Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழனி கோயில் கருவறையில் அமைச்சர் சேகர்பாபு நுழைந்தாரா? பிராயச்சித்த கும்பாபிஷேகம் கோரும் பாஜக வானதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழனி கோயில் கருவறையில் அமைச்சர் சேகர்பாபு நுழைந்தாரா? பிராயச்சித்த கும்பாபிஷேகம் கோரும் பாஜக வானதி

4 மணி நேரங்களுக்கு முன்னர்
பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் பி.கே.சேகர்பாபு

பட மூலாதாரம்,P.K.SEKAR BABU/TWITTER

 
படக்குறிப்பு,

பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் பி.கே.சேகர்பாபு

பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள், ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் கருவறைக்குள் நுழைந்தார் என்றும் இதனால், மீண்டும் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

"அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார் வானதி.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று, தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடந்து முடிந்துள்ளது. அதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.

 

அதற்கு முந்தைய நாள் ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக அமைச்சர் சேகர் பாபு அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அமைச்சர், அவருடன் வந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கோயில் கருவறைக்குள் சென்றதாக கூறி சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. இதையடுத்து, கோயிலில் ஆகம விதி மீறப்பட்டுள்ளது. இதனால் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அர்ச்சகர் என கூறப்படும் ஒருவர் பேசும் ஆடியோ செய்தி ஒன்றும் பரவியுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர், அதிகாரிகள் கோயில் கருவறையில் நுழைந்ததாக குற்றம்சாட்டியுள்ள வானதி, பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பழனி குடமுழுக்கு

பட மூலாதாரம்,P.K.SEKAR BABU/TWITTER

 
படக்குறிப்பு,

டிவிட்டர் இணைப்பு: https://twitter.com/PKSekarbabu/status/1618923573036597252

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

எந்தவொரு திருக்கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது ஆகமம். ஆனால் மகா கும்பாபிஷேகம் நடந்து ஒரு வாரத்திற்குள் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் தைப்பூசம் வருகிறது.

மகா கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள், இந்து சமய அறநிலையளத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களும், துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமல்ல, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். எனவே, இதற்காக, அமைச்சர் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார் வானதி.

'சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோயில்'

"கருவறைக்குள் யாரும் நுழையவில்லை. கருவறைக்கு முன்னதாக இருக்கும் அர்த்த மண்டபத்திற்கு சென்றுதான் சுவாமி தரிசனம் செய்தார்கள்" என்று உண்மையை மறைக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கிறது. இது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களின்படியே, மதச்சார்பற்ற தமிழக அரசோ, அந்த மதச்சார்பற்ற அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ, திருக்கோயிலின் வழிபாடு, ஆகமம், கும்பாபிஷேகம் போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாது. அதனை, சம்பந்தப்பட்ட திருக்கோயில் அறங்காவலர்கள் குழுவும், அர்ச்சகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். பழனி முருகன் கோயில் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோயில். எனவே, அங்கு பாரம்பரியமாக சித்தர் வழி வந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மரியாதைகள் வழங்கப்பட வேண்டும்" என்றும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் வானதி.

விஷம செய்தி வெளியிடுவது வானதியின் வாடிக்கை: சேகர் பாபு

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7, 2023) கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் பேரூர் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, பிறகு செய்தியாளர்களிடம்பேசும்போது வானதியின் அறிக்கைக்கு பதில் அளித்தார்.

பழனி குடமுழுக்கு

பட மூலாதாரம்,PK SEKAR BABU/TWITTER

 
படக்குறிப்பு,

பழனி குடமுழுக்கு

"ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது (வானதியின்) வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பழனி கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டதை பாராட்டி வருகிறார்கள். அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை அவர் வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.

கும்பாபிஷேகம் முடிந்து 10 நாட்கள் கழித்து தற்போது தைப்பூசமும் முடிந்த பிறகு இவ்வாறு பிரச்சாரம் செய்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காலம் காலமாக கோயிலை வைத்து ஒரு சிலர் வருமானம் பார்த்து வந்தது ஒழிக்கப்பட்டு, தற்போது அனைவரும் சமம் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவிலை வைத்து வருமானம் பார்க்க முடியாதவர்கள் இது போன்ற பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். அன்றைய நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவருமே சிறப்பாக நடைபெற்றது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து சென்றார்கள்," என்றார்.

நிர்வாக அதிகாரி கூறியது என்ன?

பழனி கோயில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அக்கோயில் செயல் அதிகாரி நடராஜன் மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோயிலின் நிர்வாகத்தை பொருத்தவரை பழனியிம் மட்டுமில்லை வேறு எங்குமே வழிபாடு, திருவிழா போன்ற விவகாரங்களில் அதிகாரிகள் தலையிடுவதில்லை. உள்துறை, வெளித்துறை என அர்ச்சகர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் உள்ளன.

பழனி கோயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பழனி கோயில்

வழிபாடு, பராமரிப்பு மற்றும் அதை சார்ந்த அனைத்து விஷயங்களும் உள்துறையைச் சேர்ந்தவர்களால் தான் முடிவெடுத்து நிர்வகிக்கப்படுகின்றன. எந்த முடிவும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படுகின்றன. உள்துறையைச் சேர்ந்தவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அது தான் செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு நடைமுறை உள்ளது. கும்பாபிஷேகம், தைப்பூசம் என அனைத்தும் முறையாகதான் நடத்தப்பட்டுள்ளன. ஆகம விதிப்படிதான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவோ ஆகம விதியோ எங்கும் மீறப்படவில்லை. அர்ச்சகர்கள் தரப்பில் இது தொடர்பாக குற்றச்சாட்டோ கோரிக்கைகளோ எதுவும் வைக்கப்படவில்லை," என்றார்.

https://www.bbc.com/tamil/global-64564611

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழனி கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவின் செயலால் ஆகம விதி மீறலா? முழு பின்னணி

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
சேகர் பாபு
 
படக்குறிப்பு,

அமைச்சர் சேகர் பாபு

பழனி கோவில் கருவறைக்குள் அமைச்சர் சேகர் பாபு சென்றதும் அந்த கோவிலில் இருந்து அவர் பகிர்ந்த படங்களும் ஆகம விதி மீறலானதாக சிலர் விமர்சித்துள்ள நிலையில், அங்கு நடந்தது என்ன? அதற்கு ஆன்மிக ரீதியாக தரப்படும் விளக்கம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பழனி கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வில் அந்த துறையின் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். அப்போது எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

இந்த நிலையில் பழனி கோவிலில் ஆகம விதி மீறப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 2

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு, "ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பழனி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டதை பாராட்டி வருகிறார்கள். அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது." என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட அர்ச்சகர் சங்க ஸ்தானிக தலைவர் கும்பேஸ்வர குருக்கள் பேசிய ஆடியோ ஒன்று திண்டுக்கல், பழனி சுற்று வட்டாரங்களில் வாட்ஸ்அப்பில் அதிகம் பகிரட்பட்டது.

அதில், "அன்றைய தினம் நான் அங்கு தான் இருந்தேன். அதிகாரிகள் நாம் சொல்வதற்கு மாறாக நடக்க மாட்டார்கள். ஆனால் நாம் கூறியதையும் மீறி அன்று அவர்களை அனுமதித்துள்ளார்கள். ஆகம விதி மீறப்பட்டுள்ளதை குருக்கள் கண்டும் காணாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த நிகழ்வைப் பற்றி உலகம் முழுவதுமிருந்து தினமும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அழைத்து பேசுகிறார்கள். நாம் மௌனமாக இருக்கக்கூடாது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் விரைவில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனி மாதம் மீண்டும் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்" எனப் பேசியிருந்தார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட அர்ச்சகர் சங்க தலைவர் கும்பேஸ்வர குருக்களை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு வானதி குறிப்பிடும் பிராயசித்த கும்பாபிஷேகம் குறித்து கேட்டது.

பழனி கோவில்

"ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெறுகையில் தவறுதலாக ஆகம விதியை மீறும் விதத்திலோ அசம்பாவிதமாகவோ ஏதாவது நடந்தால் அதற்குப் பரிகாரமாக செய்வதற்கு ஆகமத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முழுமையாக ஆகம முறைப்படி நடக்காமல் இருந்து, பின்னர் நடத்தப்படுவதாக இருந்தால், அதன் பெயர்தான் பிராயசித்த கும்பாபிஷேகம்," என்கிறார் கும்பேஸ்வர குருக்கள்.

"கும்பாபிஷேகத்திற்கு முந்தைய தினம் நான் அங்கு தான் இருந்தேன். கும்பாபிஷேகம் நடப்பதற்கு அர்த்த மண்டபத்தை தாண்டி ஸ்தபதி, அர்ச்சகர்கள் அல்லாதவர்கள் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் வேறு பணிகளுக்காக நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். ஆனால் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் அன்று கருவறைக்குள் சென்றதாக அங்கு இருந்தவர்கள் உள்ளுர் மக்கள் என்னிடம் கூறினார்கள். சில வீடியோக்களும் வந்தன.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 3

ஆனால் சிவாச்சாரியார்கள் அனுமதியுடன் தான் இது நடந்ததாக செய்திகள் வெளியாகின. அதனால் தான் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்கள் சிவாச்சாரியார்கள் குழுவில் செய்தி பதிவிட்டிருந்தேன். அந்த செய்தி பரவலாக சென்றுவிட்டது. ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் மட்டுமே கருவறை வரை செல்வார்கள். அவர்கள் அல்லாமல் சிலை பராமரிப்பில் ஈடுபடும் ஸ்தபதிகள் தேவை ஏற்பட்டால் செல்லலாம். வேறு யாரும் கருவறைக்குள் செல்லக்கூடாது என்பது ஆகம விதி.

சட்டப்படி தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்த்த மண்டபம் வரை பக்தர்கள் சென்று வழிபடலாம். ஆனால் பல கோவில்களில் பாதுகாப்பு கருதி அர்த்த மண்டபம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மகா மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் பார்வையிட அர்த்த மண்டபம் வரை செல்வார்கள். ஆனால் அதை தாண்டி கருவறைக்குள் சென்றது தான் தவறாகியுள்ளது.

அர்ச்சகர் சங்கத்தில் இதை யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் நிர்பந்திக்கப்பட்டார்களா எனத் தெரியவில்லை. நான் அப்போது அங்கு இருந்திருந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலரும் அங்கு இருந்துள்ளார்கள். எங்கள் பெயர் சம்மந்தப்படுத்தப்பட்டதால் தான் அப்படியொரு விளக்கம் தர வேண்டி இருந்தது. மகா கும்பாபிஷேகம் வழக்கமாக ஆனி மாதத்தில் தான் நடைபெறும். ஆனால் இம்முறை தை மாதம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்திருந்தோம். ஆனாலும் கும்பாபிஷேக விழா தொடர்ந்து நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் யாருமே உள்ளே செல்லக்கூடாது என்பது தான் ஆகம விதி. ஆனால் அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் என்பதால் அனுமதிக்கப்பட்டார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஆகம விதி மீறல் ஏற்பட்டுள்ளதால் கடவுளுக்கு மட்டும் ஒன்பது குண்ட பூசை செய்து பிராயசித்தமாக ஒரு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என நிர்வாகத்திடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். ஏதாவது தவறுதலாக நடந்தால் இது போல மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ள ஒன்று தான். விரைவில் எங்கள் சங்கத்தை கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். அடுத்த சில மாதங்கள் கோடை விடுமுறை என கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமாக நடத்தப்படும் ஆனி மாதத்தில் பிராயசித்தம் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கிறோம்," என்றார்.

"தொடரும் விதிமீறல்கள்" - பாஜக புகார்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "பழனி கோவிலில் மட்டுமில்லை கடந்த 60, 70 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ஆகம விதி மீறப்பட்டு தான் வருகிறது. கோவில்களை மேற்பார்வை செய்வது மட்டுமே அரசின் பணி என இந்து சமய அறநிலையத் துறை சட்டமே சொல்கிறது. கோவில் நிர்வாகத்தில் ஏதாவது முறைகேடு நடைபெற்றால் மட்டுமே அரசு தலையிட முடியும். ஆனால் கோவில் நிர்வாகத்தில் அரசு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. அரசு ஆலயத்திலிருந்து வெளியேறினால் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்," என்றார்.

விளக்கம் சொல்லும் சுகி சிவம்

ஆனால் இந்த கருத்தோடு மாறுபடுகிறார் எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் சுகி சிவம்.

சுகி சிவம்
 
படக்குறிப்பு,

சுகி சிவம்

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் புத்தக திருவிழாவில் உரையாற்றியபோது, `பழனி முருகன் கோவில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடைபெறவில்லை என்றும், ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். பழனி கோவில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் முருகன் பெயர் சித்தர்நாதன். தண்டாயுதத்தை ஊன்றி நிற்கும் தண்டபாணி. கோவணம் கட்டியிருக்கும் துறவி. அவர் ஒரு சித்தர். ஒரு சித்தருக்கு ஆகம பிரதிஷ்டை கிடையாது. தனி மனிதன் ஒரு கோவிலைக்கட்டி பிரதிஷ்டை செய்திருந்தால், ஆகமம் செல்லுபடியாகும். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்கு ஆகமம் செல்லுபடியாகாது` என்று பேசியிருந்தேன். அதே கருத்தை தான் நான் மீண்டும் சொல்கிறேன். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்கு ஆகம விதிகள் செல்லாது.

பழனி கோவிலுக்கு ஆகம விதி என்பது கிடையாது. முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரங்களால் வழிபாடு செய்யப்பட்டு கோவிலில் அவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆகம விதி மீறப்பட்டதாக கூறுபவர்கள் எந்த ஆகமத்தில் எந்த விதி மீறப்பட்டுள்ளது என்பதை கூற வேண்டும். கடந்த காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். தற்போது இந்த விவகாரம் கட்சி அரசியலாக்கப்பட்டுள்ளது. இதில் முறையாக விவாதம் நடந்தால் பதலளிக்கலாம். தனிநபர் பற்றி அல்லாமல் ஆகமம் சார்ந்து யாராவது கேள்விகள் எழுப்பினால் அதற்கு உரிய பதில் அளிக்கலாம்" என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-64568730

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.