Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி - உங்களுக்கு எழும் இயல்பான சந்தேகங்களும் பதில்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2000 நோட்டுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.

இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டமத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. அதன் பிறகு 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

மேலும் அந்த செய்திக்குறிப்பில் சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.

இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “கிளீன் நோட் பாலிசியின்படி”, ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில கேள்விகளும் பதில்களும்

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் என்ன நடக்கும்? மக்கள் வைத்திருக்கும் ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளை என்ன செய்வது?

  • பொதுமக்கள், 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
  • எந்த வங்கிக் கிளையிலும் கணக்குகள் மற்றும்/அல்லது அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
  • வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.
  • செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

பணத்தை வங்கியில் செலுத்த காலக்கெடு

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செலுத்த பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்கவும், அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மற்றும்/அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதா?

ஆமாம். ஒரே நேரத்தில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ₹20,000/- வரை மாற்றுவதற்கான வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ஆர்ஓக்கள்) உள்ள பணம் வழங்கல் கவுன்ட்டர்களில் இருக்கும்.

2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் செப்டம்பர் 30, 2023 வரையிலான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிளீன் நோட் பாலிசி என்றால் என்ன?

பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி.

₹2000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலை நீடிக்குமா?

ஆமாம். ₹2000 ரூபாய் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும்.

₹2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?

ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ₹2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாக பெறலாம். இருப்பினும், செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

₹2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுமக்கள் தங்களிடம் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம்.

கணக்குகளில் டெபாசிட் செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி

₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?

வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டபூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.

மாற்றக்கூடிய ₹2000 ரூபாய் நோட்டுகளுக்கு செயல்பாட்டு வரம்பு உள்ளதா?

பொதுமக்கள் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.

வணிக பரிவர்த்தனைகள் (BCs) மூலம் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?

ஆம், கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ₹4000/- என்ற வரம்பு வரை பரிவர்த்தனை செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

எந்த தேதியிலிருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?

ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23, 2023 முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

வங்கியின் கிளைகளில் இருந்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?

வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர் அல்லாதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ₹20,000/- வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக ₹20,000/-க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?

வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். ₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.

ரூ. 2000 டெபாசிட் பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இது முற்றிலும் இவலசமாக வழங்கப்படும் சேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?

₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவரால் உடனடியாக ₹2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?

முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு வங்கி ₹2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?

சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றாலோ, புகார்தாரர் ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டத்தின் (RB) கீழ் புகார் அளிக்கலாம். புகார் மேலாண்மை அமைப்பு இணையதளமான cms.rbi.org.in என்ற முகவரியில் இந்த புகார் பக்கம் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv24er1yn39o

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு வைச்சாண்டா ஆப்பூ....😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு வருமா? அதற்கான தேவை உள்ளதா?

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 17 நிமிடங்களுக்கு முன்னர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் போலவே 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பும் நாடு முழுவதும் விவாதப்பொருளாக்கியிருக்கிறது. ஒப்பீட்டளவில் அதிர்ச்சியும் சலசலப்பும் குறைவு என்றாலும் கூட, 2,000 ரூபாய் வாபஸ் நடவடிக்கையும் பல கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் வித்திட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வந்த நேரம், அதன் பொருளாதார, நிதி, அரசியல் தாக்கங்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் அதன் நோக்கத்தை நிறைவு செய்ததா? இந்த அறிவிப்பால் யாருக்கேனும் பாதிப்பு வருமா? 2016-ம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போல ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு வருமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்திய 2,000 ரூபாய் நோட்டுகளை சுமார் ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெறும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் தரப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை' என விமர்சித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இதேபோல், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் இந்த நடவடிக்கை மீதான விமர்சனப் பார்வையை முன்வைத்துள்ளார். "ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல.. அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பின் போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை. அந்த கஷ்டத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமோ, "இது எதிர்பார்த்ததுதான். 2,000 ரூபாய் நோட்டு பணப் பரிமாற்றத்துக்கான சரியான தொகை அல்ல. 2016 நவம்பரிலே நாங்கள் இதைச் சொன்னோம். நாங்கள் சரியாகக் கணித்திருக்கிறோம்." என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "அதிக அளவில் பரிமாற்றத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2,000 நோட்டு கட்டுக்கட்டாக அறிமுகம் செய்யப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அரசாங்கம்/ஆர்.பி.ஐ ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1,000 ரூபாய் நோட்டை அரசாங்கம்/ஆர்.பி.ஐ மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 2,000 ரூபாய் நோட்டு ஒருபோதும் 'சுத்தமான' நோட்டாக இருக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானது முதலே மக்கள் மத்தியிலும் அதுகுறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. கடந்த ஈராண்டுகளாகவே 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதை கண்கூடாக காண முடிந்ததால் இந்த நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மக்கள் முன்கூட்டியே கணித்திருந்ததை அவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் பலவும் உறுதிப்படுத்துகின்றன.

2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம், அவற்றைத் திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை குறித்த சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் விடை காண நிதி ஆலோசகரும், எழுத்தாளருமான சோம.வள்ளியப்பனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"காருக்கு ஸ்டெப்னி போல ரூ.2,000 நோட்டு பயன்பட்டது"

2,000 ரூபாய் நோட்டை ஆறே ஆண்டுகளில் திரும்பப் பெறும் நடவடிக்கை ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "காரில் நாம் வைத்திருக்கும் ஸ்டெப்னியை போலவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி பயன்படுத்தியுள்ளது. அதாவது, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500, ரூ,1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் சுமார் 89 சதவீதம் ஒரே இரவில் செல்லாததாகிவிட்டது.

அதன் மதிப்பை ஈடுகட்ட வேண்டிய கட்டாயம் இருந்த அதேநேரத்தில், குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் நோட்டுகளை அச்சிடுவது கடினம் என்பதால்தான் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற ரூபாய் நோட்டுகள் படிப்படியாக அதிக அளவில் புழக்கத்தில் வந்துவிட்டதால், பணப்புழக்கம் சீராகிவிட்டது. இதற்கு மேலும் ஸ்டெப்னி தேவையில்லை என்று கருதுவதால்தான், இக்கட்டான காலகட்டத்தை கடக்க ஸ்டெப்னி போல் பயன்படுத்திய 2,000 ரூபாய் நோட்டுகளை இப்போது செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது." என்று கூறினார்.

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் புழக்கத்தில் வருமா?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விமர்சனம் குறித்த கேள்வியை சோம. வள்ளியப்பனிடம் முன்வைத்தோம். குறிப்பாக, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் அறிமுகமாக வாய்ப்புள்ளதா? என்று வினவினோம். அதற்குப் பதிலளித்த சோம.வள்ளியப்பன், "இப்போதைய சூழலில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கான தேவை இருக்கவே செய்கிறது. காரணம், பணவீக்கம்தான். ஆண்டுதோறும் 7 சதவீதம் பணவீக்கம் இருக்கிறது என்று கணக்கில் கொண்டால், 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது சுமார் 50 சதவீதம் அளவுக்கு பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. அதன்படி, அப்போதைய 500 ரூபாயின் மதிப்பு இப்போது 250 ரூபாயாக குறைந்துவிட்டது.

அதாவது 2016-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், நாம் பயன்படுத்தும் 500 ரூபாயின் மதிப்பு வெறும் 250 ரூபாய் தான். இதனால், நாம் அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. பணவீக்கம் எதிரொலியாக, 5 பைசா, 10 பைசா, 20 பைசா நாணயங்கள் எப்படி வழக்கில் இருந்து நீக்கப்பட்டு 10, 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. அதேபோல், அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள், அதாவது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்றைய தேவையாகவே இருக்கிறது. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிலைமையை அலசி ஆராய்ந்து, ரிசர்வ் வங்கிதான் இதுகுறித்து கொள்கை முடிவை எடுக்கும்." என்றார்.

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வருமா?

2,000 ரூபாய் நோட்டு வாபஸ் அரசியல் ரீதியில் எதிரொலிக்குமா?

அடுத்தபடியாக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "2,000 ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை வெளியிட தேர்வு செய்த நேரம் வேண்டுமானால், பா.ஜ.க.வின் கர்நாடக தேர்தல் தோல்வியுடன் ஒத்துப் போகலாம். இதனால், பா.ஜக.வின் கர்நாடக தேர்தல் தோல்வி குறித்த பேச்சுகள் பின்னுக்குத் தள்ளப்படலாம். ஆனால், இதற்கான நடவடிக்கைகள் முன்பே தொடங்கிவிட்டன.

2016-ம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது முழுவீச்சில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அதன் பின்னர் படிப்படியாக அதனைக் குறைத்து ஒரு கட்டத்தில் அச்சடிப்பதை முழுவதுமாக நிறுத்தியேவிட்டது. பின்னர், வங்கிகள் வாயிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்திற்கு வருவதையும் படிப்படியாக கட்டுப்படுத்தி வந்தது. ஆகவேதான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கணிசமாக குறைந்துவருகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற நாடகத்தின் கடைசிக் காட்சியாகவே 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் தற்போதைய நடவடிக்கை அமைந்துள்ளது. இதன் மூலம், 2,000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துள்ள நபர்களும் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வழியேற்பட்டுள்ளது." என்று கூறினார்.

"2016 நிலைமையுடன் இதனை ஒப்பிட முடியுமா?"

மேலும் தொடர்ந்த சோம.வள்ளியப்பன், "2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஒரே இரவில் மக்களின் கைகளில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டுவிட்டன. அவற்றை மாற்றிக் கொள்வதிலும் சிரமங்கள் இருந்ததால், நீண்ட காலமாக அந்த ரூபாய் நோட்டுகளை எதிர்கால சேமிப்பாக கையில் வைத்திருந்த மக்கள் பெருமளவு அவதிப்பட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏ.டி.எம்.கள் உள்பட பொதுவாகவே வங்கி பரிவர்த்தனைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு கணிசமாக குறைந்து வருவதால் ஏற்கனவே உஷாராகி விட்ட மக்கள் இன்று 2,000 ரூபாய் நோட்டுகளை அவற்றை பெரும்பாலும் சேமித்து வைத்துக் கொள்வதில்லை.

கையில் வைத்திருக்கும் சிலரும் அவற்றை மாற்றிக் கொள்ள 4 மாத அவகாசம் இருக்கிறது. 2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையால் யாருக்கும் சிரமம் இருக்காது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல தேர்தல்களை நாம் கண்டுவிட்டதால், அவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இது தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது." என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cekd51z3y3yo

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2023 at 17:41, Nathamuni said:

மாப்பு வைச்சாண்டா ஆப்பூ....😁

May be an image of money and text

சென்ற முறை புது ரூபாய்தாள்களை குறிப்பிடட காலத்துக்குள் மாற்ற வேண்டும் 
என்று சொன்ன போதும்,  வீட்டில்... கட்டுக் கட்டாக  பணத்தை பதுக்கி வைத்திருந்த...
அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ, தொழிலதிபர்களோ... 
எவரும் பாதிக்கப் படவில்லை.
தங்களது பணத்தை.. வங்கியின்  பின்வாசல் வழியாக நல்ல நோட்டுக்களாக 
மாற்றிக் கொண்டனர்.அந்தளவுக்கு அவாக்களின் செல்வாக்கும், லஞ்சம் கொடுத்து 
காரியத்தை முடிக்கக் கூடிய அதிகாரிகளும் இந்தியாவில் உள்ளார்கள்.
சென்றமுறை  பாதிக்கப் பட்டதும், உயிரை இழந்ததும்... அப்பாவி மக்கள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'பாடை மேல் கட்டுக்கட்டாய் 2000 ரூபாய்.. ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்த மக்கள்.. நூதன போராட்டம். கீரஸ் கிரஸ் HINDVDOOSET æO NEWS'

2000 ரூபாயை... பாடையில் வைத்து, ஒப்பாரியுடன் மக்கள் நூதன போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்குதாம். 
அந்தப் பணத்தை... பதுக்கி வைத்தால், சற்றலைட் மூலம் கண்டுபிடித்து 
அதிகாரிகள் வீட்டிற்கே வந்து... கட்டுக்கட்டாய் இருக்கிற 2000  ரூபா நோட்டுக்களை 
 அள்ளிக் கொண்டு போய்விடுவார்களாம் என்று ஒரு மெண்டல் சொல்லியிருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்குதாம். 
அந்தப் பணத்தை... பதுக்கி வைத்தால், சற்றலைட் மூலம் கண்டுபிடித்து 
அதிகாரிகள் வீட்டிற்கே வந்து... கட்டுக்கட்டாய் இருக்கிற 2000  ரூபா நோட்டுக்களை 
 அள்ளிக் கொண்டு போய்விடுவார்களாம் என்று ஒரு மெண்டல் சொல்லியிருக்கு. 😂 🤣

நானும் இதை நேற்று பார்த்தன்.....பார்ப்பனத்தை நினைச்சன்...சிரிச்சன் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நானும் இதை நேற்று பார்த்தன்.....பார்ப்பனத்தை நினைச்சன்...சிரிச்சன் :rolling_on_the_floor_laughing:

இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு  சிப் விவகாரம்,
பா.ஜ.க. வை சேர்ந்த பிரபலங்களால்... ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் 
சொல்ல வைக்கப் பட்டு, மக்களை முட்டாளாக்கி இருக்கிறார்கள்.

 

சத்தம்... எழுப்பினால் கொரோனா போகும் என்பதும் இந்த வகைதான். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

@Nathamuni இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்குதாம். 
அந்தப் பணத்தை... பதுக்கி வைத்தால், சற்றலைட் மூலம் கண்டுபிடித்து 
அதிகாரிகள் வீட்டிற்கே வந்து... கட்டுக்கட்டாய் இருக்கிற 2000  ரூபா நோட்டுக்களை 
 அள்ளிக் கொண்டு போய்விடுவார்களாம் என்று ஒரு மெண்டல் சொல்லியிருக்கு. 😂 🤣

 

36 minutes ago, குமாரசாமி said:

நானும் இதை நேற்று பார்த்தன்.....பார்ப்பனத்தை நினைச்சன்...சிரிச்சன் :rolling_on_the_floor_laughing:

திருடனுக்கு தேள் கொட்டின கதைதான்.

மோடி மாப்பு வைச்சாரு ஆப்பு.

போனமுறை, நோட்டு செல்லாது என்று அறிவித்ததால், சாதாரண பொதுமக்களிடையே ரணகளம். அதனூடே கறுப்புப்பணக் கோஸ்டிகள் கச்சிதமாக தமது கரண்சிகளை மாற்றிவிட்டார்கள்.

மோடி செய்தது வீண்வேலை என்று உள்ளூர், வெளியூர் எங்கும் விமர்சனம்.

ஆனால் 2,000 நோட்டு புழக்கத்தில் 25 - 30 % குறைந்ந நிலையில் (வரப்போகும் தேர்தலுக்காகவும்) கள்ளப்பணமாக பதுங்கிவிட்டதை ஆய்ந்துணர்ந்து, செப்டம்பர்வரை செல்லும், காசை வங்கியில் daily 20,000 மட்டும் deposit பண்ணலாம் என்ற நிலயில், சாதாரண மக்கள் ரிலாக்ஸ் ஆக, பதுக்கிய கோஸ்டிகள் அல்லாடுகின்றன.

20,000 எப்படிவந்தது என்று கணக்கு சொல்லவேணுமே! வங்கி லீவை கணக்கில் எடுத்தால், ஆக கூடியது மாசம் 5 இலட்சம் தானே....

25 - 30 இலட்சம்.... செப்டம்பர் வரை...

கோடியில் வைத்திருப்போர்......? அரண்டு போய் இருக்கிறார்கள்.

போன முறை டாஸ்மாக் ஊடாக அதிமுக அமைச்சர்கள் மாத்திக் கொண்டார்கள்.

இம்முறை மக்கள் 2,000 வை பாவிக்க முடியாது, வங்கிகள் மட்டுமே ஏற்கும். ஆக... மக்கள் தந்து பொருள் வாங்கினர் என்று சொல்ல முடியாது.

உது மோடியின் மாஸ்டர் ஸ்ரோக் என்று நிணைக்கிறேன்.

பகிடி என்ன என்றால், இலங்கையில் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்வதால், பதுக்கல் கோஸ்டிகள் அங்கை மாத்தலாமோ என்றும் விசாரிக்கினமாம்! 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

Image

மேடம்... இந்த 2000 ரூபாய் நோட்டிலை இருக்கிற, சிப்பை எடுத்திட்டு தரணுமா, 
இல்லை... சிப்போட தரணுமா.... animiertes-lachen-bild-0116.gif

Image

இருந்தாதானடா திருப்பி கொடுக்க முடியும்! 
அந்த நோட்ட கண்ணுல பாத்தே பல வருசம் ஆச்சு. 
அத யாருக்காக அச்சடிச்சீங்களோ அவனுங்க கிட்டேயே 
போயி வாங்கிட்டு போங்கடா..!! 😡😡

Jack Retweeted

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.