Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட, கிழக்கில் இன்று கதவடைப்பு போராட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்கில் இன்று கதவடைப்பு போராட்டம் !

Published By: T. Saranya

25 Apr, 2023 | 09:45 AM
image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.

IMG-20230425-WA0044.jpg

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230425-WA0042.jpg

IMG-20230425-WA0026.jpg

இதனால் யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியதுடன் சங்கானை பகுதியிலும் கடைகள் மூடப்பட்டமையால் சங்கானை நகரமும் முடங்கியது. அத்துடன் மானிப்பாயிலும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் மானிப்பாயும் முடங்கியுள்ளது.

IMG-20230425-WA0029.jpg

IMG-20230425-WA0036.jpg
 

 

https://www.virakesari.lk/article/153666

திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பகுதிகள் ஹர்த்தாலால் முடங்கின !

Published By: Digital Desk 5

25 Apr, 2023 | 10:38 AM
image

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்,  சிங்களமயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்,  முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் அனைத்து துறைகளும் இன்று முடங்கியுள்ளன.

திருகோணமலையில் தமிழ்,  முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், கடைகள் பூட்டப்பட்டு காணப்படுகின்றன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து காணப்படுகின்றது.

20230425_085956.jpg

20230425_085821.jpg

20230425_085311.jpg

20230425_085753.jpg

20230425_080451.jpg

20230425_081234.jpg
 

https://www.virakesari.lk/article/153673

  • கருத்துக்கள உறவுகள்

முடங்கியது வவுனியா – இயல்பு நிலையில் மாற்றம் !

 

00.jpg

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியாவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை அரச பேருந்துச்சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் நிலையில், தனியார் பேருந்துச்சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
வெளிமாகாணங்களில் இருந்து வடக்கிற்குள் நுழையும் பேருந்துகள் வவுனியாவுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளன.

இதேவேளை பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் வருகை இல்லாமையினால் கல்விச்செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இன்மையால் இயல்பான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

002-1.jpg

முற்சக்கரவண்டிகள் குறைந்தளவில் சேவையில் ஈடுபட்டுள்ளன. விவசாயிகள் தமது உற்பத்திகளை வீதியில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான நெடுங்கேணி, செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

003-1.jpg

https://thinakkural.lk/article/250604

  • கருத்துக்கள உறவுகள்

முற்றாக முடங்கியது மன்னார்..!

முற்றாக முடங்கியது மன்னார்..! | Mannar Is Completely Paralyzed

வடமாகாணம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொது மக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக தடுக்க கோரியும் இன்றையதினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது.

Gallery

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Gallery

அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதிலும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/250614

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published By: DIGITAL DESK 5

25 APR, 2023 | 10:55 AM
image

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராகவும் பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக கடைகள் யாவும்  மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC02349.JPG

DSC02351.JPG

DSC02352.JPG

DSC02353.JPG

DSC02354.JPG

DSC02355.JPG

DSC02357.JPG

DSC02356.JPG

DSC02358.JPG

DSC02360.JPG

DSC02361.JPG

DSC02362.JPG

DSC02363.JPG

DSC02364.JPG

DSC02365.JPG

https://www.virakesari.lk/article/153674

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலும் கடையடைப்பு

யாழிலும் கடையடைப்பு

வடக்கு கிழக்கில் பூரண ஹார்த்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில். யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ளன.

ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், வடகிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை)  முழுமையான கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறுகின்றன. தனியார் பேருந்து சேவைகள் இயங்கவில்லை.

முச்சக்கர வண்டி சேவையும் யாழ் நகரில் இடம்பெறுகின்றது. பொதுமக்கள் அங்காங்கே வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிந்தது.

மேலும் சில உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகள் யாவும் வழமை போல் செயற்படுகின்றது.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளும் ஸ்தம்பித்து உள்ளதை அவதானிக்க முடிந்தது.

IMG-20230425-WA0039.jpg

IMG-20230425-WA0040.jpg

IMG-20230425-WA0056.jpg

IMG-20230425-WA0051.jpg

IMG-20230425-WA0037.jpg

IMG-20230425-WA0028.jpg

IMG-20230425-WA0053-1.jpg

IMG-20230425-WA0031.jpg

54120-4.jpg

54120-5.jpg

54120-3.jpg

54120-1.jpg

https://athavannews.com/2023/1330834

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீச்சு

Published By: DIGITAL DESK 5

25 APR, 2023 | 10:36 AM
image

வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று இன்று (25)அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது பேருந்தின் முன்  கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/153677

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230425-WA0066.jpg

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

IMG-20230425-WA0065-1.jpg

https://athavannews.com/2023/1330849

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலினால் மட்டக்களப்பும் முடங்கியது!

ஹர்த்தாலினால் மட்டக்களப்பும் முடங்கியது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதிகள் வெறிச்சோடி மாவட்டத்தில் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் இன்று(செவ்வாய்க்கிழமை) முடங்கியுள்ளது.

புதிய உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு இன்று அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காததையடுத்து பாடசாலைகள் முடங்கியுள்ளன.

போக்குலரத்து இடம்பெறாததையடுத்து வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து செயற்பாடுகளும் முற்றாக முடங்கியுள்ளன.

IMG_2924.jpg

IMG_2910.jpg

IMG_2925.jpg

IMG_2914.jpg

https://athavannews.com/2023/1330827

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சி முற்றாக முடங்கியது!

தென்மராட்சி முற்றாக முடங்கியது!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் சாவகச்சேரி நகரமும் கொடிகாமம் நகரமும் முற்றாக முடங்கியுள்ளன.

நகரத்தின் பிரதான சந்தைகள் வர்த்தக கட்டட தொகுதிகள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டுள்ளன. அதேபோல் தனியார் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தென்மராட்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவின்மையால் இயல்பு நிலை இழந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் ஒரு சிலமாணவர்கள் பாடசாலைகள் இயங்காமையினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக உள்ளது.

IMG-20230425-WA0067.jpg

IMG-20230425-WA0055.jpg

IMG-20230425-WA0062.jpg

IMG-20230425-WA0058.jpg

IMG-20230425-WA0058.jpg

IMG-20230425-WA0072.jpg

IMG-20230425-WA0053.jpg

IMG-20230425-WA0065.jpg

IMG-20230425-WA0063.jpg

IMG-20230425-WA0061.jpg

IMG-20230425-WA0074.jpg

IMG-20230425-WA0071.jpg

IMG-20230425-WA0070.jpg

IMG-20230425-WA0073.jpg

IMG-20230425-WA0059.jpg

IMG-20230425-WA0064.jpg

IMG-20230425-WA0060.jpg

IMG-20230425-WA0069.jpg

IMG-20230425-WA0068.jpg

https://athavannews.com/2023/1330806

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தமிழர் பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் ஏன்?

இலங்கை, வவுனியா, இலங்கை தமிழர், கடையடைப்பு போராட்டம்
 
படக்குறிப்பு,

இலங்கையின் தமிழர் பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம்

52 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்த அழைப்பை அடுத்து, இந்த முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் 1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

 

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் போராட்ட காலப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகள் இன்றி பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், சிலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, வவுனியா, இலங்கை தமிழர், கடையடைப்பு போராட்டம்
 
படக்குறிப்பு,

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு கடையடைப்பு

இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் பல தடவைகள்; கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த சட்டத்தினால் முன்னர் தமிழர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்ட சிலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என முதலில் தமிழர்கள் மாத்திரம் போராடிய நிலையில், தற்போது இந்த போராட்டத்தில் முஸ்லிம்களும், சிங்களவர்களும் இணைந்துக்கொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் முழு கடையடைப்பு போராட்டத்தில் முஸ்லிம்களும் இணைந்து கொண்டுள்ளதாக அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக வவுனியா நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

இலங்கை, வவுனியா, இலங்கை தமிழர், கடையடைப்பு போராட்டம்
 
படக்குறிப்பு,

வங்கி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அத்துடன், அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வங்கி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

ஏனைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளமையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இன்றைய போராட்டம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கை, வவுனியா, இலங்கை தமிழர், கடையடைப்பு போராட்டம்
 
படக்குறிப்பு,

வவுனியா நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது

''அரசாங்கம் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை (முழு கடையடைப்பு போராட்டம்) முன்னெடுக்கின்றது. இது அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ளன. அப்படியென்றால், பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கான நோக்கம் என்ன?

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த போதிலும், தேசிய இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டமானது, யுத்தத்தின் பக்கவிளைவாகவே நாங்கள் பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கில் காணி ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல், சிங்கள குடியேற்றம், தமிழ், முஸ்லிம் மக்களின் இடங்களில் பௌத்த சிலைகளை வைப்பது போன்ற பல விடயங்களை அரசாங்கம் திட்டமிட்டு செய்துக்கொண்டிருக்கின்றது.

ஆகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும், பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் தான் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது." என அவர் கூறுகின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

''பயங்கரவாதத் தடைச் சட்டம் 40 வருடங்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது. இலங்கை மக்களை மிக வன்மையாக தண்டிக்கக்கூடிய ஒரு விடயமாக காணப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டாலும், ஒட்டு மொத்த மக்களும் அதனால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள்.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருக்கக்கூடிய விடயம் என்னவென்றால், சட்ட பாதுகாப்பு இல்லை." என அவர் கூறுகின்றார்.

தன்தரப்பு நியாயத்தை கூறுவதற்கான சந்தர்ப்பம் இந்த சட்டத்தில் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்;பட வேண்டும் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3gvnly4359o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.