Jump to content

கிழக்கில் நெல் பயிர்ச்செய்கை மூலமாக அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் கிழக்கு ஆளுநர் பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நெல் பயிர்ச்செய்கை மூலமாக அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் கிழக்கு ஆளுநர் பேச்சு

By Nanthini

22 Dec, 2022 | 12:09 PM
image

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சீன அரசாங்கத்திடம் அடுத்த பருவத்திலும், கடந்த பருவத்திலும் விவசாயிகளுக்கு இலவச அரிசியை வழங்குவதற்கு பதிலாக சந்தை வாரியத்தின் மூலம் கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்குமாறு திருகோணமலையில் சீன தூதுக் குழுவுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றபோது தெரிவித்திருந்தார்.

இதன்போது இந்த நிதியுதவி மூலம் விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான நியாயமான விலை கிடைப்பதுடன், நுகர்வோரும் அரிசியை நியாயமான விலையில் வாங்க முடியும்.

இதனூடாக அரிசி கொள்முதல் செய்வதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு அரசு நிதி ஒதுக்குவதில் உள்ள சிரமம் நீங்கும் என்றும் ஆளுநர் கூறினார்.

அத்தோடு சீனாவின் வுஹான் மாகாண மக்கள் சங்கத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சூரிய ஒளி விளக்குகளை அன்பளிப்பாக வழங்கியமைக்கும் தனது விசேட நன்றிகளை தெரிவித்த ஆளுநர், விவசாய அபிவிருத்திக்கான மேற்படி முன்மொழிவுக்கு ஆதரவளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

விவசாய அமைச்சின் அறிக்கையின்படி, எதிர்வரும் பருவத்தில் 609,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் விவசாயிகளின் நெற்பயிர்களை  சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், அது விவசாயிகளுக்கு மேலும் உதவியாக அமையும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். 

இதேவேளை மாகாணத்தின் சுத்தமான குடிநீர் தேவைக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு சீன தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

 

https://www.virakesari.lk/article/143821

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.