Jump to content

விந்தணுக்கள் பெண் கருமுட்டையை நோக்கி நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? - அறிவியல் உண்மைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விந்தணுக்கள் பெண் கருமுட்டையை நோக்கி நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? - அறிவியல் உண்மைகள்

  • லாரா பிளிட்
  • பிபிசி முண்டோ
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

விந்தணு கருத்தரித்தல் நடைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனித கருத்தரித்தல் செயல்முறையை ஒரு கட்டுக்கதை அல்லது ஒரு விசித்திரக் கதை போல நம்மில் பலர் கற்றிருப்போம்.

ஒரு பெரிய தலையும் மெல்லிய வாலும் கொண்ட கோடிக்கணக்கான தேரை குஞ்சுகள் போன்றவை, ஒரே குறிக்கோளுடன் தனிமை சூழலில் வெறித்தனமாக நீந்தும் காட்சி நமக்குப் பரீட்சயம். விந்தணுக்கள் என அழைக்கப்படும் இவற்றின் வருகையை எதிர்பார்த்து பொறுமையாகக் காத்திருக்கும் முட்டை மறுமுனையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஒரு மாரத்தான் ஓட்ட சாதனையை நிறைவு செய்ய, கோடிக்கணக்கான விந்தணுக்களில் எந்த விந்தணு வேகமான மற்றும் மிகவும் சுறுசுறுப்பானதாக இருக்கிறதோ அதுவே முட்டையில் மோதி அதனுள்ளே ஊடுருவி அதன் பிறகு கரு உருவாகத் தொடங்குகிறது.

பொதுவாக கருத்தரித்தல் செயல்முறை என வரும்போது அது இந்த கதை அல்லது காட்சி மூலமே பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்கப்படுகிறது.

 

எவ்வாறாயினும், விந்தணுவை கருமுட்டைக்கு எதிர் தரப்பில் இயங்கக் கூடிய தீவிர ஏஜென்ட் போல இந்த கதை பறைசாற்றுகிறது. ஆனால், இந்த விந்தணுவின் பங்கையோ இந்த கருத்தரித்தல் நிகழ்வு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையோ இந்தக் கதை சரியாக பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை.

இனப்பெருக்கத்தில் இரண்டும்-குறிப்பாக பெண் இனப்பெருக்க பாதை முக்கிய பங்கு வகிக்கிறது.

"விந்தணுக்களின் பயணம் எளிதானதல்ல"

உடலுறவின்போது விந்து வெளிப்படுதலுடன் இந்த கதை ஆணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த விந்தணு உற்பத்தியாகி, பெண்ணின் யோனியில் கோடிக்கணக்கான விந்தணுக்கள் டெபாசிட் செல்கிறது. (சராசரியாக விந்து வெளியேறும் போது சுமார் 250 மில்லியன் விந்தணுக்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது).

யோனிக்குள் நுழைந்ததும் விந்தணுக்கள் முதலில் கருப்பை வாயின் தடையை கடக்க வேண்டும் என்று இந்த நடைமுறையின் விரிவாக்கத்தை பிபிசி முண்டோ சேவையிடம் விளக்குகிறார் அமெரிக்க அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அலுவலகத்தின் அறிவியல், தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் பரிணாம உயிரியலாளர் கிறிஸ்டின் ஹூக்.

 

விந்தணு கருத்தரித்தல் நடைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இனப்பெருக்கப் பாதையில், ஒரு பெண்ணின் பார்வையில் சொல்வதென்றால், அதை நான் 'செக்பாயின்ட்டுகள்' என்று அழைப்பேன். விந்தணுக்கள் கருத்தரித்தல் இடத்தை அடைய வேண்டும். ஆனால், அந்த இடம், விந்தணு யோனிக்குள் நுழையும் இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது," என்கிறார் அவர்.

விந்தணுக்கள் நல்ல நிலையில் இல்லாவிட்டால் (பெரும்பாலானவற்றில் டிஎன்ஏ பாதிப்பு அல்லது பிற குறைபாடுகள் இருந்தால்), அவை இந்தத் தடையைக் கடந்து செல்ல முடியாது.

பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவத் துறையின் அறிவியல் இயக்குநர் டேனியல் பிரிசன், "இது மிகவும் முக்கியமான தேர்வு செயல்முறையாகும். ஒரு விந்து வெளிப்படும்போது உற்பத்தியாகும் பல மில்லியன் விந்தணுக்களில், சில நூறு மட்டுமே முட்டையை அடையும்," என்கிறார்.

சுருங்கி விரிதலும் உச்சகட்ட சுரத்தலும்

இருப்பினும், விந்தணுக்களால் தாமாகவே கருத்தரித்தல் சாத்தியம் ஆவதற்கான கருமுட்டைக் குழாய்களின் (முட்டை குழாய்கள் என்றும் அழைக்கப்படும்) முடிவான கட்டத்தை அடைய முடியாது, ஏனென்றால் அந்த கட்டத்தை அடையக் கூடிய அளவுக்கு வலுவான சக்தியை அந்த விந்தணுக்கள் கொண்டிருக்காமல் இருக்கலாம்.

விந்தணுவின் வால் பக்கங்களுக்குச் செய்யும் இயக்கமானது, அது முன்னோக்கிச் செல்லும் சக்தியை விட பத்து மடங்கு பெரிய சக்தியைக் கொண்டுள்ளது.

இந்த கட்டத்தைத்தான் "விந்து நீந்துவதில்லை, ஆனால் பெரும்பாலும் கருப்பையின் சுருக்கங்களால் உந்தப்படுகிறது" என்று விளக்குகிறார் டேனியல் பிரிசன்.

"நீந்துதல் என்பது ஒரு சிறிய பகுதி மட்டுமே, அது முட்டையை அடையும் போது மட்டுமே நடக்கும்" என்கிறார் அவர்.

 

விந்தணு கருத்தரித்தல் நடைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பெண் உச்ச கட்ட நிலையில் வளைந்து கொடுப்பது விந்தணுவின் இயக்கத்திற்கு உதவும் என சுட்டிக்காட்டுபவர்களும் உள்ளனர்.

மறுபுறம், கருப்பை மற்றும் கரு முட்டைகளுக்குள் உள்ள சுரப்புகளும் விந்தணுவின் பாதையை மாற்றியமைத்து, அவற்றின் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது தடுக்கும், அவற்றின் நிலைத்தன்மையையும் அது மாற்றும்.

சுருக்கமாக சொல்வதெந்றால்,, "இது கருமுட்டையின் இயந்திர நடவடிக்கை மற்றும் ஒத்திசைவு இயக்கத்தைப் போல- அது ஒரு உப்பு அல்லது பிசுபிசுப்பான திரவம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை pH - இரண்டும் பெண் இனப்பெருக்க மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது கருத்தரித்தல் நிகழ்வதை கட்டுப்படுத்துகிறது. அதாவது: எந்த விந்தணுவானது கருமுட்டையைச் சந்திக்க அனுமதிக்கப் போகிறது என்பதை இந்த கட்டம்தான் தீர்மானிக்கிறது" என்று அமெரிக்காவில் உள்ள ஸ்மித் கல்லூரியின் உயிரியல் பேராசிரியரான விர்ஜினா ஹேசன்.

"யோனி இருக்கும் சூழலின் pH, விந்தணுக்களுக்கு உகந்ததை விட குறைவாக உள்ளது. ஆனால் விந்தணுக்களின் சவ்வுகள் மற்றும் நொதிகளில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட இந்த அமிலத்தன்மை அவசியம் (...) அவை அதிக இயக்கம் பெற வாய்ப்பளிக்கும். ஒரு வேகமான வளர்சிதை மாற்றம், ஓசைட்டின் வெளிப்புற புரத அடுக்கில் ஊடுருவக்கூடிய திறன் (முதிர்ச்சியடையாத கருமுட்டை), இருந்தால் இது ஊடுருவுவது மிகவும் கடினம்" என்று ஸ்பெயினில் உள்ள யூஜின் குழுமத்தின் ஆராய்ச்சியாளர் ஃபிலிப்போ ஜம்பெல்லி விளக்குகிறார்.

சில ஆராய்ச்சியாளர்கள் பெண் உச்சநிலையில் இருக்கும் போது உள் தசை சுருக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் விந்தணு மேல்நோக்கி பயணம் செய்வதில் பங்களிப்பை வழங்ககக்கூடும் என்று கருதுகின்றனர், ஆனால் மற்றவர்கள் இந்த கருத்துருவை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

குறுகிய பயணம்

இதற்கிடையே பெண்ணின் முட்டை, வெற்றி பெறும் விந்தணுவின் வருகைக்காக செயலற்ற முறையில் காத்திருப்பதில்லை என்ற கூற்றை கவனிக்க வேண்டும்.

முட்டைக்கு தன்னிச்சையாக நகரும் திறன் இல்லை என்றாலும், குழாய்களுக்குள் இருக்கும் சிலியா (ஒரு வகையான முடி) கருப்பையில் தொடங்கும் ஒரு குறுகிய பயணத்தில் கீழ்நோக்கி நகர உதவுகிறது.

"முட்டை கருப்பையை நோக்கி ஃபலோபியன் குழாய் வழியே நகர்கிறது, விந்தணுக்களை ஈர்க்கும் மற்றும் அதை நோக்கி தீவிரமாக வழிநடத்தும் கெமோஅட்ராக்டன்ட்ஸ் எனப்படும் வேதியியல் மூலக்கூறுகள் அதை சாத்தியமாக்கும்," என்கிறார் ஜாம்பெல்லி.

 

விந்தணு கருத்தரித்தல் நடைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கருத்தரித்தல் பற்றி நாம் கற்றுக்கொண்டது யதார்த்தத்துடன் பொருந்தவில்லை.

முட்டையால் இந்த மூலக்கூறுகளின் விளைவை "ஈர்க்கவோ மறுதலிக்கவோ முடியும். அதே போல் ஒவ்வொரு விந்தணுக்கள் எங்கு செல்கின்றன என்பதையும் அதனால் மாற்ற முடியும்," என்கிறார் ஹேசன்.

விந்தணுவிற்கும் கருமுட்டைக்கும் இடையிலான சந்திப்பை ஊடுருவலின் செயலாக விவரிப்பதும், அப்போதுஎன்ன நடக்கிறது என்பதை துல்லியமாக சித்தரிப்பதும் கூட முடியாத காரியம்தான். ஏனெனில் முட்டையால் மட்டுமே விந்தணுக்களை ஈர்க்க முடியும் அல்லது அதன் ஊடுருவலை கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் - ஒற்றை விந்தணு கூட திறன் பெற்றதாக அமைந்து முட்டைக்குள் ஊடுருவிச் செல்ல வாய்ப்புண்டு.

உண்மையில் பரஸ்பர தொடர்புகளின் ஒரு செயல்முறையாக இதை பார்க்க வேண்டும். இரு தரப்பினரும் ஒரு செயலில் எந்த அளவுக்கு பங்கு வகிக்கிறார்கள். தொடர் ஏற்பிகள் மற்றும் ரசாயன பொருட்கள் என பல கூறுகள் இந்த செயல்முறைக்குள் அடங்கியிருக்கின்றன.

தனித்து விடப்பட்ட சூழல்

ஆய்வாளர்கள் சொல்வது போல் விந்தணு உருவாகும் சூழல் உண்மையில் தனித்து விடப்பட்ட களமாக இருக்கிறதா?

ஹேசனின் கருத்துப்படி, இது மீண்டும் ஒரு துரதிருஷ்டவசமான பெயரடை ஆகும். ஏனெனில் ஓர் ஆண் பார்வையிலேயே இது நிகழ்வு எப்போதும் விவரிக்கப்படுகிறது.

"நீங்கள் அதை ஒரு போட்டியாகக் கருதினால் அது தனித்து விடப்பட்டதாகவும் இணைந்து நடப்பதற்கானதாகவும் தோன்றாது," என்று அவர் கூறுகிறார்.

"சாத்தியமான சந்ததிகளின் தலைமுறையை உருவாக்கும் செயல்முறையை இந்த சூழலே ஊக்குவிக்கிறது, எனவே இது இலக்கின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. இரு தரப்பும் ஒன்று கூடி சாதித்தால்தான் கடைசியில் நம் கையில் ஒரு குழந்தை வருகிறது," என்கிறார் ஹேசன்.

 

விந்தணு கருத்தரித்தல் நடைமுறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்த சூழல் முடிந்தவரை பல சந்ததிகளை உருவாக்கக்கூடிய சிறந்த குழந்தையை உருவாக்கவே முயற்சிக்கிறது, எனவே விந்தணு பயணிக்கும் சூழல் தனித்து இயங்கக் கூடியதாக இருக்க முடியாது.

"இதை ஓர் பெண்ணின் பார்வையில் பார்ப்பதாக இருந்தால், கருப்பை சிறந்த சந்ததியைப் பெறுவதில் தாய்க்கு நன்மை செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்கிறது," என்கிறார் அவர்

புதிய தொழில்நுட்பங்கள், பழைய யோசனைகள்

கருத்தரித்தல் செயல்முறையின் சில விவரங்கள் ஒப்பீட்டளவில் சமீபத்தில் அறியப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கு நன்றி கூற உகந்தவை. விந்தணு இயக்கத்தின் சிறிய முக்கியத்துவம் போன்ற பல தகவல்கள் பல தசாப்தங்களாக அறியப்பட்டே வந்திருக்கின்றன.

அமெரிக்க மானுடவியலாளர் எமிலி மார்ட்டின் கருத்தரித்தல் பற்றி பேசுவதற்குப் பயன்படுத்தப்படும் மொழியின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர், கலாசார மதிப்புகள் எவ்வாறு உலகைப் பற்றிய கண்டுபிடிப்புகளை விவரிக்கின்றன, இயற்கையை உணர உதவியுள்ளன என்பதையும் அவர் அழகாக விளக்கியிருக்கிறார்.

1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட இவரது கல்வி உரை, இந்த விஷயத்தில் அறிவியல் நூல்களில் மறைந்திருக்கும் பாலின நிலைப்பாடுகளை விரிவாக பகுப்பாய்வு செய்கிறது. இது பெண்ணியத்திற்கான விளக்கக் குறிப்புரைகளாகவும் உள்ளன.

பிபிசி முண்டோ ஆலோசித்த வல்லுநர்கள் அறிவியலிலும், கல்வியில் முடிவெடுக்கும் பகுதிகளிலும் பெண் பிரதிநிதித்துவம் இல்லாததையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

"அறிவியல் தொடர்பாக மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டவர்களின் எண்ணிக்கை போதிய வகையில் இல்லாதிருப்பது, பிரதிநிதித்துவம் தொடர்பாக நீங்கள் எழுப்பும் கேள்விகளிலும் நீங்கள் கண்டுபிடிக்கப்போகும் விளக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்" என்கிறார் கிறிஸ்டின் ஹூக்.

நாம் பயன்படுத்தும் சொற்களை கேள்விக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஹேசன் வலியுறுத்துகிறார். அதைப் பற்றிப் பேச நடுநிலை மொழிப்லுலமை வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்: உதாரணமாக, "கருத்தரித்தல் அல்ல கருவுருதல்" என்ற வார்த்தையையே நாம் பயன்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.

ஆனால் கருத்தரிப்பின் பொறிமுறையைப் பற்றிய நமது புரிதலில் பாலின சார்புகளை அகற்றுவதென்பது, அறிவியல்பூர்வ தவறான தகவலை சரிசெய்வதற்கும் உயிரியல் செயல்முறைகளை துல்லியமாக விவரிக்கவும் உதவ வேண்டும் என்பது அவசியமில்லை என்பது அவரது பார்வை.

சரியான வார்த்தையைப் பயன்படுத்துவது, தற்போதுள்ள கருத்தரிப்பு உதவி சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகை செய்வதற்கும் ஒரு அடிப்படை படியாக அமையும் என்கிறார் விர்ஜினா ஹேசன்.

https://www.bbc.com/tamil/science-63491549

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.