Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

Published By: T. SARANYA

14 MAR, 2023 | 03:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

https://www.virakesari.lk/article/150500

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் ஆதரவளிக்க முடியாது - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: VISHNU

19 JUN, 2023 | 01:05 PM
image
 

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. எனவே எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் உள்ளடக்கப்படாவிட்டால் குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவிய போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்களை அரசாங்கம் நீக்கியுள்ளது. எனவே தற்போது காணப்படும் சட்டமூலத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

எமது நாட்டிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் , சொத்துக்கள் என்பவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அதே போன்று இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

எனினும் இது தொடர்பான எந்தவொரு ஏற்பாடுகளும் இந்த சட்ட மூலத்தில் இல்லை. எமது நிலைப்பாட்டை நாம் அறிவித்திருக்கின்றோம்.

இந்த சட்ட மூலம் முழுமையானதல்ல. எனவே தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி அதனை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை எனில் இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்றார்.

https://www.virakesari.lk/article/158047

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2023 at 06:20, ஏராளன் said:

அதற்கமைய, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சட்ட மூலங்களை வர்த்தமானியில் வெளியிடுவதால் எதுவுமே மாறப் போவதில்லை.

மந்திரிகளில் இருந்து சாதாரண பியோன்வரை ஊறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எல்லாவற்றிட்கும் போதிய அளவு சட்ட்ங்கள் இருக்கின்றது. ஆனால் இப்படியான சட்ட்டமூலங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை.

இருந்தாலும் இந்த சடடன்மூலம் மிகவும் காத்திரமானதொன்று. நடைமுறையில் எப்படி இருக்கப்போகின்றதோ தெரியவில்லை.

நிச்சயமாக தமிழனுக்கு எதிராகவென்றால் எந்த சடடமும் தடையின்றி பாயும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இறந்த காலத்தை புறக்கணித்து எதிர்காலத்தை மையப்படுத்தியுள்ளது - பீரிஸ் குற்றச்சாட்டு

Published By: VISHNU

21 JUN, 2023 | 10:12 PM
image
 

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஊழல் செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குவது தொடர்பில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இறந்தகாலத்தை புறக்கணித்து எதிர்காலத்தை மையப்படுத்தியதாக சட்டமூலம் காணப்படுகிறது.

சட்டமூலத்தில் ஒருசில விடயங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) ஊழல்  எதிர்ப்பு சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

ஊழல் எதிர்ப்பு சட்டம் காலத்துக்கு பொருத்தமானது. நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.வெளிநாட்டு முதலீடுகளை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கும் புரையோடிப்போயுள்ள ஊழல் ஒரு தடையாக உள்ளது.

ஊழல் ஒழிப்பு என்ற நோக்கம் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட முடியாது.சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.அவற்றை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் திருத்தங்களை முன்வைக்கும் வாய்ப்பை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த சட்டமூலத்தில் அடிப்படை பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவில்லை.மோசடி செய்யப்பட்ட அரச நிதி வெளிநாடுகளில் முதலீடு அல்லது வைப்பிலிடப்பட்டுள்ளன.ஆகவே இந்த நிதியை அரசுடமையாக்க உரிய வழிமுறை சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரச நிதியை மீண்டும் அரசுமடையாக்க சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சட்டமூலத்தில் தெளிவான சுட்டிக்காட்டல்கள் ஏதும் கிடையாது.இறந்தகாலம் குறித்து கவனம் கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தை மையப்படுத்தியதாக சட்டமூலம் காணப்படுகிறது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் 325000 பேர் தமது சொத்துக்களை பகிரங்கப்படுத்த நேரிடும்.இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது சந்தேகத்துக்குரியது.அரச அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அதாவது உச்சபட்சமாக அரச அதிகாரத்தை பயன்படுத்தும் தரப்பினரது வருடாந்த சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தும் வழிமுறை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் காணப்படுகின்றன.

எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சட்டங்களை இயற்றுவதால் மாத்திரம் இலக்கை அடைய முடியாது.சட்டங்கள் காகிதத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என்று மக்கள் கருதுவது உண்மையாக உள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊழல் பெறும் நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவதுடன்,ஊழல் தொடர்பில் ஒரு நபர் வழங்கும் தகவல் பொய் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.பொய்யான சாட்சியம் வழங்குவதற்கு எதிராக தண்டனை சட்ட கோவையில் தண்டனை வழங்குவத தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் வழங்கும் நபருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் போது தகவல் வழங்க யார் முன்வருவார்.ஆகவே தகவல் வழங்குபவர் தொடர்பில் சட்டமூலத்தில் விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.ஆகவே அது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/158242

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்; 19 ஆம்  திகதி குழு நிலையில் திருத்தம் - சபாநாயகர்

Published By: VISHNU

06 JUL, 2023 | 06:03 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டன. ஆகவே சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தொடர்ந்து பிற்போடுவதற்கான காரணத்தை நான் அறியவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் குறிப்பிட்டதை தொடர்ந்து சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற சபை முதல்வர் இணக்கம் தெரிவித்தார்.

இதற்கமைய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது, திருத்தங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் குழுநிலை வேளையின் போது மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் இறுதி பகுதியில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில்  முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது திருத்த யோசனையில் சட்ட வரைபின் 28 பக்கங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் அதே போல் இரண்டாவது திருத்த யோசனையிலும் பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஆகவே எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது துறைசார் மேற்பார்வை குழுவின் யோசனைகளுடன் குழுநிலை வேளை திருத்தத்துடன்  சட்டமூலத்தை  நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

சபை முதல்வரின் உரைக்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷமன் கிரியெல்ல உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விவாதித்து தற்போது வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தொடர்ந்து இழுபறி நிலைக்கு அரசாங்கம் செல்கிறது.

ஆகவே வியாழக்கிழமை (06) உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றி  அதன் பின்னர் திருத்தம் செய்யலாம் என வலியுறுத்தினார்.

இதன்போது உரையாற்றிய சபாநாயகர் சபை முதல்வர் முன்வைத்த யோசனைக்கு சபை இணக்கமா என்று வினவினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கபுடாவின் யோசனைக்கு அமைய நேற்று முன்தினம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டது. தற்போது ஊழல் எதிர்ப்பு சட்டமூலமும்  கபுடாவின் யோசனைக்கு அமைய பிற்போடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை ஒட்டுமொத்த மக்களும் அவதானித்துக் கொண்டுள்ளார்கள் என்றார்.

இதன்போது  எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதியமைச்சர் அமைதியாக உள்ளார். ஆகவே திருத்தம் தொடர்பில் அவர் குறிப்பிட வேண்டும்.

இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.. சபை முதல்வர் முன்வைத்த யோசனைக்கு சபை இணக்கமா என வினவினார். ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இணக்கம் என்றார்கள்.

இதன்போது எழுந்து  உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ  ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்காக கடந்த 10 மாத காலமாக பாடுப்பட்டுள்ளேன். பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே தொடர்ந்து சட்டமூலத்தை நிறைவேற்றாமல்  இருப்பதற்கான காரணத்தை நான் அறியவில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நீதியமைச்சரின் கருத்து பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது. கபுடாவின் யோசனைகளா ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு தடையாக உள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (06)  நிறைவேற்றப்பட்டு அதன் திருத்தங்களை எதிர்வரும் 19 ஆம் திகதி குழுநிலையில் மேற்கொள்வோம் என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

https://www.virakesari.lk/article/159388

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்; 19 ஆம்  திகதி குழு நிலையில் திருத்தம் - சபாநாயகர்

ஒரு கட்சியில் வேட்பாளராக போட்டியிட எத்தனையோ லட்சம் கட்சிக்கு கொடுத்தே நியமனம் கிடைக்கிறது.

வெற்றி தோல்வி வேறு.

வென்றவர் செலவு செய்த பணத்தை எப்படி மீள பெறுவது?

அடுத்த தேர்தலுக்கும் பணம் ஒதுக்க வேண்டாமோ?

நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று தெரிந்தும் ஐ எம் எவ்வின் நிர்ப்பந்தம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்

Published By: VISHNU

19 JUL, 2023 | 09:07 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பில் எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான திருத்தங்கள் நீதி அமைச்சரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதனால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு  193 திருத்தங்களுடன்  வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம்  வாசிப்பு நீதி அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்ஷ்வினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.  

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை  சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிகள், நியமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ்வினால் அறிவிக்கப்பட்ட  ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஏப்ரல்   6 ஆம் திகதி   வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

நாட்டில் அரச மற்றும் தனியார் பிரிவுகள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஊடாக இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) உட்பட பல தரப்பினர் சட்டமூலத்தின் உட்பிரிவுகளுக்குள் உள்ள முக்கிய திருத்தங்களை முன்னிலைப்படுத்தியதால், இந்தச் சட்டமூலம் தொடர்பில்  சர்ச்சைகளும்   எதிர்ப்புக்களும்  ஏற்பட்டன. இது தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்த ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, ஊழல் தடுப்பு மசோதாவின் உட்பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட மொத்தம் 37 ஷரத்துகளை சவாலுக்குட்படுத்தியது.  

சட்ட மூலத்தின் சில ஷரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும், எனவே திருத்தங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது,

உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின், மேற்படி முரண்பாடுகள்  இல்லாதொழியும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

நீதிமன்ற தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டமூலத்தின் 8 (3), 136, 141, 142 மற்றும் 156 ஆகிய பிரிவுகளில் மனுதாரர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் மேலதிக  சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்தில்  திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியமும்   அரசியல் கட்சிகளும் பல திருத்தங்களை  முன்வைத்தன.  

இதனையடுத்த்து கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு   மீதான விவாதம்   நடைபெற்றது. எனினும் சட்டமூலம் நிறைவேற்றப்படாது பிறிதொரு தினத்துக்கு விவாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது .

இந்நிலையில் கடந்த ஜூலை  6 ஆம் திகதி  மீண்டும்  ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  மீதான விவாதம் இடம்பெற்று எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதுடன் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம்  வாசிப்பு  மீதான விவாதம் ஜூலை 19 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறுமென  அறிவிக்கப்பட்டது. 

இவ்வாறான நிலையில் புதன்கிழமை (19) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம்  வாசிப்பு  மீதான குழுநிலை விவாதம்  முன்னெடுக்கப்பட்டது . இதன்போது இந்த சட்டமூலம் தொடர்பில் 193 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட  பல திருத்தங்கள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்  ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மூன்றாம்  வாசிப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சபையில்  நிறைவேற்றப்பட்டது.

https://www.virakesari.lk/article/160431

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2023 at 18:25, ஈழப்பிரியன் said:

இந்த சட்ட மூலங்களை வர்த்தமானியில் வெளியிடுவதால் எதுவுமே மாறப் போவதில்லை.

மந்திரிகளில் இருந்து சாதாரண பியோன்வரை ஊறிவிட்டது.

சடடமூலம் இங்கு நிறைவேற்றப்பட்டிருக்குதே ஒழிய அமுல் படுத்தப்படுமா என்பதுதான் கேள்வி. இதட்குமுன்னரும் எத்தனையோ ஊழல் சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப்பட்டும் எவருக்குமே தண்டனை வழங்கவில்லை. எனவே நடைமுறையில் இங்கு எதுவுமே செய்லபடுத்தப்படுவதில்லை. சர்வதேசத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முயட்சியில் ஒன்று. 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறைக்கு வந்தது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் !

09 AUG, 2023 | 09:26 AM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன செவ்வாய்க்கிழமை (8) கையொப்பத்தையிட்டு சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார். 

இதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமாக 2023 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்தச் சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷவினால்  2023 ஏப்ரல் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம்  கடந்த ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆம் திகதிகளில் நடைபெற்றன.

இதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமாக  செவ்வாய்க்கிழமை (8) முதல் நடைமுறைக்கு வருகிறது.

https://www.virakesari.lk/article/161925

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமுலுக்கு வருகிறது ஊழல் ஒழிப்பு சட்டம் - வெளியானது வர்த்தமானி !

09 SEP, 2023 | 03:24 PM
image
 

ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/164178

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.