Jump to content

டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 இறுதி ஆட்டத்திற்கு நான்கு முனை போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 இறுதி ஆட்டத்திற்கு நான்கு முனை போட்டி

09 JAN, 2023 | 04:50 PM
image

 

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பிற்கான போட்டி நிலவுகிறது.

test.jpg

இந்த நான்கு அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி டெஸ்ட் தொடர்கள் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன.

சதவீத புள்ளிகள் அடிப்படையில் தற்போது முதல் 4 இடங்களில் இருக்கும் அவுஸ்திரேலியா (75.56 புள்ளிகள்), இந்தியா (58.93 புள்ளிகள்), இலங்கை (53.33 புள்ளிகள்), தென் ஆபிரிக்கா (48.72 புள்ளகள்) ஆகிய 4 அணிகள் இறுதிப் போட்டிக்கான 2 வாய்ப்புகளுக்கு குறிவைத்து   தத்தமது கடைசி டெஸ்ட் தொடர்களை எதிர்கொள்ளவுள்ளன.

தற்போது முதல் இரண்டு இடங்களிலுள்ள அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு அணிகளுக்கும் இலங்கையும் தென் ஆபிரிக்காவும் கடும் போட்டித் தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த நான்கு நாடுகள் சம்பந்தப்பட்ட டெஸ்ட் தொடர்களில் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடைபெறுவதால் அத் தொடரின் முடிவு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணிகளைப் பெரும்பாலும் தீர்மானித்துவிடும் என கருதப்படுகிறது.

தற்போதைய சதவீத புள்ளிகளின் அடிப்டையில் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அவுஸ்திரேலியா அதிகரித்துக்கொண்டுள்ளது. எனினும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதால் அதன் இறுதி ஆட்ட வாய்ப்பு உறுதிசெய்யப்படுவது இந்தியாவுடனான  தொடர் முடிவுவரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

2021 - 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான பருவகாலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந் நிலையில் அவுஸ்திரேலியாவினதும் இந்தியாவினதும் கடைசி டெஸ்ட் தொடர் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வாய்ப்பு

போர்டர் - காவஸ்கர் கிண்ணத்துக்காக நடைபெறும் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 0 - 4 என தோல்வி அடைந்தால் அதன் சதவீத புள்ளி 59.65ஆக குறையும். இந் நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே அவுஸ்திரேலியாவின் இறுதி ஆட்ட வாய்ப்பு அற்றுப் போகும். ஆனால், நியூஸிலாந்து மண்ணில் இலங்கையினால் சாதிக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது.

இந்தியாவின் வாய்ப்பு

தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை 3 - 1 அல்லது அதனைவிட சிறந்த தொடர் வெற்றியை ஈட்டினால் இந்தியா இயல்பாகவே இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெறும். மற்றைய தொடர் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

ஒருவேளை தொடர் 2 - 2 என சமநிலையில் முடிவடைந்தால் இந்தியாவின் சதவீத புள்ளி 56.94 ஆக குறையும். அப்படி குறைந்தால் இந்தியாவுக்கு முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பெற முடியாமல் போகும். மேலும் மேற்கிந்தியத் தீவுகளை தென் ஆபிரிக்கா 2 - 0 என வெற்றிகொண்டால் இந்தியா 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்படும். ஆனால் இவை அனைத்தும் சாத்தியப்படக்கூடியவை அல்லவென்பதால் இந்தியா இரண்டாவது தொடர்ச்சியான தடவையாகவும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும் என கருதப்படுகிறது.

இலங்கையின் வாய்ப்பு

தற்போது 53.33 சதவீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கும் இலங்கை, மார்ச் மாதம் நடைபெறவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையாக வெற்றிபெற்றால் அதன் சதவீத புள்ளி 61.11ஆக உயரும். அதேவேளை அத் தொடர் 1 - 1 என சம நிலையில் முடிவடைந்தால் இலங்கையின் சதவீத புள்ளி 52.78ஆக இருக்கும். இந் நிலையில்   டெஸ்ட்   தொடரில்   இந்தியா 1 - 3 அல்லது 0 - 1 என அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால் இலங்கை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

தென் ஆபிரிக்காவின் வாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 2 என தோல்வி அடைந்ததால் தென் ஆபிரிக்காவின் இறுதி ஆட்ட வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 48.72 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, தனது கடைசி டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை 2 - 0 என முழுமையாக வெற்றிகொண்டால் அதன் சதவீத புள்ளி 55.56 ஆக உயரும்.

நியூஸிலாந்துடனான தொடரில் இலங்கை 1 - 0 என வெற்றிபெற்று இந்தியாவினால் 21 புள்ளிகளுக்குமேல் பெற முடியாமல் போனால் அவுஸ்திரேலியாவுடன் தென் ஆபிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ஏனைய அணிகள்

சதவீத அடிப்படையில் இங்கிலாந்து (46.97 புள்ளிகள்), மேற்கிந்தியத் தீவுகள் (40.91 புள்ளிகள்), பாகிஸ்தான் (38.10 புள்ளிகள்), நடப்பு சம்பியன் நியூஸிலாந்து (27.27), பங்களாதேஷ் (11.11 புள்ளிகள்) ஆகிய அணிகள் அடுத்த 5 இடங்களில் இருக்கின்றன. அவற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நியூஸிலாந்துக்கும் தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் மிஞ்சியிருக்கின்றபோதிலும் அந்த அணிகளால் பெறப்படும் அதிகபட்ச புள்ளிகள் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற போதுமானதாக அமையப்போவிதில்லை.

எனவே, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற நான்கு முனை போட்டி நிலநிலவப்போகிறது. 

https://www.virakesari.lk/article/145352

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த‌ கோதாரி பிடிச்ச‌ விளையாட்டுக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் இந்த‌ நூற்றாண்டில் அற‌வே வ‌ர‌வேற்ப்பு இல்லை

 

ஜ‌ந்து நாள் விளையாட்டு 3நாளில் கூட‌ முடிந்து போகுது

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் சீக்கிர‌மே ரெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கின‌ம்

 

 

அதிக‌ 20ஓவ‌ர் விளையாட்டு வேண்டும் அப்போது தான் கிரிக்கேட் இன்னும் மின்ன‌ல் வேக‌த்தில் ப‌ல‌ நாடுக‌ள் விளையாட‌ ஆர‌ம்பிப்பின‌ம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ம்ம்ம்… இந்த பிளேட்டின் பின் பக்கமும் நல்லாத்தான் இருக்கு 🤣. சம்பந்தம் இல்லாமல் இல்லை, இருவரும் கையில் எடுத்தது இனத்தூய்மைவாத அரசியலை என காட்டவே அந்த டிஸ்கி. நீங்கள் கருணாநிதியை சொருவினால் கூட வழமையான உங்கள் திசை திருப்பும் பாணி என கடந்து போகலாம். நீங்கள் பாவித்தது சாதிய வசவை, தெரிந்து கொண்டே, அதுவும் நான் சீமானை எதிர்ப்பது கருணாநிதி மீதான என் சாதிய பாசத்தால் என்ற தொனியில் - அதுதான் சம்பவமாகி போய்ட்டு🤣. மேலே நீங்கள் கொடுத்த தன்னிலை விளக்கம் எல்லாம் உங்களுக்கும் வாசகர்களுக்குமிடையானது. என்னை பொறுத்தவரை நான் பிரதேசவாதி என கருதும் வகைப்பாட்டுள் உங்கள் செயல்பாடு அடங்குகிறது. அவ்வளவே.  இதை வாசகர் சிரிப்பிற்கே விட்டு விடுகிறேன். கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலுக்குள் குளறுபடி செய்கிறது எனவே நான் தமிழ் தேசிய அரசியலை கருவறுக்க உறுதி பூண்ட, அதற்கு துரோகம் இழைத்த, வடக்கு-கிழக்கு பிரிவினையை தொடர்ந்து தூண்டி அதை மேலும் நலிவடைய செய்யும்  கருணா, பிள்ளையானை ஆதரிக்கிறேன், ஏனையோரையும் அவர்களுக்கு ஆதரவாக திருப்புகிறேன் என்ற அதி அற்புத கொள்கை முடிவை தலைவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை. அதுசரி…. இப்ப எல்லாம் அவரவர் தம் அம்மணத்தை மறைக்க தலைவரை போர்வை போல போத்தி கொள்வது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது🤣.
    • கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து எறிந்து மற்றவர்களின் வீடுகளை உடைத்து பெருமைப்பட்டு  இப்போ இருக்க வீடேயில்லாமல் ஐயா புலம்பிக் கொண்டே திரிகிறார். தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
    • தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன். பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர்களது மகள் குறித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள். ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1407856
    • நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை (7) மாலை கலவரம் வெடித்தது. இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். கழகம் அதன் ரசிகர்களை அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் இருக்குமாறு எச்சரித்ததுடன், இஸ்ரேலிய அல்லது யூத சின்னங்களைக் பொது வெளியில் காட்டுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. மக்காபி டெல் அவிவ் ஒரு யூத கழகமாக அடையாளம் காண்பிக்கப்படுகிறது. அதன் சின்னமாக தாவீதின் நட்சத்திரம் (Star of David) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407855
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.