Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அதிகாரப் பங்கீடின்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யலாமா?

-தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன–

அ.நிக்ஸன்-

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்பச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களைச் சிறிய தீவான இலங்கை ரத்துச் செய்யும் சூழலில், எந்தவிதமான அரசியல் அதிகாரங்கள் – பாதுகாப்புகள் இல்லாத புலம்பெயர் தமிழர்கள் எந்த நம்பிக்கையோடு இலங்கையில் முதலிட முடியும் என்ற கேள்விகள் நியாயமானவை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்த பட்சமேனும் மீள புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் மக்களின் முதலீடுகளை எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது.

தமிழ் உறுப்பினர்களைப் பேச்சுக்கு வருமாறு அழைத்த பின்னணியும். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்கில் அமைந்தமை என்பதும் கண்கூடு.

ஆகவே இரண்டு விடயங்களை இங்கே அவதானிக்க வேண்டும். ஒன்று, புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெறுவது. இரண்டாவது அரசியல் தீர்வுக்கான பேச்சு என்று கூறி, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் விரிவடைகின்றன என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்குக் காண்பிப்பது.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்ற பட்டறிவு தமிழர்களிடம் உண்டு. அதுவும் புலம்பெயர் தமிழர்களிடம் அந்தப் பட்டறிவு அதிகமாகவே உண்டு என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் நம்ப மறுக்கின்றனர் அல்லது அவர்கள் சார்பான தமிழ் முகவர்கள் உர மூட்டுகின்றனர் எனலாம்.

2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்திலேதான் சில சர்வதேச ஒப்பந்தங்கள் செயலிழந்தன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கொழும்புத் துறைமுக கிழக்கு முனை அபிவிருத்தி ஒப்பந்தம், ஜப்பான் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்வதென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாகக் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனை அபிவிருத்தி சீனாவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று 2018 இல் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் அபிவிருத்தி உடன்படிக்கை தன்னிச்சையாகவே ரத்துச் செய்யப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மிலேனியம் சவால்கள் நிறுவன தலைவருடன் உரையாடி இணக்கம் தெரிவித்த நிலையிலேயே ஒப்பந்தம் கைச்சாத்தாகியது

அதேபோன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜப்பான் அரசின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் சேவைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக ரத்துச் செய்துள்ளது.

spacer.png

திட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசுடன் எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையின் படி செப்டம்பர் 24, 2020 அன்று அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில் இத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

அதேவேளை, பதினைந்து வருடங்களுக்கு முன்னா் இந்தியாவும் இலங்கையும் 2006 இல் சம்பூர் மின் உற்பத்தி மற்றும் 2009 இற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தன. ஆனால் இவை உரிய முறையில் செயற்படவில்லை.

2002 இல் கொழும்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் அப்பலோ மருத்துவனை, 2006 இல் இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச விதிகளுக்கு மாறாக இலங்கை வர்த்தகர் ஒருவர் மூலம் வெவ்வேறு பெயர்களில் அதிகளவு பங்குகளைக் கொள்வனவு செய்து அப்பலோ மருத்துவமனையை இலங்கைக்கு உரியதாக்கி லங்கா மருத்துவமனை என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் நிருபன் சென், அமைச்சராக இருந்த அமரர் அனுரா பண்டாரநாயக்கவுடன் கடுமையாகத் தர்க்கப்பட்டார். இலங்கை நாடாளுமன்றத்திலும் இந்தியாவுக்கு எதிரான விமர்சனங்களை அனுரா பண்டாரநாயக்க அள்ளி வீசினார்.

சென்னை இராமச்சந்திர மருத்துவமனையைக் கொழும்பில் அமைக்க சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது 2004 இல் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தயாராகியிருந்தது. ஆனால் 2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதியாகப் பதவியேற்ற பின்னர் அதனை ரத்துச் செய்தார்.

கொழும்பு கொள்பிட்டி காலி வீதியில் இந்திய தூதரகம் அமைப்பதற்கு 2013 இல் இடம் ஒதுக்கிவிட்டுப் பின் அதனை மீளப் பெற்றுச் சீன விமான நிறுவனம் ஒன்றுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் மகிந்த  கைச்சாத்திட்டார்.

இவ்வாறு பல ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டும் வேறு சில வெளிநாட்டு வர்த்தக முதலீடுகள் அபகரிக்கப்பட்டும் உள்ள சூழலில், புலம்பெயர் தமிழர்கள் எதனை நம்பி இலங்கையில் முதலீடு செய்ய முடியும்? இலங்கை அரச நிறுவனங்களை அல்லது அரச – தனியார் கூட்டு நிறுவனங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்த முடியுமா என்ற கேள்விகளும் நியாயமானவை.

உதாரணமாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியே அதன் பங்குகள் எமிரேட்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால் லாபம் ஈட்ட ஆரம்பித்ததும், பின்னர் அந்த நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் மீளவும் பெற்றுக் கொண்டது.

ஆகவே வல்லாதிக்க நாடுகளின் பிரபல சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் இலங்கையோடு நம்பிக்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களைத் தன்னிச்சனையாக ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், அதிகாரமே இல்லாத எந்த ஒரு நாடுகளினதும் ஆதரவு இல்லாத சூழலில், புலம்பெயர்ந்த தமிழ் வர்த்தகர்கள் முதலீடு செய்தால், அல்லது சில அரச – தனியார் கூட்டு நிறுவனங்களின் பங்குகளைக் கொள்வனவு செய்து இயக்கினால் அதனை மீண்டும் தட்டிப்பறிக்க மாட்டார்கள்  என்பதற்கு என்ன உத்தரவாதம்?

வல்லரசு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டமை குறித்து இன்று வரை எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும்  பொறுப்புக்கூறவும் இல்லை.

ஆகவே புலம்பெயர் அமைப்புகள் இந்த அநீதிகளைச் சுட்டிக்காட்டியும், எழுபது வருடங்களாகத் தமிழர்கள் ஏமாற்றபட்டமை குறித்தும் பரப்புரை செய்ய வேண்டும்.

அத்துடன் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற அங்கீகாரத்துடன் சுயாட்சி அதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படாமல், இலங்கையில் எந்த ஒரு முதலீட்டுக்கும் தயார் இல்லை என்ற உறுதியான தகவலை சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்தவும் வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசாவோ, சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்ற விரும்பமாட்டார்கள் என்பது எழுபது வருட உண்மை.

முதலீடுகளைச் செய்யுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ள நிலையில், உள்ளகப் பொறிமுறைதான் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் ஏழாம் திகதி புதன்கிழமை செய்தியாளர்களிடம் துணிவுடன் கூறியிருக்கிறார்.

ஆகவே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தைச் செய்யாமல், உள்ளக ரீதியான ஒற்றையாட்சிப் பொறிமுறைகள் ஊடே கொழும்பை மையமாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கத்தை மாத்திரம் இலங்கை விரும்புகிறது.

அத்துடன் சிங்களவர்கள் விரும்பும் அரசியல் தீர்வின் மூலம் புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமெனவும் சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர் என்பதும் இங்கே பகிரங்கமாகியுள்ளது.

ஆகவே தமிழர்களுக்குரிய அரசியல் – பொருளாதார பாதுகாப்பு அற்ற ஒரு சூழலில் துணிவோடு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்றால், இதன் பின்னால் வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை.

ஏனெனில் தம்முடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் பலவற்றை மீறியதால். அதற்குப் பதிலாக இலங்கையோடு பேரம் பேசி இலங்கையில் தமக்குரிய வேறு ஏதேனும் லாபங்களை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லாதிக்க நாடுகள்,  அரசுக்கு அரசு என்ற இராஜதந்திர உறவுகளின் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே அரசற்ற சமூகமாகக இருக்கும் புலம்பெயர் தமிழர்களைச் சிங்கள ஆட்சியாளர்கள் கன கச்சிதமாக ஏமாற்றுவர்கள் என்ற நுட்பமான அடிப்படை  உண்மை இந்த வல்லாதிக்க நாடுகளுக்குத் தெரியாததல்ல.

இலங்கையைத் திருப்திப்படுத்தவே  ஈழத்தமிழர் தொடர்பான சிங்கள ஆட்சியாளர்களின் சமீபகால நகா்வுகளை அமைதியாக இந்த வல்லாதிக்க நாடுகள் அவதானித்தக் கொண்டிருக்கின்றன.

spacer.png

குறிப்பாகத் தமது புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார நோக்கில் செயற்படும் இந்த வல்லாதிக்கச் சக்திகள், இலங்கைத்தீவில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இன முரண்பாடுகள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை.

ஆனால் முடிந்தவரை சிங்கள மக்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்குத் தமிழர்கள் இணங்கிச் செல்ல வேண்டுமென வற்புறுத்தியும் வருகின்றன.

2002 சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் இந்த நிலைப்பாட்டோடுதான் குறித்த வல்லாதிக்க நாடுகள் செயற்பட்டுமிருந்தன.

ஆகவே இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்கள்தான். குறிப்பாக இலங்கையில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் சில புலம்பெயர் வர்த்தகர்கள், சிங்கள ஆட்சியாளர்களின் நுட்பமான காய் நகா்த்தல்களையும், அது பற்றிய வல்லாதிக்கச் சக்திகளின் கள்ள மௌனத்தையும் ஆழமாக நோக்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல வடக்குக் கிழக்குச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு. வெறுமனே ஆரவாரங்களுக்கும் பரபரபரப்புப் பேச்சுக்களுக்கும் இடமளித்து ஈழத்தமிழர்களின் சுயமரியாதையை இழக்கும் ஆபத்துக்களில் சிக்கிவிட முடியாது.

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலேதான் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கே முன்னுரிமை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக நம்பகமான உள்ளகத் கூறுகின்றன.

இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எட்டாம் திகதி வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதையும்  அவதானிக்க வேண்டும்.

இந்தியாவை இலங்கை பல சந்தா்ப்பங்களில் இராஜதந்திர ரீதியாகவும், வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டதன் ஊடாகவும் அவமானப்படுத்தியிருக்கின்றது என்று தெரிந்தும், “இலங்கைக்கு முக்கியத்துவம்” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார் என்றால், இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை இலங்கை கொடுத்திருக்கிறது என்ற பின்புலத்தை அறியலாம்.

ஈழத்தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கவும் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை உள்ளீர்க்கவும் இந்திய ஆதரவுத் தளத்தை நீட்ட வேண்டுமென ரணில் கருதியிருக்கலாம். இந்தியாவும் ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கைக்கு எதிரான ஆயுதமாக்கித் தமக்குரிய புவிசார் நலன்களை அடைந்து வருகிறது என்பதும் புதிய விவகாரமல்ல.

ஆகவே இக் காரண காரியங்களை ஈழத்தமிழர்கள் மிக நுட்பமாக அறிந்து காய் நகா்த்த வேண்டும். குறிப்பாக இந்தியாவைக் கையாளும் பொறிமுறை ஒன்றைக் கட்சி அரசியலுக்கு அப்பால் வகுக்க வேண்டும். வடக்குக் கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற கருத்தை அது பிரதிபலிக்கவும் வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு, தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதை உறுதிப்படுத்த எடுத்த முயற்சிகள் பற்றி அப்போது கொழும்பில் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிற் ”கொழும்பு அசைமென்ற்” என்ற தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன எப்படிப் பிடிவாதமாக நின்றார் என்பது பற்றி டிக்சிற் தனது நூலில் விபரிக்கிறார். ஆகவே மேலும் அது பற்றிய ஆழமான உள்ளக விபரங்களைப் பெற வேண்டியது தமிழ்த் தரப்புக்கு அவசியமானது. இன்றும் கூட அதே பிடிவாதத்துடனேயே சிங்கள ஆட்சியாளர்கள் நகருகின்றனர்.

ஆனால் தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன.

2009 மே மாதத்திற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியல் பரப்பு திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பொறிமுறை ஊடாகச் செயற்படவில்லை. இப் பலவீனங்களை அறிந்தே ரணில் புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு செய்ய வருமாறு அழைத்திருக்கிறார் என்பதும் பகிரங்க உண்மை.

 

http://www.samakalam.com/அதிகாரப்-பங்கீடின்றி-புல/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/12/2022 at 11:02, கிருபன் said:

தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன.

 

On 27/12/2022 at 11:02, கிருபன் said:

இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்கள்தான்.

இணைப்புக்கு நன்றி

பாவம் இந்தக் கட்டுரையாளரும் எத்தனை விடயங்களைச் சுட்டி எழுதுகிறார். ஆனால் இந்தத் தமிழ்க் கட்சி    **மண்டைகளுக்குப் புரிகிறதா என்றால் இல்லை. புலம்பெயர்ந்தோர் என்ன செய்வது? அதனையும் தேவையில்லை என்றல்லவா அறிவியக்கமோ ஏதோ அரசியல் இயக்கமோ  ஏதோ ஒன்று சொல்கிறதாமே.!!



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து       மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • பிரிவுகள்   புலிகளின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இது இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. அடிபாட்டாளர்களின் தேவைக்காக 'மருத்துவப் பிரிவும் மக்களின் தேவைக்காக 'தமிழீழ சுகாதார பிரிவும்' செயற்பட்டன.   விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு: தமிழீழ சுகாதார பிரிவு: தமிழீழச் சுகாதார சேவைகள் சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு தாய்சேய் நலன் காப்பகம் பற்சுகாதாரப்பிரிவு சுதேச மருத்துவப்பிரிவு கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம் நடமாடும் மருத்துவ சேவை கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பூச்சியியல் ஆய்வுப்பிரிவு விசேட நடவடிக்கைப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம் உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள் Dr. பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது) நலவாழ்வு அபிவிருத்தி மையம் மருந்தகங்கள் போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம் மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்லூரி தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் முதலுதவியாளர்கள் அணி கற்சிலைமடு - (முதலாவது மருத்துவமனை.) நெடுந்தீவு புங்குடுதீவு பூநகரி புளியங்குளம் நைனாமடு அளம்பில் மாங்குளம் கறுக்காய்குளம் முத்தரிப்புத்துறை முள்ளிக்குளம் பாட்டாளிபுரம் கதிரவெளி கொக்கட்டிச்சோலை கஞ்சிகுடிச்சாறு தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம் களஞ்சியப்பகுதி கொள்வனவுப்பகுதி கள மருத்துவம் திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு மருத்துவ பிரிவு: (இதன் பிரிவுகள் எனக்கு சரியாகத் தெரியாது... தெரிந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன்) தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள் --> படையணிப்பிரிவு மருத்துவமனைகள் படையணிப்பிரிவு மருத்துவமனைகள் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (ஜெயந்தன் படையணியினது, மட்டு.) முல்லை மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.