Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Lalith-Athulathmudali-Gamini-Dissanayake

இந்த மூன்று பேரையும் இப்பவும் பார்க்க காண்டாகவே இருக்கிறது.

  • Like 1
  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

Posted

காட்டிக்கொடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் (இவர் மீசாலையை சேர்ந்தவர் என நினைக்கிறேன்) துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கில் போட்டு சந்திகளில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரனை வெகுவாகப் பாதித்த சீலனின் மரணம்

Charles Lucas Anthony Prabakaran

"அவர்கள் எவராலும் கொல்லப்பட்ட இளைஞர்களை அடையாளம் காட்ட முடியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் வெள்ளை நிற டீ ஷேர்ட்டின் மேல் ஒலிவ நிற ராணுவச் சீருடையினை அணிந்திருந்தார். இறந்த இருவரினதும் உடல்களை யாழ் மருத்துவமனையின் பிரேத அறைக்குப் பொலீஸார் அனுப்பிவைத்தனர். ராணுவத்திற்கு தகவல வழங்கியவர்களில் ஒருவரான "சேவியர்" என்பவர் கொல்லப்பட்டது சீலன் தான் என்று அடையாளம் காட்டினார். என்னால் அதை நம்ப முடியவில்லை" என்று முனசிங்க கூறினார்.

திருகோணமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட சீலனின் தாயார் இறந்ததது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டும்வரை யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி பல்த்தசார் கூட அதனை நம்பவில்லை. கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக சிங்கள ஊடகங்கள் மிகுந்த வெற்றிக்களிப்போடு சீலனின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தன. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியின் மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கொண்டாட‌ப்படவேண்டிய நிகழ்வாகவே கருதப்பட்டது. "புலிகள் முடிந்துவிட்டார்கள்" என்கிற செய்திகளும் வெளியிடப்பட்டன. சீலனின் மரணத்தினால் உற்சாகமடைந்த ராணுவ பொலீஸ் புலநாய்வுத்துறையினர், பிரபாகரனையும் செல்லக்கிளியையும் தேடும் நடவடிக்கைகளில் இறங்கினர். ஆனால், சீலனின் மரணத்திற்குப் பழிவாங்க பிரபாகரனும், செல்லக்கிளியும் திட்டமிட்டு வருவது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், தனது உயிரைத் தியாகம் செய்து, தனது ஆயுதத்தைத் தன்னுடன் வந்த தோழனிடம் கொடுத்தனுப்பிய  சீலனின் வீரச்செயல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளித்திருந்த உத்வேகத்தையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சீலனைத் தமது கொமாண்டோக்களே சுட்டுக் கொன்றதாக ராணுவம் நம்பியது.

 ஆனால், அப்படி நடக்கவில்லை. தனது மரணத்திற்கு சீலனே உத்தரவிட்டார்.

முனசிங்க மூன்று இளைஞர்களுக்கருகில் தனது மினிபஸ்ஸினை நிறுத்தியபோது, தமது சைக்கிள்களை எறிந்துவிட்டு ஓடியவர்கள் சீலன், ஆனந்தன் மற்றும் அருணா ஆகிய மூன்று புலிகளின் போராளிகள்தான்.ஆனந்தனும் அருணாவும் சைக்கிள்களை மிதித்துச் செல்ல, சீலன் அருணாவின் சைக்கிளில் அமர்ந்து சென்றார். சீலனின் மடியில் உப இயந்திரத் துப்பாக்கியொன்று இருந்தது. 

ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலில் இலக்கானவர் ஆனந்தன். ராணுவம் மறைந்திருந்த பற்றைக் காட்டிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில் வீழ்ந்தவர் ஆனந்தனே. அருணாவும், சீலனும் மேலும் 100 மீட்டர்கள் ஓடியபின்னர் சீலன் கீழே வீழ்ந்தார். ஆனால், முனசிங்க நினைத்தது போல சீலன் சூடுபட்டு விழவில்லை. சில காலத்திற்கு முன்னர் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது சீலனுக்கு முழங்காலில் சூடுபட்டிருந்தது. அக்காயம் முற்றாக ஆறாமல் இருந்ததோடு, அதனால் கடுமையான வலியும் சீலனுக்கு ஏற்பட்டு வந்தது. வீழ்ந்ததும் மறுபடியும் அவர் எழ முயற்சித்தபோதும் அவரால் அது முடியாது போய்விட்டது. சீலனின் சிறுவயது நண்பனும், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணா, சீலனை எப்படியாவது காப்பற்றி இழுத்துச் செல்ல முயன்றுகொண்டிருந்தார். 

SLAN1-300x204.jpg

எஸ் எம் ஜி யுடன் சீலன்

 

"ஓடு, ஓடு, இன்னும் கொஞ்சத்தூரம் ஓடினால்ப் போதும்" என்று அருணா சீலனைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தார். "என்னால் முடியாது" என்று வலியில் முனகியபடியே சீலன் பதிலளித்தார். ராணுவத்தினர் அவர்களை நோக்கித் தரையால் ஊர்ந்துவரத் தொடங்கியிருந்தார்கள். 

"எழுந்திரு, கிராமத்திற்கு அருகில்ச் செல்ல வேண்டும். சென்றுவிட்டால் நாம் தப்பிவிடலாம்" என்று அருணா கூறவும், சீலன் மறுபடியும் எழுந்திருக்க முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.

"என்னையோ எனது எஸ்.எம்.ஜி ஐயோ அவர்கள் கைப்பற்றிவிடக்கூடாது" என்று உறுதியுடன் கூறிக்கொண்டிருந்தார் சீலன். "நான் அவர்களிடம் உயிருடன் பிடிபடவே மாட்டேன்" என்று அக்கணத்தில் சபதம் பூண்டார். இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார். நிர்மலா நித்தியானந்தனின் வீட்டில் மறைந்திருந்தபோதும் இதனையே சீலன் மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலேயே சீலனை நான் எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று முனசிங்க கர்வத்துடன் பேசியபோது,  "அவரைக் கைதுசெய்ய எத்தனிக்க வேண்டாம், ஏனென்றால் சீலனை நீங்கள் உயிருடன் பிடிக்க முடியாது" என்று முனசிங்கவிடம் நிர்மலா ஒருமுறை கூறியிருந்தார். சீலன் பயமறியாதவர், துடிதுடிப்பானவர், சமயோசிதமானவர். இலட்சியத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வந்திருந்தவர். பிரபாகரனுக்கு முழுமையான விசுவாசமாகச் செயற்பட்டவர். சீலனைப் பொறுத்தவரை "தம்பி" தலைவர் மட்டுமல்ல, அவரின் குருவும் அவரே. அருணாவின் கண்களை நேராகப் பார்த்து சீலன் பின்வருமாறு கூறினார், "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்கக் கூடாது. என்னைச் சுட்டு விட்டு எனது எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு ஓடிவிடு" . அருணாவுக்கு தலையில் இடி ஒன்று இறங்கியதான அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாது ஸ்த்தம்பித்துப் போனார்.

சீலனின் பொறுமை எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களை நோக்கி ஊர்ந்துவந்த ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே முன்னேறி வந்துகொண்டிருந்தனர்.

"என்னடா பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று சீலன் அருணாவைப் பார்த்துக் கத்தினார். "என்னைச் சுட்டு விட்டு ஓடு, நான் சொல்றதைக் கேள்" என்று மீண்டும் அருணாவைப் பார்த்துக் கத்தினார் சீலன். அருணாவினால் எதையுமே யோசிக்க முடியவில்லை. பிரமை பிடித்தவரைப்போன்று அசைவின்றிக் கிடந்தார் அருணா. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியைக் கொல்ல அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை, எனது எஸ் எம் ஜி யையும் அவர்கள் எடுத்துவிடக் கூடாது" என்று மீண்டும் கத்தினார் சீலன். "இது எனது கட்டளை, சுடடா" என்று இறுதியாகக் கத்தினார் சீலன். தனது நிலைகுலைந்து அருணா அழத் தொடங்கினார்.

"சுடடா .... சுடடா....சுடடா....." என்று சீலன் முனகிக்கொண்டிருக்க, அருணா துப்பாக்கியின் குழலை சீலன் நெற்றிக்கும் மூக்கிற்கும் இடையே வைத்து அழுத்தினார். தனது முகத்தினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே துப்பாக்கியை இயக்கினார் அருணா. சீலன் இறந்து கீழே விழ, சீலனின் எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு, தனது பலம் எல்லாம் திரட்டி ஓடத் தொடங்கினார் அருணா. ராணுவத்தினரின் சன்னங்களில் ஒன்று அவரின் மேல் பட்டதும் கீழே வீழ்ந்தார், ஆனால் தப்பிவிடவேண்டும் என்கிற துடிப்புடன் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினார். இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் காயத்தை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, மறு கையில் சீலன் இயந்திரத் துப்பாக்கியைப் பத்திரமாகப் பற்றிக்கொண்டு வயல்வெளிகள் தாண்டி கிராமத்தினுள் நுழைந்து சாவகச்சேரிப் பகுதியை அடைந்தார்.  வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்றினைத் துப்பாக்கியைக் காட்டி மறித்த அருணா, சாரதியை இறங்கச் சொல்லிவிட்டு அதில் ஏறி ஓட்டிச் சென்றார். மறுநாள் காலை திருநெல்வேலிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காரினை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். காரின் ஸ்டியரிங் வீல் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. காரைக் கைவிட்ட அருணா, மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்வேலிப் பகுதியில் இருக்கும் புலிகளின் மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தார்.

நீர்வேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தில் இயக்கத்தில் நிதி நிலைமைகள் குறித்து பண்டிதர் மற்றும் கிட்டுவுடன் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு அருகில் ஓடிச்சென்ற அருணா, சீலனின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டு அவர் அருகில் மயங்கிச் சரிந்தார். சீலனின் மறைவுகுறித்து அருணா கூறியபோது பிரபாகரன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். நெடுநேரம் எவருடனும் அவர் பேசவில்லை. அந்தப் பொழுதினை பின்னாட்களின் என்னுடன் பகிர்ந்துகொண்ட கிட்டு, "அவரின் உணர்வுகள் அக்கணத்தில் எப்படியிருந்தன என்று எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பது எமக்குப் புரிந்தது" என்று கூறினார். சீலனை அவர் அதிகமாக நேசித்தார். அவரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். சீலன் தீரமானவர், புத்திசாதுரியம் மிக்கவர், அஞ்சாத நெஞ்சுரமும், தலைமை மீது அளவுகடந்த விசுவாசமும் கொண்டவர். ஆகவே, சீலனும் ஆனந்தனும் செய்த உயிர்த்தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்று பிரபாகரன் உத்தரவிட்டார்.

சீலனையும் ஆனந்தனையும் போற்றி, வணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் வடக்குக் கிழக்கில் பரவலாக‌ ஒட்டப்பட்டன. அவர்களின் இயற்பெயர்களைத் தாங்கி அவை வெளிவந்திருந்தன. சீலனின் இயற்பெயரான சார்ள்ஸ் அன்டனி மற்றும் அவரது பிறந்த ஊரான திருகோணமலை உட்பட அவரின் விபரங்கள சுவரொட்டிகளில் காணப்பட்டன. அவரது வீர மரணத்தின் பின்னர் "லெப்டினன்ட்" எனும் பதவி புலிகளால் அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே ஆனந்தனின் இயற்பெயரான ராமநாதன் அருளானந்தன் மற்றும் அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு போன்ற விடயங்கள் அவரது வீரவணக்க சுவரொட்டிகளில் காணப்பட்டன. ஆனந்தன் அந்த வருடமே புலிகளுடன் இணைந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அருணாவின் இயற்பெயர் செல்லச்சாமி கோணேசன். இவர் திருகோணமலையினைப் பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் சீலனின் பால்ய வயது நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

SLN2.jpg

சீலனின் பெயரால் உருவாக்கப்பட்ட புலிகளின் முதலாவது மரபு வழிப் படைப்பிரிவு ‍- சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருநெல்வேலித் தாக்குதலைத் தீர்மானித்த பிரபாகரன்

Jaffna-Map.jpg
 

ராணுவத்தினர் அன்றிரவே தமது விசாரணைகளை ஆரம்பித்தனர். சூட்டுச் சத்தம் கேட்டவுடன் வீதிக்கு வந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமகன் ஒருவரை முனசிங்க தலைமையிலான ராணுவத்தினர் பிடித்துக்கொண்டனர். அவரே புலிகளின் மறைவிடத்தை இராணுவத்தினருக்குக் காட்டிக் கொடுத்தார். வெள்ளம்பொக்கடிக்கும் கச்சாய்க்கும் இடையிலான பகுதியொன்றில் அந்த வீடு அமைந்திருந்தது. மீசாலையினைச் சேர்ந்த சின்னையா சந்திர மெளலீசன் என்பவரே அந்த வீட்டினை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். அவ்வீட்டில் பிரபகாரன் பல தடவைகள தங்கிச் சென்றிருக்கிறார்.    

அவ்வீட்டைச் சோதனையிட்டபோது சில ஆவணங்களும், ஒரு கண்ண்டிக் குப்பியும் காணப்பட்டன. ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட முதலாவது சயனைட் குப்பி இதுவே.

 சீலனினதும், ஆனந்தனினதும் வித்துடல்கள் கடுமையான பொலீஸ் பாதுகாப்புடன் தெல்லிப்பழையில் எரியூட்டப்பட்டன.

ஒரு ராணுவ வீரனின் பார்வையில் என்று தான் எழுதிய புத்தகத்தில் சீலனினதும் ஆனந்தனினதும் வித்துடல்களின் ஒளிப்படங்களை முனசிங்க இணைத்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 16 ஆம் திகதி தான் எடுத்த மாவீரர்கள் இருவரினதும் ஒளிப்படங்களின் மூலப்பிரதியை அவர் என்னிடம் காண்பித்தார். சீலனின் தலைப்பகுதியிலும், கண்ணுக்கு அருகிலும் காணப்பட்ட சூட்டுக் காயங்களைப் பார்க்கும்போது மிக அருகில் இருந்து சுடப்பட்டிருப்பது புரியும் என்று அவர் கூறினார். சீலனின் புகைப்படத்தைக் காட்டிக்கொண்டே என்னுடன் பேசிய முனசிங்க, "சீலனின் உடலினைக் காட்டும் ஒரே புகைப்படம் இதுதான், ஆகவே பிரபாகரன் நிச்சயம் எனது புத்தகத்தை வாங்குவார்" என்று கூறினார். 

பிரபாகரனின் நீண்ட மெளனமும், சிந்தனையும் கிட்டுவால் கலைக்கப்பட்டது. சீலனின் மரணத்திற்காகப் பழிவாங்கவே பிரபாகரன் மெளனமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பதை கிட்டு பின்னர் உணர்ந்துகொண்டார். 

img_1239.jpg?w=580

அனிதா பிரதாப், சொர்ணம் மற்றும் தமிழ்ச்செல்வனுடன் தேசியத் தலைவர்

பிரபாகரனை முதன் முதலாகச் சந்தித்த சர்வதேசப் பத்திரிக்கையாளரும், அவரைத் தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து ஆய்வுகளை வெளியிட்டு வந்தவருமான அனிட்டா பிரதாப் தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் "பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மிகவும் மூர்க்கத்தனமாகச் செயற்படுவார், ஒரு அடிபட்ட புலியைப் போல" என்று எழுதுகிறார். சீலனைக் கொன்றுவிட்டோம் ஏன்று ராணுவம் குகதூகலித்துக் கொண்டாடிய விதமே பிரபாகரனைத் திருநெல்வேலித் தாக்குதலைச் செய்யத் தூண்டியது என்று அனிட்டா கூறுகிறார். திருநெல்வேலியில் ராணுவம் மீது பிரபாகரன் நடத்திய தாக்குதலினைப் பார்க்கும்போது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்குவதற்காகவே அதனைச் செய்தார் என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார். தனது போராளிகளின் மரணத்தினை பிரபாகாரன் இலேசாக எடுத்துக்கொள்வதில்லை. அது அவரது இயல்பு. பிரபாகரனின் இந்தக் குணாதிசயத்தைக் காட்ட இரு நிகழ்வுகளை அனிட்டா விளக்குகிறார்.

http://www.eelamview.com/wp-content/uploads/2015/10/kumarappa-pulenthiran.jpg

இந்தியச் சிங்களச் சதியால் பலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் ‍ 

முதலாவது நிகழவு 1987 ஆம் ஆண்டு பலாலி ராணுவத் தளத்தில் தனது மிக முக்கிய தளபதிகள் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணித்தபோது இடம்பெற்றது. "1987 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்குக் கொண்டுசெல்ல ஏற்பாடாகி இருந்தது. இந்தியா அவர்களை விடுவிக்க எவ்வளவோ முயன்றபோதும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அவர்களைக் கொழும்பிற்குக் கொண்டுவந்து விசாரிப்பதில் பிடிவாதமாக நின்றார். கொழும்பிற்கு இழுத்துச் செல்லும் கணத்திற்குச் சற்று முன் புலிகளின் தளபதிகள் அனைவரும் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணத்தைத் தழுவிக்கொண்டனர். பிரபாகரனின் சினத்தின் மூடியை இச்சம்பவம் முற்றாகத் திறந்துவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.

 CharlesAnthonymemorialMeesalaiAllaria2003.jpg

சீலனின் நினைவாலயம்மீசாலை - 2003

 

33-lt-col-malli.jpg

அனிட்டா குறிப்பிடும் இரண்டாவது சம்பவம் 1994 இல் இடம்பெற்றிருந்தது. வன்னிக்கு முக்கிய செய்தியொன்றுடன் வந்துகொண்டிருந்த புலிகளின் தளபதியான லெப்டினன்ட் கேணல் அமுதனை ராணுவத்தினர் பதுங்கியிருந்து சுட்டுக் கொன்றனர். அமுதனின் தலையினை தனியே வெட்டி எடுத்துக்கொண்டு, அவரது உடலினை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர் ராணுவத்தினர். "பிரபாகரன் கடுஞ்சினம் கொண்டிருந்தார்" என்று அனீட்டா எழுதுகிறார். அக்காலத்தில் சந்திரிக்காவுடன் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை விடவும் அமுதனின் படுகொலைக்கு பிரபாகரன் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அமுதனுக்கான தமது இறுதி மரியாதையினைச் செலுத்த அவரது தலையினை உடனடியாக இலங்கை ராணுவம் தம்மிடம் கையளிக்கவேண்டும் என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அப்போதைய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை, அமுதனின் தலை நன்கு பழுதடைந்த நிலையில் இருந்தமையினால் நாமே அதனை எரித்துவிட்டோம், தேவையென்றால் அத்தலையின் சாம்பலைத் தருகிறோம் என்று பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் ஈடுபட பிரபாகரன் சம்மதம் தெரிவித்தார்.

 

சீலனின் மரணத்திற்கு பழிவாங்கலாக பாரிய தாக்குதல் ஒன்றினைச் செய்யட பிரபாகரன் தீர்மானித்தார். ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் யாழ் நகரையும் சுற்றுப்புறங்களையும் ரோந்து புரியும் ராணுவத் தொடரணி மீது பதுங்கித் தாக்குவதென்று அவர் முடிவெடுத்தார்.

See the source image

செல்லக்கிளி

இத்தாக்குதலை திட்டமிடும் பொறுப்பு செல்லக்கிளியிடமும் கிட்டுவிடமும் கொடுக்கப்பட்டது. ஆகவே, ராணுவ ரோந்து அணியின் பலம், அதன் பாதைகள், ரோந்து அணி வழமையாக ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் இருவரும் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட பூரண விபரங்களுடனான தாக்குதல் திட்டம் பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தினை தானே நேரில் சென்று பார்வையிட்ட பிரபாகரன் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார்.

kiddu-praba.jpg

தேசியத் தலைவருடன் கிட்டண்ணா

ஆடி 23 ஆம் திகதியை தமது தாக்குதலுக்கான நாளாக பிரபாகரன் தீர்மானித்தார். இத்தாக்குதல் நடக்கப்போவது குறித்து எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், செல்லக்கிளியைத் தேடி ராணுவம் வலைவிரித்தது. இந்த நடவடிக்கைக்கு யாழ்த் தளபதி பல்த்தசார் உத்தரவிட்டார். தனது புலநாய்வு வலையமைப்பை இந்த நடவடிக்கைக்காக அவர் முடுக்கிவிட்டார். அவரக்குச் சில வெற்றிகளு  கிடைத்திருந்தன. செல்லக்கிளியின் நடமாட்டம் குறித்து அவ்வப்போது ராணுவத்திற்கு தகவல்கள் வரத் தொடங்கின. ஆடி 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செல்லக்கிளி தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார் என்கிற தகவலும் ராணுவத்தினருக்குக் கிடைத்திருந்தது.  இதனையடுத்து ராணுவ ரோந்து அணியொன்றினை ஒழுங்கமைத்துக்கொண்டு யாழ்நகரை நள்ளிரவு வேளையில் சுற்றிவரும்படி முனசிங்கவைப் பணித்தார் பல்த்தசார். அதன்படி கொமாண்டோ படைப்பிரிவு ஒன்றினை நள்ளிரவு ரோந்திற்காக முனசிங்க ஒருங்கமைத்தார். வழமையாக நள்ளிரவு ரோந்தில் ஈடுபடும் சாதாரண ராணுவ அணியை அன்று நள்ளிரவுக்கு முன்னமே யாழ்நகரை விட்டு வந்துவிடுமாறு அவர் உத்தரவிட்டார். 

 

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1983 ஆடியில் தமிழர்கள் மீது தாக்குதலை நடத்த ஜெயார் உருவாக்கிய தொழிற்சங்க அக்கிரமப் படை

JR-Jayewardene.jpg

தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட அரசாங்கமும் தயாராகி வந்தது. பயங்கரவாதத்தினை முறியடிப்பதற்காகத் தான் கூட்ட எண்ணியிருந்த அனைத்துக் கட்சி மாநாடு ஆடி 20 ஆம் திகதி நடவாமல்ப் போனது ஜெயாருக்குக் கடுமையான சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களினதும், அவர்களின் நடவடிக்கைகள் தொடரபாகவும் செய்தி வெளியிடுவதில் கடுமையான தணிக்கைகளை அவர் கொண்டுவந்தார். தணிக்கையினைக் கண்காணிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான டக்ளஸ் லியனகே நியமிக்கப்பட்டார். ஆடி 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது. தமிழர்களைத் தொடர்ச்சியாக அரசாங்கம் ஏமாற்றி வருவதால் இனிமேல் அரசுடன் பேசுவதில்லையென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்த் தலைமைப்பீடம் ஆடி 23 ஆம் திகதி மன்னார் நகரில் கூடியபோது முடிவெடுத்திருந்தது. மேலும், தம்மால் முன்வைக்கப்படும் 4 நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கச் சம்மதிக்கலாம் என்றும் அக்கட்சி முடிவெடுத்தது. அந்த 4 நிபந்தனைகளாவன,

1. சுதந்திரக் கட்சி அடங்கலாக, அனைத்துக் கட்சிகளும் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும்.

2. மாநாட்டில் பேசப்படும் விடயங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கான தன்னாட்சி அதிகாரம், மற்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவிடயங்களும் உள்ளடக்கப்படவேண்டும்.

3. தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களில் இருந்து ராணுவம் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்

ஆனால் தமிழர்களைப் பற்றிச் சிந்தைக்கவோ அல்லது அவர்களின் நிபந்தனைகளை ஏறெடுத்துப் பார்க்கவோ அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்தபோதிலும் சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த தமிழர்களுடனான உறவினைத் தான் புதுப்பிக்க விரும்புவதாக பாசாங்கு செய்யவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆகவே ஆடி 21 ஆம் திகதி, தன்னுடன் வந்து பேசுமாறு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் நடராஜாவை காமிணி திசாநாயக்கவூடாக ஜெயார் அழைத்தார். இந்தச் சந்திப்பு ஜெயாரின் இல்லத்தில் நடைபெற்றது. லலித் அதுலத் முதலியும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். அன்று மாலை சிறிலங்கா பவுண்டேசன் மண்டபத்தில் இடம்பெற்ற புனிதம் திருச்செல்லவம் நினைவுப் பேருரை நிகழ்வில் நடராஜா கலந்துகொண்டபோது நான் அவரைச் சந்தித்தேன். முதலில் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை நடராஜா என்னிடம் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி  அச்சப்படுகிறது என்று தான் ஜனாதிபதியிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்கான அதிகாரத்தையும், நிதியினையும் அரசாங்கம் தர மறுத்துவருவதாக அவர் ஜெயாரிடம் கூறியபோது குறுக்கிட்ட லலித் அதுலத் முதலி, "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை அரசாங்கம் ஒருபோதுமே தரப்போவதில்லை" என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களைத் தருவதில் அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை. நாட்டில் தற்போது இருக்கும் நிலைமை அதற்கு ஒருபோதுமே இடம் கொடுக்கப்போவதில்லை. ஆகவே, இங்குவந்து அதிகாரங்களைப் பகிர்ந்து தாருங்கள் என்று கேட்பதை நிறுத்துங்கள்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் காட்டமாகக் கூறியிருக்கிறார். இதனால் நடராஜா விரக்தியடைந்திருக்கிறார். பின்னர் ஜெயாரின் பக்கம் திரும்பிய நடராஜா, அவரைப் பார்த்து "லலித் கூறுவது நீங்கள் எடுத்திருக்கும் முடிவைத்தானோ?" என்று கேட்டிருக்கிறார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த ஜெயவர்த்தன, "நான் கூறச்சொன்னதை அப்படியே லலித் உங்களிடம் கூறினார், அவ்வளவுதான், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், நிலைமை சற்றுச் சீராகட்டும், அதன்பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை கொடுப்பது பற்றிச் சிந்திக்கலாம்" என்று கூறியிருக்கிறார். இதனால் சற்றுச் சினமடைந்த நடராஜா, "அதுவரை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எமது மேசைகளில் இருந்து கோப்புக்களை அங்கும் இங்குமாக அரக்கச் சொல்கிறீர்களா? " என்று வெறுப்புடன் கேட்டிருக்கிறார். நடராஜாவை ஆசுவாசப்படுத்த முயன்ற ஜெயார், நிலைமைகள் இப்போது நன்றாக இல்லை, ஓரளவுக்கு நிலைமைகள் சீரடைந்தவுடன் அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசலாம் என்று கூறியிருக்கிறார்.

ஜெயாரும் நடராஜாவும் பேசும்போது குறுக்கிட்ட லலித், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இக்கட்டான நிலை எனக்குப் புரிகிறது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளிலிருந்து சில நல்ல விடயங்களை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் அவர்களிடம் காட்டவேண்டும் என்பதே உங்கள் பிரச்சினை. விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு நாம் உங்களுக்குப் பணம் தருவோம். இவ்வகையான நடவடிக்கைகள் உங்களை பரபரப்பாக வைத்திருப்பதுடன் உங்கள் மக்களையும் திருப்திப்பட வைக்கும்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் கூறினார். லலித் தன்னிடம் தருவதாகக் கூறிய வாக்குறுதியை தான் நிராகரித்துவிட்டதாக நடராஜா என்னிடம் கூறினார். அவர்களுக்குப் பதிலளித்த நடராஜா "நாம் எதிர்பார்ப்பது நிலையான தீர்வையே அன்றி நீங்கள் போட நினைக்கும் அற்பச் சலுகைகளை அல்ல" என்று கூறியிருக்கிறார். 

பின்னர் பேசிய ஜெயார் இந்த விடயங்களைப் பற்றி இன்னொரு கூட்டத்தில் பேசலாம் என்று கூறி அன்றைய சந்திப்பை முடித்துவைத்தார். 

இந்தச் சந்திப்பைப் பற்றி நடராஜா கூறியது இதைத்தான், 

ஜெயார் எனும் மனிதர் இனிமையாகப் பேசி தனக்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டார்.அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் நடராஜா பதவி விலகுவதிலிருந்து தடுப்பது ஒன்றே. அதில் அவர் வெற்றியும் கண்டார். நான் இதனை டெயிலி நியூஸ் பத்திரிகைக்குச் செய்தியாக அனுப்பவில்லை. எனது ஆசிரியரை தர்மசங்கடத்தினுள் ஆள்த்த நான் விரும்பவில்லை. நாம் கொடுக்கவேண்டிய செய்திக்குப் பதிலாக லலித் ஒரு அறிவிப்பை பத்திரிக்கையில் வெளியிட்டார். அதுதான் நடராஜா தனது பதவி விலகலை இரத்துச் செய்தார் என்றும் மேலதிக கலந்துரையாடல்கள் தொடரும் என்பதும். 

ஜெயாருக்குக் கால அவகாசம் தேவைப்பட்டிருந்தது. அவரும் அவரது அடியாட்களும் பல்வேறு செயல்களைத் திட்டமிட்டிருந்தார்கள். சிறில் மத்தியுவும் அவரது இனவாத தொழிற்சங்கமுமான ஜாதிக சேவா சங்கமயவும் தெற்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அனைவரினதும் விலாசங்களைச் சேகரிக்கத் தொடங்கியிருந்ததுடன் பாரிய அதிரடி நடவடிக்கை ஒன்றிற்காக விசேட படைப்பிரிவொன்றும் உருவாக்கப்பட்டு வந்தது. லேக் ஹவுஸ் அமைப்பில் இயங்கிவந்த ஜாதிக சேவா சங்கமய இல் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். என்னை ஓரளவிற்கு மரியாதையுடனேயே அவர்கள் நடத்தி வந்தனர். தமிழர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு 3 அல்லது நான்கு நாட்களுக்கு முன்பதாக என்னிடம் ரகசியமாகப் பேசிய சிங்கள உறுப்பினர் ஒருவர்,"அசம்பாவிதம் ஒன்று நடக்கப் போகிறது" என்று கூறிவிட்டு சில நொடி மெளனத்திற்குப் பின்னர் "அவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களினது பட்டியல் ஒன்றினையும் தயாரிக்கிறார்கள்" என்று கூறினார். ஏதோ அசம்பாவிதம் ஒன்று என்னைச் சுற்றி சூழ்கிறதென்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தமிழருக்கெதிரான வெறுப்புணர்வு வெளிப்படையாகவே அவர்களின் முகத்தில் படிந்துவருவதை நான் உணர்ந்துகொண்டேன். லங்கா கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவும் இந்தவகையான ரகசியப் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறார். அதுபற்றி பல வருடங்களுக்குப் பின்னர், 1992 ஆம் ஆண்டு மாசி 2 ஆம் திகதி வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் அவர் "மனிதர்களும் அவர்களின் செயற்பாடுகளும்" என்கிற பதிவில் எழுதியிருந்தார்.

"கொடூரமான அவலங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்னராவது ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாகச் செய்திகள் பரவி வந்தன. மிகக்கொடுமையான, ஒரு இனக் கூட்டத்திற்குப் பாடம் ஒன்றினைப் புகட்டுவதற்கான செயற்பாடுகளில் பரவலாக இறங்கப் போகிறார்கள் என்கிற அந்தச் செய்தி".

Velupillai Pirabaharan Hoisting Tamil Eelam Flag

ஆடி 23 ஆம் திகதி, நள்ளிரவு வேளை, "4 ‍ X 4 பிராவோ" என்று பெயரிடப்பட்ட ராணுவ ரோந்து அணியின் வருகைகையினை எதிர்பார்த்து பிரபாகரனும் அவரது தோழர்களும் திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் காத்திருந்தார்கள். புலிகளின் மூத்த போராளிகளான கிட்டு, ஐயர், விக்டர், புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோசம் மற்றும் அப்பையா ஆகியோர் பரபரப்புடன் வீதியின் இருபுறத்திலும் நிலையெடுத்துக் காத்திருந்தார்கள். ராணுவ ரோந்து அணி மீது கண்ணிவெடித் தாக்குதலையும் அதன்பின்னர் பதுங்கித் தாக்குதலையும் நடத்துவதே அவர்களின் திட்டம். 

 தான் ராணுவம் மீது அன்றிரவு நடத்தவிருக்கும் இத்தாக்குதல் இலங்கையின் மொத்தச் சரித்திரத்தையும் மாற்றிப்போடவிருக்கிறது என்பதுபற்றி பிரபாகரன் சிறிதும் அறிந்திருக்கவில்லை. மறுநாள் தமிழர்கள் மீது தனது அக்கிரமக்காரர்களின் படையினை ஏவிவிட்ட ஜெயார் கூட இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தையே தனது நடவடிக்கை முற்றாக உடைத்துப் போடப்போகிறதென்பதை அறிந்திருக்கவில்லை. மிகக்கொடுமையான இரவுகளான ஆடி 23 நள்ளிரவு தொடக்கம் ஆடி 24 நள்ளிரவு வரையான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு இலங்கை இன்றுவரை தோற்றே வருகிறது

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

திருநெல்வேலித் தாக்குதல்

Velupillai Prabhakaran and guards

பலாலி வீதியையும் பருத்தித்துறை வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியொன்றில் தான் ஒட்டிவந்த மினிபஸ்ஸை செல்லக்கிளி ஓரமாக நிறுத்தவும் உள்ளிருந்த பிரபாகரனும் ஏனைய தோழர்களும் இறங்கிக் கொண்டார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கி இருவர் கொண்ட சிறிய குழுக்களாகப் பிரிந்துகொண்ட அவர்கள் யாழ்ப்பாணத்திசையில் திரும்பி சுமார் 200 மீட்டர்கள் நடந்தார்கள். அவ்விடத்திலிருந்த மளிகைக்கடை  ஒன்றின் முன்னால் அவர்கள் மீண்டும் கூடினர். சீமேந்தினால் அமைக்கப்பட்ட கூரையும், அதன் முன்னால்  அரைப்பங்கிற்குக் கட்டப்பட்ட சீமேந்துச் சுவரும் கொண்டு காணப்பட்டது அந்த மளிகைக்கடை.

 

சுமார் இரவு 9 மணியிருக்கும் அப்போது. அநேகமான வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ஒரு சில வீடுகளில் மட்டும் விளக்குகள் இன்னமும் எரிந்துகொண்டிருந்தன. வீதியில் சப்பாத்துக் காலடி ஓசை கேட்க, அருகிலிருந்த வீடுகள் சிலவற்றிலிருந்து குடியானவர்கள் வீட்டு யன்னல்களூடாகவீதி நோக்கிப் பார்ப்பத் தெரிந்தது.

 

தான் கொண்டுவந்திருந்த ஆயுதப் பையை வீதியில் போட்டுவிட்டு திறக்கப்பட்ட யன்னல்கள் அருகில் சென்ற விக்டர், "யன்னல்களைச் சாத்துங்கள்" என்று சிங்களத்தில் கத்தினார். பின்னர் மின்விளக்குகளையும் அணைக்குமாறு அவர் சிங்களத்திலேயே உத்தரவிட்டார்.

யன்னல்கள் சாத்தப்பட்டதுடன் மின்விளக்குகளும் உடனேயே அணைக்கப்பட்டுவிட்டன. சிங்கள ராணுவத்தின் கட்டளைகளுக்கு பணிந்துபோவதென்பது அப்போது தமிழருக்கு நன்கு பரீட்சயமாகியிருந்தது குறிப்பிடத் தக்கது. ராணுவத் தொடரணிகளின் பாதுகாப்பிற்காக கால்நடையாக வீதியில் ரோந்துவரும் சிங்கள ராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது இவ்வகையான கட்டளைகளை இட்டுக்கொண்டே செல்வது அக்காலத்தில் வழமையாக இருந்த ஒன்று. அன்றிரவு பிரபாகரனும் அவரது தோழர்களும் ராணுவச் சீருடையிலேயே காணப்பட்டதனால், அவர்களைச் சிங்கள ராணுவத்தினர் என்றே மக்களும் எண்ணிக்கொண்டார்கள்.

கடையின் அருகில், வீதியின் ஓரமாக தொலைத்தொடர்புச் சேவையின் ஊழியர்கள் கம்பிகளை புதைப்பதற்காக அகழிகளை வெட்டி வைதிருந்தார்கள். அந்த அகழிகளில் ஒன்றில் விக்டரும் செல்லக்கிளியும் தாம் கொண்டுவந்திருந்த கண்ணிவெடியினை புதைத்துக்கொண்டிருப்பதை பிரபாகரன் திருப்தியுடன் பார்த்துக்கொண்டு நின்றார். அவர்களுடன் அவர் பேசவில்லை. பின்னர் அருகில் நின்றை ஏனைய தோழர்களிடம் சென்ற பிரபாகரன் அவர்களுடன் சேர்ந்து, தாம் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக சாக்குப் பைகளிலிருந்து வெளியில் எடுக்க ஆரம்பித்தார்.

g3.jpg

எச் கே ஜி 3

தான் கொண்டுவந்த ஜி 3 ரைபிளை வாஞ்சையுடன் வெளியே எடுத்த பிரபாகரன் அதன் மீது படிந்திருந்த தூசியினை மெதுவாகத் துடைத்தார். ஏனையவர்களிடம் எஸ் எம் ஜி இயந்திரத் துப்பாக்கிகள் காணப்பட்டன.

புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, விக்டர், புலேந்திரன், ஐயர், சந்தோசம், அப்பையா உட்பட வேறு சிலரும் அந்த இராப்பொழுதில் அங்கே ராணுவத்தின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்து நின்றனர். புலிகளின் தாக்குதல்க் குழுவில் மொத்தமாக 14 பேர் இருந்தார்கள். பிரபாகரன் திட்டமிட்டதைப் போலவே இரு குழுக்களாக அவர்கள் பிரிந்துகொண்டார்கள்.

 ஒரு குழுவிற்குப் பிரபாகரன் தலைமை தாங்க, மற்றைய குழுவிற்கு கிட்டு தலைமை தாங்கினார்.

இத்தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் பிரபாகரனாலேயே வகுக்கப்பட்டது. சீலனைக் கொன்றதற்காக இராணுவம் மிகப்பெரிய விலையினைச் செலுத்தவேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் கூறியிருந்தார். "சீலனின் இழப்பென்பது ஈடுசெய்யப்பட முடியாதது. ஆனாலும், சீலனின் இழப்பிற்கு நாம் பெரிதாக ஒரு நடவடிக்கையினைச் செய்யவேண்டும். அவனுக்குத் திருப்தியைக் கொடுக்கும் வகையில் அது அமையவேண்டும்" என்று சீலன் கொல்லப்பட்ட நாளிலிருந்து தனது போராளிகளிடம் பிரபாகரன் இதனைச் சொல்லி வந்திருந்தார்.

 

திருநெல்வேலித் தாக்குதல் நடந்து சுமார் 8 மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு பங்குனியில் அனித்தா பிரதாப்பிற்கு செவ்வியளித்த பிரபாகரன், திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலாகவும், இராணுவத்தினருக்கான தண்டனையாகவுமே தன்னால் திட்டமிடப்பட்டதாகக் கூறியிருந்தார். கல்கத்தாவில் இருந்து வெளிவரும் அரசியல் வார இதழ் ஒன்றிற்காக அனித்தா பிரதாப் பிரபாகரனை சென்னையில் செவ்வி கண்டிருந்தார். 

840311sunday_interview.jpg

அனித்தாவினால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியினை நான் இங்கே இணைத்திருக்கிறேன்,

 

கேள்வி : ஆடித் தாக்குதலை நீங்கள் ஏன் நடத்தினீர்கள்? இத்தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே? சிலரைப் பொறுத்தவரை, ராணுவத்தால் வன்புணர்வுசெய்யப்பட்ட தமிழ்ப்பெண்களுக்கான பழிவாங்கலாகவே இதனை நீங்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, உங்களின் நண்பனும், ராணுவப் பிரிவின் தளபதியாகவும் இருந்த சார்ள்ஸ் அன்டனியை ஆடி 15 இல் கொன்றுவிட்டோம் என்று கூதூகலித்திருந்த சிங்கள ராணுவத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லவே நீங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நான் உணர்கிறேன். உண்மையென்னவென்றால், உங்கள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதி ஒருவரைச் சிங்கள ராணுவம் கொன்றுவிட்ட போதிலும், அவர்கள் மீது தீவிரமான தாக்குதல் ஒன்றினை நடத்தக்கூடிய இயலுமையும் பலமும் இன்னமும் உங்கள் இயக்கத்திடம் இருக்கின்றது என்பதைக் காட்டவே நீங்கள் இதனைச் செய்தீர்கள் என்று நான் நம்புகிறேன், இது சரிதானே?

பிரபாகரன் : "சார்ள்ஸ் அன்டனி பற்றியும், திருநெல்வேலித் தாக்குதல் பற்றியும் நீங்கள் தேடி அறிந்துவைத்திருக்கும் விடயங்களில் சில உண்மைகள் இருக்கின்றன. இத்தாக்குதல் ஒரு வழியில் பழிவாங்கலாகவும், இன்னொரு வழியில் சிங்கள ராணுவத்திற்கான தண்டனையாகவுமே எம்மால் நடத்தப்பட்டது. ஆனாலும், 13 சாதாரணச் சிங்களச் சிப்பாய்களின் மரணம் ஒரு மாபெரும் புரட்சிகர விடுதலைப் போராளியான சார்ள்ஸ் அன்டனியின் மரணத்திற்கு ஒப்பாகி விடாது. எமது எதிரி மீதான எமது அமைப்பின் கெரில்லா ரீதியிலான தாக்குதலாகவுமே இதனை நாம் முன்னெடுத்தோம்".

மேலும், அனித்தா குறிப்பிட்ட நான்கு தமிழ்ப் பெண்கள் மீதான சிங்கள ராணுவத்தின் பாலியல் வன்புணர்வும் தமிழ்ச் சமூகத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தார். அக்காலத்தில் வந்திருந்த செய்திகளின்படி ஆடி 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மூன்று இளம் தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்ற சிங்கள ராணுவத்தினர் அப்பெண்களை தமது முகாமிற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். இப்பெண்களில் ஒருவர் பிந்நாட்களில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

kittu_tg.jpg

சதாசிவம் கிருஸ்ணகுமார்கிட்டு

திருநெல்வேலித் தாக்குதலைத் திட்டமிடும் பொறுப்பினை கிட்டுவிடமும் செல்லக்கிளியிடமுமே பிரபாகரன் ஒப்படைத்திருந்தார். போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்கு ராணுவம் மீது தாக்குதல் ஒன்றினை மேற்கொள்வதே சரியானது என்று பிரபாகரன் உள்ளகக் கலந்துரையாடல்களில் போராளிகளிடம் பேசியிருந்தார். ஆகவே, ராணுவத்தின் இரவு ரோந்து அணி மீது தாக்குதல் நடத்துவதே சீலனின் மரணத்திற்கு தாம் கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும் என்று கிட்டுவும் செல்லக்கிளியும் முடிவெடுத்தனர்.இத்தாக்குதல் மூலம் ஆயுத ரீதியிலான பலமான அமைப்பொன்று உருவாகிவிட்டதை சிங்கள அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உணர்த்த முடியும் என்றும் அவர்கள் நம்பினர்.

வழமையான ராணுவ ரோந்தணி மாலை மங்கும் வேளையில் மாதகல் ராணுவ முகாமிலிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமை வந்தடையும். இந்த ரோந்து அணியில் ஜீப் வண்டி ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் இடம்பெற்றிருந்தன‌.  குருநகர் முகாமில் தமது இரவு உணவை முடித்துக்கொண்ட அதிகாரியும் ராணுவ வீரர்களும் மீண்டும் மாதகல் முகாம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

Walking through Jaffna’s colourful streets - one of the best things to do in Jaffna, Sri Lanka

திருநெல்வேலிச் சந்தி ‍ அண்மைய நாட்களில்

ராணுவ ரோந்து அணி திரும்பிச் செல்லும் பாதையில் அமைந்திருந்த திருநெல்வேலிக் கிராமத்தை கிட்டுவும் செல்லக்கிளியும் தமது தாக்குதலுக்கான இடமாகத் தெரிவுசெய்வதற்கு மூன்று காரணங்கள் இருந்தன.

முதலாவது அதன் அமைவிடம். யாழ்ப்பாண நகரில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அப்பகுதி அமைந்திருந்ததுடன், சனத்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. கட்டடங்களைக் கொண்டிருந்த பகுதியாதலால், மறைந்திருந்து தாக்குவதற்கு உகந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக தாக்குதலை முடித்துக்கொண்டு தப்பிச் செல்வதற்கான பல வழிகளையும் அப்பகுதி தன்னகத்தே கொண்டிருந்தது.

இரண்டாவது நேரம். ராணுவ ரோந்து அணி திருநெல்வேலியை அடையும் நேரம் நள்ளிரவு வேளையை அடைந்திருக்கும். அவ்வேளையில் வீதியில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியே வீதி கணப்படும். 

மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம் வீதியின் அருகில் தோண்டப்பட்டிருந்த அகழிகள் தமது கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பதற்கு புலிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. அப்பகுதியில் அகழிகள் தோண்டப்பட்டிருப்பதை இராணுவத்தினர் அறிந்திருந்தமையினால், அவற்றினைச் சந்தேகம் கொண்டு  சோதிக்கும் எண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை.

அப்பகுதியைப் பார்வையிட்ட பிரபாகரன் மிகுந்த திருப்தியடைந்திருந்தார். இப்பகுதியைத் தெரிவுசெய்தமைக்காக கிட்டுவையும் செல்லக்கிளியையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். தமது தாக்குதலுக்கு மிகச் சரியான இடம் அதுவே என்று அவர்களிடம் பிரபாகரன் கூறினார். செல்லக்கிளி பதுங்கியிருந்து கண்ணிவெடியினை இயக்குவதற்கு உகந்த பாதுகாப்பினை சீமேந்துக் கூரையும், அரைப்பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த சீமேந்துச் சுவரும் அவருக்குக் கொடுத்தன. அவருக்குத் துணையாக அருகே பதுங்கியிருந்த விக்டருக்கும் அப்பகுதி பாதுகாப்பு அளித்தது. கூரையிலிருந்த கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைக் கொடியினுள் கண்ணிவெடிக்கான வயர்களை அவர்களால் முழுமையாக மறைக்கக் கூடியதாக இருந்தது. மேலும், அயல் வீடுகளில் கட்டப்பட்டிருந்த சீமேந்து மதில்களுக்குப் பின்னால் தாக்குதல் அணி மறைந்துகொள்வதற்கான வசதியும் அங்கு காணப்பட்டது.

எனது ஊரான அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்தோசம் என்னுடன் சில வருடங்களுக்குப் பின்னர் பேசும்போது, "தாக்குதல் நடத்தப்பட்டநாளன்று, அதிகாலையிலிருந்தே நாம் அனைவரும் பதட்டத்துடன் இருந்தோம்" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதியே தாக்குதலை நடத்துவதென்று பிரபாகரன் முடிவெடுத்திருந்தார். "அதற்கு முதல்நாள் இரவு என்னால் தூங்க முடியவில்லை. எமது தாக்குதல் வெற்றியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

புலிகள் நடத்திய மூன்றாவது கண்ணிவெடித் தாக்குதலே திருநெல்வேலித் தாக்குதல் என்பதோடு, கண்ணிவெடித்தாக்குதலின் பின்னர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலும் இதுவாகும். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதலை செல்லக்கிளியினால் வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கவில்லை. பொன்னாலைக் கரையோரச் சாலையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் கடற்படையினர் அப்பகுதிக்கு வரமுன்னரே வெடித்திருந்தன.  கண்ணிவெடிகள் வெடித்தபோது கடற்படையினர் ரோந்து அணி சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் வந்துகொண்டிருந்தது. இரண்டாவது தாக்குதலான உமையாள்புரப் பகுதித் தாக்குதலில் கண்ணிவெடித் தாக்குதலுடன், துப்பாக்கித் தாக்குதலும் முதன்முறையாக நடத்தப்பட்டபோது, அதுவும் நேரம் தவறியிருந்தது. ராணுவத்தினரின் ட்ரக் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடிகள் வெடித்துவிட்டன. கண்ணிவெடி வெடிக்கவைக்கப்பட்டதையடுத்து ட்ரக் வண்டியைச் சாரதி நிறுத்திக்கொள்ள, வெளியே பாய்ந்த ராணுவத்தினர் புலிகள் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே ஓடத் தொடங்க, புலிகளும் அப்பகுதியை விட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. புலிகள் எதிர்பாராத விதமாக ராணுவத் தொடரணியொன்று அப்பகுதிக்கு வந்ததனால் ஏற்பட்ட குழப்பத்தில் புலிகளின் அணியிலிருந்த சிலர் தமது காலணிகளையும் விட்டுவிட்டே ஓடியிருந்தனர். ஆகவே, திருநெல்வேலித் தாக்குதல் எப்படியாவது வெற்றியளிக்க வேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் சொல்லிக்கொண்டிருந்தார்.   

ClaymoreMineM18A1.jpg

கிளேமோர்க் குண்டு

அதிகாலையிலேயே துயில்விட்டெழும் பழக்கம் கொண்ட பிரபாகரன் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாளான ஆடி 23 ஆம் திகதி வழமைபோலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். தனக்குத் திருப்தியாகும் வரை செல்லக்கிளியுடனும் விக்டருடனும் தாக்குதல் திட்டத்தை மீண்டும் மீண்டும் பரீட்சித்துச் சரிபார்த்துக்கொண்டார்.

சுமார் இரண்டு மீட்டர்கள் இடைவெளியில் அகழியினுள் கண்ணிவெடிகள் இரண்டினைப் புதைத்த செல்லக்கிளியும், விக்டரும் அவற்றிற்கான மிந்தொடுப்பினை இயக்கியுடன் இணைக்கும் வேலையில் இறங்கினர். கண்ணிவெடிகளையும் , வெளியே தெரிந்த வயர்களளையும் மண்கொண்டு மூடி மறைத்தனர். வயரின் மீதிப்பகுதியை கூரையிலிருந்து நிலம்வரை தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப் பந்தலினுள் லாவகமாக மறைத்துக்கொண்டு கூரையிலிருந்த இயக்கிவரை இழுத்துச் சென்றனர்.பின்னர் கூரையின் மீது ஏறி, மறைப்பாகக் கட்டப்பட்டிருந்த அரைச்சுவரின் பின்னால் பதுங்கிக் கொண்டு ராணுவ ரோந்து அணியின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். பிரபாகரனும் ஏனைய போராளிகளும் வீதியின் இரு மருங்கிலும் இருந்த மதில்களின் பின்னர் நிலையெடுத்து நின்றனர்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

ராணுவ ரோந்து அணியின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். பிரபாகரனும் ஏனைய போராளிகளும்

அதனால்தான் மாபெரும் ஆளுமையாக இந்த உலகு உள்ளவரை படிக்கப்படும் ஒரு படைத்துறை வல்லமையாகவும் எம் தலைவன்.  

ரஞ்சித் அவர்களே நன்றி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இராணுவ ரோந்து  அணி ‍ - நான்கு நான்கு பிராவோ

image_c25630c000.jpg

 

நான்கு நான்கு பிராவோ என்று அழைக்கப்பட்ட ராணுவ ரோந்து அணி மாதகல் முகாமிலிருந்து வழமைபோல கிளம்பியது. இரவு 8 மணியளவில் குருநகர் இராணுவ முகாமை ரோந்து அணி வந்த‌டைந்தது. இலங்கை இலகு காலாட்படையின் முதலாவது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த அந்த அணிக்கு இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தன தலைமைதாங்கினார். சுமார் ஒரு வார காலத்திற்கு முன்னர்தான் அவரது அணி மாதகல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த இராணுவ அணி குருநகர் முகாமை வந்தடைந்ததும் வாஸ் குணவர்த்தனவைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்தின் ராணுவ புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் சரத் முனசிங்க காத்துநின்றார். வாஸ் அங்கு வந்து சேர்ந்ததும், செல்லக்கிளி தலைமையில் ராணுவ ரோந்து அணிமீது யாழ்ப்பாணத்தில், நள்ளிரவிற்குச் சற்றுப்பின் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் தயாராகி வருவதாக தனக்குச் செய்தி கிடைத்திருப்பதாக அவர் கூறினார். புலிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றினைக் கொடுக்க முனசிங்க முடிவெடுத்தார். அதன்படி தன்னுடன் கொமாண்டோ அணியொன்றினை அழைத்துக்கொண்டு யாழ்நகரை ரோந்து சுற்றிவர அவர் தீர்மானித்தார். ஆகவே, வாஸ் குணவர்த்தனவின் ரோந்து அணி வழமைக்கு மாறாகா நள்ளிரவுக்கு முன்னரே யாழ்நகர எல்லையைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்று அவர் பணித்தார். 

1983 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து பலமான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். யாழ் குருநகர் இராணுவ முகாமிலிருந்து இயங்கிவந்த இந்த கூட்டுப் புலநாய்வு அணியினர், போராளி இயக்கங்களிலிருந்து கழன்று வீழ்ந்தவர்களை பணத்தாசை காட்டி தம்முடன் இணைத்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில்  நிறைபோதையில் தடுமாறிக்கொண்டு நின்ற இளைஞர் ஒருவரை முனசிங்க பிடித்துவந்து குருநகர் முகாமில் அடைத்து வைத்திருந்தார். விசாரணைகளின்போது அந்த இளைஞர் முன்னர் புலிகள் அமைப்பில் இணைந்து இயங்கிவந்தவர் என்றும் பின்னர் இயக்கத்திலிருந்து கழன்று வந்திருந்தார் என்பதும் தெரியவந்த‌து.புலிகளின் மூத்த உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்கள் வசித்துவந்த வீடுகள் பற்றிய பல விடயங்களை அவர் அறிந்துவைத்திருந்தார். பிரபாகரன், ராகவன், ராஜன், பேபி சுப்பிரமணியம், ரகு, சங்கர் , பண்டிதர் ஆகியவர்களை அந்த இளைஞர் நன்றாக அறிந்துவைத்திருந்தார். 

அந்த‌ இளைஞரின் பலவீனங்களான மதுபானம் மற்றும் பணம் ஆகியவற்றினைக் கொடுத்து தமது நலன்களுக்காக அவரை இராணுவப் புலநாய்வுத்துறையினர் பாவிக்கத் தொடங்கினர். புலநாய்வுத்துறையால் அவருக்கு "சேவியர்" என்கிற பெயரும் வழங்கப்பட்டது. சீலனின் உடலை யாழ் வைத்தியசாலையில் அடையாளம் காட்டியவரும் அவரே. ஆடி 23 ஆம் திகதி இராணுவ ரோந்து அணிமீது செல்லக்கிளி தலைமையில் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார்கள் என்கிற தகவலை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இதே சேவியர்தான். முனசிங்கவின் தேடுதல் வேட்டைகளின்போது அவருக்கு உதவியாக இருந்த சேவியர், புலிகளின் முக்கியஸ்த்தர்களின் வீடுகளையும் ராணுவத்தினருக்குத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொடுத்து வந்தார். 

புலிகளால் நடத்தப்படவிருப்பதாக தான் அறிந்துகொண்ட தாக்குதல் குறித்து வாஸிடம் கூறிவிட்டு, அவரைத் தன்னுடன் மதுபானம் ஒன்றினை அருந்த வருமாறு முனசிங்க அழைத்தார்.

"மதுபானம் அருந்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்கிற கேள்வியுடன் வாஸ் குணவர்த்தனவை அழைத்தார் முனசிங்க.

"இல்லை, வேண்டாம். நான் இரவு உணவை உட்கொண்டுவிட்டு உடனடியாக மாதகல் முகாம் நோக்கிப் புறப்பட வேண்டும்" என்று வாஸ் பதிலளித்தார்.

பின்னர் வாஸும் அவரது ராணுவ அணியினரும் அவசர அவசரமாக தமது இரவுணவினை குருநகர் முகாமில் முடித்துக்கொண்டனர். பின்னர் முனசிங்கவைப் பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்றார் வாஸ் குணவர்த்தன. தன்னுடன் வைத்திருந்த பிறிஸ்ட்டல் சிகரெட் ஒன்றினை முனசிங்கவிடம் கொடுத்து, அதனைப் பற்றவைத்துவிட்டார் வாஸ். தானும் ஒரு சிகரெட்டினை புகைத்துக்கொண்டே முனசிங்கவுக்கு, "இரவு வணக்கங்கள்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

தான் பயணிக்கும் ஜீப் வண்டியில் வாஸ் ஏறிக்கொள்ள மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் ஜீப்பின் பின் இருக்கைகளில் ஏறி அமர்ந்துகொண்டனர். ஜீப்பை இராணுவச் சாரதி மானதுங்க ஓட்டிச் சென்றார். பின்னால் வந்த இராணுவ ட்ரக்கில் பத்து இராணுவ வீரர்கள் ஏறிக்கொண்டனர். ட்ரக்கினை இராணுவக் கோப்ரல் பெரேரா ஓட்டிவந்தார். குருநகர் முகாமிலிருந்து கிளம்பிய இந்த ரோந்து அணி யாழ்நகர சந்தைப்பகுதியூடாக மெதுவாக ஊர்ந்து சென்று நாகவிகாரையினை அடைந்ததும் சில நிமிடங்கள் அங்கு தரித்து நின்றுவிட்டு பின்னர் நல்லூர், கோப்பாயூடாக உரும்பிராய் நோக்கித் தனது ரோந்தினை ஆரம்பித்தது. உரும்பிராயை அடைந்ததும், வாஸ் குணவர்த்தன குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு தனது அறிக்கையினைத் தாக்கல் செய்தார். 

Jaffna peninsula Tamilnet

"நான்கு நான்கு பிராவோ" என்று ஆரம்பித்த அவரது அறிக்கை, "எல்லாம் சாதாரணமாகவே இருக்கிறது. அமைதியாகக் காணப்படுகிறது. நாங்கள் எமது முகாம் நோக்கிச் செல்கிறோம்" என்று கூறியது.

 அதன்பின்னர் தனது வழமையான முகாம் திரும்பும் பாதையான கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி பின்னர் மாதகல் எனும் ஒழுங்கில் தனது முகாம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.

மளிகைக்கடையின் கூரையின் மேல் பதுங்கியிருந்த செல்லக்கிளியும் விக்டரும் வீதியை மிகுந்த அவதானத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தூரத்தில் வந்துகொண்டிருக்கும் ராணுவ வாகனங்களின் இரைச்சலினை அவர்களால் கேட்க‌ முடிந்தது. சிறிது நேரத்தின் ராணுவ வாகனங்களின் மின்விளக்குகளை அவர்களால் பார்க்க முடிந்தது. செல்லக்கிளி கண்ணிவெடியை இயக்குகம் கருவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் இருந்து சீலன் எடுத்துவந்த நான்கு கண்ணிவெடி இயக்கிகளில் ஒன்றையே செல்லக்கிளி அன்று தன்னுடன் வைத்திருந்தார். சீலன் இறுதியாகப் பங்குபற்றிய தீரமான சம்பவமும் காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளைக் கைப்பற்றிச் சென்றதுதான். சீலன் அன்று எடுத்துவந்திருந்த கண்ணிவெடிகளைப் பாவித்தே சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலை புலிகள் செய்ய முடிவெடுத்திருந்தனர்.

தமது தாக்குதலை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுக்கும் மெல்லிய விசில் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.

sellakili.jpg

கண்ணிவெடியின் இயக்கியை செல்லக்கிளி அழுத்தினார். இரண்டு கண்ணிவெடிகளும் ஒரேநேரத்தில் வெடித்தன. மிகப் பலத்த சத்ததுடன் அவை முளங்கின‌. சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்தவர்களும் அந்த வெடியோசையை அன்றிரவு கேட்டார்கள். குருநகர் முகாமிலிருந்த ராணுவத்தினரும் அந்த வெடியோசையினை மிகத் தெளிவாகக் கேட்டனர்.

முதலாவது கண்ணிவெடி, ஜீப் வண்டி அதன் மேலாகச் செல்லும்போது வெடித்தது. மேலே தூக்கியெறியப்பட்ட ஜீப் வண்டி வீதியின் ஓரத்தில் நொறுங்கி வீழ்ந்தது. இத்தாக்குதல் குறித்து பின்னாட்களில் தமிழ் இதழான தேவியில் பேட்டியளித்த கிட்டு, வெடிப்பின்போது ஜீப் வண்டி ஒரு தென்னைமரத்தின் உயரத்திற்கு மேலே தூக்கி வீசப்பட்டதாகக் கூறியிருந்தார். இரண்டாவது கண்ணிவெடி, ட்ரக் வண்டியிலிருந்து ஒரு சில மீட்டர் தூரத்தில், வண்டியின் முன்னால் வெடித்தது. உடனடியாக ட்ரக் வண்டியை நிறுத்திய சாரதி, கண்ணிவெடியால் உருவாக்கப்பட்ட பள்ளத்தில் அது வீழ்வதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். இரண்டு வெடிப்புக்களும் வீதியில் பாரிய பள்ளங்களை  ஏற்படுத்தியிருந்தன.

ஜீப்பில் பயணம் செய்து வந்த அனைவருமே அதிலிருந்து தூக்கி வீசப்பட்டிருந்தனர். சாரதி மானதுங்கவின் சடலம் வண்டியின் சாரதி இருக்கைக்கு அருகில் வீழ்ந்து கிடந்தது. அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் உடல் வீதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தது. பின்னால் இருந்துவந்த இரு ராணுவ வீரர்களினதும் உடல்களும் வாகனத்தின் பிற்பகுதியில் சிதைந்த நிலையில் காணப்பட்டன. அவர்களது மரணங்கள் வெடிக்கும்போதே நிகழ்ந்துவிட்டன. 

பின்னர் பிரபாகரனும் ஏனைய போராளிகளும் ட்ரக்கில் இருந்த ராணுவத்தினர் மீது வீதியின் இரண்டு பக்கத்திலிருந்தும் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். ட்ரக்கிலிருந்து வெளியே குதித்துத் தப்பிக்க முயன்ற பல ராணுவத்தினர் சூடுபட்டு இறந்து வீழ்ந்தனர்.

யாழ் மாவட்டத் தளபதி பிரிகேடியர் லைல் பல்த்தசாரும், மேஜர் முனசிங்கவும் வெடியோசையினைக் கேட்டனர். இதுகுறித்து பின்னாட்களில் என்னுடன் பேசிய முனசிங்க பின்வருமாறு கூறினார்,

sarath_muna_press.jpg

 

"நான் எனது இரவுணவை முடித்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். உணவு உட்கொள்ளும் மண்டபத்திலிருந்து மிக அருகிலேயே எனது அறை இருந்தது. நான் தூங்குவதற்காக கட்டிலில் அமரும்போது அந்த பாரிய வெடியோசையினைக் கேட்டேன். நல்லூர் கோயில் இருக்கும் திசையிலிருந்தே அந்த வெடியோசை கேட்டது. அப்போது இரவு 11:20 ஆகியிருக்கும். நான் அவசர அவசரமாகக் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். எனது அறையின் யன்னலில் தட்டி உடனடியாக என்னை வெளியில் வருமாறு தளபதி பல்த்தசார் அழைத்தார். நாங்கள் இருவரும் ரேடியோ அறைக்கு ஓடிச் சென்றோம். ரோந்தில் ஈடுபட்டிருந்த ராணுவ அணியுடன் தொடர்பினை ஏற்படுத்த நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அப்பக்கத்திலிருந்து எவருமே எமது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை".

"புலிகளுக்கெதிரான நள்ளிரவு நடவடிக்கை ஒன்றிற்காக‌ நாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த ஜீப் வண்டியொன்றில் நாம் ஏறிக்கொண்டோம். நான் அதனை ஓட்டிச் செல்ல, பல்த்தசார் எனக்கருகில் தாவி ஏறிக்கொண்டார். சில கொமாண்டொ வீரர்களும் எமது ஜீப்பின் பின்புறத்தில் ஏறிக்கொண்டார்கள். எம்மைப் பின்தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இராணுவ வாகனங்களும் அவற்றின் பின்னால் உயர் பொலீஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஜீப் ரக வாகனமும் விரைந்து வந்துகொண்டிருந்தன. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நான் அசுர கதியில் எனது ஜீப்பைச் செலுத்திக்கொண்டு போனேன். திருநெல்வேலிச் சந்தியை அண்மிக்கும்போது ராணுவ ஜீப்வண்டியொன்று ஒரு பக்கமாக வீழ்ந்த நிலையில் நொறுங்கிப் போயிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்.

Edited by ரஞ்சித்
spelling
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 22/6/2023 at 22:25, ரஞ்சித் said:

காலம்தான் வேறு, ஆனால் அவர்களின் செயலோ ஒரேவகையானவை.

தங்கள் நேரத்திற்கும் முயற்சிக்கும் நன்றி. யூலை (1983) இன அழிப்புக்காலத்தில் பொருத்தமான பதிவாக உள்ளது. 
                                       இன்றும் தொடரும் அவலமாக நடந்தேறுகிறது. யூலையில் யே.ஆரால் திட்டமிடப்பட்டிருந்த இனஅழிப்புக்கான திட்டங்களை(இந்தப்பதிவிலே சுட்டியவாறு)தமிழினம் எதிர்கொள்ள முடியாதநிலை அன்றுமட்டுமல்ல, இன்றும் இருக்கின்ற ஆட்சியாளரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவரும் இன அழிப்பை இதுவரையான பட்டறிவின்பாற்பட்டுத் தமிழ்த் தலைமைகள் சிந்திக்கமறுப்பதேன்? ஒரு தலைவரும் ஒரு உறுப்பினரும் கொண்ட கட்சிகளாகவும், வெற்றுக்காட்சிகளாகவும், வெறும் அறிக்கைகளாகவும் தொடர்வதேன்? சாதாரணமானவர்கள் செய்கின்ற தொண்டில் ஒரு துகளளாவது இந்த அரசியல்வாதிகள் செய்கிறார்களா?  

Edited by nochchi
திருத்தம்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:

தங்கள் நேரத்திற்கும் முயற்சிக்கும் நன்றி. யூலை (1983) இன அழிப்புக்காலத்தில் பொருத்தமான பதிவாக உள்ளது. 
                                       இன்றும் தொடரும் அவலமாக நடந்தேறுகிறது. யூலையில் யே.ஆரால் திட்டமிடப்பட்டிருந்த இனஅழிப்புக்கான திட்டங்களை(இந்தப்பதிவிலே சுட்டியவாறு)தமிழினம் எதிர்கொள்ள முடியாதநிலை அன்றுமட்டுமல்ல, இன்றும் இருக்கின்ற ஆட்சியாளரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவரும் இன அழிப்பை இதுவரையான பட்டறிவின்பாற்பட்டுத் தமிழ்த் தலைமைகள் சிந்திக்கமறுப்பதேன்? ஒரு தலைவரும் ஒரு உறுப்பினரும் கொண்ட கட்சிகளாகவும், வெற்றுக்காட்சிகளாகவும், வெறும் அறிக்கைகளாகவும் தொடர்வதேன்? சாதாரணமானவர்கள் செய்கின்ற தொண்டில் ஒரு துகளளாவது இந்த அரசியல்வாதிகள் செய்கிறார்களா?  

இதற்கான எனது ஒற்றைப்பதில் பாராளுமன்ற ஜனநாயக அரசியனூடாக ஒரு துரும்பைத்தன்னும் இன்றிருக்கும் அரசியல்வாதிகளால் அசைக்க முடியாது என்பதுதான். செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் செய்யாத பாராளுமன்ற ஜனநாயக அரசியலையா இவர்கள் செய்யப்போகிறார்கள்?

எமது விடுதலைக்கான ஒரே வழி எமது கைகளில் அதிகாரம் வருவதுதான். சுமார் 26 வருடங்கள் எம்மால் எமது தாயகத்தை ஆள முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். அத்துடன் ஆக்கிரமிப்பையும் சிங்கள மயமாக்கலையும் எட்டத்தில் வைத்திருக்கவும் எம்மால் முடிந்தது. இன்று என்ன நடக்கிறது?

எமது பலத்தினால் கிடைக்கும் அதிகாரத்தினால் அன்றி சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை எம்மால் தடுக்க முடியாது.

எமது இருப்பை தக்கவைக்க இதுவரை நாம் மேற்கொண்ட போராட்ட வழிகளில் எது வெற்றியளித்ததோ அல்லது எமக்கான வெற்றிக்கான‌ வழியினைக் காட்டியதோ, அதேவழியில் நாம் மீளவும் பயணிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, ரஞ்சித் said:

எமது விடுதலைக்கான ஒரே வழி எமது கைகளில் அதிகாரம் வருவதுதான். சுமார் 26 வருடங்கள் எம்மால் எமது தாயகத்தை ஆள முடியும்

எப்படியான தீர்வு என்று உங்களுக்கு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படியான தீர்வு என்று உங்களுக்கு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?

என்னிடம் இல்லை. ஆனால் எமது சமூகத்தின் முன்னால் இருக்கிறது. அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயக அரசியலை விட்டு வெளியேறி வெகுஜன போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். அவையும் நசுக்கப்பட்டால் ஆயுதப் போராட்டம் ஒன்று மீளவும் உருவாவதை எவராலும்  தவிர்க்க முடியாதிருக்கும். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செல்லக்கிளியின் வீரமரணம்

 Lt-Sellakkili-723x1024.jpg?resize=1400%2C9999

முனசிங்கவும் அவரது ராணுவமும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை அண்மித்தபோது புலிகள் அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தார்கள். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் ஆயுதங்களும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. புலிகளைப்பொறுத்தவரை அது ஒரு வெற்றி அணிவகுப்பு. பிரபாகரன் முன்னே செல்ல, மற்றையவர்கள் ஒற்றை நிரலில் அவரைப் பிந்தொடர்ந்து சென்றார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கிச் சென்று பின்னர் வலதுபுறம் திரும்பி தமது மினிபஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். 

பிரபாகரனும் அவரது போராளிகளும் இத்தாக்குதலை தாம் பரீட்சித்துப் பார்த்ததைப் போன்றே மிகவும் நேர்த்தியாக நடத்தி முடித்திருந்தார்கள். ஓவொருவரும் தமக்கு வழங்கப்பட்ட பணியினை திறம்படச் செயற்படுத்தியிருந்தார்கள். தாக்குதல் முடிந்தவுடன் தமது நேரத்தை விரயமாக்க அவர்கள் விரும்பவில்லை. அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுவதே அவர்களின் எண்ணம். தாக்கப்பட்ட தமது ராணுவ அணியைத் தேடி மேலதிக ராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதிக்கு வருவார்கள் என்பதும், புலிகள் தப்பிச் செல்லக்கூடிய வழிகள் அனைத்தையும் அவர்கள் தடுக்க முனைவார்கள் என்பதும் புலிகள் அறியாதது அல்ல. 

மினிபஸ்ஸில் ஏறுவதற்கு முன்னர் தாக்குதலில் பங்குகொண்ட அனைத்துப் போராளிகளுக்கும் பிரபாகரன் நன்றி கூறினார். தாக்குதலின் வெற்றி பிரபாகரனுக்கு மிகுந்த மனநிறைவினைத் தந்திருந்தது. அவர் உற்சாகமாகவும், உணர்வு மேலீட்டும் காணப்பட்டார். செல்லக்கிளியின் துணிகரச் செயலுக்காகவும், கண்ணிவெடிகளை இலக்குத் தவறாது இயக்கியமைக்காகவும்  அவரின் பெயரை உச்சரித்து பிரபாகரன் பாராட்டிக்கொண்டிருந்தபோது , செல்லக்கிளி அங்கே இல்லையென்பதை கிட்டு உணர்ந்துகொண்டார்.

"செல்லக்கிளி அண்ணா எங்கே?" என்று கிட்டு ஆதங்கத்துடன் கத்தினார். 

மற்றைய எல்லோரைக் காட்டிலும் செல்லக்கிளி வயதில் மூத்தவர். அவரை போராளிகள் எல்லோரும் மிகுந்த மரியாதையுடனேயே நடத்தி வந்தனர். அவர் அண்ணை என்றே எல்லாராலும் அழைக்கப்பட்டு வந்தார். 

ஆனால், அவர் அங்கே இருக்கவில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட மளிகைக் கடை நோக்கி விக்டர் ஓடினார். கூரையின் மீது அவர் ஏறிப் பார்த்தபோது செல்லக்கிளியின் உடலை அவர் கண்டார். அவரது நெஞ்சுப்பகுதியைக் குண்டொன்று துளைத்துச் சென்றிருந்தது. செல்லக்கிளி இரத்த வெள்ளத்தில் உயிர்பிரிந்து கிடந்தார்.

இது எப்படி நடந்தது? எவருக்கும் தெரிந்திருக்கவில்லை, சில அனுமானங்களைத் தவிர.

இராணுவ ட்ரக் வண்டி சடுதியாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்த ராணுவ வீரர்கள் வெளியே குதித்தபோது பெரும்பாலானோர் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பெரும்பாலான இராணுவ வீரர்களின் தலையிலேயே புலிகளின் சன்னங்கள் பாய்ந்திருந்தன.ஆனால், ஒரு ராணுவ வீரர் மட்டும் ட்ரக்கின் பின்னால் ஒளிந்துகொண்டு நாலாபுறம் நோக்கியும் துப்பாக்கியினால் சரமாரியாகச் சுட்டிருக்கிறார். தமது தாக்குதல் முடிந்துவிட்டது, இராணுவத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று எண்ணிய செல்லக்கிளி அதுவரை தான் ஒளிந்திருந்த சீமேந்துச் சுவரின் பின்னாலிருந்து எழுந்திருந்த வேளை, ட்ரக்கின் பின்னால் பதுங்கியிருந்த இராணுவ வீரனின் சூடு பட்டு அவ்விடத்திலேயே இறந்திருக்கிறார். 

செல்லக்கிளியின் உடலைத் தூக்கித் தனது தோளில் போட்டுக்கொண்ட விக்டர், அவரைச் சுமந்துகொண்டு மினிபஸ் நோக்கி ஓடினார். இந்தச் சம்பவம் குறித்து சந்தோசம் என்னிடம் பின்வருமாறு விபரித்தார்.

"செல்லக்கிளியின் உடலைச் சுமந்துகொண்டு விக்டர் மினிபஸ்ஸை வந்தடைந்த போது நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். செல்லக்கிளியின் மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்துகொண்டிருந்தது. விக்டரின் சீருடை முழுவதும் இரத்தத்தில் தோய்ந்திருந்தது".

"அந்தச் சூழ்நிலை மிகவும் வேதனை மிகுந்திருந்தது. அதுவரை அங்கு நிலவிய வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் செல்லக்கிளியின் மறைவு முற்றாக மாற்றிப் போட்டது. அனைவரினதும் முகங்களில் இருந்த மகிழ்ச்சி முற்றாகப் போயிருந்தது. பிரபாகரன் மெளனமானார். அவரைப்போலவே எல்லோர் முகத்திலும் சோகமும் மெளனமும் குடிகொண்டன‌.  விக்டர் செல்லக்கிளியின் உடலை மினிபஸ்ஸின் பின் இருக்கைக்குக் கொண்டு சென்றார். பின்னிருக்கையில் அவரை மெதுவாகக் கிடத்திய விக்டர், செல்லக்கிளியின் கண்களை மூடிவிட்டார். தாம் கைப்பற்றிய ஆயுதங்களை எல்லோரும் செல்லக்கிளியின் பாதங்களுக்கு அருகில், மினிபஸ்ஸின் தரையில் அடுக்கினர். வீரச்சவடைந்த வீரனுக்கு அவர்கள் கொடுக்கும் இறுதி வணக்கமாக அது அமைந்தது. அந்த நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமானது" என்று சந்தோசம் கூறினார்.  

SellakilliMemorial2003.jpg

செல்லக்கிளி நினைவாலயம் திருநெல்வேலி - 2003.

மெதுவாக மழை தூறத் தொடங்கவே, மினிபஸ் அச்சுவேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடம் நோக்கி வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. பிரபாகரனே முதலாவதாக மினிபஸ்ஸிலிருந்து இறங்கினார். அவரது பாதம் தரையைத் தொட்டதும் அவர் அழத் தொடங்கினார். ஏனையவர்களும் அவரோடு இணைந்துகொண்டனர். அதுவரை தாம் அடக்கிவைத்திருந்த சோகமெல்லாம் பீறிட்டுவர அவர்கள் அழுதார்கள். தமிழ் பத்திரிக்கைகள் சிலவற்றில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கிட்டு பின்னாட்களில் பேசியிருந்தார். பிரபாகரன் மனமுடைந்து அழுததை அப்போதுதான் தான் முதன்முதலில் பார்த்ததாக அவர் கூறியிருந்தார்.

செல்லக்கிளியின் இழப்பென்பது புலிகளைப் பொறுத்தவரையில் வெறும் 9 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது மிகப்பெரிய இழப்பாகக் கருதப்பட்டது. சீலன் ஆடி 15 இலேயே உயிர்துறந்திருக்க இப்போது செல்லக்கிளி ஆடி 23 இல் வீரச்சாவடைந்திருந்தார். சீலன் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். செல்லக்கிளியோ சீலனுக்கு அடுத்த நிலையில் இயக்கத்தில் இருந்தவர். செல்லக்கிளியின் இயற்பெயர் சதாசிவம் செல்வநாயகம். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த பழம்பெரும் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

முனசிங்கவையும் ஏனைய ராணுவ அதிகாரிகளையும் பொறுத்தவரை தாம் திருநெல்வேலியில் கண்ட கோரமான காட்சி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உருக்குலைந்திருந்த இராணுவ வாகனங்களைச் சுற்றி பன்னிரண்டு இராணுவ வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. மூன்று உடல்கள் ஜீப்பின் அருகில் கிடந்தன. நான்காவது உடல் வீதியிலிருந்து சற்றுத் தொலைவில் தூக்கி வீசப்பட்டிருந்தது. அந்த உடல் தளபதி வாஸ் குணவர்த்தனவினதாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவ்வுடலின் முகத்தைத் திருப்பினார் முனசிங்க, அது வாஸினதுதான். வாஸின் வலது காதின் அருகில் குண்டு வெடிப்பால் ஏற்பட்ட ஓட்டையொன்று தெரிந்தது. அவர் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் பிறிஸ்ட்டல் சிகரெட் பக்கெட்டும் லயிட்டரும் ஜீப்பினுள் கிடந்தன. ஜீப்பிலிருந்து சுமார் 25 மீட்டர்கள் தூரத்தில் ட்ரக் நின்றிருந்தது. எட்டு உடல்கள் ட்ரக்கைச் சுற்றி வீழ்ந்துகிடந்தன.

ட்ரக்கின் அடியிலிருந்து ராணுவ வீரர் ஒருவர் முனகுவதை அவர்கள் கேட்டனர். அங்கு வந்திருந்த இராணுவ வீரர்கள் அவரை வெளியே இழுத்து எடுத்தபோது அவரது கை ஒன்றும் காலும் முறிந்த நிலையில் கிடந்ததை அவதானித்தனர். அவர் சார்ஜன்ட் திகலரட்ண. யாழ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அவரும் இறந்துபோனார்.

சிறிது நேரத்தின் பின்னர் அருகிலிருந்த வீடொன்றின் தோட்டத்தில் பதுங்கியிருந்த இன்னொரு ராணுவ வீரர் கால்கள் காயப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்துடன் ராணுவ வீரர்களை நோக்கி நடந்துவந்தார். ட்ரக்கிலிருந்து ஏனைய ராணுவத்தினருடன் தானும் குதித்ததாகவும், ஆனால் அருகிலிருந்த வீட்டின் கூரையில் உடனடியாக ஏறிக்கொண்டு, புலிகள் மேல் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் ராணுவ அதிகாரிகளிடம் கூறினார், ஆனால் அவரின் விபரிப்பினை எவரும் நம்பவில்லை.

புலிகளின் கடுமையான தாக்குதலில் இருந்து கோப்ரல் பெரேராவும் உயிர்தப்பியிருந்தார். கால்களில் காயம்பட்ட நிலையிலும் கோண்டாவிலில் அமைந்திருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய தலைமையகத்திற்குச் சென்று அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தமது இராணுவ அணிக்கு நடந்த விபரீதத்தை கூறினார். ஆனால், பெரேரா கோண்டாவிலில் இருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முன்னரே முனசிங்கவும் பல்த்தசாரும் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்துவிட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட ஒரு அதிகாரி உட்பட பன்னிரு ராணுவத்தினரின் உடல்களை முனசிங்கவும் பல்த்தசாரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் சேதமடைந்திருந்த இராணுவத்தினரின் ஜீப் வண்டியையும் ட்ரக்கையும் குருநகர் முகாமுக்கு இழுத்துச் சென்றனர். தாக்குதல் நடந்த இடத்தை மறித்து, சுற்றிவரத் தடைகளை ஏற்படுத்திவிட்டு முகாம் நோக்கிச் சென்றனர்.

திருநெல்வேலித் தாக்குதல் இலங்கையின் சரித்திரத்தை மாற்றிவிட்டது. இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தின் பாதையினை அது மாற்றிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் குணவியல்பையும் அது மாற்றிப்போட்டது. அது தமிழீழ விடுதலைப் புலிகளை  போராட்டத்தின் முகப்பு நோக்கி முன்னோக்கித் தள்ளியிருந்தது.

Prabhakaran

 

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணப் படுகொலைகள்

இராணுவத்தினரின் பொதுவான மரணச்சடங்கு கொழும்பில் நடப்பதை எதிர்த்த அதிகாரிகள், பிடிவாதமாக நின்ற ஜெயார்

corbis2.jpg
 

தாக்குதலினால் நிலைகுலைந்துபோன யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாரும் ஏனைய இராணுவ அதிகாரிகளும் திருநெல்வேலியிலிருந்து குருநகர் முகாம் திரும்பியவுடன் அவசரக் கூட்டம் ஒன்றினை நடத்தினர். இதேவேளை, 13 இராணுவத்தினர் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி குருநகர் ரேடியோ அறையிலிருந்து கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டது.  முதலாவதாக பலாலியிலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் பல்த்தசாருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. கொழும்பு ராணுவத் தலைமையகத்திலிருந்து ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவுக்கு தாக்குதல் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாருடன் பேசினார்.

"நான் ஜனாதிபதிக்கு உடனடியாக இதுபற்றி அறிவிக்க வேண்டும், இது ஒரு மிகப் பாரதூரமான சம்பவம்" என்று அதிர்ச்சியடைந்த நிலையில் ராணுவத் தளபதி யாழ்ப்பாணத் தளபதியிடம் கூறினார்.

பின்னர் திஸ்ஸ வீரதுங்க ஜனாதிபதியை எழுப்பினார். தான் திருநெல்வேலித் தாக்குதல் குறித்து ஜெயாருக்குச் சொன்னபோது அவர் மிகுந்த கோபம் அடைந்ததாக தனது அதிகாரிகளுடன் பேசும்போது திஸ்ஸ வீரதுங்க கூறியிருந்தார். "நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என்று ஜயவர்த்தன ஆவேசத்துடன் கூறினார். காலை விடிந்தவுடன் தன்னை வந்து சந்திக்குமாறு ஜெயார் வீரதுங்கவைப் பணித்தார்.

குருநகரில் நடந்த கூட்டத்தில் மூன்று முக்கிய விடயங்கள் இராணுவ அதிகாரிகளால் ஆரயாப்பட்டிருந்தன. தாக்குதலினால் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்களை சரியான வகையில் பராமரித்தல் மற்றும் யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் என்பனவே அவையாகும்.

WeerathungaLt.GenT_.jpg

 லெப்டினன்ட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க (காளை மாட்டு வீரதுங்க)

உருவாகியிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல் என்பதற்குள் கண்ணிவெடித் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பிப்பதும் அடங்கியிருந்தது. முனசிங்கவும் அவரது ராணுவ புலநாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் அடுக்கப்பட்டிருந்தன. கொழும்பில் இயங்கிவந்த இறந்தவர்களை தூய்மைப்படுத்தி அலங்கரித்து உறவினர்களிடம் கையளிக்கும் . எப். ரேமண்ட் எனும் தனியார் நிறுவனத்திடம் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை தயார்ப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது. யாழ்நகருக்கான பாதுகாப்பிற்கென்று மேலதிக இராணுவப் பிரிவுகள் கடமையில் அமர்த்தப்பட்டன. 

மறுநாள் காலை, வோர்ட் பிளேசில் அமைந்திருக்கும் ஜெயாரின் பிரத்தியேக வாசஸ்த்தலத்தில் அதியுயர் பாதுகாப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. "என்ன நடந்தது?" என்று ஜெயார் இராணுவத் தளபதி வீரதுங்கவைப் பார்த்துக் கேட்டார்.அவரிடம் பதில் இருக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு தமிழ்ப் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டதாக பிரகடனம் செய்த இராணுவ அதிகாரியும் இதே வீரதுங்கதான். இப்பிரகடனத்தைச் சிறப்பிக்க பாரிய களியாட்ட நிகழ்வொன்றினையும் வீரதுங்க நடத்தியதுடன், ஜனாதிபதி ஜெயாரையும் அதற்கு அழைத்திருந்தார்.  

அன்று வோர்ட் பிளேசில் நடந்த கூட்டத்தில் பங்குகொண்ட இராணுவ அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில் கூட்டம் முழுவதிலும் ஜெயார் கடுங் கோபம் கொண்டு காணப்பட்டதாகக் கூறினார். "இது உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும், நாம் இதனை இப்படியே நடப்பதற்கு அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது" என்று மீண்டும் மீண்டும் ஜெயார் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர் இப்படிக் கூறியபோது அங்கிருந்த அனைவருக்கும் அவர் ஏதோ ஒரு விடயத்தை மனதில் வைத்தே இதனைக் கூறுகிறார் என்பது தெரிந்தது.

கூட்டத்தின் முடிவில் இரு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முதலாவது விடயம் ராணுவத் தளபதி வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது. இரண்டாவது கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களுக்கும் கொழும்பில் அமைந்திருக்கும் பொது மயானமான பொரள்ளை கனத்தையில் பூரண இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது.

கொழும்பில் பூரண இராணுவ மரியாதைகளுடன் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் மரணச் சடங்கினை நடத்துவதென்பது ஜெயாரினால் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் இராணுவ மரியாதையுடன் சடங்குகள் நடப்பதே வழமையாக இருந்து வந்தது, ஆகவே ராணுவத் தளபதி இம்முறையும் அவ்வாறே செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். இக்கூட்டத்தில் பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் பங்குகொண்டிருக்கவில்லை, ஆகவே அவர் சார்பாக வேறு இரண்டு பொலீஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களும் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைப்பதே சரியானது என்று கூறினர். 13 இராணுவத்தினருக்கும் ஒரே நேரத்தில் கொழும்பில் மரணச் சடங்கினை நடத்தும்போது அச்ம்பாவிதங்கள் நேரலாம் என்று அந்த பொலீஸ் அதிகாரிகள் தமது அச்சத்தைத் தெரியப்படுத்தினர். பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் பொலீஸார் கூறிய காரணத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறு செய்வதே சரியானது என்று கூறினர். அனால், இவர்கள் எவரினதும் கருத்துக்களையும் செவிமடுக்கும் நிலையில் ஜெயார் இருக்கவில்லை. கொல்லப்பட்ட 133 இராணுவத்தினருக்கும் கொழும்பிலேயே கூட்டு மரணச் சடங்கினை நடத்துவதென்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததுடன், "13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது சாதாரண விடயமல்ல, அவர்களுக்கு பூரண இராணுவ மரியாதைகளுடன் தகுந்த முறையில் வழியனுப்பி வைப்பதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் சரியான வணக்கமாகும்" என்று காட்டமாகக் கூறினார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராணுவத்தினரால் பரிமாறப்பட்ட ரேடியோத் தகவல்கள்

 

ஆடி 24 ஆம் நாள் பலாலிக்குச் சென்ற இராணுவத் தளபதி வீரதுங்க அங்கிருந்து உலங்குவானூர்தி ஒன்றின்மூலம் குருநகர் இராணுவ முகாமிற்குச் சென்றார். அவர் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே யாழ்ப்பாணத்தில் படுகொலைகள் அரங்கேறத் தொடங்கியிருந்தன. அன்று பிற்பகல் கவலையளிக்கும் சில ரேடியோத் தகவல்கள் பலாலி இராணுவப் படைத்தளத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன.

இந்த ரேடியோத் தகவல்கள் இரண்டினைப்பற்றி தனது "ஒரு ராணுவ வீரனின் நாட்குறிப்பு" எனும் புத்தகத்தில் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார்.

"மாதகல் முகாமிலிருந்தும், வல்வெட்டித்துறை முகாமிலிருந்தும் கிளம்பிச் சென்ற இராணுவ வீரர்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்" என்று முதலாவது செய்திபற்றி அவரது புத்தகம் கூறுகிறது.

அவரது இரண்டாவது ரேடியோத் தகவல் பின்வருமாறு கூறுகிறது, "டிரக் நிரம்பிய ராணுவ வீரர்கள் பலாலி இராணுவத் தளத்திலிருந்து கிளம்பி யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுக்க போடப்பட்டிருந்த தடைகளையும் உடைத்துக்கொண்டு அவர்கள் செல்கிறார்கள்".

ராணுவத் தளபதி குருநகரில் இறங்கியவேளையிலேயே இராணுவத்தினரின் அட்டூழியங்கள் ஆரம்பித்தன. யாழ்நகரே இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு எரிந்துகொண்டிருக்க, அம்மாவட்டத்தின் அனைத்து இராணுவ அதிகாரிகளும் திஸ்ஸ வீரதுங்கவை வரவேற்க குருநகர் முகாமிற்கு சமூகமளித்திருந்தனர்.

குருநகர் முகாமில் நடத்தப்பட்ட மாநாட்டினை திஸ்ஸ வீரதுங்க தலைமை தாங்க, யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசார் புலிகளின் தாக்குதல் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கமளித்தார்.கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் விடயங்களைக் கூறிய பல்த்தசார், ராணுவ வீரர்களின் சடலங்களை கொழும்பிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் தான் எடுத்திருப்பதாகவும் கூறினார். பலாலி ராணுவத் தளத்திலிருந்து வந்துகொண்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்த ரேடியோத் தகவல்கள் பற்றியும் வீரதுங்கவுக்குக் கூறப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் இராணுவ அதிகாரிகளிடம் பேசிய வீரதுங்க தனது முதலாவது கவலை கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சடலங்களைப் பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்பிவைப்பதுதான் என்று கூறினார். அவரிடம் பேசிய பல்த்தசார் 10 சடலங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஏனைய மூன்று சடலங்களும் சற்று உருக்குலைந்த நிலையிலும் இருப்பதாக கூறினார். ஜீப்பில் பயணம் செய்த இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தனவும், பின்னால் அமர்ந்து பயணித்த இரு ராணுவ வீரர்களும் கண்ணிவெடித்தாக்குதலில் நேரடித் தாக்கத்திற்கு உள்ளானதாக அவர் கூறினார்.மேலும், விமானம் மூலம் இவ்வுடல்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், உறவினர்கள் ரேமண்ட் மலர்ச்சாலைக்குச்  சென்று தமது ராணுவ வீரர்களை உடுத்த வேண்டிய உடைகளைக் கையளித்தால், தாம் அவர்களைத் தயார் செய்ய முடியும் என்று பொலீஸார் ஊடாகச் செய்தியனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.  யாழ் வைத்தியசாலையில் இருந்த அதிகாரிகள் என்னுடன் பேசும்போது உடல்களில் எவையுமே உருக்குலைந்த நிலையில் இருக்கவில்லையென்றும், அவர்கள் யாருடையவை என்று அடையாளம் காண்பதில் தமக்குச் சிரமம் இருக்கவில்லையென்றும் கூறினர். மேலும், வெடிப்பில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சடலம் என்று பலராலும் கூறப்பட்ட வாஸ் குணவர்த்தனவின் சடலத்தை முனசிங்க மிக இலகுவாகவே தாக்குதல் நடந்த இடத்தில் அடையாளம் கண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பல்த்தசார் திறமையாகச் செயற்பட்டு பல விடயங்களை செய்திருப்பதாக திஸ்ஸ வீரதுங்க பாராட்டியிருந்தார்.

குருநகர் முகாமிலிருந்து மாலை 5 மணியளவில் கிளம்ப ஆயத்தமானார் வீரதுங்க. தன்னை வழியனுப்ப உலக்குவானூர்தி மேடைக்கு வந்த அதிகாரிகளிடம் பேசிய அவர், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு முழு இராணுவ மாரியாதை கொடுக்க ஜெயார் விரும்புவதாகக் கூறினார். மேலும், கொழும்பு பொரள்ளை கனத்தையில் அவர்களை அனைவரையும் புதைத்து, அவர்களுக்கென்று நினைவுத் தூபியொன்றினையும் நிறுவ ஜெயார் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், ராணுவத்தினரின் உடல்கள் கொழும்பு கொண்டுசெல்லப்படும்போது, தானும் அவற்றுடன் செல்லவேண்டும் என்றும் வீரதுங்க கூறினார். ஆனால் கிளம்பிச் சென்ற 30 நிமிடங்களில் திரும்பி வந்தார் வீரதுங்க. அவர் திரும்பி வந்ததையடுத்து அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரை வரவேற்க மீண்டும் உலங்குவானூர்தி மேடைக்கு அரக்கப் பறக்க ஓடிச்சென்றனர். அவர்களிடம் பேசிய வீர்துங்க தான் பயணித்த உலங்குபானூர்தியின் தொலைபேசியில் அரசாங்க உயர்பீடத்துடன் தான் உரையாடியதாகவும், அதன்படி, அன்றிரவு தன்னை யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிடுமாறு ஜெயார் பணித்ததாகவும் கூறினார்.

பலாலி ராணுவத் தளத்தினூடாக வீரதுங்கவை அவசர அவசரமாக தொடர்புகொள்ள பலமுறை முயன்றதாகவும், ஈற்றில் வானூர்தியில் பயணித்தபோது அவருடன் தொடர்பினை கொழும்பிலிருந்தவர்க‌ள் ஏற்படுத்திக்கொண்டதாகவும் அத்தொடர்பினை ஏற்படுத்திய அதிகாரி கூறினார்.

வீரதுங்கதிருப்பி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது ஏன்? எனக்குத் தெரிந்த அதிகாரிகளிடமிருந்து இதற்கான பதிலை நான் தேட ஆரம்பித்தேன். எனக்குச் சொல்லப்பட்ட ஒரே காரணம் வீரதுங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இராணுவ வீரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஜெயார் பணித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இக்காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வீரதுங்க பாதி வழியில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிவந்து மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் ஒருவருக்கு அவர் இராணுவ வீரர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக வரவில்லை என்பது தெளிவாகவே புரியும். அவரது செயற்பாடுகளைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவரின் மீள்வருகையின் காரணத்தை தெளிவாக எடுத்தியம்பின.  

யாழ்ப்பாண குருநகர் ராணுவ முகாமுக்குத் திரும்பிய வீரதுங்க செய்தது என்ன?

வீரதுங்கவின் செயற்பாடுகளை முனசிங்க தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

"தூக்கமற்ற இரவுகளால் நாம் அனைவரும் மிகவும் களைப்படைந்திருந்தோம். அப்படியிருந்தபோதும், நாம் அனைவரும், குறிப்பாக மூத்த இராணுவ அதிகாரிகள் அனைவரும் ராணுவ முகாமின் உணவு விடுதியில் ஆடி 24 ஆம் திகதி மாலை கூடியிருந்தோம். மது அருந்துவதற்காக திஸ்ஸ வீரதுங்கவும் எம்முடன் இணைந்து கொண்டார். இனிமேல் நடக்கவேண்டிய விடயங்கள் குறித்து நாம் கலந்துரையாடினோம். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து வந்த பணிப்புரைகளின்படி இராணுவாத்தினரை விளிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் இராணுவத்தினரின் ஒழுக்கம் குறித்து கண்டிப்புடன் நடந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டிருந்தது". 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ரஞ்சித் said:

இந்த ரேடியோத் தகவல்கள் இரண்டினைப்பற்றி தனது "ஒரு ராணுவ வீரனின் நாட்குறிப்பு" எனும் புத்தகத்தில் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார்.

"மாதகல் முகாமிலிருந்தும், வல்வெட்டித்துறை முகாமிலிருந்தும் கிளம்பிச் சென்ற இராணுவ வீரர்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்" என்று முதலாவது செய்திபற்றி அவரது புத்தகம் கூறுகிறது.

அவரது இரண்டாவது ரேடியோத் தகவல் பின்வருமாறு கூறுகிறது, "டிரக் நிரம்பிய ராணுவ வீரர்கள் பலாலி இராணுவத் தளத்திலிருந்து கிளம்பி யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுக்க போடப்பட்டிருந்த தடைகளையும் உடைத்துக்கொண்டு அவர்கள் செல்கிறார்கள்".

ரஞ்சித் அவர்களே நன்றி, தொடருங்கள். ஆட்சிகள், அதாவது ஆளும் தரப்புகள் மாறினாலும் எப்படிச் சிங்களம் திட்டமிட்டு இன அழிப்பை ஒரு நிரலாகவும், தெளிவாகவும் செய்துவருகிறது. சமகாலத்தில் வேறுநாடுகளில் நடைபெற்ற இன அழிப்பக்குத் தண்டனை, தீர்வு என்று நிலைமை முன்னேறிச் செல்ல நாமேன் பின்தள்ளப்படுகின்றோம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராணுவத் தளபதியின் சீற்றம்

General_Tissa_Weerathunga.webp

 

"ராணுவத் தளபதி வீரதுங்கவுக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் கொழும்பிலிருந்து வந்திருந்தன.அவற்றுள்  ஒன்று பாதுகாப்புச் செயலாளரிடமிருந்தும் இன்னொன்று ஜனாதிபதியிடமிருந்தும் வந்திருந்தன. கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி அவர் பேசுவது எங்களுக்குப் புரிந்தது. தனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளிடம் மரணச் சடங்குகள் நடைபெறவேண்டிய விதம் குறித்த பணிப்புரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின்னர் அவர் மிகுந்த சீற்றத்துடன் யாரிடமோ பேசுவது கேட்டது. "எனது நாயைக்கூட யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ நான் புதைக்கமாட்டேன்" என்று அவர் ஆவேசமாகக் கூறினார். கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டிலிருந்தே அவர் அவ்வாறு பேசினார்".

 

"பின்னர் எம்முடன் பேசிய அவர், அரச அதிகாரிகள் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை யாழ்ப்பாணாத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்தோ அல்லது புதைத்துவிடும்படி" தன்னிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

Lt_Gen_Attygalle.jpg

சேபால ஆட்டிகல

கொழும்பு கனத்தை மயானத்திற்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து, அரசாங்கத்திற்கெதிரான சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்து வருவது கண்டு, மீண்டும் அலுவலகம் திரும்பியிருந்த பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவே உடல்களை யாழ்ப்பாணத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்து விடும்படி ராணுவத் தளபதியைக் கேட்டிருந்தார். கனத்தைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாக புலநாய்வுத்துறையினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுடன் கனத்தை மயானத்திற்கு மாலை 6 மணியளவில் நிலைமையினை ஆராயும் பொருட்டு  செயலாளர் ஆட்டிகல சென்றிருந்தார்.  

எனது ஆசிரியரான ஆரன் மாலை 4 மணிக்கு என்னைத் தொலைபேசியில் அழைத்தபோது நான் தெகிவளையில் அமைந்திருந்த எனது வீட்டில் இருந்தேன். கனத்தை மயானத்தில் மரணச் சடங்குகள் நடைபெறவிருப்பதால் என்னை உடனடியாக அலுவலகம் வரும்படி அவர் அழைத்தார். திருநெல்வேலிக் கண்ணிவெடித் தாக்குதல் பற்றி எனக்கு அப்போது தெரிந்தே இருந்தது. அன்று இரவு பணியில் நான் ஈடுபட்டிருந்ததால், மாலை 6 மணிக்கு அலுவலகம் செல்வதே வழமை. டெயிலிநியூஸ் பத்திரிக்கையின் உப ஆசிரியராக நான் அப்போது கடமையிலிருந்தேன்.

ஆரன் என்னுடன் பேசும்போது, "கனத்தையில் மரணச் சடங்கினை நடத்துவது எனும் முடிவு இன்னமும் இரகசியமாகவே இருக்கிறது. மாலை 5 மணிக்கு சடங்கினை நடத்தப்போவதாக செய்தி வந்திருக்கிறது. செய்தி நிருபர்களையும், புகைப்படப் பிடிபாளர்களையும் அங்கு வருமாறு அதிகாரிகள் கோரியிருக்கின்றனர். நான் பியதாசவையும் இன்னும் இரு நிருபர்களையும் அங்கே அனுப்பப்போகிறேன்" என்று கூறினார். பியதாச எமது செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய சிறந்த புகைப்படப் பிடிப்பாளர். இவ்வாறான கோரிக்கைகளை அரசாங்கம் ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் அனுப்பியிருந்தது.

மாலை 5 மணிக்கு லேக் ஹவுஸ் நிலையத்திற்கு நான் சென்றபோது நிலைமை சுமூகமாக இருப்பதாகவே தெரிந்தது. மாகாணத் தலைநகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பதிப்புக்கள் ஓரளவுக்கு முற்றுப்பெற்ற நிலையில் புலிகளின் தாக்குதலை தலைப்புச் செய்தியாக அவை காவி இருந்தன. சுமார் மாலை 4:30 மணியளவில் பியதாசவும் செய்தியாளர்கள் இருவரும் கனத்தைக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களுடன் தினமின‌, தினகரன் ஆகிய சகோதரப் பத்திரிக்கைகளின் நிருபர்களும் சென்றனர்.

மாலை 5 மணிக்கு ரேமண்ட் மலர்ச்சாலையிலிருந்து எம்முடன் பேசிய எமது செய்தியாளர் மரணச் சடங்குகள் தாமதமடைவதாகக் குறிப்பிட்டார். "சடலங்கள் இன்னமும் பலாலியை விட்டு நீங்கவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு கூடிவருகிறார்கள். மக்கள் கூட்டமொன்றும் அதிகரித்து வருகிறது" என்று கூறினார்.

மரணச் சடங்கிற்கான ஆயத்த வேலைப்பாடுகள் பூர்த்தியாகி விட்டதாகக் கூறிய அவர், சில ராணுவ வீரர்களும், பொலீஸாரும் மயானத்தினுள்ளும், வெளியேயும் காவலுக்கு நிற்கிறார்கள் என்றும் கூறினார். சடலங்களைப் புதைப்பத்கற்கான குழிகள் தோண்டப்பட்டு, ராணுவ பாண்ட் வாத்தியக் குழு வரவழைக்கப்பட்டு, பிரித் ஓதுவதற்கு பிக்குகள் கூட்டிவரப்பட்டு, தொலைக்காட்சிக் கமெராக்கள் ஒழுங்குசெய்யப்பட்டு, வளைவு வெளிச்சங்கள் ஏற்றப்பட்டு அப்பகுதி மரணச் சடங்கிற்கு ஆயத்தமாகி இருப்பதாக அவர் கூறினார். ஆனால், உயர் ராணுவ அதிகாரிகளோ அல்லது பொலீஸ் அதிகாரிகளோ அப்பகுதியில் காணப்படவில்லையென்றும் அவர் கூறினார். மேலும், கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு மரியாதை செய்யும் முகமாக சில அமைச்சர்கள் அப்பகுதிக்கு வந்திருப்பதாகவும் எமக்குக் கூறப்பட்டது.

1422524168_86453.jpg

 

ரேமண்ட் மலச்சாலை

பலாலியிலிருந்து ராணுவத்தினரின் உடல்கள் வருவதற்கு ஏன் தாமதமடைகிறதென்பதற்கான காரணம் எவருக்குமே அங்கு தெரிந்திருக்கவில்லை. விமானப்படை விமானம் ஒன்றின்மூலம் பலாலியிலிருந்து கொழும்பு இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு உடல்கள் கொண்டுவரப்படவிருந்த நிலையில், வீரதுங்க குருநகரிலிருந்து பலாலிக்கு உலகுவானூர்தி ஒன்றின்மூலம் சென்றடைந்தார். உடல்கள் கொழும்பிற்கு கொண்டுசெல்லப்படவிருக்கின்றன என்று யாழ்த் தளபதி பல்த்தசார் வீரதுங்கவுக்குக் கூறியதையடுத்து, தானும் உடல்கள் கொண்டுசெல்லப்படுகையில் கொழும்பு செல்லும் நோக்குடன் அவர் பலாலிக்குக் கிளம்பிச் சென்றார்.  யாழ் வைத்தியசாலை சவ அறையிலிருந்து மாலை 5 மணிக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் என்னிடம் கூறினர். மேலும், பலாலியில் இருப்பவர்களே அனைத்தையும் தாமதப்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர். கொழும்பிலிருந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்துகொண்டிருப்பதால் பலாலியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் குழப்பமான நிலையில் காணப்படுவதாகவும் எமக்குக் கூறப்பட்டது. பலாலி ராணுவத் தளத்தில் அப்போதிருந்த உயர் அதிகாரியொருவர் இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஜெயவர்த்தனவின் கட்டளைகளே என்று கூறினார். தளபதி வீரதுங்கவை அன்றிரவு குருநகரில் இருக்குமாறு கட்டளையிட்டதன் மூலம் அனைத்து விடயங்களையும் தாமதித்துக் குழப்பியது ஜெயவர்த்தனவே என்று அவர் கூறினார். தினமினப் பத்திரிக்கையின் கல்கிஸ்ஸைப் பகுதி நிருபர் இரத்மலான விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உடல்கள் கொண்டுவரப்படுவதைச் செய்தியாக்கப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் என்னுடன் பின்னர் பேசுகையில், "இரத்மாலனை விமான நிலையத்தில் எல்லாமே குழப்பமாக இருக்கிறது. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்றே எவருக்கும் இங்கு தெரியவில்லை" என்று சிங்களத்தில் தகாத வார்த்தைகளைச் சேர்த்துப் பேசினார்.

kanatte.jpg

 கனத்தை மயானம் - பொரள்ளை, கொழும்பு

    கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உறவுகள் சிலர் குழுமியிருந்த பொரள்ளை ரேமண்ட் மலச்சாலையிலும் இதேவகையான குழப்பநிலை காணப்பட்டது. மேலும், அவ்வேளை உடல்கள் தாக்கப்படவிருக்கும் கனத்தை மயானத்திற்கு கூட்டம் கூட்டமாக பலர் வரத் தொடங்கியிருந்தார்கள். எவருமே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது நிதானத்துடன் நடந்துகொள்ளவோ முயலவில்லை. யாவுமே மிகவும் குழப்பகரமாகக் காணப்பட்டது. அப்பகுதிக்கு வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் தாம் எண்ணிய வழியில் கூடியிருந்தவர்களை ஒவ்வொரு வகையில் வழிநடத்த, அப்பகுதி கலவர பூபியாகக் காட்சியளித்தது.

நேரம் செல்லச் செல்ல, குழப்பமான சூழ்நிலை கலவரமாக மாற்றமெடுத்தது. குழப்பநிலையினை உருவாக்கும் நோக்கில் கூட்டம் ஒன்று மயானத்திற்குள் நுழைவதனை எமது நிருபர்கள் அவதானித்தார்கள். தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டு, வெண்ணிற டீ சேர்ட்டுக்களும், கட்டைக் காற்சட்டைகளும் அணிந்த இக்கூட்டம் ஏலவே திட்டமிட்டது போன்று சவக் குழிகள் தோண்டப்பட்டிருந்த இடத்தினை நோக்கிச் சென்றது. முதலில் இக்கூட்டத்தினை ரஜரட்ட ரைபிள் படைப்பிரிவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இவர்கள் பொரள்ளை வீதியில் , நரஹேன்பிட்ட பகுதியில் இருக்கும் ராணுவ முகாமின் வீரர்கள் என்பது தெரியவந்தது.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயாருக்கெதிராகத் திரும்பிய சிங்களவரின் கோபம்

 http://ahfesl.free.fr/Images/Image_blak_july_1983_04.jpg1983%20rioters%20fire.jpg

ஆத்திரத்துடனும், உணர்வு மேலீட்டுடனும் கனத்தைப் பகுதியில் குழுமியிருந்த சிங்களவர்களுக்கு முதன்முதலாக கட்டளைகளைப் பிறப்பித்துத் தலைமை தாங்கியவர்கள் நாரஹேன்பிட்ட‌ ராணுவ முகாமிலிருந்து வந்த ராணுவத்தினரே. தோண்டப்பட்டிருந்த குழிகளுக்கருகில் சென்ற அவர்கள், அருகிலிருந்த மண்ணை அக்குழிகளுக்குள் தள்ளி அவற்றினை மூடினார்கள். பின்னர், "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் எம்மிடம் தரப்பட வேண்டும், அவர்களை நாய்களைப் போல்ப் புதைக்க விடமாட்டோம்' என்று உரக்கக் கோஷமிடத் தொடங்கினார்கள். இந்தக் கோஷங்கள் அங்கே குழுமியிருந்த சிங்களவர் கூட்டத்தின் உணர்ச்சி நரம்புகளை உசுப்பிவிட, அவர்களும் ராணுவத்தினருடன் சேர்ந்து கோஷமிடவும் கலகத்தில் ஈடுபடவும் தொடங்கினர். "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை அவர்களிடம் உறவினர்களிடம் கொடுத்துவிடு" என்று அரசாங்கத்தை நோக்கிக் கோஷமிடத் தொடங்கினர். மரணச் சடங்கினை மேற்பார்வையிட அங்கு அனுப்பப்பட்டிருந்த உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர், மயானத்தின் ஒரு பகுதியில் மக்கள் கோஷமிட ஆரம்பித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்றார். அவர் அப்பகுதியை அடைந்தபோது, கூட்டத்திலிருந்தவர்கள் மரப்பலகை ஒன்றினால் அவரை இடிக்கவே அவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்தார். அதிஷ்ட்டவசமாக, தோண்டப்பட்ட குழிகளுக்குள் அவரைத் தள்ளி வீழ்த்த அவர்கள் எடுத்த முயற்சியை அவரால் தடுக்க முடிந்தது.

 

Black July Tamil pogrom riot

 

கனத்தை மயானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களைத் துரத்தும் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர் ‍ 24, ஆடி, 1983

 

அங்கு குழுமியிருந்த சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களின் கலகம் கட்டுக்கடங்காமல்ப் போனது. ரேமண்ட் மலர்ச்சாலையின் ஊழியர்களால் மரணச் சடங்கிற்காக கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பித்தளையிலான கட்டமைப்புக்களும், வளைவுகளும் கலவரக் காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. மயானத்தின் அப்பகுதியிலிருந்த ஏனையவர்களின் கல்லறைகளை அவர்கள் உடைத்து நாசம் செய்தார்கள். பல கல்லறைகளின் நினைவுக் கற்கள் பிடுங்கி எறியப்பட்டன.  கலவரக்காரர்கள் வந்திருப்பது தமது கொல்லப்பட்ட உறவுகளுக்கு வணக்கம் செலுத்துவதற்காக அல்ல என்பதை உணர்ந்துகொண்ட கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து அகன்று சென்றுவிட, அவர்களுடன் பிரித் ஓதவென்று அழைக்கப்பட்டிருந்த பிக்குகளும் அச்சத்தில் மெல்லக் கழன்றுகொண்டனர். 

மாலை 7 மணி ஆகிக்கொண்டிருந்தது. உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவும், பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவும் மீண்டும் கனத்தை மயானத்திற்கு வருகை தந்தனர். தனது நுவரெலிய விடுமுறையினைப் பாதியில் கலைத்துவிட்டு கனத்தைக்கு வந்திருந்த பொலீஸ் அத்தியட்சகர் ருத்ரா ராஜசிங்கத்திடம் அவர்கள் நேராகச் சென்றனர். மயானத்தில் நிலவரம் எப்படியிருக்கிறது என்று அவர்கள் கேட்கவும், நிலைமை சிறிது சிறிதாக மோசமாகிக்கொண்டு வருகிறது என்று அவர் பதிலளித்தார். இதனையடுத்து, "நீங்கள் இங்கேயே இருந்து நிலைமையினைக் கட்டுக்குள் வைத்திருங்கள், நாங்கள் உடனடியாக ஜனாதிபதிக்கு தற்போதைய நிலைமையினை நேரடியாகச் சென்று அறிவிக்கிறோம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசுக்குச் சென்றனர். 

சுமார் மாலை 7:30 மணியளவில் எமது புகைப்பிடிப்பாளர் பியதாசவும் ஊடகவியலாளர் ஒருவரும் லேக் ஹவுஸ் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர் வரும்போது கனத்தைப் பகுதியில் தன்னால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைக் காண்பித்தார். கலவரபூமியாகக் காட்சியளித்த கனத்தை மயானத்தை அவர் தத்ரூபமாகப் படமாக்கியிருந்தார். இரண்டாவது பதிப்பிற்குச் செல்லும் பத்திரிக்கைகளில் அப்புகைப்படங்களை உள்ளடக்குவதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தலைவர் ரணபால போதினாகொட, டெயிலி நியூஸின் ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஜெயாரின் வீட்டிற்கும் இடையே தொடர்ச்சியாகப் போய்வந்துகொண்டிருந்ததுடன், கனத்தைக் கலவரத்தை பெரிதாகப் பிரசுரிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டதுடன், டெயிலி நியூஸ் ஆசிரியர் மணிக் டி சில்வாவிடம், "அபாயகரமான சூழ்நிலையொன்று வலுப்பெற்று வருகிறது" என்று தலைப்பிட்டால்ப் போதும் என்று பணித்தார்.

 ஆனால், பியதாசவுக்கோ நிறுவனத்தின் தலைவரின் செயல் அமைதியைத் தரவில்லை. தான் எடுத்துவந்த புகைப்படங்களை போதினாகொடவிடம் காட்டிய அவர், "நிலைமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது" என்று ஆவேசத்துடன் கூறினார். பின்னர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார், "சபா, கவனமாக இருங்கள். இப்போது சிங்களவர்களின் கோபம் அரசாங்கத்தின் மீதே இருக்கிறது. ஆனால், இந்த கோபத்தை தமிழர்களின் மீது திருப்பிவிட முக்கியமான சிலர் முயற்சித்து வருகிறார்கள்".

பியதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அரசியல்த் தலைமைப் பீடத்துடன் நெருங்கிய தொடர்புகளிருந்தன. அவற்றினூடாகவே நிலைமையினை அறிந்துகொண்ட அவர் என்னிடம் கூறினார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

மேலும் என்னுடன் பேசும்போது, "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள் அவர்கள்" என்றும் கூறினார். ராணுவத்தினரின் உடல்களைத் தம்மிடம் தருமாறு உறவினர்கள் தொடர்ச்சியாக ராணுவ அதிகாரிகளைக் கேட்டுவந்ததனால், அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டோம் என்று அதிகாரிகள் பதிலளித்தைத் தான் பார்த்ததாக பியதாச கூறினார். மேலும், கனத்தை மயானத்தில் கூட்டு மரணச் சடங்கினை அரசு நடத்தத் தீர்மானித்தன் நோக்கம், தாக்குதலில் அகப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் முற்றாகச் சிதைந்து சேதமடைந்து விட்டதனால், அவற்றினைத் தனித்தனியாக அடையாளம் கண்டு  உறவினர்களிடம் ஒப்படைப்பது கடிணம், ஆகவேதான் கூட்டு மரணச்சடங்கினை அரசு நடத்த முடிவெடுத்தது என்றும் அவர்கள் உறவினர்களிடம் கூறியிருக்கின்றனர்.   

லேக் ஹவுஸின் இரண்டாவது நிருபரும், அவரது உதவியாளரும் இரவு 8:30 மணிக்கு நிலையத்திற்குத் திரும்பினர். கனத்தையில் நடக்கவிருந்த மரணச் சடங்குகள் அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாக மயானம் முழுவதிலும் ஒலிபெருக்கியால் அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் கடுமையான கலவரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினார்கள். "மக்கள் ஜனாதிபதிக்கெதிராகவும், அரசாங்கத்திற்கெதிராகவும் கோஷமிட்டபடி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று அவர்கள் கூறினர்.

நாம் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கூட்டமொன்று இரவு 8:30 மணியளவில் மயானத்திற்குள் நுழைந்திருக்கிறது. அவர்கள் கம்மியூனிஸ்ட் கட்சியின் அதிருப்தியாளர்கள். அந்த மாணவர் கூட்டத்திலிருந்த இருவர் அங்கு குழுமியிருந்த சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது , "ராணுவத்தினரின் மரணங்களுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று ஆவேஷமாகக் கூறினர். பின்னர் ஆத்திரத்துடனும் உணர்வு மேலீட்டுடனும் காணப்பட்ட மக்கள் கூட்டத்தை ஜனாதிபதியின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேஸ் நோக்கி வழிநடத்திச் சென்றனர்.

ஆனால், ஜனாதிபதியின் இல்லம் நோக்கிய சிங்களவரின் பேரணியை பொலீஸார் இடைமறித்தனர். அரசுக்கெதிரான உணர்வு மேலீட்டு வருவதை உணர்ந்துகொண்ட உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன, ஜனாதிபதியில் இல்லத்தை ஆர்ப்பாட்டக் காரர்கள் அடைவதைத் தடுக்கும் நோக்கில் வேர்ட் பிளேசுக்கான தொடக்கப் பகுதியிலும், கின்ஸி வீதியிலும் தடைகளை ஏற்படுத்தி பொலீஸாரை காவலுக்கு அமர்த்தினார்.

 உணர்வு மேலீட்டுடன் ஆவேசமாக கணத்தையை விட்டு வெளியேறி வந்துகொண்டிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு, தம்மை எதிர்கொள்ள பொலீஸார் தயாராகி வருவதை அறிந்ததும், கூட்டத்திலிருந்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். இவர்களுள் பலர் தமது வீடுகளுக்கே திரும்பியிருந்தனர். 

சுமார் இரவு 10 மணியிருக்கும். லேக் ஹவுஸில் அந்நேரம் பணிபுரிந்துகொண்டிருந்த எல்லோரும் பொரள்ளைப் பகுதியிலிருந்து ஆகாயம் நோக்கிப் புகைமண்டலம் மேலெழுந்துவருவதைக் கண்ணுற்றோம். நான் உடனடியாக தீயணைப்புப் படையினருடன் தொடர்புகொண்டேன். மறுமுனையில் பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி, கனத்தையிலிருந்து வெளியேறி வந்த ஆர்ப்பாட்டர்க் காரர்கள் பொரள்ளைச் சந்தியிலிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை எரிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். சிறிது நேரத்தில் அப்பகுதியிலிருந்து பாரிய தீச்சுவாலைகள் மேலெழுந்துவருவதை எம்மால் காண முடிந்தது. டெயிலிநியூஸ் ஆசிரியர் அறையிலிருந்து பார்க்கும்போது, கோட்டைப் புகையிரத நிலையம், புறக்கோட்டை சந்தைப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை எம்மால் தெளிவாகப் பார்க்கமுடியும். கொழும்பு எரியத் தொடங்கியிருந்தது !

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள்

83burntshop.JPG

இக்கட்டத்தில் யாழ்நகர் எரியத் தொடங்கியிருந்தது. பலாலி முகாமிலிருந்து பல ட்ரக்குகளில் கிளம்பிய  ராணுவத்தினர் தாக்குதல் நடந்த திருநெல்வேலிப் பகுதியை வந்தடைந்தனர். பலாலியிலிருந்து திருநெல்வேலி வரையான வீதியெங்கும் இருந்த கடைகளை சேதப்படுத்தியவாறே அவர்கள் வந்திருந்தனர். திருநெல்வேலிச் சந்தியை அடைந்ததும், தமது ட்ரக்குகளை சந்தியில் நிறுத்திவிட்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஆரம்பித்தனர். செல்லக்கிளி மறைந்திருந்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய கடையினை உடைத்ததிலிருந்து அவர்களின் பழிவாங்கும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. அப்பகுதியின் அருகில் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்டதாக அவர்கள் கருதிய மதில்களை உடைத்தனர். பின்னர், வீதியின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை ஒவ்வொன்றாகக் கொழுத்தத் தொடங்கினர். வீதியில் தாம் எதிர்கொண்ட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். அன்று தமது வெறியாட்டம் முடிந்து முகாம் திரும்பிய ராணுவத்தினர் திங்கட்கிழமை மீண்டும் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

Black July 1983

 

கல்வியங்காட்டுப் பகுதியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சைக்கிள் ஒன்றில் வந்துகொண்டிருந்த 10 வயதுச் சிறுவனைக் கண்ட இராணுவத்தினர் அவனை நிற்குமாறு உத்தரவிட்டனர். ஒரு கையில் பாண் ஒன்றை ஏந்தியபடி சைக்கிளை மிதித்துவந்த அந்தச் சிறுவனும் உடனடியாக சைக்கிளை விட்டு கீழிறங்கவே, அவனருகில் சென்ற இராணுவ வீரன் ஒருவன் அச்சிறுவனின் தலையில் துப்பாக்கியால் சுட்டான். அச்சிறுவன் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தான். சிறுவனது உடலும், அவன் மிதித்துவந்த சைக்கிளும், காவி வந்த பாணும் அவ்விடத்திலேயே மாலைவரை கிடந்ததாக சாட்சியங்கள் கூறுகின்றன.  "அவனது மூளைப்பகுதி சிதறி தலையின் வெளியே கசிந்துகொண்டிருந்தது" என்று தனது புத்தகத்தின் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். கொல்லப்பட்ட சிறுவனைத் தான் பார்த்தபோது நீண்ட பெருமூச்சு ஒன்றைத்தவிர வேறு எதுவும் தன்னால் செய்ய இயலவில்லை என்று அவர் கூறினார்.

வீதியின் இருபக்கத்திலும் இருந்த பகுதிக்குள் ராணுவ வீரர்கள் ஊடுருவிச் சென்றிருந்தனர். அங்கிருந்த வீடுகளை அவர்கள் எரித்துக்கொண்டே சென்றதுடன் கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றபடி சென்றனர். இவ்வாறான வீடொன்றில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகள் இருப்பதைப்பார்த்த ராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதுடன் வீட்டிற்கும் தீமூட்டினர்.

மாதகல் முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற ராணுவத்தினரும் இதேவகையான படுகொலைகளில் ஈடுபட்டனர். மானிப்பாய் நகர்ப்பகுதிக்குச் சென்ற அவர்கள் வீதியால் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியொன்றினை மறித்து, அதிலிருந்தவர்கள் கீழே இறங்குமாறு பணித்தனர். பஸ்ஸினுள் இருந்து கீழே இறங்கிய ஒன்பது பாடசாலை மாணவர்களை வரிசையில் நிற்குமாறு கட்டளையிட்டனர். பின்னர் அம்மாணவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது ஆறு மாணவர்கள் அவ்விடத்திலேயே இறந்துவிழ, ஏனைய மூவரும் கடுமையாகக் காயப்பட்டனர். இவ்வாறே வல்வெட்டித்துறை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற இராணுவத்தினரும் கடைகளையும் வீடுகளையும் எரிக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாளில் மட்டும் இந்த மூன்று இடங்களிலும் 51 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர். யாழ்ப்பாண அரசாங்க அதிபரினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இப்படுகொலைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தன. குறைந்தது நூறு வீடுகளும் கடைகளும் அன்று இராணுவத்தால் எரியூட்டப்பட்டன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. 

Black-July-1983-fr-JVP-site-in-France-4-1.jpg

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள்

ஆடி 24 ஆம் நாளன்று இரவு ராணுவத் தளபதி வீரதுங்க குருநகர் முகாமிலேயே தங்கியிருந்தார். அவர் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தார். கொழும்பில் நடக்கும் கலவரம் குறித்த அறிக்கைகள் அவருக்கு வந்துகொனண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் தனது இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளை அவர் திங்கட்கிழமை காலை 10 மணிக்குப் பின்னரே பார்க்கச் சம்மதித்தார்.

திருநெல்வேலிப் பகுதிக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்து முனசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார்,

 

"1983 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் நாள், காலை 10 மணியிருக்கும். நாம் எமது வாகனங்களில் ஏறி திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். தளபதி வீரதுங்கவும் எம்முடன் இணைந்துகொண்டார். எல்லாத்திசைகளிலிருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை நாம் அனைவரும் கேட்டோம். திருநெல்வேலியை அடைந்த நாம், சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு திக்கில் நடக்கத் தொடங்கினோம். வீதியின் இரு பகுதியிலும் இருந்த பகுதிகளுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்த  இராணுவத்தினரை நோக்கி அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனடியாக வீதியை நோக்கி வருமாறு உரக்கக் கத்தினோம்".

"இலங்கை இலகு கலாட்படையின் தளபதி லெப்டினன்ட் ரஜீவ் வீரசிங்க என்னுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன. சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனது உடலைக் கண்டபோது பெருமூச்சொன்றினை விடுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. அவன் ஓட்டிவந்த சைக்கிளும், காவிவந்த ஒரு இறாத்தல் பாணும் அவனது சடலத்திற்கருகில் அப்படியே கிடந்தன. அவனது தலைப்பகுதி சிதறிக் கிடக்க மூளை வழிந்து வீதியில் ஓடிக் கிடந்தது. அவனை மிக அருகில் வந்து சுட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது".

"அதேவேளை, நாம் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் ராணுவ வீரர் ஒருவர் பதுங்கியிருந்து எம்மை நோக்கித் தனது துப்பாக்கியை திருப்புவதை நான் கண்டேன். என்னிடம் பிஸ்ட்டல் ஒன்று மாத்திரமே இருந்தது. லெப்டினன்ட் வீரசிங்கவிடம் அவரது பிரத்தியேக துப்பாக்கி இருந்தது. ஒருகணம் அந்த ராணுவ வீரன் எம்மைக் கொல்வதற்காகவே பதுங்குவதாக நான் நினைத்தேன். தெய்வாதீனமாக வீரசிங்கவுக்கு அந்த ராணுவ வீரனை நன்கு தெரிந்திருந்தது. ஆகவே, வீரசிங்க அவனைப் பார்த்து "வீதிக்கு வா" என்று கட்டளையிட, அவனும் வெளியே வந்தான். திருநெல்வேலிச் சந்திப்பகுதியில் அக்கிரமங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரை மீள வெளியே இழுத்துவர எமக்கு குறைந்தது ஒரு மணித்தியாலமாவது எடுத்திருக்கும். தளபதி வீரதுங்க மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். படுகொலைகளிலும், சொத்தழிப்புக்களிலும் ஈடுபட்ட ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்ட அதேவேளை சில இடைநிலை அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டன. அன்று மாலையே கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரை அநுராதபுரம் தடுப்புச் சிறைச்சாலைக்கு நாம் அனுப்பி வைத்தோம்".

"இதேவகையான படுகொலைகள் வல்வெட்டித்துரை மற்றும் மாதகல் முகாம்களைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அரங்கேறின. பின்னர், மாதகல் முகாம் அதிகாரியான மேஜரும் அவரது ராணுவத்தினரும் தம்மை வேறு முகாம்களுக்கு மாற்றவேண்டாம் என்றும், தாம் மாதகல் முகாமிலேயே தங்கியிருப்பதற்கு அனுமதி தருமாறு வேண்டிக்கொண்டதாகவும் நாம் அறிந்தோம். மாதகல் முகாமின் பொறுப்பதிகாரியான ராணுவ மேஜர் முகாமை விட்டு ராணுவத்தினர் வெளியே செல்லக்கூடாது என்று வாயிலின் முன்னால் நீட்டிப் படுத்துக்கொண்டதாகவும், ஆனால் அவரைத் தூக்கி வாயிலின் வெளியே எறிந்துவிட்டு தமது ட்ரக்குகளில் ஏறிச்சென்ற ராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் எமக்குக் கூறப்பட்டது".

இராணுவத் தளபதி இந்த நாட்களில் நடந்துகொண்ட விதம் குறித்து பல வினாக்கள் எழுந்தன. அப்பாவித் தமிழர்களை தனது இராணுவத்தினர் படுகொலை செய்துவருகிறார்கள் என்கிற செய்தி அவருக்கு மீண்டும் மீண்டும் ரேடியோ அறையிலிருந்து அறிவிக்கப்பட்டே வந்தது. ஆனால், மறுநாள் காலை 10 மணிவரை அவர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. ஏன்? 

மேலும், ஜனாதிபதி ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை சுமார் இருவாரங்கள் முடிந்தபின்னரே தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார்.

மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையின் நிருபர் டேவிட் பெரெஸ்ஃபபோர்ட் ஜெயாரிடம் யாழ்ப்பாணப் படுகொலைகள் குறித்து ஆவணி 7 ஆம் திகதி வினவுகையில், "யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவத்தினரை இதுவரை நீங்கள் விசாரிக்காதது ஏன்?" என்று கேட்க, "எனக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரியவந்தது. இப்போது நாட்கள் சென்றுவிட்டன‌, இனிமேல் விசாரிப்பதில் பயனில்லை" என்று வெகு சாதாரணமாகத் தெரிவித்தார்.

HouseDestroyed.jpg

யாழ்ப்பாணத்து வீடு 2001

ஜெயாரிடம் பேசிய பெரெஸ்போர்ட், "யாழ்ப்பாணதில் சிறுவர்கள் வயோதிபர்கள் உட்பட 51 பொதுமக்களை உங்கள் இராணுவத்தினர் படுகொலை செய்திருக்கின்றனரே?" என்று கேட்டபோது, "அத்தனை பேர் சாகவில்லை சுமார் இருபது வரையிலான மக்கள் இறந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்" என்று அலட்சியமாகப் பதிலளித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்துப்படுகொலைகள் நடத்தப்பட்டு இரு வாரங்களுக்குப்பின்னரே தான் அதுகுறித்து அறிவிக்கப்பட்டதாகக் கூறிய ஜெயார், இராணுவத்தினர் தன்னிடமிருந்து இவ்விடயத்தை மறைத்துவிட்டார்கள் என்றும் கூறினார்.

அப்படியானால், ஜனாதிபதி ஜெயாரிடமிருந்து இந்த படுகொலைகளை இராணுவத் தளபதி வீரதுங்க மறைத்தது ஏன்?

 யாழ்ப்பாணத்துப் படுகொலைகளும், தெற்கில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளும் உண்மையாகவே ஜெயாரினால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட "தமிழருக்கான இறுதித் தீர்வு" எனும் திட்டமிட்ட இனக்கொலைக்குள் அடக்கமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்த வினாக்களும், சந்தேகங்களும் இன்றுவரை தமிழர்களின் மனங்களில் இருந்துகொண்டே இருக்கின்றன.

இந்த சந்தேகங்களே பிரபாகரனை போராடும்படி முந்தள்ளி விட்டிருந்தன.

1984 ஆம் ஆண்டு பங்குனி மாதம்,  தமிழினக்கொலை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகும் நிலையில் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிடம் பேசிய பிரபாகரன், "எமது பார்வையில் 1983 ஆடியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையானது நன்கு திட்டமிட்ட ரீதியில், ஒருமித்த வழிநடத்துதலில்,  அதிகாரத்திலிருந்த கட்சியின் இனவாத முக்கியஸ்த்தர்களால் நடத்தப்பட்டதாகவே உணர்கிறோம்" என்று கூறினார். 

பிரபாகரனை உருவமைத்த அவரது சிந்தனையின் வெளிப்பாடான இந்தக் கேள்வி பதில் பகுதியை இங்கே இணைக்கிறேன்,

Velupillai Prabhakaran

அனித்தா பிரதாப் : 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் இலங்கை இராணுவத்தின் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் நடத்துவதற்கு உங்களின் தாக்குதல் காரணமாக முன்வைக்கப்பட்டது. இவ்வாறான பாரிய பழிவாங்கும் தாக்குதல்கள் நீங்கள் நஎதிர்பார்த்தீர்களா?

பிரபாகரன் : ஜூலை இனக்கொலையினை தமிழ்ப் போராளிகளின் பதுங்கித் தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கலாக நீங்கள் பார்க்கக் கூடாது. இப்படிப் பார்ப்பது நடத்தப்பட்ட இனக்கொலையினை மிக இலகுவாக கடந்துசெல்லக் காரணமாகிவிடும். ஆண்டாண்டு காலமாக தமிழருக்கெதிரான இன வன்முறைகளை இந்த நாடு தொடர்ச்சியாக அரங்கேற்றியே வந்திருக்கிறது. எமது போராளி இயக்கம் ஆரம்பிக்கும் முதலே தமிழர் மீதான இனக்கொலைகள் நடந்தே வந்திருக்கின்றன. எமது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரும் திருகோணமலயில் தமிழர்கள் மீது திட்டமீட ரீதியில் படுகொலைகளும், சொத்தழிப்புக்களும் நடந்திருந்தன. ஆகவே, தமிழர் மீதான திட்டமிட்ட இனவன்முறைகளை ஒரு தாக்குதல் சம்பவத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தவறு.

நாங்கள் நீண்ட நெடியகெரில்லாப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்களை நாம் நடத்தி பல சிங்கள இராணுவத்தினரையும், பொலீஸாரையும் கொன்றிருக்கிறோம். ஆடியில் எம்மால் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல்கூட எமது போரட்டத்தின் இன்னொரு சம்பவமே அன்றி வேறில்லை. ஒட்டுமொத்த வன்முறைகளுக்கும் ஒரு தாக்குதல் நிகழ்வே காரணமானது என்று எண்ணுவது மிகவும் தவறானது. ஆடியில் எம்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பார்க்கும்போது, அவை எம் மக்களை கொல்வதற்காக மட்டுமே நடத்தப்படவில்லையென்பதும், கொழும்பில் எம்மக்களின் பொருளாதாரப் பலத்தினைச் சிதைக்கவும், வாழ்வாதாரத்தை அழிக்கவும் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வீர்கள். எமது பார்வையில் ஆடியில் நிகழ்த்தப்பட்ட படுகொலையென்பது மிகவும் திட்டமிட்ட வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த இனவாத சக்திகளால் அரங்கேற்றப்பட்ட இனக்கொலையாகவே பார்க்கிறோம். ஆரம்பத்தில் இப்படுகொலைகளுக்கான ஒட்டுமொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்திவிடவே சிங்கள இனவாத அதிகார மையம் முயன்றது. பின்னர் திடீரென்று இடதுசாரி கட்சிகளை நோக்கி இனவாதிகள் தமது விரலை நீட்டினர். ஆனால், இன்றும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் இனவாத தலைமைப்பீடமே  இப்படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயாரினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இறுதித் தீர்வு

image_073d92f59b.jpg

பொரள்ளைப் பகுதியிலிருந்து தீயின் நாக்குகள் மேலெழுந்துவருவதைப் பார்த்தபோது நான் கலக்கமடைந்தேன். அந்த நெருப்பு நானிருந்த திசைநோக்கி நகர்ந்துவரவே நான் மிகுந்த துயரமடையத் தொடங்கினேன். பியதாச என்னிடம் சிலநேரத்திற்கு முன்னர் கூறிய விடயங்கள் உண்மைதானோ? 
இதற்கு மேலதிகமாக எனது அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்த தொலைபேசி அழைப்புக்கள் மேலும் கவலையைக் கொடுத்தன. எனது அலுவலகத்திற்குப் பதற்றத்துடன் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திய பல தமிழர்கள் தம்மீது இன்னொரு இனக்கலவரத்தினை சிங்களவர்கள் ஆரம்பித்துவிட்டார்களா என்று கேட்டபோது என்னால் பேசமுடியாது போய்விட்டது.

அவ்வாறு என்னுடன் பேசிய பல தமிழர்களில் ஒருவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர். "ஜெயவர்த்தனா தமிழர்கள் மேல் தனது குண்டர்களை இன்னுமொருமுறை ஏவி விட்டாரா?" என்று அவர் என்னைக் கேட்டார்.நான் அவரிடம் பியதாச என்னிடம் கூறிய விடயங்களைக் கூறி, அரசுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஜெயார் தமிழர்கள் மீது திருப்பிவிட்டிருக்கிறார் என்று கூறினேன். 
"நான் மடத்துடன் பேசியிருக்கிறேன் (சிறிமாவைக் குறிப்பிட்டுக் கூறினார்), அந்த ராஸ்க்கல் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்னவும் செய்யக்கூடியவர் என்று மடம் என்னிடம் கூறினார்" என்று குமாரசூரியர் கூறினார். சிறிமாவின் ஆட்சியில் குமார‌சூரியர் அமைச்சராகப் பதவி வகித்தவர், அதனாலேயே சிறிமாவை அவர் "மடம்" என்று விளித்திருந்தார். 

See the source image
ராஜன் ஹூல் பொரள்ளைச் சம்பவத்தை தனது புத்தகமான "அதிகாரத்தின் மமதை" என்பதில் பின்வருமாறு விபரிக்கிறார்,
"என்னிடம் பேசியவர்கள் அனைவரும் பொரள்ளை மயானத்திலிருந்து ஆத்திரத்துடன் வெளியேறிச்சென்ற மக்களிடம் அரசுக்கெத்கிரான உணர்வே இருந்தது என்று கூறினார்கள். அவர்கள் என்னிடம் மேலும் கூறும்போது இரவு 10 மணியளவில் புதிதாக காடையர் குழுக்கள் அப்பகுதிக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இவர்களே அக்கூட்டத்தின் அரசுக்கெதிரான ஆத்திரத்தினை தமிழருக்கெதிரான கோபமாக மாற்றினார்கள். அவர்கள் அனைவரும் அரசின் காடையர் குழுக்கள். ஆரம்பத்தில் இவ்வாறு அரசால் இறக்கப்பட்ட காடையர் குழுவுக்கும் மயானத்தில் இருந்து வெளியேறி பொரள்ளைச் சந்தி நோக்கி வந்துகொண்டிருந்த ஆத்திரப்பட்ட மக்கள் கூட்டத்திற்கும் இடையே முறுகல் ஏற்பட்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல அரசுக்கெதிரான தமது கோஷங்களைக் கைவிட்ட மொத்தக் கூட்டமும் தமிழருக்கெதிரான கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையினைப் பாவித்தே அரச காடையர் குழு தன‌து நோக்கத்தினை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பொரள்ளைப் பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான சொத்துக்களைக் குறிவைத்து தான் ஏலவே திட்டமிட்டதன்படி தாக்குதலை ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து மொத்தக் கூட்டமும் தமது கைகளில் அகப்பட்ட தமிழர்களை அடித்துக் கொல்லத் தொடங்கியது". 

Riots1983_2.jpg

தமிழரின் கட்டடங்கள் எரியூட்டப்பட்டன, அவர்களின் வாகனங்கள் புரட்டிப் போடப்பட்டன, தமிழரின் கடைகளில் இருந்து பொருட்களைச் சிங்களவர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினர். 

அன்றிரவு எமது செய்திப்பிரிவிற்குக் கிடைத்த தகவல்களுடன் ராஜன் ஹூலின் பதிவுகளும் ஒத்துப் போவதால் அவற்றினை இங்கே பாவித்திருக்கிறேன். பொரள்ளையிலிருந்து கொழும்பு நகர் நோக்கிய பாதையில் அமைந்திருக்கும் புஞ்சி பொரள்ளைப் பகுதிக்கு பியதாசவும் இன்னும் சில நிருபர்களும் நிலவரத்தை ஆராயச் சென்றிருந்தனர். அங்கே அரசின் தொழிற்சங்கக் காடையர் குழுவான ஜாதிக சேவக சங்கமய கலவரங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பதைக் கண்டனர். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஜாதிக சேவக சங்கமயவில் நானும் ஒரு உறுப்பினராக அப்போது இருந்தேன். அன்றிரவு நிறுவனத்தில் சாரதியாகக் கடமையில் இருந்த வாகனச் சாரதி ஆரியரட்ண ஜாதிக சேவக சங்கமயவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.அவரே பியதாசவையும் ஏனையவர்களையும் புஞ்சி பொரள்ளைச் சந்திக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆரியரட்ண என்னுடன் பேசும் போது புஞ்சி பொரள்ளைப் பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர்கள் தனது தொழிற்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட அமைப்பாளர்களும்தான் என்று கூறினார். அவர் குறிப்பிட்டுக் கூறியவர்களில் முக்கியமானவர் கொழும்பு மாநகரசபையின் கவுன்சிலர் சங்கதாச, இவர் பிரேமதாசவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். அன்றிரவு 11 மணிக்கு பியதாசவும் ஏனையோரும் நிலையத்திற்குத் திரும்பினர். அவர்கள் அங்குநடந்துகொண்டிருந்த தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் கின்ஸி வீதி, பார்ன்ஸ் வீதி, ஹோர்ட்டன் பிளேஸ், ரோஸ்மீட் பிளேஸ், காஸ்ட்டல் பிளேஸ், மற்றும் கொட்டா வீதி ரயில்வே நிலையத்தின் அருகிலிருந்த பிரதேசங்கள் அனைத்திலுமிருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் இக்காடையர் குழு இலக்குவைத்து தாக்கி எரித்து வருவதாகப் பதற்றத்துடன் கூறினர். வீதி விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழரின் கடைகளிலிருந்து வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகள் அப்பிரதேசத்தை இரவு வேளையிலும் வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தன. எரிந்துகொண்டிருந்த தமிழர்களின் கடைகள் வீடுகளிலிருந்த கூரைகளும், கன்னார்த் தகடுகளும் தீயின் வெப்பத்தில் வெடித்துச் சிதறியபோது துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்று தமக்குக் கேட்டதாக அவர்கள் கூறினர். சிங்களவர்கள் தங்கு தடையின்றி தமிழர்களின் சொத்துக்களைச் சூறையாடிக்கொண்டிருந்தனர். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு -‍ தொடரும் ஜூலை 83 இனக்கொலை

copy-banner2.jpg

நள்ளிரவு வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. எமது செய்திப்பிரிவிற்கு வந்துகொண்டிருந்த அறிக்கைகள் மிகவும் கவலையளித்தன. பொரள்ளையில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான இனவன்முறைகள் கொழும்பில் தமிழர்கள் கணிசமானளவில் வாழ்ந்து வந்த பகுதிகளான மரதானை, தெமட்டகொடை, திம்பிரிகஸ்யாயை, கிருலப்பொனை ஆகிய பகுதிகளுக்கும் பரவிவிட்டிருந்தன.

எனது இரு மகன்கள் குறித்தும் எனக்குக் கவலை ஏற்படலாயிற்று. வீட்டில் அவர்கள் தனியாக இருந்தனர். எனது மனைவி நைஜீரியாவுக்கு கல்விச்சேவை ஒன்றிற்காக அவ்வேளை சென்றிருந்தார், மகள் யாழ்ப்பாணம் வைத்திய பீடத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். நான் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியபோது மூத்த மகன் பேசினார். வீட்டின் அருகில் அசம்பாவிதம் எதனையும் பார்க்க முடியவில்லை என்று அவர் என்னிடம் கூறினார்.  அதிகாலை 1 மணிக்கு லேக் ஹவுஸின் போக்குவரத்துப் பிரிவிற்குச் சென்ற நான் என்னை வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடும்படி அங்கிருந்த சாரதிகளைக் கேட்டேன். "தமிழர்களைக் கொன்று எரித்துக்கொண்டிருக்கிறார்கள், இந்தவேளையில் நீங்கள் எங்கும் போகவேண்டாம்" என்று கூறி என்னைச் செல்லவிடாமல்த் தடுத்தனர். ஆரியரட்ண எனது நிலையினைக் கண்டு என்னை ஏற்றிச்செல்ல ஒப்புக்கொண்டார். தெகிவளை நோக்கி காலி வீதியூடாக சென்றுகொண்டிருந்தவேளை அசம்பாவிதங்களை நான் காணவில்லை, தெகிவளை அமைதியாக இருந்தது.

காலை 5 மணியிருக்கும், எனது சிங்கள நண்பர் ஒருவர் எனக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். "சபா, உங்களின் பிள்ளைகளை இன்று பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம், காலை 9 மணிக்கு முதல் பாதுகாப்பான பகுதியொன்றிற்குச் சென்றுவிடுங்கள்" என்று என்னை எச்சரித்தார்.

"ஊரடங்குச் சட்டத்தினைப் பிறப்பித்து விட்டார்களா?" என்று அவரிடம் கேட்டேன். "இன்னும் இல்லை"என்று அவர் பதிலளித்தார்.

"ஏன், நேற்று இரவு ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்போவதாக பொலீஸார் கூறினார்களே?" என்று நான் மீண்டும் கேட்டேன். எரிச்சலடைந்த அவர், "என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம், சொன்னதை மட்டும் செய்யுங்கள்" என்று சறுக்கென்று கூறினார்.

 எங்களுடன் பேசிய பொலீஸ் அதிகாரிகள் தாம் ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி வலியுறுத்தப் போவதாகவே கூறியிருந்தனர். ஆனால் ஜனாதிபதியோ, "ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது பற்றி ஆறுதலாகச் சிந்திக்கலாம்" என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த பொலீஸ் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஊரடங்குச் சட்டத்தினை ஜெயார் அமுல்ப்படுத்தவில்லை.

DeMelRonnie2002.jpg

ரொனி டி மெல் 2002

 

என்னுடன் பின்னர் பேசிய நிதியமைச்சர் ரொனி டி மெல், ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறியிருந்தார். தன்னுடன் பேசுகையில் ஜெயார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தும் உத்தேசத்தில்த்தான் இருந்தார் என்று கூறினார்.

ஜூலை இனக்கொலை நடந்துகொண்டிருந்த நாட்களில் ஜெயாரின் ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சன் கொழும்பிலேயே இருந்தார். அவர் லங்கா கார்டியன் பத்திரிக்கையில் இதுகுறித்து எழுதியிருந்தார்.

"அன்று நள்ளிரவு ஜெயாருடன் ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ல்படுத்துமாறு தொலைபேசியூடாக வேண்டிக்கொண்டேன். ஆனால், ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது குறித்து பேச மறுத்துவிட்டார். வீட்டிலேயே இருங்கள், வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்" என்று வில்சன் எழுதுகிறார்.

எனது சிங்கள நண்பர் கூறியதன்படியே நடக்க நான் முடிவெடுத்தேன். வீட்டில் அன்று காலையுணவை உட்கொண்டோம். எனது மகன்களிடம் சில உடைகளையும் புத்தகங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனது மூத்த மகன் அவ்வருடம் ஆவணி உயர்தரப் பரீட்சைக்கும் இளைய மகன் அவ்வருடம் மார்கழியில் இடம்பெறவிருந்த சாதாரண தரப் பரீட்சைக்கும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். எமது வீட்டுத் திறப்பினை அயல்வீட்டுச் சிங்களப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, கலவரங்கள் அடங்கியபின்னர் வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன். காலை 8 மணியளவில் பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில், காஸ்ட்டல் வீதியில் அமைந்திருந்த எனது மருமகனின் வீட்டிற்கு வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சென்றோம்.

போகும் வழியில் பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரி இயங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன், நகரின் அநேகமான பாடசாலைகள் இயங்குவதாகவே எனக்குச் சொல்லப்பட்டது. கடைகள் திறந்திருந்தன, வீதியில் போக்குவரத்தும் வழமைபோன்றே காணப்பட்டது. காலை 10 மணியளவில் மதிய உணவை வாங்கிவர மகனை அனுப்பினேன். அவரும் உணவினை வாங்கிக்கொண்டு வந்தார், மீண்டும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன என்கிற செய்தி எமக்குக் கிட்டியது. மகன் வீட்டிற்கு வரும் வழியில் பலர் கடைகளைப் பூட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதாகவும், காலி வீதியில் உள்ள தமிழர்களின் கடைகளை இலக்குவைத்து ஆயுதம் தரித்த சிங்களவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். காலி வீதி முடிவடையும் இடமான காலி முகத் திடலில் இருந்தே தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. 

காலை 10:30 மணியிருக்கும், எனது மருமகனின் வீட்டில் தங்கியிருந்து கொழும்பில் வேலை பார்த்து வந்த   துரைரட்ணம் மிகுந்த பதற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தார். மிகுந்த வேடிக்கையாகவே எப்போதும் பேசும் அவரை அவ்வளவு பதற்றமாக அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பம்பலப்பிட்டிச் சந்தியை அடைந்தபோது தான் அப்பகுதியில் இருந்ததாகக் கூறினார் அவர். அப்பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகளை உடைத்துச் சூறையாடிவிட்டு பின்னர் அவற்றிற்குத் தீவைத்ததை தான் கண்டதாகக் கூறினார். அப்பகுதியில் அவரைப்போலவே வந்திருந்த தமிழர்களை அந்தச் சிங்களக் காடையர்கள் தெருவுக்கு இழுத்துவந்து அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர் தெய்வாதீனமாக காடையர்களின் கண்களில் படாமல் தப்பி வீடு வந்து சேர்ந்திருந்தார்.

 Riot1983_3.jpg

சீருடையணிந்த பொலீஸார் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் 

துரைரட்ணம் மேலும் தான் கண்ட காட்சிகளைப் பதிவுசெய்யும்போது, ட்ரக் ஒன்றில் வந்திறங்கிய இரு வாட்டசாட்டமான சிங்களவர்கள் வீதியில் குதித்து தமிழர்களின் கடைகளை உடைக்கத் தொடங்கினர். அவர்களைப் பார்க்கும்போது இராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ பயிற்சியெடுத்தவர்கள் போலக் கணப்பட்டனர். அவர்களின் கைகளில் ஒரு பெயர்ப் பட்டியல் இருந்தது. ஒவ்வொரு கடையினையும் உடைக்குமுன்னர் அக்கடைகளின் பெயர்ப்பலகையில் இருந்த பெயர்களைத் தாம் கொண்டுவந்திருந்த பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தபின்பே உடைக்க ஆரம்பித்தனர்.  இந்த இரு ஆயுததாரிகளில் ஒருவரின் கையில் கோடரியும் மற்றையவரின் கையில் அலவாங்கும் காணப்பட்டன. கோடரியை வைத்திருந்த சிங்களக் காடையன் முதலில் கோடரியின் பின்புறத்தால் கடையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டினை உடைக்க, அலவாங்கினை வைத்திருந்தவன் கதவிடுக்கினுள் அதனை செருகி கதவுகளை அகலத் திறந்துவிட்டான். அதன்பின்னர் அவர்களோடு வந்திருந்த மீதிச் சிங்களக் காடையர்கள் கடையினுள் புகுந்து அதனைச் சூறையாடினர். ஒரு கடை முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அடுத்த கடைக்குச் சென்றது அக்காடையர் கூட்டம். இப்படியே அவ்வீதியெங்கும் இருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகள் உடைத்துச் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. சிங்கள் கட்டட உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகளில் நடத்தப்பட்டு வந்த தமிழரின் வியாபாரங்கள் சூறையாடப்பட்டதுடன், அக்கடைகள் அமைந்திருந்த‌ கட்டடங்களை எரிக்காது விட்டுச் சென்றது காடையர் குழு. 

துரைரட்ணம் தொடர்ந்தும் அப்பகுதியில் நிற்க விரும்பவில்லை. தமிழர் ஒருவரை வீதியில் துரத்தித் துரைத்தி சிங்களவர்கள் தாக்குவதைக் கண்டதும் துரைரட்ணம் வேகமாக நடக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களின் பின்னர் நாம் அன்று தங்கியிருந்த பம்பலப்பிட்டி வீட்டின் அருகில், காலி வீதியில் ஏதோ களேபரம் நடக்கும் சத்தம் கேட்டது. யன்னலின் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த எனது மகன்கள் பிள்ளையார் கோயிலைச் சுற்றியிருந்த கடைகள் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினர். அப்பகுதியில் தங்கியிருந்த இரு இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நன்கு பயிற்றப்பட்ட சிங்களக் காடையர்கள் கோயில்ப் பகுதியை அடைந்தபோது அந்த இரு தமிழ் இளைஞர்களும் அங்கே நின்றிருக்கிறார்கள். அப்பகுதியில் இருந்த தமிழரின் கடைகளும் அதேவகையில் இரு பயிற்றப்பட்ட ராணுவ வீரர்களால் உடைக்கப்பட, பின்னால் வந்த சிங்களக் காடையர் கூட்டம் கடைகளைச் சூறையாடிவிட்டு ஆர்ப்பரித்தவாறே அவற்றிற்குத் தீமூட்டிக்கொண்டிருந்தது. தம்முடன் கொண்டுவந்திருந்த பெற்றோலினைக் கடைகள் மீது ஊற்றிவிட்டு சிகெரெட்டைப் பற்றவைக்கும் லைட்டர்களைப் பற்றவைத்து கடைகளினுள் எறிந்தது சிங்களக் காடைக் கூட்டம். அக்கடையும், கட்டடமும் தமிழர் ஒருவருக்குச் சொந்தமானது.

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு - ஜூலை 83, தொடரும் இனக்கொலை

 4.jpg

டெயிலிநியூஸ் ஆசிரியர் ஆரனை நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். "நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார். "தாற்போதைக்கு வரை" என்று நான் பதிலளித்தேன். 

முழுக் கொழும்பு நகரமே எரிந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளைப் போலல்லாது இம்முறை தமிழரின் வீடுகள் மட்டுமே இலக்குவைக்கப்பட்டு எரியூட்டப்படுவதாக அவர் கூறினார். பின்னர், கவனமாக இருந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். 

மதியம் ஆகிக்கொண்டிருக்க ஆரன் சொல்வதன் அர்த்தத்தை நான் உணரத் தொடங்கினேன். நாங்கள் தங்கிருந்த வீடு அமைந்திருந்த ஒழுங்கையில் கடைசியாக அமைந்திருந்த வீடு தமிழர் ஒருவருடையது. அவ்வீட்டின் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதலை ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் கடற்கரையோரமாக வந்திருக்க வேண்டும். வேறு சில தமிழர்களும் நாம் தங்கியிருந்த வீட்டில் அடைக்கலம் தேடியிருந்தார்கள். எனது மருமகனின் மூத்த சகோதரரும் பல்வைத்தியருமான எஸ் அருளம்பலம் அவர்கள் வேலைநிமித்தம்  கொழும்பிற்கு வந்திருந்தார். அன்று வெளியில்ச் சென்ற அவரும் மிகுந்த பதற்றத்துடனும், களைப்புடனும் வீடு வந்து சேர்ந்தார். கொழும்பு மாநகரசபை அமைந்திருந்த பகுதியிலிருந்து கால்நடையாகவே பம்பலப்பிட்டி வரை அவர் நடந்து வந்திருக்கிறார்.வீதியில் பல தமிழர்களை அடித்தே கொன்ற சிங்களவர்கள், அவர்களை அவ்விடத்திலேயே எரித்துக்கொண்டிருப்பதைத் தான் பார்த்ததாகக் கூறினார் . 

எனது ஒழுங்கையின் முடிவிலிருந்து இரண்டாவது மூன்றாவது வீடுகளும் இபோது தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நான் வீட்டிலிருந்த அனைவரையும் வீட்டின் மதிலைத் தாண்டி அயலவரின் காணிக்குள் குதிக்குமாறு கூறினேன். அயலவர் ஒரு இஸ்லாமியர், எம்மைத் தமது கழிவறையில் ஒளிந்துகொள்ளுமாறு கூறினார். வைத்தியர் உடற்பருமன் கொண்டவர், ஆகவே ஐந்தடி மதிலைத் தாவிக் குதிப்பதென்பது அவருக்கு மிகவும் கடிணமாக இருந்தது. ஆகவே, இந்தப்பக்கம் இருந்து இரண்டு இளைஞர்கள் அவரைத் தூக்கி மதில் மேலால் எறிந்துவிட, அடுத்த பக்கம் நின்ற சிலர் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர். 

நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. எனது இரு மகன்களையும் அன்று எம்முடன் வீட்டில் இருந்தவர்களையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். ஆகவே மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். தொலைபேசியின் மறுமுனையில் பேசிய அவரது மனைவி, "தனது நண்பர்களில் ஒருவருக்கு உதவுவதற்காக அவர் வெளியே சென்றுவிட்டார்" என்று அவர் பதிலளித்தார். அவருடன் பேசி எனது நேரத்தை மேலும் வீணடிக்க நான் விரும்பவில்லை. ஆகவே நான் நிதியமைச்சர் ரொனி டி மெல்லுக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் கூட்டம் ஒன்றில் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்ட்டஸ் பெரேராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவரும் ஜெயவர்த்தனவுடன் அச்சமயம் இருப்பதாக எனக்குக் கூறப்பட்டது. ஆனால், என்னுடன் பேசியவர் பெஸ்ட்டஸ் பெரேராவுக்கு ஏதும் தகவலை வழங்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் அப்போது தங்கியிருந்த வீட்டின் முகவரியை அவரிடம் கொடுத்து, எனக்குப் பாதுகாப்பு தரமுடியுமா என்று அமைச்சரைக் கேளுங்கள் என்று கூறிவிட்டு வைத்துவிட்டேன்.

ஜெயார் காலை 8 மணியிலிருந்து ஜனாதிபதிச் செயலகத்தில் இருந்திருக்கிறார். பின்னாட்களில் ரொனி டி மெல் என்னிடம் பேசும்போது அன்று காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை ஜெயாருடன் தான் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

தமிழ் மக்களின் சொத்துக்களைக் குறிவைத்து சிங்களவர்கள் காலை 10 மணிக்கு அன்று தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்தே தான் ஜெயாரைச் சந்திக்க காலை 11 மணியளவில் அவரது செயலகத்திற்குச் சென்றதாக ரொனி டி மெல் கூறினார். பெஸ்ட்டஸ் பெரேரா பேசும்போது தான் அன்று நாள் முழுதும் ஜெயாருடன் இருந்ததாகக் கூறினார்.

ஜெயாரை அன்று தொண்டைமானும் சந்தித்ததாகக் கூறினார். அவரது சுயசரிதையினை எழுதியவன் என்கிற முறையிலும், அவருடன் சுமார் 30 வருடங்களாக நட்பில் இருந்துவருபவன் என்கிற வகையிலும் அவரை எனக்கு நன்றாகப் பரீட்சயமாகியிருந்தது. அன்று தான் ஜெயாரைச் சந்தித்தபோது ஜெயார் மகிழ்வாகவும், நிதானத்துடனும் காணப்பட்டதாக தொண்டைமான் என்னிடம் கூறினார்.தன்னைச் சந்திக்க வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளியே தாம் கண்ட பயங்கரங்கள் குறித்து கூறும்போது ஜெயார் அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தார் என்று தொண்டைமான் கூறுகிறார்.

"என்னை கோபம் ஆட்கொண்டிருந்தது. நான் அப்போதுதான் எனது பேத்தியை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் எனது வீட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்து வர முடிந்திருந்தது.எனது வீட்டிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துகொண்டிருக்கும்போது வீதிகளில் தமிழர்களை சிங்களவர்கள் அடித்துக் கொல்வதையும், அவரது சொத்துக்களை சூறையாடி எரித்துக்கொண்டிருப்பதையும் கண்டேன். "நீங்கள் கட்டாயம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று ஆத்திரம் கொண்டு ஜெயாரைப் பார்த்துக் கத்தினேன். அதற்கு அமைதியாகப் பதிலளித்த ஜெயார், "அதற்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று அலட்சியமாக என்னைப் பார்த்துக் கேட்டார். "உடனேயே ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்துங்கள்" என்று நான் பதிலளித்தேன். "ஊரடங்குச் சட்டமா? அதை அமுல்ப்படுத்தப்போவது யார்?" என்று ஜெயார் என்னைப் பார்த்து மீண்டும் கேட்டார். அதன்பின்னர் அவரோடு பேசுவதில் பயனில்லை என்று எனக்குப் புரிந்தது, எனக்குத் தேவையானதெல்லாம் தமிழர் மீதான வன்முறைகளை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என்பது மட்டும்தான்" என்று தொண்டைமான் கூறினார்.

நான் வேண்டிக்கொண்டதற்கேற்ப பெஸ்ட்டஸ் பெரேரா எனக்குப் பாதுகாப்பினை ஒழுங்குபடுத்தியிருந்தார். நான் தங்கியிருந்த பம்பலப்பிட்டி காஸல் ஒழுங்கைக்கு பொலீஸ் ரோந்து அணியொன்று வந்துசென்றதுடன், எனது ஒழுங்கையின் முகப்பிலும் பொலீஸ் காவல் இடப்பட்டது. ஏற்கனவே ஒழுங்கையின் பின்புறத்தால் தமிழர்களின் வீடுகளைத் தாக்கிக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பொலீஸாரின் பிரசன்னத்தைக் கண்டதும் அங்கிருந்து விலகி மற்றைய பகுதிகள் நோக்கிச் சென்றது.

 

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

83 யூலைக் கலவரம் என்று பிரபல்யம் அடைந்த யூலை மாதத்தில் இந்தக் கலவரங்களைப் பற்றி எழுதுவது மனதுக்கு இதமாக உள்ளது.

மீண்டும் கப்பல் வேலைக்காக புறப்பட தயாராக கொழும்பில் தயாராக இருந்த வேளை நானும் மாட்டிக் கொண்டேன்.

இதுவே வாழ்வின் திரும்புமுனையாகவும் அமைந்துவிட்டது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயார் தமிழருக்குக் கொடுத்த இறுதித் தீர்வு - ‍ தொடரும் இனக்கொலை ஜூலை 83

தமக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரம் காப்பற்ற நினைத்த சிங்கள இனவாதிகள்

Merchants return to their burned out businesses in the Pettha area of downtown Colombo, Sri Lanka, 1 Aug 1983

ஜனாதிபதி ஜெயவர்த்தன மற்றும் முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் ஆகியோர் தமக்கு வேண்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வன்முறைகள் ஆரம்பிக்கும் முன்னரே எடுத்திருந்தனர். தனது மகன் ரவியின் முதல்த்தாரமும் தமிழருமான சார்மெயின் வன்டர்க்கோன் மற்றும் அவரது மகள், தாயார் ஆகியோரைப் பாதுகாப்பாக தனது செயலகத்திற்கு அழைத்துவர ஆயுதம் தாங்கிய ராணுவப் பிரிவொன்றினை அனுப்பிவைத்தார் ஜெயார். தமிழரான சார்மெயின் சிங்களக் காடையர்களால் தாக்கப்படக் கூடும் என்று ஜெயார் கருதினார். 

undefined

தான் கொல்லப்படுவதற்கு முன்னர் சிங்களக் காடையர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் தமிழர் ஒருவர் ‍ - தமிழ் இனக்கொலை ஆடி 1983

 

சிங்களக் காடையர்களால் முன்னாள் அமைச்சர் குமாராசூரியர் அவஸ்த்தைக்குள்ளாகியுள்ளார் என்று கேள்விப்பட்டபோது அவரைப் பாதுகாப்பாக அழைத்துவர ராணுவ ஜீப் வண்டியொன்றினை ஜெயார் அனுப்பிவைத்தார். குமாராசூரியரை வீட்டிற்கு வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள், அவரது கைகளைக் கட்டி அருகில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையம் வரை இழுத்துச் சென்று கொல்வதற்கு முயற்சித்ததை தாம் கண்ணுற்றதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். அவரைக் கொல்வதற்கு வாட்களை வெளியே சிங்களவர்கள் எடுத்துக்கொண்டிருக்க அவ்விடத்திற்கு வந்த ஜெயார் அனுப்பிய ராணுவத்தினர் அவரை மீட்டிருக்கின்றனர். 

http://www.oferrceylon.com/wp-content/uploads/2017/01/chief.jpg

செல்வாவின் மகனும், பின்னாட்களில் இந்தியாவின் முகவராகவும் மாறிய சந்திரஹாசன்

காலஞ்சென்ற தந்த செல்வாவின் மகனான சந்திரகாசனையும் அவரது தாயாரையும் காப்பற்ற காமிணி திசாநாயக்கா தனது பாதுகாப்புப் பிரிவினை அனுப்பியிருந்தார். சட்டக்கல்லூரிக் காலத்திலிருந்து காமிணியும் சந்திரகாசனும் நண்பர்களாக இருந்தவர்கள். தொண்டைமான் என்னுடன் பேசும்போது, தனது பேத்தியை பாதுகாப்பாகக் கூட்டிவர பிரேமதாசா தனது குண்டர்படையினர் சிலரை அனுப்பி காடையர்களிடமிருந்து அச்சிறுமியை மீட்டுவந்ததாகக் கூறினார்.

வணிக மற்றும் கப்பற்றுரை அமைச்சரான லலித் அதுலத் முதலியை இனக்கொலை நடைபெற்று சுமார் 10 நாட்களின் பின்னர் அவரது அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. "நான் வன்டேர்வட் பிளேசில் இருந்த எனது நண்பர்கள் சிலரைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அன்று ஈடுபட்டிருந்தேன், என்னிடம் நீங்கள் கேட்டிருந்தால் உங்களது வீட்டையும் என்னால் காப்பாற்றியிருக்க முடியும்" என்று அவர் என்னைப்பார்த்துக் கூறினார். அந்தவேளையில் நான் வேறு அமைச்சர்களுடன் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். எனது வீடு எரிந்துகொண்டிருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தே இருந்தது, எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் எனது இரு மகன்களையும் காப்பற்றிக்கொள்வதுதான். 

எனது வீட்டைப்பற்றி எனக்குக் கவலை இருந்தது. நிச்சயம் எனது வீடு தாக்கப்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டு, வீடும் எரிக்கப்படும் என்று நான் ஊகித்திருந்தேன். நான் காலை 11:30 மணியளவில் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்தபோது தொலைபேசி வேலை செய்தது. அரைமணித்தியாலம் சென்றபின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயற்சித்தேன், இம்முறை தொலைபேசி மெளனமாகக் கிடந்தது. எனது அயலவரான சோமதாசவுடன் தொலைபேசியூடாகப் பேசினேன். எனது வீடு எரிந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். மறுமுனையில் அவர் விசும்புவது எனக்குக் கேட்டது.

"எமது பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளைப் பாதுகாக்க‌ நாம் முயன்றோம், ஆனால் எம்மால் அது முடியாமற் போய்விட்டது" என்று சில வாரங்களுக்குப் பின்னர் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் கூறினார். "தமிழர்களின் வீடுகளைத் தேடி ஒரு கூட்டமொன்று எமது பகுதிக்குள் நுழைந்தது. நாம் இங்கு தமிழர்கள் எவரும் இல்லையென்று கூறவே அக்கூட்டம் சென்று விட்டது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின்னர் அதே கூட்டம் தெகிவளைப் பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிங்களப் பொலீஸ் அதிகாரி ஒருவருடன் மீண்டும் எமது பகுதிக்குள் நுழைந்தார்கள். கையில் வக்காளர் அட்டையினை வைத்திருந்த பொலீஸ் அதிகாரி, "தமிழர்களைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேவலமாகத் திட்டிக்கொண்டே உங்கள் வீட்டிற்கு காடையர்களை அழைத்துக்கொண்டு போனார்" என்று கூறினார்.

 Riot1983_5.jpg

 1983 இனக்கொலையில் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட தமிழரின் வீடு ஒன்று

 

எனது அயலவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள அனைவரையும் நாம் அடித்துக் கலைக்கவேண்டும், அவர்கள் இங்கே வாழக்கூடாது என்று அந்தப் பொலீஸ் அதிகாரி எம்மைப் பார்த்துக் கத்தினார். எமது வீதியில் (பி டி டி சில்வா மாவத்தை, தெகிவளை) இருந்த மூன்று தமிழர்களின் வீடுகளைக் கொழுத்திவிட்டு வெளியே வந்த அந்தப் பொலீஸ் அதிகாரி தன்னுடன் வந்த சிங்களவர்களைப் பார்த்து, "அப்பி சுத்த கரா" ( நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்) என்று சிங்களத்தில் கோஷமிட்டார்" என்று கூறினார். அதாவது அப்பகுதியை தமிழர் எனும் கிருமிகளிடமிருந்து தூய்மைப்படுத்தி விட்டோம் என்பதே பொருள்.

 எனது வீடு மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்ததாக அயலவர் கூறினார். எமக்கு ஒவ்வொருநாளும் மீன் வழங்கும் மீனவரான சைமன் எமது வீட்டினை எரித்த சிங்களக் காடையர் குழுவில் தானும் இருந்ததாகக் கூறினார். "அவர்கள் முதலில் உங்களின் வீட்டுக்கதவை உடைத்துத் திறந்தார்கள். பின்னர் உள்ளே நுழைந்த அவர்கள் விருந்தினர் தங்கும் அறையில் இருந்த ஷோகேஸ் (காட்சிப்படுத்தும் அலுமாரி) இனை அடித்து நொறுக்கினார்கள். வீட்டினுள் இருந்த உங்களின் புத்தகங்களை வெளியே எடுத்துவந்து இருக்கைகளில் பரப்பினார்கள். பின்னர் புத்தகங்கள் மீது கொண்டுவந்த பெற்றொலினை ஊற்றினார்கள்" என்று கூறினார்.

 சைமன் மேலும் கூறும்போது, "கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பொலீஸ் அதிகாரி கூட்டத்தைப் பார்த்து, "உங்களுக்குத் தேவையானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறவும் வெறும் 10 நிமிடத்தில் அங்கிருந்தவற்றை அவர்கள் சூறையாடினார்கள். பின்னர் உங்கள் வீட்டிற்கு அவர்கள் நெருப்பு மூட்டினார்கள்" என்று கூறினார்.

எனது காட்சிப்படுத்தும் அலுமாரியில் நூதணப் பொருட்கள் எவற்றையும் நான் வைத்திருந்ததில்லை. அகராதிகள், சொற்களஞ்சியங்கள் போன்றவையே அதில் அடுக்கப்பட்டிருந்தன. 1957 இல் நான் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்தபோது இலங்கை சமூக கலாசார மாற்றம் ஒன்றிற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தொடர்பாடல் மொழியாக அதுவரை இருந்துவந்த ஆங்கில மொழியினை சிங்களமும், தமிழ் மொழியும் பிரதியீடு செய்துவந்தன. இதனாலேயே அகராதிகள், சொற்களஞ்சியங்கள் ஆகியவற்றின் தேவை அந்நாட்களில் அதிகமாகக் காணப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் எனக்கிருந்த புலமை காரணமாக கல்வியமைச்சினூடாக வெளியிடப்பட்டு வந்த அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பல்கலைக்கழக நூட்களை நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்துவந்தேன். 1961 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான எனது மனைவிய மணந்துகொண்டதன் பின்னர் பாடசாலைப் பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். எமது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பெருமளவு ஆங்கிலம் ‍- தமிழ் அகராதிகளை, சொற்களஞ்சியங்களை நாம் வாங்கிச் சேகரித்து வந்தோம். 

நாம் காலம் காலமாகச் சேகரித்து வைத்திருந்த தடித்த அட்டையிலான அகராதிகள் சிங்களக் காடையர்கள் தமது நாசகார வேலையினைச் செய்ய வரப்பிரசாதமாக அமைந்தன. ஆகவேதான் தொடர்ந்து இருநாட்களாக எரிந்த வீட்டிலிருந்து அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. எனது வீட்டிற்கு வெளிப்புறமாக எனது படிக்கும் அறையினை நான் அமைத்திருந்தேன். அதற்குள் நான் சேகரித்து வந்த அரசியல் புத்தகங்கள், ஆவணங்கள், முக்கிய பத்திரிக்கைச் செய்திகள், நான் விரும்பிப் படிக்கும் புத்தகங்க்கள், பெறுமதியான நூட்கள் என்று பல சேமிக்கப்பட்டிருந்தன. அங்கும் சென்ற சிங்களவர்கள் அவற்றின் மீது பெற்றோலினை ஊற்றி பற்றவைத்திருந்தனர். எனது புத்தகங்களில் எவையுமே மிஞ்சியிருக்கவில்லை.

 

  • Like 1
  • Thanks 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைரமுத்துவின்ர  இரங்கல் பாவ வெட்டி ஒட்டினதுகூட  ஒரு குத்தமா? 😁
    • இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும். சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்… அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும். அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.
    • அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.