Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கீதா பாண்டே
  • பதவி,பிபிசி நியூஸ், டெல்லி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
சிங்கிள் பெண்கள்
 
படக்குறிப்பு,

ஸ்ரீமோயி பியூ குண்டு

சிறந்த மனைவி மற்றும் தாய்மார்களாக இருக்கும் விதத்திலேயே இந்தியப் பெண்கள் பாரம்பர்ய முறைப்படி வளர்க்கப்படுகின்றனர். திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்கான மிக முக்கிய வாழ்நாள் இலக்காக கருதப்படுகிறது. 

 

ஆனால், இப்போது அதிகளவிலான பெண்கள் சுதந்திரமான தனிமையான பாதையை வகுத்து சிங்கிளாக (Single) இருக்க விரும்புகின்றனர். 

 

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு டெல்லியில் உள்ள கரீபியன் லவுஞ்சில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மதிய உணவு கூடுகையில் கலந்துகொண்டேன். அரட்டைகளும் சிரிப்பு சத்தத்தாலும் அந்த அறை நிரம்பியிருந்தது. 

 

அப்பென்கள் அனைவரும் ‘ஸ்டேட்டஸ் சிங்கிள்’ (Status Single) என்கிற முகநூல் குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவில் உள்ளவர்கள், இந்திய நகரங்களைச் சேர்ந்த சிங்கிள் பெண்களாவர். 

 

“விதவைகள், விவாகரத்தானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள் என நம்மை மற்றவர்கள் அழைப்பதை நிறுத்துவோம்,” என, எழுத்தாளரும் அக்குழுவை உருவாக்கியவருமான ஸ்ரீமோயி பியூ குண்டு அக்குழுவை நோக்கி கூறினார். “நம்மை சிங்கிள் பெண்கள் என பெருமையாக அழைப்போம்.” என்கிறார் அவர். 

 

அப்போது, அங்கு குழுமியிருந்த பெண்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

 

“திருமணம் குறித்தே எப்போதும் சிந்திக்கப்படும்” ஒரு நாட்டில் சிங்கிளாக இருப்பது குறித்து பல தவறான கற்பிதங்கள் நிலவுகின்றன. 

 

இந்திய கிராமங்களில் சிங்கிளாக இருக்கும் பெண்கள் அவர்களின் குடும்பத்தினரால் சுமைகளாக கருதப்படுகின்றனர். கணவனை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பிருந்தாவனம் மற்றும் வாரணாசி போன்ற புனித நகரங்களுக்கு விரட்டப்பட்டுள்ளனர். 

 

ஸ்ரீமோயி பியூ குண்டுவும் டெல்லி ‘பப்’பில் நான் சந்தித்த பெண்களும் வித்தியாசமானவர்கள். பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், தொழில்முனைவோர், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். அவர்களுள் சிலர் திருமணமாகி பிரிந்தவர்கள், விவாகரத்தானவர்கள் அல்லது கணவரை இழந்தவர்கள். மற்றவர்கள் திருமணமே செய்து கொள்ளாதவர்கள். 

 

சிங்கிள் பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிங்கிள் பெண்கள் குறித்த கற்பிதங்கள்

நகர்ப்புறங்களைச் சேர்ந்த பணக்கார சிங்கிள் பெண்கள், வங்கிகள், நகை வடிவமைப்பாளர்கள், நுகர்வு நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

 

மேலும், பிரபலமான கலாசார கூறுகளிலும் சிங்கிள் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். சிங்கிள் பெண்கள் முதன்மை கதாபாத்திரமாக தோன்றிய குயின், பிகு போன்ற பாலிவுட் திரைப்படங்களும், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் (Four More Shots Please) உள்ளிட்ட வெப் சீரீஸ்களும் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளன.  

 

திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்வதற்கு சம உரிமை இருக்கிறது என, உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, சிங்கிளாக இருக்கும் பெண்களின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும் வகையில் இருப்பதாக பாராட்டப்பட்டது. 

 

இத்தகைய வரவேற்கத்தக்க மாற்றங்கள் இருந்தாலும் சிங்கிளாக இருப்பவர்களை சமூகம் அணுகுவது இன்னும் இறுக்கமாகவே இருக்கிறது. மேலும், ஸ்ரீமோயி சொல்பது போல வசதி படைத்த பெண்களுக்கும் சிங்கிளாக இருப்பது எளிதாக இருப்பதில்லை, மேலும் அவர்கள் எந்நேரமும் மற்றவர்களால் மதிப்பிடப்படுகின்றனர். 

 

“ஓர் சிங்கிள் பெண்ணாக நான் பாகுபாட்டையும் அவமரியாதையையும் சந்தித்துள்ளேன். மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நான் வாடகை வீட்டை தேடிய போது, அங்கிருந்த ஹவுசிங் சொசைட்டியை சேர்ந்தவர்கள் நீங்கள் மது அருந்துவீர்களா, பாலியல் உறவில் ஈடுபாடு கொண்டவரா? ஆகிய கேள்விகளை கேட்டனர்,” என்கிறார், ஸ்ரீமோயி. 

 

“மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அண்டை வீட்டார் போல” நடந்துகொண்ட மகப்பேறு மருத்துவர்களை ஸ்ரீமோயி சந்தித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய சார்பாக அவரின் தாய் திருமண மேட்ரிமோனியல் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்மூலமாக தான் சந்தித்த நபர் ஒருவர் தன்னை சந்தித்த 15 நிமிடங்களிலேயே “நான் கன்னித்தன்மையுடன் உள்ளேனா?” என கேட்டதாக கூறுகிறார் அவர். 

 

“சிங்கிளாக இருக்கும் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் கேள்வி இது,” என்கிறார் அவர். 

 

 

திருமணத்தை வெறுக்கும் பெண்கள்

ஆனால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 7.1 கோடி பெண்கள் சிங்கிளாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களை அவமதிப்பது பொருத்தமாக இல்லை. இந்த 7.1 கோடி என்பது பிரிட்டன் அல்லது பிரான்ஸின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட அதிகம். 

 

இந்த எண்ணிக்கை கடந்த 2001ல் 5.12 கோடியாக இருந்ததிலிருந்து தற்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட் பெருந்தொற்றால் தாமதமாகியுள்ளது. ஆனால், “இப்போது வரை, “எங்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்திருக்கும்” என்கிறார் ஸ்ரீமோயி. 

 

இந்தியாவில் திருமண வயது அதிகரித்திருப்பது இந்த எண்ணிக்கை அதிகமானதற்கு ஓர் காரணம். அதாவது, சிங்கிளாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது பதின்பருவத்தின் இறுதியிலோ அல்லது 20களின் தொடக்கத்திலோ இருப்பார்கள். மேலும், கணவரை இழந்த பெரும்பாலான பெண்களும் இதில் அடங்குவர். ஆண்களை விட பெண்கள் அதிகமான வாழ்நாளை கொண்டிருப்பதை இதற்கு காரணமாக சொல்லலாம். 

 

ஆனால், “தற்போது சூழ்நிலைகளால் மட்டுமல்லாமல் தாங்களாகவே விரும்பி பல பெண்கள் சிங்கிளாக இருப்பதை” தான் காண்பதாக ஸ்ரீமோயி கூறுகிறார். 

“இதுதான் சிங்கிளாக இருப்பதில் நிகழ்ந்துள்ள தற்போதைய மாற்றம்” என்றும் அதனை அங்கீகரிப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார்.

 

“தாங்களாகவே விரும்பி சிங்கிளாக இருக்கும் பல பெண்களை நான் பார்க்கிறேன். அவர்கள் திருமணம் எனும் கருத்தியலையே புறக்கணிக்கின்றனர். ஏனெனில் திருமணம் என்பது பெண்களுக்கு அநீதி இழைக்கும் அவர்களை ஒடுக்கும் ஆணாதிக்க நிறுவனம்” என்றார். 

சிங்கிள் பெண்கள்

பட மூலாதாரம்,SREEMOYEE PIU KUNDU

சிங்கிளாக இருப்பதென்பதை, 29 வயதில் கணவரை இழந்த தன்னுடைய தாய் சந்தித்த பாகுபாட்டின் வாயிலாகவே அவர் அணுகுகிறார். 

 

“ஆண் துணை இல்லாத ஒரு பெண் எவ்வாறு இந்த ஆணாதிக்க, பெண் வெறுப்பு அமைப்பில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை பார்த்தே நான் வளர்ந்தேன். வளைகாப்பு, உறவினரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் என் அம்மா புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

மணப்பெண்ணிடம் இருந்து விலகி நிற்குமாறு அவரிடம் கூறியுள்ளனர். ஏனெனில், கணவரை இழந்த பெண்ணின் நிழல் அபசகுணமாக கருதப்படுகிறது.” என்கிறார் ஸ்ரீமோயி. 

 

44வது வயதில் அவருடைய தாய் காதலித்து மறுதிருமணம் செய்துகொண்டபோதும் “அவர் சமூகத்தின் கோபத்திற்கு ஆளானார்” - “வருத்தம், அழுகை, பாலியல் இன்பம் அற்ற, ஆசைகளற்ற - இவை அனைத்தும் இல்லாத பெண்ணாக ஓர் விதவைப் பெண் எப்படி இருக்க முடியும்? எப்படி அவர் மீண்டும் ஒரு துணையை ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேட்டனர். 

 

 

"நேர்மறையான மாற்றம்"

தன் தாய் சந்தித்த அவமானங்கள், தன் மீது பெரும் தாக்கத்தை செலுத்தியதாக அவர் கூறுகிறார். 

 

“திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மிகுந்த ஆசையுடன் நான் வளர்ந்தேன். கதைகளில் வரக்கூடியது போன்ற திருமணம் ஏற்றுக்கொள்ளுதலை வழங்கும் என்றும் இருட்டை விலக்கும் என்றும் நம்பினேன்,” என்கிறார் அவர். 

 

ஆனால், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக இருந்த இரண்டு தோல்வியுற்ற உறவு மற்றும் 27 வயதில் முடிவடைந்த திருமண உறவு ஆகியவற்றால், ஆண்களுக்கு அடிபணியக்கூடிய வழக்கமான திருமண முறை தனக்கானது அல்ல என்பதை அவர் உணர்ந்தார். 

 

கலாசாரம், மதம் அல்லது சமூகம் ஆகியவற்றால் அல்லாமல், “மரியாதை, அங்கீகாரம்” ஆகியவற்றால் வருவதே தனக்கு பொருத்தமான உறவு முறை என்கிறார் அவர். 

 

ஞாயிற்றுக்கிழமை நான் சந்தித்த பெரும்பாலான சிங்கிள் பெண்கள் இதனை ஒப்புக்கொண்டனர்.

 

ஆணாதிக்க சமூகமாக நீடிக்கும் இந்தியாவில் 90 சதவீத திருமணங்கள் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த திருமணங்களில் தான் யாரை திருமணம் செய்கிறோம் என்றோ அல்லது தங்களுக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இருக்கிறதா என்றோ பெண்களிடம் கேட்கப்படுவதில்லை. 

 

டெல்லிக்கு அருகே உள்ள குர்கோவனை சேர்ந்த 44 வயதான வாழ்வியல் பயிற்சியாளராக உள்ள பாவனா தாஹியா, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பலவிஷயங்கள் மாறி வருவதாகவும் சிங்கிளாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கொண்டாட்டத்திற்கான ஓர் காரணம் என்றும் கூறுகிறார் அவர். 

 

“நாங்கள்  கடலின் சிறுதுளியாக இருக்கலாம், ஆனால், இப்போது சிறுதுளியாவது இருக்கிறது,” என்கிறார் அவர். 

 

“சிங்கிள் பெண்களாக இருப்பதற்கான உதாரணங்கள் அதிகமாக உள்ளன, அவை சிறந்ததாக உள்ளன. வழக்கமாக, கணவரின் வேலை, அவருடைய திட்டங்கள், குழந்தைகளின் பள்ளி உள்ளிட்டவை குறித்தே உரையாடல்கள் இருக்கும். பெண்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால், இப்போது இந்த உரையாடல்கள் மாறிவருகின்றன.

 

“நாங்கள் இப்போது நேர்மறையான மாற்றத்தை உருவாக்கி வருகிறோம்.”

https://www.bbc.com/tamil/articles/cqv47n0092vo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஏராளன் said:

சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள்

வருங்கால சந்ததியை பார்த்து ஐயோ பாவம் என்று சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

இனிவரும் காலங்களில் எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் தான் 😁

கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.😁

கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி.   🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வருங்கால சந்ததியை பார்த்து ஐயோ பாவம் என்று சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

இனிவரும் காலங்களில் எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் தான் 😁

அது கொஞ்சம் நல்லது போலவும் இருக்கு! ஏறிக் கொண்டு போற சனத்தொகையும் குறையும் தானே அண்ணை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ஏராளன் said:

அது கொஞ்சம் நல்லது போலவும் இருக்கு! ஏறிக் கொண்டு போற சனத்தொகையும் குறையும் தானே அண்ணை?

அதுக்காகத்தான் ஓரினச்சேர்க்கையை பல அரசுகள் ஆதரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதுக்காகத்தான் ஓரினச்சேர்க்கையை பல அரசுகள் ஆதரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஒருபாலின சேர்க்கையாளரான பிரிட்னி கிறைனர், தனது சக கூடைப்பந்தாட்ட வீராங்கனையான குளோறி ஜோன்சனை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். .வி.பி. முறையில் குளோறி ஜோன்சன் இரட்டைக் குழந்தைகளை பிரசிவித்தார். 2016 ஆம் ஆண்டு குளோறியும் பிரிட்னியும் விவாகரத்து செய்தனர். குழந்தைகளுக்காக குளோறிக்கு நிதியுதவி வழங்குமாறு பிரிட்னிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

வருங்கால சந்ததியை பார்த்து ஐயோ பாவம் என்று சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

இனிவரும் காலங்களில் எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் தான் 😁

கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.😁

கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி.   🤪

கடையில பொம்மை  பொரு ட் கள் வந்ததன் விளைவாக கூட இருக்கலாம்  இதுகள் சிங்கிளாகவே சிங்கி அடிக்க 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடையில பொம்மை  பொரு ட் கள் வந்ததன் விளைவாக கூட இருக்கலாம்  இதுகள் சிங்கிளாகவே சிங்கி அடிக்க 

 

இரசாயனம் கலந்த உணவுகளால் ஹோர்மோன்  திருவிளையாடல்கள். மற்றும் திறந்த வெளி பாலியல் கலாச்சாரம் 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.