Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு

நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின் தினம் தினம் திட்டமிட்ட பாரிய இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, மக்களின் மீதான இனவழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக பயன்படுத்தவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு தாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் வேறுபாடுகளை துறந்து தமிழினமாக தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://athavannews.com/2023/1331551

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்கால் கஞ்சி விநியோகிக்க ஏற்பாடு - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

Published By: VISHNU

08 MAY, 2023 | 03:56 PM
image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து 09 ஆம்  முதல் வரும் மே 15ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளோம்.

சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு 2009 இல் உச்சத்தை தொட்ட போது முழு உலகமும் சிங்கள வல்லாதிக்கத்துடன் கைகோர்த்து எமது இனம் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படுவதினை வேடிக்கை பார்த்தன. 

1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின் தினம் தினம் திட்டமிட்ட பாரிய இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். 

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு எங்கும் தமிழர் என்ற இன அடையாளத்துக்காகவே சிங்கள இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டனர். 

நவாலி தேவாலயம், செஞ்சோலை என இனவழிப்பின் கரங்கள் நீண்டன. 2001ம் ஆண்டு தொடங்கிய சமாதான பேச்சுவார்த்தையின் பின், 2006ம் ஆண்டு எட்டாம் மாதம் தமிழினத்தை அழித்தொழிப்பதற்காக சிங்கள பேரினவாதத்தால் தொடங்கப்பட்ட யுத்தத்தில் சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் மட்டுமன்றி உணவுத்தடை, மருந்துத்தடை கூட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

விடுதலைக்காக உயிரினை துச்சமாக மதித்து களத்தில் நின்ற எமது மக்கள் பட்டினி சாவினை எதிர்கொள்ள கூடாது என்று தமிழர் புனர்வாழ்வு கழகமும், விடுதலை சார்ந்த அமைப்பும் தம்மிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி, அதை மக்களுக்கு வழங்கி, மக்களினை பட்டினி சாவிலிருந்து காத்தனர். எறிகணைகளும் கொத்து குண்டுகளும் எமது மக்களை கொத்து கொத்தாக கொன்ற போதும் பட்டினியால் மக்கள் இறக்கவில்லை.

இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று நாம் எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, எமது மக்களின் மீதான இனவழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக எமது இளம் சமுதாயத்திற்கு கடத்த வேண்டிய ஒரு கட்டுப்பாடில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் எமது இனவிடுதலையை அடையும் வரை இக்குறியீடு கடத்தப்படும் என உறுதியெடுக்கின்றோம்.

நாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் துறந்து தமிழினமாக எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உங்களின் மாவட்டத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சிக்கு உரிய அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கி விடுதலைக்கான பயணத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அத்துடன் தமிழர் தாயகம் எங்கும் இயங்கும் சமூக கட்டமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், ஆலய நிர்வாகங்கள், சமூக இயக்கங்கள், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகள், தனி நபர்களாகவும் கூட்டாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்களை சூழ உள்ளவர்களுக்கு, குறிப்பாக இளையவர்களுக்கு பரிமாறி வரலாற்றையும் எங்கள் இனத்தின் வலிகளையும் தொடராக உலகெங்கும் உள்ள அனைவருக்கும் கடத்துமாறு வேண்டி நிற்கின்றோம் – என்றனர்.

https://www.virakesari.lk/article/154790

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

Published By: VISHNU

09 MAY, 2023 | 01:48 PM
image

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (9) யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

20230509_084815.jpg

விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

20230509_084755.jpg

குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில்,

20230509_084857.jpg

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம்.

20230509_085439.jpg

இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று நாம் எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, எமது மக்களின் மீதான இனவழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக எமது இளம் சமுதாயத்திற்கு கடத்த வேண்டிய ஒரு கட்டுப்பாடில் நாம் அனைவரும் உள்ளோம்.

20230509_085836.jpg

நாம் எமது இனவிடுதலையை அடையும் வரை இக்குறியீடு கடத்தப்படும் என உறுதியெடுக்கின்றோம்.

20230509_085646.jpg

நாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் துறந்து தமிழினமாக எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

20230509_100606.jpg

உங்களின் மாவட்டத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சிக்கு உரிய அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கி விடுதலைக்கான பயணத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

20230509_092423.jpg

அத்துடன் தமிழர் தாயகம் எங்கும் இயங்கும் சமூக கட்டமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், ஆலய நிர்வாகங்கள், சமூக இயக்கங்கள், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகள், தனி நபர்களாகவும் கூட்டாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்களை சூழ உள்ளவர்களுக்கு, குறிப்பாக இளையவர்களுக்கு பரிமாறி வரலாற்றையும் எங்கள் இனத்தின் வலிகளையும் தொடராக உலகெங்கும் உள்ள அனைவருக்கும் கடத்துமாறு வேண்டி நிற்கின்றோம் என்றனர்.

20230509_100644.jpg

20230509_101000.jpg

20230509_100716.jpg

20230509_101109.jpg

20230509_102857.jpg

20230509_101808.jpg

20230509_103246.jpg

20230509_103130.jpg

https://www.virakesari.lk/article/154866

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் இரண்டாம் நாள் இன்று !

20230509_101633-696x522.jpg

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக, சில தன்னார்வ அமைப்புகள், தங்களிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி வழங்கின.

இதனை நினைவுப்படுத்தும் வகையில் வருடாந்தம் குறித்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, நேற்று ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தில், எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடவடிக்கை எடுத்து வருகிறது

இன்றைய தினம், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாகவும், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளம் ஆகிய பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/252869

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

Published By: VISHNU

11 MAY, 2023 | 06:31 PM
image

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (11) வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

IMG_20230511_16013545.jpg

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் , வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

IMG_20230511_16010789.jpg

அந்தவகையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

IMG_20230511_16001808.jpg

இதன்போது பாடசாலை மாணவர், பொதுமக்கள் என பலரும் கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_20230511_16004654.jpg

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டனர். 

IMG_20230511_15594703.jpg

https://www.virakesari.lk/article/155085

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி !!

திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி !!

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக இன்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாரப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக, சில தன்னார்வ அமைப்புகள், தங்களிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி வழங்கின.

இதனை நினைவுப்படுத்தும் வகையில் வருடாந்தம் குறித்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, கடந்த 9 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக அவ்வீதியூடாக பயணித்தவர்களுக்கு தென்னஞ் சிரட்டைகளில் குறித்த கஞ்சியானது பகிர்ந்தளிக்கப்பட்டது.

https://athavannews.com/2023/1331718

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் !!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் !!

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார்த்தின் முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

Published By: VISHNU

12 MAY, 2023 | 03:31 PM
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

20230512_112826.jpg

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

20230512_102612.jpg

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் , முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குமாறு யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மாணவர்களும் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/155130

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு முள்ளிவாய்க்காலிலும் முன்னெடுப்பு!

Published By: NANTHINI

12 MAY, 2023 | 08:28 PM
image

 

"கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரமான மே 12 தொடக்கம் மே 18 வரையிலான நாட்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கஞ்சி பரிமாறும் இந்த வேலைத்திட்டத்தின் முதலாவது நாளான இன்று (12) முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புகளும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முன்னெடுத்துள்ளது. 

மே 12 முதல் மே 18 வரை தமிழின படுகொலை வாரம் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், 2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி, அதனூடாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதை அனைத்து தரப்பினருக்கும் உணர்த்தப்படுகிறது.

அத்தோடு, இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்பினர் இணைந்து இன்று முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_7520.jpg

IMG_7530.jpg

IMG_7500.jpg

IMG_7515.jpg

IMG_7496.jpg

IMG_7474.jpg

IMG_7492.jpg

https://www.virakesari.lk/article/155176

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறலும்

Published By: NANTHINI

13 MAY, 2023 | 05:20 PM
image

 

மிழின படுகொலைகளின்போது உயிர் நீத்தவர்களையும், உணவின்றி வறுமையில் சிக்கியபோது கஞ்சியை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்த போர்க்கால வாழ்க்கையையும் நினைவுகூரும் வகையில், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 

அந்த வகையில், 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

அந்த வகையில், மே 12 முதல் மே 18 வரை அனுஷ்டிக்கப்பட்டு வரும் இனப்படுகொலை  வாரத்தின் முதல் நாளான நேற்று (12) மாலை  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. 

download__1_.jpg

download__2_.jpg

download__4_.jpg

download__3_.jpg

download__5_.jpg

download__6_.jpg

download.jpg

https://www.virakesari.lk/article/155210

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த நிகழ்வில் நமது தலீவர்கள் பங்குகொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம். அங்காலை பிஸ்கட்டும், தேநீரும் பரிமாறுகிறார்கள். அதற்கே முன்னுரிமை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வ இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கோவில் முன்றலில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331892

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

Published By: VISHNU

16 MAY, 2023 | 01:05 PM
image

4.jpg

1.jpg

3.jpg

 

தமிழின படுகொலை நினைவு நாள் மே 18 இன் ஆரம்ப நிகழ்வு செவ்வாய்க்கிழமை (16)  திருக்கோணமலை மாவட்டத்தின் வரோதயநகர், சல்லி, தம்பலகாமம், சின்னக்குளம், அம்மன்நகர் ஆகிய கிராமங்களில் இடம்பெற்றது.

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

திருகோணமலை வரோதயநகர் பகுதியில் இடம்பெற்ற இந் நினைவு நிகழ்வில் கிராம மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/155397

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி திருமலை சல்லி கிராமத்தில் பரிமாறல்

Published By: VISHNU

16 MAY, 2023 | 02:42 PM
image

Salli_2.jpg

Salli_5.jpg

Salli_3.jpg

Salli_4.jpg

Salli_7.jpg

Salli_6.jpg

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருக்கோணமலை சல்லி கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு  தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

https://www.virakesari.lk/article/155403

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாழைச்சேனையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில்  உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

Published By: VISHNU

17 MAY, 2023 | 09:15 PM
image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை பிரதான வீதியின் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று நடைபெற்றது.

S7940066.JPG

பிரதேச இளைஞர்கள் மற்றும் முன்னாள் பிரதேசபை உறுப்பினர் கு.குணசேகரம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட இணைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

S7940061.JPG

இதன்போது வீதியில் பயணிப்போர் பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்றோர்கள் என பலருக்கும் முள்ளிவாய்க்காலில் கஞ்சி வழங்கப்பட்டது. மே-18 முள்ளி வாய்க்கால் வாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் 6 ஆவது நாளான இன்று வாழைச்சேனையில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

S7940061.JPG

S7940058.JPG

S7940052.JPG

S7940049.JPG

https://www.virakesari.lk/article/155535

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.