Jump to content

அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு

By DIGITAL DESK 3

05 NOV, 2022 | 07:52 PM
image

அமெரிக்காவின் பவர்போல் லொத்தர்சீட்டிழுப்பின் ஜக்பொட் பரிசுதொகை 160 கோடி டொலர்களாக (சுமார் 57,231 கோடி இலங்கை ரூபா, சுமார் 13,117 கோடி இந்திய ரூபா) அதிகரித்துள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றுக்கான மிகப்பெரிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும்.

புளோரிடா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை  இரவு 10.59 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிறு காலை 8.29 மணிக்கு) இச்சீட்டிழுப்பு நடைபெறும்.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம்  திகதியின் பின் பவர்போல் (Powerball) லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக வெல்லப்பட்ட ஆகக்கூடுதலான பவர்போல் ஜக்பொட் பரிசுத் தொகை 1.186 பில்லியன் டொலர்களாகும்.  கலிபோர்னியா, புளோரிடா, டென்னஸி மாநிலங்களிலிருந்து 3 டிக்கெட்டுகளுக்கு இப்பரிசுத் தொகை கிடைத்தது. 

2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வௌ;வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த ஜக்பொட் பரிசை வெல்வதற்கான நிகழ்தகவு 292.2 மில்லியனில் ஒன்று என பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த  1.6 பில்லியன் (160 கோடி)  டொலர் பரிசுத் தொகையை வெல்பவர்கள் அமெரிக்க வரித்துறைக்கு அத்தொகையில் சுமார் 40 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். 

ஒருவரே இப்பரிசுத் தொகையை வென்றால், அவர் சுமார் 782.4 மில்லியன் டொலர்களை ஒரே தடவையில் பெறலாம். அல்லது 29 வருடங்களுக்கு தவணை அடிப்படையில் பரிசுப்பணத்தைப் பெறலாம்.

https://www.virakesari.lk/article/139222

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி: 37 முறை யாரும் வெல்ல முடியாதது ஏன்?

  • சாம் கார்பெல்
  • பிபிசி நியூஸ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

லாட்டரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் முதன்மையான பவர் பால் லாட்டரியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக யாரும் வெற்றி பெறாத நிலையில், இந்த வார இறுதி குலுக்கலில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகிலேயே பெரிய பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

இப்போது விற்பனையில் இருக்கும் சனிக்கிழமையன்று வெளியான பவர்பால் ஜாக்பாக்ட் லாட்டரி விளம்பரத்தில் வரிக்கு முந்தைய பரிசானது 1.6 பில்லியன் அமெரிக்க டாலராக (தோராயமாக 13 ஆயிரம் கோடி ரூபாய்) அளவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பவர் பால் லாட்டரி பரிசாக அதுவரை இல்லாத அளவுக்கு 1.59 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை மூன்று போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

292 மில்லியனில் ஒருவருக்குத்தான் லாட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பவர் பால் நிறுவனம் கூறுகிறது.

 

இந்த விளையாட்டு கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் தலைநகர் வாஷிங்டன், மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகள் ஆகிய அமெரிக்க பிரதேசங்கள் உள்ளிட்ட 45 மாநிலங்களில் இது நடத்தப்படுகிறது.

ஒரு டிக்கெட் ஜாக்பாட்டில் வெற்றி பெற ஆறு எண்களுடன் பொருந்திப் போக வேண்டும். தொடர்ச்சியாக நடைபெற்ற 39 குலுக்கல்களில் யாரும் வெற்றி பெறவில்லை.

 

ரொக்க பரிசு தோராயமாக 782.4 மில்லியன் டாலர்

பட மூலாதாரம்,IMAGEDEPOTPRO

பரிசுக்கான golden ticket என்ற டிக்கெட்டை வைத்திருப்பவருக்கு முழு தொகையும் ஆண்டுக்கு ஒருமுறை என்ற முறையில் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

எனினும் அனைத்து வெற்றியாளர்களும் முன் பண விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். அப்போது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்த தொகை மொத்தமாக வழங்கப்படும்.

சனிக்கிழமை இரவுக்கான குலுக்கல் ரொக்க பரிசு தோராயமாக 782.4 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தொடக்கத்தில் நடந்த வெற்றிகரமான ஜாக்பாக்ட்டை விடவும் இது ஒரு பெரிய முன்னெடுப்பாகும். அப்போது பென்சில்வேனியாவில் டிக்கெட் வாங்குபவர் ஒப்பீட்டளவில் மிதமான அளவில் 206.9 மில்லியன் டாலர் வெற்றி பெற வேண்டியிருந்தது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு அமெரிக்கா மாநிலங்களைச் சேர்ந்த பரிசுக்கான டிக்கெட் வைத்திருந்த மூன்று பேர் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

வெற்றிபெற்ற டென்னசீ மாநிலத்தை சேர்ந்த ஜான் மற்றும் லிசா ராபின்சன், புளோரிடாவைச் சேர்ந்த மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட், மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மார்வின் மற்றும் மே அகோஸ்டா ஆகியோர் தோராயமாக மொத்த தொகை விருப்பத்தின் பேரில் 327.8மில்லியன் டாலர் பெற்றனர்.

ராபின்சன்கள் இருவரும் பரிசுக்கான கோல்டன் டிக்கெட் மற்றும் இதர மூன்று டிக்கெட்களை உள்ளூர் மளிகைக்கடையில் வாங்கியிருந்தனர். அப்போது அவர்கள் என்பிசி நியூஸ் டுடேவுக்கு அளித்த பேட்டியில், "ரொக்கமாக பரிசை பெற விருப்பம் தெரிவித்தோம். ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை" என்று கூறியிருந்தனர்.

என்பிசியிடம் பேசிய மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட் ஆகியோர், தாங்கள் சீக்கிரமாக ஓய்வு பெற உள்ளதாகவும், மசாஜ் செய்வதற்கும், பழைய வாகனத்தை மாற்றுவதற்கும் இந்தப் பணத்தை செலவழிக்க இருப்பதாக கூறினர்.

https://www.bbc.com/tamil/global-63533332

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

204 கோடி டொலர் (75,195 கோடி ரூபா) ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது! 

By DIGITAL DESK 3

10 NOV, 2022 | 03:30 PM
image

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில், 204 கோடி டொலர்கள் (சுமார் 75,195 கோடி இலங்கை ரூபா, சுமார் கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியுடைய ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டுள்ளது. 

உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் வெல்லப்பட்ட மிகக் கூடுதலான ஜக்பொட் பரிசு இதுவாகும்.

பவர்போல் எனும் லொத்தர் சீட்டிழுப்பிலேயே இப்பாரிய பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. 

தனி ஒரு சீட்டுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சனிக்கிழமை பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 160 கோடி டொலர்களாக அதிகரித்து சாதனை படைத்தது. ஆனால் அன்றைய தினமும் இப்பரிசு வெல்லப்படவில்லை. 

அதையடுத்து கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை சீட்ழுடிப்புக்கான ஜக்பொட் பரிசுத் தொகை 2.04 பில்லியன் டொலர்களாக  அதிகரித்தது.

Joseph-Chahayed-powerball---bonus-581200

ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத் 

இச்சீட்‍டிழுப்பு திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்தது. ஆனால், அதிக ‍‍டிக்கெட் விற்பனை காரணமாக தரவுகளை பரிசீலிப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது,

இச்சீட்டிழுப்பில், கலிபோர்னியா மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்ட தனியான ஒரு லொத்தர் சீட்டுக்கு இப்பரிசு கிடைத்துள்ளதாக பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.  

வெற்றியாளர் ஒரே தடவையில் சுமார் 140 கோடி டொலர்களை பெற முடியும். அல்லது மொத்தத் தொகையான 204 கோடி டொலர்களை 30 வருடங்களில் தவணை முறையில் பெற முடியும். 

இந்த ஜக்பொட் பரிசை வென்றவரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

லொத்தர் சீட்டு விற்பனை செய்தவருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்

இதேவேளை. பரிசுக்குரிய லொத்தர் சீட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 கோடி இலங்கை ரூபா, 8 கோடி இந்திய ரூபா) போனஸாக பவர்போல் லொத்தர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜோசப் சஹாயாத் என்பவரே இவ்வாறு 10 லட்சம் டொலர் போனஸ் தொகையை பெற்றுள்ளார். இவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். 

லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்வதை தான் விரும்புவதாக கூறும் ஜோசப் சஹாயெத், இவ்வளவு பெருந்தொகை பரிசு தனக்கு கிடைத்த போதிலும் வேலைசெய்வதை நிறுத்த மாட்டேன். வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு கடையில் பணியாற்றச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார். 

Joseph-Chahayed-powerball---bonus-1200.j

ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத்  (மத்தியில்)

கடந்த ஆகஸ்ட் 3 ஆம்  திகதியின் பின் பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டமை இதுவே முதல் தடiவாயகும்.

2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வெள்வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/139643

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பில் 27,605 கோடி  ரூபா ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது

By SETHU

07 FEB, 2023 | 04:08 PM
image

அமெரிக்காவின் பவர்போல் லொத்தர் சீட்டிழுப்பில் 757 மில்லியன் டொலர் (27,605 கோடி இலங்கை ரூபா, 6238 கோடி இந்திய ரூபா) பரிசை வென்றுள்ளார்.

வொஷிங்டன் மாநிலத்தைச்  சேர்ந்த ஒருவரே இப்பரிசை வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சீட்டிழுப்பில் ஜக்பொட் பரிசுக்கான 05,11,22,23,69 மற்றும் 07 ஆகிய வெற்றி இலக்கங்கள் மேற்படி நபரின் லொத்தர் சீட்டுடன் பொருந்தியுள்ளன.

இபபரிசை வென்றவர் ஒரே தடவையில் 407.2 மில்லியன் டொலர்களைப் பெறலாம். அல்லது 29 வருடகாலத்தில்  தவணை முறையில் 754 மில்லியன் டொலர்களைப் பெறலாம்.

ஆமெரிக்காவின் பவர்போல் லொத்தர் வரலாற்றில் வெல்லப்பட்ட 5 ஆவது அதிகூடிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும். 

நேற்று இரவுக்கு முன்னர் இறுதியாக 2022 நவம்பர் 19 ஆம் திகதி பவர்போல் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது. 

அப்போது கான்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 92.9 மில்லியன் டொலர்களை வென்றிருந்தார்.

அதன்பின் பல வாரங்களாக ஜக்பொட் பரிசு வெல்லப்படாததால் அதன் பெறுமதி அதிகரித்து வந்தது.

நேற்றிரவு ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டதால், நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 20 மில்லியன் டொலர்களாக  (732 கோடி இலங்கை ரூபா, 166 கோடி இந்திய ரூபா) குறைவடைந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/147640

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.