலுக்குட்படுத்தியுள்ளது.முழு உலகமும் ஏதாவதொரு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தான் இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. அனைத்து சவால்களையும் வெற்றிக்கொண்டு,கௌரவமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவே மேலவை மக்கள் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

பாரம்பரிய சம்பிரதாயங்களில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே தற்போதைய சவால்களை வெற்றிக்கொள்ள முடியும்.முறைமை மாற்றத்தை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்,அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. தவறுகளுக்கு துணைபோவதை தவிர்த்துக்கொள்ளாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.

பிரச்சினைகளை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருக்காமல்,பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே கூட்டணியை அமைத்துள்ளோம்.

எமது பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் சிறிய கட்சிகளாகும். நாட்டு மக்களால் எதுவும் முடியும். ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் நிறைவடைந்து விட்டது. குடும்ப ஆட்சியில்லாதவர்கள் தான் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகளவில் வணிக கடன்களை பெற்ற ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாகியுள்ளார்.

தோற்றம் பெறவுள்ள அனர்த்தங்களை கவனத்திற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையையும்,நாட்டையும் விட்டு வெளியேற நேரிட்டது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை கொண்டு பிற தரப்பினர் தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்,அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆசிய பலத்துடன் ஒன்றிணைந்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். மேற்குலகத்தவர்களின் ஆதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிய முடியாது.

எமது கூட்டணியில் சகலரும் சமமாக மதிக்கப்படுவார்கள். நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து சவால்களை வெற்றிக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்.

தேசிய உற்பத்திகளுக்கும்,பாரம்பரியத்திற்கும் முன்னுரிமை வழங்கி தன்னிச்சையான முறையில் முன்னேற்றமடைய சகல தரப்பினரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.ஊழலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாவிடினும் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்க முடியும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/135045

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.