Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டி – இன்னும் தீர்மானம் இல்லை என்கின்றார் சம்பந்தன்

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவது பற்றி பங்காளி கட்சிகள் தங்களின் கருத்துகளைக் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1317667

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து போட்டியிடட்டும், அதுதான் சிறந்தது. சம்பந்தனை மக்கள் தூக்கி எறியவேண்டும். அவரை விலத்துவது பற்றி உரையாடல் நடந்த பின்னும் தொங்கிக்கொண்டிருப்பது அவரின் வயதுக்கு அழகல்ல.குடும்பத்தில் யாருமில்லையோ எடுத்துக்கூறி ஓய்வெடுக்க பண்ணுவதற்கு? எத்தனைதடவை பாராளுமன்றத்தால் கட்டாய ஓய்வு கொடுத்தார்கள் வெட்கமே இல்லையா இந்த மனிதனுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, satan said:

சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து போட்டியிடட்டும், அதுதான் சிறந்தது. சம்பந்தனை மக்கள் தூக்கி எறியவேண்டும். அவரை விலத்துவது பற்றி உரையாடல் நடந்த பின்னும் தொங்கிக்கொண்டிருப்பது அவரின் வயதுக்கு அழகல்ல.குடும்பத்தில் யாருமில்லையோ எடுத்துக்கூறி ஓய்வெடுக்க பண்ணுவதற்கு? எத்தனைதடவை பாராளுமன்றத்தால் கட்டாய ஓய்வு கொடுத்தார்கள் வெட்கமே இல்லையா இந்த மனிதனுக்கு?

பதவி சுகத்தை அனுபவித்து விட்டால்...
அடித்து திரத்தினாலும் போக மாட்டார்கள். 
அதுகும் எதிர்க் கட்சி தலைவராக இருந்த சொகுசு வாழ்க்கை சும்மாவா...

சுமந்திரனே சில வருடங்களுக்கு முன் அரசியலை விட்டு விலகப் போகின்றேன் 
என்று சொல்லிக் கொண்டு இருந்தவர், இப்போ... அந்தப் பேச்சே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொறுங்கோ..... சுமந்திரனுக்கு ரணில் வைப்பார் வேட்டு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, satan said:

பொறுங்கோ..... சுமந்திரனுக்கு ரணில் வைப்பார் வேட்டு!

ஓம்.... சுமந்திரன், சாணக்கியனிலை... ரணிலுக்கு, பழைய கறள் கொஞ்சம் இருக்கு.
இவரை ஜனாதிபதியாக்க விட மாட்டோம் என்று காலி முகத்திடல் 
போராட்டக் காரர்களுடன் இணைந்து, கன வசவு பாடியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, satan said:

பொறுங்கோ..... சுமந்திரனுக்கு ரணில் வைப்பார் வேட்டு!

 

21 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்.... சுமந்திரன், சாணக்கியனிலை... ரணிலுக்கு, பழைய கறள் கொஞ்சம் இருக்கு.
இவரை ஜனாதிபதியாக்க விட மாட்டோம் என்று காலி முகத்திடல் 
போராட்டக் காரர்களுடன் இணைந்து, கன வசவு பாடியவர்கள்.


நீங்கள் ஏமாறப்போகிறீர்கள் என நான் நினைக்கின்றேன். பொதுத் தேர்தலொன்று வந்து சும் தமிழரால் தோற்கடிக்கப்பட்டால் ஐ.தே.க வின் தேசியப்பட்டியலூடாக ரணிலே வாய்ப்பு வழங்குவார். அதன்பின் உலக நாடுகளுக்குப் பறந்து திரிந்து தமிழருக்கு எதிராகச் சிங்களத்திற்கான சேவையைச் செய்வார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nochchi said:

நீங்கள் ஏமாறப்போகிறீர்கள் என நான் நினைக்கின்றேன். பொதுத் தேர்தலொன்று வந்து சும் தமிழரால் தோற்கடிக்கப்பட்டால் ஐ.தே.க வின் தேசியப்பட்டியலூடாக ரணிலே வாய்ப்பு வழங்குவார். அதன்பின் உலக நாடுகளுக்குப் பறந்து திரிந்து தமிழருக்கு எதிராகச் சிங்களத்திற்கான சேவையைச் செய்வார். 

நீங்கள் சொல்வதும் நியாயமான கருத்துத்தான்.
அரசியல்வாதிகள்...  எந்தக் குத்துக்கரணமும் அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வதும் நியாயமான கருத்துத்தான்.
அரசியல்வாதிகள்...  எந்தக் குத்துக்கரணமும் அடிப்பார்கள்.

ஒருவேளை... அனைத்து முரண்களையும் கடந்து (தற்போது நடைபெறாது) பொதுத்தேர்தலில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய முனைந்தாலும் அதைக் குழப்புவது சும்மாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, nochchi said:

ஒருவேளை... அனைத்து முரண்களையும் கடந்து (தற்போது நடைபெறாது) பொதுத்தேர்தலில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய முனைந்தாலும் அதைக் குழப்புவது சும்மாகத்தான் இருக்கும்.

ஓம். சும்மை பிடித்து வெளியே விட்டால் எல்லாம் ஒழுங்காக இருக்கும்.
அதனை செய்ய தமிழரசு கட்சி தலைவர்  மாவை, ஏன் தயங்குகிறார் என்று தெரியவில்லை.
வேறு கட்சிகளில் என்றால், எப்பவோ.... தூக்கி கடாசி இருப்பார்கள்.
மாவையர்.... தலைமைப் பதவிக்கு பொருத்தம் இல்லாத ஆள் என்ற படியால்தான்... 
பல அசிங்கமான கூத்துகள் நடக்கின்றது.
சுமந்திரன்  இல்லாத, கூட்டமைப்பில்... கஜேந்திரன் இணையவும் வாய்ப்பு உண்டு. 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nochchi said:

ஐ.தே.க வின் தேசியப்பட்டியலூடாக ரணிலே வாய்ப்பு வழங்குவார். அதன்பின் உலக நாடுகளுக்குப் பறந்து திரிந்து தமிழருக்கு எதிராகச் சிங்களத்திற்கான சேவையைச் செய்வார். 

ஐக்கிய தேசியக்கட்சி மட்டுமல்ல எந்த சிங்களகட்சியென்றாலும் அதைத்தான் செய்யும். அவர்களுக்கு ஒரு கோடரிக்காம்பு வேண்டும். தாங்கள் தமிழருக்கு செய்யும் அனிஞாயங்களை சர்வதேசத்தில் நிஞாயப்படுத்துவதற்கு. சிங்களம் சொல்வதைவிட பாதிக்கப்பட்ட இனத்திலிருந்து ஒருவர் சொல்வது வலு கூடியது, ஆனால் சுமந்திரனின் தான்தோன்றித்தனத்தை, சிங்களத்துக்கு முதுகு சொறியும் குணத்தை வெளிநாட்டுத்தூதரகங்களுக்கு, சர்வதேசத்துக்கு ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். பல சம்பவங்களை ஆதாரத்தோடு நிரூபித்தும் இருக்கிறார்கள். சீனியர் கதிர்காமரின் காலமல்ல இது. இதுக்கு மேலேயும் சுமந்திரன் அதிகப்பிரசங்கி போல வெளிக்கிட்டா மூக்குடைபடுவார். சீனியர் கதிர்காமர் ஐ. நாவுக்கு; நுளம்புக்கு மருந்தடிப்பதோடு உங்கள் மனிதாபிமான செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று பாடம் எடுக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்டவர். இவ்வளவு அவமானப்பட்டு, கஷ்ரப்பட்டு தூக்கிவிட்டவரை தமது பிரதம மந்திரியாக ஏற்க சிங்களம் மறுத்துவிட்டது. இவரும் பிரதம மந்திரி கனவோடு அலையுறார். எவ்வளவை பாத்து அனுபவப்படடாலும்; இவர் அவர்போல இல்லை, நான் அவர்போல இல்லை, நான் கெட்டிக்காரன், சிங்களத்துக்கு வேண்டிய எல்லாத் தகுதியும் என்னிடம் உண்டு என்று  மனம் விடாது அலைபாயும் கண்டியளோ!         

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதுக்கு இப்போ என்ன அவசரம்? முதலில் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாய்  சிங்களக்கட்சிகளோடு கொண்டாடுகிற அலுவலைப்பாருங்கோ! சிங்கக்கொடியையும் சிங்களவன் தர மறுத்தாலும் மறக்காமல் பறித்து  ஆட்டுங்கோ! அதன்பின் ஆறுதலாய் இருந்து யோசியுங்கோ! சிங்களக்கட்சிகளோடா? தமிழ்கட்சிகளோடா கூட்டணி சேர்வது என்று! சிஷ்யன் இப்போ முடிவெடுத்திருப்பார். அதற்காகவே ஓடியோடி தனித்து ரணிலை சந்திக்கிறார். தமிழரின் நீண்ட நாள் அவா ஒன்று!  அதாவது உங்களை வீட்டிலிருந்து அகற்றி  சொகுசான இல்லத்தில் ஓய்வெடுக்க விடுவதென்று. அது வெகு விரைவில் நிறைவேறப்போகுது என்று நினைக்கிறன்.         



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து       மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • பிரிவுகள்   புலிகளின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இது இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. அடிபாட்டாளர்களின் தேவைக்காக 'மருத்துவப் பிரிவும் மக்களின் தேவைக்காக 'தமிழீழ சுகாதார பிரிவும்' செயற்பட்டன.   விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு: தமிழீழ சுகாதார பிரிவு: தமிழீழச் சுகாதார சேவைகள் சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு தாய்சேய் நலன் காப்பகம் பற்சுகாதாரப்பிரிவு சுதேச மருத்துவப்பிரிவு கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம் நடமாடும் மருத்துவ சேவை கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பூச்சியியல் ஆய்வுப்பிரிவு விசேட நடவடிக்கைப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம் உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள் Dr. பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது) நலவாழ்வு அபிவிருத்தி மையம் மருந்தகங்கள் போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம் மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்லூரி தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் முதலுதவியாளர்கள் அணி கற்சிலைமடு - (முதலாவது மருத்துவமனை.) நெடுந்தீவு புங்குடுதீவு பூநகரி புளியங்குளம் நைனாமடு அளம்பில் மாங்குளம் கறுக்காய்குளம் முத்தரிப்புத்துறை முள்ளிக்குளம் பாட்டாளிபுரம் கதிரவெளி கொக்கட்டிச்சோலை கஞ்சிகுடிச்சாறு தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம் களஞ்சியப்பகுதி கொள்வனவுப்பகுதி கள மருத்துவம் திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு மருத்துவ பிரிவு: (இதன் பிரிவுகள் எனக்கு சரியாகத் தெரியாது... தெரிந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன்) தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள் --> படையணிப்பிரிவு மருத்துவமனைகள் படையணிப்பிரிவு மருத்துவமனைகள் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (ஜெயந்தன் படையணியினது, மட்டு.) முல்லை மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.