Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட்

Dec 30, 2022 10:29AM IST ஷேர் செய்ய : 
WhatsApp-Image-2022-12-30-at-09.29.42-1.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து , உத்ரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, முஹம்மத்பூர் ஜால் அருகில் உள்ள ரூர்க்கி என்ற இடத்தில் அவர் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அங்கிருந்த சாலை தடுப்பில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இன்று (டிசம்பர் 30 ) அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

WhatsApp-Image-2022-12-30-at-09.29.53-1.

இதில் ரிஷப் பண்ட் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அசோக் குமார் “ரிஷப் பண்ட் கார் ஓட்டும் போது தூங்கி விட்டார். அதனால் தான் கார் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி உள்ளது. தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்று கூறியுள்ளார்.

 

https://minnambalam.com/sports/car-accident-rishabh-pant-critically-injured/

 

  • கருத்துக்கள உறவுகள்

கார் விபத்து: கண்ணாடியை உடைத்து வெளியே வந்த ரிஷப் பந்த்

ரிஷப் பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 டிசம்பர் 2022, 05:14 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையில் நடுவே இருந்த தடுப்பில் மோதி தீப்பிடித்து விபத்துக்கு உள்ளானது. காயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஹரித்வார் மாவட்டத்தில்  மங்களூர் மற்றும் நர்சன் இடையே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் தெரிவித்துள்ளது. 

முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மங்களூர் PS பகுதியின் NH-58 இல் விபத்து நடந்தது என எஸ்பி தேஹத் ஸ்வபன் கிஷோர் கூறியுள்ளார். 

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யவும், தேவைப்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஏ.என்.ஐ. ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

 

ரிஷப் பந்தின் காயம் குறித்து டெஹ்ராடூன் மேஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆஷிஷ் யாக்நிக் கூறுகையில், "ரிஷப் நிலைமை சீராக உள்ளது. எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் குழு அவரது காயத்தை பரிசோதித்து வருகிறது. பரிசோதனை விரைவில் முடிவடையும். அதன்பிறகுதான் அடுத்தகட்ட சிகிச்சை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். அது குறித்து மருத்துவ புல்லட்டின் மூலம் தெரிவிக்கப்படும்." என்றார்.

25 வயதாகும் ரிஷப் பந்த், இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இலங்கை அணி 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.  இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. 

கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த பந்த்

ஹரித்வார் எஸ்.எஸ்.பி. அஜய் சிங் பிபிசியிடம் இது குறித்து கூறுகையில், “காலையில், 5.30 முதல் 6 மணிக்குள் விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது அவர் கார் மோதியுள்ளது. முகப்பு கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று தெரிவித்தார். மேலும், “மருத்துவரிடம் பேசியபோது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தெரிவித்தனர். உள்காயம் எதுவும் இல்லை. காலிலும் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவை எக்ஸ்.ரே அறிக்கை வந்ததும் தெரியவரும்” என்றும் அவர் கூறினார்.

ரிஷப்

பட மூலாதாரம்,ANI

இதனிடையே, விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர்கள்  சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் மேட்ஸ்பேன் விவிஎஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்துக்காக பிரார்த்தனை செய்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.

அவர் விரைந்து குணமடைய வாழ்த்துகள். விரைந்து நலம் பெறுங்கள் சாம்பியன்` என்று பதிவிட்டுள்ளார்.  இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர விரேந்தர் சேவாக்  தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்து விரைந்து நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

ரிஷப் பந்த் குறித்து நான் கேள்விப்பட்ட செய்திகள் சரியானதுதானா? அவர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான முனாஃப் பட்டேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான சாம் பில்லிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,  `ரிஷப் நலமாக இருக்கிறார் என நம்புகிறேன்` என்று பதிவிட்டுள்ளார்.

 

பிசிசிஐ கூறுவது என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள ஊடக குறிப்பில், “இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே வெள்ளிக்கிழமை காலை விபத்தில் சிக்கினார். சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ராமா சென்டரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் நிலை சீராக உள்ளது, அவர் இப்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் மூலம் மேல் சிகிச்சை வழங்கப்படவுள்ளது. 

 

தற்போது ரிஷாப்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் மருத்துவக் குழு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நிலையில், ரிஷப்பின் குடும்பத்தினருடன் பிசிசிஐ தொடர்ந்து தொடர்பில் உள்ளது. ரிஷப் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவையும் பெறுவதையும் வாரியம் பார்த்துக் கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cne1m2wermwo

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் குன‌ம் அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

கார் விபத்தில் சிக்கிய ரிஷாப் பன்ட் சத்திர சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்

By DIGITAL DESK 2

04 JAN, 2023 | 05:36 PM
image

(என்.வீ.ஏ.)

வீதி விபத்து ஒன்றின்போது காயங்களுக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பன்ட், சத்திர சிகிச்சைக்காக அம்ப்யூலன்ஸ் விமானம் மூலம்  மும்பைக்கு   கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

புதுடில்லியிலிருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கீ என்ற இடத்திற்கு 25 வயதான ரஷிப் பன்ட் ஓட்டிச் சென்ற கார், நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளில் மோதுண்டு தீப்பிடித்ததால் அவர் காயங்களுக்குள்ளானார்.

அவ் வீதியால் சென்ற பஸ் வண்டி ஒன்றின் சாரதியும் நடத்துநரும் ரிஷாப் பன்டை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவசர முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தெஹ்ராதுன் வைத்தியசாலைக்கு ரிஷாப் பன்ட் மாற்றப்பாட்டார்.

அந்த வைத்தியசாலையில் 5 தினங்கள் சிகிச்சைப் பெற்றுவந்த ரிஷாப் பன்ட்,  அம்ப்யூலன்ஸ்   விமானம் மூலம் மும்பையிலுள்ள தனியார் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்தது.

'ரிஷாப் பன்டுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவர் முழுமையாக குணமடையும்வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவ குழுவனரால் கண்காணிக்கப்படுவார்  என சபை குறிப்பிட்டது.

விபத்தின்போது ரிஷாப் பன்டின் வலது முழங்கால், மணிக்கட்டு, கணக்கால், முதுகுப்பகுதி ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதுடன் கார் எரிந்ததால் அவர் எரிகாயங்களுக்கும் உள்ளானர்.

தற்போது அவர் தேறிவருவதாக டெல்ஹி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க பணிப்பாளர் ஷியாம் ஷர்மா தெரிவித்தார்.

ரஷாப் பன்ட் விபத்தில் சிக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய குழாம்களில் இணைகப்பட்டிருக்கவில்லை.

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே அவர் கடைசியாக விளையாடியிருந்தார். அப் போட்டியில் 93 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியில் ரஷாப் பன்ட் முக்கிய பங்காற்றியிருந்தார்.

https://www.virakesari.lk/article/144981

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

“என்னை காப்பாற்றிய இந்த ஹீரோக்களுக்கு நன்றி” – ரிஷப் பந்த் உருக்கம்

“உங்களை களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” – குணமடைந்து வருவதாக ரிஷப் பந்த் நம்பிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

கார் விபத்தில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், தான் “குணமடைந்து கொண்டிருப்பதாக” கூறியுள்ளார்.

அவர், “மயக்கம் ஏற்பட்ட நிலையில்” கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் கடந்த மாதம் அவருடைய கார் விபத்திற்குள்ளாகி, கவிழ்ந்து தீப்பிடித்தது.

ஜனவரி 4ஆம் தேதியன்று, அறுவை சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். மேலும், தலை, முதுகு, கால் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ரிஷப் பந்த், சிகிச்சைக்கு வெற்றி கிடைத்து வருவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“அனைவரின் ஆதரவுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் நான் அன்போடும் நன்றியுடனும் இருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

 

“நலம் பெற்று மீண்டு வருவதற்கான பாதை தொடங்கியுள்ளது. வரவுள்ள சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். நம்ப முடியாத அளவுக்கு ஆதரவளித்தமைக்கு பிசிசிஐக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

“அன்பான வார்த்தைகள் மற்றும் ஊக்கத்திற்காக எனது ரசிகர்கள், அணியினர், மருத்துவர்கள், உடற்பயிற்சி சிகிச்சை மருத்துவர்கள் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து ஆழமான நன்றியைக் கூற விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு பதிவில், “என்னால் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூற இயலாமல் இருக்கலாம். ஆனால், இந்த இரண்டு ஹீரோக்களுக்கு நிச்சயமாக நன்றி தெரிவித்தாக வேண்டும்.

எனக்கு விபத்து நடந்தபோது, என்னை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராஜத் குமார், நிஷு குமார் ஆகிய இருவருக்கும் நன்றி. நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்,” என்று தன்னைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரிஷப் பந்த்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்(பிசிசிஐ), முன்னர் ரிஷப் பந்துக்கு “தசைநார் கிழிந்துள்ளதற்கான அடுத்தடுத்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறியது.

டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஹரித்வார் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் நர்சன் இடையே விபத்து ஏற்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல

I may not have been able to thank everyone individually, but I must acknowledge these two heroes who helped me during my accident and ensured I got to the hospital safely. Rajat Kumar & Nishu Kumar, Thank you. I'll be forever grateful and indebted 🙏♥️ pic.twitter.com/iUcg2tazIS

— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

25 வயதான, இடது கை ஆட்டக்காரரான ரிஷப் பந்த், இந்தியாவுக்காக 33 டெஸ்ட், 30 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், மார்ச் மாதம் தொடங்கும் இந்த ஆண்டுக்கான தொடரில் ஆடும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளார்.

ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மங்களூர் PS பகுதியின் NH-58 இல் விபத்து நடந்தது என எஸ்பி தேஹத் ஸ்வபன் கிஷோர் விபத்து நடந்த நேரத்தில் தெரிவித்தார்.

அப்போது, ரிஷப் பந்தின் காயம் குறித்து டெஹ்ராடூன் மேஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆஷிஷ் யாக்நிக், "ரிஷப் நிலைமை சீராக உள்ளது. எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் குழு அவரது காயத்தை பரிசோதித்து வருகிறது. பரிசோதனை விரைவில் முடிவடையும்.

அதன்பிறகுதான் அடுத்தகட்ட சிகிச்சை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். அது குறித்து மருத்துவ புல்லட்டின் மூலம் தெரிவிக்கப்படும்." எனத் தெரிவித்திருந்தார்.

“உங்களை களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” – குணமடைந்து வருவதாக ரிஷப் பந்த் நம்பிக்கை

கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த பந்த்

விபத்து நடந்த நேரத்தில், ஹரித்வார் எஸ்.எஸ்.பி. அஜய் சிங் பிபிசியிடம் பேசியபோது, “காலையில், 5.30 முதல் 6 மணிக்குள் விபத்து நிகழ்ந்தது. சாலையின் நடுவிலுள்ள தடுப்பு மீது கார் மோதியுள்ளது. அவர், காரின் முகப்புக் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர் மேக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “மருத்துவரிடம் பேசியபோது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாகத் தெரிவித்தனர். உள்காயம் எதுவும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர்கள்  சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

“உங்களை களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” – குணமடைந்து வருவதாக ரிஷப் பந்த் நம்பிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரிஷப் பந்துக்காக பிரார்த்தனை செய்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவர் விரைந்து குணமடைய வாழ்த்துகள். விரைந்து நலம் பெறுங்கள் சாம்பியன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர விரேந்தர் சேவாக்  தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்து விரைந்து நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டார்.

“ரிஷப் பந்த் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்,” என்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான முனாஃப் பட்டேல் ட்விட்டரில் தெரிவித்தார். 

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான சாம் பில்லிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரிஷப் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/ce5324gp05vo

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எனது நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன் - கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கம்

2-29.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.

பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கெப்டனாக பணியாற்றுகிறார்.

இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:-

என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.

இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/289897

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.