Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுடனான போர் பல ஆண்டுகள் நீடிக்கும்: ரஷ்யா தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்தாண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன. அதன்படி ரஷ்யா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அந்த நாடுகள் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.

ukrainewar5-1646162814.jpg

15 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

அதற்கு மாறாக இரு தரப்பினரும் ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ரஷ்யாவின் தெற்கு நகரமான கிராஸ்னோடரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் டினிப்ரோ நகரம் மீது ரஷ்யாவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரின் பல பகுதிகள் சேதமடைந்தன.

இந்த நிலையில் வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடேவிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என்றும், ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

https://thinakkural.lk/article/255662

  • கருத்துக்கள உறவுகள்

Kiev regime must cease to exist – ex-Russian president

Otherwise, the conflict in Ukraine may last for decades, Dmitry Medvedev has claimed

(Ukraine has no future in its current form, former Russian president Dmitry Medvedev claimed on Thursday, while outlining three possible scenarios for the collapse of its statehood and assessing the risks of renewed conflict in Europe and a global war.)

It is necessary to destroy the very nature of the Nazi government in Kiev,” Medvedev added, claiming that otherwise the conflict could drag on perpetually, with “three years of truce, two years of conflict, rinse and repeat.”

1) ஐரோப்பிய யூனியன் நாடுகளால் உக்ரேனின் மேற்குப்பகுதி இணைக்கப்படும்

2) ஐரேப்பிய யூனியன், ரஸ்யாவிற்கிடையில் உக்ரேன் பிரிக்கப்படும் (In the second scenario, Ukraine would get a government-in-exile but de-facto cease to exist)

3) உக்ரேனின் மேற்குப்பகுதி EU வுடன் இணைய, மத்திய, கிழக்குப்பகுதிகள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயித்து சிறு நாடுகளாக/பிராந்தியங்களாகப் பிரிந்துபோதல் (Medvedev said he would prefer the third scenario, in which Ukraine’s Western territories voluntarily join their EU neighbors, while the Eastern and some central regions exercise their “right for self-determination sealed in Article 1 of the UN Charter.”)

(https://thepressunited.com/updates/kiev-regime-must-cease-to-exist-ex-russian-president/amp/)

இவைதான் Dmitry Medvedev வால் கூறப்பட்டவையின் சாரம். 

தினக்குரலின் செய்தியில் அடியும் இல்லை, நுனியும் இல்லை. செய்தித் திரிபு மட்டுமே உள்ளது. இது வாசகர்களை தவறான புரிதலுக்கு உட்படுத்தும், அவர்களுக்கு அறிவூட்டாது. 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.