Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மஹவ முதல், அநுராதபுரம் வரையிலான ரயில் மார்க்கம் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கோட்டை முதல் காங்கேசன்துறை வரையிலான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்

 

https://athavannews.com/2023/1329678

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவை இரு மாதங்களில் ஆரம்பம் - போக்குவரத்து அமைச்சர்

Published By: T. SARANYA

01 MAY, 2023 | 10:11 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவை இன்னும் இரு மாதங்களுக்குள் ஆரம்பமாகும். வடக்கு மாகாணத்துக்கான புகையிரத சேவை இவ்வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை திருத்தப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையின் திருத்த பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.பாதையை நவீனப்படுத்தியதன் பின்னர் புகையிரத சேவையை துரிதமாக முன்னெடுக்க முடியும்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான இந்த செயற்திட்டத்துக்கு இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 3,500 கோடி ரூபா ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இந்த அபிவிருத்தி செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.

திருத்த பணிகளில் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரை புகையிரத சேவை ஆரம்பமாகும்.

அதனை தொடர்ந்து அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையை குறுகிய காலத்துக்குள் புனரமைத்து இவ்வருட காலத்துக்குள் காங்கேசன்துறை முதல் கொழும்பு வரையிலான புகையிரத சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/154196

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராட்டத்தால் வவுனியா - ஓமந்தை ரயில் பாதை பணிகள் இடைநிறுத்தம் : 10 ஆயிரம் டொலர்களை வீணாகச் செலுத்த வேண்டியுள்ளதாம்

Published By: DIGITAL DESK 4

22 MAY, 2023 | 11:31 AM
image

ரயில்  கடவை கோரி பிரதேச  மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக வவுனியா ஓமந்தை  ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்  இதனால் குறித்த ஒப்பந்ததாரருக்கு நாளொன்றுக்கு 10,000 டொலர்களை வீணாகச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவுக்கும்  மதவாச்சிக்கும் இடையில்  ரயில் கடவைகோரி கிராம மக்கள்  ரயில் தண்டவாளத்தில்  அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில்  ரயில்  பாதையை நவீனமயப்படுத்தும் பணிகள் தடைப்பட்டுள்ளன.

மஹவ தொடக்கம் வவுனியா வரையிலான  ரயில் பயண  வேக வரம்பை அதிகரிப்பதற்காக, பழைய  ரயில்  பாதைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம்  5 ஆம்  திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/155829

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவைகள் ஜூலை மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

கொழும்பிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான வடக்கு மார்க்க ரயில் சேவைகள் ஜூலை மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹோ சந்திக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் திட்டம் காரணமாக வடக்கு புகையிரத மார்க்க ரயில் சேவைகள் ஜனவரி மாதம் முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது அநுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றது.

91 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்திய உதவியுடன் புதுப்பிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது முடிந்ததும், வடக்கு ரயில் மார்க்கத்தில் சராசரியாக மணிக்கு 100 மீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்றார்.

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததால் காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் குறையும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான ரயில் மார்க்க புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ரயில்வேயின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

https://thinakkural.lk/article/255374

 கொழும்பு முதல் காங்கேசன்துறை வரை மீண்டும் ரயில் சேவை !

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் ரயில் சேவையை ஆரம்பிக்க முடியும் என மஹவ ஓமந்தை ரயில் வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் மார்க்கத்தின் திருத்தப்பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. குறித்த மார்க்கத்தின் திருத்தப்பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தநிலையில், அந்த மார்க்கத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ளதுடன், இரண்டாம் கட்டம் காலநிலையை கருத்தில்கொண்டு இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அடுத்த வருடம் முற்பகுதியில் குறித்த வீதியின் இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மஹவ ஓமந்தை ரயில் வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க குறிப்பிட்டார். திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/255404

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா குழப்பமா இருக்கு!

இரண்டு மாதமா?

சூலை மாதத்திலிருந்தா?

2024 சனவரியில் இருந்தா?

ஒரு முடிவுக்கு வந்து சொல்லுங்க, தேத்தண்ணீ குடிச்சிட்டு வாறன்!

  • Haha 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டும் அனுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை !

9aa2d1ce-83b63ea3-73101ee3-railways-dept-edited-_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg
அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் மீளஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

62 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/258600

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு – யாழ். ரயில் சேவை : ஜூலை 15 முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

Jaffna-Train.jpg

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கு ரயில் மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருத்த வேலைகள் முடிந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசன பதிகள் உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/260209

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு - யாழ் புகையிரத திட்டத்தின் அடுத்த கட்டம் ஜனவரியில் ஆரம்பமாகும்

Published By: DIGITAL DESK 3

15 JUL, 2023 | 03:16 PM
image
 

(எம்.மனோசித்ரா)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத திட்டத்தின் முதலாவது கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், 91.27 மில்லியன் டொலர் செலவில் இந்தியா இந்த கொழும்பு - யாழ் புகையிரத போக்குவரத்து திட்டத்தை நிறைவு செய்துள்ளது.

இதன் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே கட்டுமான சர்வதேச நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய இவற்றில் பயணிக்கும் புகையிரதங்கள் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும். இதனால் கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கிடையிலான பயண நேரம் பெருமளவில் குறைவடையும்.

எவ்வாறிருப்பினும், இது இலங்கையின் முதலாவது புகையிரத திட்டம் அல்ல. இதற்கு முன்னர் சுனாமியின் போது ஏற்பட்ட விபத்தால் சேதமடைந்த தெற்கு புகையிரத பாதையும் இந்தியாவினால் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது. 

இந்தியா இதுவரை சுமார் 300 கி.மீ புகையிரத பாதையை மேம்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் சுமார் 330 கி.மீ தூரத்திற்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளையும் வழங்கியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த முயற்சிகளின் ஒரு பகுதியான இத்திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் அண்டை நாட்டுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இலங்கையுடன் வலுவான வலையமைப்பை உருவாக்க உதவுகிறது. இதுதவிர, இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளியிலும் வலுவான இணைப்பை உருவாக்குவதற்கான டில்லியின் உந்துதலையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் ஏற்கனவே சில கொந்தழிப்பான நிலைவரங்கள் காணப்படுகின்ற நிலையில், இந்தியாவின் அரசியல் செல்வாக்கை மேலும் அதிகரிப்பதற்கு இவ்வாறான வேலைத்திட்டங்கள் உதவும் என்பதோடு, பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஈடுபாட்டுக்கான ஒரு பதிலடியாகவும் இது அமையும்.

கடந்த ஆண்டிலிருந்து இலங்கைக்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. முன்னொரு போதும் இல்லாதவாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கைக்கு, ஆரம்பத்திலிருந்து  உணவு மற்றும் மருந்து உட்பட பல ஆதரவுகளையும், உதவிகளையும் வழங்கியுள்ளது.

ஜப்பான் மற்றும் பிரான்ஸுடன் இணைந்து, இலங்கையின் மீள் எழுச்சியை மேற்பார்வையிடும் 17 நாடுகளின் குழுவுக்கு இந்தியா இணைத் தலைமைத்துவத்தை வழங்குகிறது. ஆனால் இலங்கையின் மொத்தக் கடனில் சுமார் 20 வீதத்தைக் கொண்டுள்ள சீனா, இந்த இருதரப்புக் கடன் வழங்குனர்கள் குழுவில் இணைய மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/160091



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.