Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – எதிர்க்கட்சி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு ஆனால் 13ஐ பற்றிய நிலைப்பாட்டில் குழப்பம் !

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – எதிர்க்கட்சி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி இல்லை என கூறுவதற்கு முன்னர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரஞ்சித் மத்தும பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.

திவாலான நாட்டில் மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து ஜனநாயகத்தையும் திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1324451

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

Published By: DIGITAL DESK 5

18 FEB, 2023 | 12:39 PM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளியிட தயாராகியுள்ளோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை (20) முன்னெடுக்கப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வரலாற்றில் முதன் முறையாக வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் பொலிஸ் பாதுகாப்பின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட வேண்டியவையாகும்.

முன்னைய எந்தவொரு தேர்தல்களிலும் அந்த இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்காக சுமார் 30 - 40 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இது தொடர்பில் நாம் பொலிஸ்மா அதிபரிடம் வினவிய போது தன்னிடம் இது தொடர்பான கோரிக்கைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை என்று பதிலளிக்கின்றார்.

பொலிஸ்மா அதிபர் அரசியலில் ஈடுபடாமல் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உகந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

அதே போன்று மக்களின் வாக்குரிமையை மீறுவதற்கு நடவடிக்கை எடுத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள தயாராக வேண்டாம் என்று திறைசேரி அதிகாரிகளிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேசிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான கூட்டு சதியை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதன் காரணமாகவே அனைத்திற்கும் வழக்கு தொடரும் ஜே.வி.பி. இம்முறை தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவில்லை. காரணம் தேர்தல் இடம்பெற்றால் தாம் எந்த நிலைமையில் இருக்கின்றோம் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்வர் என்ற வெட்கத்தினாலாகும்.

தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம் , எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும் நிதியில்லை என்று கூறும்.

இதனைக் காரணமாகக் காண்பித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள முயற்சிப்பார். அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்கு நாளை அனைவரையும் கொழும்பிற்கு வருமாறு அழைக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/148495

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இன்றையதினம் பாரிய எதிர்ப்பு போராட்டம்

Published By: DIGITAL DESK 5

22 FEB, 2023 | 09:02 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை,பெற்றோலியம்,துறைமுகம்,நீர்வழங்கள், வங்கிச் சேவை  உடப்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை பகல் 12 மணியளவில் கோட்டை புகையிரதம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தாவிட்டால் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். கண்ணீர் புகை பிரயோகத்தின் ஊடாக அரசாங்கம் போராட்டத்தை கலைக்கிறதே தவிர முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என துறைமுக ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கையினால் அனைத்து சேவைத்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மின்கட்டணம் அதிகரிப்பு ஊடாக மக்களின் வாழ்க்கை சுமை தற்போது பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நடுத்தர மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை விட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விசேட வரபிரசாதங்களை குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணலாம்,பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்களுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை.

புதிய வரி கொள்கையினால் தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.மூளைசாலிகளின் வெளியேற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே புதிய வரி கொள்கை,கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோலியம், மின்சாரம், வங்கிச்சேவை, மருத்துவ துறை, டெலிகொம், துறைமுகம், தபால்சேவை, ஆசிரிய சங்கம் உட்பட 40 இற்கும் அதிகமாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளும் போராட்டங்களை அரசாங்கம் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் கொண்டு கலைக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது,எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் மார்ச் மாதம் 01 ஆம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/148807

  • கருத்துக்கள உறவுகள்

புதியவரிக்கொள்கை, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Published By: T. SARANYA

22 FEB, 2023 | 03:23 PM
image

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கல், வங்கிச் சேவை  உட்பட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை கோட்டை புகையிரதம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

332321027_906692254089957_71000332900837

இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

332436152_930372418142204_72937714801453

https://www.virakesari.lk/article/148875

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி 40 தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Published By: T. SARANYA

22 FEB, 2023 | 06:35 PM
image

(எம்.மனோசித்ரா)

புதிய வரி சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கா விடின் நாடளாவிய ரீதியல் வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக எச்சரித்துள்ளன. அது வரையிலான காலப்பகுதியை கருப்பு கொடி எதிர்ப்பு வாரமாக அறிவித்தும் உள்ளன.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி திருத்த சட்டத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தி பெற்றோலியம் , துறைமுகம் , மின்சாரம் , நீர் வழங்கல் , வங்கி , வைத்தியத்துறை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து புதன்கிழமை (22) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

IMG_4097.jpg

நண்பகல் 12 மணியளவில் கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் குவிந்த பல்வேறு தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நூற்றுக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்களால் கோட்டை வீதியின் ஒரு பகுதியூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.

கருப்பு கொடிகளை ஏந்தியவாறும் , கருப்பு பட்டிகளை அணிந்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திற்கு ஒருவாரம் கால அவகாசம் வழங்குவதாகவும் , அதற்குள் தமக்கான தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் மார்ச் முதலாம் திகதி  நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் , அதன் பின்னர் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

IMG_4091.jpg

தொழிற்சங்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நிர்வாக சேவைகள் எவையும் முடக்கப்படவில்லை. வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஏனையவற்றிலும் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோட்டை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒன்று கூடி பேரணியாக சென்று வெவ்வேறு வீதிகள் ஊடாக ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்திடம் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தது.

IMG_4080.jpg

அதற்கமைய முற்பகல் 11 மணி முதல் மாலை 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம் , ஜனாதிபதி செயலகம் , நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் ஏனையோருக்கும் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கூறப்பட்ட பகுதிகளுக்கு பிரவேசிக்கக் கூடிய சகல வீதிகளிலும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு , நீர்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் ஓரிரு மணித்தியாலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமையால் அங்கு அமைதியற்ற நிலைமை எதுவும் ஏற்படவில்லை.

IMG_4067.jpg

https://www.virakesari.lk/article/148887

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.