Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாமரை கோபுரத்தின்... செயற்பாடுகள், நாளை முதல் ஆரம்பம் – உட் செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம் – உட்செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!

தாமரை கோபுரத்தின்... செயற்பாடுகள், நாளை முதல் ஆரம்பம் – உட் செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை முதல் தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நிறைவடைந்துள்ளதுடன், சீன நிறுவனம் வழங்கிய கடனை செலுத்தும் பணியை 2024ஆம் ஆண்டு நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுர முதலீட்டில் இதுவரை உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இணைந்துள்ளதுடன், 22 முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 15 வெவ்வேறு திருவிழாக்களுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1298963

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமரை கோபுரத்தை பார்வையிட சீனர்களுக்கு இலவசம்? – போலி நுழைவுச்சீட்டு குறித்து சீன தூதரகம் விளக்கம்!

தாமரை கோபுரத்தை பார்வையிட... சீனர்களுக்கு இலவசம்? – போலி நுழைவுச்சீட்டு குறித்து, சீன தூதரகம் விளக்கம்!

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலியான நுழைவுச்சீட்டு ஒன்று சமூகத்தில் பரவி வருவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் தாமரை கோபுரம் குறித்த இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1299036

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை கோபுர செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்

spacer.png

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது.

இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.

10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/தாமரை-கோபுர-செயற்பாடுகள்-இன்று-முதல்-ஆரம்பம்/175-304176

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மலரும் தாமரைக் கோபுரம்

மஹேஸ்வரி விஜயனந்தன்

தெற்காசியாவின் உயரமான கட்டடமாகவும் உலகில் உள்ள உயரமான கட்டடங்களுள்  19ஆவது இடத்தையும் பிடித்துள்ள கொழும்பு தாமரைக் கோபுரத்தை கண்டும் பயனடையும் வாய்ப்பு பொதுமக்களுக்கு இன்று (15) தொடக்கம் கிடைக்கவுள்ளது.

வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரையும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

இதனைப் பார்வையிட 500 ரூபாய், 2000 ரூபாய் கட்டணங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் .

image_1c37e3d625.jpg

2,000 ரூபாய் டிக்கெட் பெறுபவர்கள் வரிசையில் நிற்காமல் வளாகத்திற்குள் நுழையலாம் மற்றும் கோபுரத்தில்  உள்ள உணவகங்கள், கடைகள் போன்றவற்றில் தேவைப்படும் வரை தங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் 500 டிக்கெட் பெறுபவர்கள் வரிசையில்  காத்திருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் குழுவாகவே அழைத்துச் செல்லப்படுவர்.

மேலும் இதனைப் பார்வையிட வரும் வெளிநாட்டவர்கள் 20 அமெரிக்க டொலர்களை செலுத்தி அனுமதிச் சீட்டைப் பெறும் அதேவேளை, இன்னும் ஓரிரண்டு மாதங்களில் கி.ஆர் முறையும் அனுமதிச் சீட்டுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2,000 ரூபாய் அனுமதிச் சீட்டுகளுடன் வருகைத் தருபவர்களுடன் 12 வயதுக்கு குறைந்தவர்கள் வருவார்களாளின் அவர்களுக்கு 500 ரூபாயும் 500 ரூபாய் செலுத்துபவர்களுக்கு 200 ரூபாய் மாத்திரமே அறிவிடப்படும்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு 200 ரூபாய் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்பதுடன், அவர்கள் வருகைத் தரும் முன்னர், முன்கூட்டியே அதிபர் ஊடாக அறிவித்தால் அவர்களுக்கான பிரத்தியேக நேரம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வார நாட்களில் இரவு 8 மணி தொடக்கம் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 7 மணி தொடக்கம் 11 மணிவரையும் இதன் மின் விளக்குகள் ஒளிரவிடப்படும்.

 356 அடி மீற்றர்  உயரமான தாமரைக் கோபுரத்தை அமைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும் 2012ஆம் ஆண்டே இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் இடைநடுவில் நிறுத்தபட்டாலும் 2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதன் கட்டுமாணப் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே இதனைத் திறந்து வைத்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் பராமரிக்கப்பட்ட  தாமரைக் கோபுரம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி  உத்தியோகப்பூர்வமாக அரசாங்கத்தின் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின்  தலைவர்ஆர்.எம்.பி  ரத்னபிரிய தெரிவித்தார்.

மூன்று  வருடங்களுக்கு முன்னர் தாமரைக் கோபுரம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கபட்டாலும் இதற்கு பொறுப்பாகவிருந்த சீன நிறுவனத்தால் தாமரைக் கோபுரம் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

image_e7e0b6dbf6.jpg

தற்போது இதன் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து, அதனை பொதுமக்கள் பார்வையிடும் வாய்ப்பு இன்று (15) முதல் கிடைப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவட் லிமிட்டட்டின் தலைவர்  ஆர்.எம்.பி ரத்னாயக்க தெரிவித்தார்.

12ஆம் திகதி  தாமரைக் கோபுரத்தின் கேட்போர் கூடத்தில் அதன் பணிகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

.3 கட்டங்களாக இதன் பணிகளை ஆரம்பிக்கின்றோம். அதில் முதலாவது கட்டமாகவே 15ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கின்றோம். இதன்போது food festival, musical show, சித்திர கண்காட்சி என்பவற்றை பார்வையிடலாம்.

image_2c74dab8f0.jpg

இரண்டாம் கட்டமாக innovaction center, digital art musiuem என்பவற்றை பார்வையிட முடியும் என்பதுடன், 3 மாதங்களில் இரண்டாம் கட்டம் நிறைவுக்கு வரும்.

அதேப்போல் 3ம் கட்டமாக 9டி சினிமா வசதிகள், சுழலும் சிற்றுண்டிச்சாலை , ஸ்கை டைவிங், பங்கி ஜம்பிங், சாகச விளையாட்டுகள் என்வற்றை அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அனுபவிக்கலாம்.

இதற்கமைய தாமரைக் கோபுரம் மார்ச் மாதம் பூரணத்துவம் பெறும் என்றார்.

வெளிநாட்டு கடன் திட்டத்தின் கீழ், லோட்டஸ் டவர் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பணிகளின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காளர் நாயகத்தால் கணக்காய்வு செய்யப்படுவதுடன்    இதன் முழுமையான உரிமம் தற்போது இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கே உள்ளது.

  அத்துடன், இது பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும்  நிறுவனமாகவும் செயற்படவுள்ளது.

இதன் மின்னுயர்த்தி ஆனது கோபுரத்தின் 29ஆவது மாடி வரை பயணிக்க முடியும்.

இதில் முதலீடு செய்ய பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில் உள்ள சிறப்பு அம்சம் சுழலும் சிற்றுண்டிச்சாலையாகும். ஒரே நேரத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடும் சிறப்பம்சம் உள்ளது.

ஒவ்வொரு பார்வையாளர்களும் கோபுரத்தின் 29வது தளத்தில் உள்ள கண்காணிப்பு இடத்தில் 30 நிமிடங்கள் தங்கும் வாய்ப்பு உள்ளது.

அடுத்த சில மாதங்களில் பயணச்சீட்டுக்குப் பதிலாக QR குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் சுமார் 150 பேர் தங்கக்கூடிய காட்சிப் பகுதிக்குள் நுழைந்ததும், பார்வையாளர்களுக்கு கீழே உள்ள கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளையும் மற்ற தொலைதூரப் பகுதிகளையும் பைனாகுலர் மூலம் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.

image_6498c048f8.jpg

தாமரை கோபுர நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டத்தில், சிவனொளிபாதமலை, சிகிரியா, நக்கிள்ஸ் மலைத்தொடர் போன்ற இடங்களைக் காண கண்காணிப்புப் பகுதியில் இருந்து தொலைநோக்கிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கே, பார்வையாளர்கள் 27 வது மாடியில் சுழலும் உணவகம், 26 வது மாடியில் 500 இருக்கைகள் கொண்ட விருந்து மண்டபம், தரை தளத்தில் பிரபலமான உணவகங்கள் மற்றும் நினைவு பரிசு கடைகள் ஆகியவற்றை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வளாகத்தில் இசைக் கச்சேரிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பல சாகச விளையாட்டுகளும்  அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

image_8c27bffdde.jpg

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இன்று-மலரும்-தாமரைக்-கோபுரம்/91-304187

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தாமரை கோபுரம்: மக்கள் பார்வையிட அனுமதி - சிறப்புகள், கட்டணம், நேரம் உள்ளிட்ட விவரங்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை

தெற்காசியாவின் உயரமான கோபுரம் இலங்கையில் நேற்று (செப். 15) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டஸ் டவர்) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கு, நேற்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

கொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

 

சுமார் 7 வருடங்களில் தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமாக இது கட்டி முடிக்கப்பட்டது.

 

Presentational grey line

 

Presentational grey line

இந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக 113 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான நிதி செலவிடப்பட்டுள்ளது.

சீனா மூலம் இதற்காக 88.65 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றதுடன், எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு செலவிட்டுள்ளது.

 

बीबीसी हिंदी

தெற்காசியாவின் உயரமான கோபுரத்தின் சிறப்பம்சங்கள்

  • 356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்கின்றது.
  • கொழும்பு - டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள பேர வாவியை அண்மித்து அமைந்துள்ள இந்த கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுரஅடி.
  • சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் இந்த இடத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த கோபுரத்தின் ஊடாக இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
  • தாமரை கோபுரத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மண்டபங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தின் 6ஆவது மாடியே மிகவும் சிறப்பு இடத்தைப் பிடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • 6ஆவது மாடியில் உள்ள உணவகம் சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், உணவு உட்கொண்ட வண்ணமே கொழும்பு நகர் முழுவதையும் கண்டுகளிக்கும் வாய்ப்பும் இதனால் மக்களுக்கு கிடைக்கிறது.
  • 7ஆவது மாடியானது, கோபுரத்தின் உயரமான இடத்திற்கு சென்று கொழும்பு நகரின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
  • இந்த கோபுரத்தில் 8 மின்தூக்கிகள் உண்டு. இங்கே நொடிக்கு 7 மீட்டர் உயரும் இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி பொறுத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாக கருதப்படுகிறது.
 

बीबीसी हिंदी

தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றன.

எப்போது பார்வையிடலாம்? கட்டணம் எவ்வளவு?

இதேவேளை, இந்த தாமரை கோபுரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

10 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு 200 ரூபா நுழைவு சீட்டும், ஏனையோருக்கு 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நுழைவு சீட்டுக்களும் விநியோகிக்கப்படவுள்ளன.

அதேபோன்று, வெளிநாட்டவர்களுக்கு இந்த கோபுரத்திற்கு உள்ளே சென்று பார்வையிடுவதற்கு 20 டாலர் அறவிடப்படவுள்ளதாக கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கோபுரத்தின் மேல் மாடிக்கு சென்று பார்வையிடும் போது, கொழும்பு மாத்திரமன்றி, இலங்கையின் பல பகுதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

 

இலங்கை

தாமரை வடிவம் ஏன்?

தெற்காசியாவில் உயரமான இந்த கோபுரத்துக்கு தாமரை வடிவம் தரப்பட்டதற்கான காரணம் இதுவரை தெளிவில்லாது காணப்படுகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னமும், தாமரை வடிவத்தை கொண்டமைந்தமை கடந்த காலங்களில் பாரிய பேசுபொருளாக அமைந்தது.

தமது கட்சியின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அரசியல் ஆய்வாளர்கள் அதனை நிராகரிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்தே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதனால், இந்த தாமரை அடையாளத்திற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கூற முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.

ராஜபக்ஷ குடும்பத்திற்கும், சீனாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்பட்ட நிலையிலேயே, தாமரை கோபுரத்திற்கு தாமரை வடிவம் அமைக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானம் நிலையம், தாமரை கோபுரம் உள்ளிட்ட இலங்கையின் மிக பிரமாண்டமான திட்டங்களுக்கு சீனா உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62924867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.