Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவப் புலனாய்வாளர்களினால் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் பணியாளர் சுட்டுக் கொலை: மற்றொருவர் படுகாயம்

Featured Replies

திங்கள் 20-08-2007 16:23 மணி தமிழீழம் [சிறீதரன்]

யாழ்ப்பாணத்தில் இன்று காலை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டெனிஸ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

இதில் கொல்லப்பட்டவர் புளியங்கூடல் தெற்க்கைச் சேர்ந்த சிவசாமி சிறிதரன் (வயது 31) மற்றும் படுகாயம் அடைந்தவர். அதே இடத்தைச் சேர்ந்த அ.யூகிட்டன் (வயது 21) என்பவாராவார்.

காலை 7.00 மணியளவில் இவர்கள் உந்துறுளியில் யாழ்ப்பாணம் பண்னைப் பாலம் ஊடாக கடமைக்கு வந்த வேளையில் இவர்களை இரண்டு இலக்கமற்ற உந்துறுளிகளில் இராணுவப் புலனாய்வாளர்களுடன் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவினரும் தொடாந்து வந்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

உந்துறுளியில் பின்தொடர்ந்து வந்தவர்கள் கன்னாதிட்டிச் சந்தியில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கஸ்தூரியார் வீதி வழியாக துரத்திச் சென்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்பப் பாடசாலைக்கு முன்னாள் வைத்து துப்பாக்கியால் சுட்டதைத் தொடாந்து ஒருவர் கொல்லப்பட்டார் மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் நகரம் கலக்கமடைந்து காணப்படுகின்றது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் மீண்டும்

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் காயங்களுக்கு உள்ளாகியவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதுடன் இறந்தவரின் உடலமும் பிரேத அறையில் வைக்கப்ட்டள்ளது.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே செய்தி டெனிஸ் ஊடகம் ஒன்றிலும் வெளிவந்திருக்கிறது:

இந்த சம்பவம் பற்றிய முழு விபரமும் வரும் வரைக்கும் அவர்களது முழு பணிகளையும் இடை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்..

Lokal minerydder dræbt i Sri Lanka

20. aug. 2007 16.04 Udland

Dansk Flygtningehjælp stopper alle aktiviteter i Jaffna, Sri Lanka.

Det sker, efter en lokalt ansat minerydder i morges blev dræbt, mens en anden lokalt ansat blev såret af overfaldsmænd.

Intet tyder på, at angrebet er rettet mod Dansk Flygtningehjælp, men indtil sagen er fuldt undersøgt, er alle aktiviteter stoppet i Jaffna.

- Det er meget tragisk, og alle vores ansatte er dybt berørte. Lige nu koncentrerer vi os om at hjælpe familien til den dræbte, siger Steen Wetlesen, der er programleder i Dansk Flygtningehjælp i Sri Lanka.

  • கருத்துக்கள உறவுகள்

ரொய்ட்டர்ஸ் ஆங்கில ஊடகத்தில் வந்த செய்தி

Tamil aid worker killed in north Sri Lanka

COLOMBO (Reuters) - Unknown gunmen shot dead a Tamil staff member of the Danish Demining Group in Sri Lanka's far north on Monday, the group said, the latest in a rash of aid worker killings on the island.

The shooting took place in the army-held Jaffna peninsula, which is cut off from the rest of the island behind rebel lines and has been beset by shootings in recent months and attacks on troops blamed on Tamil Tiger rebels.

Steen Wetlesen, country programme manager of the Danish Demining Group, said four staff members travelling to work on two motorcycles were chased by three people also on motorbikes.

"There were shots towards them. The backseat rider on one bike was hit in the bottom by a shot, so they stopped," he said. "The people pursuing followed the front bike and managed to catch up with them in the end and killed the driver."

Wetlesen said the group, which has 300 staff in Jaffna, had suspended its work on the peninsula to determine how to improve staff security.

"Four of our staff during the last two years have disappeared. Two of our staff members have now been killed," he added.

The killing comes just days after U.N. Under Secretary General for Humanitarian Affairs John Holmes visited the island and said it had one of the worst records in the world for aid worker safety in terms of the number of aid workers killed.

http://in.today.reuters.com/news/newsArtic...ia-290659-1.xml

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நகர வீதியில் விடிகாலை வேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை துரத்தித் துரத்திச் சுட்டனர் ஆயுததாரிகள் ஒருவர் மரணம்; மற்றவர் காயம்

யாழ். நகரப் பகுதியில் கஸ்தூரியார் வீதி யில் நேற்று விடிகாலைப் பொழுதில் 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தவர்களை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துரத்தித் துரத்திச் சுட்டனர்.

அந்தத் தாக்குதலில் நாரந்தனை தெற்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சிவசாமி சிறி தரன் (வயது 31) என்பவர் உயிரிழந்தார். இவர் டெனிஷ் கண்ணி அகற்றும் நிறுவனத் தில் பணியாற்றும் ஊழியர் ஆவார்.

இந்த மரணம் தொடர்பாக யாழ். நீதி வான் இ.த. விக்னராஜா மரண விசாரணை நடத்தினார்.

உயிரிழந்த வருடன் சைக்கிளில் பய ணித்த கனகரத்தினம் விஜயேந்திரன் என் வர் விசாரணையில் சாட்சியம் அளிக்கை யில் கூறியதாவது:

டெனிஷ் கண்ணி அகற்றும் நிறுவனத் தில் கடந்த 2 வருடங்களாக என்னுடன் உயி ரிழந்தவர் பணியாற்றி வந்தார்.நானும் உயிரிழந்தவரும் ஒரு மோட் டார் சைக்கிளில் நேற்று அலுவலகம் நோக் கிச் சென்றுகொண்டிருந்தோம். எங்களுடன் எம்முடன் பணிபுரியும் மேலும் நால்வர் மற் றும் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர்.

கன்னாதிட்டிச் சந்தியில் வந்துகொண் டிருந்த வேளை, வேறு மோட்டார் சைக்கிள் களில் வந்தவர்கள் எங்களை மறித்தனர். நாங் கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றோம். எம்மைக் கலைத்துக் கொண்டு சுட்டபடி அவர்கள் பின்தொடர்ந் தனர். இடைவழியில் மோட்டார் சைக்கி ளைப் போட்டுவிட்டு ஓடினோம். எம்மைக் கலைத்துவந்து உயிரிழந்தவரைச் சுட்டு விட்டு அவர்கள் சென்றுவிட்டனர் என்றார்.

இவர்களுடன் சேர்ந்து மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த அ.யூகிற்றன் (வயது 21) என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள் ளார்.

மரண விசாரணை நடத்திய நீதிவான் பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உற வினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட் டார். விடிகாலையில் இடம்பெற்ற இச்சம்ப வத்தால் நகரப் பகுதியில் பதற்றம் நிலவியது.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இளம் சமூகத்தினரை கொண்றொழிப்பதிலே குறியாக உள்ளனர் : ரீன் வெல்ட்சென்

இலங்கையின் யாழ் குடாநாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன், காணாமல் போயுள்ள நிலையில் இறுதியாக கடந்த 20ஆம் திகதி டனிஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

டனிஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்காமலே போயிருப்பதாக டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் ரீன் வெல்ட்சென் தெரிவித்துள்ளார். டனிஷ் புனர்வாழ்வு அமைப்பைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொரு கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோட்ரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த வருடம் நவம்பர் 2006ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ள போதும் அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஹலோட்ரஸ்ட் அமைப்பின் பணியாளர் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.