Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாதிகள் போல் செயற்படுகிறது - சந்திரிகா குமாரதுங்க

Featured Replies

வெள்ளி 24-08-2007 14:02 மணி தமிழீழம் மயூரன்ஸ

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாதிகள் போல் செயற்படுகின்றது என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மேலக முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியயோர் சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாதிகள் போல் செயற்படுகிறது. இதனால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் மனித உரிமை மீறல்களை முன்னேடுக்கும் நாடாக சிறீலங்கா பார்க்கப்படுகின்றது.

என்னுடைய ஆட்சிக் காலத்திலும் ஒரு சில மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. ஆனால் அதனை நேரில் தலையிட்டு முடிவுக்குள் கொண்டு வந்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பின்னணியில் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள்இ ஆட்கடத்தல்கள்இ கப்பம் அறிவிடுதல் போன்ற சம்பவங்கள் வரிசைப்படுதிய கோவை ஒன்று சந்திரிகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆவணங்களை சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் கையளித்து ஆளும் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்யவேண்டும் எனவும் சந்திரிகா குமாரதுங்கவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆட்சிக் காலத்திலும் ஒரு சில மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. ஆனால் அதனை நேரில் தலையிட்டு முடிவுக்குள் கொண்டு வந்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------------------------

ஒரு சில மனித உரிமை மீறல்கள் நடந்து அதை நேரில் சென்று தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தாராம் அம்மணி. எத்தனை லட்சம் சனங்களை இடப்பெயர்வுக்கு உட்படுத்திய அம்மணி. நவலி நரபலி செம்மணி புதை குழி என்று ஆயிரமாயிரம் அடுக்கலாம். இவ இப்ப மனித உரிமை பற்றி பேசுறா. மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பின்னணியில் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள்இ ஆட்கடத்தல்கள்இ கப்பம் அறிவிடுதல் போன்ற சம்பவங்கள் வரிசைப்படுதிய கோவை ஒன்று சந்திரிகாவிடம் கையளித்தாரம்.

பேய்களுக்கிடையில் பிணம் தின்னும் போட்டி நடக்கின்றது. அதில் நடுவர் வேலை பார்ப்பது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா சுதந்திரம் கொடுத்த நாள் முதல் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுத்தான் உள்ளது. யார் தமிழர்களை அதிகம் கொடுமைப்படுத்தியது என்பதில்தான் சிங்கள அரசில் இருப்பவர்களுக்குள் நிலவும் போட்டியேயன்றி யார் தமிழர்களை மனிதர்களாகவேனும் நடாத்துவது என்பதிலல்ல. இவர்களையெல்லாம் நம்பி அறிக்கைகளைச் சமர்பிர்ப்பது சாத்தானிடம் கருணையை எதிர்பார்த்து மனுக்கொடுப்பது போலத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தசவலை ஒரு பயங்கரவாதி சொல்வதுதான் வேடிக்கை..! :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.