Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிலிருக்கலாம்: அமெரிக்க வலுசக்தி முகவரகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிலிருக்கலாம்: அமெரிக்க வலுசக்தி முகவரகம் 

Published By: SETHU

27 FEB, 2023 | 03:54 PM
image

சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் என அமெரிக்காவின் வலுசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் அவ்ரில் டேனிக்கா ஹெய்ன்ஸின் அலுவலகத்தின் இரகசிய அறிக்கையொன்றில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  வோல் ஸ்ரீட்ட் ஜேர்னல் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எவ்வாறு வெளிவந்தது என்பது தீர்மானிக்கப்படவில்லை என அமெரிக்க வலுசக்தி திணைக்களம் முன்னர் கூறியிருந்தது.

இந்நிலையில், அந்த வைரஸ், ஆய்வுகூடத்திலிருந்தே பரவியிருக்கலாம் என மேற்படி திணைக்களம் குறைந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதாக  வோல் ஸ்ரீட் ஜேர்னல் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் ஆகியன தெரிவித்துள்ளன. 

புதிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தேசிய ஆய்வுகூடங்கள் வலையமைப்பொன்றை இந்த திணைக்களம் மேற்பார்வை செய்கிறது. உயிரியல் ஆராய்ச்சி ஆய்வுகூடங்களும் இவற்றில் அடங்கும் என்பதால் மேற்படி தீர்மானம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

எனினும், இவ்விடயத்தில் அமெரிக்காவின் புலனாய்வு முகவரகங்களுக்கு இடையில் வித்தியாசமான கருத்துகள் உள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று ஞாயிற்;றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கொவிட் இயற்கையாக பரவியிருக்கலாம் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு முகவரகங்களில் 4 முகவரகங்கள் நம்புகின்றன. ஏனைய இரு முகவரகங்களும் இது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என வோல் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. 

இவ்விடயத்தில் பல்வேறு பார்வைகள் உள்ளன என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலீவன் கூறியுள்ளார்.

இக்கேள்விக்கு புலனாய்வு சமூகம் இதுவரை தீர்க்கமான பதிலை தெரிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். 

எனினும் ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்பதை சீனா நிராகரித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிக் இன்று செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில், சீனா மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் நியமித்த கூட்டு நிபுணர்கள் குழுவின் தீர்மானித்தின்படி, இவ்வைரஸ் பரவுவதற்கு ஆய்வுகூட கசிவு இருப்பற்கான சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார்.

கொவிட் மூலம் தொடர்பான விசாரணைகளை தான் கைவிடவில்லை என இம்மாத மத்தியில் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியதுடன், இதை கண்டறிவதற்கு சாத்தியமான அனைத்தையும் தான் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தது.

https://www.virakesari.lk/article/149272

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்: எஃப்.பி.ஐ.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மேக்ஸ் மாட்சா
  • பதவி,பிபிசி
  • 30 நிமிடங்களுக்கு முன்னர்
கோவிட்-19 தோற்றம்- அமெரிக்கா முக்கிய கருத்து

பட மூலாதாரம்,REUTERS

சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

“கொரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என எஃப்.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது,” என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகையே பாதிப்பிற்குள்ளாகிய கொரோனா தொற்று எப்படி தோன்றிருக்கும் என்பது பற்றி எஃப்.பி.ஐ. தீர்க்கமான கருத்தை வெளிப்படையாக கூறுவது இதுவே முதன்முறை ஆகும்.

வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்ற குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது. இந்த குற்றச்சாட்டு அவதூறானது என்றும் அந்நாடு கூறியுள்ளது.

கொரோனாவின் தொடக்கம் தொடர்பான விவகாரத்தில் சீனா மிக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் கூறியிருந்த சில தினங்களிலேயே இத்தகைய கருத்தை கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று ஒளிபரப்பான அந்த பேட்டியில், “கொரோனா தொற்றுநோயின் மூலம் தொடர்பாக அடையாளம் காணும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் மழுங்கடிப்பதற்கும் சீனா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இது அனைவருக்கும் துரதிருஷ்டவசமானது” என்று கிரிஸ்டோபர் வ்ரே குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் முன்னணியில் இருக்கும் வைரஸ் ஆய்வகமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் (Wuhan Institute of Virology) இருந்து 40 நிமிட பயணத்தில் இந்த சந்தை அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வையும் இந்த ஆய்வகம் நடத்தியிருந்தது.

சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கக் கூடும் என்று எஃப்.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பிற அரசு முகமை நிறுவனங்கள் இதில் இருந்து மாறுபடுகின்றன.

கோவிட்-19 தோற்றம்- அமெரிக்கா முக்கிய கருத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க எரிசக்தி துறை "குறைந்த நம்பிக்கையுடன்" மதிப்பிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன. வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்று இந்நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

இதேபோல், கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பேசுகையில், “என்ன நடந்துள்ளது என்பது தொடர்பாக அமெரிக்காவிடம் இன்னும் தெளிவான ஒருமித்த கருத்து இல்லை” என்று கூறியிருந்தார்.

“நாம் இன்னும் அந்த அளவுக்கு செல்லவில்லை. அமெரிக்க மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் கூற எங்களிடம் எதாவது இருந்தால், நிச்சயமாக அதனை செய்வோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

2021 அக்டோபரில் அமெரிக்காவின் உயர்மட்ட உளவு அதிகாரியால் வெளியிடப்பட்ட அறிக்கையில், நான்கு அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது அது தொடர்பான வைரஸால் கொரோனா உருவானது என்று "குறைந்த நம்பிக்கையுடன்" மதிப்பிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலங்களில், ஆய்வகத்தில் இருந்துதான் இந்த தொற்று பரவியது என்பது சதி கோட்பாடு என்று கூறி மறுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் பலரும் மறுத்தனர்.

ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா தொற்று கசிந்திருக்கும் என்ற கருத்து மிகவும் சாத்தியம் இல்லாதது என்று உலக சுகாதார அமைப்பின் விசாரணையிலும் கூறப்பட்டது. எனினும் இந்த விசாரணை தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, புதிய விசாரணைக்கு உத்தரவிட்ட அமைப்பின் இயக்குநர் ஜெனரல், “அனைத்து ஊகங்களும் வெளிப்படையாக உள்ளன. கூடுதலான ஆய்வு தேவை” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் இதுவரை 75 கோடியே 72 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 68 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் உயிர் இழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv2pzz9k25ro

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தோற்றம்… தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

13-3.jpg

உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. எனினும், அதற்கு முன்பே, சில ஐரோப்பிய நாடுகளில் கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரசின் இருப்பு கண்டறியப்பட்டது என கூறப்பட்டது. எனினும், அந்த தகவல்கள் பரவலாக வெளிவராத நிலையில், பாதிப்புகளும் காணப்படாத சூழல் இருந்தது. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் சீனாவில், தொற்று கண்டறியப்பட்ட தருணத்தில் பல அலைகளாக பரவ தொடங்கி நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது பல தொடர் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. உலக நாடுகளை 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் பல நாடுகளில் இன்னும் குறையாமல் உள்ளது. அதன் நீண்டகால தாக்கம் மனிதர்களிடம் தொடர்ந்து காணப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. தரை, வான், ரெயில் போக்குவரத்து முடக்கத்தினால், பொருளாதார சரிவை நாடுகள் சந்தித்தன. லட்சக்கணக்கான மனித உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானோருக்கு கடுமையான நீண்டகால பாதிப்புகளையும் ஏற்படுத்தி சென்றது.

ஒருபுறம், சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த வைரசானது தோற்றுவிக்கப்பட்டு உள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின. அதிலும், அமெரிக்காவின் எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, சமீபத்தில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் பற்றி எங்களது அமைப்பு நடத்திய புலனாய்வில், அது உகான் நகரில் உள்ள ஆற்றல்மிக்க ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்க கூடும் என கூறினார்.

இது எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரசாரம் என கூறி சீனா அந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, கொரோனா வைரசின் தோற்றம் பற்றி தங்களுக்கு என்ன விவரங்கள் தெரியுமோ, அவற்றை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்திடம் பகிர்ந்து கொள்வது அவசியம் ஆகிறது என டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியுள்ளார். நாம் பழி போடும் விசயங்களை விட்டு, விட்டு இந்த பெருந்தொற்று எப்படி தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதனால், வருங்காலத்தில் ஏற்பட கூடிய இதுபோன்ற நோய் தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுகளை தடுக்க முடிவதுடன், நாம் அதற்கு தயாராகவும், அவற்றை எதிர்கொள்ளவும் முடியும் என கூறியுள்ளார்.

கொரோனா வைரசானது எப்படி வந்தது? மற்றும் மனிதர்களிடையே எப்படி பரவ தொடங்கியது? என்பது பற்றிய அறியப்படாத விசயங்களை அறிந்து கொள்வது, வருங்கால பெருந்தொற்றுகளை தவிர்ப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். சமீபத்தில் சீனாவின் உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றின் வழியே, ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளேன். ஏனெனில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது? என்பது பற்றிய தகவலில் வெளிப்படை தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது என கேட்டு கொண்டேன் என்று கூறினார். சீன தலைவர்கள் பலரிடம் இதுபற்றி எழுத்து வழியேயும், பேசியும் உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கேட்டு கொள்கிறோம். தேவையான விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு, அதற்கான முடிவுகளை பகிர வேண்டும் என டெட்ராஸ் கூறியுள்ளார. அதுவரை, இந்த வைரசின் தோற்றம் பற்றிய யூகங்கள் அடங்கிய அனைத்து கோப்புகளும் எங்களது முன்னால் மேஜையில் கிடப்பிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விசயம் அரசியலாக்கப்படுவது, அறிவியல் பணியை கடினப்படுத்துவதுடன், உலக பாதுகாப்பையும் குறைக்கும் என அவர் கூறியுள்ளார்.

எனினும், அமெரிக்காவில் உள்ள வேறு சில நுண்ணறிவு சமூகத்தினர், இயற்கையாகவே இந்த வைரசானது வெளிப்பட்டு உள்ளது என்றும் நம்புகின்றனர். இதேபோன்று, உலக சுகாதார அமைப்பின் தொற்றியியலாளர் மற்றும் தொழில் நுட்ப பிரிவின் தலைவரான மரியா வான் கெர்கோவே கூறும்போது, கூடுதல் விவரங்களை பெற ஜெனீவா நகருக்கு நான் சென்று உள்ளேன். இதுவரை, அமெரிக்காவின் அறிக்கைகள் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்ற விவரங்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். விவரங்கள் பகிரப்பட வேண்டும் என்பது தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அது அறிவியல் ஆய்வை முன்னெடுத்து செல்ல உதவும் என அவர் கூறியுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=239943

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பிறந்த இடம் சீன ஆய்வகமா? சந்தையா? அமெரிக்க நிறுவனங்கள் சொல்வதில் என்ன சர்ச்சை?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜான் சூட்வொர்த்
  • பதவி,வட அமெரிக்க செய்தியாளர்
  • இருந்துநியூயார்க்
  • 4 மார்ச் 2023, 15:20 GMT
    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்
கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா பேரிடர் எங்கே எப்படி தொடங்கியது என்பது குறித்து இரு வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யும் தற்போது இது தொடர்பான விவாதத்தில் சேர்ந்து கொள்ள, அரசியல் மற்றும் பிளவுகளின் பின்னணியில் உண்மைக்கான தேடல் அப்படியே விடப்பட்டுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடம் தொடர்பாக தற்போது நடக்கும் வேறுபாடுகளை வளர்க்கும், நச்சுத்தன்மை வாய்ந்த விவாதங்கள் அறிவியல் உலகில் நடப்பது அரிது.

பிபிசி பாட்காஸ்ட் சேவைக்கான தேடலில் ஈடுபட்டிருந்த போது, கொரோனா தோற்றம் குறித்த இருவேறுபட்ட சாத்தியங்கள் குறித்த வைராலஜி நிபுணர்களின் நோக்கம் மற்றும் தொழில் நேர்மை குறித்து சக நிபுணர்களே கேள்வி எழுப்பியதை என்னால் கேட்க முடிந்தது.

வூஹான் சந்தையில் இருந்து முதல் மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவியது அல்லது சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வெளிவந்தது ஆகியவையே அந்த இருவேறு சாத்தியங்கள்.

வூஹான் ஆய்வாளர்களின் பணி அபாயங்கள் குறித்த கேள்விகளுக்கு, 'நான் அந்த பரிசோதனைகளை செய்ய விரும்பியிருக்க மாட்டேன்' என்று வைராலஜி நிபுணர் ஒருவர் பதில் அளித்தார்.

தொழில்முறை உறவுகள் சேதமடைந்துவிட்டன; நட்புகள் சிதைந்துவிட்டன.

'தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. ஆனால், கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகக் கசிவு என்பது போன்ற முட்டாள்தனமான விவாதங்களுக்கு முகம் கொடுக்க நான் தயாரில்லை', என்று பாட்காஸ்ட் தொடருக்காக அணுகிய போது ஒரு வைராலஜி வல்லுநர் என்னிடம் குறிப்பிட்டார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும், அரசாங்க அமைச்சகங்களும் கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட போராடின என்பதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை.

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்தே வந்தது என்று அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சகம் தனது உளவுத்துறை மதிப்பீடுகளை மாற்றியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன. இதன் மூலம் கொரோனா வைரஸ், ஆய்வகத்தில் இருந்தே வந்தது என்பதை ஆதரிக்கும் அமைப்புகள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் ஒரு ஆய்வகத்தில் தொடங்கியிருக்க சாத்தியம் உண்டு என்று எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே பொதுவெளியில் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 4 புலனாய்வு அமைப்புகளைப் பொருத்தவரை, கொரோனா வைரஸ் இயற்கையாகவே தோன்றியிருக்கலாம் என்று நம்புவதாக கூறப்படுகிறது. மேலும் 2 அமைப்புகள் இன்னும் முடிவு செய்யவில்லை.

கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உளவுத்துறை மதிப்பீடுகள் அனைத்துமே பொதுவெளியில் வெளியாகாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. மாறுபட்ட புலனாய்வு அமைப்புகள் ஒவ்வொன்றும் அமெரிக்காவில் "உளவுத்துறை சமூகம்" என்று அழைக்கப்படுவதன் ஒரு அங்கமாகும். அவை ஒவ்வொன்றும் மனித நுண்ணறிவு முதல் அரசு அறிவியலாளர்கள் வரை வெவ்வேறு நிபுணத்துவம் மற்றும் தகவல் ஆதாரங்களை திரட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, எரிசக்தி துறையின் உளவுத்துறை மற்றும் எதிர் நுண்ணறிவு அலுவலகம், அத்துறையால் கண்காணிக்கப்படும் 17 தேசிய ஆய்வகங்களில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களைப் பெறலாம்.

ஏஜென்சிகளின் பணி ஒன்றுடன் ஒன்று சேரலாம். ஆனால் கொரோனா தோற்றம் குறித்த கேள்விக்கு அவர்கள் எவ்வளவு ஒத்துழைத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்ததாக அறியப்பட்ட வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் பணிபுரிந்த பல ஆராய்ச்சியாளர்கள் 2019-ம் ஆண்டு நவம்பரில் நோய்வாய்ப்பட்டதாக ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க அரசால் கூறப்பட்டது.

ஆனால் அதற்கான ஆதாரம் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த அறிகுறிகள் கோவிட்-19 மற்றும் பொதுவான பருவகால நோய்கள் இரண்டிற்கும் ஒத்துப்போவதாக அமெரிக்க அரசாங்கம் கூறியது. அமெரிக்க அரசு இதன் மூலம் உண்மையில் என்ன சொல்ல வருகிறது என்பதை யாரும் தன்னிச்சையாக மதிப்பிடுவது கடினம்.

ஆய்வகக் கசிவுக் கோட்பாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தொடர்பால், 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் சிலர் அதை தவறானதாகக் கருத வழிவகுத்தது. கொரோனா பேரிடரை அவரது நிர்வாகம் கையாண்டது தொடர்பான விமர்சனங்களை திசை திருப்புவதற்கான இனவெறி கருத்தாகவும் கூட பார்க்கப்பட்டது.

ஆனால் அறிவியல்பூர்வமான வாதங்களும் இருந்தன. சார்ஸ்-கோவி-2 இன் மரபணு அமைப்பை ஆய்வு செய்ததில், அது ஆய்வகத்திலிருந்து வந்திருக்க முடியாது என்பதை உறுதியாக நிரூபித்தது.

பின்னர், கோவிட்-19 முதலில் தோன்றிய வுஹான் சந்தையைச் சுற்றியுள்ள ஆரம்பகால நோயாளி தரவுகளின் பகுப்பாய்வு அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு, அந்த வைரஸ் இயற்கையாகவே தோன்றியது என்பதை நிரூபித்தது.

ட்ரம்பால் நியமிக்கப்பட்ட எஃப்.பி.ஐ. இயக்குநரின் கருத்துகள் வெளிவந்துள்ள தருணம் மிகவும் முக்கியமானது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடியரசுக் கட்சி ஆய்வகத்தில் கொரோனா கசிவு என்ற கோட்பாட்டை நோக்கி மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

மறுபுறம், முன்னாள் அதிபர் ட்ரம்புடன் ஆய்வகக் கசிவு கோட்பாடுகளுக்கு இருந்த தொடர்புகளை அதிபர் ஜோ பைடன் ஆட்சி விடுவித்துள்ளது.

அதனால்தான், ஆய்வகக் கசிவு கோட்பாடு மிக துரிதமாக நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று மற்ற விஞ்ஞானிகளும் பொது வெளியில் பேச முன்வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியரும், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகருமான லாரி கோஸ்டின், கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியிருக்கக் கூடும் என்ற கருத்தை ஆதரிப்பவர். ஆனாலும் கூட, ஆய்வகக் கசிவு கோட்பாட்டை திட்டவட்டமாக நிராகரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் நம்புகிறார். அவ்வாறு செய்ய முயற்சித்தது தவறு என்றும் அவர் நினைக்கிறார்.

"அதுபோன்ற பொது நலனை அறிவியல் புறம் தள்ளிவிடக் கூடாது," என்று என்னிடம் அவர் கூறினார். பல்வேறு பிரச்னைகளில் சதி கோட்பாடுகளை முன்வைத்துள்ள டிரம்ப், இந்த சொல்லாடலை கேள்வி கேட்பது சரியாக இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

"அதாவது, உங்களிடம் சதி கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவர், அந்த ஆய்வகத்தைப் பற்றிய தகவல்களை பெற விரும்புவதில் தவறா? இல்லையே" என்கிறார் லாரி கோஸ்டின்.

அமெரிக்க நாடாளுமன்றத்தால் புதிய தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சில நிபுணர்கள் நம்புகிறார்கள்.

வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியுடன் அமெரிக்க விஞ்ஞானிகள் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளனர். இதனால், அரசாங்க நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் காப்பகங்களில் பயனுள்ள தரவுகள் இன்னும் இருக்கலாம்.

கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையில், ஒரு சந்தை அல்லது ஆய்வகம் வழியாக - சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான அனைத்து பரிந்துரைகளையும் சீன அரசாங்கம் புறம் தள்ளுகிறது.

அந்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான எனது சொந்த முயற்சிகள், 2021-ம் ஆண்டில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சீன அதிகாரிகள் அச்சுறுத்தலின் கீழ் அந்நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வழிவகுத்தது.

"கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனாவை களங்கப்படுத்தினார்" மற்றும் "சர்வதேச சமூகத்திலிருந்து சீனாவிற்கு பகைமை வளர்க்கும் வகையில் செயல்பட்டார்" என்று என் மீது சீன அரசு ஊடகம் குற்றம் சாட்டியது.

வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இரண்டிற்கும் இடையிலான கசப்பு, கோபம் மற்றும் அரசியலில் கோவிட்-19 தோற்றம் பற்றிய கேள்வி மறைக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனா-19 தோற்றம் பற்றிய பதில்களைத் தேட சாத்தியமான ஒவ்வொரு கருவிகளையும் பயன்படுத்துமாறு 2021-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். ஆனாலும் கூட, அதனைக் கண்டுபிடிக்க அவர்கள் ஏன் இன்னும் சிரமப்படுகிறார்கள்?

https://www.bbc.com/tamil/articles/cjj6x152xw4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பிறந்த இடம் சீன ஆய்வகமா? சந்தையா? அமெரிக்க நிறுவனங்கள் சொல்வதில் என்ன சர்ச்சை?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜான் சூட்வொர்த்
  • பதவி,வட அமெரிக்க செய்தியாளர்
  • இருந்துநியூயார்க்
  • 4 மார்ச் 2023

வைரஸ் ஆய்வகங்களில் இருந்து எப்படி கசிகிறது? அமெரிக்க ஆய்வாளர்கள் சொல்லும் சில காரணங்கள்

Wuhan Institute of Virology

பட மூலாதாரம்,REUTERS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மூன்று வருடங்களுக்கு முன்பு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து வந்தது என்பது குறித்த விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் சமீபமாக கோவிட் 19, சீன அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஒரு ஆய்வகத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்ததையடுத்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

2018லிருந்து 2021ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநராக இருந்த ராபர்ட் ரெட்ஃபீல்ட், கோவிட் 19 ஆய்வகத்திலிருந்து வெளியாகியிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

இதே கருத்தை அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில், மத்திய புலனாய்வு முகமையான எஃப்பிஐ-ன் தலைவர் கிறிஸ்டோஃபர் வரேவும் தெரிவித்திருந்தார்,

“பெருந்தொற்று எங்கிருந்து உருவானது என்பதை நீண்ட காலமாக ஆராய்ந்து வருகிறோம். பெரும்பாலும் அது ஆய்வகத்திலிருந்து உருவாகி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

கொடிய வைரஸ் கசிவு

அம்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும் பல ஆராய்ச்சியாளர்கள், வைரஸ் ஆய்வகத்திலிருந்து வெளியானது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். வெவ்வேறு அமரிக்க முகமைகளும் வெவ்வேறு விதமான முடிவுகளை தெரிவிக்கின்றன.

சரி ஒரு ஆய்வகத்திலிருந்து வைரஸ் வருவது என்பது எத்தனை எளிதானது? இதற்கு முன்பு இது நடந்துள்ளதா?

ஆம். உயிரை கொள்ளும் வைரஸுகள் பல முக்கிய நகரங்களில் உள்ள ஆய்வகத்திலிருந்து தற்செயலாக வெளியாகியிருக்கிறது. அதில் பெரியம்மையை விட ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.

1977ஆம் ஆண்டு அது முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு முன்பாக 20ஆம் நூற்றாண்டுகளில் மட்டும் அது 30 கோடி பேரை கொன்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனவே பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ புகைப்படக் கலைஞராக இருந்த ஜெனெட் பார்க்கர் தனது 40 வயதில் 1978ஆம் ஆண்டு பெரியம்மையால் பாதிக்கப்பட்டபோது அது மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

“அது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய ஒரு நோயாக இருந்தது. பர்மிங்காமில் மட்டுமல்ல. அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனம் அது மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் குறித்து அச்சத்தில் மூழ்கின” என இந்த தொற்று காலத்தில் கிழக்கு பர்மிங்காம் மருத்துவமனையில் தொற்று நோய் மருத்துவராக பணியாற்றிய அலாஸ்டயர் கெட்டிஸ் தெரிவித்தார்.

பெரியம்மை வைரஸ் தொற்று ஏற்பட்ட மூன்றில் ஒருவரை கொன்றுக் கொண்டிருந்தது. அதுகுறித்து பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் பார்க்கருக்கு எவ்வாறு சின்னம்மை தொற்று ஏற்பட்டது என்பது விடை தெரியாத ஒரு கேள்வியாகவே உள்ளது.

இது குறித்த அரசு ஆய்வு ஒன்று மூன்று வழிகளில் வைரஸ் பரவியிருக்கலாம் என்று தெரிவித்தது. காற்றின் மூலம், தனிநபர் தொடர்பில் அல்லது தொற்று கிருமிகள் கொண்ட உபகரணத்தின் மூலம் ஆகிய வழிகளில் பரவியிருக்கலாம்.

பார்க்கர் தனிமைப்படுத்தப்பட்டார். இருப்பினும் பார்க்கரின் தாய்க்கு இந்த தொற்று ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பிறகு பார்க்கரின் தாய் பிழைத்துக் கொண்டார். ஆனால் பார்க்கரை காப்பாற்ற இயலவில்லை. ஆனால் இந்த தொற்று மேலும் இரு உயர்களை காவு வாங்கியது.

தனிமையில் வைக்கப்பட்டிருந்த பார்க்கரின் 77 வயது தந்தை, மகள் இறந்த துக்கத்தால் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் பர்மிங்காமின் சின்னம்மை ஆய்வகத்தின் தலைவர் ஹென்ரி பெட்சன் தற்கொலை செய்து கொண்டார்

அதிகபட்ச பாதுகாப்பு

The Centers for Disease Control in Atlanta, Georgia

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் எந்த ஆய்வகத்தில் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வைரஸ் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை குறைத்து கொண்டனர்.

1979ஆம் ஆண்டு உருவான உலக சுகாதார அமைப்பின் ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் அட்லான்டாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள வெக்டர் ஆய்வகம், இவை இரண்டு மட்டுமே உலகின் மிக பாதுகாப்பான ஆய்வகங்களாகக் கருதப்பட்டன. ஆனால் அவற்றிலும் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.

2014ஆம் ஆண்டு நோய் கட்டுப்பாட்டு மையத்தின் பணியாளர்கள் ஆந்திராக்ஸ் வைரஸை மாதிரியை முறையாக செயலிழக்க தவறிவிட்டனர். இதனால் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

2019ஆம் ஆண்டு வெக்டர் ஆய்வகத்தில் ஏற்பட்ட கேஸ் வெடிப்பு நிகழ்வால் ஒரு ஜன்னல் வெளியே அடித்துச் சென்றது. இதில் ஒருவருக்கு தீவிர தீக்காயம் ஏற்பட்டது. இருப்பினும் இந்த விபத்தால் எந்த வைரஸ் கசிவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆபத்தான பிழைகள்

இம்மாதிரியாக அதி உயர் பாதுகாப்பு ஆய்வகங்களில் ஏற்பட்ட சம்பவங்களால் ஊழியர்கள் மற்றும் அருகாமையில் உள்ள மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஃபிரான்ஸில் இப்படியான ஒரு ஆய்வகத்தில் விஞ்ஞானி ஒருவருக்கு உபகரணம் ஒன்றால் வெட்டுக் காயம் ஏற்பட்டு 10 வருடங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். எமிலி ஜாவுமெய்ன் தனது 33 வயதில் 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் ப்ரியன்ஸ் என்ற தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டார். இது விலங்குகளில் பொவைன் ஸ்பாங்கிஃபார்ம் என்சிபலோபதி (Bovine Spongiform Encephalopathy) என்னும் நோயையும், மனிதர்களுக்கு க்ரெஸ்ஃபெல்ட் – ஜாக்கோப் (Creutzfeldt-Jakob) நோயையும் ஏற்படுத்துகிறது. அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டார் என்று தெரிந்தும், இந்த நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தும் விதமாக எந்த ஒரு தடுப்பு மருந்தும் கண்டறியப்படவில்லை.

CJD மூளையை பாதிக்கும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள லான்சூ ஆய்வுக் கூடத்தில் ஏற்பட்ட தவற்றால் 10 ஆயிரம் பேர் வரை ஆபத்தான நோய்க்கிருமி ஒன்றால் பாதிக்கப்பட்டனர்

ப்ரூசெல்லா பாக்டீரியா தொற்றிலிருந்து விலங்குகளைக் காப்பாற்றும் தடுப்பு மருந்தை உருவாக்கும் தலத்தில் காலாவதியான கிருமிநாசினிகள் தேவையற்ற வாயுவை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

இது அருகாமையில் உள்ள ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் பரவியது. அதன்பின் நகரில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கும் பரவியது. ஆனால் இதனால் இறப்பு ஏற்படுவது என்பது அரிதானது.

ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. பலருக்கு இழப்பீடுகளும் வழங்கப்பட்டன. இதைத் தவிர வேறு சில கசிவுகளால் பணியாளர்கள் மற்றும் அருகாமை குடியிருப்புவாசிகள் காயமடைந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

விடை தெரியாத கசிவுகள்

அதேபோல ஆய்வகத்திலிருந்து அந்த வைரஸ் எப்படி வந்தது என்றே கண்டுபிடிக்க முடியாத தருணங்களும் உள்ளன. 2021ஆம் ஆண்டு தைவானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் வைரஸ் குறித்துப் பணிபுரிந்தபோது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது.

அதன்பிறகு நடைபெற்ற ஆய்வில் அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆய்வகத்திலிருந்த வைரஸை சுவாசித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக கையாளாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது

எனவே ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிவு என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் கோவிட் பெருந்தொற்றுக்கு இதுதான் காரணமா அல்லது இயல்பாக விலங்கிலிருந்து பரவியதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/crgzg2wzkxro

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.