Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தல்களில் இராணுவம், - வான்படை அதிகாரியின் வாக்குமூலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல்களில் இராணுவம், - வான்படை அதிகாரியின் வாக்குமூலம். - நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வான் படை சார்ஜன் கொடித்துவக்கு முடியன்சிலகே சமன் ஹேமந்த தேசப்பிரிய என்பவர் திருமண உறவின் மூலமாக கருணாவுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஆவார்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவும் இணைந்து கடத்தல்களை மேற்கொண்டது குறித்து கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய சிறிலங்கா வான்படை அதிகாரி தேசப்பிரிய விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் நாள் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் வான்படை ஸ்குவான்ரன் லீடரான நிசந்த கஜநாயக்காவை கைது செய்ந்திருந்தனர். அவர் மக்களை கடத்தி பல மில்லியன் ரூபாய்களை கப்பமாக பெற்றதுடன், துணை இராணுவக் குழுவான கருணா குழுவுடனும், அந்த குழுவின் உறுப்பினர்களுடனும் நெருங்கிய தொடர்புகளையும் உடையவர். கடத்தல்களில் கஜநாயக்கவிற்கு உள்ள தொடர்புகளை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் செனிவிரட்ன முதலில் வெளிக்கொண்டு வந்திருந்தார். ஜூன் 6 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அவர் இதனை அம்பலப்படுத்தினார். கஜநாயக்க பாதுகாப்பு வட்டாரங்களின் ஆசீர்வாதத்துடன் கடத்தல்களில் ஈடுபடுவதாகவும், அவர் "ஹொலிடே இன்" விடுதியில் உள்ள 706 ஆம் அறையில் தங்கியிருந்து விடுதியின் முகாமைத்துவத்திற்கு தெரியாது தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் செனிவரட்ன தெரிவித்திருந்தார். எனினும் கடத்தல்களை அரசு மறுத்ததுடன், நாடாளுமன்றத்தை செனிவரட்ன தவறாக வழி நடத்துவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் தரவுகளின் படி நாட்டில் கடத்தல்களும், படுகொலைகளும் நாள் ஒன்றிற்கு 6 ஆக அதிகரித்திருந்தன. அதேசமயம், செனிவரட்னவின் அறிக்கையின் 3 நாட்களின் பின்னரும், அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான எதிர் நடவடிக்கையின் பின்னரும் அரசின் நடவடிக்கைகள் ஆட்டம் கண்டன. கஜநாயக்கா கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்த சதி நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினர் மற்றும் கருணா குழு தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. கிழக்கு விடுவிக்கப்பட்டதோ இல்லையோ அங்கு சட்டத்திற்கு முரணாக ஆயுதம் தாங்கிய கருணா குழு உறுப்பினர்களும், அரச படையினரும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவது உறுதியானது.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் நடைபெறும் படுகொலைகள், கடத்தல்களில் கருணா குழுவினரினதும், படையினரினதும் தொடர்புகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது மனித உரிமை மீறல்கள், பொருளாதார நெருக்கடி, அரசியல் பலவீனம் போன்றவற்றில் அரசு சிக்கியுள்ள நிலையில் அதன் இரகசிய செயற்பாடுகள் வெளிவருகின்றன. இந்த நிலையில் முன்னாள் வான் போக்குவரத்து தலைவர் ரிரான் அலஸ், முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு 30 இலட்சம் ரூபாய்களுக்கு மூன்று ஏவுகணைகளை வழங்கியுள்ளனர் என கூறிவிட்டால் இந்த கடத்தல்களில் ஈடுபட்ட ஒருவரின் தண்டணையை நீக்கி விடுவதாக அதிகாரிகள் பேரம் பேசியதாக தெரியவந்துள்ளது.

துறைமுகம் மற்றும் வான் போக்குவரத்து அமைச்சராக மங்கள சமரவீர இருந்த போது அவரது வாகனங்களில் ஒன்றில் வன்னிக்கு ஏவுகணைகளை கொண்டு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் கையளித்ததாகவும் அதற்காக 30 லட்சங்களைப் பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னர் வாகனம் கொள்ளையிடப்பட்டதாக காட்டப்பட்டதாகவும் அறிக்கையை பதிவு செய்வதற்கும் அரச தரப்பு முயன்று வருகின்றது.

இது கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கஜநாயக்க தெரிவிக்கும் போது அதனை நடுநிலைபடுத்துவதற்காக உருவாக்கப்பட உள்ள கதையாகும். இந்த கடத்தல்களில் சம்மந்தப்பட்ட மற்றுமொரு வான் படை அதிகாரியை மங்களவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பயன்படுத்த முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வான் படை சார்ஜன் கொடித்துவக்கு முடியன்சிலகே சமன் ஹேமந்த தேசப்பிரிய என்பவர் திருமண உறவின் மூலமாக கருணாவுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஆவார்.

கஜநாயக்காவிற்கும் தேசப்பிரிய நெருங்கியவர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரிந்தவர்கள். ரிரான் அலசுடன் பேசி கஜநாயக்கவிற்கு வானூர்தி நிலைய பாதுகாப்பு பிரிவில் ஒரு உயர்ந்த வேலை வாங்கி கொடுக்கும் படி கோத்தபாய தன்னிடம் கூறியதாக சிறீபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் ரிரான் அதனைப் புறக்கணித்து விட்டார். சிறீபதி கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் நாள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சிறீபதியையும் கருணாவையும் இணைத்து தேசப்பிரிய அறிக்கை ஒன்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்கியிருந்தார். எனினும் அதில் சிறீபதி பெயருடன் கோத்தபாயாவின் பெயரும் இருந்ததால் அரசிற்கே அது நெருக்கடியாகி விட்டது. பின்னர் இந்த வழக்கு கோப்பு மூடப்பட்டு விட்டது.

கடத்தல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் ராஜபக்சாக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகளுக்கு அப்பால், தாம் நடவடிக்கை எடுப்பதாக அனைத்துலக சமூகத்தை நம்ப வைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சி ஆகும்.

எனினும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களினால் இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எப்போதும் திருடர்களிடம் நேர்மை இருக்கப்போவதில்லை என்பது உண்மை. ஆதனால் ஒவ்வொருவரும் மற்றவர் மீது கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக குற்றம் சுமத்தி வருவதனால் கருணா குழுவினருக்கும், படையினருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் அம்பலமாகியுள்ளது.

இலக்கம் 440-2, தெகிவளை வீதி, கன்டலியடே பலுவ, கடவத்தை எனும் முகவரியை கொண்ட 38 வயதான தேசப்பிரிய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கஜநாயக்க உட்பட பலர் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இரத்மலானை வான்படை தளத்தில் பணியாற்றிய இவர் 2004 ஆம் ஆண்டு அப்போது வான்படை தளபதியாக இருந்த டொனால்ட் பெரேராவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாற்றப்பட்டிருந்தார். அப்போது விங் கொமாண்டராக இருந்த கஜநாயக்க அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். பின்னர் அவர் கடந்த வருடம் ஓய்வுபெற்றார். தேசப்பிரியவை தளபதியின் பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரியாக கஜநாயக்க நியமித்தார். தளபதியின் இல்ல சுற்றாடலில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை தடுப்பதே தேசப்பிரியவின் பிரதான பணியாகும்.

குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் போது தேசப்பிரிய கூறிய மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் பின்வருமாறு:

வான் படை தளபதியின் இல்லத்தில் நான் எனது 3 மாதகால பணியை நிறைவு செய்த போது, எஸ்.பி.திசநாயக்கா விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். மட்டக்களப்பைச் சேர்ந்த சில தமிழ் இளைஞர்கள் பங்குபற்றிய விழா ஒன்று அவரது வீட்டில் நிகழ்ந்தது. அது டொனால்ட் பெரேராவின் இல்லத்திற்கு அருகில் இருந்தது. விழா அதிகாலை 2.00 மணிக்கு நிறைவு பெற்றது. அந்த சமயத்தில் ரூபன் என அழைக்கப்படும் கருணா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு என்னுடன் பழக்கம் ஏற்பட்டது. ரூபன் என்னிடம் தனது தொலைபேசி எண்ணையும் தந்தார். தான் கருணா குழுவின் உறுப்பினர் எனவும் தன்னை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதற்கு உதவுமாறும் ரூபன் என்னிடம் கேட்டிருந்தார். நான் இந்த செய்தியை விங் கொமாண்டர் கஜநாயக்கவிடம் தெரிவித்தேன்.

ரூபனின் தொலைபேசி இலக்கத்தையும் அவரிடம் கொடுத்தேன். ரூபன் உண்மையில் கருணா குழு உறுப்பினர் தானா என அறிவதற்காக கஜநாயக்க கருணா குழுவின் இரண்டாம் நிலை தலைவரான குபேரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இது அவர் கருணா குழுவுடன் நெருங்கிப் பணியாற்றி வருவதை எடுத்துக்காட்டியுள்ளது. ரூபன் கருணா குழு உறுப்பினர் தான் என அறிந்ததும் அவரை வெளிநாடு அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கஜநாயக்கவும் நானும் அவரை வானூர்தி நிலையத்தில் கொண்டு சென்றும் விட்டோம். அதன் பின்னர் எனக்கு குபேரனின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. குபேரன் எனக்கு கருணா குழுவைச் சேர்ந்த சுமன், சரன், மார்க்கன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

இந்த மூவரும் தாங்கள் அரசியல் வட்டாரங்களில் பிரவேசிக்க உதவுமாறு என்னை கேட்டிருந்தனர். இது தொடர்பான நான் எனது உயரதிகாரியான கஜநாயக்கவை நாடியிருந்தேன். அவரும் சம்மதித்திருந்தார். பின்னர் அவர்கள் தமக்கு அரசியல் பிரவேசத்திற்கான உதவிகள் வேண்டாம், கொழும்பில் ஒரு நல்ல வீடு எடுப்பதற்கு உதவும் படி கேட்டிருந்தனர். மீண்டும் நான் எனது உயரதிகாரியை நாடினேன் அவரும் சம்மதித்தார். பொரளையில் உள்ள வான் படையினரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அண்மையில் அவர் 7 தொடக்கம் 8 வீடுகளை பார்த்தார்.

பின்னர் பொரளையில் உள்ள மேஜர் கமகேயின் வீடு கஜநாயக்காவினால் தெரிவு செய்யப்பட்டது. ஒரு வாரத்தின் பின்னர் அது மாதம் 8,000 ரூபாய் வாடகைக்கு எனது பெயரில் பெறப்பட்டது. உடனடியாகவே அந்த வீடு கருணா குழுவினரால் பயன்படுத்தப்பட்டது. வினோத், அல்பா, சுனாமி மல்லி ஆகியோர் அந்த வீட்டிற்கு குடி வந்தனர். அதன் சிறிது காலத்தின் பின்னர் கொழும்பில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை அவதானித்த கஜநாயக்க அவர்களை அகற்ற கருணா குழுவின் குபேரனின் உதவியை நாடுமாறு என்னைப் பணித்தார். உழவு இயந்திரங்களின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் முதலாளி ஒருவர் விடுதலைப் புலிகளுக்கு உதவி வருவதாக குபேரன் எனக்கு தெரிவித்தார்.

இந்த தகவல் கிடைத்ததும், கஜநாயக்கவின் துணையுடன் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் முதலாளியின் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அவரது வீட்டைத் தாக்கியதுடன், முதலாளியையும் கடத்தி கருணாவின் மறைவிடமான வெலிக்கந்தைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரிடம் 25 இலட்சம் ரூபாய்களை கப்பமாக பெற்றுக்கொண்டு விடுவித்ததுடன், மாதம் ஒரு தொகையை கப்பமாக செலுத்தும் படியும் உத்தரவிட்டிருந்தனர். அதன் பின்னர் என்னைத் தொடர்பு கொண்ட கஜநாயக்க தனது அதிருப்தியை தெரிவித்ததுடன், 12 விகித தரகுப் பணத்தை தனது குழுவுக்குச் செலுத்தாது இந்த கடத்தல்களை தொடர முடியாது என தெரிவித்திருந்தார். நான் இதனை குபேரனுக்கு தெரிவித்தேன். அவர் 10 விகிதமே தரலாம் என தெரிவித்தார். அதன் பின்னர் உசாரடைந்த கஜநாயக்க நீண்டகால திட்டத்திற்கு தயாரானார்.

கொத்துட்டுவாவில் தொற்று நோய் மருத்துவமனைக்கு 200 மீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டை கஜநாயக்க தனது சொந்தப் பெயரில் வாடைகைக்கு எடுத்தார். அதற்கான மாதாந்த வாடகையாக 18,000 ரூபாய்கள் செலுத்தப்பட்டது. வாடைகைக்குப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் என்னிடம் ஒரு தொகுதி திறப்புக்களை தந்து மாலை 6.00 மணியளவில் அங்கு செல்லுமாறும், அங்கு வரும் இராணுவத்தினரிடம் அவற்றை கையளிக்குமாறும் கஜநாயக்க என்னை கேட்டிருந்தார்.

காக்கைதீவு முதலாளி கடத்தல்

இராணுவத்தினரிடம் திறப்புக்களை கையளித்து இரு நாட்கள் கடந்த பின்னர், கோதோட்டுவவில் உள்ள வீட்டுக்கு காலை 7.00 மணியளவில் செல்லுமாறு எனக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டது. நான் அங்கு சென்ற போது சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த உதவிப் பரிசோதகர் மஞ்சுளா, உதவிப் பரிசோதகர் இந்திகா, ஒரு உயர் அதிகாரி ஆகியோரும் மேலும் 4 பேரும் அங்கு இருந்தனர். அவர்கள் வீட்டின் வாகன தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு காக்கைதீவைச் சேர்ந்த மீன் வலை முதலாளியை வீட்டின் முன் அறைக்கு இழுத்து வந்தனர். அவருக்கு 30 முதல் 35 வயது இருக்கும். அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததுடன், கண்களும் கட்டப்பட்டிருந்தன. முற்பகல் 10 அல்லது 11 மணியிருக்கும் கருணா குழுவைச் சேர்ந்த ராஜா, சுமன், குட்டி ஆகியோர் அங்கு வந்து அவரை விசாரித்தனர்.

கருணா குழுவினர் வந்த 15 நிமிடங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த மீன் முதலாளியை கருணா குழுவினர் தமிழில் விசாரணை செய்தனர். அன்று இரவு 8.00 மணியளவில் கஜநாயக்க தனது வாகனத்தில் அங்கு வந்தார். அந்த வீடு தற்போது கடத்தல் நடைபெறும் வீடாக மாறியிருந்தது. இரு மணி நேரத்தின் பின்னர் கஜநாயக்கவுடன் நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். அவர் என்னை எனது பொரளை இல்லத்தில் இறக்கி விட்டார். காக்கைதீவு முதலாளியை அவர்கள் 35 இலட்ச ரூபாய்களை பெற்றுக்கொண்டு விடுவித்ததை நான் பின்னர் அறிந்தேன். இது நடைபெற்ற இரு நாட்களின் பின்னர் கருணா குழுவைச் சேர்ந்த சுமன் என்பவர் கஜநாயக்கவிடம் கொடுக்கும் படி என்னிடம் 550,000 ரூபாயை தந்தார். எனினும் அதற்கு இரு மணிநேரத்திற்கு முன்னர் என்னைத் தொடர்பு கொண்ட கஜநாயக்க தனக்கு ஒரு பொதி வரும் எனவும், அதனை என்னிடம் உடனடியாக கூப்பிட்டு தராது தனது வாகன சாரதியான சாந்தா என்பவரிடம் கொடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

பெரிய முதலாளி கடத்தல்

காக்கைதீவு முதலாளியை கடத்திய ஒரு வாரத்தின் பின்னர் என்னை கோதோடுவாவில் உள்ள வீட்டிற்கு மீண்டும் மாலை 6.00 மணிக்கு செல்லுமாறு கஜநாயக்க உத்தரவிட்டிருந்தார். நான் அங்கு சென்ற போது முன்னர் சந்தித்த சிறப்பு அதிரடிப்படையினரை மீண்டும் நேருக்கு நேர் சந்தித்தேன். அவர்கள் மற்றுமொரு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அந்த குழுவில் உள்ள மஞ்சுளா மற்றும் இந்திகா ஆகியோர் காவல்துறைச் சீருடையில் இருந்தனர். அவர்களின் பெயரும் பொய்யாக இருந்ததுடன் கூட மேலும் நான்கு பேர் இருந்தனர். அன்று பெரிய முதலாளி எனப்படும் பெரும் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார். அவரும் வீட்டின் முன் அறைக்கு சிரமப்பட்டு இழுத்து வரப்பட்டார். மூன்று நாட்களின் பின்னர் 50 இலட்சம் ரூபாய்களை பெற்றுக்கொண்டு பெரிய முதலாளியை விடுவித்து விட்டதாக சுனாமி மல்லி என்னிடம் தெரிவித்தார். மீண்டும் வழமையான நாடகம் நடந்தது. என்னைத் தொடர்பு கொண்ட கஜநாயக்க ஒரு நண்பர் பொதி ஒன்றை கொண்டு வருவார் என தெரிவித்தார். கருணா குழுவைச் சேர்ந்த சுமன் வந்தார்.

அவர் ஒரு பொதியை கொண்டு வந்தார். நான் அதனை வழமை போல கஜநாயக்கவின் வாகனச் சாரதியின் ஊடாக அனுப்பியிருந்தேன். (தேசப்பரிய கருணாவின் நெருங்கிய உறவினரான பின்னர் அந்த குழுவில் உள்ள பலருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டிருந்தது). எனவே இந்த பொதியில் 5 இலட்சம் ரூபாய்கள் இருந்ததாக சுமன் என்னிடம் தெரிவித்தார். கஜநாயக்கவின் பணப் பரிமாற்றம் தொடர்பான விபரங்களை கருணா குழுவினர் எனக்குத் தெரிவித்து வந்தது அவருக்கு தெரியாது. மத்துகம படுகொலைகள் இந்த பணப் பரிமாற்றங்கள் கருணா குழுவின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது. பெரிய முதலாளி கடத்தப்பட்ட இரு வாரங்களின் பின்னர் எனது பெயரில் வாடகைக்கு எடுத்திருந்த மேஜர் கமகேயின் இல்லத்திற்கு செல்லுமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது.

அங்கு கருணா குழுவைச் சேர்ந்த வினோத் என்னைச் சந்திப்பார் எனக்கூறப்பட்டது. நான் அங்கு மாலை 6.00 மணியளவில் சென்றேன். ஒரு மணி நேரத்தின் பின்னர் கஜநாயக்கவினால் அனுப்பப்பட்ட இருவர் அங்கு வந்து எம்மை அவசரமாக ஜீப்பில் மொறட்டுவவுக்கு அழைத்துச் சென்றனர். மிகவும் அவசரமான விடயம் என கூறினர். மொறட்டுவவை அடைந்ததும் அங்கு கருணா குழுவைச் சேர்ந்த சுமன் என்பவரால் கொண்டு வரப்பட்ட இருவர் எமது ஜீப்பில் ஏற்றப்பட்டனர். அந்த ஜீப்பில் நானும் வினோத்தும் இருந்தோம். எமது ஜீப் மொறட்டுவப் பகுதியை வட்டமிட்டு, மத்துகமப் பகுதிக்குச் சென்றது. அப்போது நேரம் அதிகாலை 3.00 மணி. வினோத்தும் ஏனைய இருவரும் கஜநாயக்கவின் வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்கள் ஜீப்பில் இருந்த இருவரையும் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்னர் அவர்கள் இருவரையும் மத்துகம மலைப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர். அதன் பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புகள் உண்டு. இது நடைபெற்ற போது கஜநாயக்க தனது வாகனத்தில் இருந்தார். அதன் பின்னர் காலை 6.00 மணியளவில் என்னை பொரளையில் இறக்கி விட்டுவிட்டு வினோத்தும், கஜநாயக்கவும் சென்றுவிட்னர்.

முஸ்லிம்கள் படுகொலை

அதன் பின்னர் பெரலாந்தப் பகுதியிலும் அதே சிறப்பு அதிரடிப்படை குழு, கஜநாயக்க, கருணா குழுவைச் செர்ந்த அல்பா ஆகியோரால் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சுடப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல முஸ்லிம் இளைஞர்கள் என தெரிய வந்தது. சிசில் கொட்வின் என்பவரை கருணாவுக்கு நன்கு தெரியும். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது கொட்வின் விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்திருந்தார். விடுதலைப் புலிகளுக்காக அவர் கொழும்பில் நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். விடுதலைப் புலிகளில் இருந்து கருணா வெளியேற்றப்பட்ட போது அவர் 300 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிராடோ வாகனத்தை விற்பனை செய்திருந்தார். ஆனால் அதற்குரிய பணம் வழங்கப்படவில்லை. கொட்வின் ஜேஜே 6166 மற்றும் 8585 ஆகிய இலக்கங்களை உடைய இரு வாகனங்களையும் வழங்கியிருந்தார். பின்னர் அவர் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு உதவி வந்ததனால், கஜநாயக்கவுடன் இணைந்து கடத்தல்களில் ஈடுபடும் சிறப்பு அதிரடிப்படையினரால் அவர் கடத்தப்பட்டு கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தனது சுகவீனத்திற்காக மருந்து எடுத்து வருவதனால் பின்னர் விடுவிக்கப்பட்ட போதும். அதன் பின்னர் அவர் கடற்படைச் சிப்பாயான சம்பத், கஜநாயக்க ஆகியோரால் கடத்தப்பட்டு 46 லட்ச ரூபாய்கள் கப்பமாக பெறப்பட்டது.

இந்த தொகை கருணா குழுவை சேர்ந்த ராஜாவினால் பெறப்பட்டது. இந்த நடவடிக்கையை நான் "சிரச" தொலைக்காட்சியின் ஊடாக அறிந்தேன். கஜநாயக்கவே கொட்வினை கடத்தியது என்பதை சுனாமி மல்லியும் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளின் உளவாளியான ரமேஸ் என்பவர் பின்னர் படையினருக்கு தகவல் வழங்குபவராக செயற்பட்டிருந்தார். அவரையும் அவரது மனைவியையும் வெளிநாட்டிற்கு அனுப்புவது என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ரமேஸ் இதனை செய்து வந்தார். விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தலைவர் கீர்த்தி வான்படை தளபதியை கொல்ல தற்கொலை குண்டுதாரியை அனுப்பியுள்ளதாக ரமேஸ் தான் தகவலை வழங்கியிருந்தார்.

அதற்கான தற்கொலை அங்கியை சிறிலங்காவிற்கு சீனியை இறக்குமதி செய்யும் வர்த்தகரின் ஊடாக கொண்டு வந்துள்ளதாகவும் ரமேஸ் தெரிவித்தார். வர்த்தகரின் வாகனச் சாரதி மூலமாக குண்டுகளை உடைய அங்கி கடத்தப்பட்டிருந்தது. நான் இந்த தகவலை கஜநாயக்கவிற்கு தெரிவித்தேன். அவர் அதனை விசாரிக்கும் படி என்னைப் பணித்தார். ரமேஸ் மூலமாக அந்த வர்த்தகரின் முகவரியை பெற்றுக்கொண்டு கஜநாயக்கவின் உத்தரவுப்படி அங்கு சென்றேன். இந்த பயணம் தொடர்பாக கொழும்பு நகர காவல்துறை உதவி ஆணையாளருக்கும் இரு தினங்களின் பின்னர் தெரிவிக்கப்பட்டது. இரவு விடுதியில் பெண்களுடன் ஆட்டம் பின்னர் வெள்ளவத்தை காவல்நிலைய உணவு விடுதியில் தான் இருவரை சந்திக்க போவதாக கஜநாயக்க என்னிடம் தெரிவித்தார். இரவு 7.00 மணியளவில் எனது இல்லத்திற்கு வந்த அவர் என்னையும் அழைத்துக்கொண்டு வெள்ளவத்தை காவல் நிலைய உணவு விடுதிக்குச் சென்றார். நாங்கள் உணவு விடுதியை அடைந்த போது, அங்கு சிறப்பு அதிரடிப் படையைச் செர்ந்த உதவிப் பரிசோதகர் இந்திகா தலதவத்த, படையினன் மன்னம்பெரி ஆகியோர் உந்துருளியில் வந்தனர். குளிரான பியரை அருந்திய படி கஜநாயக்க சீனி முதலாளி தொடர்பான எல்லா தகவல்களையும் அவர்களுக்கு வழங்கினார்.

இரவு 10.30 மணியளவில் 3,500 ரூபாய் பணத்தை செலுத்திய பின்னர், நாங்கள் நான்கு பேரும் இரவு விடுதிக்குச் சென்றோம். அங்கு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். மீண்டும் அவர்கள் குடித்தனர். பின்னர் அதிகாலை 2.00 மணியளவில் வெளியேறிச் சென்றனர். சீனி முதலாளி மீதான நடவடிக்கை இரண்டு நாட்களின் பின்னர், அதிகாலையில் என்னை எழுப்பிய கஜநாயக்க சீனி முதலாளியின் விடயத்தை உடனடியாக கையாளப்போவதாக தெரிவித்தார். காலை 7.00 மணியளவில் வரும் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் என்னை ஏற்றிக்கொண்டு கொழும்பு-7 இல் உள்ள கிரகெரி வீதிக்கு செல்வார் எனவும் அவர் என்னிடம் தெரிவித்தார். அவர் சொன்னது போலவே 7.00 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வந்தார். நான் அவருடன் சென்றேன். இந்திக்காவும், மன்னம்பெரியும் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். சீனி முதலாளியின் கார் பக்கத்து வீதியால் வரும், அதனை அவதானித்து, விரல்களை உயர்த்தி சமிக்ஞை காண்பிக்கும் படி அதிகாரி எனக்கு தெரிவித்தார். அதன் படி நான் சைகை காட்டினேன். இந்திகா நின்ற பக்கம் ஓடிய அதிகாரி காரை நிறுத்தினார்.

அதிகாரி காரில் இருந்த தற்கொலை அங்கியை எடுத்தார். பின்னர் நானும் அவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். அரை மணிநேரத்தின் பின்னர் அந்த அங்கியை வைத்திருக்க எமக்கு அச்சமாக இருந்தது. அதனை ஒரு பொதி செய்து வினோத்தின் வீட்டிற்கு அனுப்பினோம். பின்னர் வினோத் அதனை கருணா குழுவைச் சேர்ந்த சிந்துஜனிடம் கொடுத்தார். பின்னர் அதனை வடபகுதிக்கு எடுத்துச் சென்ற கருணா குழுவினர் விடுதலைப் புலிகளின் வீதித் தடையில் வெடிக்க வைத்திருந்தனர். மேலும் இருவர் கடத்தப்பட்டு வெலிகந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு 60 இலட்சம் ரூபாய்கள் பெறப்பட்டதாக சுனாமி மல்லி எனக்கு தெரிவித்திருந்தார். அதில் 10 விகிதம் கஜநாயக்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

மீன் சந்தையில்

கொழும்பில் உள்ள மீன் சந்தையில் விடுதலைப் புலிகள் உள்ளதாக கருணா குழுவைச் சேர்ந்த குபேரன் எனக்கு தெரிவித்தார். அதனை கஜநாயக்கவிற்கு தெரிவித்த போது அவர் இராணுவ கப்டன் திசநாயக்க என்னை அழைத்துச் செல்வார் என தெரிவித்தார். அவர் விசாரணை செய்யப்பட்டார், பின்னர் அந்த விடுதலைப் புலி சந்தேக நபரை கொஸ்வத்த வீட்டில் ஒப்படைக்கும் படி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் கொஸ்வத்தவுக்கு முச்சக்கர வாகனத்தில் சென்றேன். (இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற முடியவில்லை).

விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஏவுகணை

30 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான 3 வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளுடன் முன்னாள் துறைமுகங்கள் வானூர்தி போக்குவரத்து அமைச்சர் மங்களவின் ஜீப் வண்டி வன்னிக்குச் சென்றுள்ளதாகவும் அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அதனை பெற்றுக் கொள்வார் எனவும், இது மங்களவுக்கு தெரியும் எனவும் ரமேஸ் தெரிவித்ததாக தேசபிரிய தெரிவித்தார். ஆனால் அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை எவ்வாறு துப்பாக்கிமுனையில் கடத்துவது என்பது நகைச்சுவையானது. மங்களவை இதில் இணைத்தது அரசின் திட்டம். எனினும் இதில் பல கேள்விகள் உண்டு. பாதுகாப்பு அமைச்சினது அல்லது கோத்தபாயவின் நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்யப்படாது எவ்வாறு மங்கள இந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற முடியும், பின்னர் அவற்றை விடுதலைப் புலிகளுக்கு அனுப்ப முடியும். ஆயுதப்படைகளின் தலைவரான மகிந்தவிற்கு இது தெரியவில்லையா அல்லது அவர் வீடு வீடாக எண்ணெய்ப் பிடிப்பான சீன உணவுகளை தேடி அலைந்தாரா?

பாதுகாப்பு அமைச்சினது அல்லது மகிந்தவினது அனுமதி இன்றி பெரிய வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும், 30 இலட்சம் ரூபாய்களையும் பல சோதனைச் சாவடிகளை கடந்து எவ்வாறு அந்த வாகனம் கொண்டு சென்றது?.

திருகோணமலைக்குச் செல்லும் வழியில் மட்டும் 40 சோதனை நிலையங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றில் எல்லாப் பொருட்களையும் இறக்கி ஏற்ற வேண்டும். இது தொடர்பாக 5 அல்லது 6 பேரை தாம் விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை உதவி சுப்பிரின்டற் மகேஸ் பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் கடத்தல்களில் கருணா குழு, சிறப்பு அதிரடிப்படையினர், பாதுகாப்பு படையினரின் பங்கு இருப்பது விசாரணைகளில் தெரிய வந்த பின்னரும் தமிழர்கள் அதாவது கருணா குழுவினர் யாரும் விசாரிக்கப்படவில்லை. முதற்கட்ட விசாரணைகள் நடப்பதனால் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் தற்போது நிறுத்த முடியாது என பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். நாம் சிறப்பு அதிரடிப்படை தளபதியான நிமால் லெவ்கேயை தொடர்பு கொண்ட போது அவர் நாட்டில் இல்லை. எனினும் உதவி சுப்பிரின்டன்ற் வசந்த ரத்னாயக்காவை தொடர்பு கொண்ட போதும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. பலமுறை சிறப்பு அதிரடிப்படையினரின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவை கைகூடவில்லை.

கோத்தபாயவின் வாதம் எனினும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் கோத்தபாய கடத்தல்களை நியாயப்படுத்தியிருந்தார். எமது மக்கள் வெள்ளை வானில் செல்லும் படையினர் தமிழ் மக்களை கடத்துவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தான் கைது செய்கின்றனர். நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதிலை தாருங்கள். ஐக்கிய தேசியக் கட்சி அல்லது, சுதந்திரக் கட்சி அல்லது ஜே.வி.பி ஆகியவற்றை சேர்ந்த எவரையாவது வெள்ளை வானில் அல்லது வேறு ஏதாவது வானில் கடத்தி உள்ளார்களா எனக் கேட்டிருந்தார். கிளிநொச்சியில் மங்களவினால் அனுப்பப்பட்ட 3 ஏவுகணைகளே உள்ளதாகவும், தனது தொலைபேசி கட்டணங்களை செலுத்துவதற்கு தனக்கு 45,000 ரூபாய்களே தரப்பட்டதாகவும் அதனையும் தனது சம்பளத்தில் கழித்து விடுவார்கள் எனவும் தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார். அனுரா, மங்கள, சிறீபதி ஆகியோர் அரசில் இருந்து நீக்கப்பட்ட போது நான் சிறீபதியுடன் தொடர்பு கொண்டு ஏன் இப்படி நடந்தது என கேட்டேன்.

அதற்கு அவர் "அரச தலைவர் உங்கள் கருணாவை கொல்ல முயல்கின்றார், கருணாவை கவனமாக இருக்கச் சொல், எங்களுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம்" என தெரிவித்ததாக தேசப்பிரிய மேலும் தெரிவித்தார். தேசப்பிரிய சொல்வது போதும், அவர் வெளிநாட்டில் தனது மனைவி குடும்பத்துடன் சேர முனைகின்றார். அரசு அவரை சாட்சியாக்க முற்பட்டுள்ளது. நீதிபதிகள் அவரது அறிக்கை தொடர்பாக எதனைக் காண்பார்களோ ஆனால் ஒன்று மட்டும் தெளிவானது. அதாவது கருணா குழுவுடன் இணைந்து படையினர் கடத்தல்களில் ஈடுபடுவது தெளிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://nitharsanam.com/?art=24216

சும்மா வெறுங்கண்ணால பாத்தா தண்ணீர் தெளிவாக தெரியும். ஆனால், பூதக்கண்ணாடிக்கால பார்த்தால் அதற்குள் இருக்கும் கிருமிகள், ஊத்தைகள் தெரியும். அதுமாதிரி யாரோ ஒருவர் பாதாள உலகத்துக்க பறந்து, பறந்து ஆராய்ச்சி செய்து உத கஸ்டப்பட்டு எழுதி இருக்கிறார் போல இருக்கு. நம்மை போன்ற சாதாரண பொது சனத்திற்கு இவற்றை படித்தால் காய்ச்சல், மற்றும் வயிற்றுப்போக்கே ஏற்படும்.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.