Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது.

மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியற் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்யும் வகையில் அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வாறான வெறுப்புப் பிரசாரங்களின் ஊடாக அரசியல் செய்யும் கலாசாரத்தை நாட்டிலிருந்து இல்லாது செய்ய முடியும்.

வெறுப்புப் பிரசாரங்களை செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அடிப்படைவாதிகளால் நிதி அனுப்பப்படுகிறது.

இதனைக் கண்டறிந்து முதலில் அரசாங்கம் நிறுத்த வேண்டும். புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கண்டறிய வேண்டும்.
நல்லிணக்கம், ஜனநாயகம், மனிதாபிமானத்தை உறுதிப்படுத்தினாலேயே ஒரு நாட்டை முன்னேற்ற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2023/1333324

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமல் இருந்த, கையாலாகாத முன்னாள் ஜனாதிபதி . நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அடிபட்டு கிடந்த இவருக்கு ஒரு அவல் கிடைத்திருக்கிறது. இப்போது  பவுத்த மதத்தை வைத்து தனது அரசியல் வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, தமிழ் சிறி said:

மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

செய்யும் போதனைக்கும் அதன் பெயரால் நடக்கும் செயல்களுக்கும் வேறுபாடு ஏற்படும்போது எழும் விமர்சனங்களை தவிர்க்கமுடியாது. ஒன்று உங்கள் செயல்களை மாற்றுங்கள் அல்லது பவுத்தம் என்று மூடுவதை நிறுத்துங்கள். பவுத்தர்களின் எதிர்மறையான செயற்பாடுகளே விமர்சனத்திற்கு காரணம் என்பதை சிறு பிள்ளையும் அறியும், வெறும் அறிக்கைகளால் மாற்ற முடியாது. கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள்  நடத்தப்படும் போது உங்கள் இந்த சிந்தனை எங்கே போனது? மதமென்றால் பவுத்தம் என்பதுதான் உங்கள் சிந்தனையோ? உங்கள் காலத்தில் தேவாலய குண்டு வெடிப்பிற்கு பொறுப்பெடுக்காமல் தப்பித்துக்கொண்டு, வந்துவிட்டார் கருத்துச்சொல்ல!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் அதீத பெளத்த விசுவாசி என்பதில் போட்டி. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களம் என்று கூவி சாதித்தது இனிமேல் எடுபடாது என்பது ராஜபக்சாக்களின் தோல்வியோடு தெரிந்து, பவுத்தத்தை கையிலெடுத்துள்ளார்கள் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய. இதுவும் துடைத்தெறியப்படும் இவர்களாலேயே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரையும் அவர்தம் கல்வி, பொருளாதாரம், இருப்பை அழிக்க இனவாதத்தை கையிலெடுத்து ஓரளவு வெற்றிகண்டாலும் சிங்களம் இழந்ததும் அநேகம். தானாகவே தமிழருக்கு தான் செய்த அனிஞாயங்களை வெளியுலகிற்கு கொண்டுவந்துவிட்டது மட்டுமன்றி ஒருசில சிங்களவரையாவது சிந்திக்க தூண்டியது, தென்பகுதியில் முள்ளிவாய்க்கால் சுடரெலெழுப்ப உந்தியது. இனி வெற்றிக்கதை பேசி அரசியல் செய்ய இயலாது என்பதை புரிந்துகொண்ட சிங்களம், மதத்தை தூக்கி சதிராட ஆரம்பித்துள்ளது. இது ஏற்புடையதல்ல, அந்த மதத்தை தமது சுயலாபத்திற்கு இரையாக்குவது அந்த மதத்தை அவமதிப்பதாகும். இதைவிட வேறு அவமதிப்பு கிடையாது. எந்த ஆயுதத்தை தமிழர்க்கெதிராக தூக்குகிறார்களோ அந்த ஆயுதத்தாலேயே சிங்களம் தூக்கியெறியப்பட்டு அழியும். இந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் பவுத்தம் என்னும் அரக்கன் அழியும் காலம் வந்து விட்டது. அதை அழிப்பதற்கு அவர்களே ஆயுதம் தூக்கி விட்டார்கள். சிங்களத்தின் காவலர்களாக வரலாறில் இடம்பெற நினைத்து, தமிழரை வதைத்து, அரசர்களாக தம்மை விளம்பரப்படுத்தி, அங்கங்கே உருவப்படங்களை வைத்து இரண்டாம் துட்டகைமுனு என தம்மைத்தாமே  அழைத்து மகிழ்ந்தார்கள். அவர்களே பின்னாளில் விரட்டப்பட்டு தப்பியோடியதையும், அவர்களின் தந்தையின் சிலையை அடித்து நொருக்கியதையும் நாமென்ன? உலகமே பாத்தது. இது சிங்கள வரலாற்றில் இடம்பெறும்போது தமிழருக்கிழைத்த அநியாங்களும் இடம் பெறும், இல்லையாயினும் எதிர்கால சந்ததி தேடியறியும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kapithan said:

யார் அதீத பெளத்த விசுவாசி என்பதில் போட்டி. 😁

நாங்கள் சிங்கள பவுத்தர்கள், பவுத்தர்கள் என்னும் கோஷம் மிக ஆக்ரோஷமாக கேட்க ஆரம்பித்து விட்ட்து. இலங்கையில் மிக மலிவாக விக்கக்கூடிய பொருள்தான் இது. இருந்தாலும் ஜேவிபி யை குறித்ததான பயம் எல்லோருக்குள்ளும் காணப்படுகின்றது. இருந்தாலும் இந்த சிறிசேனவுக்கு எந்த கூப்பாடு போடுவதட்கும் அருகதை இல்லை. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.