Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் | தமிழ்நெற்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022

 

ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத படைத்துறைப் படையாகப் புலிகளை நிறுவியுள்ளது.

Elephant-Pass-LTTE-flag.jpg

'ஆனையிறவினை மீட்டபின்னர், சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் | படிமப்புரவு: தமிழ்நெற்'

தமிழீழ விடுதலைப்புலிகளின் தரைப்படையணி உருவாக்கங்களும் வீறல் அதிரடிப்படைப் பிரிவுகளும் ஏப்ரல் 21 அன்று யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலில் அகலக்கால்பரப்பி பரந்து விரிந்திருந்த சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தைப் பரம்பின.

eps_map.jpg

'ஆனையிறவையும் அதன் சுற்றுப்புறங்களையும் காட்டும் வரைப்படம். | படிமப்புரவு: தமிழ்நெற்'

புலிகளின் படைத்துறை உருவாக்கங்களை எதிர்கொள்ளும் அதன் தென்முகப்பில், ஆனையிறவுக் களப்பு, அதன் உவர்க்கம் மற்றும் கரையோர நிலப்பகுதிகளில் மூன்று முக்கிய வலுவெதிர்ப்புக் கோடுகளால் தானைவைப்பு வலுவாக அரணப்படுத்தப்பட்டது. இவை மைல்களுக்கு கற்காரை மற்றும் எஃகுக் கட்டமைப்புகள், கண்ணிவயல்கள், முட்கம்பி அடுக்குகள், கண்ணிவயல்கள் மற்றும் கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்டன.

aanaiyiravu.jpg

'களப்பினுள் தாட்டுப் புதைக்கப்பட்டிருந்த கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் | படிமப்புரவு: பெயர் அறியில்லா வலைப்பூ'

சிறிலங்கா தரைப்படையானது பூநகரி (நவம்பர் 93), முல்லைத்தீவு (ஜூலை 96), கிளிநொச்சி (செப்டம்பர் 98) ஆகிய தானைவைப்புகளைப் புலிகள் பரம்புவதற்காகக் கறந்த இவற்றின் வலுவெதிர்ப்பிலுள்ள ஓட்டைகள் மற்றும் வலுவீனங்களை கவனமாக கற்றறிந்தது; மற்றும் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைத்துறையின் ஆலோசனை உள்ளீடுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கான கேந்திர நுழைவாயிலை வைத்திருப்பதற்கு ஒரு அஞ்சத்தக்க அரண முறைமையைத் திட்டமிட்டுக் கட்டமைத்தன.

LTTE leader with his senior commanders.jpg

'ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கைக்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் புலிகளின் தலைமையும் கட்டளையாளர்களும். | படிமப்புரவு: தமிழ்நெற்'

இந்த வலுவெதிர்ப்புகள் ஆனையிறவுக்கு நேராக வன்னி பெருநிலப்பரப்பில் ஒரு கொத்தளம் போல கட்டமைக்கப்பட்ட பரந்தனிலுள்ள ஒரு பெரிய சிறிலங்கா படைமுகாமால் காக்கப்பட்டன.

வடக்கில் அதன் பாரிய படைமுகாம்களின் வலுவெதிர்ப்பை ஒழுங்கமைப்பதில் "நிலையான அணுகுமுறையை" எடுத்துக்கொண்டதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் சிறிலங்கா தரைப்படையானது நீண்டகாலமாகத் திறனாயப்பட்டது.

அவர்கள் சிறிலங்கா படையத் தலைமையை வல்லோச்சான சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுமாறும், இளக்கமான, பெயர்ச்சியான வலுவெதிர்ப்புக் கோடுகளுக்கு முன்னால் ஒரு பெரிய பரப்பில் பதிதாக்கல் வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

ஆனையிறவின் அரணங்கள் மீளொழுங்குபடுத்தப்பட்டு வலுவூட்டப்பட்ட போது அவர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படவில்லை.

ஆனையிறவின் வலுவெதிர்ப்பென்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகளின் எவ்வுருவத்திலுமான 'அதிர்ச்சி மற்றும் மதிப்பச்சம்' என்ற கேந்திரத்திற்குத் தடுப்பாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.

சிறிலங்காவின் நவீன படைத்துறை வரலாற்றில் ஆனையிறவின் வலுவெதிர்ப்பின் ஆழம் முன்னிகழ்வற்றதாகும்.

அதன் பிற்பகுதியான யாழ் குடாநாடானது சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த போதிலும் அங்கு விடுதலைப்புலிகளின் தவிர்க்கவியலா கமுக்க நடவடிக்கைகளானவை படைத்துறை வகையாகப் புறக்கணிக்க முடியாததாகக் கருதப்பட்டது. 51, 52 மற்றும் 53 ஆகிய மூன்று படைப்பிரிவுகள், புலிகளால் அச்சுறுத்தப்பட்ட குடாநாட்டின் எந்தப் பகுதியிலும் படைகளை ஒருங்குவிக்கும் வகையில் சிறப்பாக அமர்த்தப்பட்டிருந்தன.

தானைவைப்பானது குடாநாட்டின் முக்கிய நகரத்திலிருந்து ஒரு கல்வீதிப்பாவாலான முதன்மை வழங்கல் பாதையையும் யாழ்ப்பாணக் களப்பின் தென்கிழக்குக் கடற்கரையில் ஒரு நிச்சயமற்ற முதன்மை வழங்கல் பாதையையும் கொண்டதால் 'முற்றிலும்' ஓம்பலானதாகக் கருதப்பட்டது.

பரந்தனின் நன்னீர் கிணறுகளிலிருந்து ஆனையிறவிற்கான நீர் வழங்கலிற்கான மாற்றீடு பின்புறத்தில், இயக்கச்சியில், தளத்திற்கு மைல்களிற்குப் பின்னால், பாதுகாப்பாகயிருந்தது.

இவற்றைத் தவிர, அதை அழிப்பதற்காக வலுவெதிர்ப்பு வேலிகளுக்குப் பின்னால் ஊடுருவும் புலிகளின் முயற்சியை முறியடிக்க, பலாலியில் ஒரு டசின் சேணேவிச் சுடுகலன்கள் அடங்கிய ஒரு சூட்டுத்தளம், ஆனையிறவு தானைவைப்பிற்குப் பிற்பகுதியில் ஒப்பீட்டளவில் ‘ஆழமாக’, அமைக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், தானைவைப்பின் வலுவெதிர்ப்பிற்குக் கொடுக்கப்பட்ட 'ஆழத்தின்' வலுவான கூறு, கட்டைக்காடு-வெற்றிலைக்கேணி கடற்கரையிலுள்ள சிறீலங்கா தரைப்படை, கடற்படைத் தளம் ஆகும். இது நிலம் மற்றும் வானின் தொடர்பு துண்டிக்கப்படும் போது, ஒடுவில் முயற்சியான வழங்கல் பாதையாக தொழிற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எனவே, சிறிலங்காப் படைத்துறைத் தலைமையானது, அவர்களின் மேற்கத்திய பாடநூலின் 'வலுவெதிர்ப்பு ஆழம்' பற்றிய அறிவுக்கு இணங்க, புலிகள் ஆனையிறவின் 'வலுவெதிர்ப்பின் ஆழத்திற்கு' எதிராக, பாரிய கடல் கடப்புகள் மற்றும் படைத்துறை உருவாக்கங்களை போதுமான வேகத்துடன் நகர்த்துதல் என்பவற்றை உள்ளடக்கிய தடூகத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று மிகவும் சரியாகவே கருதினர். 

சிறிலங்கா படைய உசாவல் நீதிமன்றங்களின் அறிக்கைகள் இருந்தபோதிலும், சிறிலங்கா தரைப்படை அதிகாரப் படிநிலை மற்றும் அதன் பிரித்தானிய/அமெரிக்க 'வலுவெதிர்ப்பு ஆலோசகர்கள்', முன்னோக்கிய படைநிலைகள் மீது தீவிரமான பல்லங்களை ஏவுவதன் மூலமும், முன்னோக்கிய தாக்குதல்களில் தற்கொலைப் படையினரின் அலைகளை வீசுவதால் ஊடறுத்து கட்டளை மற்றும் தகவல் தொடர்பு மையங்களை ஒரேயடியில் வீழ்த்துவதன் மூலமும், கடந்த காலத்தில், விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படை முகாம்களில் பேரளவிலான வெற்றியை பெற்றனர் என்ற பொதுவான பார்வையைக் கொள்ள முனைந்தனர்.

கொழும்பிலும் வெளிநாடுகளிலுமுள்ள மேற்கத்திய படைத்துறை மற்றும் புலனாய்வு ஆளணியினருடன் நெருக்கமாகப் பணியாற்றும் அல்லது ஆலோசனை செய்யும் சிங்கள வலுவெதிர்ப்பு ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்களால் இந்தக் கருத்து முக்கியமாக வளர்த்தெடுக்கப்பட்டது.

சிறிலங்கா தரைப்படை மற்றும் அதன் அமெரிக்க மற்றும் பிரித்தானிய நண்பர்கள், ஆனையிறவு போன்ற பெரிய தானைவைப்பை கடுமையாக அச்சுறுத்துவதற்குத் தேவையான அளவிலான தடூகப் போர்முறைக் கேந்திரத்தை ஒருங்கிணைக்கும் திறனை தவிபு பெற்றிருக்கும் என்று வெளிப்படையாக எதிர்பார்த்திருக்கவில்லை.

20ஆம் நூற்றாண்டில், எந்தவொரு தேச எதிர்ப்பு ஆய்தக் குழுவும் அவ்வாறு செய்து வெற்றிபெறவில்லை - வியட் கொங் கூட.

('தியம் பியன் பூ'க்கான சமரானது அடிப்படையில் 200 சேணேவித் துண்டுகள் மற்றும் 20,000 வழக்கமான வழங்கல்துறை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆதரவுடன் 15,000 க்கும் மேற்பட்ட படையினரால் முற்றுகையிடப்பட்டதோடு வியட்நாமியருக்கு தனிப்பட்ட முறையில் சாதகமான நிலப்பரப்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது ஆகும்.)

1997ஆம் ஆண்டுமுதல் போர் பற்றிய மெய்யுண்மைகளின் அடிப்படையில் அவர்களின் பார்வை ஏரணமானதாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

மே 1997 முதல் நவம்பர் 1999 வரை சிறீலங்கா படைத்துறையின் 'ஜெய சிக்குறுய் நடவடிக்கை'க்கு எதிரான அவர்களின் வலுவெதிர்ப்புச் சமர்களில் புலிகள் வன்னியிலுள்ள முக்கிய மக்கள்தொகை மையங்களையும் (புளியங்குளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், மாங்குளம்), 3000க்கும் மேற்பட்ட படையினரையும் (காயமடைந்தவர்கள் மற்றும் வீரச்சாவடைந்தவர்கள்), மதிப்புமிக்க படையப் பொருட்களையும் இழந்தனர்.

SLA Soldiers in Jeyasikurui military operation.jpg

'ஜெயசிக்குறுய் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினர். | படிமப்புரவு: தமிழ்நெற்'

மென்மேலும், விடுதலைப் புலிகள் 1995-96 இல், தீவின் வடகிழக்கில் இயக்கத்தின் மிகப்பெரிய வருவாய்த் தளமான யாழ்ப்பாணத்தையும் இழந்தனர்.

எனவே, கடுமையாக வலுவெதிர்க்கப்பட்ட தெற்கு யாழ்ப்பாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான சிக்கலான தடூகப் போரைத் தொடங்குவதற்கும், பொருண்மத்தின் அடிப்படையில் நிலைநிறுத்துவதற்கும் விடுதலைப்புலிகள் திறனற்றவர்கள் என்ற முடிவுக்கு சிறிலங்கா தரைப்படை மிகவும் ஏரணமாக வந்தது.

பின்னோக்கிப் பார்த்தால், ஆனையிறவுத் தானைவைப்பின் 'அசைக்க முடியாத பாடநூல்' மீதான சிறிலங்கா தரைப்படையின் நம்பிக்கையானது, அதைப் பார்வையிட்ட பிரித்தானியா மற்றும் அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசதந்திரிகளின் பாராட்டுகளால் சிறியளவில் மீளுறுதிப்படுத்தப்பட்டதோடு, தெற்காசியாவின் நவீன படைத்துறை வரலாற்றில் மோசமான தோல்விகளில் ஒன்றுக்கு பங்களித்தது என்று ஒருவர் திறவினையாகக் கூறலாம். 

இது 1999 திசம்பரில் கட்டைக்காடு-வெற்றிலைக்கேணியில் உள்ள சிறிலங்கா தரைப்படை-கடற்படைக் கூட்டுத்தளத்தைப் புலிகள் கறங்கி நொறுக்கியபோது கல்மேல் எழுதப்பட்ட எழுத்துப் போலானது.

ஆனையிறவுத் தானைவைப்பின் முக்கிய உவர்க்கத்தலை இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்ந்து, சிறிலங்கா தரைப்படையானது, அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட அதிசிறப்பு 53 வது படைப்பிரிவினரைக் கொண்டு, கட்டைக்காட்டிற்கு வடக்கேயுள்ள தாளையடி முகாமை விரைவாக வலுவூட்டியதோடு வத்திராயன் பெட்டியையும் கட்டியது.

புலிகள் முன்னோக்கிய தாக்குதல்களுக்கு மட்டுமே திறன் கொண்டவர்கள், ஆனால் ஈரூடகத் தடூகத்திலில்லை என்ற கற்பிதத்தின் அடிப்படையிலேயே இந்த நகர்வு இருந்தது.

(வத்திராயன் பெட்டியின் கருத்தாக்கம், தாளையடியிலிருந்து ஏ9 வீதியில் புதுக்காட்டுச் சந்தி வரையிலான கனமாக அரணப்படுத்தப்பட்ட செவ்வகக் கொத்தளம், இந்தத் தற்கோளின் அடிப்படையிலேயே அமைந்தது)

சிறிலங்கா மற்றும் செந்தரப்படுத்தப்பட்ட மேற்கத்திய படைய ஞானத்தின்படி, எந்தவொரு விடுதலைப்புலிகளின் ஊடுருவல் குழுவும் தப்பிப்பிழைப்பதும் ஆனையிறவின் வலுவெதிர்ப்பிற்கு முக்கியமான பிற்பகுதியிலுள்ள முகாமையான (vital) சிறிலங்கா தரைப்படையின் படைநிலைகளுக்கு ஒரு சிறும நிலைத்தன்மையற்ற அச்சுறுத்தலைக் கூடப் பொதிப்பதும் சாத்தியமற்றது என்று கருதப்பட்டது.

தொடர்ந்து வந்த மூன்று வாரங்களில், புலிகள், வான்வழி ஆதரவில்லாமல் பகையின் நன்கு வலுவூட்டப்பட்ட பிற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட சமரில் சண்டையிட்டு வெற்றிபெற முடியும் என்பதை நவீன படைத்துறை ஞானத்திற்கு மெய்ப்பித்துக் காட்டியதன் மூலம் இன்னும் தெரிவித்து பல கற்பிதங்களை சிதறடித்தனர்.

kudaarapppu4.png

'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் விரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் தரையிறக்கத் தலைமைக் கட்டளையாளர் கேணல் பால்ராஜ். | படிமப்புரவு: தமிழ்நெற்'

26 மார்ச் 2000 அன்று, புலிகளின் மூத்த படையக் கட்டளையாளர் கேணல் பால்ராஜ், கடற்புலிகள் 1200 படையினரையும் அவர்களது படைய வழங்கல்களையும், உரகடலில் சிறிலங்கா கடற்படையின் ஒரு பெரிய கலத்தொகுதி மூலம் அமைக்கப்பட்ட கடற்றடுப்பூடாக தங்கள் வழிக்குச் சண்டையிட்டு, சிறிலங்கா தரைப்படையின் பிற்பகுதியிலுள்ள, இரும்பு போர்த்திய வத்திராயன் பெட்டிக்கு அப்பால், குடாரப்பு-மாமுனையில் தரையிறக்கிய போது, ஒரு அரசின் மரபுவழி தரைப்படையின் எந்த ஆழமான பிற்பகுதி வலுவெதிர்ப்பையும் கேந்திர வான்வலு கொண்ட ஒரு ஆயுதப்படையைத் தவிர வேறு யாராலும் கடுமையாக அச்சுறுத்த முடியாது என்ற கருத்தாக்கத்தைப் பொய்ப்பித்தார்.

எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட போர்களை நடத்துவதில் ஒரு முன்னுதாரண பெயர்ச்சியை இது சைகை செய்வதை சிலர் கவனித்துள்ளனர்.

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் | தமிழ்நெற்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நன்னி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி நன்னி.

🙏🙏🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.