Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குருந்தூர் மலை பகுதியில்... விவசாய நிலங்கள், ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

குருந்தூர் மலை பகுதியில்... விவசாய நிலங்கள், ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்.

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ் எம்.பி. புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உடனடியாக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1299523

  • கருத்துக்கள உறவுகள்

பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப் பட்டுள்ளதாக அறிவிப்பு!

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் அப்பகுதிக்கு நேற்று (16) மாலை பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ், புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு சார்ள்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக உடனடியாகத் தான் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
 

 

http://www.samakalam.com/பல-ஏக்கர்-விவசாய-நிலங்கள/

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலை பகுதியில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து இனப் பரம்பலை மாற்றியமைக்கு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

By VISHNU

19 SEP, 2022 | 04:09 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர் மலை பௌத்த பிக்குவின் பங்கேற்போடு  கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

b62538bf-39c1-40f7-8004-7980b6be8be7.jpg

இந்த அபகரிப்புக்கு எதிராகவும் இங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நில அளவீட்டுக்கு எதிராகவும்  எதிர்வரும் 21 ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றிக்கு தண்ணிமுறிப்பு கிராம மக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . 

இந்த அழைப்பு இன்று 19.09.22 முல்லைத்தீவு ஊடக அமையத்தில் குமுழமுனை,தண்ணிமுறிப்பு கிராம அமைப்புகளின்  தலைவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

இ.மயூரன் குமுழமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அவர்களும் கலைச்செல்வன் தண்ணிமுறிப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அவர்களும் ச.சசிகுமார் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பு தலைவரும் கூட்டாக ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளார்கள்.

இதில் இ.மயூரன் குமுழமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் குமுழமுனை கருத்து தெரிவிக்கையில்,

1953 ஆம் ஆண்டு டி.டிஸ்.செனநாயக்கா அவர்களின் காலத்தில் புனரமைக்கப்பட்ட தண்ணிமுறிப்பு குளம் அதன் கீழான நெற்செய்கை காணிகள் ஆக்கிரமிப்பாளர்களின் தூர நேக்கு சிந்தனை காரணமாக இன்றுவரை வனவளத்திணைக்களத்தின் எல்லை பகுதிக்கு உட்பட்டதாக இருக்கின்றது.

இந்த பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்றுவரைக்கும் காணிகள் கூட வனவளத்திணைக்களத்தினால் விடுவிப்பு செய்யப்பட்டு விவசாய காணிகளாக பதிவுகள் எங்கும் இல்லை இதன் அடுத்த கட்டமாக 1932 ஆம் ஆண்டு நில அளவைத்திணைக்களத்தினால் நில அளவை செய்யப்பட்ட வரைபடத்தில் குருந்தூர் மலை தொல்லியல் இடம் என்ற பெயரில்தான் வரைபடம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பதிவுகள் ஆவணங்கள் எல்லாம் திரிவு படுத்தப்பட்டு குருந்த விகாரை தொல்லியல் இடம் என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எந்தெந்த இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் தமிழர் பகுதிகளில் நிறுவப்பட்டதோ அத்தனை இடத்திலும் முன்னர் ஒரு பௌத்த துறவியும் ஆட்களும் வருவார்கள் அதன் பின்னால் தொல்லியல் திணைக்களம் வரும் இருவரும் சேர்ந்து பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வார்கள் அதன் பின்னர் அங்கு சிங்கள குடியேற்றம் நிறுவப்படும் அது தமிழர்களின் உயிர்நாடியான இதயப்பகுதியாகத்தான் இருக்கின்றது உதாரணமாக திருகோணமலை திரியாய் பகுதியில்,வெலிஓயா என்ற சொல்லப்படுகின்ற எமது மணலாற்று பகுதியிலும் இதே நடவடிக்கையினைத்தான் செய்துள்ளார்கள்.

இதன் காரணமாகத்தான் மதமாற்றங்கள் பௌத்த சின்னங்களை வேண்டும் என்று புதைத்துவிட்டு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளை தவிருங்கள் என்று கேட்டிருந்தோம் இல்லை இதில் ஆய்வு செய்கின்றோம் என்று தொல்லியல் திணைக்களம் சொல்லி இருந்தது.

இருந்தாலும் இன்று 632 ஏக்கர் நிலத்தினை தொல்லியல் திணைக்களத்திற்குரிய நிலமாக இரவோடு இரவாக யாருடைய அனுமதியும் இன்றி பிரதேச செயலம்,மாவட்ட செயலகமோ விவசாய திணைக்களத்தின் அனுமதிஇன்றி ஒரு ஞாயிற்றுக்கிழமை கடந்த 11 ஆம் திகதி அதிகாலை வேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை தொல்லியல் திணைக்களம் செய்திருந்து என்னத்திற்காக இவர்கள் விடுமுறை நாட்களில் அரச களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும் என்பதை உற்றுநோக்குவோமாக இருந்தால் இதற்கான உண்மை விளங்கும் இதுஒரு நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை..

ஒரு தொல்லியல் சான்று பொருட்கள் உள்ள பகுதியினை தொல்லியல் இடமாக ஆக்கிக்கொள்வதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை ஆனால் அதனi பௌத்த தொல்லியல் இடமாகவோ அல்லது பௌத்தர்களுக்குரிய இடமாக மாற்றிக்கொள்வதில் எங்களுக்கு கருத்து ஒருமைப்பாடு இல்லை எமது விவசாய நிலங்கள் நாங்கள் பாரம்பிரியமாக வயல் செய்த இடங்கள் என்று 632 ஏக்கர் நிலத்திற்கும் 70 ஏக்கர் வரையான தொல்பொருள் சான்றுப்பொருட்கள் உள்ள இடங்களுக்கும் என்ன வித்தியாசம் இங்கு என்னத்தினை செய்யப்போகின்றார்கள்.

நாட்டில் அரிசி இல்லை,மா இல்லை கஞ்சி குடிக்கும் நிலையில் நாங்கள் இருக்கும் போது 632 ஏக்கர் நிலத்தில் என்னத்தினை அரசாங்கம் செய்யப்போகின்றது.

கட்டுவதற்கு காவிதுணி இல்லாமல் நாட்டின் பௌத்த துறவிகள் வீதிகளில் அலைந்து திரிகின்றார்கள் பொருளாதாரம்; நலிவுற்று மக்களுக்கு எந்த விதமான விமோசனும் இல்லாத நிலையில் நாலு லீற்றர் பெற்றோலுடன் நாம் அலைகின்றோம் இந்த நிலையில் என்னத்திற்கு 632 ஏக்கர் காணி இவர்களுக்கு  இது வெளிப்படையாக தெரிகின்றது நிலஆக்கிரமிப்பும் இனசமத்துவத்தினை அழிக்கும் நடவடிக்கை என்று எமது நாட்டில் மூன்று இனங்கள் இருக்கின்றன இந்த மூன்று இனங்களுடனும் ஒற்றுமையாக வாழமுடியாத பேரினவாதமும் பௌத்த சிந்தனையாளர்களும் ஏன் எம்மை போட்டு வருத்துகின்றார்கள்.

நீதிமன்ற கட்டளைகளையினை கூட புறந்தள்ளுகின்றார்கள் ஒரு காவி உடை தரித்த தேரரால் மாவ்ட நீதிமன்ற நீதிமன்ற கட்டளையினை புறம்தள்ளி தொடர்ச்சியாக இராணுவத்தினை வைத்து கட்டுமானங்களை மேற்கொள்ளமுடியும் என்றால் இலங்கையில் நீதி என்ன? எங்கே இருக்கின்றது நீதி இதனை யார் யாரிடம் கேட்பது,சர்வதேசரீதியில் பணம் பெறுவதற்காக பச்சைப்பொய்களை சொல்லி திரிகின்றார்கள் அதனை சர்வதேச நாடுகளும் வேடிக்கை பார்த்து இருக்கின்றன நாம் இந்த நாட்டில் வாழலாமா வாழமுடியாத என்பதைக்கூட யாருக்குமே வாழ்கின்ற எமக்கும் தெரியாது வேடிக்கை பார்கின்ற சர்வதேசத்திற்கும் கூட தெரியாத நிலைதான் இருக்கின்றது காலத்திற்கு காலம்  ஐனாதிபதி,பிரதமர்,அமைச்சர்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாறுவார்கள்  பல உத்தரவாதங்களை தருவார்கள் இறுதியில் நடப்பது நிலஆக்கிரமிப்பும் இருந்த இடமும் இல்லாமல் போகும் 

தங்களுக்கே வளியில்லாத நிலையில் இங்கு  விகாரை அமைப்பதும் சிங்கள மக்களை ஏமாற்றுவரும் சிங்கள மக்களை பேருந்துக்களில் அழைத்துவந்து தெருத்தெருவாக விடுவதும் இதுதான் எமது நாட்டின் அரசியலாக மாறியுள்ளது.

இதனை சம்மந்தப்பட்ட தரப்பு உடனடியாக கருத்தில் எடுப்பதுடன் எமது தமிழ் அரசியல் வாதிகள் என்று கூறிக்கொண்டு இருக்கின்ற அத்தனை பேரும் இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதுடன் சர்வதேச ரீதியாக வெளிக்கொண்டு வருவதற்கான தார்மீகமான வேலையினை உடனடியாக மேற்கொள்ளவேண்ம்.

அம்பாறையில் பட்டிப்பளை ஆற்றில் தொங்கி இன்று முல்லைத்தீவு மாவட்டம் தாண்டிய நிலையில் இருக்கின்றோம் முல்லைத்தீவில் குள ஆக்கிரமிப்பு நிறைவடைந்து விட்டது வெகுவிரைவில் வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் வலிகாமத்திலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து அப்போதாவது தமிழ் தலைமைகள் விளித்தெழுகின்றனவா என்பதை சிறிது காலம் பொறுத்திருந்தால் விளங்கிக்கொள்ளமுடியம்.

குருந்தூர் மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் எதிர்வதும் 21 ஆம் திகதியில் இருந்து மேற்கொள்ளவுள்ளோம் எதிர்வரும் 21 ஆம் திகதி நில ஆக்கிரமிப்பு செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்தினால் சுயாதீனமாக தான்தோன்றித்தனமாக அடையாளம் இடப்பட்ட 632 ஏக்கர் எல்லைக்கற்கள் இருக்கின்றன அந்த எல்லைக்கற்களை அளந்து வரைபடமாக வெளியிடுவதற்கு நில அளவைத்திணைக்களத்தின் நில அளவையாளர்கள் வருகை தருவார்கள் அந்த நேரத்தில் இருந்து தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பமாகவும் எமது இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் உள்ளங்களும் திரண்டு வந்து எமது வாழ்வியலையும் எமது நிலத்தினையும் பாதுகாக்க நடடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கலைச்செல்வன் தண்ணிமுறிப்பு கிராமா அபிவிருத்தி சங்க தலைவர் கருத்து தெரிவிக்கையில்..

1984 ஆம் ஆண்டு தண்ண்pமுறிப்பு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த இந்த மக்கள் இதுவரைக்கும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை இது தொடர்பில் பிரதேச செயலகத்திலும் மாவட்ட செயலத்திலும் கதைத்தோம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று தொல்பொருள் திணைக்களம் கல்லுப்போடுவதற்கு காரணம் இவர்கள்தான் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்திருக்கவேண்டும் 

ஆனால் செய்யவில்லை எங்கள் மக்களுக்கான காணியினை வழங்குங்கள் என்று கோரியிருந்தோம் எதுவும் செய்து தரப்படவில்லை  குருந்தூர்; மலைக்கு செல்லும் முதலாவது காணி எங்களின் காணி இன்று எங்கள் காணியில் ஒரு தென்னம்பிள்ளை,கிணறு என்பன இருக்கின்ற பளைய கட்டிடங்கள் என்பன இருக்கின்றன மக்கள் வாழ்கின்ற குடியிருப்பு இடமான தண்ணிமுறிப்பு 51 ஆம் கண்டம் இந்த இடத்திலும் தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டி காணியினை அபகரித்துள்ளார்கள் 

அதோபோல் குருந்தூர் குளத்தினையும் முழுமையாக அபகரித்து குளத்தின் கீழ் உள்ள தனியார் வயல் காணிகளை அபகரித்து தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டியுள்ளார்கள் நாங்கள் யாரிடம் சொல்லது இந்த அதிகாரம் மிக்க அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ச.சசிகுமார் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பு தலைவர் கருத்து தெரிவிக்கையில்.

தண்ணிமுறிப்பு கிராமம் இப்படியே பாளடைந்து போய்க்கொண்டிருக்கின்றது குளத்தினையும் வயல்நிலங்களையும் வாழ்வாதரத்திற்கான மாடுகளின் மேச்சால் தரவையினையும் சேர்த்துவைத்து தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது குளத்தினையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைதான் செய்கின்றார்கள். 

தனிய குருந்தூர் மலை மட்டும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வாய்க்கால் கட்டு இதனையும் சேர்த்து நில ஆக்கிரமிப்ப செய்துள்ளார்கள் தற்போது 140 ஏக்கர் வரையில் கல்லுபோட்டுள்ளார்கள் எனது வயல்காணியான இரண்டரை ஏக்கருர்வரையில் கல்லு போட்டுள்ளார்கள். பல மக்களின் கணிகள் என 632 ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது இவ்வாறு நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அனைவரும் திரளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/135956

  • கருத்துக்கள உறவுகள்

குறுந்தூர் மலை விவகாரத்திற்கு தேசிய சபை எவ்வாறு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கும் - ஸ்ரீதரன் கேள்வி

By VISHNU

20 SEP, 2022 | 09:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

குருந்தூர் மலையில் தமிழர்களுக்கு சொந்தமான 612 ஏக்கர் காணிகளை புதன்கிழமை (21) அளவீடு செய்ய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்  எடுத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறுந்தூர் மலை விவகாரத்திற்கு தேசிய சபை எவ்வாறு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.  ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையிலே தமிழர்களுக்கு சொந்தமான,குருந்தூர் மலை ஆதிசிவன் கோவிலுக்கு சொந்தமான முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சொந்தமான   612 ஏக்கர் காணிகளை அளவீடு செய்து பௌத்த பிக்குவிற்கும் புத்த விகாரைக்கும்  கொடுக்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கின்றார். இது என்ன நியாயம்? இதற்கு தேசிய சபை என்ன செய்யபோகின்றது? எல்லாக்கட்சிகளையும் கொண்ட இந்த சபை எப்படி இதற்கு தீர்வு காணப்போகின்றது?

இன்று (20) செவ்வாய்க்கிழமை  காலையில் நானும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உறுப்பினரும்,  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்கவை சந்தித்தோம்.குருந்தூர் மலை பற்றிய விடயத்தைப் பற்றிப் பேசியபோது இவ்வாறு அளவீடு செய்வது தனக்குத் தெரியாது என அவர் கூறினார். அத்துடன் சார்ள்ஸ் நிர்மலநாதனுடன் தொலைபேசி  ஊடாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்டு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உடனடியாக அளவீட்டு பணியை நிறுத்துங்கள் எனக்கூறினார்.

அமைச்சரின் பணிப்பை ஏற்று 612 ஏக்கர் காணிகளை அளவீடு செய்வதனை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிறுத்துகின்றாரா? இந்த நாட்டில் ஒரு அமைச்சருக்குரிய அதிகாரத்தை அவர் பிறப்பிக்கின்ற உத்தரவை பணிப்பாளர் நாயகம் நிறைவேற்றுவாரா என்பதனை நாங்கள் இன்று வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/136036

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.