Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைபேசியின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன் – கைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைபேசியின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன் – கைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி

world-news.jpg

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயோர்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை.

செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது.

அதுமட்டுமின்றி தகவல் தொடர்பு என்ற எல்லையை தாண்டி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் கலை களஞ்சியமாகவும் மாறிவிட்டது.

தொலைதொடர்புக்காக மட்டுமே தொடங்கப்பட்ட செல்போன் இன்று உலக தகவல்களையும் அறிந்து கொள்ளும் சாதனமாக மாறிபோனது.

அதோடு செல்போன் மூலம் பல தீய செயல்களும் நடக்கிறது. ஆபாச படங்களை பிறருக்கு தெரியாமல் பதிவு செய்வது, உரையாடல்களை பதிவு செய்வது, அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வருவது போன்றவையும் நடக்கிறது.

செல்போன் கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு இப்போது 94 வயதாகிறது.

செல்போனின் இப்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது,
செல்போனின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும், இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.

https://thinakkural.lk/article/242621

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைப்பேசிக்கு வயது 50 ! கைப்பேசியின் தந்தை சொல்வது என்ன?

Published By: DIGITAL DESK 5

04 APR, 2023 | 02:44 PM
image

குமார்சுகுணா

“யாரோ ஒருவர் தெருவைக் கடந்து செல்போனைப் பார்ப்பதைக் கண்டு நான் நொறுங்கிப் போகிறேன். அவர்கள் மனதைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறார்கள்"; மார்டின் கூப்பர்

இன்றைய காலகட்டத்தில் மனிதனிடம் இருந்து பிரிக்க முழயாத ஒன்றாக மாறிவிட்ட சாதனம் கைப்பேசியாகும். மூச்சை கூட பிரித்து விடலாம் ஆனால் செல்போன் எனும் கைப்பேசியை ஒருவரிடம் இருந்து பிரிப்பது என்பது கடினம். அது மட்டும் அல்ல இன்று அத்தியாவசிய தேவைகளில் ஒன்று போல கைப்பேசி மாறிவிட்டது. இந்த அற்புதமிக்க அறிவியல்; சாதனத்துக்கு தற்போது வயது 50.

ஆம், 50 வருடங்களுக்கு முன்னர்தான் முதலாவது கைப்பேசி உலகில் வடிவமைக்கபட்டது. இது இன்றைய கால ஸ்மார்ட் போன்களாக இருக்கவில்லை. ஆனால் இவற்றுக்கு எல்லாம் முன்னோடியாக அறிவியலின் அற்புதமாக பார்க்கப்பட்டது. இந்த செல்போனின் தந்தை யார் என்றால் மார்டின் கூப்பர்.

இவர் ஓர் அமெரிக்கப் பொறியியலாளர் ஆவார். இவர் கம்பியற்ற தகவல் தொடர்புத்துறையில் ஒரு முன்னோடியாகவும் தொலைநோக்குத் தன்மையுடனும் இருக்கிறார். இத்துறையில் பதினொரு காப்புரிமைகள் இருப்பதால், அவர் ரேடியோ ஸ்பெக்ட்ரம் நிர்வாகத்தில் ஒரு கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்படுகிறார். 

வுப்பர் மோட்டோரோலா நிறுவனத்தில் 1970 களில் பணியாற்றியபோது,; முதல் கையடக்க செல்லிடத் தொலைபேசியை 1973 இல் கண்டுபிடித்து 1983 ஆம் ஆண்டில் சந்தைக்கு கொண்டு வந்தார். இவர் செல்லிடத் தொலைபேசியின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

மேலும்  ஒரு கையடக்க் தொலைபேசி அழைப்பை பொதுமக்கள் முன்னிலையில் ஏற்படுத்திய வரலாற்றில் முதல் நபராகவும் இவர் கருதப்படுகிறார்.

1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் திகதி அன்று தான் வடிவமைத்த உலகின் முதல் கைபேசியை கொண்டு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருந்தார்; மார்ட்டின் கூப்பர். அதன் பிறகு சுமார் 10 ஆண்டு காலம் தனது குழுவினருடன் இணைந்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார். அது சந்தையிலும் விற்பனைக்கு வந்தது. அப்படி தொடங்கிய செல்போனின் பயணம் இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு உயிர் போல மாறிவிட்டது. 

சிறு குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினரும் கைபேசி பாவனையாளர்களாக உள்ளனர்.  

‘ஹலோ’ சொல்வதில் ஆரம்பித்து குறுஞ்செய்தி அனுப்ப, காணொளி வடிவிலான உரையாடல் மேற்கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, இணையத்தில் சினமா போக்குவரத்து உள்ளிட்ட டிக்கெட்களை முன்பதிவு செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க, படம் பிடிக்க என ஸ்மார்ட்போன்களின்  பயன்கள் நீண்டு கொண்டே போகிறது. 

அமெரிக்க தொலைபேசி துறையில் 1877 முதல் பெல் சிஸ்டம் எனும் நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் மொபைல் போன் குறித்து அந்த நிறுவன பொறியியலாளர்கள் பேச தொடங்கியுள்ளனர். அதன்படி கார்களில் தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் மோட்டோரோலா மில்லியன் கணக்கான டொலர்களை செல்போன் வடிவமைப்பு பணிக்காக முதலீடு செய்தது. கூப்பர் அந்த நிறுவனத்துடன் அப்போது இருந்துள்ளார்.

 1972-இன் இறுதியில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் ஒரு போனை உருவாக்க அவர் விரும்பியுள்ளார். இதற்காக துறைசார் நிபுணரகள் நால்வருடன் மூன்று மாத காலம் ஓயாமல் பணி செய்துள்ளார். அதன் மூலம் செல்போனை வடிவமைத்துள்ளார். அப்போது வடிவமைக்கப்பட்ட போன் சுமார் 1 கிலோ எடையை கொண்டிருந்துள்ளது. 25 நிமிடங்கள் மட்டுமே பேட்டரி சார்ஜ் சேமிப்பு கொண்ட அந்த போனை பிடித்து பேசுவது கடினம் என அவரே தெரிவித்துள்ளார். மேலும், முதல் முறையாக சந்தையில் விற்பனை தொடங்கிய போது அதன் விலை சுமார் 5,000 டொலர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் செல்போன் வடிவமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் அண்மையில்;  கூப்பர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது,

“இப்போது மனிதனின் மற்றொரு நீட்சியாக மாறியுள்ளது செல்போன். அதனால் எளிதாக பல விடயங்களை செய்ய முடியும். நாம் இப்போது அதன் தொடக்கப் புள்ளியில் தான் இருக்கிறோம். அது குறித்த புரிதலை இப்போதுதான் பெற தொடங்கி உள்ளோம். எதிர்வரும் நாட்களில் கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவில் சில புரட்சிகளை இந்த சாதனம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் புரட்சி எப்படி இருக்கும் என்றால் இப்போது ஸ்மார்ட் வாட்ச் நமது இதயத் துடிப்பை எப்படி மானிட்டர் செய்கிறதோ அது போல இருக்கும். முன்கூட்டியே சில நோய்கள் குறித்த அலர்டை போன்கள் கொடுக்கலாம். நான் ரொம்ப ஓவராக பில்ட்-அப் செய்து மிகைப்படுத்தி சொல்வது போல தெரியலாம். ஆனால், அடுத்த ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்குள் இது நிச்சயம் நடக்கும்.

இன்றைய உலகின் பெரும்பாலான மக்கள் மொபைல் போனை பயன்படுத்தி வருகிறார்கள். அதன் வழியே எங்கள் கனவின் ஒரு பகுதி நிஜமாகி உள்ளது. உலகில் தொலைக்காட்சி அறிமுகமான போது வெவ்வேறு விதமான பேச்சுகள் இருந்தன. ஆனால், தலைக்காட்சி பார்ப்பதில் ஏதோ ஆதாயம் உள்ளது என அறிந்து கொள்ளப்பட்டது.

அதுபோல செல்போன் பயன்பாட்டில் இப்போது நாம் புத்தியை இழந்து நிற்கும் கட்டத்தில் இருக்கிறோம்.

 யாரோ ஒருவர் தெருவைக் கடந்து செல்போனைப் பார்ப்பதைக் கண்டு நான் நொறுங்கிப் போகிறேன். அவர்கள் மனதைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறார்கள். இது நீண்ட நாட்கள் நீடிக்காது. ஒவ்வொரு தலைமுறையும் ஸ்மார்ட் ஆகும். அதன் வழியே செல்போனை எப்படி திறம்பட பயன்படுத்துவது என அறிந்து கொள்வார்கள்” என வேதனையோடு தெரிவித்துள்ளார்.

அவர் சொல்வது போல இன்னும் பல்வேறு பயன்களை கைப்பேசி எமக்கு கொண்டுவரலாம்.ஆனால் நமது புத்தியை நாம் கைப்பேசியில் தொலைத்துவிடாமல் அளவோடு பயன்படுத்தி பயன்பெறுவோம். 

image__13_.png

image__11_.png

image__10_.png

image__9_.png

image__8_.png

image__4_.png

image__4_.png

image__6_.png

image__1_.png

image__2_.png

image__10_.png

image__6_.png

https://www.virakesari.lk/article/152108

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.