Jump to content

டியாகோகார்சீயாவில் 20 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் - 12 பேர் தற்கொலைக்கு முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

11 JUN, 2023 | 04:44 PM
image
 

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளி;ல் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற  ஆவணங்கள் தெரிவித்துள்ளனஇ

டியாகோ கார்சியாவில் தான் பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்- மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/157467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு 'நரகத்தை காட்டிய' தீவு: 20 மாதங்களாக தப்பிக்க முடியாமல் தவிப்பது ஏன்?

தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

கப்பலின் மேல்தளத்தில் நாட்களை கடத்தும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஆலிஸ் கட்டி & சுவாமிநாதன் நடராஜன்
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 15 ஜூன் 2023, 06:33 GMT
    புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் சிக்கிய மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர், அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவில் மாதக்கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்த வெப்பமண்டல தீவிலிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பினாலும், அங்குள்ள அசாதாரண சட்ட நடைமுறைகள் அவர்களை தீவை விட்டு வெளியேற முடியாதபடி செய்துள்ளன.

இந்த நிலை, அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் உதவியற்றவர்களாக உணர்கின்றனர்.

 

இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் அந்தத் தீவின் பெயர், டியாகோ கார்சியா. அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் (புலம்பெயர்ந்தோர்) அனைவரின் பெயர்களும் இந்தக் கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன.

 

திசைமாறிய பயணம்

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நாள் அதிகாலை வேளையில் மீன்பிடிப் படகு ஒன்று டியாகோ கார்சியா தீவுக்கு அருகில் சிக்கியது.

பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் அமைந்துள்ள அந்த தீவு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது என்பதுடன், முன் அனுமதி பெறாத நபர்கள் அந்த பகுதிக்குள் பிரவேசிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த எல்லைக்குள் நுழைந்த மீன்பிடி படகு குறித்த விசாரணையில், அந்த தீவின் நிர்வாகம் உடனடியாக இறங்கியது.

அந்த படகில் மொத்தம் 89 இலங்கை தமிழர்கள் இருந்ததும், அவர்கள் உள்நாட்டில் அனுபவித்த பல்வேறு இன்னல்களில் இருந்து தப்பிப் பிழைத்து அடைக்கலம் தேடி வேறு நாட்டிற்கு செல்வதும் தெரிய வந்தது. அத்துடன் அவர்கள் டியாகோ கார்சியா தீவில் தரையிறங்க விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.

தஞ்சம் புகுவதற்காக கனடாவை நோக்கி அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது, மோசமாக மாறிய வானிலையும், படகின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் அவர்களின் பயணத்தை திசைத் திருப்பின.

படகு ஆபத்தில் சிக்கியதால், நாங்கள் கரை ஒதுங்க அருகில் ஏதேனும் பாதுகாப்பான இடம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தோம். “அப்போது சிறிது தொலைவில் மெல்லிய வெளிச்சம் தென்படவே, டியாகோ கார்சியா தீவை நோக்கி பயணித்தோம்” என்று படகில் இருந்த ஒரு நபர் பிபிசியிடம் கூறினார்.

பிரிட்டன் கடற்படை கப்பல், படகை பத்திரமாக கரை ஒதுங்க செய்தது. மேலும் அதில் இருந்த அனைவரும் ஓர் தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

20 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. “ஆரம்பத்தில் படகின் இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு குறித்து மட்டும் ஆராய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புலம் பெயர்ந்த குழுவினர், டியாகோ கார்சியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு தஞ்சம் புகுவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க தங்களை வலியுறுத்தலாம் என்ற அனுமானத்தையும் நிராகரிக்க முடியாது” என்றும் தீவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் அனுமானம் அடுத்த நாளே நிஜமானது. தீவில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை தமிழர்கள், அங்கிருந்த பிரிட்டிஷ் கடற்படை தளபதியிடம் ஓர் கடிதத்தை தந்தனர். அதில், “உள்நாட்டில் கடும் கொடுமைகளுக்கு ஆளாகி வந்ததால், 18 நாட்களுக்கு முன் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்தப் பயணத்தை தொடங்கினோம்; நாங்கள் பாதுகாப்பான ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகிறோம்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009 இல் இலங்கை ராணுவத்தினருடன் நடைபெற்ற உள்நாட்டு போரில் வீழ்த்தப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறியதன் விளைவாக தாங்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக அவர்களில் பலர் கூறினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.

தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

மாராயன் என்று பெயரிடப்பட்ட விசைப் படகில் கனடா நோக்கி பயணிக்கும் இலங்கை தமிழர்கள்

முதல்முறையாக நிகழ்ந்த சம்பவம்

இதனிடையே, வெளிநாட்டு பிராந்தியங்களுக்கான பிரிட்டன் இயக்குநரான பால் கேண்ட்லர் வெளியிட்டிருந்த குறிப்பில், “ பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பகுதியில் (BIOT) இதுபோன்றதொரு தஞ்சம் கோரும் சம்பவம் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கை தமிழர்கள் குழுவின் வருகையை “எதிர்பாராத வருகை” எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது என்றும், நிலைமைக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் பால் கேண்ட்லர் தமது குறிப்பில் தெரிவித்திருந்தார்.

“டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்கள் குழு தற்போதைக்கு வெளி உலகுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் நாளடைவில் இந்தச் செய்தி பரவ வாய்ப்புள்ளது” என்றும் கேண்டலரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நரகமாக மாறிய தீவு

இதற்கிடையே, புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக தீவிற்கு வந்தவர்களுக்கு, தங்களின் யதார்த்த சூழ்நிலை போகப்போக புரிய ஆரம்பித்தது.

“ஆரம்பத்தில் இங்கு நான் மகிழ்ச்சியாகவும். உயிர் தப்பியதாகவும் உணர்ந்தேன். முகாமில் உணவு அளிக்கப்பட்டது. அதுநாள் வரை அனுபவித்து வந்த கொடுமைகளில் இருந்து விடுபட்டதாகவும் உணர்ந்தேன்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி என்ற இலங்கை தமிழரான பெண் ஒருவர் கடந்த மாதம் பிபிசியிடம் கூறி இருந்தார்.

ஆனால் தங்களுக்கு அடைக்கலம் அளித்த இந்த வெப்ப மண்டல தீவு விரைவில் நரகமாக மாறியது என்றும் அவர் கூறினார்.

தன்னுடன் படகில் பயணித்து, தீவு முகாமில் தங்கியிருந்த ஒரு நபரால் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

“அப்போது நான் கதறி அழுதேன். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை” என்று லெக்ஷனி கூறினார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க விரும்பியதாக கூறிய அவர், ’ஆனால், பாலியல் வன்கொடுமையின் போது தான் உடுத்தியிருந்த துணியை துவைத்து விட்டதன் விளைவாக ஆதாரத்தை சேகரிப்பது கடினம் என்று தான் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தம்மை பாலியல் வன்புணர்வு செய்த நபரை வேறு கூடாரத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கும் வரை, கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த நபருடனே ஒரே கூடாரத்தில் தாமும் தங்கியிருக்க வேண்டியிருந்தது என்று பரிதாபமாகக் கூறினார் லெக்ஷனி.

ஆனால் பிரிட்டன் அரசு மற்றும் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்திய நிர்வாகங்கள் (பிஐஓடி), இந்த குற்றச்சாட்டு தொடர்பான கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம்,GOOGLE EARTH

தற்கொலை முயற்சி

“முகாமில் நிலவிய சூழல் காரணமாக, தாங்கள் அல்லது தங்களுக்கு தெரிந்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். அதன் விளைவாக அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர் அல்லது தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்டனர். கூர்மையான ஆயுதங்களை விழுங்கியதன் விளைவாக சிலர் மூச்சுத் திணறலுக்கும் ஆளாகினர்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி மற்றும் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

முகாமிற்குள் குறைந்தது 12 தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பது குறித்தும், குறைந்தபட்சம் இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்தது தொடர்பாகவும் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள் என்று புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“நாங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்கிறோம். இங்கு நாங்கள் உயிர்பற்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். என்னை நான் நடைப்பிணமாக உணர்கிறேன். இதன் விளைவாக இரண்டு முறை என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன்” என்று பிபிசியிடம் கூறினார் டியாகோ கார்சியா தீவு முகாமில் இருக்கும் மற்றொரு புலம்பெயர்ந்த நபரான விதுஷன்.

பாதுகாப்பு குறித்த தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தான் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டதாகவும், இத்துடன் வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறினார் முகாமில் இருந்த மற்றொரு நபரான ஆதவன்.

தமது கணவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக, சாந்தி என்ற மற்றொரு பெண் கூறினார்.

கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு விலங்கை போல நான் இங்கு வாழ விரும்பவில்லை என்றும் அவர் மனம் நொந்து கூறினார்.

அதிகாரிகள் மிரட்டல்

2021 இல் இலங்கை ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு தான் ஆளாகி இருந்ததாக குற்றம்சாட்டி, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவேன் என்று முகாமில் இருந்த ஓர் அதிகாரி மிரட்டினார். அதன் விளைவாக தான் தற்கொலைக்குத் தூண்டப்பட்டேன் என்று லக்ஷனி குற்றம்சாட்டினார்.

அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து, தீவில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாமிற்கு பாதுகாப்பு அளித்துவரும் பிரிட்டன் அரசு மற்றும் ‘G4S’ தனியார் நிறுவன நிர்வாகங்கள் பதிலளிக்க மறுத்து விட்டன.

தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை தங்களது அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தி வருகின்றனர் என்று G4S நிறுவன நி்ர்வாகம் தெரிவித்திருந்தது.

பிஐஓடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம். தாங்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டு, அவை குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதியளித்திருந்தார்.

பிஐஓடி நிர்வாகம் அங்கு முகாமில் உள்ளவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

தீவு முகாமில் உண்ணாவிரத போராட்டங்களும் நடந்துள்ளன என்றும், இதில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

டியாகோ கார்சியா தீவில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம் பகுதி

செல்ஃபோன்கள் பறிமுதல்

முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோரின் செல்ஃபோன்கள் மற்றும் தொலைபேசி வசதிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்களுக்கு மருத்துவ வசதி வேண்டாம் என்று தனிநபர்கள் எழுத்துபூர்வமாக விருப்பத்தை தெரிவிக்காத பட்சத்தில், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மருத்துவ சிகிச்சைகளும் திரும்பப் பெறப்பட்டன என்று முகாமில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்தது பிஐஓடி நிர்வாகம். ஓர் உண்ணாவிரத போராட்டத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக முகாமில் இருந்து கூர்மையான ஆயுதங்கள் அகற்றப்பட்டன. இதேபோன்று, முகாமில் இருப்பவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்வதை தடுக்கும் விதத்தில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிஐஓடி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம்,GOOGLE

மொரிஷியஸ் இடமிருந்து கைமாறிய தீவு

ராணுவ தளமாக திகழும் டியாகோ கார்சியா தீவு, புகலிடம் கோரி வருவோரை தங்க வைக்கும் இடம் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளலாம்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள டியாகோ கார்சியா உள்ளிட்ட தீவுகளை உள்ளடக்கிய சாக்கோஸ் தீவை தனது காலனி ஆதிக்கத்தில் இருந்த மொரிஷியஸ் வசமிருந்து 1965 இல் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, டியாகோ கார்சியா தீவில் ராணுவ தளம் அமைப்பதற்காக அங்கிருந்து 1000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் ,1968 இல் மொரிஷியஸ் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. அதன்பின் இந்த தீவுகளை பராமரித்து வரும் மொரிஷியஸ் அரசு, இந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. ஐ.நா. நீதிமன்றமும் இந்த பிராந்தியத்தில் பிரிட்டன் ஆளுகை செலுத்தி வருவது சட்டவிரோதம் என்றும், இந்த நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சாக்கோஸ் தீவுகள் விவகாரத்தில் சர்வதேச அழுத்தத்தை விரும்பாத பிரிட்டன், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு இறுதிவரை கூறி வந்தது.

அமெரிக்காவின் ஆளுகை

சில தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த, அமெரிக்க போர் விமானங்கள் டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளத்தை பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க ராணுவம் விசாரிக்கும் இடமாகவும் இத்தீவு திகழ்கிறது.

டியாகோ கார்சியா தீவு முகாம் முன்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்று லண்டன் நீதிமன்றத்தில் பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.

தற்போது இந்த முகாம், புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகாம் பகுதியைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமிற்குள் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் சிற்றுண்டி சாலை (கேன்டீன்) வசதியும் உள்ளது.

கூண்டு கிளிகள்

ஆனால், “ நாங்கள் கூண்டில் அடைபட்ட கிளிகளாய், எவ்வித சுதந்திரமும் இன்றி இங்கு வாழ்ந்து வருகிறோம்”என்கிறார் முகாமில் உள்ள சாந்தி.

ஓராண்டுக்கு முன்பு வரை முகாமில் இருப்போருக்கு அடிப்படை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எலிகளின் தொல்லை காரணமாக வகுப்புகள் பெரும்பாலும் முகாமிற்கு வெளியே திறந்த வெளியில் தான் நடைபெறும் என்று முகாமில் வசிப்போர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோர்களில் சிலர் தங்களது கோரிக்கையை கைவிட்டு அல்லது நிராகரிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் பலர் தஞ்சம் கோரி, பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனுக்கு சென்றுள்ளனர் என்று தீவு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

தற்போது மீதமுள்ள 60 இலங்கை தமிழர்கள் தங்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுக்காக டியாகோ கார்சியா தீவு முகாமில் இன்னமும் காத்திருக்கின்றனர்.

சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறதா?

அகதிகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான சர்வதேச சட்டங்களில் பிரிட்டன் கையெழுத்து இட்டுள்ளது. ஆனாலும், இந்த சட்டங்கள் பிஐஓடி பிராந்தியத்திற்கு பொருந்தாதது. ஏனெனில் இந்த பிராந்தியம் அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டது மற்றும் பிரிட்டனில் இருந்து தனியானது என்று பிரிட்டன் அரசு கூறி வருகிறது.

பல்வேறு இன்னல்களை அனுபவித்து, மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்படும் நாட்டில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில், டியாகோ கார்சியா தீவு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா அல்லது பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதா என்பதை தீர்மானிக்க தனி செயல் திட்டம் நிறுவப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செயல் திட்டம், அகதிகளுக்கான சட்டத்திற்கு சவால் விடுவதாக இருப்பதாக கூறும் வழக்கறிஞர் டிசா கிரிகோரி, இது அடிப்படையில் நியாயமற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

லண்டனில் அவர் பணிபுரியும் லீ டே நிறுவனம், புகலிடம் கோரி, டியாகோ கார்சியா தீவில் தவித்து வருபவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

பாதுகாப்பான மூன்றாவது நாட்டை பிரிட்டன் அரசாங்கம் இன்னும் அடையாளம் காணாததால் முகாமில் இருப்பவர்களின் வாழ்க்கை நகரமாக்கப்பட்டுள்ளது என்று டிசா கிரிகோரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, பிஐஓடி நிர்வாகம், அதன் சட்டத்திற்கு உட்பட்டும், சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்பவும் தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு கோரிக்கைகள் பரிசீலித்து வருகிறது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

ஐநா கவலை

டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் நிலவும் மோசமான சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் (UKHCR) பிரிட்டன் அலுவலகம் பிபிசியிடம் கவலை தெரிவித்துள்ளது.

“பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் தஞ்சம் அடைந்துள்ளவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கான அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இவர்களின் பாதுகாப்பை பிரிட்டன் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரிட்டன் வழக்கறிஞரும், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான இமைய்லி மெக்டோனல் அண்மையில் வலியுறுத்தி இருந்தார்.

தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட 5 புலம்பெயர்ந்தோர். இவர்களில் இருவர் டியாகோ கார்சியா தீவிற்கே மீண்டும் திரும்பினர்

பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு

டியாகோ கார்சியாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள போவதில்லை என்று பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீவில் தஞ்சம் புகுந்த தமிழர்களில் மூன்று பேர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சி மற்றும் தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர்கள்

டியாகோ கார்சியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

என்று பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.

ருவாண்டாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவருக்கு கடந்த மாதம் பிஐஓடி நிர்வாகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. பிபிசியின் பார்வைக்கு கிடைத்துள்ள அந்த கடிதத்தில், “ ருவாண்டாவில் மருத்துவத்துக்கான செலவுடன், அங்கு தனியார் விடுதிகளில் தங்குவதற்கான செலவையும் பிஐஓடி நிர்வாகம் ஏற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த யோசனை உங்களுக்கு திருப்தி அளிக்காதபட்சத்தில், நீங்கள் மீண்டும் டியாகோ கார்சியாவுக்கு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போதைய சூழலில் உங்களை வேறு நாட்டிற்கு அனுப்ப வழிகள் எதுவும் இல்லை” என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தங்களை அனுப்பும்படி கோரியிருந்த இத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள நான்கு பேரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோரிக்கையாளர்களில் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பிஐஓடி நிர்வாகம் அனுப்பியிருந்த கடிதம் பிபிசியின் கைக்கு கிடைத்துள்ளது. அதில், “உங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடிக்கும் இழுபறி

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசிக்கு அண்மையில் கிடைத்துள்ள அறிக்கையில், “டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைந்துள்ள புலம்பெயர்ந்தோரின் தற்போதைய நிலைமையை மாற்ற, நீண்ட கால தீர்வு காணும் நோக்கில், பிஐஓடி நிர்வாக்கத்துடன் பிரிட்டன் அரசு அயராது உழைத்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்,டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களை, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதற்கான தெளிவான காலக்கெடு வரையறுக்கப்படாமல் உள்ளதும், இந்த விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கலும் இவர்களின் நிலையை தொடர்ந்து இழுபறியாகவே வைத்திருக்கக்கூடும்.

“20 மாதங்கள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு நாங்கள் அனைவரும் நம்பிக்கை இழந்துவிட்டோம்” என்று விரக்தியுடன் கூறுகிறார் டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர் ஒருவர்.

https://www.bbc.com/tamil/articles/cy97ng3k8nwo

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானது - பிரிட்டன் நீதிமன்றம்

Published By: RAJEEBAN

29 JUN, 2023 | 03:15 PM
image
 

குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின்  ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்தநாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படும் ஆபத்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ருவாண்டா திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/158843

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள், தற்கொலைகள்!; பரிதாப நிலையில் டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் - ஐ.நா. தகவல்

Published By: RAJEEBAN   19 FEB, 2024 | 12:34 PM

image

டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் தங்கள் பாதுகாப்பாக இல்லை மறக்கபட்டுள்ளோம் என ஐநாவின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்முறைகள், சிறுவர்கள் துன்புறுத்தப்படுதல் குறித்தும் தெரிவித்துள்ள அவர்கள்  தற்கொலைகளும் தங்களிற்கு தாங்களே காயங்களை ஏற்படுத்திக் கொள்ளுதலும்  அங்கு சிக்குண்டுள்ள குடியேற்றவாசிகள் மத்தியில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் அமைப்பின் அதிகாரிகள் அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக டியாகோ கார்சியாவிற்கு சென்றுள்ளனர்.

diego-garcia_main.jpg

அங்கு காணப்படும் நிலைமை கட்டாயமாக தடுத்துவைத்தல் போன்று காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் ஐக்கியநாடுகளின் அகதிகளிற்கான அமைப்பின் பிரதிநிதிகள் டியோகோ கார்சியாவிற்கு விஜயம் சென்றுள்ளனர்.

டியோகோர் கார்சியாவில் இலங்கையை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சிக்குண்ட பின்னர் அவர்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்காக வெளிதரப்பு உள்ளே சென்றது இதுவே முதல் தடவை.

ஐநா அமைப்பின் விஜயத்தின் பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை நீதிமன்றம் பிபிசிக்கு வழங்கியுள்ளது.

ஐநாவின் அகதிகளிற்காக அமைப்பின் பிரதிநிதிகள் டியோகார்சியாவில் உள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சந்தித்தவேளை அவர்கள் பாலியல் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களும் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டியாகோர் கார்சியாவில் சிக்குண்டுள்ள ஏனைய இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவமானம் சமூகத்தின் பார்வை குறித்த கவலைகள் காரணமாக பாலியல்வன்முறைகள் குறித்து முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை என குடியேற்றவாசிகள் கருதுகின்றனர். வலுவான பதில் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கப்போகவில்லை என கருதுவதாலும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குகின்றனர் என  தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

புகலிடக்கோரிக்கையாளர்களுடன் பேசியவேளை அவர்கள் பாலியல் வன்முறைகள் துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்ததால் எந்த பயனும் இல்லை என கருதுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா முறைப்பாடு செய்வதால் பாதுகாப்பு நீதி போன்ற விடயங்களில் முன்னேற்றம்  ஏற்படப்போவதில்லை என அவர்கள் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரே முகாமில் வசிப்பதாலும் முறைப்பாடுகள் செய்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என புகலிடக்கோரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் குடும்பங்களிற்கு ஒரு கூடாரம் திருமணமாகத ஆண்களிற்கு ஒரு கூடாரம் என பிரித்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் இதன் பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான போதுமான பொறிமுறையாக இது காணப்படவில்லை  என தெரிவித்துள்ள ஐநா ஏனைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை காணமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

உரிய வேலிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் குடியேற்றவாசிகள் தாங்கள் எலிக்கடிக்குள்ளாவதாகவும்  தெரிவித்துள்ளனர் என ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடற்கரைக்கு செல்லவிரும்பினால் கூட பாதுகாப்பு தரப்பினருடனேயே செல்லவேண்டியுள்ளது என டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள தமிழ் குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது அந்த மக்கள் விரக்தியால் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது மேலும் தற்கொலைகள் தங்களுக்குதாங்களே தீங்கிழைத்தல் போன்றவை இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என  ஐநா தெரிவித்துள்ளது.

16 சிறுவர்களை உள்ளடக்கிய தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் குழுவினர் தாங்கள் சலிப்படைந்துள்ளதாகவும் மனச்சோர்வுடனும் நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் .

நாங்கள் மறக்கப்பட்டவர்களாகிவிட்டோம் என ஒருவர் தெரிவித்துள்ளனர் - எங்கள் வாழ்க்கைய முடித்துக்கொள்வது குறித்து எங்களில் அனேகமானவர்கள் கருதுகின்றோம்  என பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார் என ஐநா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/176742

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ஆக்களுக்கு இன்னும் 18 மாதங்களுக்கு வீசா நீட்டிப்பும்.. பிற வீசாக்களுக்கு விண்ணப்பிக்கவும்.. கல்வி.. சுகாதாரம்.. பொதுச் சேவைகளை பயன்படுத்த அனுமதியும் வழங்கியுள்ள பிரிட்டன்.. இந்த ஈழ அகதிகளை மட்டும் இப்படி நடத்த என்ன காரணம்..????!

இதில எம்மவர்கள் சிலர்.. உக்ரைனுக்கு சப்போட்...???!

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் ரகசிய ராணுவ தளத்தில் சிக்கிக் கொண்ட இலங்கைத் தமிழர்கள் - என்ன நடக்கிறது?

சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்; மறைந்திருக்கும்  ரகசிய அமெரிக்க ராணுவ தளம் - டியாகோ கார்சியா தீவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மொரீஷியஸ் இந்த பவளத் தீவின் மீது இறையாண்மையைக் கோருகிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆலீஸ் கட்டி
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 11 ஜூலை 2024
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

``டியாகோ கார்சியா” - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு.

இந்தத் தீவில் புலம்பெயர்ந்தோர் குழுவை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை, பயோட் (British Indian Overseas Territory BIOT) எனப்படும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தின் உச்சநீதிமன்றத்தில் இந்த வாரம் நடைபெறவிருந்தது. இதில் பிபிசி செய்தியாளர்கள் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.

இந்த வழக்கு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அமெரிக்க அரசாங்கம் பிரிட்டனில் விசாரணை நடத்துவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

பிபிசிக்கு கிடைத்த நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தடை செய்துள்ளனர்.

பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் அமைந்துள்ள இந்தத் தீவு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து பல நூறு மைல் தொலைவில் அமைந்துள்ளது என்பதுடன், முன் அனுமதி பெறாத நபர்கள் அந்தப் பகுதிக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்; மறைந்திருக்கும்  ரகசிய அமெரிக்க ராணுவ தளம் - டியாகோ கார்சியா தீவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டியாகோ கார்சியாவின் வான்வழி காட்சி.

நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த வாரம், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள், புலம்பெயர்ந்தோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் "செய்தியாளர்கள்" (பிபிசி) தீவை அணுகுவதற்குக் கொடுத்த தங்களின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றதாக அறிவித்தனர்.

விசாரணையின் பங்கேற்பாளர்களை டியாகோ கார்சியாவிற்கு அமெரிக்க ராணுவ விமானங்களில் அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களின் செயல்பாடுகள் போதுமான அளவு கவனிக்கப்படும் வரை, தீவுக்குள் போக்குவரத்து, தங்குமிடம் அல்லது உணவு அவர்களுக்கு வழங்கப்படாது என்று பிராந்தியத்தின் துணை ஆணையர் நிஷி தோலாகியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் இந்தப் பயணம் இருந்ததாக கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அபாயங்கள்

சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்; மறைந்திருக்கும்  ரகசிய அமெரிக்க ராணுவ தளம் - டியாகோ கார்சியா தீவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,COURTESY OF MIGRANTS IN DIEGO GARCIA

படக்குறிப்பு,டியாகோ கார்சியாவில் புலம்பெயர்ந்தோர் முகாம்

புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று அக்டோபர் 2021இல் ஒரு மீன்பிடிப் படகில் டியாகோ கார்சியா தீவுக்குள் நுழைந்தது.

அவர்கள் தஞ்சம் கோருவதற்காக கனடாவுக்கு செல்ல முயன்றபோது,அவர்களது படகு டியாகோ கார்சியா அருகே சிக்கி கொண்டது. அதன் பிறகு அவர்கள் அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினர்.

கடந்த வியாழன் இரவு - நீதிபதி, பிரிட்டன் அரசு வழக்கறிஞர்கள், புலம்பெயர்ந்தோருக்கான பிரதிநிதிகள் மற்றும் பிபிசி பிரதிநிதிகள் ஆகியோர் விசாரணையில் கலந்துகொள்ள விமானத்தில் ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு - விசாரணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

புலம்பெயர்ந்தோர் முகாம் மற்றும் டியாகோ கார்சியாவின் பிற பகுதிகளை உள்ளடக்கிய விசாரணையில் பங்கேற்பதற்காக திட்டமிடப்பட்ட பயணத்தைக் குறிப்பிட்டு, அமெரிக்கா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களில் சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டிஷ் நிறுவனமான லீ டேயின் வழக்கறிஞரான டாம் ஷார்ட், ``விசாரணையை ரத்து செய்தது அங்கு பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் எங்கள் வழக்குதாரர்களுக்கு ஒரு பேரழிவைத் தரும் செயல்பாடு” என்று கூறி, மீண்டும் வழக்கு விசாரணையைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொண்டார்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய செவ்வாயன்று மெய்நிகர் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. லண்டனில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் டியாகோ கார்சியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

சர்ச்சைக்குரிய பிரதேசம்

சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்; மறைந்திருக்கும்  ரகசிய அமெரிக்க ராணுவ தளம் - டியாகோ கார்சியா தீவில் என்ன நடக்கிறது?

டியாகோ கார்சியா சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதி, இது 1965இல் பிரிட்டன் அரசு அதன் காலனியான மொரிஷியஸில் இருந்து தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தது. பின்னர் ராணுவ தளத்தை அமைப்பதற்காக 1,000க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றியது.

கடந்த 1966ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், 50 ஆண்டுகளுக்கு இப்பகுதியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தது. அதன் பின்னர் கூடுதலாக 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. பயோட் இணையதளத் தகவலின்படி, ஒப்பந்தம் 2016இல் நீட்டிக்கப்பட்டது மற்றும் 2036இல் காலாவதியாகிறது.

இந்தப் பிரதேசம் லண்டனில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் பிரிட்டனில் இருந்து "அரசமைப்பு ரீதியாக வேறுபட்டது" என்று விவரிக்கப்படுகிறது.

கடந்த 1968இல் சுதந்திரம் பெற்ற மொரிஷியஸ், இந்தப் பவளத் தீவு தனக்கு சொந்தமானது என்று கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர்நீதிமன்றம் "பிரிட்டனின் நிர்வாகம் சட்டவிரோதமானது. தீவில் அதன் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.

அதே நேரம் டியாகோ கார்சியாவின் பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தங்குமிடம், போக்குவரத்து உணவகங்கள், கடைகள் என அனைத்தையும் நிர்வகிப்பது அமெரிக்காதான்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்க ராணுவத்தால் இயக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் மக்களை அனுமதிக்க அமெரிக்கா மறுத்து வருகிறது.

அதிகாரப்பூர்வ பயோட் இணையதளம், "ராணுவ நிறுவல் அல்லது தீவின் அரசு நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு" மட்டுமே இங்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.

 

முக்கியமான போர் தளம்

டியாகோ கார்சியா அமெரிக்காவின் முக்கியமான ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான மூலோபாய தளமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு பி-52 குண்டுவீச்சு விமானங்கள் பயிற்சிக்காக டியாகோ கார்சியா பகுதிக்கு அனுப்பப்பட்டன.

சமீபத்திய ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் மீது குண்டு வீசுவதற்காக அமெரிக்க விமானங்கள் இந்தத் தளத்திலிருந்துதான் புறப்பட்டுச் சென்றன.

கடந்த 2002ஆம் ஆண்டில் குறைவான சட்டக் கட்டுப்பாடுகளுடன் பயங்கரவாத குற்றங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ரகசிய `ரெண்டிஷன் விமானங்கள்’ (rendition flights) நாட்டில் தரையிறக்கப்பட்டதை பிரிட்டன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் டியாகோ கார்சியாவில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப் படுபவர்களுக்கு அடைக்கலம் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் சிஐஏ இயக்குநர் மைக் ஹைடன் மறுத்துள்ளார்.

 

புலம்பெயர்ந்தோர் முகாம்

சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்; மறைந்திருக்கும்  ரகசிய அமெரிக்க ராணுவ தளம் - டியாகோ கார்சியா தீவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,COURTESY OF MIGRANTS IN DIEGO GARCIA

படக்குறிப்பு,புலம்பெயர்ந்தோர் தீவுக்குள் வருவதற்கு முன்பு படகில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

கடந்த 2021 அக்டோபரில் 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இந்தத் தீவில் தரையிறங்கினர். இந்த பிரிட்டிஷ் பிரதேசத்தில் புகலிட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த முதல் மக்கள் குழு அவர்கள்தான்.

குறைந்தபட்சம் 16 குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் இங்கு தங்கியுள்ளனர். இங்கு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பல்வேறு சிக்கலான சட்ட மோதல்கள் நடந்து வருகின்றன.

தனியார் பாதுகாப்பு நிறுவனமான `G4S’ இன் கண்காணிப்பின் கீழ் வேலி அமைக்கப்பட்ட முகாமுக்குள், அவர்கள் கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

இந்தத் தீவில் பல தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பதாகவும் முகாம்களுக்குள் புலம்பெயர் மக்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

சில புலம்பெயர்ந்தோர் தற்கொலை முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் "பாதுகாப்பான மூன்றாம் நாட்டில்" (safe third country) மீள்குடியேறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

 

'கூண்டுக் கிளிகள்' போன்ற முகாம் வாழ்க்கை

கடந்த ஆண்டு இறுதியில் ஐநா குழு இந்த முகாமுக்குச் சென்று ஆய்வு செய்தது. ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்குள்ள நிலைமைகள் சிறைவாசத்திற்குச் சமம் என்று கருதினர்.

பிபிசி உடனான நேர்காணல்களில், புலம்பெயர்ந்தோர் அந்தத் தீவின் நிலைமைகளை ``நரகம் போன்றது’’ என்று விவரித்துள்ளனர். "நாங்கள் ஒரு கூண்டுக் கிளிகளாக அடைப்பட்டு இருக்கிறோம்" என்று குறிப்பிட்டு முகாமில் தங்கியிருக்கும் ஒருவர் கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை நடந்த மெய்நிகர் விசாரணையின் போது, தீவிலுள்ள முகாமில் வசிக்கும் ஒருவர் மயங்கி சரிந்து விழுந்தார். பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் முன்பு பிபிசியிடம் இந்தப் பகுதி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று கூறியது.

மேலும் "புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும், விண்ணப்பங்கள் ஏற்கப்படுபவர்களுக்குப் பொருத்தமான மூன்றாவது நாட்டைக் கண்டறியவும் அயராது உழைத்து வருவதாகவும்" கூறியது.

"பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் புலம்பெயர்ந்தோரின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமை," என்றும் அவர் கூறினார்.

கூடுதல் தகவல்கள்: சுவாமிநாதன் நடராஜன்

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளை நாட்டிற்குள் அழைப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் தீர்மானம் - சட்டத்தரணிகள் தகவல்

image

டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனிற்குள் வருவதற்கு அனுமதிக்கும் திட்டமொன்றை பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ளது.

சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்றுவருடங்களாக டியாகோகார்சியாவின்  தற்காலிக கூடாரங்களில் வசித்துவருகின்றனர். இவர்கள் அங்கு புகலிடக்கோரிக்கையை பதிவுசெய்துள்ளனர்.

டியாகோகார்சியா தீவில் புகலிடக்கோரிக்கையை பதிவு செய்த முதலாவது புகலிடக்கோரிக்கையாளர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்ததீவில் அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் இரகசிய இராணுவதளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிலிருந்து இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளை பிரிட்டனிற்குள் கொண்டுவருவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் முன்னர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது - 

இந்த நிலையில் கொள்கை மாற்றமொன்றை செய்வதற்கு பிரிட்டன் அரசாங்கம் இணங்கியுள்ளது என அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் அனைத்து இந்தகுடியேற்றவாசிகளில் பெண்கள் சிறுவர்கள் அனைவரையும் நேரடியாக பிரிட்டனிற்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகளை எதிர்கொள்ளாத ஆண்களிற்கும் அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது அடுத்த 48 மணித்தியாலத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

டியாகோகார்சியாவில் உள்ள தமிழர்களை தொடர்புகொண்டு பேசியுள்ள பிரிட்டன் அதிகாரியொருவர் டியாகோகார்சிய தீவில் காணப்படும் வழமைக்கு மாறான சூழ்நிலை காரணமாக அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டியாகோர்கார்சியாவை சென்றடைந்த புலம்பெயர்ந்தோர் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தினால் தீர்க்கப்படாத ஆழமான சிக்கலான சூழ்நிலையை தற்போதைய அரசாஙகம் சுவீகரிக்க நேர்ந்தது என  பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டியாகோகார்சியா எப்போதும் புலம்பெயர்ந்தவர்களிற்கு நீண்டகாலத்திற்குரிய இடமாக விளங்கியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் நலன்களையும் பிரிட்டனின் பகுதியின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யும் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் நீண்டகாலமாக முயற்சி செய்துவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் நீதிக்கான நீண்ட மோதலிற்கு கிடைத்த வரவேற்க தக்க நடவடிக்கை இதுவென தெரிவித்துள்ளனர்.

மூன்று வருடங்கள் மனிதாபிமானமற்ற சூழலில் வாழநேர்ந்த பின்னர், நீதிமன்றத்தில் பல அநீதிகளிற்கு எதிராக போரிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர், பிரிட்டன் அரசாங்கம் எங்கள் கட்சிக்காரர்கள் நேரடியாக பிரிட்டனிற்குள் வரலாம் என தீர்மானித்துள்ளது என டங்கன் லூவிஸ் என்ற பிரிட்டனின் சட்ட நிறுவனத்தின் சைமன் ரொபின்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தீர்மானம் எங்கள் கட்சிக்காரர்களிற்கு பெரும் ஆதரவளிக்கும்  ஒன்று, முகாம்களை மூடிவிட்டு தாமதமின்றிஎங்கள் வாடிக்கையாளர்களை கொண்டுவருமாறு உள்துறை அமைச்சினை கேட்டுக்கொள்கின்றோம் என லேய் டேயின் சட்டத்தரணி டொம் சோர்ட் தெரிவித்துள்ளார்.

இது கனவுபோல உள்ளது, எதனை சிந்திப்பது என தெரியவில்லை என தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197961

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.