Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு!

யாழில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற கப்பலை யாழ். மீனவர்கள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.

மீனவர்கள் கப்பலைப் பற்றி உடனடியாக கடற்படைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அந்த இடத்திற்கு மூன்று படகுகளை அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான குறித்த படகில் இருந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2022/1315994

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

யாழில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கும் படகு..! சற்றுமுன் வெளியான தகவல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாக்காரனும்... இப்பிடி ஒரு  நாள், இரவோடு இரவாக...  கன  படகுகளில்  வடக்கிற்கு வருவான். 
அப்ப இந்தியா.... மிக உன்னிப்பாக அவதானித்து கொண்டு இருக்கிறோம் என்று அறிக்கை விடும்.
-ஊர்க்கிழவி.-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக தஞ்சம் தேடி சென்ற படகு காற்று, சீரற்ற கடல் நிலை காரணமாக திசை மாறி வந்திருக்குமோ? அதுக்கிடையில் எங்கை போய் மறைந்திருக்கும்? 

6 minutes ago, தமிழ் சிறி said:

சீனாக்காரனும்... இப்பிடி ஒரு  நாள், இரவோடு இரவாக...  கன  படகுகளில்  வடக்கிற்கு வருவான். 
அப்ப இந்தியா.... மிக உன்னிப்பாக அவதானித்து கொண்டு இருக்கிறோம் என்று அறிக்கை விடும்.
-ஊர்க்கிழவி.-

அவன்தான் வெள்ளோட்டம் விட்டுப்பாத்திருப்பானோ? எண்டொரு சந்தேகம் எனக்கு. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, satan said:

அவன்தான் வெள்ளோட்டம் விட்டுப்பாத்திருப்பானோ? எண்டொரு சந்தேகம் எனக்கு. 

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.
இந்தியாதான் பாவம். எல்லாப் பக்கத்தாலையும் நெருங்கி விட்டார்கள் போலுள்ளது. 🤪🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருக்கவே இருக்கிறார்கள் தமிழர் காக்க! தமிழரை உசுப்பிவிட்டு அதுவும்  தப்பித்துக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை கடல் எல்லையில் மீட்கப்பட்ட 104 'மியான்மர் குடிமக்கள்'

இலங்கை கடற்படையின் மீட்புக் கப்பலுடன் சேதமடைந்த படகு.

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

 
படக்குறிப்பு,

இலங்கை கடற்படையின் மீட்புக் கப்பலுடன் சேதமடைந்த படகு.

43 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் வடக்கு கடற்பரப்பிற்கு விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் படகொன்றிலிருந்து 104 மியான்மர் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றைய தினம் மீட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. எனினும், மீட்கப்பட்டவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பது குறித்து இலங்கையில் உள்ள மியான்மர் தூதரகம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் குறித்த படகு நேற்றைய தினம் விபத்துக்குள்ளானது; மியான்மரிலிருந்து இந்தோனீசியா நோக்கி, குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 104 மியான்மர் குடிமக்களுடன் இந்தப் படகு பயணித்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. ஆனால், மியான்மரிலிருந்து இந்தோனீசியா செல்ல நேரடியாகவே கடல்வழி இருக்கும்போது, பல நூறு கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் ஏன் வந்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை என பிபிசி தமிழிடம் இலங்கை கடற்படை தெரிவிக்கிறது. யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கையின் வடக்கு கடற்படை முகாமிற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளது.

இதையடுத்து, இலங்கை கடற்படையின் வடக்கு முகாமிற்கு சொந்தமான உதார கப்பல் மற்றும் அதிவிரைவு படகுகளை பயன்படுத்தி, வெளிநாட்டு குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர். அதிக கடல் சீற்றத்திற்கு மத்தியில், விபத்துக்குள்ளான படகிலுள்ள மியான்மர் குடிமக்களை தாம் பாதுகாப்பாக மீட்டெடுத்ததாக இலங்கை கடற்படை கூறுகின்றது. இவ்வாறு மீட்கப்பட்ட மியான்மர் குடிமக்கள், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

sri lanka navy

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

 
படக்குறிப்பு,

மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் முதலுதவி வழங்கப்பட்டது

கரைக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு தற்போது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோத குடியேறிகளா என்பது தொடர்பில் தமக்கு தற்போது கூற முடியாது எனவும், விசாரணைகளின் பின்னரே அதனை தம்மால் கூற முடியும் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். எனினும், தமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையிலேயே பிரவேசித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். படகு விபத்துக்குள்ளான நிலையில், இவர்கள் மீட்கப்பட்டுள்ளமையினால், மீட்கப்பட்டவர்களைக் கைது செய்யாது, பாதுகாப்பாக மீட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிடுகின்றார்.

மீட்கப்பட்டவர்கள் ரோஹிஞ்சா முஸ்லிம்களா?

படகில் இருந்து கைக்குழந்தையுடன் மீட்கப்படும் பெண்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

 
படக்குறிப்பு,

படகில் இருந்து கைக்குழந்தையுடன் மீட்கப்படும் பெண்

இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள படங்களில் இருப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கான அடையாளங்களுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் ரோஹிஞ்சா முஸ்லிம்களா, மியான்மரின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் இலங்கை கடற்படையால் இன்னும் வெளியிடப்படவில்லை. மியான்மரின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ஓர் இன சிறுபான்மையினர். பௌத்த பெரும்பான்மை நாடான மியான்மர், ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு குடியுரிமையை மறுப்பதுடன், 2014இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆகஸ்ட் 2017இல் ரோஹிஞ்சா ஆர்சா தீவிரவாதிகள் மியான்மர் காவல் மையங்களில் நடத்திய 30க்கும் மேற்பட்ட தாக்குதல்களால், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மியான்மர் ராணுவம் தொடங்கியது. இதன்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் கூறுகின்றன. ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இருந்து தப்ப வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அகதிகளாகச் செல்லத் தொடங்கினர்.

https://www.bbc.com/tamil/articles/ceq2329wlg4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு கடலில் தத்தளித்த வெளிநாட்டு படகை கடற்படையினரால் மீட்பு!

By VISHNU

18 DEC, 2022 | 03:38 PM
image

யாழ்ப்பாண கடற்பகுதியில் பழுதடைந்த நிலையில் தத்தளித்த படகொன்றில் இருந்தவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்றைய தினம் (18)ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர். 

IMG-20221218-WA0037.jpg

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மீன் பிடிக்க சென்று இருந்த மீனவர்கள், படகொன்று பழுதடைந்த நிலையில், கடலில் தத்தளித்தவாறு காணப்பட்டதை கண்ணுற்று அருகில் சென்று பார்த்த போது படகில் இருந்தவர்கள் தமது பிள்ளைகளை காண்பித்து உதவி கோரி அபய குரல் எழுப்பினர். 

உடனடியாக அது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து கடற்படையினர் அவ்விடத்திற்கு விரைந்து படகில் இருந்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். 

அத்துடன் படகினையும் , படகில் இருந்தவர்களையும் மீட்டு காங்கேசன்துறை துறை முகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

வெளிநாட்டு படகு என்பதாலும் , அதில் இருந்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதாலும் அவர்களை அழைத்து வருவதற்கான உரிய அனுமதிகள் , நடைமுறைகள் என்பவற்றை பின் பற்றி அவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வர தாமதமாகி இருந்தது.

அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு பின்னரே , கரைக்கு அவர்களை அழைத்து வந்தனர். 

அழைத்து வரப்பட்ட அனைவரும் காங்கேசன்துறை துறைமுக கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னேரே அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து,  வாக்கு மூலங்களை பதிவு செய்ய முடியும் எனவும் , அதன் பின்னரே அவர்கள் தொடர்பில் தெளிவாக அறிவிக்க முடியும் என கடற்படையினர் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/143439

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆட்கடத்தற்காரர் ஏமாற்றி அழைத்து வந்தனரோ?

இவர்கள் ரோஹிஞ்சா முஸ்லிம்களாய் இருந்தால் ஆழ்ந்த அனுதாபங்கள். ஒளிக்கத் தெரியாமல் போலீசுக்காரன் வீட்டில் ஒளித்திருந்த கதைதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்றம்!

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) யாழ். சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்களை கடந்த 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு மறுநாள் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

அந்நிலையில் கடந்த 19ஆம் திகதி 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1316724



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.