Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதானி வணிகத்தை மேம்படுத்துவதே இந்திய வெளியுறவு கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதானி வணிகத்தை மேம்படுத்துவதே இந்திய வெளியுறவு கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு

2 மணி நேரங்களுக்கு முன்னர்
ராகுல்காந்தி

பட மூலாதாரம்,ANI

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

அதானி குழுமத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தவறான வழியில் உதவியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரிய அளவில் திருகு வேலை செய்தது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற சந்தை ஆய்வு நிறுவனம். இதையடுத்து அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு மோசமான சரிவை சந்தித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி.

அதானி சொத்து 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலரானது எப்படி?

"2014-இல் உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2022-ல் எப்படி 2வது இடத்திற்கு முன்னேறினார்? பிரதமர் நரேந்திர மோதிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு? கடைசி 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலராக உயர்ந்தது எப்படி?" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். நண்பரின் வியாபாரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்று பார்ப்பதில் மோதிஜிக்கு தங்கப் பதக்கம் வழங்கலாம் என்றும் விமர்சித்தார் ராகுல்.

 

"பிரதமர் ஆஸ்திரேலியா செல்கிறார், உடனே அதானிக்கு ஸ்டேட் வங்கி ஒரு பில்லியன் டாலர் கடன் தருகிறது; மோதி வங்கதேசப் பயணம் செல்கிறார். அந்நாட்டில் 1,500 மெகாவாட் மின்சார திட்டத்துக்கான ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு கொடுக்கப்படுகிறது. இலங்கையில் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை அதானிக்கு கொடுக்க முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழுத்தம் கொடுத்ததாக 2022ல் இலங்கை மின்வாரிய தலைவர் அந்நாட்டு நாடாளுமன்ற குழுவின் விசாரணையில் தெரிவித்தார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கை அதானியின் வணிகத்தை மேம்படுத்தும் கொள்கை" என்று பேசினார் ராகுல் காந்தி

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

மோதி விமானத்தில் அதானி

"முன்பு பிரதமர் நரேந்திர மோதி அதானியின் விமானத்தில் பயணிப்பார். ஆனால் இப்போது அதானி மோதியின் விமானத்தில் பயணிக்கிறார். இருவரும் சேர்ந்து எத்தனை முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்தீர்கள்? பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் அதானி எத்தனை முறை இணைந்துகொண்டார்? பிரதமர் வெளிநாட்டு பயணத்தை முடித்துத் திரும்பிய உடன் அதானி எத்தனை நாடுகளுக்கு சென்று ஒப்பந்தம் செய்திருக்கிறார்?கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு எவ்வளவு நிதி அளித்துள்ளார்?" என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.

பொதுத்துறை வங்கிகளில் இருந்து அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அதானி குழுமத்தின் வர்த்தகம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து மக்களவையில் விமானம் ஒன்றில் அதானி - நரேந்திர மோதி இருவரும் ஒன்றாக பயணிப்பது போன்ற போஸ்டர் ஒன்றையும் காண்பித்தார். காட்டி, இதுதான் உறவு பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது

இதற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு எதிர்வினையாற்றிய அவைத்தலைவர் ஓம்.பிர்லா, போஸ்டரை காட்ட வேண்டாம் என ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினார். தாங்கள் இதை காட்டினால் பாஜகவினர் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கவுதம் அதானியுடன் உள்ள போஸ்டரை காட்டுவார்கள். இப்படி காட்டுவது உகந்ததல்ல என்றும் அவர் கூறினார்.

ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, பாஜக எம்பிக்கள் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எம்பி நிஷிகாந்த் துபே, "நீங்கள் பிரதமரை குற்றம் சாட்டுகிறீர்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுங்கள், மோதி அரசில் எந்த விதிகள் மாற்றப்பட்டன என்பதைச் சொல்லுங்கள்" என்று கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 2

விமான நிலையத்தைப் பராமரிப்பதில் முன் அனுபவம் இல்லாதவர்கள் முன்பெல்லாம் விமான நிலைய மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை. தற்போது இந்த விதி மாற்றப்பட்டு அதானிக்கு 6 விமான நிலையங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் மிகவும் லாபகரமான விமான நிலையமான மும்பை விமான நிலையம், சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்தி, அதைப் பராமரித்து வந்த ஜிவிகே குழுமத்திடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்திய அரசால் அதானிக்குத் தரப்பட்டது என்றார் ராகுல்காந்தி.

துறை சார்ந்த முன் அனுபவம் ஏதும் இல்லாதபோதும் அதானிக்கு 4 பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது எப்படி என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.

ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைப்பதாக கூறினார், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்.

விதிகளை மேற்கோள் காட்டி, ஆதாரம் இல்லாமல் யாரையும் சபையில் குற்றம் சாட்ட முடியாது என்று கூறினார் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://www.bbc.com/tamil/india-64555323

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோதி, மோதி Vs அதானி, அதானி முழக்கம் - சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், மீண்டும் விமர்சித்த ராகுல்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,NARENDRA MODI YOUTUBE PAGE SCREENGRAB

 
படக்குறிப்பு,

நரேந்திர மோதி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்தார். என்ன நடந்தது மக்களவையில்?

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

"மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஒருவரின் உரைக்குப் பிறகு அவரது கட்சியினர் உற்சாகமடைந்திருந்ததை நான் நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன், அவரது உரைக்கு பிறகு, ஒட்டுமொத்த 'எகோ சிஸ்டமும்' (காங்கிரஸ் எம்பிக்களை நையாண்டி செய்யும் வகையில் இவ்வாறு மோதி குறிப்பிட்டார்) உற்சாகத்துடன் துள்ளியபடி, "யே ஹுய் நா பாத்" (இது தானே பேச்சு) என்று மகிழ்ச்சியுடன் கூறினர். அந்த குஷியில் தூங்கியவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

மோதியின் இந்த பதிலுரைக்கு ஒரு நாள் முன்புதான் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார். அப்போது அதானி குழுமத்துக்கும் நரேந்திர மோதி அரசுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.

 

மோதி எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அந்த நாடுகளுடன் எல்லாம் அதானி ஒப்பந்தம் செய்கிறார் என்று ராகுல் குற்றம்சாட்டினார்.

அவரது உரைக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் உரைக்கு பதில் தரும் வகையில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த 10 வருடங்களை விமர்சித்து மோதி பேசினார்.

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது கேடயம். எதிர்ப்பாளர்களின் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது என்று கூறிய மோதி, "செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் அல்லது தொலைக்காட்சி செய்திகளை வைத்து மக்கள் இந்த நரேந்திர மோதி மீது நம்பிக்கை வைக்கவில்லை, மக்கள் சேவையில் நான் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் இருப்பதால்தான் என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்," என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி மீது விமர்சனம்

"10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி விட்டது. 2004 முதல் 2014 ஆண்டு வரை மோசடிகள் மற்றும் வன்முறைகளின் தசாப்தம் ஆக இருந்தது. கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றிக் கொண்டதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முத்திரை," என்று மோதி கூறினார்.

நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தை பார்க்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் "விரக்தியில் மூழ்கியிருப்பதாக" பிரதமர் மோதி குற்றம்சாட்டினார்.

"2004-14க்கு இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று உறுதியளித்தனர். ஆனால் அந்த பத்தாண்டுகள் சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் ஊழல் நிறைந்ததாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து வருடங்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என நாடு முழுவதும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியது. அந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை, ஒட்டுமொத்த பிராந்தியமும் வன்முறையைத் தவிர வேறு எதையும் காணவில்லை. அந்த 10 ஆண்டுகளில், உலக அரங்கில் இந்தியா மிகவும் பலவீனமாக இருந்தது.," என்று மோதி குறிப்பிட்டார்.

மேலும், 2004-14 க்கு இடையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றியது" என்று மோதி கூறினார். அவர் இவ்வாறு கூறியபோது, ஆளும் கட்சி தரப்பில் இருந்தவர்கள் மேஜையை தட்டி ஆமோதித்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பெருமிதம் தெரிவிக்கும் மோதி

"கடந்த ஒன்பது ஆண்டுகளில் 90,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இப்போது, ஸ்டார்ட்அப் உலகில் நமது நாடு உலகளவில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது" என்று பிரதமர் மோதி கூறினார்.

மிகவும் வளமான மற்றும் பெரிய ஸ்டார்ட்அப் சூழ்நிலை நாட்டின் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் 100க்கும் அதிகமான யூனிகார்ன்கள் (ரூ. 100 கோடி இலக்கை எட்டிய தனியார் ஸ்டார்ட்அப்புகள்) உருவானதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.

செல்பேசி உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது என்றும் பிரதமர் மோதி கூறினார்.

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி தொடர்பான தகவல்களை பட்டியலிட்ட மோதி, உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்ததன் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பெருமிதப்பட்டார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இணையாக, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவை, உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் ஆக விளங்குவதாகவும் பிரதமர் மோதி கூறினார். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வித்துறையில் முன்னேற்றம்

கல்வித்துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது என்று கூறிய மோதி, உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 4 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்தார்.

பொறியியல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

விளையாட்டுத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தாத காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோதி, தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் இந்திய வீரர்கள் பிரகாசித்து வருவதாக தெரிவித்தார்.

குடியரசு தலைவருக்கு புகழாரம்

முன்னதாக, தமது உரையை தொடங்கும் போது, குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு புகழாரம் சூட்டும் வகையில் நரேந்திர மோதி பேசினார்.

"குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை, நன்றியுடன், நானும் அவரை வாழ்த்த விரும்புகிறேன். குடியரசு தலைவர் தமது தொலைநோக்கு உரை மூலம் எங்களுக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் வரலாற்று சிறப்புமிக்கவர், நாட்டின் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஊக்கமளிப்பவர்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

மேலும், "குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பழங்குடியின சமூகத்தில் பெருமையும், தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்காக இந்த தேசம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது," என்று மோதி கூறினார்.

பிரதமர் மோதி தனது அரசின் மக்கள் நல திட்டங்களைப் பட்டியலிட்டபோது பாஜக உறுப்பினர்கள் 'மோதி, மோதி' என்று குரல் எழுப்பினர். இதேவேளை, ஆளும் கட்சியினரின் முழக்கத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'அதானி, அதானி' என எதிர்க் குரல் எழுப்பினர்.

ராகுல் காந்தி எதிர்வினை

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், மோதியின் உரை நேரலையில் ஒளிபரப்பான சில நிமிடங்களில் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி இணைப்பை வெளியிட்டிருந்தார். அதானியுடனான மோதியின் உறவை கேள்வி எழுப்பும் அந்த காணொளியுடன் பகிர்ந்த இடுகையில், "ஜனநாயகத்தின் குரலை உங்களால் அழிக்க முடியாது. இந்திய மக்கள் உங்களிடம் நேரடியாகவே கேட்கிறார்கள். எனக்கு பதில் சொல்லுங்கள்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-64568735

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.