Jump to content

ஐஸ்வர்யா ராயால் நம்ப முடியாத நிஜம்: "எனக்கா 49 வயது"- பிரபலங்கள் கொண்டாட இதுதான் காரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா ராயால் நம்ப முடியாத நிஜம்: "எனக்கா 49 வயது"- பிரபலங்கள் கொண்டாட இதுதான் காரணம்

  • கல்யாண்குமார். எம்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஐஸ்வர்யா ராய்

பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB

 

படக்குறிப்பு,

ஐஸ்வர்யா ராய்

திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார்.

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இங்கு அறிமுகமாகும் பெண்களை விட வடக்கத்திய ஹீரோயின்களைக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

ரத்தி, மாதவியில் ஆரம்பித்து மதுபாலா, பல்லவி, ரூபிணி, மும்தாஜ், ரீமா சென், லைலா, ஜுகி சாவ்லா, நக்மா, ஜோதிகா, கஜோல், மனிஷா கொய்ராலா, மல்லிகா ஷெராவத், சோனியா அகர்வால், காஜல் அகர்வால், குஷ்பு, தபு, இஷா கோபிகர், ராணி முகர்ஜி, ஊர்மிளா, ஷில்பா ஷெட்டி, ஜெனலியா, இலியானா, ஹன்ஸிகா மோத்வானி, சமீபத்திய வரவான சித்தி இத்னானி வரை ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

இவர்கள் எல்லோருமே தமிழ், மற்றும் தெலுங்கு, கன்னட திரைகளில் குறைந்த பட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகளாவது பிசியாக இருந்தவர்கள். இதில் குஷ்புவும் ஜோதிகாவும் தமிழ்நாட்டின் மருமகள்களாகவே மாறி சென்னையிலேயே செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயாராகி விட்டவர்கள்!

 

இதில் ஐஸ்வர்யா ராய் மட்டும் சினிமாவில் அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும் இன்றும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

உலக அழகி டூ திரை உலகம்

இதே நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி (1973) பிறந்த ஐஸ்வர்யா, தன் 21ஆம் வயதில் 1994இல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். முதலில் அவரை கதாநாயகியாக தமிழுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது ;இருவர்' (1997) படத்தில் பிரபல நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பாத்திரத்தில், எம் ஜி ஆராக நடித்த மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

அதன் பின்னர் எஸ், தாணுவின் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', ஷங்கரின் ஜீன்ஸ், ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் போன்ற படங்களில் தன் முத்திரையைப் பதித்திருந்தார். கூடவே இந்தி உட்பட பலமொழிப் படங்களிலும் அவரது நடிப்பாற்றல் வெளிப்பட்டது.

2017இல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானாலும் நடிப்பு ஆர்வம் அவரை விடவில்லை. அது இந்த வருடம் வெளியான மணிரத்னத்தின் 'பொன்னியில் செல்வன்' வரை சுமார் 25 வருடங்கள் - அதாவது அவர் திரைக்கு வந்து பொன்விழா ஆண்டாகவே அவரை ஒரு சிறந்த நடிகையாக நீடிக்கச் செய்திருக்கிறது.

பல மொழிகளில் ஐஸ்வர்யா நடித்திருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம்தான் தன்னுடைய குரு என்கிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் வாழ்க்கை, கல்கியின் பொன்னியின் செல்வனைப் போலவே ஒரு தொடர்கதை போல நீள்கிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, துளுதான் தாய்மொழி. ஆனால் மும்பைக்கு குடிபெயர்ந்த அவரது குடும்பத்தால் அங்குள்ள ஆர்யா வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பையும், மட்டுங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிகிரியையும் முடித்திருக்கிறார்.

படித்துக் கொண்டே க்ளாசிக்கல் டான்ஸ், மியூஸிக் என ஐந்து வருடங்கள் பயிற்சி பெற்றிருந்தாலும் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஐஸ்வர்யா ராயின் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் 1991-ல் மாடலிங் துறையில் நுழைந்த பிறகு அவரது வாழ்க்கை ஏறுமுகம்தான். ஃபோர்டு கம்பெனி நடத்திய போட்டியில் இண்டர் நேஷனல் சூப்பர் மாடலாக தேர்வாகி இருக்கிறார். அதன் பின்னர் அமீர்கானுடன் நடித்த பெப்சி விளம்பரம் பிரபலமாகிறது. அடுத்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பார்த்திபன் பார்வையில் ஐஸ்வர்யா

 

ஐர்வர்யா ராய்

பட மூலாதாரம்,PARTHIBAN

 

படக்குறிப்பு,

பொன்னியின் செல்வன் பட செட்டில் ஐஸ்வர்யா ராயுடன் நடிகர்கள் பார்த்திபன், சரத்குமார்

பார்த்திபன் கூறுகையில், "அவர் உலக அழகி மட்டுமல்ல, மிகவும் புத்திசாலிப் பெண்ணும்கூட.. திரையுலகில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நானும் அவரும் பொன்னியின் செல்வனில் இணைந்து நடித்த போது "கடைசியாக நீங்கள் இயக்கிய படம் என்ன?" என்று என்னிடம் கேட்டார்.

நான் எனது 'ஒத்த செரு[ப்பு' படத்தைப் பற்றி சொல்லி, படம் முழுக்க ஒரே கதாபாத்திரம்தான் என்று சொன்னதும் கண்கள் விரிய தன் வியப்பை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் உடனே தன் கணவர் அபிஷேக் பச்சனுக்கு போன் செய்து 'நெட்பிளிக்ஸில் அந்தப் படம் இருக்கிறதாம், உடனே பாருங்கள்' என்றார்.

அவரை பார்க்கச் சொன்னது மட்டுமல்லாமல் அதை ஹிந்தியில் அவரையே ஹீரோவாக வைத்து ரீமேக் (single slipper size 7) செய்யவும் காரணமாக இருந்தார். இன்னும் இரண்டு மாதங்களில் அந்தப் படம் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு ஐந்து நிமிட உரையாடலில் ஒரு சினிமா ப்ராஜெக்ட்டையே சுவிட்ச் ஆன் செய்து விட்டார். இது சினிமா மீது அவருக்கு இருக்கும் காதலையும் ஈடுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது" என்கிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.

பொன்னியின் செல்வனில் அவரோடு இணைந்து நடித்த த்ரிஷா, "எனக்கு மிகவும் பிடித்த தோழி ஐஸ். அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது, ஆனால் நான் பயணத்தில் இருப்பதால் இன்று அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை மட்டும் உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்" என்கிறார்.

மணிரத்னம் வழங்கிய சான்றிதழ்

 

மணிரத்னத்துடன் ஐஸ்வர்யா ராய்

பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB

 

படக்குறிப்பு,

தனது குருவான மணிரத்னத்துடன் ஐஸ்வர்யா ராய்

"ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய, அதுவும் பிரபலமான பெண்ணுக்கு வரும் சர்ச்சைக்குரிய செய்திகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஐஸ்வர்யா ராய். ஆரம்பத்தில் சல்மான்கானுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம். பிரிவு, அது சம்பந்தமாக மீடியாக்களில் வந்த கிசுகிசுக்கள், அதில் இருந்த உண்மைகள் எல்லாம் அப்போது அவருக்கு மன உளச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்துவந்து திருமணம். குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார். தன்னம்பிக்கை மிகுந்த அவரைத் தேடி ஒரு நடிகையாக நல்ல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவர் இன்னும் பல வருடங்கள் நடித்துக்கொண்டே இருப்பார்" என்கிறார் பெயர் சொல்லிக்கொள்ள விரும்பாத வட இந்திய மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

இதை ஆமோதிப்பது போல் இருக்கிறது, இயக்குநர் மணிரத்னத்தின் கருத்து:

" கல்கி எழுதிய ஒரு பிரபலமான தமிழ் நாவலின் மிக முக்கிய பாத்திரம் நந்தினி. பல லட்சம் வாசகர்கள் ஏற்கனவே படித்து அவர்கள் மனதில் பதிந்து போன ஒரு உருவம். அதில் ஒரு வடக்கத்திய நட்சத்திரத்தை நடிக்க வைக்கலாமா என்று என்கிற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது.

ஆனாலும் அந்தக் கதையை படமாக்குகிற போது இதுவொரு இந்தியப் படமாகவேதான் பதிவு செய்ய நினைத்தேன். அதற்கு ஐஸ்வர்யா பொருத்தமாக இருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. அதனால்தான் அவரை அந்தப் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தேன். ரசிகர்களும் அந்தப் பாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொண்டார்கள். இப்போது அதன் இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கூடியிருக்கிறது" என்கிறார் மணிரத்னம் (பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தை 2023 ஏப்ரல் 13ல் எதிர்பார்க்கலாம் என்பது கூடுதல் செய்தி!)

தாணு வெளியிட்ட ஐஸ்வராயாவின் ரகசியம்

 

ஐஸ்வர்யா ராய்

பட மூலாதாரம்,AISHWARYA RAI

உலக அழகியானாலும் முன்னணி நடிகையானாலும் எந்தவிதமான பந்தா இல்லாத அவரது எளிமைதான் அவரை மென்மேலும் உயர்த்தியது" என்கிறார், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் தயாரிப்பாளரான எஸ். தாணு.

"1999-ம் வருட இறுதியில் அவரிடம் கதை சொல்லி அட்வான்ஸ் கொடுக்க இயக்குனர் ராஜீவ் மேனனும் நானும் மும்பைக்குப் போகிறோம். அப்போது ஒரு சிறிய அபார்ட்மெண்டில்தான் அப்பா, அம்மாவோடு வசித்து வந்தார். அந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட அவர், மதியம் தங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் அந்தப் படத்திற்காக நான் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிய காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அரண்மனையில் படப்பிடிப்பு நடந்தபோது அந்த அரண்மனையின் பிரமாண்டம், அவருக்காக நான் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகளையெல்லாம் பார்த்து விட்டு, "இவ்வளவு கிராண்டாக படத்தை எடுக்கும் தயாரிப்பாளர், ஒருநாள்கூட இங்கே வரவே இல்லையே? அவர் ஒரு நாளாவது சூட்டிங் ஸ்பாட் வந்து நம்மோடு லஞ்ச் சாப்பிடவில்லையென்றால் நான் சூட்டிங் வர மாட்டேன்'" என்று செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கிறார்.

இதை ராஜீவ்மேனன் போனில் சொல்லி 'ஒரு தடவை இங்க வந்துட்டு போங்க சார்' என்று கேட்டுக் கொண்டார். பிறகு ஐஸ்வர்யாவின் விருப்பத்தின் பேரில் காரைக்குடிக்குப் போய் ஒருநாள் அவர்களோடு லஞ்ச் சாப்பிட்டு வந்தேன்.

அதேபோல் அந்தப் படம் முடிவடையும் போது அவருக்கு நான் தர வேண்டீய சம்பளம் ரூபாய் பதினோறு லட்சம் பாக்கி இருந்தது. நான் கேட்கும்போது, "அதை பிறகு வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லி இருந்தார். அவர் போர்ஷன் சூட்டிங் முடிந்து படமும் வெளியாகி விட்டது.

அப்போதும் "பிறகு வாங்கி கொள்கிறேன்" என்றே சொன்னார். ஆனாலும் எனக்கு அது சரியாகப்படவில்லை. அதனால் அந்தப் பணத்திற்கு டி.டி. எடுத்துக் கொண்டு ராஜீவ்மேனனோடு மும்பைக்குப் போய் அதைக் கொடுத்து வந்தேன்.

அப்போது அவரிடம் "இந்த மாதிரி தயாரிப்பாளர் கிடைத்திருப்பது என் பாக்கியம்" என்று சொல்லி இருக்கிறார். அவரது அந்த பழகும் தன்மையும், எளிமையும்தான் அவரது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்" என்கிறார் எஸ்.தாணு.

https://www.bbc.com/tamil/arts-and-culture-63460493

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.