Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் சிலாவத்துறை நோக்கி படையினர் முன்னகர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸிம்பாப்வே மாதிரி சிறிலங்கா மாறப்போவதில்லை. சிறிலங்காவின் பொருளாதாரத்தைத் தாங்கப் பல நாடுகள் உள்ளன. கடந்த 25 வருடங்களாகச் சளைக்காமல் சிறிலங்கா அரசால் போருக்குச் செலவழிக்கமுடியுது. சிங்கள மக்கள் தங்கள் வயிறு ஒடுங்குவதில் இருந்து தப்பிக்க தமிழர்களை ஒடுக்குவதை நிறுத்த பெரிதாக அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமாட்டார்கள். மேலும் எந்தவொரு பெரிய சிங்களக் கட்சிகளும் தற்போது போரை நிறுத்திச் சமாதானத்தை ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக யார் திறமையாகப் போரைக் கையாள்வது என்றே போட்டிபோடுகின்றனர். சர்வதேச சமூகமும் தமிழர்கள் ஒடுக்கப்படுவதைத் தடுக்க எதையும் செய்யவில்லை. இத்தகைய போக்குகளால்தான் சிங்கள அரசால் மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கவும், சிங்கள மயமாக்கவும் முடிகின்றது. வியக்கவைக்கும் தாக்குதல்களால் ஒரே இரவில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றலாம் என்ற நினைப்பில் நாங்கள் இருக்கும்வரை நமது விடியலின் பாதை நீண்டுதான் இருக்கும்.

  • Replies 58
  • Views 8.3k
  • Created
  • Last Reply

அதானால்தான் இரணில் கட்சி தூதரகங்களுக்கும் முன்னாலையும், வெளிநாட்டு வங்கிகளின் முன்னாலையும் இலங்கைக்கு கடன் வழங்குனால் தன் ஆட்ச்சியில் திருப்பி வளங்கபட மாட்டாது எண்று போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்களா...??

சிங்களவர் மத்தியில் போர் வெறி ஏறி இருப்பதுக்கு இனவாத கட்சிகளின் குக்குரலும்.. அதனா மகிந்த செய்த போரும் கிழக்கில் கிடைத்ததாக களிப்படைய வைத்த தற்காலிக வெற்றியும்தான் சிங்கள மக்களை போர் எனும் வெற்றி போதைக்குள் தள்ளி இருக்கிறது... அவர்களின் ஆதரவை தக்க வைக்க மகிந்தருக்கோ அரசுக்கோ வேறு தெரிவே இல்லை... போர் என்பதுதான் சிங்கள மக்களின் ஆதரவை அவர்களுக்கு கொடுக்கும்...

விலைவாசி ஏற்றம்.. பணவீக்கம் எண்று அரச உடமைகளை தனியாருக்கு லீசுக்கு விற்றல் எண்றும் கதைகள் தொடர்கிறது... இலங்கை அரசாங்கம் பணப்பிரச்சினையில் இல்லை என்பதும், உதவி வழங்கும் நாடுகள் மானிய அடிப்படை கடன்..( குறைந்த வட்டி அல்லது வட்டி அற்ற) கடன்களைதான் வழங்க கூட்டம் போடுகிறது என்பதை புரிந்து கொண்டால் இலங்கை பலவீனம் புரியலாம்... அதாவது பெருமதியான இலங்கை மூலகங்கலை அந்த நாடுகள் கொண்டு போகின்றன... அதுக்காக அவர்கள் கொடுக்கும் முதலீடுதான் அது...!

அப்படியும் புரியவில்லை எண்டால்... நண்பர் எழுதியதை படித்தால் புரியலாம்...

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry337851

வணக்கம் கிருபன் !

உங்களுடைய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். அதாவது குறிப்பாக எம்மவர்கள் நாம் மட்டும் தான் முளைசாலிகள் சிங்களவர்களை மோட்டு சிங்களவனாகவே இன்னமும் கருதுவது தவறு தான் அதற்காக எம்மவர்கள் முடர்கள் என்றோ சிங்களவன் மோடன் இல்லை என்று சொல்லவில்லை. என்னிடமுமே சிங்கவர்களை பற்றிய அனுபவம் ஓரளவு உள்ளது அது போல எம்மவர்கள் பலருடமும் நிறைய இருக்கும். ஆனாலும் எம்மவர்கள் செய்கின்ற சில தவறுகள் சிங்களவன் முன்னிலையில் எம்மை முட்டாள்களாக மாற்றவும் செய்கின்றன.

அது ஓரு புறம் இருக்க நாம் இப்பொழுதும் சிங்களவனிடம் இருந்து இலகுவில் அடித்து பெற்றுவிடலாம் என்ற எண்ணம் பலபேருக்குண்டு ஆனால் உண்மை அதுவில்லை அதற்காக பெறமுடியாது என்றல்ல அதற்கு சில வழிகளை நாமும் பின்பற்றி தான் ஆகவேண்டும் . ஏன் எனில் 1950களில் இருந்து செல்வா வழியில் தொடர்ந்த அகிம்சை போராட்டத்தால் விழையாதது 1976 பின்பு ஆரம்பமாகிய விடுதலைப் போராட்டத்தாலும் இது வரை முடிந்திடவில்லை என்பது தான் கவலையான உண்மை.

ஆனால் தமிழர் தரப்பில் இப்பவும் அகிம்சை பொறுமை மனிதாபிமானம் நல்லெண்ணம் பொறுமை காப்பு என்பவை காலம் காலமாக கைப்பிடித்து வந்தாலும் எந்தளவு சிறிய மாற்றத்தையும் சிங்களவனிடம் காணமுடியவில்லை. அல்லது சர்வதேச நாடுகளினால் உரிய தீர்வையோ அல்லது அகிம்சையின் விருது வழங்கியோ அல்லது ( விருதுகளிற்காக போராடவில்லை என்பது ஒருபுறம் ) கௌரவப்படுத்தியோ பொறுமையின் சிகரங்கள் என்று தூக்கி தலையில் வைத்து ஆடியதுமில்லை ஆடப்போவதுமில்லை .

ஆகவே நாமும் எமது நிலமையை மாற்றி சிங்கவனிற்கு அவனுடைய இடத்தில் எப்பபொழுது நிம்மதியற்ற நிலையை அதாவது அவன் செய்கின்றதைப் போல அதே பதில் நடவடிக்iகையை மேற்கொள்ளும் பொழுது தான் துயரத்தின் வலி கொலையின் விலை சொந்தங்களின் இழப்பு என்பவற்றின் அனுபவம் புரியும் இல்லையெனில் நாமும் பொறுமை நல்லெண்ணம் எல்லாவற்றையும் கடைப்பிடித்துக் கொண்டு யேசு நார் சொல்லியதைப் போல ஓரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்பதைப் போல மாவிலாறு பிடித்தால் மன்னாரையும் விட்டு கொடுத்து விடு என்பது ஆகிவிடும்.

புதியவன் நல்ல கருத்துகள் நாம் அரசு அல்ல என்பதை உங்களுக்கு ஞாபமூட்ட விரும்புகின்றேன் சிங்களவன் செய்வது போல நாமும் செய்தால் எமது இனத்தின் மேல் தீவிரவாத முத்திரை ஆழமாக குத்தப்பட்டுவிடும் .அரசு செய்வதை அதன் இறையாண்மையை நிலைநாட்டுவதாக சர்வதேசம் நிச்சயம் எடுத்துகொள்ளும் ஆனால் நாம் செய்தால் தீவிரவாதமாகும் தெரிந்தோ தெரியாமலோ சர்வதேச வலையில் சிக்கி கொண்டோம் அதில் இருந்து எழுந்துவருவதே எமது தேவை அதற்கான காய்நகர்த்தலுடன் நிச்சயம் தமிழர் தரப்பு வீறுகொன்டு எழும் இதுவரை பொறுமை காத்தோம் அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் இருந்து இன்னும் கொஞ்ச காலம் பொறுமை காப்போம் நிச்சயம் எமது தலமை சிறந்த முடிவினை எடுக்கும் எமது அடுத்த சந்ததி நிச்சயம் தமிழீழ தனிநாட்டில் சுதந்திரத்தை அனுபவிக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட 4வயது குழந்தைகளும்புலிகளிடம் பயிற்சி பெற்றவையா?

வீரகேசரி நாளேடு

மன்னார் சிலாவத்துறை, முசலி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட நான்கு வயது குழந்தைகளும் புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராத லிங்கம் சபையில் கேள்வி எழுப்பினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:சிலாவத்துறை முசலி ஆகிய பிரதேசங்களை நோக்கிய படை நகர்வினால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்று அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது இராணுவ நடவடிக்கையல்ல மனிதாபிமான வேலைத் திட்டம் என்று அரசாங்கம் கூறுகின்றது. சிலாவத்துறை இராணுவ நடவடிக்கையின் போது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மனிதாபிமான நடவடிக்கையா? இராணுவம் மக்களை மீட்டதன் மூலம் அந்த மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அகதி முகாம்களிலே அந்த மக்கள் சுதந்திர காற்றையா சுவாசிக்கின்றனர்?

சடலங்கள் அழுகிய நிலையில் கொல்லப்பட்ட 12 பேரின் சடலங்களும் மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இராணுவ கட்டுப்பாட்டிலே உள்ள மன்னார் பிரதேத்தில் எதற்காக இரவு வேளைகளில் அந்த உடல்களை நல்லடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது? தற்போது முசலி பிரதேசம் இõணுவ கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அங்கே இனிமேல் கடத்தல்களும் காணாமல் போதல்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. கிழக்கு மாகாணத்திலே இன்று என்ன நடக்கின்றது. மன்னாரில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு சீமேந்துகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் ஒன்றுக்கு சீமேந்து எடுத்து செல்வதற்காக தடை விதிக்கின்றீர்கள்? அங்கே கட்டிடம் கட்டப்பட வேண்டுமானால் இராணுவத்திற்கு அறிவிக்க வேண்டும். ஏன் இந்த நிலை?

அருவி ஆற்றினூடாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். குழந்தைகளும் இறந்துள்ளனர். அவர்களும் புலிகளின் முகாமில் பயிற்சி பெற்றவர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படைநடவடிக்கையை எதிர்த்து விடுதiலாப்புலிகளாள் கடுமையான தாக்குதலை நடத்தப்படவில்லை. :rolleyes: இதற்குவிடுதலைப்புலிகளின் தந்திரம் ஏன்னென்று யாருக்கும் புரியவிள்ளையா? :huh: இதற்கு சிறியநிகள்வொன்று ஜெயசூக்றூவின் நடவடிக்கையின் போது எள்ளாஇடங்களிளும் எதிர் தாக்குதள் நடத்தினார்கள் ஆனாள் ஒட்டிசுட்டான் என்றஇடத்தை எந்தஎதிhப்பையும்காட்டாமள் உள்நுளையவிட்டார்கள் ஆனாள் அதுதான்கடசிமுடிவாகஇருந்தது :lol: . அதேபோலத்தான் இதுவும் அமையும். அடுத்ததுஎன்னவென்றுநீங்கள் கேட்களாம்? நடக்கப்போவதை இனிவரும் சமர்விடைதரும் :P

எது எப்படியோ எங்கள் சப்பாத்து இராணுவ ஆய்வாளர் சொன்னது போல நடந்தால் தான் இனி விடிவு காலம்

இல்லாட்டி விடிவெள்ளி பாத்துகொண்டு வாழவேண்டும்

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்துள்ள செய்தியின்படி அம்பாறையில் அபிவிருத்திப் பணிக்கு ஐரோப்பிய யூனியன் பெருமளவு நிதியுதவி வழங்கியுள்ளது. இப்படியான நிதியுதவிகள் தொடர்ந்து சிறிலங்கா அரசுக்குக் கிடைக்கும்வரை அதன் பொருளாதாரத்தை ஆட்டி விழுத்தி விடமுடியாது. நிதியுதவிகளை எப்படியாவது தமது இராணுவத் தேவைகளுக்குப் பாவிக்க சிங்கள அரசு முயலவே செய்யும். நேரடியாக பாவிக்கமுடியாவிடினும், இராணுவ நலன் சார்ந்த அபிவிருத்திகளுக்குப் பாவிக்கவே செய்யும். மீண்டும் சொல்ல வருவது என்னவென்றால் சிறிலங்காவின் பொருளாதாரத்தை விழுத்தி சிங்களவர்களைக் களைப்படையச் செய்து தனிநாட்டைப் பெறமுடியாது. ஏனெனில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பெருமளவு இராணுவ செலவீனங்களைத் தாங்கி சிறிலங்காவால் தொடர்ந்தும் யுத்தத்தை நடாத்தமுடிகின்றது.

ஒரு சின்ன கேள்வி: ஐரோப்பாவில் பல லட்சம் தமிழர்கள் வாழுகின்றனர். எனினும் எங்களால் ஐரோப்பிய யூனியனின் நிதியுதவிகளைத் தடுத்த நிறுத்த முடிகின்றதா? ஆக மிஞ்சினால் ஒரு சில நூறு பேரைக் கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்திவிட்டு அத்தோடு நமது கடமை முடிந்தது என்று கலைந்து போவதுதானே நடக்கின்றது.

சிந்திக்க வேண்டிய விடயம் ஆனால் கிருபன் அண்ணா கேப்பவர்களுக்கு தான் எதிர்ப்பை காட்டலாம்

இராக் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க கூடாது என்று எத்தனை நாடுகளில் மட்டும் இல்லை அந்த அந்த நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஏதும் பலன்?

இவர்களுக்கு ஆர்ப்பாட்டத்துக்கு செலவு செய்யும் 100 ஈரோ என்றாலும் கொஞ்ச தோட்டா வாங்க பயன்படும்

ஊர்வலம் ஆர்ப்பாட்டம் செய்வது எல்லாம் தற்போது சுத்த மடைத்தனம்..............

செம அடி கொடுக்கனும் இல்லை என்றால் அடிவாங்கி இறந்து போவம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.