Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

( எம்.எப்.எம். பஸீர்)

 கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவின்  பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட  ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டி ஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை ( 16) கண்டி பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். 

குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு தூதுக் குழுவின் பயணத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியமை, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் அவர்  இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வெளிநாட்டு தூதுக் குழு கட்டுகஸ்தோட்டை பாலத்தை அண்மித்த பகுதியில் பயணிக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்புக்கு சென்ற  அதிகாரிகளின் தகவல்கள் பிரகாரம் சுதேவவைக் கைதுசசெய்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.  சுதேவவை கைது செய்யும் போது அவருடன்  பிரபல பாடகர் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சுதேவ மீது குடி போதையில் வாகனம் செலுத்தியமை குறித்து மட்டும் குற்றச்சாட்டு முன்வைத்து அவரை பொலிஸ்  பிணையில் விடுவிக்க பொலிஸார் நடவடிக்கைஎ டுத்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி சுதேவ ஹெட்டி ஆரச்சி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் பொலிஸ் பிணையில்  அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கோட்டாவின் ஊடக பணிப்பாளர் சுதேவ  கண்டியில் வைத்து கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பிழம்பு said:

குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு தூதுக் குழுவின் பயணத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியமை, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் அவர்  இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
———
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சுதேவ மீது குடி போதையில் வாகனம் செலுத்தியமை குறித்து மட்டும் குற்றச்சாட்டு முன்வைத்து அவரை பொலிஸ்  பிணையில் விடுவிக்க பொலிஸார் நடவடிக்கைஎ டுத்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி சுதேவ ஹெட்டி ஆரச்சி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் பொலிஸ் பிணையில்  அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இவர் மூன்று பெரிய குற்றங்கங்கள் செய்து… கையும் களவுமாக பிடிபட்டு இருந்தும்…..
கோத்தாவின் ஆள் என்பதற்காக, ஒரு வழக்கு மட்டுமே போட்டு இருக்கின்றார்கள்.
அது கூட… விரைவில் இல்லாமல் ஆக்கப் பட்டு விடும்.

மீசாலையில்…. இரண்டு சிறுவர்கள் உட்பட பன்னிரண்டு தமிழர்களை கொலை செய்த இராணுவத்தினனையே…. பொது மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்து விடுதலை செய்த நாட்டில் வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிலும் பாருங்கள்! குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு தூதுக் குழுவின் பயணத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியமை, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டவரை, சும்மா இருந்த அப்பாவி கோத்தபாயவுடன் கோத்து விடுவதை. தாங்களே கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தாங்களே பிணையும் அவசரமாய்  கொடுத்து ஆளை வெளியில அனுப்பியாச்சு. காரணம்; விசாரணை தீவிரமாகி அந்த அப்பாவிமனுஷன் உள்ளுக்கை போய்விடாமலிருக்க தீவிரம் காட்டுகினம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.