Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி தீர்வை எட்டமுனைந்தால் பாராளுமன்றில் எமக்குள்ள பலத்தினை பயன்படுத்துவோம் அரசுக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி தீர்வை எட்டமுனைந்தால் பாராளுமன்றில் எமக்குள்ள பலத்தினை பயன்படுத்துவோம் அரசுக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை

வீரகேசரி நாளேடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை உதாசீனம் செய்துவிட்டு சமஷ்டி முறைமையிலான தீர்வை சர்வகட்சி மாநாடு மூலம் எட்டமுனைகிறது. அந்நிலையேற்பட்டால் பாராளுமன்றத்திற்குள் எமக்குள்ள பலத்தை நாட்டின் நன்மைக்காக பிரயோகிப்போம் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்த யோசனைகளில் திருத்தங்களை மேற்கொண்டு மாவட்டங்கள் பலவற்றை இணைக்கவும் இணங்கியுள்ளது. அமைச்சர் திஸ்ஸவிதாரண சமஷ்டி முறைமையை ஆதரிப்பவரென்பது ஜனாதிபதிக்குத்தெரியும். அதனைத்தெரிந்து கொண்டே நியமிக்கப்பட்டார். அமைச்சர் திஸ்ஸவிதாரண நிபுணர்குழு முன்வைத்த யோசனைகள் அனைத்தும் சமஷ்டி முறைமையையே நோக்கிச் செல்கிறது.

ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்காகவே மக்கள் ஆணையை வழங்கினார்கள். அதனை மீறுவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு மீறப்படுமானால் பாராளுமன்றத்தில் எமக்குள்ள பலத்தை நாட்டினதும் மக்களினதும் நன்மைக்கு பயன்படுத்துவோம். அத்தோடு மஹிந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டுதான் அர சாங்கத்துடன் இணைந்தோம் என்று கூறும் அரசியல் கட்சிகளும் ஒற்றையாட்சியை மீறிய தீர்வுக்கு இணங்கக்கூடாது. அவ்வாறான தீர்விற்கு இணங்கினால் அடுத்தகணமே அரசாங்கம் பாரிய இழப்பை சந்திக்க நேரிடும். பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை தீர்மானிக்கும் பலம் எம்மிடமே உள்ளது. அதனை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் இடம்பெறுமென்பதை தெரிந்து தான் சர்வகட்சி மாநாட்டிலிருந்து நாம் வெளியேறினோம். உள்ளேயிருந்து பிழைகளை களைவோம் என்ற ஹெலஉறுமயவின் நிலை என்ன? காலம் கடந்தாவது மக்கள் ஐக்கிய முன்னணி வெளியேறியுள்ளமை பாராட்டத்தக்கது.

இவர்களது கூச்சலுக்கும் காலக்கணிப்பின் கருத்துக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.