Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

'பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்' - இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீராங்கனைகள் புகார்

மல்யுத்தம்

பட மூலாதாரம்,ANI

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்வதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கூட்டமைப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளனர்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகாட், "பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்பின் ஆதரவுபெற்ற சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடக்கின்றனர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டி தோல்விக்கு பின்னர், என்னை அவர் எதற்கும் பயனற்றவர் என்று அழைத்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள ரீதியாக என்னை துன்புறுத்தியது. என் வாழ்வை முடித்துகொள்ளலாமா என்று ஒவ்வொரு நாளும் எண்ணத் தொடங்கினேன். எந்த மல்யுத்த வீரர்களுக்கு எதாவது ஆனாலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு. பெண்கள் மல்யுத்த வீரர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய 10-20 சம்பவங்கள் எனக்குத் தெரியும். இதில் பல பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். எந்த ஒரு விளையாட்டு வீரரும் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள் ” என்று தெரிவித்ததாக ஏ.என்.ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

 

“அவர்கள் (கூட்டமைப்பு) எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். எங்களைச் சுரண்டுகிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை. நாங்கள் குரல் எழுப்பியதால், நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம்” என்று ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

 

இதேபோல் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர்கள் தற்போதைய சர்வாதிகாரத்தை பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமரும் உள்துறை அமைச்சரும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறோம். இங்குள்ள பெண்கள் மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு நம் சகோதரிகள் & மகள்கள் பாதுகாப்பாக இல்லை என்றால் அதை ஏற்க முடியாது. கூட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சாக்‌ஷி மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய மல்யுத்த வீரர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். புதிய கூட்டமைப்பு அமைய வேண்டும். கீழ் நிலையில் இருந்து அழுக்கு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசி விவரங்களை கூறுவோம். சில விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

மல்யுத்தம்

இது தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கருத்தை அறிய பிபிசி தொடர்புகொண்டது. எனினும், யாரும் அழைப்பை ஏற்கவில்லை.

தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேட்டியளித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், “போராட்டத்தில் அமர்ந்திருக்கும் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கிற்குப் பிறகு எந்த தேசியப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

கூட்டமைப்பு துன்புறுத்தியதாக முன்னால் இருக்கும் வீரர்கள் யாராவது கூறுகின்றனரா? கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்புடன் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையா? புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும்போது சிக்கல்கள் எழுகின்றன. பாலியல் துன்புறுத்தல் எதுவும் நிகழவில்லை. அப்படி நடந்திருந்தால் நானே தூக்கிட்டு கொள்வேன்.பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. இதில் எனது சொந்த பெயர் இழுக்கப்பட்டுள்ள நிலையில் நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? எந்த விசாரணைக்கும் நான் தயார் ” என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cd1glg73n5do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிடித்த சனியன்… இந்த பாலியல் தொல்லை.
அந்த அளவிற்கு… உயர் அதிகாரிகள், காமப் பிசாசுகளாக இருக்கிறார்கள்.
வெட்கம் கெட்டவர்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிடித்த சனியன்… இந்த பாலியல் தொல்லை.
அந்த அளவிற்கு… உயர் அதிகாரிகள், காமப் பிசாசுகளாக இருக்கிறார்கள்.
வெட்கம் கெட்டவர்கள்.

நீங்கள் வழக்கமாக பதிவிடும் பாக்குவெட்டியை காணவில்லை...... இது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.......!  😴

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப, தெரப்பி செய்யும் இடத்தில் இருப்பதால்…
பாக்கு வெட்டியை, வீட்டில் வைத்து விட்டு வந்துள்ளேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரால் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

By SETHU

19 JAN, 2023 | 01:16 PM
image

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பயிற்றுநர்களால் மல்யுத்த வீராங்கனைகள் பலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றம் சுமத்தி, இந்திய மல்யுத்த சம்மேளன அதிகாரிகளுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீர வீராங்கனைகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் பலர் டெல்லியில் நேற்று (18) போராட்டத்தையும் ஆரம்பித்தனர்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட், இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், சங்கீதா போகட், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங், சோனம் மாலிக், அன்ஷூ ஆகியோரும் இப்போராட்டத்தில் பங்குபற்றினர்.

Brij-Bhushan-Singh..jpg

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

'மல்யுத்த வீராங்கனைகள் தேசிய பயிற்சி முகாம்களில் பயிற்சியாளர்களாலும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்காலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்' என்று வினேஷ் போகட் குற்றம்சாட்டினார்.

'பல இளம் பெண் மல்யுத்த வீராங்கனைகள் தேசிய முகாம்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக என்னிடம் புகார் அளித்துள்ளனர். எனக்குத் தெரிந்து குறைந்தது 20 பெண்கள் தேசிய பயிற்சி முகாமில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் பற்றி என்னிடம் கூறிய குறைந்தது 10 பெண் மல்யுத்த வீரர்களை நான் அறிவேன். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை அமைச்சரை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்' என்றார்.

Wrestler-Vinesh-Phogat---ANI-Photo.jpg

ANI Photo

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் மேலும் கூறுகையில், 'இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இங்குள்ள மல்யுத்த வீரர்கள், எங்களுக்கு உதவவும், விளையாட்டிற்கு உதவவும் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாங்கள் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றால், அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு, குறிப்பாக கூட்டமைப்பால் நாங்கள் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகம் எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தால், போராட்டத்தை நிறுத்துவோம். இல்லையேல், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

ANI PhotoIndian-Wrestlers---ANI-Photo-2.jpg

ANI Photo

மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன், 'இந்திய மல்யுத்த கூட்டமைப்பு யாராவது ஒரு மல்யுத்த வீராங்கனை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறுகிறார்களா? வினேஷ் மட்டுமே கூறியிருக்கிறார். தாங்கள் தனிப்பட்ட முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக யாராவது முன் வந்து கூறியிருக்கிறார்களா?' என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்துடன் இது போன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே எழவில்லை... விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகள் வரும்' எனக் கூறியுள்ளார்.

Indian-Wrestlers---ANI-Photo-3.jpg

ANI Photo

https://www.virakesari.lk/article/146191

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினேஷ் போகாட்: "பிரிஜ் பூஷண் பற்றி பிரதமர் மோதியிடம் முன்பே புகார் சொன்னேன்"

வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வினேஷ் போகாட்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தொடர்பான புகார்களை 2021 டோக்யோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதியிடம் குறிப்பிட்டதாக, பிபிசி உடனான உரையாடலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் கூறினார். இருப்பினும் அந்த உரையாடலில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் பற்றி எதுவும் பேசப்படவில்லை என்றார் அவர்.

பிரதமர் மோதியிடம் சொன்ன பிறகு விளையாட்டுத்துறை அமைச்சரிடம், "கொஞ்சம் வெளிப்படையாக விஷயங்களைச் சொன்னதாக" வினேஷ் கூறினார். ஆனால் நான் பேசிய விஷயம் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் சென்றது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடமிருந்து நேரடியாக கருத்துக்களைப் பெற முடியவில்லை.

ஆனால் விளையாட்டுத் துறையும், விளையாட்டு வீரர்களும் இந்திய அரசாங்கத்திற்கு முக்கியமானவர்கள் என்றும், எனவே இந்த விவகாரத்தில் சமரசம் செய்துகொள்வதற்கு வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் அனுராக் தாக்கூர் சமீபத்தில் கூறியிருந்தார்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அனுராக் தாக்கூரை வீரர்கள் சந்தித்துத் திரும்பிய பிறகும் அவர்களின் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமைச்சரை சந்தித்த போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வினேஷ் கூறினார். மேற்பார்வை குழுவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்வது சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் `மேரி கோமை குழுவின் தலைவராக நியமிப்பதற்கு முன்பு, அவர் இதற்கு தயாராக இருக்கிறாரா என்று ஏன் கேட்கவில்லை` என்றும் வினேஷ் போகாட் கேள்வி எழுப்பினார்.

"சர்வதேச விளையாட்டு போட்டிகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், இது யாருடைய காதுகளிலாவது விழுகிறதா இல்லையா" என்று வினேஷ் கேள்வி எழுப்புகிறார்.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மல்யுத்த வீரர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அதே வேளையில், இது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் காவல்துறையிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்ற கேள்வியும் முன்வக்கப்பட்டு வருகிறது.

இதனுடன், பிரிஜ் பூஷண் சரண் சிங்குடன் மல்யுத்த வீரர்கள் உள்ள சில படங்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதனால் அவர்களின் உள்நோக்கங்கள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

டெல்லி ஜந்தர் மந்தர் தளத்தில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் பிற சக மல்யுத்த வீரர்களும், அவர்களுடைய பயிற்சியாளர்களும் , பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷண் மறுத்து வருகிறார்.

வினேஷ் போகாட், விளையாட்டு, இந்தியா

உச்ச நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு, டெல்லி காவல்துறை இந்த விஷயத்தில், இரண்டு வழக்குளை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. அதன் பிறகும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, டெல்லி காவல்துறை தன்னை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் விசாரணைக்குழு தொடர்பு கொண்டால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாகவும் பிபிசி செய்தியாளர் ஆனந்த் ஜனானே உடனான உரையாடலில் பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறினார்.

பிரதமர் மோதி உட்பட அரசின் பல மூத்த அமைச்சர்கள் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“டோக்யோ ஒலிம்பிக்கிற்கு பிறகு பிரதமரை சந்தித்தபோது, அவர் என்னைத் துன்புறுத்துகிறார், பிரச்னை ஏற்படுத்துகிறார் என்று சில விஷயங்களை சொன்னேன். பாலியல் துன்புறுத்தல் பற்றி நான் அவரிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் மனரீதியாக சித்ரவதை செய்கிறார் என்று சொன்னேன்,” என்று வினேஷ் போகாட் தெரிவித்தார்.

அதைக் கேட்ட பிரதமர் "கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். நீங்கள் சோகமாக இருக்க நான் விடமாட்டேன் என்று பதிலளித்தார்,”என்றும் குறிப்பிடுகிறார் வினேஷ்.

"இதன் பிறகு நான் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லா விஷயங்களையும் கூறினேன். இந்த விஷயங்கள் அமைச்சகத்திலிருந்து வெளியே கசிந்துவிட்டதால் எனது நம்பிக்கை உடைந்துவிட்டது,” என்று வினேஷ் கூறுகிறார்.

"உயிருக்கு ஆபத்து"

வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வினேஷ் கூறி வருகிறார்.

"அவர் (பிரிஜ் பூஷண் சரண் சிங்) வெளியில் இருந்தால் நாங்கள் எப்படி மல்யுத்தம் செய்ய முடியும்? அவருக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பி இருக்கிறோமே. இதனால் எங்களுடைய குடும்பங்கள் மிகவும் வருத்தப்படுகின்றன. அவருக்கு (பிரிஜ் பூஷண் சிங்) எதிராக புதிவு செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளின்படி இந்நேரம் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமா, இல்லையா? அவருடைய இடத்தில் ஒரு சாதாரண ஆள் இருந்திருந்தால் கைதாகி இருக்க மாட்டாரா" என்று வினேஷ் போகாட் கேள்வி எழுப்புகிறார்.

ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மல்யுத்த வீரர்களின் ஆர்ப்பாட்ட இடம், போலீஸ் தடுப்புகளால் நாலாபுறமும் வழி மறிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி உள்ளே செல்லும் மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் பைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

சாலையில் நிறுவப்பட்டுள்ள மேடையின் கீழே மெத்தைகள் போடப்பட்டு, அதில் வீரர்களின் ஆதரவாளர்கள் அமர்ந்துள்ளனர். சில சமயம் தெரிந்தோ தெரியாமலோ காலணிகளை அணிந்து கொண்டு சிலர் அந்த மெத்தை மீது ஏறுவதையும் கவனிக்க முடிந்தது.

வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் கூடாரத்தின் கீழே ஒரு மூலையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் சில நேரங்களில் ஓய்வெடுப்பதையோ கைபேசியில் பிஸியாகவோ உள்ளனர்.

கடந்த ஒன்பது நாட்களை வெப்பம், மழை மற்றும் கொசுக்கடிகளுடன் வீரர்கள் கடந்துள்ளனர். போராட்டம் நடக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாததால் பலர் கோபத்துடன் காணப்பட்டனர். அருகே உள்ள சில இடங்களில் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், பிரிஜ் பூஷண் சரண் சிங் ராஜிநாமா செய்ய தயாராக இல்லை.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,EMPICS

"நான் யாருக்கும் எந்த அநியாயமும் செய்யவில்லை. தவறாக நடந்து கொள்ளவில்லை. நான் அவர்களை குடும்பத்தின் குழந்தைகளைப் போல நடத்தினேன், நான் அவர்களுக்கு மிகுந்த அன்பையும் மரியாதையையும் கொடுத்துள்ளேன். என் அன்பும் மரியாதையும் என் கழுத்துக்கு சுருக்குக்கயிறாக மாறியிருப்பது என் துரதிருஷ்டம்,” என்று பிபிசி உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகிறார்.

போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ள போதிலும் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு, "டெல்லி காவல்துறைதான் இதற்கு பதிலளிக்க முடியும்ஸ" என்று கூறுகிறார்.

தனது கட்சிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது தனது இமேஜை பாதிக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"தற்போது போராடும் வீரர்கள், இவ்வளவு காலமாக ஏன் குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை? ஏன் விசாரணைக்கு காத்திருக்கவில்லை? அவர்கள் ஏன் தர்ணாவில் அமர்ந்திருக்கிறார்கள்? டெல்லி காவல்துறையை அவர்கள் நம்பவில்லையா? என் ராஜிநாமாவால் டெல்லி காவல்துறையின் விசாரணை முடிந்து விடுமா? நீதித்துறையை விட நான் பெரியவனா? ஒரு குற்றவாளி என்ற பெயருடன் நான் பதவி விலக மாட்டேன்,” என்று பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்தார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

வினேஷ் போகாட், விளையாட்டு, இந்தியா
 
படக்குறிப்பு,

சானியா, போராட்டத்தில் கலந்து கொண்டவர்

இந்த போராட்டத்தை காணவும், அதில் பங்கேற்கவும் சமூகத்தின் பல பிரிவுகளில் இருந்து மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

துக்ளகாபாத்தில் வசிக்கும் சானியா, கபடி விளையாடுபவர். தனது சகோதரர் யாசிருடன் சேர்ந்து இந்த போராட்டத்திற்கு வந்தார். 17 வயதான சானியா, மூன்று ஆண்டுகளாக கபடி கற்று வருகிறார்.

ஆரம்பத்தில் இது ஒரு பொழுதுபோக்காக இருந்தது, பிறகு நான் இதைத்தான் விளையாட வேண்டும் என்று உணர்ந்தேன். இப்போது கபடியில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்று அவர் கூறுகிறார்.

“இன்று அவர்களுக்கு நடந்தது, நாளை எங்களுக்கும் நடக்கலாம். இதனால் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக பெண்கள் அனைவரும் வந்து உட்கார வேண்டும்.இன்று நான் தனியாக வந்திருக்கிறேன். நாளை முழு அணியுடன் வருவேன்,” என்றார் அவர்.

ராகுல் பில்வாரா தனது ஆறு வயது மகளுடன் டெல்லி கரோல்பாக்கில் இருந்து வந்திருந்தார்.

வினேஷ் போகாட், விளையாட்டு, இந்தியா
 
படக்குறிப்பு,

பிரிஜ் பூஷண் சரண் சிங்

"இவர்கள் பிரபல விளையாட்டு வீரர்கள். இவர்களால் குரல் எழுப்ப முடியும். ஆனால் குரலை உயர்த்த முடியாத ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? நமது மகள்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்று அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

இம்ரான் கிளேருக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை 15-20 ஆண்டுகளாக தெரியும்.

"நாங்கள் அவரை கடவுளாக கருதுகிறோம். மாநில அளவில் பதக்கம் வாங்குபவர் சிறந்த மல்யுத்த வீரராக கருதப்படுகிறார். இவர் ஒலிம்பிக் மல்யுத்த வீரர். இவர்களுக்காக நாம் எதை செய்தாலும் அது தகும். இந்த குழந்தைகளின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் மிகப் பெரிய பிரபலங்கள். சல்மான் கான், ஷாரூக் கான் இவர்களுக்கு முன்னால் ஒன்றுமில்லை. எந்த பிரபலத்தின் குழந்தையாவது பதக்கம் வென்றுள்ளதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கிடையே, மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்கிறது.

"இந்த விவகாரத்தில் நான் செய்வதறியாது தவிக்கிறேன். விளையாட்டில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவது போல தெரிகிறது ," என்று வினேஷ் கவலையுடன் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c0jpg34g135o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"இதற்குதான் நாட்டுக்கு பதக்கங்களை வென்று வந்தோமா?" மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் - நள்ளிரவில் நடந்தது என்ன?

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,CHANDAN SINGH RAJPUT/BBC

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,வாத்சல்யா ராய்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டெல்லியில் புதன்கிழமை பகல் முழுவதும் காலம் தவறிய மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் வானத்தில் இருந்து மழைப்பொழிவு நின்றுவிட்டது. ஆனால் இரவில் மல்யுத்த வீராங்கனைகளின் கண்களில் இருந்து கண்ணீர் பொழிய ஆரம்பித்தது. கண்ணீருடன் கோபம், வருத்தம் மற்றும் புகார்களின் வெள்ளமும் வெளியே வந்தது.

டெல்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த 11 நாட்களாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மல்லிக், பஜ்ரங் புனியா மற்றும் காமன்வெல்த் பதக்கம் வென்ற வினேஷ் போகாட் ஆகியோரின் தலைமையில் பல சாம்பியன் மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷண் ஷரண் சிங்கிற்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

"இங்கே பாருங்கள், நிலைமையைப் பாருங்கள். நாள் முழுவதும் மழை பெய்தது. நாங்கள் மடிப்பு கட்டிலை (தூங்குவதற்காக) கொண்டு வந்தோம். போலீசார் எங்களை அடித்தனர், எங்களை ஏசினர்,” என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் பிபிசி கேமரா முன் கூறினார்.

இரவு 10.30 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து பேசிய சாக்ஷி, "இரண்டு பேரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மிகவும் மோசமான செயல் நடந்துள்ளது. எங்களுக்கு ஆதரவாக வருமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இது உங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் மரியாதை தொடர்பான விஷயம்." என்று கூறினார்.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தர் மந்தர் செல்லும் இரு சாலைகளுக்கு முன்பும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. புதன்கிழமை இரவு ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தடுப்புகளை தாண்டி யாரையும் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் மற்றும் காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா ஆகியோர் போராட்ட இடத்திற்கு செல்ல முயன்றனர், ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,CHANDAN SINGH RAJPUT/BBC

மல்யுத்த வீராங்கனைகள் சொல்வது என்ன ?

இரவு 12.30 மணியளவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வினேஷ் போகாட் அழுதுகொண்டே "இந்த நாளைப் பார்ப்பதற்காகத்தான் நாங்கள் நாட்டிற்காக பதக்கம் கொண்டு வந்தோமா?” என்று கேட்டார்.

"நான் கேட்கிறேன், ப்ரிஜ்பூஷண் படுக்கையில் மகிழ்ச்சியாக தூங்குகிறார். . தூங்குவதற்கு மடிப்பு கட்டில்களை நாங்கள் கொண்டு வந்தோம். அதற்கும்...."

"ஒரு போலீஸ்காரர் துஷ்யந்தின் தலையை உடைத்தார். அவர் இப்போது மருத்துவமனையில் உள்ளார். இந்த அப்பாவியை (ராகுல்) பாருங்கள், அவரது தலையிலும் பலத்த காயம் உள்ளது."

"நாங்கள் மரியாதைக்காக, மதிப்பிற்காக போராடுகிறோம், அந்த போலீஸ்காரர் பெண்களை மார்பை பிடித்து தள்ளுகிறார்."

"நாங்கள் இவ்வளவு பெரிய குற்றவாளிகளா? எங்கள் மீது இத்தனை அக்கிரமம் நடத்தும் அளவிற்கு நாங்கள் கிரிமினல்கள் அல்ல."

"நாட்டின் எந்த வீரரும் பதக்கம் கொண்டு வரக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அவர்கள் எங்களுக்கு அந்த அளவிற்கு தீங்கு செய்துவிட்டார்கள். இதுவரை யாரும் உணவு கூட சாப்பிடவில்லை."

ஜந்தர் மந்தரில் திரண்ட மல்யுத்த வீரர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் வழக்கில் பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் இரண்டு எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர். பிரிஜ் பூஷண் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறார்.

அனுமதியின்றி மடிப்புக்கட்டிலை எடுத்துச் சென்றதால் தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெவித்தனர்

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,ANI

ஜந்தர் மந்தரில் போலீஸ் vs மல்யுத்த வீரர்கள்

• பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் மீது டெல்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

• ஆம் ஆத்மி கட்சி தலைவர் சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிப்பு கட்டிலை கொண்டு வந்ததாக டெல்லி போலீஸ் கூறுகிறது.

• சோம்நாத் தடுத்து நிறுத்தப்பட்டபோது, மல்யுத்த வீராங்கனைகளின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.

• சம்பவத்தில் சில காவலர்கள் மற்றும் மல்யுத்த வீரர்கள் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

• டெல்லி காவல்துறையின் கூற்றை மல்யுத்த வீரர்கள் நிராகரித்தனர். சோம்நாத் பாரதி மடிப்பு கட்டிலை கொண்டு வரவில்லை என்று மல்யுத்த வீரர்கள் கூறுகின்றனர்

• மழையால் மெத்தைகள் ஈரமாகிவிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் இந்த கட்டில்களை கொண்டுவருமாறு கூறினர்.

• மறியல் நடக்கும் இடத்திற்கு படுக்கைகளை கொண்டு வர போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் மல்யுத்த வீரர்கள் கூறுகின்றனர்.

• பஜ்ரங் புனியாவின் மனைவி சங்கீதா, போகட்டின் சகோதரர் துஷ்யந்த் போகட் மற்றும் ராகுல் இதில் காயமடைந்தனர்.

• தனது கூற்றுகளை சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்த முடியும் என்று பஜ்ரங் புனியா கூறுகிறார்.

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,CHANDAN SINGH RAJPUT/BBC

மூலைமுடுக்கெல்லாம் போலீஸ்

மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தும் இடத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாததால் இரவு நேரத்தில் அங்கு சூழுந்த இருள், ஊடகவியலாளர்களின் கேமரா விளக்குகளால் கலைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த பிறகு, மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து மறியல் தளத்தை அடைந்தவண்ணம் இருந்தனர். ஆனால் சில பத்திரிகையாளர்களைத் தவிர வேறு யாரையும் முதல் தடுப்பைத்தாண்டி செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. தடுப்புகளுக்கு வெளியே நின்றவர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அங்கிருந்து செல்லாதவர்களை தடுப்புக்காவலில் வைத்து பேருந்தில் அமர வைத்தனர்.

செய்தியாளர்களுடன் வினேஷ் மற்றும் பஜ்ரங் பேசினர். கூடவே இடையிடையில் போனில் பேசி தங்கள் நண்பர்களை ஜந்தர் மந்தரை அடையுமாறு சொன்னார்கள்.

கடுமையான போலீஸ் காவல் காரணமாக அவர்களது ஆதரவாளர்கள் சிலரால் மட்டுமே மறியல் நடக்கும் இடத்திற்குச் செல்ல முடிந்தது. மல்யுத்த வீரர்கள், காயமடைந்த ராகுலின் தலையில் ஏற்பட்ட காயத்தை செய்தியாளர்களிடம் காட்டிக் கொண்டிருந்தனர். இரவு ஒரு மணியளவில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து ராகுலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

இதற்கு முன் மல்யுத்த வீரர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். செய்தியாளர் சந்திப்பின் போது, சாக்ஷி மாலிக் அதிக நேரம் தலை குனிந்து நின்றிருந்தார். இந்த சம்பவம் குறித்து வினேஷ் போகாட் மற்றும் அவரது உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்தனர்.

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,ANI

மல்யுத்த வீரர்களின் செய்தியாளர் சந்திப்பு

"நீங்கள் உள்ளே சென்று பாருங்கள். தண்ணீர் நிரம்பியுள்ளது. எங்களுக்கு தூங்க இடம் இல்லை. நாங்கள் மடிப்பு கட்டில் கொண்டுவந்து தூங்கலாம் என்று நினைத்தோம். கட்டிலை கொண்டுவரும்போது தர்மேந்திரா (போலீஸ்காரர்) எங்களை தள்ளத்தொடங்கினார். அங்கு பெண் போலீஸ்காரர் யாரும் இருக்கவில்லை. அவரே எங்களை தள்ளத் தொடங்கினார்,” என்று வினேஷ் போகாட் தெரிவித்தார்.

"நானும் தள்ளப்பட்டேன். முறைகேடான வார்த்தைகளால் ஏசப்பட்டேன். இரண்டு அல்லது மூன்று பேர் (காவல்துறையினர்) குடிபோதையில் இருந்தனர்."என்று பஜ்ரங் புனியா கூறினார்.

"நான் உள்ளே நின்று கொண்டிருந்தேன். அவர் (போலீஸ்காரர்) என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டினார்" என்று வினேஷ் குற்றம் சாட்டினார்.

"ஒரு போலீஸ்காரர் துஷ்யந்தின் தலையை உடைத்தார். அவர் இப்போது மருத்துவமனையில் உள்ளார். இந்த அப்பாவியை (ராகுல்) பாருங்கள், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது."

இதற்கிடையில் படுகாயம் அடைந்த மல்யுத்த வீரர் ராகுல் தலைசுற்றி கீழே விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தால்...

சோம்நாத் பாரதி அனுமதியின்றி படுக்கையை கொண்டு வந்தாரா என்று நிலைமை சற்று சீரானதும் மல்யுத்த வீரர்களிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த பஜ்ரங் புனியா, "இங்கே சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அவற்றை ஒரு முறை பாருங்கள். சோம்நாத் பாரதி இங்கே நின்று கொண்டிருந்தார். கட்டில் அங்கிருந்து 10-15 நிமிடங்கள் கழித்து வந்தது. நாங்கள் கொண்டுவரச்சொல்லியிருந்தோம்,” என்று கூறினார்.

“ யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எப்படி கூடாரம் போட்டிருக்கிறோம் என்று பாருங்கள். நாங்கள் என்ன இவ்வளவு பெரிய குற்றவாளிகளா? இப்படி நடந்துகொள்ளும் அளவிற்கு நாங்கள் கிரிமினல்களா என்ன,” என்று வினேஷ் குறிப்பிட்டார்.

தலையில் அடித்த அவர் (காவலர்) மது அருந்திக் கொண்டிருந்தார்” என்று வினேஷ் குற்றம் சாட்டினார்.

"எங்கள் விளையாட்டை முடித்துவிட்டனர். எங்கள் உயிரைப் பணயம் வைத்தோம். சாலையில் அமர்ந்திருக்கிறோம். இன்னும் சித்திரவதைக்கு உள்ளாகிறோம். ஏன் அவர்கள் பிரிஜ்பூஷணை கைது செய்யவில்லை?"

"போலீஸ்காரர் தலையில் அடித்த பிறகு, டிசிபி அல்லது ஏசிபி, அவரின் (போலீஸ்காரரின்) தடியை மறைத்து வைத்தார். இன்னும் எங்களிடம் வாக்குமூலம் எடுக்கவில்லை. வீரர்கள் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று பொய்களைப் பரப்புகிறார்கள்" என்று பஜ்ரங் குற்றம் சாட்டினார்.

வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை இருக்கிறது, இந்த விஷயத்தை அங்கு சொல்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வினேஷ், "(விசாரணை) நாளை உச்சநீதிமன்றத்தில் உள்ளது, இன்று இரவு எங்கே தங்குவது, எங்கு செல்வது?” என்று கேட்டார்.

"நாங்கள் யாரிடமாவது தவறாக நடந்து கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொரு போலீஸ்காரர்களிடம் கேளுங்கள். 10 நாட்களாக தரையில் படுக்கை விரித்து தூங்குகிறோம். கட்டிலை கொண்டு வரச் சொல்லவில்லை. இன்று எல்லாமே நனைந்துவிட்டது. எங்கே போவது, எங்கே தூங்குவது" என்று மற்றொரு மல்யுத்த வீராங்கனை வினவினார்.

"எங்களுக்கு அனைவரின் ஆதரவும் தேவை. யாரால் முடியுமோ எல்லோரும் வாருங்கள். நிறைய தவறுகள் நடந்துள்ளன. மகள்களின் மரியாதையை பணயம் வைத்துள்ளனர், அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம், முடிந்தவரை அனைவரும் வாருங்கள்," என்று அழுது கொண்டே வினேஷ் போகாட் ஊடகங்கள் முன் முறையிட்டார்.

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,ANI

போலீசார் சொல்வது என்ன?

அனுமதியின்றி கட்டில்களை கொண்டு வந்ததால்தான் கைகலப்பு நடந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக்கட்டிலை சோம்நாத் பாரதி கொண்டு வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

"ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சோம்நாத் பாரதி சில மடிப்பு கட்டில்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு அனுமதி இல்லை., போராட்டக்காரர்கள், மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்கள் தடுப்புகளில் ஏறி கட்டில்களை கொண்டுவர முயற்சி செய்தனர். அதில் கைகலப்பு ஏற்பட்டது. சில போலீஸ்காரர்களும் அவர்கள் தரப்பில் (மல்யுத்த வீரர்கள்) சிலரும் காயமடைந்தனர்,"என்று டெல்லி போலீஸ் டிசிபி பிரணவ் தாயல் கூறினார்.

டெல்லி காவல்துறையின் ஏசிபி ரவிகாந்த் குமார் ஜந்தர் மந்தரில் இருந்தார். செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு மல்யுத்த வீரர்கள் சார்பில் அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.

"எங்களுக்கு புகார் கிடைத்துள்ளது. நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் மல்யுத்த வீரர்களின் கூற்றுகளை சரிபார்ப்போம்," என்று ரவிகாந்த் குமார் பிபிசியிடம் கூறினார்.

ரவிகாந்த் இடையிடையே போனில் மற்ற அதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தின் நடப்பு நிகழ்வுகளை விவரித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் ஜந்தர் மந்தரில் உள்ள ஜேடியு அலுவலகத்தில் இருந்து கிசான் மோர்ச்சா ஆதரவாளர்கள் சிலர் போராட்ட இடத்திற்கு வர முயன்றனர்.

கதவு மூடப்பட்டதால் அவர்களால் மறியல் பகுதிக்கு செல்ல முடியவில்லை. அங்கேயே கோஷம் எழுப்ப ஆரம்பித்தார்கள்.பிறகு போலீஸார், சிலரை உள்ளேவர அனுமதித்தனர்.

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,CHANDAN SINGH RAJPUT/BBC

சுவாதி மாலிவால், திபேந்திர ஹூடா தடுத்து நிறுத்தப்பட்டனர்

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலும் போராட்ட இடத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

" டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவரை ஏன் நிறுத்துகிறீர்கள்?" என்று தடுத்து நிறுத்தப்பட்ட, ஸ்வாதி மாலிவால் வினவினார்.

மகளிர் போலீஸ்காரர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆரம்பித்ததும் ஸ்வாதி, "என்னை தொட உங்களுக்கு என்ன தைரியம்? மேடம் என்னை தொடாதீர்கள்," என்றார்.

இதையடுத்து போலீஸ் அதிகாரி ஒருவர், ‘அவர்களை இங்கிருந்து தூக்குங்கள்’ என பெண் போலீசாரிடம் அறிவுறுத்தினார். உடனே மகளிர் போலீசார் அவருடைய கை கால்களை பிடித்து தூக்கி வண்டியில் அமர வைத்தனர். அவரை மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார்.

பின்னர் சுவாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடாவும் மல்யுத்த வீரர்களின் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தான் கைது செய்யப்பட்டு வசந்த் விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஹூடா ட்விட்டரில் தெரிவித்தார்.

சோம்நாத் பாரதியும் இந்த சம்பவம் தொடர்பாக தான் அதிர்ச்சியடைந்ததாகவும் வெட்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தர் - மல்யுத்த வீராங்கனைகள் தர்ணா

பட மூலாதாரம்,CHANDAN SINGH RAJPUT/BBC

மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம்

மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்கள் பலர் வெளிப்புற தடுப்புகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது ஆதரவாளர்கள் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில ஆதரவாளர்கள் போலீசாரிடம், " இதற்கு (நிறுத்த) எழுத்துப்பூர்வ உத்தரவு உள்ளதா?"என்று கேட்டனர்.

தடுப்பு வேலியில் நின்றிருந்த போலீஸ் அதிகாரி, "எழுத்துபூர்வ உத்தரவு உள்ளது. நீங்கள் அலுவலகத்திற்குச் சென்று கொண்டு வாருங்கள். அதை இங்கு கொடுக்க முடியாது. உங்களோடு என்னால் வாதிட முடியாது" என்று பதிலளித்தார்.

"உள்ளே சட்டம்-ஒழுங்கு பிரச்சனை நடக்கிறது. வாக்குவாதம் செய்யாதீர்கள். அமைதியை சீர்குலைக்க முயன்றால் காவலில் வைப்போம்" என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறினார்.

இதற்கிடையில் உள்ளே நுழைய முடிந்த ஆதரவாளர்கள் தர்ணா நடக்கும் இடத்திற்கு முன் சாலையில் மெத்தைகள் விரித்து அமர்ந்தனர். சில ஆதரவாளர்கள் தடுப்புகளுக்கு வெளியில் இருந்து மல்யுத்த வீரர்களை உற்சாகப்படுத்தி, "கவலைப்படாதீர்கள் சகோதரிகளே, நாங்கள் இருக்கிறோம்" என்று கூச்சலிட்டனர்.

இருப்பினும் மல்யுத்த வீராங்கனைகளின் கண்களில் இருந்து பெருக்கெடுத்தோடிய கண்ணீர் நிற்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cd1rz02rqd1o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Vinesh Phogat Interview: PM Modi-ஐ Meet பண்ணப்போ சில விஷயம் சொன்னேன்; அதற்கு பின் நடந்தது இதுதான்

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு மாதத்தை எட்டிய மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - டெல்லியில் இதுவரை நடந்தவை

மல்யுத்த வீரர்களின் போராட்டம்

பட மூலாதாரம்,ANI

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உள்நாட்டு, சர்வதேச போட்டிகள் பலவற்றில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது இப்போராட்டம்.

கடந்த ஜனவரி மாதத்தில் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அவர் கைது செய்யப்படும் வரை தத்தம் வீடுகளுக்கு திரும்பப் போவதில்லை என்றும் இந்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பிரிஜ் பூஷண் சரண் சிங் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.

“நான் யாரிடமும் முறைகேடாகவோ தவறாகவோ அநியாயமாகவோ நடந்து கொள்ளவில்லை. அவர்களை என் குடும்பத்தின் குழந்தைகளைப் போல நடத்தினேன். மிகுந்த மரியாதையையும் அன்பையும் பகிர்ந்து கொண்டேன்,” என்கிறார் பிரிஜ் பூஷண்.

இந்த நிலையில், போராட்ட களத்தில் இறங்கியுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பல விவசாய அமைப்புகள் மற்றும் காப் பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள் களமிறங்கியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹரியாணாவின் ரோஹ்தக்கில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக காப் பஞ்சாயத்து ஒன்று கூட்டப்பட்டது. அதில் விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத், "விவசாயிகள் போராட்டத்தைப் போலவே இதுவும் நீண்ட காலம் தொடரும்," என்று கூறினார்.

டெல்லியில் பெண்களின் மகா பஞ்சாயத்து மே 28ஆம் தேதி கூட்டப்படும் என்றும் அதில் மல்யுத்த வீராங்கனைகள் எடுக்கும் முடிவு செயல்படுத்தப்படும் என்றும் காப் பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டது.

விவரம் என்ன?

மல்யுத்த வீரர்களின் போராட்டம்

பட மூலாதாரம்,ANI

இந்த விவகாரம் இந்த ஆண்டு ஜனவரி 18 அன்று தொடங்கியது. நாட்டின் முக்கிய மல்யுத்த வீரர்களான வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராட்டத்தைத் தொடங்கினர்.

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது அவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

அடிப்படை வசதிகளில் குறைபாடு, நிதி முறைகேடுகள், வீரர்களை மோசமாக நடத்துதல் மற்றும் தன்னிச்சை போக்கு ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடக்கம். ஆனால் முக்கியமான குற்றச்சாட்டு பாலியல் தொல்லைகள் தொடர்பானது.

இது தொடர்பாக பேசிய வினேஷ் போகாட், "பிரிஜ் பூஷண் சிங்கும் பயிற்சியாளர்களுக்கான தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்கின்றனர்," என்று அழுதபடியே கூறினார்.

"அவர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு எங்களை துன்புறுத்துகிறார்கள். எங்களைச் சுரண்டுகிறார்கள்," என்று போகாட் கூறியபோது இந்த விவகாரம் சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெற்றது.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரிஜ் பூஷண் சிங், "எந்த வீராங்கனையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை. அது உண்மை என நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கத் தயார்," என்று கூறினார்.

ஆனால் வீரர்களின் கடுமையான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, இந்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீராங்கனைகளையும் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வீரர்களைச் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவை ஜனவரி 23ஆம் தேதி அமைத்தார்.

மல்யுத்த வீரர்களின் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விசாரணை அறிக்கை கூறியது என்ன?

மேற்பார்வை குழுவில் முதலில் மொத்தம் ஐந்து பேர் சேர்க்கப்பட்டனர். இந்த குழுவின் தலைவராக மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தேர்வு செய்யப்பட்டார்.

இது தவிர, ஒலிம்பிக் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை த்ருப்தி முர்குண்டே, முன்னாள் டாப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகோபாலன் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இதில் அடங்குவர்.

பின்னர், மல்யுத்த வீரரும், பாஜக தலைவருமான பபிதா போகட்டும் இந்தக் குழுவில் இடம்பெற்றார்.

பிரிஜ் பூஷன் சிங், அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மீதான துன்புறுத்தல், நிதி முறைகேடு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதே இந்தக் குழுவின் பணியாகும்.

இந்தக் குழு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாட்டை ஒரு மாதத்திற்குக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது, பின்னர் அதன் காலக்கெடு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதன்பிறகு தற்போது அந்தக் குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிறது என்றும், அந்தக் குழு மேற்கொண்ட விசாரணயின் நிலை என்ன, அந்த விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது இன்னும் வெளியாகவில்லை என்றும் வீரர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வுக் குழுவின் இந்த அறிக்கை பகிரங்கமாக இல்லாத நிலையில், விசாரணை அறிக்கையின் தகவல்கள் ஊடகங்களில் கசிந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

போராட்டம் கடந்து வந்த பாதை

விசாரணை குழுவின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தலைமையில் ஏப்ரல் 23 அன்று, மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லிக்கு வந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் அமர்ந்தனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரிஜ் பூஷண் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏப்ரல் 21- பெண் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை.

ஏப்ரல் 23 - இரண்டாவது முறையாக ஜந்தர் மந்தரில் தர்ணா தொடங்கியது.

ஏப்ரல் 24 - பாலம் 360 காப் தலைவர் சௌத்ரி சுரேந்திர சோலங்கி ஜந்தர் மந்தர் சென்று, போராட்டத்துக்கு ஆதரவளிக்க மற்ற காப்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் 25 - பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி வினேஷ் போகட் மற்றும் 6 மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக, பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 26 - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் ஜந்தர் மந்தர் சென்று, "இந்தப் போராட்டம் நமது நாட்டின் மகள்களின் கௌரவத்துக்கான போராட்டம். டெல்லியில் அமர்ந்திருக்கும் வெட்கமற்றவர்கள், பிரிஜ் பூஷன் சிங்கைப் பதவி நீக்கம் செய்ய இத்தனை காலம் தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.

ஏப்ரல் 27 - பிரிஜ் பூஷண் சிங் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்குக் கவிதை வடிவில் பதிலளித்தார்.

ஏப்ரல் 28 - இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வினேஷ் போகட்டின் உரையாடலுக்குப் பிறகு, நாட்டின் பல பெரிய வீரர்கள் மற்றும் நட்சத்திரங்கள், இந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர்.

இதில் ஒலிம்பியன் நீரஜ் சோப்ரா, ஸ்வரா பாஸ்கர், அபினவ் பிந்த்ரா, சானியா மிர்சா, வீரேந்திர சேவாக், இர்பான் பதான், கபில்தேவ், சோனு சூட் போன்ற வீரர்கள் அடங்குவர். பெரிய வீரர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பில் அமைதியாக இருக்கிறார்கள் என்று வினேஷ் கூறியிருந்தார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தனர். அதில் ஒரு எஃப்ஐஆர் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

டெல்லி போலீசார் இரவில் மின்சாரம் மற்றும் தண்ணீரைத் துண்டித்து, போராட்ட இடத்தைக் காலி செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டினர்.

ஏப்ரல் 29 - காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போராட்ட களத்துக்கு வந்து, "பெண்கள் சுரண்டப்படும்போது, அரசு அமைதி காக்கிறது," என்றார்.

மே 3 - இரவு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல், போலீசாருடன் கைகலப்பு. மல்யுத்த வீரர்கள், "போலீஸ் நடவடிக்கையில்," தங்கள் தோழர்கள் இருவர் காயமடைந்ததாகக் கூறினர். போராட்டத்துக்கு ஆதரவளிக்க வந்த தலைவர்கள் மற்றும் மக்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இரவு முழுவதும் சலசலப்பு நீடித்தது.

மே 7 - ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்தினர்.

மே 8 - பல மாநிலங்களின் விவசாயிகள் அமைப்புகள் ஜந்தர் மந்தர் சென்று போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன.

மே 11 - மல்யுத்த வீரர்கள் தலையில் கருப்புப் பட்டை கட்டி கருப்பு தினத்தை கடைபிடித்தனர். மைனர் பெண் மல்யுத்த வீராங்கனை தனது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்தார்.

மே 20 - நடந்து வரும் ஐபிஎல் போட்டியைக் காண மல்யுத்த வீரர்கள் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு வந்த போது, தங்களை மைதானத்திற்குள் நுழைய டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

மே 21 - மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் காப் பஞ்சாயத்து நடைபெற்றது. பஞ்சாயத்தில், பிரிஜ்பூஷன் சரண் சிங்கைக் கைது செய்து, நார்கோ சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மே 22 - பிரிஜ் பூஷண் சரண் சிங், தனது நார்கோ, பாலிகிராஃப் மற்றும் பொய் கண்டறிதல் சோதனைக்கு உட்படத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால், வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் தன்னுடன் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இதற்கு ஒப்புக்கொள்வதாகக் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஹரியாணா மாநில வீரர்கள் மட்டுமா?

விளையாட்டுத் துறையின் மூத்த பத்திரிகையாளர் ஆதேஷ் குமார் குப்தா கூறுகையில், தர்ணாவில் அமர்ந்திருக்கும் பெரும்பாலான வீரர்கள் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயல் நிகழ்வுதான் என்று தெரிவித்தார்.

“ஹரியாணாவை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று வினேஷ் போகட் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும். அவருடன் மற்ற மல்யுத்த வீரர்கள் நாட்டுக்காக விளையாடி நாட்டிற்காக மட்டுமே பதக்கங்களை வெல்பவர்கள். அவரை ஹரியாணாவுடன் மட்டும் இணைத்துப் பார்க்கக் கூடாது. பிற மாநில வீரர்களின் ஆதரவு பிரிஜ் பூஷண் ஷரண் சிங்குக்கும் உள்ளது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தில் பிற மாநில வீரர்களைப் பார்க்கவில்லை என்றாலும் இப்போது மெல்ல மெல்ல ஆதரவு கொட்டத் தொடங்கியுள்ளது,” என்ற அவர், கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் போன்றோரைச் சுட்டிக் காட்டுகிறார்.

பிரஜ்பூஷண்

பட மூலாதாரம்,@B_BHUSHANSHARAN

பிரஜ் பூஷண் சரண் சிங் யார்?

பிரிஜ் பூஷன் சரண் சிங் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்த இவர், கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.

மாணவ பருவத்திலிருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங், தனது இளமையை அயோத்தியில் கழித்தார். ஒரு மல்யுத்த வீரராக, தன்னை "சக்தி வாய்ந்தவர்" என்று தன்னைத்தானே அவர் அழைத்துக் கொள்கிறார்.

கல்லூரி நாட்களில் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். அவரது தீவிர அரசியல் வாழ்க்கை அதிலிருந்தே தொடங்கியது.

1988ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், 1991-ம் ஆண்டு முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று எம்.பி ஆனார்.

1999, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் ஆறு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் இணைந்த பிறகு, பிரிஜ் பூஷண் சரண் சிங் ஒரு இந்து மதத் தலைவராகவே தனது பிம்பத்தைக் கட்டியெழுப்பினார். மேலும் அயோத்தியில் பாபர் மசூதி கட்டடத்தை இடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 40 பேரில், இந்துத்துவா அரசியலின் ஆதரவாளரான பிரிஜ் பூஷன் சிங், பாஜக பிரமுகர் லால் கிருஷ்ண அத்வானியுடன் பெயரிடப்பட்டார். ஆனால், செப்டம்பர் 2020இல், நீதிமன்றம் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.

இருப்பினும், பாரதிய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து விலகி, 2009 மக்களவை தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

பிரிஜ் பூஷண் சிங் 2011ஆம் ஆண்டு முதல் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். 2019இல், அவர் மூன்றாவது முறையாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற்காலத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதிக்கம் கோண்டாவிலும் பல்ராம்பூர், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அதிகரித்தது.

1999க்குப் பிறகு அவர் ஒரு தேர்தலில் கூட தோற்கவில்லை. இவர் மீது கடந்த காலங்களில் கொலை, தீவைப்பு மற்றும் நாசவேலை போன்ற குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில், ஜார்கண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் போது, அவர் மேடையிலேயே ஒரு மல்யுத்த வீரரை அறைந்தார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் பிரதீக் பூஷணும் அரசியலில் உள்ளார். கோண்டாவின் பாஜக எம்எல்ஏ பிரதீக் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/c51p4r566kno

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனைகளை அப்புறப்படுத்திய காவல்துறை

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனைகளை அப்புறப்படுத்திய காவல்துறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

28 மே 2023, 08:44 GMT
புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்

ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரங்கனைகள் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருந்த நிலையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனை சாக்ஷி மாலிக், காவல்துறையினர் தங்களை அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் தங்களின் கூடாரங்களை அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனைகளை அப்புறப்படுத்திய காவல்துறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன நடந்தது?

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சில தினங்களாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டில், நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

 

இன்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடைபெற்ற நிலையில், மல்யுத்த வீரர்கள் தாங்கள் போராடிக்கொண்டிருக்கும் ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து புதிய நாடாளுமன்ற கட்டடம் வரை பேரணி செல்ல இருப்பதாக முன்பே அறிவித்திருந்தனர்.

இதை முன்னிட்டு டெல்லியின் சிங்கு எல்லை, திக்ரி எல்லை, அம்பாலா எல்லை, காஜிபூர் எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பேரணி செல்ல முயன்ற தங்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டினர்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனைகளை அப்புறப்படுத்திய காவல்துறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது"

காவல்துறை எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. சிறையில் இருக்க வேண்டியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள், ஆனால், அமைதியாகப் போராட்டம் நடத்தும் எங்களை காவல்துறை தடுத்து நிறுத்துகிறார்கள்," என்றார்.

மல்யுத்த வீரர்களை மட்டுமல்லாது அவர்களது ஆதரவாளர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின்போது, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இட்டிருந்த ட்விட்டர் பதிவில், மல்யுத்த வீரர்கள் மற்றும் வயதான தாய்மார்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், ஜந்தர் மந்தரில் எங்கள் அணிவகுப்பை கலைக்கத் தொடங்கியுள்ளனர். எங்கள் உடைமைகள் எடுக்கப்படுகின்றன," என்று குறிப்பிட்டிருந்தார்.

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பேரணியில் கலந்துகொள்ள இருந்த விவசாயிகளும் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மல்யுத்த வீரர்கள் மரியாதைக்குரியவர்கள். ஆனால், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தடை உண்டாக்குவதை அனுமதிக்கமாட்டோம் என்று டெல்லி போலீஸ் இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.

டெல்லியின் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் படையின் ஆணையர் திபேந்திர பதக், “நாங்கள் எங்கள் விளையாட்டு வீரர்களை மதிக்கிறோம். ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு ஏற்படக்கூடிய எந்தத் தடையையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் என்ன தவறு செய்தோம்?”

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இதற்கிடையே, “ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளை அப்புறப்படுத்தும் பணியை டெல்லி போலீசார் தொடங்கிவிட்டனர்,” என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

“மல்யுத்த வீரர்கள், வயதான தாய்மார்கள் அனைவரையும் தடுத்து நிறுத்திவிட்டு, இப்போது ஜந்தர் மந்தரில் எங்கள் அணிவகுப்பை வேரோடு பிடுங்கி எறியத் தொடங்கியுள்ளனர். எங்கள் உடைமைகள் அகற்றப்படுகின்றன. இது என்ன வகையான போக்கிரித்தனம்?” என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து பஜ்ரங் புனியா, “எந்த அரசாங்கமாவது தங்கள் நாட்டின் சாம்பியன்களை இப்படி நடத்துமா? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?” என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

விவசாயிகளும் தடுத்து நிறுத்தம்

டெல்லி ஜந்தர் மந்தரில் வீராங்கனைகளின் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கிய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையிலான விவசாயிகள் டெல்லி காவல்துறையினரால் காசியாபாத் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது டெல்லி காசியாபாத் எல்லையில் ராகேஷ் திகைத் தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“அனைத்து விவசாயிகளும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இனி அடுத்து என்ன செய்வது என்று யோசிப்போம்” என திகைத் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த மல்யுத்த வீராங்கனைகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் வருவார்கள் என்பதால் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

பட மூலாதாரம்,YEARS

அகற்றப்படும் உடைமைகள்

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த வாரங்களில் போராட்டம் நடத்தி வந்த பகுதியிலிருந்து கூடாரங்கள், குளிரூட்டிகள் மற்றும் பிற பொருட்கள் அகற்றப்பட்டன.

மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் பிற போராட்டக்காரர்களை புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு மகாபஞ்சாயத்து நடத்தவிடாமல் தடுத்த பிறகு, டெல்லி போலீசார் போராட்டத் தளத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றிவிட்டு, அதிலிருந்து குளிரூட்டிகள் மற்றும் இதர பொருட்களை லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.

இன்று மதியம் இரண்டு மணி வரைக்கும் ஜந்தர் மந்தரில் எதுவும் நடக்கவில்லை என்று சம்பவ இடத்திலிருந்த பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

பேரணி தொடங்கியதும் போலீசார் போராட்டக்காரர்கள பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்திலிருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

மறியல் நடந்த இடத்திலிருந்து மெத்தைகள், குளிரூட்டிகளை போலீசார் வாகனத்தில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மறியல் நடைபெற்ற இடத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் டெல்லி போலீசார் தடுப்புகளை அமைத்தனர். அந்த இடத்திற்குச் செல்ல ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சட்டம் ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டின் பேரில் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை பேருந்துகளில் ஏற்றிய பிறகு, அந்த இடத்திலிருந்த அவர்களது உடைமைகளை அகற்ற காவல்துறை உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கூடாரங்கள், கட்டில், குளிரூட்டிகள், பாய்கள், தார்பாய்களை போலீசார் பலவந்தமாக அகற்றினர்.

https://www.bbc.com/tamil/articles/c3gjrqj2xpwo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Wrestlers Protest: மல்யுத்த வீரர்களின் கூடாரத்தை அகற்றிய Police; என்ன நடந்தது Jantar Mantar-ல்?

New Parliament Building நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போலீசாரால் தடுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"துப்பாக்கி குண்டுகளை மார்பில் வாங்குவோம்" - ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடருமா?

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடருமா?

பட மூலாதாரம்,YEARS

4 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், அவர்களது ஆதரவாளர்கள் மீது கலவரம் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையில், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோருடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டார்கள். அவர்கள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராகக் கடந்த பல வாரங்களாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

தெருவில் இழுத்துச் செல்லப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23 அன்று தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள்.

18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் உட்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து பல்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளனர். பிறகு இரவு நீண்டநேரம் கழித்து வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், சங்கீதா போகாட் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இன்னும் சிலர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

போலீசார் தங்களை சாலையிலிருந்து இழுத்துச் சென்றதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

ஜந்தர் மந்தரில் இருந்த 109 போராட்டக்காரர்கள் உட்பட டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு இடங்களுக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் மறியல் நடந்த இடத்தில் இருந்த அவர்களது உடைமைகளை போலீசார் அகற்றினர்.

கைது செய்யப்பட்ட அனைத்து மல்யுத்த வீராங்கனைகளும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆண் மல்யுத்த வீரர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான டெல்லி காவல்துறையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடருமா?

பட மூலாதாரம்,YEARS

மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிற விளையாட்டு வீரர்கள்

ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருந்த மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசாரால் நடத்தப்பட்ட விதம் குறித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காணொளியை ட்வீட் செய்து, “இது என்னை வருந்தச் செய்கிறது. இந்தப் பிரச்னையை வேறு சிறந்த வழியில் கையாண்டிருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அவரைத் தொடர்ந்து தற்போது இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரியும் இந்தச் சம்பவம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர், “மல்யுத்த வீராங்கனைகளை இழுத்துச் செல்லவேண்டிய அவசியம் என்ன?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “எங்கள் மல்யுத்த வீராங்கனைகளைப் பற்றிச் சிந்திக்காமல் ஏன் இப்படி இழுத்துச் செல்ல வேண்டும்? யாராக இருந்தாலும் சரி, இப்படி நடத்தப்படுவது சரியான வழி இல்லை. இந்த முழு சூழ்நிலையும் எப்படி நடந்ததோ அதற்கேற்ப அது மதிப்பிடப்படும் என்றும் நம்புகிறேன்,” என்று தனது ட்வீட்டில் தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

“துப்பாக்கிச்சூடு நடத்தினால் குண்டுகளை மார்பில் வாங்குவேன்”

மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களில் ஒருவரான பஜ்ரங் புனியா, தான் சுடத் தயாராக இருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பதிவிட்ட ட்வீட் ஒன்றுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான என்சி அஸ்தான தனது ட்விட்டர் பதிவில், மல்யுத்த வீரர்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசியபோது இப்படி குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் இப்படி பதிவிட்டுள்ளார்.

அதில், “தேவைப்பட்டால், நாங்கள் துப்பாக்கிச்சூடும் நடத்துவோம். இப்போது அவர்களை குப்பைப் பையைப் போல் இழுத்து எறிந்துள்ளார்கள். ஆனால், பிரிவு 129இன்படி சுடும் உரிமை காவல்துறைக்கு உண்டு. சரியான சூழ்நிலையில், அந்த ஆசையும் நிறைவேறும். உடற்கூராய்வு மேசையின்மீது சந்திப்போம்,” என்று பதிவிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பஜ்ரங் புனியா இட்ட ட்வீட்டில், “இந்த ஐபிஎஸ் அதிகாரி எங்களைச் சுடுவது பற்றிப் பேசுகிறார். சகோதரர்கள் முன்னணியில் நிற்கிறார்கள். தோட்டாக்கலை மார்பில் ஏந்துவதற்கு எங்கே வர வேண்டும் எனச் சொல்லுங்கள். நான் என் முதுகைக் காட்ட மாட்டேன், என் மார்பில் ஏந்துவேன் எனச் சத்தியம் செய்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சிரித்துக் கொண்டிருப்பதைப் போல் ஒரு போலியான புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது.

அதுகுறித்துக் கருத்து தெரிவித்த சாக்ஷி மாலிக், “இதைச் செய்பவர்களுக்கு வெட்கமே இல்லை. இது மாதிரியான ஆட்களை கடவுள் எப்படி படைத்தார்? மனமுடைந்து நிற்கும் பெண்களின் முகத்தில் சிரிப்பை ஒட்டுகிறார்கள். இவர்களுக்கு இதயமே இல்லை என்று நினைக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

காசிபூர் எல்லையில் விவசாயிகள்

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்குப் பல விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயத் தலைவரான ராகேஷ் திகைத், “போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையை விமர்சித்ததுடன், டெல்லியின் காசிபூர் எல்லையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ராகேஷ் திகைத் தனது ட்விட்டர் பதிவில், “மல்யுத்த வீராங்கனை மகள்களை வலுக்கட்டாயமாக சாலையில் இழுத்துச் சென்ற மத்திய அரசு, நாடாளுமன்ற அலங்காரத்தில் பெருமை கொள்கிறது. ஆனால், மகள்களின் அலறல் இன்று ஆட்சியாளர்களுக்குக் கேட்கவில்லை. நீதி வழங்கப்பட வேண்டும். மகாபஞ்சாயத்து நடக்கும் வரை காசிபூர் எல்லையில் விவசாயிகள் உறுதியாக நிற்பார்கள்,” என்று தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

இருப்பினும் பிறகு அவர் டெல்லி எல்லையிலிருந்து விவசாயிகள் திரும்பிச் செல்வதாக அறிவித்தார். மேலும், வரவிருக்கும் பஞ்சாயத்தில் மல்யுத்த வீரர்களின் பிரச்னையும் சேர்க்கப்படும் என்று கூறினார்.

மல்யுத்த வீராங்கனைகள் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென முறையிட்டனர். ஆனால், இதுவரைக்கும் பிரதமர் உட்பட மத்திய அரசின் எந்தவோர் அமைச்சரும் இதுகுறித்து எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடர் டெல்லி போலீஸ் அனுமதிக்குமா?

நேற்றைய சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த டெல்லி காவல்துறையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

இதுகுறித்து டெல்லி காவல்துறை இயக்குநர் சுமன் நல்வா கூறுகையில், “கடந்த 38 நாட்களாக டெல்லி போலீசார் இந்தப் போராட்டக்காரர்களுக்கு நாங்கள் பல வசதிகளை அளித்து வந்தோம். அவர்களிடம் ஜெனரேட்டர், தண்ணீர் வசதி உள்ளன.

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடருமா?

பட மூலாதாரம்,SAKSHEE MALIKKH/TWITTER

அவர்கள் அங்கு தொடர்ச்சியாகக்கூட இருக்கவில்லை. அவ்வப்போது வருவதும் போவதும்தான் அவர்களது வழக்கம். அவர்கள் என்ன சொன்னாலும் சரி, நாங்கள் அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தோம்,” என்று தெரிவித்தார்.

“மே 23ஆம் தேதியன்று, மெழுகுவர்த்தில் ஊர்வலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நாங்கள் அவர்களிடம் நிறைய பேசி, இது உயர் பாதுகாப்பு மண்டலம் என்றும் இங்கு ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் கூறினோம். அப்போதும் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அந்த அணிவகுப்பு அமைதியான முறையில் நிறைவடைந்தது.

“நேற்று மிகவும் முக்கியமான நாள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அவர்களுடைய போராட்டம் நடப்பதை யாராலும் அனுமதிக்க முடியாது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். அதன்பிறகும், அவர்கள் போராட்டம் நடத்தியபோதுதான் தடுத்து வைக்கப்பட்டனர். எங்களுடைய பெண் காவலர்கள் அவர்களைத் தடுத்து வைத்து, பிறகு மாலையில் விடுவித்தனர்,” என்று தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தர்ணா வாபஸ் பெறப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை இயக்குநரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், ஜந்தர் மந்தர் தவிர வேறு இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

https://www.bbc.com/tamil/articles/cy0v8mky41do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்: கங்கைக் கரையில் நடந்தது என்ன?

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

பட மூலாதாரம்,ANI

30 மே 2023, 14:22 GMT
புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

வாழ்நாள் கனவாக ஒலிம்பிக்கில் வென்றெடுத்த பதக்கங்களை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை ஆற்றில் வீசியெறியச் சென்ற இடத்தில் உணர்ச்சிமிகு காட்சிகள் அரங்கேறியுள்ளன. கடைசி நேரத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். கங்கைக் கரையில் பதக்கங்களுடன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23-ம் தேதியன்று போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள். 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் உட்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதி வழியில் நீடித்த இந்த போராட்டத்தின், கடந்த 28-ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவன்று மாறிப் போனது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக புறப்பட முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

பிடிஐ செய்தி முகமை தகவல்படி, ஜந்தர் மந்தரில் இருந்த 109 போராட்டக்காரர்கள் உட்பட டெல்லி முழுவதும் 700 பேர் டெல்லி காவல்துறை கைது செய்தது. பிறகு இரவு நீண்டநேரம் கழித்து வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், சங்கீதா போகாட் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

   

ஜந்தர் மந்தரில் போராட அனுமதி மறுப்பு

மல்யுத்த வீரர், வீராங்கனைகள், அவர்களது ஆதரவாளர்கள் மீது கலவரம் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இதில், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோருடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பிறகு ஜந்தர் மந்தரில் அவர்கள் அமைத்திருந்த கூடாரம் அகற்றப்பட்டது. அவர்கள் உடைமைகள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்களை அனுமதிக்க முடியாது என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பதக்கங்களை கங்கையில் வீச முடிவு

இதையடுத்து, ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை, ஹரித்வாருக்கு பேரணியாக சென்று கங்கை நதியில் வீசப்போவதாக, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்னைகள் அறிவித்தனர்.

"இனிமேலும் எங்களுக்கு பதக்கங்கள் தேவையில்லை. கடுமையான உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கை நதியில் வீசுவோம். துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள்" என்று பஜ்ரங் பூனியா தனது ட்வீட்டில் வேதனை தெரிவித்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

'வீரர்களை தடுக்க மாட்டோம்' - காவல்துறை

கங்கையில் பதக்கங்களை வீசுவதாக அறிவித்துள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுக்கப் போவதில்லை என்று ஹரித்வார் சிறப்பு எஸ்.பி. அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகைக்குப் பேசிய அவர், "மல்யுத்த வீரர், வீராங்கனைகள் விரும்பியதைச் செய்யலாம். கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவுடன் அவர்கள் வந்தால் நாங்கள் தடுக்க மாட்டோம். அதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் இருந்து எந்தவொரு உத்தரவும் வரவில்லை. கங்கையில் தங்கம், வெள்ளி, அஸ்தி போன்றவற்றை மக்கள் கரைக்கிறார்கள். அதேபோல், மல்யுத்த வீரர்கள் விரும்பினால் அவர்களது பதக்கங்களை கங்கையில் வீசலாம். தசராவன்று 15 லட்சம் மக்கள் ஹரித்வாரில் புனித நீராடுவார்கள். அதேபோல், மல்யுத்த வீரர், வீராங்கனைகளையும் வரவேற்கிறோம்." என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

ஹரித்வாரை நோக்கி பதக்கங்களுடன் ஊர்வலம்

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தபடி, ஹரித்வாருக்கு ஊர்வலமாகச் சென்றனர். சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் தாங்கள் வென்ற பதக்கங்களை எடுத்து வந்திருந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதற்கு நீதி வேண்டி போராட்டத்தை தொடரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்தனர். ஹர் கி பௌரியை அடைந்ததும், வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் ஆகியோர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

நாட்டுக்காக வென்றெடுத்த பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்த பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாய்த் அங்கே சென்றார். பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை கைவிடுமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் அவர் சமரசம் பேசினார்.

அவர்களிடம் இருந்து பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட நரேஷ் திகாயத், தங்களுக்கு 5 நாட்கள் மட்டும் அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

தோனிக்கான வாழ்த்திலும் வேதனையை பதிவு செய்த சாக்ஷி மாலிக்

கடந்த ஒன்றரை மாதங்களாக ஐ.பி.எல். திருவிழாவில் மூழ்கி ஒட்டுமொத்த தேசமும் திளைத்திருந்த அதே வேளையில், ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டி ரிசர்வ் டேவிலும் மழையால் பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை சி.எஸ்.கே. கேப்டன் தோனி கோப்பையை வாங்கியதை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி தீர்க்கின்றனர். அதேநாளில் நாட்டுக்காக ஒலிம்பிக் உள்பட சர்வதேச அளவில் சாதித்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசி எறியத் துணிந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தெரிவித்த வாழ்த்திலும் கூட சாக்ஷி மாலிக் தங்களது துயரத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், "தோனி, சி.எஸ்.கே.வுக்கு வாழ்த்துகள். குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது அவர்களுக்குரிய மரியாதை கிடைப்பதில் மகிழ்கிறோம். எங்களுக்கோ, நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

நாடு முழுவதும் பிரபலமாக உள்ள விளையாட்டு வீரர்கள், நீதிக்கான தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று இந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நம்புகின்றனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா போன்ற சில வீரர்கள் ட்விட்டர் வாயிலாக ஆதரவாக குரல் கொடுத்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 7
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 7

Twitter பதிவை கடந்து செல்ல, 8
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 8

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினாலும் கூட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் எதிர்பார்த்த ஆதரவு கிட்டவில்லை. சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் ஆதரவு தெரிவித்தாலும் கூட, ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஆதரவு அளித்தவர்கள் வெகு சிலரே.

https://www.bbc.com/tamil/articles/cjmylwpy07xo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலியல் தொல்லைகள்; ஆசை ஆசையாக வாங்கிய பதக்கங்கங்களை வீசி எறிய தயாராகும் வீராங்கனைகள் | Sexual Harassment Athletes Throw Their Medals

பாலியல் தொல்லைகள்; ஆசை ஆசையாக வாங்கிய பதக்கங்கங்களை வீசி எறிய தயாராகும் வீராங்கனைகள்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர். கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்த பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதக்கத்தை நதியில் வீசும் சம்பவம்

அதேவேளை போராடி வென்ற பதக்கத்தை நதியில் வீசும் சம்பவம் அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது. பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, 1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

பாலியல் தொல்லைகள்; ஆசை ஆசையாக வாங்கிய பதக்கங்கங்களை வீசி எறிய தயாராகும் வீராங்கனைகள் | Sexual Harassment Athletes Throw Their Medals

 

இதன்மூலம் அமெரிக்காவில் இனவெறி நீங்கும் என்றும், மாற்றம் ஏற்படும் என்றும் நம்பினார். ஆனால், கறுப்பினத்தவர் என்ற காரணத்திற்காக உணவகத்தில் தனக்கு உணவு பரிமாறகூட பணியாளர்கள் தயக்கம் காட்டியதைக் கண்ட முகமது அலி, தான் வென்ற தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசினார்.

பாலியல் தொல்லைகள்; ஆசை ஆசையாக வாங்கிய பதக்கங்கங்களை வீசி எறிய தயாராகும் வீராங்கனைகள் | Sexual Harassment Athletes Throw Their Medals

இந்த நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவானின் இந்த செயலை பின்பற்றியே, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்துள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

https://jvpnews.com/article/sexual-harassment-athletes-throw-their-medals-1685512673

####################    #######################   ######################

 

May be an image of 4 people and text that says '30-05-2023 NEWS 18 தமிழ்நாடு "கங்கையில் பதக்கங்களை வீச முடிவு" ஹரித்வாரில் கங்கையில் இன்று மாலை 6 மணிக்கு தன்னுடைய பதக்கங்களை கங்கையில் வீச முடிவு செய்துள்ளதாக மல்யுத்த வீரர்கள் கூட்டாக அறிவிப்பு பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராடி வரும் நிலையில் மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு 28 GTCCL 57 30 GTPL 75 71 TATA 1562 2977 782 dishty 2977 www. news 8tamil com NEWS18 TAMILNADU CV 50'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்? விசாரணைக் குழு கண்டறிந்தது என்ன?

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

பிரிஜ் பூஷன் சரண் சிங்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஆர்யா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவரும், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தபோது அவர் கைது செய்வது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.

ஏனென்றால் போலீஸுக்கு அளிக்கப்பட்ட புகாரில் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததான குற்றச்சாட்டுடன் கூடவே ஒரு பதின்பருவ மல்யுத்த வீரருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் அடங்கும்.

பிரிஜ் பூஷன் சிங் எல்லா குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை விட சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மிகவும் தீவிரமானது என்று இந்திய சட்டம் கருதுகிறது.

 

அதனால்தான் இதுபோன்ற வழக்குகளுக்காக 2012-ம் ஆண்டு பிரத்யேகமான POCSO சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தில் மைனருக்கு பாதுகாப்பு அளிப்பது, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பது போன்ற விதிகள் உள்ளன.

2019 ஆம் ஆண்டில் இதன் கீழ் தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன மற்றும் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையிலிருந்து மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.

பிரிஜ் பூஷன் சிங் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி போராடிய மல்யுத்த வீரர்களை போலீஸார் ஞாயிறன்று போராட்டக்களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக காவலில் எடுத்த போது பிரிஜ் பூஷன், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தார்.

மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில் POCSO சட்டம் என்ன சொல்கிறது?

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம்,ANI

புகார்தாரர்களின் அடையாளத்தை மறைக்கவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர், பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எஃப்ஐஆரில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரிவுகள் 354, 354A, 354D தவிர, போக்ஸோ சட்டத்தின் பிரிவு (10) 'தீவிரமான பாலியல் துன்புறுத்தல்' குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று பிபிசிக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற மிகக் கடுமையான குற்றங்களில் காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆனால் 'தீவிர பாலியல் துன்புறுத்தல்' அந்த வகையில் வராது.

இப்பிரிவில் குறைந்தபட்சம் ஐந்து மற்றும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.

”POCSO வின் பிரிவு 10, ஜாமீன் வழங்குவதற்கான வழியைக் கொண்டுள்ளது. எஃப்ஐஆர் பதிவு செய்த பிறகும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீனும் பெற முடியும்,” என்று குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ஹக்' இன் வழக்கறிஞர் குமார் ஷைலப் கருத்துப்படி,

"இந்தப் பிரிவில் கைது செய்ய வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு இல்லை. விசாரணைக்கு இடையூறு ஏற்படும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓடிவிடுவார்கள் என்று காவல்துறை கருதினால் அவர்கள் அதன் அடிப்படையில் கைது செய்யப்படலாம்,” என்று பிபிசி யிடம் அவர் தெரிவித்தார்.

ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தர் நடைபாதையில் இரவும் பகலும் கழித்த மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம்,@SAKSHIMALIK

 
படக்குறிப்பு,

ஜந்தர் மந்தர் போராட்ட தளத்தில் இருந்து சாக்ஷி மல்லிக்கை போலீசார் தூக்கிச்செல்கின்றனர்.

பூஷனை கைது செய்ய கோருவது ஏன்?

பிரிஜ் பூஷன் ஷரண் சிங்குக்கு எதிரான எஃப்ஐஆர் அத்தனை எளிதில் செய்யப்படவில்லை. காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாததால், மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்த பின்னரே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

மைனரின் பிறப்புறுப்பை பாலியல் நோக்கத்துடன் தொடுவது அல்லது தன் பிறப்புறுப்பைத் தொடும்படி கட்டாயப்படுத்துவது ' பாலியல் துன்புறுத்தல்' என்ற வரையறையின் கீழ் வருகிறது.

இப்படி நடந்துகொள்பவர் சக்தி வாய்ந்தவராகவும், பதவி, வேலை போன்றவற்றின் காரணமாக அவர் சிறார்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தினால், அது 'தீவிர பாலியல் துன்புறுத்தல்' என்று கருதப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது பலம் மற்றும் செல்வாக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் மீது அழுத்தம் கொடுக்கலாம். எனவே அவரை கைது செய்வது அவசியம் என்று மல்யுத்த வீரர்கள் கருதுவதாக குமார் ஷைலப் கூறுகிறார்.

"இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காதது மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது. மேலும் POCSO சட்டத்தை உருவாக்குவதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் அது கேள்விகளை எழுப்புகிறது." என்று அவர் மேலும் கூறினார்.

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம்,MINISTRY OF YOUTH AFFAIRS AND SPORTS

பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு கண்டறிந்தது என்ன?

இந்த ஆண்டு ஜனவரியில் வினேஷ் போகட், சாக்ஷி மல்லிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஒன்றாக வந்து பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முதன்முதலில் ஊடகங்களிடம் முன்வைத்தனர்.

அந்த நேரத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தீர்ப்பதற்கும் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் 'உள் குழு' இருக்கவில்லை.

பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் கீழ், ஒவ்வொரு பெரிய பணியிடமும் இதுபோன்ற குழுவை அமைப்பது அவசியம். இதனால் பணியிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று இதுபோன்ற பல

குழுக்களில் உறுப்பினராக இருந்த மூத்த செய்தியாளர் லட்சுமி மூர்த்தி கூறினார்.

"புகார்கள் வந்த பிறகு மட்டுமே குழு அமைக்கப்பட்டால், அது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. அதில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது, புகார்தாரர்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் யார் மீது சுமத்தப்படுகிறது, என்பதை பொருத்தும் அமையக்கூடும். குழுவின் சுயாட்சி குறித்தும் கேள்விகள் எழக்கூடும்,” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

ஜனவரியில் போராட்டக்காரர்களின் புகார்களை கருத்தில் எடுத்துக்கொண்ட, 'இந்திய ஒலிம்பிக் சங்கம்' ஒரு 'மேற்பார்வைக் குழுவை' அமைத்தது, அதன் அறிக்கையின் ஒரு சிறிய பகுதி ஏப்ரல் மாதம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சில முதற்கட்ட விவரங்கள் வெளியாகி உள்ளதாகவும் இதுகுறித்து விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ”பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தீர்ப்பதற்கும் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் 'உள் குழு' இருக்கவில்லை. கூட்டமைப்பு மற்றும் வீரர்களுக்கு இடையே சிறந்த பேச்சுவார்த்தையும், உரையாடலில் வெளிப்படைத்தன்மையையும் இருக்கவேண்டியது அவசியம்.”

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம்,ANI

முடிவு வரும் வரை வீராங்கனைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?

இந்த குழு செயல்படும் விதம் ஏற்கனவே மல்யுத்த வீரர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இதில் ஒருவருக்கொருவர் தொடர்பு உள்ளது. குழுவில் வெளியில் இருந்து உறுப்பினர்கள் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று லட்சுமி மூர்த்தி கூறினார்.

மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவது தற்போதைய சூழலில் கூட்டமைப்பிற்கும் வீரர்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தண்டனையாக பதவியில் இருந்து நீக்குவது அல்லது இடைநீக்கம் செய்வது போன்ற விதிகள் உள்ளன.

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம்,IOA

பிரிஜ் பூஷன் சிங் இப்போதும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருக்கிறார்.

குற்றச்சாட்டுகள் எழுந்ததிலிருந்து, மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட வேலைகளை ஒரு 'மேற்பார்வைக் குழு' கவனித்து வந்தது. இப்போது இரண்டு பேர் கொண்ட 'அட்-ஹாக் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த 'அட்-ஹாக் கமிட்டி' மல்யுத்த சம்மேளனத்தின் வரவிருக்கும் தேர்தலையும் ஏற்பாடு செய்யும் என்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவிக்கிறது..

பிரிஜ் பூஷன் சிங் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து வருவதால் விதிகளின்படி, அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது.

 

இருந்தபோதிலும் மல்யுத்த வீரர்கள் அவரது ஆதிக்கம் மற்றும் குறைவான செயல்திறன் காரணமாக தங்கள் விளையாட்டு வாழ்க்கை சீரழிந்துவிடுமோ என்ற அச்சத்தைப் பற்றி பலமுறை பேசியுள்ளனர்.

'மேற்பார்வைக் குழு'வின் சீல் வைக்கப்பட்ட அறிக்கை, தில்லி காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பகிரங்கப்படுத்தப்படும் வரை குற்றச்சாட்டுகளை சரிபார்க்க முடியாது மற்றும் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

https://www.bbc.com/tamil/articles/crgdwmz12zmo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ் தலைமையில் 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

Published By: RAJEEBAN

03 JUN, 2023 | 01:50 PM
image
Placehoder--_40.jpg

புதுடெல்லி: ‘பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கபில் தேவ் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அடங்கிய 1983 உலகக் கோப்பை பேட்ஜ் கிரிக்கெட் வீரர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “நமது சாம்பியன்களான மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட காட்சிகளைக் கண்டு நாங்கள் மன வேதனை அடைந்தோம். கஷ்டப்பட்டு அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் தூக்கி ஏறியும் அவர்களின் போராட்டம் குறித்து அறிந்து கவலையடைந்தோம். பல வருட முயற்சி தியாகம் மன உறுதிஇ உழைப்புடன் தொடர்புடைய அந்தப் பதக்கங்கள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல மாறாக நாட்டின் பெருமைக்கும் மகிழ்ச்சிக்குமானவை.

இந்த விஷயத்தில் வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

புகாரும் போராட்டமும்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக் வினேஷ்போகத் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதிஇ புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன.

https://www.virakesari.lk/article/156849

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமித்ஷாவைச் சந்தித்த பின் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் என்ன குழப்பம்?

மல்யுத்த வீரர்கள், இந்தியா

பட மூலாதாரம்,YEARS

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வந்த பிறகு, மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தன்னுடைய ரயில்வே பணிக்கும் மீண்டும் திரும்பியுள்ளார். இந்த தகவலை அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதேசமயம், தங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும், அதிலிருந்து தான் பின்வாங்க போவதில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இந்த தகவலை ட்விட்டரில் பகிர்வதற்கு முன்னால், ’சாக்‌ஷி மாலிக் தன்னுடைய போராட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாக’ பலர் செய்திகளை பகிர்ந்து வந்தனர்.

”சாக்‌ஷி மாலிக்குடன் இணைந்து, மற்ற மல்யுத்த வீராங்கனைகளும் போராட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாக” மற்ற சில செய்திகளும் பகிரப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது இந்த ட்விட்டர் பதிவுகளின் மூலம், சாக்‌ஷி மாலிக்கும், பஜ்ரங் புனியாவும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளனர்.

   

சாக்ஷி மாலிக் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம். சத்தியாகிரகத்துடன் இணைந்து ரயில்வேயில் எனது பொறுப்பையும் நிறைவேற்றி வருகிறேன். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

அதேபோல், “போராட்டத்திலிருந்து பின் வாங்கிவிட்டோம் என்று கூறப்படுவது வெறும் வதந்திதான். இதுபோன்ற செய்திகள் எங்களுக்கு களங்கம் விளைவிக்கிறது. நாங்கள் போராட்டத்திலிருந்து பின் வாங்கவில்லை, இனிமேலும் பின்வாங்க மாட்டோம். நீதி கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்” என்று பஜ்ரிங் புனியா தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டம் குறித்து இன்னும் பல கேள்விகள் நிலவி வருகின்றன. அந்த கேள்விகள் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து முதலில் பார்க்கலாம்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பாலியல் புகார்கள் முதல் போராட்ட களம் வரை

மல்யுத்த வீரர்கள், இந்தியா

பட மூலாதாரம்,YEARS

சாக்‌ஷி மாலிக், வினீத் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய போராட்டத்தின் கோரிக்கை.

’மல்யுத்த வீரர்களுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்தார்’ என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக, டெல்லியின் ’கனட் பிலேஸ்’ (Connaught place) காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு புகார்கள் பதிவாகியுள்ளன.

‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறு மல்யுத்த வீரர்களும், ஒரு இளம் மல்யுத்த வீரரும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு புகார் அளித்துள்ளனர். மற்றொரு புகாரில், ‘இளம் மல்யுத்த வீரருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகாரளித்துள்ளனர். இந்த FIR ’போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டால், குற்றம்சுமத்தப்பட்டிருக்கும் நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஆனால் இத்தனை நாட்களுக்கு பிறகும், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை.

ஒருமாத கால தொடர் போராட்டத்திற்கு பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்கள், கடந்த மே 28ஆம் தேதியன்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

“ நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த அதே நேரத்தில், இந்தியாவிற்காக விளையாடிய மல்யுத்த வீரர்களின் பேரணியை காவல்துறையினர் தங்களது பலத்தைகொண்டு தடுத்தனர்”

இந்த சம்பவத்திற்கு பின், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்கள் அனைத்தையும் கங்கையில் வீசிவிட முடிவு செய்தனர்.

மல்யுத்த வீரர்கள், இந்தியா

பட மூலாதாரம்,TWITTER

இதற்காக சாக்‌ஷி மாலிக், வினீஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய மூவரும் ஹரித்வாருக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டனர். பதக்கங்களை கங்கையில் வீசிவதற்காக சென்றுகொண்டிருந்த அவர்களை, விவசாயத் தலைவர் நரேஷ் திக்கத் கடைசி நிமிடத்தில் வந்து தடுத்தார்.

இறுதியாக மல்யுத்த வீரர்கள் ஐந்து நாட்கள் வரை இந்திய அரசிற்கு அவகாசம் அளித்திருந்தனர். இந்த ஐந்து நாட்களுக்குள் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துவிட்டனர்.

அமித்ஷாவுடனான இந்த சந்திப்பிற்கு பிறகுதான், சாக்‌ஷி மாலிக் போராட்டத்திலிருந்து பின் வாங்கிவிட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன.

அமித்ஷாவுடனான சந்திப்பில் என்ன நடந்தது?

சாக்‌ஷி உட்பட அனைத்து மல்யுத்த வீரர்களும் இத்தகைய செய்திகளை முற்றிலும் மறுத்தனர்.

அதேபோல் அமித்ஷாவுடன் நிகழ்ந்த தங்களது சந்திப்பு குறித்தும் சாக்‌ஷி மாலிக் உறுதிப்படுத்தினார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையுடன் பேசிய அவர், “நாங்கள் இந்த போராட்டத்திலிருந்து பின் வாங்கவில்லை. இனியும் பின்வாங்க மாட்டோம். நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினோம். ஆனால் அதில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. கடுமையான குற்றச்சாட்டுகளை சுமந்திருக்கும் பிரஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது ஒரே கோரிக்கை” என்று தெரிவித்தார்.

வினீஷ் மற்றும் பஜ்ரங் போராட்டத்திலிருந்து பின் வாங்கினார்களா?

மல்யுத்த வீரர்கள், இந்தியா

பட மூலாதாரம்,YEARS

வினீஷ் மற்றும் பஜ்ரங் போராட்டத்திலிருந்து பின் வாங்கிவிட்டதாக வந்த செய்திகளை சாக்‌ஷி மறுக்கிறார்.

ஏ.என்.ஐ., செய்தி முகமையிடம் பேசிய அவர், “இது முற்றிலும் தவறான செய்தி. நாங்கள் மூன்று பேரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நீதி கிடைக்கும் வரை ஒன்றாகவே இருப்போம். நாங்கள் மூன்று பேருமே போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பஜ்ரங் புனியாவும் இதையேத்தான் வழிமொழிந்துள்ளார்.

இதுகுறித்து வினீஷ் போகத் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் “இப்படியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு, உண்மையில் பெண் மல்யுத்த வீரர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து தெரியுமா? பலவீனமான ஊடகங்கள் அதிகாரத்தின் முன் நடுங்குகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் வேலைகள் குறித்து மல்யுத்த வீரர்கள் கூறுவது என்ன?

சாக்‌ஷி மாலிக் போலவே வினீஷ் மற்றும் பஜ்ரங் புனியாவும் தாங்கள் தங்களுடைய பணிகளுக்கு திரும்பியது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இவர்கள் மூவரின் பதிவும் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் காணப்பட்டது.

“எங்களது பதக்கங்கள் வெறும் 15ரூபாய்தான் மதிப்பு பெறும் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எங்களது வேலையை குறி வைத்து விமர்சித்து வருகின்றனர். எங்களுக்கான நீதியை பெறுவதற்கு இந்த வேலை ஒரு தடையாக இருந்தால், அதை தூக்கி எறிவதற்கு எங்களுக்கு பத்து நொடிகள் கூட ஆகாது. எங்கள் வேலையை விமர்சித்து எங்களை அச்சுறுத்த முடியும் என நினைக்காதீர்கள்” என்று அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

இளம் மல்யுத்த வீராங்கனை புகாரைத் திரும்ப பெற்றுவிட்டாரா?

மல்யுத்த வீரர்கள், இந்தியா

பட மூலாதாரம்,YEARS

இது தவிர, பிரஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்திருந்த இளம் மல்யுத்த வீராங்கனை, தன்னுடைய புகாரை திரும்ப பெற்றுவிட்டாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் இளம் மல்யுத்த வீராங்கனை பிரஜ் பூஷன் சரண் சிங் மீது அளித்திருந்த புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. போக்சோ சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டிருக்கும் புகார் எப்படியும் கைவிடப்படலாம் என்பதால் அவர் தனது புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

ஆனால் இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை சாக்‌ஷி மாலிக் விளக்கமளித்தார்.

ஏ.என்.ஐ., செய்திடம் பேசிய அவர், “இது அனைத்துமே தவறான செய்திகள்தான். எங்களது சத்தியாகிரக போராட்டத்தை வலுவிழக்க செய்வதற்கும், மக்களை எங்களிடமிருந்து தூரமாக்குவதற்கும்தான் இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் இதனால் நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை, சோர்ந்து போக போவதுமில்லை” என்று தெரிவித்தார்.

நீடிக்கும் குழப்பங்கள்

மல்யுத்த வீரர்கள் இது தொடர்பாக தொடர்ந்து விளக்கமளித்து வரும் நிலையிலும், இந்த பிரச்னையில் தொடர்ச்சியாக சில குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

”அமித்ஷாவுடனான மல்யுத்த வீரர்கள் சந்திப்பில் என்ன நடந்தது? அந்த சில மணி நேர சந்திப்பில் அவர்கள் என்ன உரையாடினார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் இந்த சந்திப்பை ஒருங்கிணைத்தது யார் என்பதும் இதுவரை தெரியவில்லை.”

இப்போது இருக்கும் மிகப்பெரும் கேள்வி என்னவென்றால், மல்யுத்த வீரர்கள் தற்போது தங்களுடைய பணிகளுக்கு திரும்பிய பின்னரும், அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்பதுதான்.

அதேபோல் அவர்கள் தங்களுடைய பணிகளுக்கு திரும்பிவிட்டார்கள் என்றால், இந்த போராட்டத்தை இனி யார் முன்னின்று நடத்துவார்கள் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

போராட்டம் நீடிக்கும் என்று மட்டுமே கூறிவரும் மல்யுத்த வீரர்கள், அந்த போராட்டம் எப்படி நடைபெறும் என்பது குறித்து இதுவரை எந்த தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cm58780vl0lo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலியல்துன்புறுத்தல் குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனையை குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சரின் வீட்டுக்கு அழைத்து சென்ற பொலிஸார்

10 JUN, 2023 | 02:25 PM
image
 

பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி பொலிஸாரின் இந்த நடவடிக்கை குறித்தும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபரை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கும் டெல்லி பொலிஸாரின் நடவடிக்கை புரிந்துகொள்ள முடியாததாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. நடந்த நிகழ்வுகளை மீண்டும் நடித்துக் காட்டச் சொல்வதற்கு இது ஒரு கொலை குற்றச் சம்பவம் இல்லை. அதுபோன்ற நிழ்வுகளுக்குத் தான் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

மேலும், பாலியல் சீண்டலை எப்படிச் செய்தார் என்பதை மீண்டும் விவரித்துக் காட்டச் சொல்லிய இந்த நடவடிக்கையின் மூலம், டெல்லி காவல்துறை சங்கீதா போகத்தின் மனதில் அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் அதிர்ச்சியை மீள்உருவாக்கம் செய்துள்ளது. இது பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்ட அவரின் அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்.

இதன் மூலமாக, புகார்தாரர், துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவரின் மனதில் ஓர் அச்ச உணர்வினை ஏற்படுத்தும் ஒரு செயலை டெல்லி போலீஸ் உருவாக்க முயற்சி செய்வது தெளிவாகிறது. பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டு அதற்காக இன்னும் கைது செய்யப்படாத ஒருவரின் வீட்டிற்கு அவரால் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்துச் சென்றிருப்பதன் மூலம் இந்த உண்மை உறுதியாகியிருக்கிறது". இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷன் மறுப்பு: முன்னதாக, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சம்பவ நிகழ்வுகள் மீண்டும் விவரித்துக் காட்டுவதற்தாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனின் டெல்லி வீட்டிற்கு, வீராங்கனை சங்கீதா போகத் வெள்ளிக்கிழமை மதியம் அழைத்துச் செல்லப்பட்டார் என இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது.

அதில், வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பெண் போலீஸ் அதிகாரிகள் சங்கீதா போகத்தை பிரிஜ் பூஷன் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்கு அரை மணிநேரம் இருந்தனர். அப்போது சங்கீதாவுக்கு செய்யப்பட்ட துன்புறுத்தல்களை விவரிக்குமாறு பிரிஜ் பூஷனை பொலிஸார் கேட்டுக்கொண்டனர் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த செய்திக் குறிப்பை பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மறுத்துள்ளார். அவர், "நான் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது யாரும் என் வீட்டிற்கு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157405

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 "பிரதமர் மோதியின் மௌனம் வேதனையை மேலும் அதிகரிக்கிறது" - சாக்ஷி மாலிக்

சாக்ஷி மாலிக் என்ன சொன்னார்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஆர்யா,
  • பதவி,பிபிசி செய்தியாளர், ரோடாக்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"நாங்கள் விருது வாங்கிய போது, எங்களை வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்திய பிரதமர் தற்போது இந்த பிரச்னை குறித்து மௌனம் காக்கிறார்."

ஹரியானா மாநிலத்தின் ரோத்தாக் மாவட்டத்தில் சாக்ஷி மாலிக்கின் பயிற்சி மையமான 'அகாஹாரா'விற்கு நான் எனது கேள்விகளுடன் சென்ற போது, அவர் என்னிடம் பேசத் தயாராக இருந்தார். எந்த முன்னுரைகளோ, வழக்கமான நடைமுறைகளோ இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் அவர்.

"5 மாத போராட்டத்துக்குப் பின் பிரதமர் மோதிக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என நான் கேட்டேன்.

அதற்கு பதிலளித்த அவர், “எங்களது பிரச்னை குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவே இல்லை. எங்களை அவர் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருக்கிறார். நன்றாகப் பேசியிருக்கிறார். எங்களை எல்லாம் அவருடைய மகள்கள் என்றார். ஆனால் உணர்ச்சிப் பூர்வமான இந்த விஷயம் குறித்து அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்."

 

"அவர் கண்டிப்பாக இந்த விஷயத்தில் தலையிட்டு, காவல் துறை நடவடிக்கை நிச்சயமான சரியான திசையில் பயணிக்கும் என உறுதி அளிக்கவேண்டும். மேலும், விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்தவேண்டும். ஒரு நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்."

”அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமரின் மௌனம் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா இல்லை அது அவ்வளவு பெரிய விஷயம் இல்லையா?” என சாக்ஷி மாலிக்கிடம் நான் கேட்டபோது, அவரது முகத்தில் காணப்பட்ட பதற்றம் சற்று குறைந்தது. அப்போது அவர், "ஆமாம். அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாங்கள் 40 நாட்கள் தெருவில் இறங்கிப் போராடினோம். நாங்கள் போராடியது குறித்து அவர் நன்றாக அறிந்திருந்தாலும், எங்கள் பிரச்னை குறித்து அவர் பேசவே இல்லை. அது எங்கள் மனதை காயப்படுத்தியது," என தெரிவித்தார்.

 

போராட்டத்தைத் தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது கடந்த 5 மாதங்களுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் போராட்டத்தைத் தொடங்கினர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் மறுப்பு தெரிவித்ததோடு, நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கப் போவதாகவும் பலமுறை அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கிய போது, விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒரு மேற்பார்வைக் குழுவை அமைத்தது. மல்யுத்த சம்மேளத்தின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மேற்பார்வைக் குழு தனது விசாரணையை முடித்த போது, அது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அதே நேரம் மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் பணி இரண்டு பேர் அடங்கிய 'அட் ஹாக்' (பிரச்னையின் தீர்வுக்காக உடனடியாக உருவாக்கப்படும் குழு) கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பிய சாக்ஷி மாலிக் உள்ளிட்ட அனைத்து மல்யுத்த வீராங்கனைகளும் மேற்பார்வைக் குழு மேற்கொண்ட விசாரணையின் மீது சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற போது, காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

ஆனால், இத்தனை போராட்டங்களைக் கடந்தும், உள்துறை அமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்துப் பேசிய பின்னரும் இது பற்றி பிரதமர் எதுவும் பேசவில்லை.

'ஜுன் 15-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்'

மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் மீதான விசாரணைகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இந்த விசாரணை முடிந்து ஜுன் 15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். மல்யுத்த சம்மேளத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுன் 30ம் தேதி நடத்தப்படும். இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட அனுமதிக்கப்படாது. பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க மல்யுத்த சம்மேளனத்தில் ஒரு பாதுகாப்புக் குழு உருவாக்கப்படும்," என்றார்.

இந்த சந்திப்புக்குப் பின் ஜுன் 15ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைக்க மல்யுத்த வீராங்கனைகள் ஒப்புக்கொண்டனர்.

பிபிசியிடம் பேசிய சாக்ஷி மாலிக், இதன் பொருள் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல என்றும், இருப்பினும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கைக் கைது செய்வது குறித்து அரசிடம் இருந்து எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். "ஜுன் 15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அதில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்." என்றார்.

இதற்கிடையே, ஜுன் 15ம் நாள் கெடு நெருங்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான கைசர்கஞ்சில் பிரிஜ் பூஷண் சரண் சிங் ஒரு பேரணியை நடத்தியுள்ளார். பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவுபெற்றுள்ளதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் அவர் மீதான பாலியல் புகார்கள் குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் உருது கவிதை ஒன்றில் உள்ள இரண்டு வரிகளை மேற்கோள் காட்டி, தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அதன் பொருள், "எனது அன்பைக் காட்டியதற்காக நான் ஒரு துரோகி என அழைக்கப்பட்டேன். இது எனக்குக் கிடைத்த பெருமையா அல்லது சிறுமையா என வியக்கிறேன்," என்பதே ஆகும்.

 

இந்நிலையில் பிரிஷ் பூஷண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்த 18 வயதுக்குட்பட்ட மல்யுத்த வீராங்கனை தனது கூற்றை மாற்றியதாக கூறப்பட்டது.

அந்த வீராங்கனையுடன் தொடர்பில் இல்லை எனத் தெரிவித்த சாக்ஷி மாலிக், அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனாலேயே அவர் புகாரளிக்க மறுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

"போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் இல்லை என்றாலும், மற்ற அனைவரும் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தமுடியும். சட்டம் அனைவருக்கும் சமமான ஒன்று என்றே நான் நம்புகிறேன்," என சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங் செலுத்திய ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு குறித்து காவல் துறையின் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த சம்மேளனத்தின் நடைமுறைகள் மற்றும் விதிகளின் பெயரில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக இந்த வீராங்கனைகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே 28ஆம் ஜந்தர் மந்தரில் இருந்து வீரர்கள் டெல்லி காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த மே 28ஆம் ஜந்தர் மந்தரில் இருந்து வீரர்கள் டெல்லி காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர்

அதனால் தான் பாலியல் துன்புறுத்தல் நடந்த போதே புகார் அளிக்க முடியாத நிலை இருந்ததாக வீராங்கனைகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள், இந்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் சேர்ந்த புதிதில் ஏற்பட்டதாகவும், அப்போது பயம் மற்றும் போதுமான தைரியமின்மை காரணமாக தங்களால் இந்த குற்றச்சாட்டு குறித்துப் பேசமுடியவில்லை என்றும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

சாக்ஷி மாலிக்கைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜுனியர் உலக கோப்பை மல்யுத்த போட்டி நடந்த போது இந்த புகார்கள் வெளிச்சத்துக்கு வந்தது தான் கடந்த ஜனவரி மாதம் இது போல் மிகப்பெரும் போராட்டம் தொடங்க வழி ஏற்படுத்தித் தந்ததாக தெரிவித்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவர், "கடந்த ஆண்டு நடைபெற்ற ஜுனியர் உலகக் கோப்பை மல்யுத்த போட்டியின் போது, இது போன்ற பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு சில வீராங்கனைகள் குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். அதன் பின், அது குறித்து நாங்கள் நிச்சயமான ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முடிவெடுத்தோம்," என்றார்.

வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் அப்போது உள்துறை அமைச்சரைச் சந்தித்ததாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

"ஆனால் அவர் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாததால் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவெடுத்தோம்," என்றார் அவர். மேலும், "எடுத்தவுடன் போராட்டத்தில் குதிக்க நாங்கள் முயலவில்லை. பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் முதலில் முயன்றோம். ஆனால், காவல் துறையில் புகார் அளிக்கும் நிலைக்குப் பின்னர் தள்ளப்பட்டோம்," என சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

அப்போதிலிருந்து அந்த மூன்று வீராங்கனைகளும் ஒன்றாகச் செயல்பட்டு, கூட்டாக மேற்கொள்ளவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டனர்.

மே 28 அன்று போலீசாரால் வீராங்கனைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களை திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அவர்கள் அரசிடம் பேசிய போது முக்கிய வேண்டுகோளாக வைக்கப்பட்டது. ஆனால் இது வரை அவர்கள் அந்த புகார்களை திரும்பப் பெற்றதாகத் தெரியவில்லை என்கிறார் சாக்ஷி மாலிக்.

இப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அவர்கள் ஜுன் 15ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.   

  • ஜனவரி 18 அன்று மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசத் தொடங்கினர். முக்கிய வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இது குறித்து டெல்லி ஜந்தர் மந்தரில் முதன் முதலி குரல் எழுப்பினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். அப்போது அழுதுகொண்டே பேசிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், பிரிஜ் பூஷண் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அளித்ததாக புகார் தெரிவித்தார். ஆனால், மல்யுத்த வீராங்கனைகள் யாரும் அது போல் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படவில்லை என பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்தார். மேலும் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனைக்கு உட்படவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
  • பின்னர் ஜனவரி 23 அன்று விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்துப் பேசி ஐந்து பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார்.
  • ஏப்ரல் 21 அன்று மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை.
  • ஏப்ரல் 23 - இரண்டாவது முறையாக ஜந்தர் மந்தரில் தர்ணா தொடங்கியது.
  • ஏப்ரல் 24 - பாலம் 360 காப் எனப்படும், பல கிராமங்களின் ஒன்றியக் குழுவின் தலைவர் சௌத்ரி சுரேந்திர சோலங்கி ஜந்தர் மந்தர் சென்று, போராட்டத்துக்கு ஆதரவளிக்க மற்ற காப் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
  • ஏப்ரல் 25 - பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி வினேஷ் போகட் மற்றும் 6 மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக, பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
  • டெல்லி காவல்துறை பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததது. அதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டது.
  • பின்னர், பிரிஜ் பூஷணுக்கு எதிரான தனது கூற்றை புகார் அளித்த 18 வயதுக்குட்பட்ட வீராங்கனையின் தந்தை மாற்றினார்.
  • மூன்று வீராங்கனைகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
  • விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வீரர்களை சந்தித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cv2r8r0ekkgo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய மல்யுத்த சம்மேளத்  தலைவருக்கு எதிராக 1000 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Published By: SETHU

15 JUN, 2023 | 01:33 PM
image
 

இந்தய மல்யுத்த வீராங்கனைகள் பலர் அளித்த  பாலியல் தொந்தரவு முறைப்பாடுகள் தொடர்பில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி பொலிஸார் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரம் தாக்கல செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  ஒரு சிறுமி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தான் பிரிட்ஜ் பூஷன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் முதல் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. 

எனினும், தற்போது பிரிஜ் பூஷண் மீது சிறுமி அளித்த பாலியல் முறைப்பாட்டுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் டெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால்,  சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் பதிவு செய்த போக்சோ வழக்கை ரத்துச் செய்யக் கோரி 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றையும் டெல்லி பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.  

பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த வீரர், வீராங்னைகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வந்தனர். 

இவ்விடயம் தொடர்பல் தான் நடவடிக்கை மேற்கொள்வதா இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று 15 ஆமு;  திகதி வரை போராட்டத்தை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157770

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்; சாலையில் அல்ல: மல்யுத்த வீராங்கனைகள்

26 JUN, 2023 | 11:03 AM
image
 

புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான தங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் நடக்கும் என்றும் சாலையில் அல்ல என்றும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட 6 பேர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

 

wreslers.jpg

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக கடந்த மே 28ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றதை அடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் சந்தித்துப் பேசினர். அப்போது ஜூன் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது. அறிவித்தபடி ஜூன் 15ம் தேதி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி எங்கள் போராட்டம் நீதிமன்றத்தில் நடக்கும்; சாலையில் அல்ல. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பாக அளித்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றி இருக்கிறது. தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்காக நாங்கள் காத்திருப்போம்" என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158598

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்யுத்த சம்மேளன புதிய கமிட்டி இடைநீக்கம் - வீரர்களின் எதிர்ப்புக்கு பணிகிறதா மத்திய அரசு?

மல்யுத்தம்

பட மூலாதாரம்,ANI

23 டிசம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 24 டிசம்பர் 2023

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை காலை தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்தி முகமைகள் பிடிஐ மற்றும் ஏஎன்ஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, மறுஉத்தரவு வரும் வரை இந்த இடைநீக்கம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

“மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் பதவியேற்ற பிறகு கோண்டா நந்தினி நகரில் நடக்கவிருக்கும் 15 மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமிட்டியை இடைநீக்கம் செய்துள்ளதாக” ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, புதிய கமிட்டியின் தேர்வுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள அனைத்து முடிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த செய்தி வெளியான பிறகு, ஞாயிறு அன்று ஊடகங்களிடம் பேசிய சஞ்சய் சிங், “ நான் பயணத்தில் இருந்தேன். முதலில் நான் கடிதத்தை படித்து விட்ட பிறகே, என்னால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

பெண் வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

பட மூலாதாரம்,DEBLIN

படக்குறிப்பு,

மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்த சாக்ஷி மாலிக், தனது ஷுக்களைக் கழற்றி மேசையில் வைத்தார்.

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டது குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இரண்டு படங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதையடுத்து அவர்கள் மிகுந்த மன தைரியத்துடன் போராட்டக் களத்தில் குதித்தனர். ஆனால், இந்த ஆண்டின் இறுதியில், மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு. அவர்கள் கதறி அழும் நிலை ஏற்பட்டது. அந்த அழுகையின் பின்னணியில் அவர்கள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாகக் கரைந்துவிட்டதாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளரும் புதிய தலைவருமான சஞ்சய் சிங்கின் வெற்றியும், மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு கிடைத்த தோல்வியின் தாக்கமும் விளையாட்டு உலகப் பெண்களின் மனதில் ஏற்கனவே நன்றாகப் பதிவாகியுள்ளது.

விளையாட்டு உலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்குகள் கடந்த காலத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை என்ற நிலையில், இதுபோன்ற விவாதங்களில் எதிர்காலத்தில் மிகவும் கடினமாகிவிடும் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார், ஜனவரி 2017 முதல் ஜூலை 2022 வரை, பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக 30 பாலியல் புகார்கள் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு வந்துள்ளன என்று அவர் கூறினார்.

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் புகார் தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு மட்டுமே உண்மை அல்லது பொய்யை நிரூபிக்கும்.

கடந்த ஜூன் மாதம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த வியாழன் அன்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். அதன் பின் அந்த வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டது, அவர் இப்போது ஜனவரியில் மீண்டும் விசாரணையைத் தொடங்குவார்.

ஆனால் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மல்யுத்தம் மட்டுமல்ல, விளையாட்டு உலகமே பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்ற அச்சத்தை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது.

பல பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை நாம் கேட்கும் போது, பெண்களை விளையாட்டு வீரர்களாக்கும் அவர்களின் நோக்கங்கள் பலவீனமடையத் தொடங்கியுள்ளன என்பது தெளிவாகிறது.

அதே சமயம், விளையாட்டுகளை நிர்வகிக்கும் சங்கங்களில் சர்வாதிகாரத்திற்கு சவால் விடுவது மிகவும் கடினம் என்பதும் தெளிவாகிவிட்டது.

 
பெண் வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

பிரிஜ் பூஷன் சரண் சிங்

பா.ஜ.க. எம்.பி. பிடியில் மல்யுத்த சம்மேளனம்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுடன், சங்கத்தில் தனிநபர் ஒருவரின் ஆதிக்கம் தொடர்பான பிரச்னையையும் மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பினர் என்பதுடன் அரசாங்கத்தின் உத்தரவாதத்திற்குப் பிறகுதான் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் கூற்றுப்படி, பிரிஜ்பூஷன் சரன் சிங்கின் கூட்டாளிகள் அல்லது அவருடன் தொடர்புடையவர்கள் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

பாரதிய ஜனதா எம்.பி.யாக இருக்கும் பிரிஜ் பூஷண், மல்யுத்த சங்கத்தில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற அவரது நண்பரும், தொழில் கூட்டாளியுமான உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் துணைத் தலைவர் சஞ்சய் சிங் மூலம் பிரிஜ் பூஷனின் ஆதிக்கம் தொடரும் என வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த வினேஷ் பொகாட் இதே கருத்தை வலியுறுத்தினார்.

தேர்தலில் சஞ்சய் சிங் வெற்றி பெற்ற பிறகு, பிரிஜ் பூஷனின் வீட்டில், "சஞ்சய் பாய்யா கியா லே கே சலே, பிரிஜ் பூஷன் கி கடாவு லே கே சலே" என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிய முகங்கள் வந்தாலும், பிரிஜ் பூஷனின் பிடியில் அந்த சம்மேளனம் தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கூட்டமைப்பு முன்பு இருந்தது போல் இல்லை.

இம்மாத இறுதியில் கோண்டாவில் 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். பிரிஜ் பூஷன் சரண் சிங் கோண்டாவில் வசிப்பவர் என்பதுடன், அங்கிருந்து இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 
பெண் வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கரைந்துவிட்டதாக மல்யுத்த வீரர்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பஜ்ரங் புனியா, வினேஷ் பொகாட் ஆகியோரும் குட்பையா?

மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பது மல்யுத்த வீரர்களின் மற்றொரு கோரிக்கையாகும். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற 15 உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண் இல்லை.

மல்யுத்த வீராங்கனைகளின் நம்பிக்கையை அவர்கள் எப்படி வென்றெடுப்பார்கள் என்பது சம்மேளனத்தின் முன் உள்ள ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த விளையாட்டு அவர்களுக்கு பாதுகாப்பானது என்றும் அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தலாம் என்றும் அவர்களுக்கு எப்படி உறுதியளிக்கமுடியும்?

தேர்தலுக்குப் பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது கூட்டாளி வெற்றி பெற்றாலும், தனது போட்டியாளர்களாக விளங்கும் மல்யுத்த வீரர்கள் ‘பழிவாங்கும் அரசியலை’ எதிர்கொள்ளும் நிலை ஏற்படாது என்று கூறினார்.

பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் பொகாட் ஆகியோர் பல சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கங்களை வெல்ல விரும்புகிறார்கள்.

இப்போது அவர்கள் தனது கேரியரை தொடர்வார்களா அல்லது சாக்ஷி மாலிக் போல் மல்யுத்தத்திற்கு குட்பை சொல்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 
பெண் வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகளாக பெண்கள் தேர்வாகவில்லை என வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

வினேஷ் 53 கிலோ எடையில் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கிறார். இந்த எடையில், 20 வயதான பங்கல் சிறப்பாக செயல்பட்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார்.

மல்யுத்த கூட்டமைப்பை நடத்துவதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்த தற்காலிகக் குழு, ஒதுக்கீட்டில் வெற்றி பெறும் மல்யுத்த வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று எதுவும் இல்லை என்றும், இருப்பினும் ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெறுபவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மற்றொரு விளையாட்டில் வெற்றிபெறவேண்டும் என்றும் ஒரு கொள்கையை கடந்த மே மாதம் கொண்டு வந்தது.

புதிய மல்யுத்த சம்மேளன நிர்வாகம் கடைசியில் பங்கலை மட்டுமே பாரிஸுக்கு அனுப்பக்கூடும். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், வினேஷின் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் கனவு கனவாகவே இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், வினேஷுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர் 50 கிலோ எடைப் பிரிவுக்கு திரும்ப வேண்டும் அல்லது தனது எடையை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் 57 கிலோ எடைப் பிரிவில் ஒரு ஒதுக்கீட்டைப் பெற வேண்டும்.

பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை தொடர்ந்தால், அவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஏனென்றால் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க எந்த இந்திய மல்யுத்த வீரரும் இதுவரை தகுதி பெறவில்லை.

 
பெண் வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

பட மூலாதாரம்,INSTAGRAM/ANITASHEORAN_WRESTLER

படக்குறிப்பு,

மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரன் 7 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.

ஆச்சரியமான வாக்குப்பதிவு முறை

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஏழு வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அதே சமயம் சஞ்சய் சிங் 50 வாக்குகளில் 40 வாக்குகளைப் பெற்றார்.

சஞ்சய் சிங்குக்கு ஆதரவாக 40 வாக்காளர்கள் இருக்கும் போது, மூத்த துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலில் அவரது குழுவில் இருந்த வேட்பாளர்கள் எப்படி தோல்வியடைந்தனர் என்பதுதான் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

அனிதா குழுவைச் சேர்ந்த பிரேம்சந்த் லோச்சப், தேவேந்திர காடியன் ஆகியோர் எளிதாக வெற்றி பெற்றனர்.

இதன் காரணமாக, எதிர்க்கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்ததற்கு பின்னால் ஒருவித அழுத்தம் இருந்ததாகவும், இல்லையெனில் இந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் பல நிபுணர்கள் யூகித்து வருகின்றனர்.

இருந்த போதிலும், 15 பதவிகளில் 13 பேர் பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், எனவே, சஞ்சய் சிங் கொள்கைகளை வகுப்பதில் அல்லது தற்காலிகக் குழு எடுக்கும் முடிவுகளை மாற்றுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளும் நிலை இருக்காது.

பெண் வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

https://www.bbc.com/tamil/articles/c842e73e94yo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.