Jump to content

தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள் - ஆனந்தசங்கரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள்

கனகராசா சரவணன் 

“வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை  நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக  தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பிப் சென்று தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனரா?” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி  கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தால் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது, “அண்மையில் சர்வகட்சி மாநாட்டை கூட்டிய ஜனாதிபதி, கட்சி தலைவர்கள் இல்லாதவர்களை அழைத்துள்ள போதும் என்னை அழைக்கவில்லை. ஏன் என்றால் சங்கரி வந்தால் பிரச்சனை என்று  ரணிலுக்கு தெரியும்.

கடந்த 2005ஆம் ஆண்டு ரணில் சமஷ்டியை தீர்வாக வைத்து ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான 22 எம்.பிக்கள் தேர்தலை பகிஷ;கரியுங்கள் என பிரச்சாரம் செய்து ரணிலின் சமஷ்டியை தோக்கடித்து மஹிந்தவின் ஓற்றையாட்சியை வெல்லவைத்து ஒற்றையாட்சியை நிலைநிறுத்தி  தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தனர்.

எனவே அன்று சமஷ்டி வேண்டாம் என பிரச்சாரம் செய்த இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் தலைமைகள், தற்போது வடக்கு, கிழக்கில் இந்து ஆலயங்கள் இடிப்பு காணிஅபகரிப்பில் ஜனாதிபதி செயற்பட்டுக் கொண்டு தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுக்கு பேச்சுக்குவருமாறு அழைக்கின்றபோது, முதலில் தமிழர்களின் காணி அபகரிப்பு இந்து ஆலயங்கள் உடைப்பை நிறுத்தினால் தான் பேச்சுக்கு  நாங்கள் வருவோம் என சொல்ல தைரியம் இல்லாதவர்கள்.

2009ஆம் இறுதி யுத்தத்தின் போது 3 இலட்சம் மக்கள் இறக்கும் போது  மௌனிகளாக இருந்துவிட்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, இன்று அரசாங்கத்துடன் வெக்கமில்லாமல் சமஷ்டியை பற்றி பேசப்போகிறனர் என்பது வேடிக்கையானது என்பதுடன் இப்படியான சூழ்நிலையில் இனி சமஷ்டி கிடைக்குமா? மக்களை ஏமாற்றினால் போதும் எனது அரசியல் செய்கின்றனர்.

பொருளாத நெருக்கடியால் பட்டினியால் மக்கள் சாகின்றனர் இவ்வாறு எரிகின்ற பிரச்சனையை எரியவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். தனது இப்போதைய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல என்று ரணிலுக்கு நன்றாக தெரியும். 

இந்த தலைவர்களின் ஊழலை பற்றி அமம்பலபடுத்தாது விடுவதால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இரா.சம்மந்தன் பாராளுமன்றபடி எற தகுதியில்லாதவர். ஏன் என்றால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் அல்ல.  
 
பேச்சு வார்த்தைக்கு மத்தியஸ்துவம் செய்ய 3 வெளிநாடுகளை  கூப்பிட்ட வேண்டும் என அறிக்கை விட்ட  அடி முட்டாள்கள். எங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள் செய்தது போதும்.

எந்த நாடும், இதை செய் என்று சொல்லமுடியாது என்பது சட்டத்தரணிகளான உங்களுக்கு தெரியாதா? ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்தியாவில் இருந்து கப்பலில் பொருட்கள் வந்ததும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று அங்கு அருகில் நிற்கின்றனர். 

என்னவென்றால் நாங்கள் சொல்லிதான் இந்தியா பொருட்களுடன் வந்தது என சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட தமிழ் தலைமைகள் தமது வரலாற்றை பின்னோக்கி பார்க்கவேண்டும்.

அப்போது தான் தாங்கள் சொந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஏமாற்றி  துரோகம் செய்துள்ளது என தெரியும்.  இல்லை என்று ஒருவர் சொல்லட்டும்  நான் பகிரங்கமாக மேடைக்குவர தயார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/தைரியம்-இல்லாத-தமிழ்-தலைமைகள்/175-309215

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.