Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆசிய கோப்பை 2023: போட்டிகள், இடங்கள் தொடர்பில் அறிவிப்பு

ஆசிய கோப்பை 2023 ஒகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 17 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

2023 ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 13 ஒருநாள் போட்டிகளில் நடைபெறவுள்ளன.

Asia-Cup-725588-1024x384.jpg

நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் இந்த போட்டி கலப்பின மாதிரியில் நடத்தப்படுகின்றது.

2023 பதிப்பு இரண்டு குழுக்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்குத் தகுதி பெறும்.

சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

https://thinakkural.lk/article/258618

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆகஸ்ட் 30 இல் ஆரம்பம் : இந்தியா - பாகிஸ்தான் செப்டெம்பர் 2 இல்

Published By: VISHNU

19 JUL, 2023 | 07:46 PM
image
 

(நெவில் அன்தனி)

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம்  திகதி  ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி நிறைவடையும் என அறிய கிடைக்கிறது.

இவ் வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31ஆம் திகதி ஆரம்பமாகும் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும் ஒரு நாள் முன்னதாக ஆரம்பமாகும் என புதிய அட்டவணைப் பிரகாரம் தெரியவருவதாக க்ரிக்இன்போவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

c8fa3acd-c972-46fd-9021-68b97ce3f08d.jpg

பாகிஸ்தான் தனது ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை முல்டானில் ஆகஸ்ட் 30ஆம் திகதி எதிர்த்தாடும்.

பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகளும் இன்னும் சில போட்டிகளும்  இலங்கையில் நடத்தப்படவுள்ளது.

இதன் பிரகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து பல தடவைகள் அட்டவணையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தது.

இவ் வருட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் 13 போட்டிகள் மொத்தமாக விளையாடப்படவுள்ளதுடன் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.

ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியனவும் பி குழுவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகியனவும் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு குழுகளிலும் லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்கைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெறும். சுப்பர் 4 சுற்று நிறைவில் முதலிரண்டு இடங்கைளைப் பெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

இந்தியாவில் அக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இம்முறை 50 ஓவர்களைக் கொண்டதாக நடத்தப்படும்.

ஆப்கானிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி லாகூரில் செப்டெம்பர் 3ஆம் திகதியும் இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி கடாபி விளையாட்டரங்கில் செப்டெம்பர் 5ஆம் திகதியும் நடைபெறும்.

இந்த சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் பாகிஸ்தான் ஏ1 அணியாகவும் இந்தியா ஏ2 அணியாகவும் பி குழுவில் இலங்கை பி1 அணியாகவும் பங்களாதேஷ் பி2 அணியாகவும் நிரல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரண்டு குழுக்களிலிருந்தும் நேபாளமும் ஆப்கானிஸ்தானும் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றால் அவை வெளியேறும் அணிக்கான நிரல்படுத்தலுக்குரிய இடத்தைப் பெறும்.

பாகிஸ்தானில் ஒரே ஒரு சுப்பர் 4 போட்டி செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெறம். அப்போட்டியில் ஏ1  அணியும்  பி2 அணியும் விளையாடும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றால் அந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி பல்லேகலையில் செப்டெம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.

தம்புளையில் மூன்று சுப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

https://www.virakesari.lk/article/160429

  • நியானி changed the title to ஆசிய கோப்பை 2023: கிரிக்கெட் போட்டிகள்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கிண்ணப் போட்டியை நடத்தும் இலங்கைக்கு முன்னாள் இந்திய அணித் தலைவர் அஸார் பாராட்டு

Published By: VISHNU

04 AUG, 2023 | 05:10 PM
image
 

(நெவில் அன்தனி)

ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் பெரும்பாலான போட்டிகளை இங்கு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த துணிச்சலான முடிவு முழு ஆசிய பிராந்திய கிரிக்கெட்டுக்கும் உந்து சக்தியாக அமைந்தள்ளது என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மொஹமத் அஸாருதின் பாராட்டினார்.

இந்தியாவினால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அஸாருதின், தனது முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் குவித்து அசத்தியவர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அழைப்பை ஏற்று எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் பி லவ் கண்டி அணிக்கு ஆலோசகராக வருகை தந்திருந்த அஸாருதின், ஆர். பிரேமதாச அரங்கில் ஊடகவியலாளர்கள் கூடத்திற்கு வருகை தந்து கருத்து வெளியிட்டபோது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயற்பாடுகளை பாராட்டினார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அஸாருதின்,

'ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்துவதற்கான அனுமதியை ஆசிய கிரிக்கெட் பேரவையிடமிருந்து பெறுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவினால் எடுக்கப்பட்ட முயற்சி அற்புதமானது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி இங்கு நடைபெறவுள்ளமை எல்லாவற்றையும் விட சிறப்பானது. அவரது இந்த முயற்சியானது கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கு மட்டுமல்லாமல் முழு ஆசிய பிராந்தியத்திலும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்வதற்கான ஓர் அரிய முயற்சியாக நான் பார்க்கிறேன். இது மிகவும் பாராட்டுக்குரியது' என்றார்.

இலங்கையில் நடத்தப்படும் எல்பிஎல் பற்றி பேசிய அவர்,

'இண்டியன் பிறீமியர் லிக் கிரிக்கெட்டைப் போன்று இலங்கையிலும் லங்கா பிறீமியர் லீக் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும். இலங்கையில் எல்பிஎல் நான்காவது தடவையாக நடத்துப்படுகின்றது என்பதை அறிகிறேன். இது உள்ளூர் வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வர வழிவகுக்கும். மேலும் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும்போது உள்ளூர் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

'அடுத்த சில வருடங்களில் கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை பெரு முன்னேற்றம் அடையும் என நம்புகிறேன். மேலும் இத்தகைய போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் உள்ளூர் வீரர்கள் தங்களது வருவாயையும் அதிகரித்துக்கொள்கின்றனர். அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்' என்றார்.

1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கைக்கு வருகை தர மறுத்தபோது இந்தோ - பாகிஸ்தான் கூட்டு அணி இலங்கைக்கு வருகை தந்து விளையாடி இருந்தது.

அந்த நினைவுகள் பற்றி அஸாருதினிடம் 'வீரகேசரி ஒன்லைன்' கேட்டபோது,

'அது ஓர் அற்புதமான தருணம். இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகை தர அஞ்சிய வேளையில், இங்கு பாதுகாப்பு உள்ளது என்பதை கிரிக்கெட் உலகிற்கு மட்டமல்ல முழு உலகுக்கும் உணர்த்தவே எமது இரண்டு அணிகளும் (இந்தியா-பாகிஸ்தான்) வருகை தந்து ஆர். பிரேமதாச மைதானத்தில் கூட்டாக விளையாடினோம். அது மறக்க முடியாத தருணம். மேலும் இதே மைதானத்தில் எமக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 900க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்ததையும் என்னால் மறக்க முடியாது. நான் இலங்கை கிரிக்கெட்டின் இரசிகன். எனவே இலங்கைக்கான எனது விஜயங்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்' என பதிலளித்தார்.

துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் ஆற்றல் மிக்கவர்

இந்தியாவின் துடுப்பாட்ட நட்சத்திரங்களில் ஒருவரான அஸாருதினின் உச்ச கட்ட ஆற்றல்களை நேரில் கண்டவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 1984இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அஸாருதின் முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சதங்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவர் க்றெக் செப்பல், பாகிஸ்தான் முன்னாள் விரர் ஸஹீர் அபாஸ் ஆகியோரைப் போன்று 'லெக் - சைட்' பக்கமாக அஸாருதின் க்ளான்ஸ் பண்ணுவது மிகவும் அற்புதமாக இருக்கும். காலவட்டத்தில் பெரு முன்னேற்றம் அடைந்த அஸாருதின் நாலாபுறமும் பந்தை அடிக்கக்கூடிய திறமையான வீரராக பிரகாசித்தார்.

அவரது காலத்தில் இந்திய வீரர்கள் களத்தடுப்பில் பெரிய அளவில் திறமைசாலிகளாக இருக்கவில்லை. ஆனால், அஸாருதின் எல்லோரையும் விட அதிசிறந்த களத்தடுப்பாளராக செயற்பட்டு மற்றையவர்களை ஊக்குவித்தார்.

கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இங்கலாந்துக்கு எதிராக 1990இல் அவர் குவித்த சதத்தை (121 ஓட்டங்கள்) எல்லாம் வல்ல இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தனது முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் குவித்து அசத்திய அஸாருதின், தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட்களிலும் பிரகாசிக்கத் தவறினார்.

99 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள், 21 அரைச் சதங்களுடன் 6215 ஓட்டங்களைக் குவித்த அஸாருதின், 334 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7 சதங்கள், 58 அரைச் சதங்களுடன் 9378 ஓட்டங்களைப் பெற்றார்.

2000ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடைபெற்ற அஸாருதின், 9 வருடங்கள் கழித்து அரசியல் களத்தில் பிரவேசித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 2009இலிருந்து  2014வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் 27ஆவது தலைவராக 2019இல் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வருடம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/161621

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கிண்ண கிரிக்கெட் டிக்கெட்டின் விலை ஒரு இலட்சம் ரூபா- கடவுச் சீட்டு அல்லது அடையாள அட்டை டிக்கெட் கொள்வனவுக்கு அவசியம்!

18 AUG, 2023 | 03:38 PM
image
 

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டிகளுக்கான டிக்கெட் ஒன்றின் அதிகப்பட்ச விலை 400 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நாணயப்படி அதன் விலை 128,800 ரூபாவாகும்.

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டின் அதிகபட்ச விலை 300 அமெரிக்க டொலர்களாகும் (92,000 ரூபா)

விளையாட்டரங்கில்  வெட்டவெளி புல்தரைக்கான குறைந்தபட்ச விலை 30 அமெரிக்க டொலர்களாகும். (9,660 ரூபா)

பல்லேகலையில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் சில மணித்தியாலங்களில் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 14,000 பேர் இலங்கை வருகை தரவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்  சூப்பர் 4 அணிகளுக்கிடையிலான போட்டியின் போது பிரதான விளையாட்டு மண்டபத்தின் மேல் மாடியில் ஒரு டிக்கெட்டின் அதிகபட்ச விலை சுமார் 400 அமெரிக்க டொலர்கள் (128,800 ரூபா) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இலங்கை தவிர்ந்த ஏனைய அணிகள் பங்குபற்றும்  சுற்று போட்டிகளுக்கு குறைந்தபட்ச விலையான 3 அமெரிக்க  டொலர்களுக்கு (966 ரூபா) ஒன்லைனில் டிக்கெட் பெற முடியும்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆரம்பமானது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு டிக்கெட்களை ஒன்லைனில் பெறவிரும்புவோர் கடவுச்சீட்டு இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவிடுவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-இந்தியா போட்டிக்கு கடவுச் சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டைக்கு ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/162648

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா அல்ல‌து பாக்கிஸ்தான்

இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று கோப்பைய‌ தூக்குவார்க‌ள்

 

அதிஷ்ட‌ம் கை கொடுத்தால் இல‌ங்கையும் கோப்பைய‌ தூக்க‌ கூடும்

 

பும்ரா காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்து விட்டார் இது இந்தியா அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் 

 

ஆசிய‌ கோப்பை முடிய‌ உல‌க‌ கோப்பை

உல‌க‌ கோப்பைக்கு தான் அதிக‌ வ‌ர‌வேற்ப்பு கூட‌🙏🥰.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா அணி வீர‌ர்க‌ளை இன்று அறிவித்து இருக்கின‌ம் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை தான் தெரிவு செய்து இருக்கின‌ம்...........ஆனால் கோப்பை தான் இவ‌ர்க‌ள் கைக்கு போகுதில்லை 😁😁😁😁😁😁😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கிண்ண கிரிக்கெட் : இந்திய குழாத்தில் ஜஸ்ப்ரிட் பும்ரா

22 AUG, 2023 | 10:41 AM
image
 

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா பெயரிடப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இருபது 20 போட்டிக்குப் பின்னர் உபாதை காரணமாக 11 மாதங்கள் விளையாடாமல் இருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா, அயர்லாந்துக்கு எதிரான தற்போதைய இருபது 20 தொடரில் அணித் தலைவராக விளையாடி வருகிறார்.

அயர்லாந்துடான முதல் இரண்டு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் விளையாடத் தயார் என்பதை ஜஸ்ப்ரிட் பும்ரா நிரூபித்தார்.

இதனைத் தொடர்ந்தே ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய குழாத்தில் பும்ரா இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அவரைவிட உபாதையிலிருந்து மீண்டுள்ள கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

சர்வதேச இருபது 20 போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ள திலக் வர்மா முதல் தடவையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித் தலைவராக ரோஹித் ஷர்மாவும் உதவி அணித் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இந்தியா தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானை செப்பெடம்பர் 2ஆம் திகதியும் நேபாளத்தை செப்டெம்பர் 4ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் பல்லேகலையில் நடைபெறும்.

இந்திய கிரிக்கெட் குழாம்

ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான கில், இஷான் கிஷான், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், ப்ராசித் கிருஷ்ணா.

https://www.virakesari.lk/article/162902

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அபாகிஸ்தான் இந்த‌ ஆசியா கோப்பைய‌ வென்றால் எப்ப‌டி இருக்கும்

 

அன்டைக்கு பாகிஸ்தானை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்தும் அனுப‌வ‌ம் இல்லா புது முக‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர‌ ப‌ந்து போட‌ விட‌ அவ‌ர் த‌ன்ட‌ இஸ்ர‌த்துக்கு அங்கையும் இங்கையுமாய் எறிந்து அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌ ப‌டியால் அப்கானிஸ்தான் தோல்வி

அப்கானிஸ்தான் அணி மெது மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருது.............குப்பை வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு திற‌மையான‌ வீர‌ர்க‌ளை அணியில் சேர்த்தால் அப்கானிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

29 AUG, 2023 | 09:44 PM
image
 

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானிலும் இலங்கையிலும் கூட்டாக நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை குழாத்தில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு வாய்ப்பு வழக்கப்படவில்லை.

உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க ஆகியோருக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான் ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள குசல் ஜனித் பெரேரா பூரண ஆரோக்கியம் பெற்றதும் குழாத்தில் இணைந்துகொள்வார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் மாதம் உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளும் 50 ஓவர்களாக நடத்தப்படுகிறது.

கடந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான அணிக்கு தலைமை தாங்கிய தசுன் ஷானக்க, 50 ஓவர் அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவித் தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

பாகிஸ்தானுக்கும் நேபாளத்துக்கும் இடையில் முல்தானில் புதன்கிழமை (30) நடைபெறவுள்ள போட்டியுடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர்), சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, மதீஷ பத்திரண, கசுன் ராஜித்த, துஷான் ஹேமன்த, பினுர பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான்.

https://www.virakesari.lk/article/163466

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று ஆரம்பம்

30 AUG, 2023 | 08:53 AM
image
 

(நெவில் அன்தனி)

இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக ஒத்திகை களமாக அமையவுள்ள 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட், பாகிஸ்தானுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான ஏ குழு போட்டியுடன் முல்தானில்  இன்று புதன்கிழமை (30) ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தானிலும் இலங்கையிலும் கூட்டாக நடைபெறும் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஆசிய கிரிக்கெட்டின் முன்னணி அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியன ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

அதேவேளை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் தத்தமது அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரவேற்பு நாடாக பாகிஸ்தான் திகழ்கின்றபோதிலும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.

ஏ குழுவில் இடம்பெறும் இந்தியாவும் பாகிஸ்தானும் நேபாளத்தை வீழ்த்தி சுப்பர் சுற்றுக்குள் நுழையும் என நம்பப்படுகிறது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் சந்திக்காத நிலையில் இந்த வருடம் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பி குழுவில் இடம்பெறும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளில் எந்த இரண்டு அணிகள் சுப்பர் சுற்றுக்கு முன்னேறும் என்பதை அனுமானிப்பது இலகுவல்ல.

எவ்வாறாயினும் நடப்பு ஆசிய கிண்ண (இ20) சம்பியன் இலங்கை, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதைக் குறியாகக் கொண்டு விளையாடவுள்ளது.

ஆரம்பப் போட்டி

நேபாளத்துக்கு எதிராக முதல்தானில் புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியின் மூலம் ஆசிய கிண்ண வெற்றிக்கான முயற்சியை கடும் உஷ்ணத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ஆரம்பிக்கவுள்ளது. 15 வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் பன்னாடுகள் பங்குபற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலாவது அணி என்ற அந்தஸ்துடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்கிறது.

இலங்கை அணியினர் மீது லாகூரில் 2009இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அண்மைக்காலமாகவே நடைபெற்றுவருகின்றன.

பாகிஸ்தானுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி லாகூரில் செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியும் லாகூரில் செப்டெம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகளின் பின்னர் லாகூரில் சுப்பர் 4 போட்டி செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனிடையே இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி ஆகஸ்ட் 31ஆம் திகதியும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக முக்கிய போட்டி  செப்டெம்பர்   2ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

இந்த இரண்டு போட்டிகளும் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இரண்டு குழுக்களில் நடைபெறும் முதலாம் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றதும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்பர் 4 சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். சுப்பர் 4 சுற்றில் 6 போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெறும்.

போட்டி விபரங்கள்

முதல் சுற்று

ஆகஸ்ட் 30 பாகிஸ்தான் எதிர் நேபாளம் (ஏ - முல்தான்)

ஆகஸ்ட் 31: இலங்கை எதிர் பங்களாதேஷ் (பி - பல்லேகலை)

செப். 2: இந்தியா எதிர் பாகிஸ்தான் (ஏ - பல்லேகலை)

செப். 3: பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் (பி - லாகூர்)

செப். 4: இந்தியா எதிர் நேபாளம் (ஏ - பல்லேகலை)

செப். 5: ஆப்கானிஸ்தான் எதிர் இலங்கை (பி - லாகூர்)

சுப்பர் 4 சுற்று

செப். 6: ஏ 1 எதிர் பி 2 (லாகூர்)

செப். 9: பி 1 எதிர் பி 2 (கொழும்பு)

செப். 10: ஏ 1 எதிர் ஏ 2 (கொழும்பு)

செப். 12: ஏ 2 எதிர் பி 1 (கொழும்பு)

செப். 14: ஏ 1 எதிர் பி 1 (கொழும்பு)

செப். 15: ஏ 2 எதிர் பி 2 (கொழும்பு)

செப். 17: இறுதிப் போட்டி (கொழும்பு)

சகல போட்டிகளும் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும்.

குழாம்கள்

ஆப்கானிஸ்தான்: துடுப்பாட்ட வீரர்கள் - ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், இக்ரம் அலிகில், நஜிபுல்லா ஸத்ரான், ரஹமானுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹசன். சகலதுறை வீரர்கள் - குல்பாதின் நய்ப், கரிம் ஜனத், மொஹமத் நபி, ரஹ்மாத் ஷா, ராஷித் கான், ஷராபுதின் அஷ்ரப். பந்துவீச்சாளர்கள் - அப்துல் ரஹ்மான், பஸால்ஹக் பாறூக்கி, மொஹமத் சலீம், முஜிப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத்.

பங்களாதேஷ்: துடுப்பாட்ட வீரர்கள் - லிட்டன் தாஸ் (தலைவர்), மொஹமத் நய்ம், முஷிபிக்குர் ரஹிம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, தன்ஸித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய். சகலதுறை வீரர்கள் - ஷக்கிப் அல் ஹசன், அபிப் ஹொசெய்ன், மெஹெதி ஹசன், மெஹெதி ஹசன் மிராஸ், ஷமிம் ஹொசெய்ன். பந்துவீச்சாளர்கள் - ஈபாடொத் ஹொசெய்ன், ஹசன் மஹ்முத், முஸ்தாபிஸுர் ரஹ்மான், நசும் அஹ்மத், ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத்.

இந்தியா: துடுப்பாட்ட வீரர்கள் - ரோஹித் ஷர்மா (தலைவர்), இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ். சகலதுறை வீரர்கள் - ரவிந்த்ர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், திலக் வர்மா. பந்துவீச்சாளர்கள் - ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ். ப்ராசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.

நேபாளம்: துடுப்பாட்ட வீரர்கள் - ஆரிப் ஷெய்க், ஆசிப் ஷெய்க், திபேந்த்ரா சிங் ஐரீ, குஷால் பூர்டெல், அர்ஜுன் சாத், பிம் ஷர்க்கி. சகலதுறை வீரர்கள் - ரோஹித் பவ்டெல் (தலைவர்), கரன் கே.சி., குஷால் மல்லா, ப்ராட்டிஸ் ஜி.சி., சோம்பால் கமி. பந்துவீச்சாளர்கள் - குல்சான் ஜா, சந்தீப் லமிச்சான், லலித் ராஜபான்ஷி, மௌசம் தகால், சந்தீப் ஜோரா, கிஷோர் மஹோட்டோ.

பாகிஸ்தான்: துடுப்பாட்ட வீரர்கள் - பாபர் அஸாம் (தலைவர்), அபுதுல்லா ஷபிக், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், இமாம் உல் ஹக், மொஹமத் ஹரிஸ், மொஹமத் ரிஸ்வான், சவ்த் ஷக்கீல். சகலதுறை வீரர்கள் - ஷதாப் கான் (உதவித் தலைவர்), அகா சல்மான், பாஹீம் அஷ்ரப், மொஹமத் நவாஸ், மொஹமத் வசிம். பந்துவீச்சாளர்கள் - ஹரிஸ் ரவூப், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி, உசாமா மிர்.

இலங்கை: துடுப்பாட்ட வீரர்கள்: குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர்), திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம. சகலதுறை வீரர்கள் - தசுன் ஷானக்க (தலைவர்), சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமன்த. பந்துவீச்சாளரகள் - பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரண, ப்ரமோத் மதுஷான், கசுன் ராஜித்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே,

asia-cup-2023_groups.jpg

https://www.virakesari.lk/article/163471

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாபர், இப்திகார் குவித்த சதங்களின் உதவியுடன் நேபாளத்தை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான்

30 AUG, 2023 | 10:16 PM
image
 

(நெவில் அன்தனி)

முல்தானில் புதன்கிழமை (30) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் அணித் தலைவர் பாபர் அஸாம், இப்திகார் அஹ்மத் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் நேபாளத்தை 238 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றிகொண்டது.

ஏ குழுவுக்கான இந்த வெற்றியுடன் சுப்பர் 4 சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டது.

அணித் தலைவருக்கே உரிய பாணியில் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 132 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 151 ஓட்டங்களை விளாசினார்.

பாபர் அஸாம் பெற்ற 151 ஓட்டங்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெறப்படட தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அஸாம் குவித்த 19ஆவது சதம் இதுவாகும்.

110 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த  பாபர் அஸாம், அதன் பின்னர் இருபது 20 கிரிக்கெட் பாணியில் துடுப்பெடுத்தாடி அடுத்த 51 ஓட்டங்களை 22 பந்துகளில் விளாசி ஆட்டம் இழந்தார்.  அவரது துடுப்பாட்டத்தில் மூவகை கிரிக்கெட்டுக்குமான ஆற்றல்கள் வெளிப்பட்டது.

அது மட்டுமல்லாமல் இப்திகார் அஹ்மதுடன் 5ஆவது விக்கெட்டில் பாபர் அஸாம் 131 பந்துகளில் 214 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

இப்திகார் அஹ்மத் தனது பங்குக்கு அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 71 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 109 ஓட்டங்களைக் குவித்தார்.

தனது 15ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இப்திகார் அஹ்மத் குவித்த முதலாவது ஒருநாள் சதம் இதுவாகும்.

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் அறிமுகமான நேபாளம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானுடன் முதல் தடவையாக விளையாடியது. அந்த முதல் சந்தர்ப்பத்திலேயே போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்குசற்று சவால் விடுக்கும் வகையில் நேபாளம் விளையாடியது.

முதல் 10 ஓவர்களில் முதல் 2 விக்கெட்களைக் கைப்பற்றி 44 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை நேபாளம் கட்டுப்படுத்தியிருந்தது. இரண்டாவது 10 ஓவர்களில் 47 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்த நேபாளம், அடுத்து 10 ஓவர்களில் 48 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றியது. இதற்கு அமைய 30 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஆனால், அடுத்த 10 ஓவர்களில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்களையும் கடைசி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களையும் விளாசிய பாகிஸ்தான், 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

பந்துவீச்சில் சோம்பால் காமி 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

343 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான எட்ட முடியாத வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 23.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நேபாளம் முதல் 3 விக்கெட்களை 14 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறியது.

எனினும் ஆரிப் ஷெய்க் (26), சோம்பால் காமி (28) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு சிறு சோதனையைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரைவிட குல்சான் ஜா (13) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்து வீச்சில் ஷதாப் கான் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதேவேளை, பி குழுவில் இடம்பெறும் இலங்கையும் பங்களாதேஷும் இரண்டாவது போட்டியில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (31) ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளது.

https://www.virakesari.lk/article/163538

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதீஷ பந்துவீச்சிலும் சதீர, அசலன்க துடுப்பாட்டத்திலும் அசத்தல்; பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

31 AUG, 2023 | 10:26 PM
image
 

(நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (31) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஆசிய கிண்ண கிரிக்கெட் பி பிரிவு ஆரம்பப் போட்டியில் 5 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது

மதீஷ பத்திரணவின் 4 விக்கெட் குவியலுடனான துல்லிய பந்துவீச்சு, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பெற்ற அரைச் சதங்கள் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

பங்களாதேஷ் சார்பாக நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 89 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய பத்து வீரர்களின் கூட்டு வெறும் 67 ஓட்டங்களாக இருந்தது. உதிரிகளாக 8 ஓட்டங்கள் கிடைத்தது.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

Maheeesh_Theekshana_celebrates_VAK_6014.

இந்த வெற்றியுடன் சுப்பர் 4 சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை  இலங்கை  சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

பங்களாதேஷைப் போன்றே முதல் 10 ஓவர்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை 3 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

திமுத் கருணாரட்ன (1), பெத்தும் நிஸ்ஸன்க (14), மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் (5) ஆகிய மூவரும் கவனக்குறைவு காரணமாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் சரித் அசலன்கவும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 78 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை நல்ல நிலையில் இட்டனர்.

Copy_of_Sadeera_Samarawickrama_50_runs.j

ஆனால், சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 11 பந்துகள் இடைவெளியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தமை இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது. (128 - 5 விக்.)

நான்கு வருட இடைவெளிக்குப்    பின்னர் கடந்த ஜூன் மாதம் இலங்கை அணிக்கு மீளழைக்கப்பட்ட சதீர சமரவிக்ரம தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தப் போட்டியில் 77 பந்துகளை எதிர்கொண்ட சதீர சமரவிக்ரம 6 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற 4ஆவது அரைச் சதம் இதுவாகும்.

மெஹிதி ஹசன் வீசிய பந்தை முன்னால்  பாய்ந்து அடிக்க விளைந்த சமரவிக்ரமவை முஷ்பிக்குர் ரஹீம் ஸ்டம்ப் செய்து களம் விட்டு வெளியேற்றினார்.

அடுத்தாக ஷக்கிப் அல் ஹசன் உயர்த்தி வீசிய பந்தை சரியாக புரிந்து கொள்ள முடியாத தனஞ்சய டி சில்வா (5) போல்ட் ஆனார்.

நிதானமாகவும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 92 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார். இது அவர் பெற்ற 9ஆவது அரைச் சதமாகும்.

Copy_of_Charith_Asalanka_.jpg

அணித் தலைவர் தசுன் ஷானக்க 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இந்தப் போட்டியில் பிரதான பந்துவீச்சாளர்கள் மூவர் இல்லாமலேயே களம் இறங்கிய இலங்கை மற்றைய பந்துவீச்சாளர்களைக் கொண்டு பங்களாதேஷுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது.

தனது 5ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மதீஷ் பத்திரண தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியை ஓரு நாள் போட்டியில் பதிவு செய்து பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பங்களாதேஷின் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த லிட்டன் தாஸ், திடீர் காய்ச்சல் காரணமாக குழாத்திலிருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதால் தலைவர் பதவி அனுபவசாலியான ஷக்கிப் அல் ஹசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 42.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ மாத்திரமே பொறுமையாகவும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார்.

Najmul_Hossain_Shanto_.jpg

அவரை விட தவ்ஹித் ஹ்ரிடோய் (20), மொஹமத் நய்ம் (16), முஷ்பிக்குர் ரஹிம் (13) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

11ஆவது ஓவரில் ஷக்கிப் அல் ஹசன் (5) ஆட்டம் இழந்தபோது பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது.

ஷன்டோவும் ஹ்ரிடோயும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அந்த உற்சாகம் வெகுநேரம் நீடிக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ, ஆட்டத்தின் பிடியை இலங்கை தனதாக்கிக்கொண்டது.

பங்களாதேஷ் 33ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. ஆனால்,  பங்களாதேஷ்  அதன்  கடைசி 6 விக்கெட்களை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

மிகத் துல்லியமாக பந்துவீசிய மதீஷ பத்திரண 7.4 ஓவர்களில் 32  ஓட்டங்களைக்  கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் மஹீஷ் தீக்ஷன ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 8 ஓவர்களில் 19 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே, தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இலங்கை தனது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை லாகூரில் செப்டெம்பர் 5ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

Copy_of_Matheesha_Pathirana-2.jpg

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டார். மதீஷ பத்திரண இலங்கை அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை முதன்முறையாக வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/163609

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவை வெற்றிகொள்ளுமா பாகிஸ்தான்? வெற்றி இலக்கு 267 ஓட்டங்கள்

02 SEP, 2023 | 08:11 PM
image
 

(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (02) நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் ஏ குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் பிரகாரம்  267 ஓட்டங்களை பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

பவர் ப்ளே ஓவர்கள் நிறைவடைவதற்குள் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியாவுக்கு, இஷான் கிஷான், ஹார்த்திக் பாண்டியா ஆகியோரின் நிதானத்துடனான 5ஆவது விக்கெட் இணைப்பாட்டம் கைகொடுத்தது.

நேபாளத்துடனான போட்டியில் முதல் 30 ஓவர்களில் எவ்வாறு பாகிஸ்தான் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதோ அதே நிலையைத் தான் இன்றைய போட்டியில் இந்தியா எதிர்கொண்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாரான மழை பெய்தபோதிலும் பல்லேகலையில் இதமான காலநிலைக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த நேரத்திற்கு (பிற்பகல் 3.00 மணி) ஆரம்பமானது.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா ஆகியோரின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் சிரமம் அடைந்தனர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய இந்தியா 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது சிறு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

33 நிமிட தடையின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்த போது இந்தியா இரண்டு பிரதான விக்கெட்களை இழந்தது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது ஷஹீன் ஷா வீசிய பந்து ரோஹிஷ் ஷர்மாவின் துடுப்பில் உராய்ந்தவாறு விக்கெட்டைப் பதம் பார்த்தது. ரோஹித் ஷர்மா 11 ஓட்டங்களைப் பெற்றார். (15 - 1 விக்.)

9 பந்துகள் கழித்து விராத் கோஹ்லியின் விக்கெட்டையும் ஷஹீன் ஷா அப்றிடி பதம்பார்த்தார். விராத் கோஹ்லி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்து அவரது துடுப்பின் விளிம்பில் பட்டு விக்கெட்டுக்கு சென்றது. (27 - 2 விக்.)

அடுத்து களம் நுழைந்த ஷ்ரேயாஸ் ஐயர் சற்று ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடிய போதிலும் 14 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பக்கார் ஸமானிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். (48 - 3 விக்.)

இந்தியா 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழைத்தூறல் மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் இரண்டாவது தடவையாக பிற்பகல் 4.35 மணிக்கு தடைப்பட்டது.

இருபது நிமிட தடையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்த சில நிமிடங்களில் சூரியன் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியதுடன் மைதானம் காலை 10.00 மணி போல் காட்சி அளித்தது.

எவ்வாறாயினும் ஆட்டம் இந்தியாவுக்கு இலகுவாக அமையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் போன்று மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷுப்மான் கில் 32 பந்துகளில் 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். (66 - 4 விக்.)

பவர் ப்ளே ஓவர்கள் நிறைவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இந் நிலையில் இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 138 ஓட்டங்கள் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடப்பதற்கு உதவியது.

இஷான் கிஷான் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தில் பாபர் அஸாமிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (204 - 5 விக்.)

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஹார்திக் பாண்டியா 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அவர்  7 பவுண்டறிகளையும் 1 சிக்ஸையும் அடித்திருந்தார். (239 - 6 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷஹீன் ஷா அப்றிடி மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இம்முறை ரவீந்த்ர ஜடேஜா விக்கெட் காப்பாளர் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். (242 - 7 விக்.)

மொத்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாத நிலையில் நசீம் ஷாவின் பந்தை அரைகுறை மனதுடன் அடித்த ஷர்துல் தாகூர் (3), ஷதாப் கானிடம் பிடிகொடுத்து களம் விட்டு வெளியேறினார். (242 - 8 விக்.)

பின்வரிசை வீரர்களின் குல்தீப் யாதவ் 4 ஓட்டங்களுடன் நசீம் ஷாவின் பந்துவீச்சில் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (261 - 9 விக்.)

ஜஸ்ப்ரிட் பும்ரா 16 ஓட்டங்களைப் பெற்று நசீம் ஷாவின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/163725

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

இந்தியாவை வெற்றிகொள்ளுமா பாகிஸ்தான்? வெற்றி இலக்கு 267 ஓட்டங்கள்

02 SEP, 2023 | 08:11 PM
image
 

(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (02) நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் ஏ குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் பிரகாரம்  267 ஓட்டங்களை பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

பவர் ப்ளே ஓவர்கள் நிறைவடைவதற்குள் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியாவுக்கு, இஷான் கிஷான், ஹார்த்திக் பாண்டியா ஆகியோரின் நிதானத்துடனான 5ஆவது விக்கெட் இணைப்பாட்டம் கைகொடுத்தது.

நேபாளத்துடனான போட்டியில் முதல் 30 ஓவர்களில் எவ்வாறு பாகிஸ்தான் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதோ அதே நிலையைத் தான் இன்றைய போட்டியில் இந்தியா எதிர்கொண்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாரான மழை பெய்தபோதிலும் பல்லேகலையில் இதமான காலநிலைக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த நேரத்திற்கு (பிற்பகல் 3.00 மணி) ஆரம்பமானது.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா ஆகியோரின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் சிரமம் அடைந்தனர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய இந்தியா 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது சிறு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

33 நிமிட தடையின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்த போது இந்தியா இரண்டு பிரதான விக்கெட்களை இழந்தது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது ஷஹீன் ஷா வீசிய பந்து ரோஹிஷ் ஷர்மாவின் துடுப்பில் உராய்ந்தவாறு விக்கெட்டைப் பதம் பார்த்தது. ரோஹித் ஷர்மா 11 ஓட்டங்களைப் பெற்றார். (15 - 1 விக்.)

9 பந்துகள் கழித்து விராத் கோஹ்லியின் விக்கெட்டையும் ஷஹீன் ஷா அப்றிடி பதம்பார்த்தார். விராத் கோஹ்லி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்து அவரது துடுப்பின் விளிம்பில் பட்டு விக்கெட்டுக்கு சென்றது. (27 - 2 விக்.)

அடுத்து களம் நுழைந்த ஷ்ரேயாஸ் ஐயர் சற்று ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடிய போதிலும் 14 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பக்கார் ஸமானிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். (48 - 3 விக்.)

இந்தியா 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழைத்தூறல் மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் இரண்டாவது தடவையாக பிற்பகல் 4.35 மணிக்கு தடைப்பட்டது.

இருபது நிமிட தடையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்த சில நிமிடங்களில் சூரியன் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியதுடன் மைதானம் காலை 10.00 மணி போல் காட்சி அளித்தது.

எவ்வாறாயினும் ஆட்டம் இந்தியாவுக்கு இலகுவாக அமையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் போன்று மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷுப்மான் கில் 32 பந்துகளில் 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். (66 - 4 விக்.)

பவர் ப்ளே ஓவர்கள் நிறைவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இந் நிலையில் இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 138 ஓட்டங்கள் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடப்பதற்கு உதவியது.

இஷான் கிஷான் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தில் பாபர் அஸாமிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (204 - 5 விக்.)

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஹார்திக் பாண்டியா 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அவர்  7 பவுண்டறிகளையும் 1 சிக்ஸையும் அடித்திருந்தார். (239 - 6 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷஹீன் ஷா அப்றிடி மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இம்முறை ரவீந்த்ர ஜடேஜா விக்கெட் காப்பாளர் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். (242 - 7 விக்.)

மொத்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாத நிலையில் நசீம் ஷாவின் பந்தை அரைகுறை மனதுடன் அடித்த ஷர்துல் தாகூர் (3), ஷதாப் கானிடம் பிடிகொடுத்து களம் விட்டு வெளியேறினார். (242 - 8 விக்.)

பின்வரிசை வீரர்களின் குல்தீப் யாதவ் 4 ஓட்டங்களுடன் நசீம் ஷாவின் பந்துவீச்சில் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (261 - 9 விக்.)

ஜஸ்ப்ரிட் பும்ரா 16 ஓட்டங்களைப் பெற்று நசீம் ஷாவின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/163725

இந்த தடவை உலக கோப்பையை பாகிஸ்தான் தூக்கும் என்று ஒரு இந்தியர் எனக்கு கூறினார். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்து: சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் - இந்தியா நிலை என்ன?

இந்தியா -பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் ரத்தானது.

2 செப்டெம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மழை காரணமாக இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்தத் தொடர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை இலங்கை அணியும் வென்றன.

இலங்கையின் பெல்லகெலேவில் ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டி, இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஷ்ரேயாஸ் அய்யர் இன்று இந்திய அணியில் விளையாடினார். இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களில் பும்ரா, சிராஜ் இடம்பெற்றனர். ஷமி இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

 

தடுமாறிய இந்திய அணி- கைகொடுத்த இஷான் மற்றும் ஹர்திக் ஜோடி

இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 87 ரன்கள் எடுத்தார்.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியினர், நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். முதலில் களம் இறங்கிய ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.

சரியாக 14.1 ஓவர் முடிவில் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. அதற்கு பிறகு களத்தில் இருந்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இஷான் கிஷன் 81 பந்தகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் விளாசி, 82 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது, 37 வது ஓவரி்ல் ஹரிஸ் ரவுஃப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார் இஷான் கிஷன்.

அதற்கு பிறகு, 43 வது ஓவரில் ஷஹீன் அப்ரிடியின் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். 13வது ஓவரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, 90 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 87 ரன்கள் எடுத்திருந்தார்.

 
இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இஷான் கிஷன் 81 பந்தகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் விளாசி, 82 ரன்கள் எடுத்தார்

 

266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாகிஸ்தான் அணி 267 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் அணி வெற்றி பெற முடியும் என்ற சூழலில் இடைவெளிக்கு பிறகு மழையால் போட்டி தடைபட்டுள்ளது.

அடுத்தடுத்த களமிறங்கிய, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். அதனால், இந்திய அணி 48.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்திருந்தது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 10 ஓவர்கள் பந்து வீசி, 35 ரன்கள் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்ததாக, நசீம் ஷாவும், ஹரிஸ் ரவுஃப்ம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தான் அணி 266 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் அணி வெற்றி பெற முடியும் என்ற சூழலில் இடைவெளிக்கு பிறகு மழையால் போட்டி தடைபட்டது. மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இந்தியா நிலை என்ன?

போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. தனது முந்தைய ஆட்டத்தில் நேபாளத்தை தோற்கடித்ததன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை வெல்ல வேண்டும்.

உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இதுவரை 132 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 55 முறையும், பாகிஸ்தான் அணி 73 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/163726

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/9/2023 at 20:28, நியாயத்தை கதைப்போம் said:

இந்த தடவை உலக கோப்பையை பாகிஸ்தான் தூக்கும் என்று ஒரு இந்தியர் எனக்கு கூறினார். 🤔

இந்தியா மைதான‌ங்க‌ளில் பாக்கிஸ்தான் இள‌ம் வீர‌ர்க‌ள் பெரிசா விளையாடின‌து கிடையாது...........இந்தியாவில் ந‌ட‌ப்பதால் இந்தியா கோப்பைய‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு அண்ணா.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் பங்களாதேஷ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது

04 SEP, 2023 | 06:15 AM
image
 

(நெவில் அன்தனி)

லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற  ஆசிய கிண்ண பி பிரிவு கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டி முடிவுடன் இலங்கையின் சுப்பர் 4 வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகியுள்ள நிலையில் பங்களாதேஷ் அதன் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

இலங்கையை மிகப் பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டால் மாத்திரமே ஆப்கானிஸ்தானுக்கு சுப்பர் 4 வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்கும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த மொத்த எண்ணிக்கையானது இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

ஆரம்ப வீரர் மெஹிதி ஹசன் மிராஸ், முன்வரிசை வீரர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 194 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணி பலமான நிலையை அடைய உதவினர்.

மொத்த எண்ணிக்கை 257 ஒட்டங்களாக இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக உபாதைக்குள்ளான மெஹிதி ஹசன் மிராஸ் 112 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.

முஜீப் உர் றஹ்மானின் பந்து மிராஸின் இடதுகையைப் பதம்பார்த்த அதேவேளை, தசைப் பிடிப்புக்கு உள்ளான மிராஸ் ஓய்வுபெற நேரிட்டது.

119 பந்துகளை எதிர்கொண்ட மிராஸ் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 112 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 105 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர்கள் இருவரைவிட மொஹமத் நய்ம் (28), முஷ்பிக்குர் ரஹிம் (25), அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (32 ஆ.இ.) ஆகியோரும் அதிகப்பட்ச பங்களிப்பை துடுப்பாட்டத்தில் வழங்கினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 44.3 ஓவர்களில் விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இரண்டாவது ஓவரில் ரஹ்மானுல்லா குர்பாஸ் களம்விட்டகன்றதால் ஆப்கானிஸ்தான் ஆட்டம் கண்டது.

எனினும், இப்ராஹிம் ஸத்ரானும் ரஹ்மத் ஷாவும் 2ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்தனர்.

ஆனால், ரஹ்மத் ஷா 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த இப்ராஹிம் ஸத்ரான் 74 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 75 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமின் அற்புதமான பிடி மூலம் ஆட்டம் இழந்தார்.

அவர் 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தொடர்ந்து ஷஹிதியும் நஜிபுல்லா ஸத்ரானும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நஜிபுல்லா ஸத்ரான் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார். (193 - 4 விக்.)

மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹஷ்மதுல்லா ஷஹிதி 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அதன் பி;னனர் சீரான இடைவெளியில் குல்பாதின்  நய்ப் (15), மொஹமத் நபி (3), கரிம் ஜனத் (1), முஜீப் உர் ரஹ்மான் (4), ராஷித் கான் (24) ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மெஹிதி ஹசன் மிராஸ்.

https://www.virakesari.lk/article/163782

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேபாளத்தை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் வெற்றி கொண்ட இந்தியா சுப்பர் 4 சுற்றில் விளையாடத் தகுதி

05 SEP, 2023 | 06:08 AM
image
 

(நெவில் அன்தனி)

கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ பிரிவு கடைசி லீக் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் நேபாளத்தை 10 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா, சுப்பர் 4 சுற்றில் விளையாட இரண்டாவது அணியாகத் தகுதிபெற்றது.

23 ஓவர்களில் 145 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 147 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்தியாவும் நேபாளமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சந்தித்துக்கொண்ட முதல் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதங்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை மீண்டும் பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

இரவு 8.18க்கு தடைப்பட்ட ஆட்டம் 2 மணித்தியாலங்களின் பின்னர் இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 23 ஓவர்களில் 145 ஓட்டங்கள் என  நிர்ணயிக்கப்பட்டது.

இந் நிலையில் ஓவருக்கு 6.24 ஓட்டங்கள் வீதம் பெறவேண்டியிருந்த இந்தியா, நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடியது. சில சந்தர்ப்பங்களில் ரோஹித் ஷர்மா துணிகரமாக துடுப்பெடுத்தாடி பவுண்டறிகளையும் சிக்ஸ்களையும் குவித்து இந்தியாவுக்கு தெம்பூட்டிக்கொண்டிருந்தார்.

இதன் பலனாக 15 ஓவர்கள் நிலைறவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் நேபாளத்தைவிட இந்தியா முன்னிலையில் இருந்ததால் ஆட்டம் தடைப்பட்டிருந்தாலும் இந்தியாவின் வெற்றி உறுதியாகி இருந்தது.

எவ்வாறாயினும் திருத்தி அமைக்கப்பட்ட வெற்றி இலக்கை 20.1 ஓவர்களில் இந்தியா கடந்து அபார வெற்றியீட்டி சுப்பர் 4 சுற்றுக்குள் இரண்டாவது அணியாக நுழைந்தது.

ரோஹித் ஷர்மா 59 பந்துகளில் 6 பவண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 74 ஓட்டங்களுடனும் ஷுப்மான் கில் 62 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

சில தினங்களுக்கு முன்னர் முதல்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 104 ஓட்டங்களுக்கு சுருண்ட நேபாளம், இந்தியாவுடனான போட்டியில் பெரும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது.

இந்தியாவின் மிக மோசமான களத்தடுப்பின் காரணமாகவே நேபாளம் இந்த மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

2 பந்துகளில் 2 பிடிகள் உட்பட முதல் 5 ஓவர்களில் இந்தியா மிக இலகுவான 3 பிடிகளைக் கோட்டை விட்டது.

மொஹமத் ஷமி வீசிய முதலாவது ஓவரின் கடைசிப் பந்தில் குஷால் பூட்டெல் கொடுத்த பிடியை 1ஆவது ஸ்லிப் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார்.

அடுத்த ஓவரில் மொஹமத் சிராஜ் வீசிய முதலாவது பந்தில் ஆசிப் ஷெய்க் கொடுத்த இலகுவான பிடியை விராத் கோஹ்லி கோட்டை விட்டார்.

 

5ஆவது ஓவரில் மொஹமத் ஷமியின் 4ஆவது பந்தில் பூட்டெல் கொடுத்த மற்றொரு இலகுவான பிடியை விக்கெட் காப்பாளர் இஷான் கிஷான் கோட்டை விட பந்து பவுண்டறியை நோக்கிச் சென்றது.

இவ்வாறாக 3 பிடிகள் தவறவிடப்பட்டதை சாதகமாக்கிக்கொண்ட நேபாளத்தின் ஆரம்ப வீரர்கள் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய பூட்டெல் 25 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 38 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து பிம் ஷாக்கி (7), அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் (5), குஷால் மல்லா (2) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (101 - 4 விக்.)

மொத்த எண்ணிக்கை 132 ஓட்டங்களாக இருந்தபோது ஆசிஷ் ஷெய்க் 5ஆவதாக ஆட்டம் இழந்தார்.

மிகவும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய ஷெய்க் 97 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து குல்சான் ஜா 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். (144 - 6 விக்.)

அதன் பின்னர் தீப்பேந்த்ரா சிங் அய்ரீ, சோம்பால் கமி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் மாலை 5.43 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. (37.5 ஓவர்களில் 178 - 6 விக்.)

சுமார் ஒரு மணித்தியால தடைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது அய்ரீ, கமி ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பூர்த்தி செய்த நிலையில் 42ஆவது ஓவரில் அய்ரீ 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (194 - 7 விக்.)

தொடர்ந்து சோம்பால் கமியும் சந்தீப் லமிச்சானும் 8ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த நிலையில் கமி 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கடைசியாக ஒரு ஓட்ட வித்தியாசத்தில் லமிச்சான் (9), லலித் ராஜ்பன்ஷி (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க நேபாளத்தின் மொத்த எண்ணிக்கை 230 ஓட்டங்களாக இருந்தது.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்

பி குழுவில் இடம்பெறும் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் லாகூரில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெறவுள்ள திர்மானம் மிக்க போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் பி குழுவிலிருந்து இலங்கையும் பங்களாதேஷும் பி குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு செல்லும்.

ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் நிகர ஓட்டங்கள் அடிப்படையில் பி குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு செல்லும் அணிகள் தீர்மானிக்கப்படும்.

https://www.virakesari.lk/article/163845

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இர‌ண்டு ர‌ன்னால் இல‌ங்கை வெற்றி ஹா ஹா🤣😁😂...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரபரப்பான போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றில் நுழைந்தது இலங்கை

05 SEP, 2023 | 11:21 PM
image
 

(நெவில் அன்தனி)

லாகூர், கடாபி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (05) மிகவும் பரபரப்பைத் தோற்றுவித்த தீர்மானம் மிக்க பி  குழு  போட்டியில் ஆப்கானிஸ்தானை 2 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றில் விளையாட கடைசி அணியாகத் தகுதிபெற்றது.

ஏ குழுவிலிருந்து பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும் பி குழுவில் இருந்து பங்களாதேஷும் ஏற்கனவே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 292 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 37.1 ஓவர்களில் அடைந்தால் ஆப்கானிஸ்தானுக்கு சுப்பர் 4 சுற்று வாய்ப்பு கிடைக்கவிருந்தது.

ஆனால், அந்த இலக்கை குறிப்பிட்ட ஓவர்களில் எட்டிப்பிடிக்கத் தவறிய ஆப்கானிஸ்தான், 37.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஒருவேளை 37.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 295 ஓட்டங்களைப் பெற்றால் சுப்பர் 4 சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடைசி ஆட்டக்காரர் பஸால்ஹக் பாறூக்கியும் சிரேஷ்ட வீரர் ராஷித் கானும் அதை அறியாமல் 3 பந்துகளை வீணடித்ததால் ஆப்கானிஸ்தான் சுப்பர் 4 சுற்று வாய்ப்பை தவறவிட்டது.

இலங்கையின் இந்த வெற்றியில் முதலாவது, 4ஆவது, 8ஆவது விக்கெட்களில் பகிரப்பட்ட 3 முக்கிய இணைப்பாட்டங்கள், குசல் மெண்டிஸ் குவித்த அரைச் சதம், துனித் வெல்லாலகே வீழ்த்திய 2 முக்கிய விக்கெட்கள் என்பன பிரதான பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சுப்பர் 4 சுற்று தகுதியைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு பெத்தும் நிஸ்ஸன்கவும் திமுத் கருணாரட்னவும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், திமுத் கருணாரட்ன (32), பெத்தும் நிஸ்ஸன்க (41), சதீர சமரவிக்ரம (3) ஆகிய மூவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது இலங்கைக்கு பேரிடியைக் கொடுத்தது. (86 - 3 விக்.)

இந் நிலையில் குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 102 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்தனர்.

சரித் அசலன்க 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் இணைந்த தனஞ்சய டி சில்வா 5ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (221 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது குசல் மெண்டிஸ் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். (226 - 5 விக்.)

தசன் ஷானக்க வேகமாக அடித்த பந்தை ராஷித் கான் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கைகளில் பட்டு பந்துவீச்சு எல்லையில் உள்ள விக்கெட்டில் மோதியது. அந்த சந்தர்ப்பத்தில் குசல் மெண்டிஸின் துடுப்பு எல்லைக்கோட்டுக்குள் தரையில் வைக்கப்பட்டிராததால் அவர் ரன் அவுட் ஆனார்.

84 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 92 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து தசுன் ஷானக்க (5) ஆட்டம் இழந்தார். (227 - 7 விக்.)

எனினும், 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த துனித் வெல்லாகே, மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் பெறுமதிவாய்ந்த 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலம் வாய்ந்த நிலையில் இட்டனர்.

துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றதுடன் மஹீஷ் தீக்ஷன 28 ஓட்டங்களுடன் கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் குல்பதின் நய்ப் 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஷித் கான் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 3ஆவது விக்கெட்டை இழந்து தடுமாற்றம் அடைந்தது.

ஆனால், ரஹ்மத் ஷா (45), அணித் தலைவர் ஹஷ்மதுல்லா ஷஹிதி (59) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைச் சதம் (24 பந்துகள்) குவித்த மொஹமத் நபி தனது அணிக்கு தெம்பூட்டினார்.

மொஹமத் நபி 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

எனினும் கரிம் ஜனத் (22), நஜிபுல்லா ஸத்ரான் (23), ராஷித் கான் (27 ஆ.இ.) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியபோதிலும் ஆப்கானிஸ்தானை நெருங்கி வந்த வெற்றி வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது.

இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்

https://www.virakesari.lk/article/163917

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கிண்ண சுப்பர் 4 ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷை கவிழ்த்தது பாகிஸ்தான்

06 SEP, 2023 | 10:49 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் லாகூர் கடாபி விளையாட்டரங்கில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 ஆரம்பப் போட்டியில் 7 விக்கெட்களால் பாகிஸ்தான் மிகவும் இலகுவாக வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷை 194 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பாகிஸ்தான் 39.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

நடப்பு ஆசிய கிண்ணத்தில் ஹரிஸ் ரவூப் பதிவு செய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி, இமாம் உல் ஹக், மொஹமத் ரிஸ்வான் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பாகிஸ்தான் இலகுவாக வெற்றிபெற உதவின.

பக்கார் ஸமான் (20), அணித் தலைவர் பாபர் அஸாம் (17) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (74 - 2 விக்.)

இந் நிலையில் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

இமாம் உல் ஹக் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைக் குவித்ததுடன், மொஹமத் ரிஸ்வான் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அகா சல்மான் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் ரிஸ்வானுடன் 35 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

முன்னதாக பங்களாதேஷ் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 193 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சிரேஷ்ட வீரர்களான அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன், முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பெற்று அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஷக்கிப் அல் ஹசன் 53 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 64 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். அவர்களை விட மொஹமத் நய்ம் மாத்திரமே 20 ஓட்டங்களை எட்டிப்பிடித்தார்.

அணியில் மீண்டும் இணைந்த லிட்டன் தாஸ் 16 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் மீண்டும் இலங்கை திரும்பி எஞ்சிய சுப்பர் 4 போட்டிகளில் விளையாடவுள்ளன.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான சுப்பர் 4 போட்டி செப்டெம்பர் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. சுப்பர் 4 சுற்றில் இந்தியாவும் இடம்பெறுகிறது.

இனிவரும் எல்லா போட்டிகளும் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/163993

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு இருப்பு நாள் ஒதுக்கப்பட்டமை ஆச்சரியத்தை தருகிறது என்கின்றனர் சில்வர்வூட், ஹத்துருசிங்க

09 SEP, 2023 | 11:07 AM
image
 

(நெவில் அன்தனி)

இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டிக்கு இருப்பு நாள் (Reserve Day) ஒதுக்கபட்டுள்ளது குறித்து உண்மையிலேயே ஆச்சிரியப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் வெள்ளிக்கிழமை (08) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

பல அணிகள் பங்குபற்றும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இடைநடுவில் இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு மாத்திரம் இருப்பு நாள் வழங்க திடீர் முடிவு எடுக்கப்பட்டது குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என கிறிஸ் சில்வர்வூடிடம் கேட்டபோது,

'நேர்மையாக சொல்வதென்றால், இந்த அறிவிப்பை கேட்டபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் போட்டிகளை நாங்கள் ஏற்பாடு செய்வதில்லை.. ஆகையால் அது குறித்து எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பு நாளில் போட்டியில் முடிவு ஏற்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டால்தான் ஒரே ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆனால் அதுபற்றி கரிசனை கொள்ளாமல் தொடர்ந்து எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து எமது அணி கவனம் செலுத்தும்' என்றார்.

இதே கேள்விக்கு பதிலளித்த சந்திக்க ஹத்துருசிங்க, 'இந்த விடயம் பெரும் ஆச்சரியத்தை தருகிறது. பல அணிகள் பங்குபற்றும் சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து இப்போதுதான் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன். ஆனால், அது பற்றி எம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அது போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் எடுத்த தீர்மானம்' என பதிலளித்தார்.

இது இவ்வாறிருக்க, ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பாளர்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு இருப்பு நாள் ஒதுக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.

 

இன்றைய போட்டி

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த முக்கிய போட்டியில் இரண்டு அணிகளும் தத்தமது வெற்றிகளுக்காக முயற்சிக்கும் என இரண்டு அணிகளினதும் பயிற்றுநர்கள் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/164163

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுப்பர் 4: பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை : இலங்கைக்கு 13ஆவது தொடர்ச்சியான வெற்றி

09 SEP, 2023 | 11:56 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை (09) நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்று இரண்டாவது போட்டியில் 21 ஓட்டங்களால் இலங்கை மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை 13ஆவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவுசெய்தது.

அவுஸ்திரேலியா 21 தொடர்ச்சியான வெற்றிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் இலங்கை 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென் ஆபிரிக்காவும் பாகிஸ்தானும் தலா 12 தொடர்ச்சியான வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கின்றன.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 258 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 257  ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

லாகூரில் நடைபெற்ற முதலாவது சுப்பர் 4 போட்டியிலும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்த பங்களாதேஷ், ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெரும்பாலும் இழந்துள்ளது.

இலங்கையின் வெற்றியில் சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ் ஆகியோரின் அரைச் சதங்கள், தசுன் ஷானக்க, மதீஷ பத்திரண ஆகியோரின் திறமையான பந்துவீச்சுக்கள் என்பன முக்கிய பங்காற்றின.

பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது மெஹிதி ஹசன் மிராஸ், மொஹமத் நய்ம் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மெஹிதி ஹசன் மிராஸ் (28), மொஹமத் நய்ம் (21), ஷக்கிப் அல் ஹசன் (3), லிட்டன் தாஸ் (15) ஆகிய நால்வரும் களம் விட்டு வெளியேறியது பங்களாதேஷுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. (83 - 4 விக்.)

எனினும் முஷ்பிக்குர் ரஹிம், தௌஹித் ஹ்ரிடோய் ஆகிய இருவரும் 112 பந்துகளைத் தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசுஷ் ஷானக்க இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். (155 - 5 விக்.)

தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் கசுன் ராஜித்த எடுத்த அபார பிடி மூலம் முஷ்பிக்குர் ரஹிம் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார். 48 பந்துகளை எதிர்கொண்ட முஷ்பிக்குர் ரஹிம் ஒரு பவுண்டறியையும் அடிக்கவில்லை.

அவரைத் தொடர்ந்து ஷமிம் ஹொசெய்ன் 5 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஒருபுறத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷுக்கு உயிரூட்டிக்கொண்டிருந்த தௌஹித் ஹ்ரிடோய் 97 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். இது பங்களாதேஷ் அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

பின்வரிசையில் தஸ்கின் அஹ்மத் (1), ஷொரிபுல் இஸ்லாம் (7) ஆகியோர் களம் புகுந்த சற்று நேரத்தில் ஆட்டம் இழந்தனர்.

கடைசி விக்கெட்டில் நசும் அஹ்மத் (15), ஹசன் மஹ்முத் ஆகிய இருவரும் இலங்கைக்கு சிறு சோதனையைக் கொடுத்த போதிலும் அஹ்மத் ஆட்டம் இழந்ததால் பங்களாதேஷின் தோல்வி உறுதியாயிற்று.

இலங்கை பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் 32ஆவது பிறந்த நாளான இன்றைய தினம், வழமைபோல் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்துக்கொடுத்தனர்.

குறிப்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய சதீர சமரவிக்ரம, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையைப் பதிவுசெய்தார்.

ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்கவும் திமுத் கருணாரட்னவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பகிர்ந்;திருந்தபோது 18 ஓட்டங்களைப் பெற்றிருந்த திமுத் கருணாரட்ன வெளியேறினார்.

தொடர்ந்து நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை சிறுக சிறுக அதிகரிக்க உதவினர்.

அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 107 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 5 பவுண்டறிகள் அடங்கலாக 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 117 ஓட்டங்களாக இருந்தபோது குசல் மெண்டிஸ் இலகுவான பிடி ஒன்றைக் கொடுத்து 50 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். அவர் 6 பவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் விளாசி இருந்தார்.

சரித் அசலன்க (10), தனஞ்சய டி சில்வா (6) ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் அணியை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எனினும், தசுன் ஷானக்க கவனக் குறைவான அடி தெரிவின் காரணமாக 24 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (224 - 6 விக்.)

அவரைத் தொடர்ந்து துனித் வெல்லாலகே (3), மஹீஷ் தீக்ஷன (2) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (246 - 8 விக்.)

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 93 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/164203

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: மழை குறுக்கிட்டதால் ரிசர்வ் டேவுக்கு சென்ற போட்டி

ஆசியக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 செப்டெம்பர் 2023, 10:55 GMT
புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்த காரணத்தால், ஆட்டம் நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் இந்தியா 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்துள்ளது.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்தது.

 

ஆட்டத்துக்கு இடையே மழை

ஆசியக் கோப்பை இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தொடர்ந்து நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், லேசான மழைதான் என்பதால் ஆட்டம் தடை படாமல் தொடர்ந்து நடந்து வந்தது.

இதற்கிடையே, போட்டி நடந்துகொண்டிருந்தபோது அரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் 'வெற்றிக்கொடி கட்டு' பாடல் ஒலித்தது. அதுமட்டுமின்றி, மேலும் சில தமிழ் பாடல்களும் ஒலிக்கப்படுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

அதன்படி சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று விளையாடி வருகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் ஏற்கெனவே தனது முதல் சூப்பர் 4 சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி இருந்தது. எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

மறுபுறம் சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடும் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும்.

நான்காவது ஓவர் இறுதியில் இந்தியா 25 ரன்களை எடுத்திருந்த நிலையில், மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லாத காரணத்தால் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இருப்பினும், இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

 
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் அவுட் ஆகியிருந்த நிலையில், தற்போது விராட் கோலி, கே.எல்.ராகுல் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான லீக் ஆட்டம் இலங்கையின் பெல்லகெலேவில் நடைபெற்ற நிலையில் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. மழையால் ஆட்டம் ரத்தானதால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

எனவே இன்று நடைபெறும் ஆட்டம் ஒருவேளை மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் தினமாக (Reserve Day) நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காலியாக இருக்கும் இருக்கைகள்

ஆட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்தில் ஏராளமான இருக்கைகள் காலியாகவே உள்ளன. மொத்தம் 35,000 இருக்கைகள் உள்ள நிலையில் 19,000 இருக்கைகள் வரை காலியாக உள்ளன.

இதற்கு டிக்கெட் விலையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பொதுவாக இலங்கை மதிப்பில் 500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும். ஆனால், இந்த போட்டிக்கு குறைந்தபட்சமாக 3000 இலங்கை ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய கடந்த ஆட்டத்திற்கு இலங்கை மதிப்பில் 9000 ரூபாய்க்கு முதலில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. பின்னர் இது 1,900 ரூபாயாக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்டத்திற்கு விலை குறைக்கப்படவில்லை.

அதேநேரம் மைதானத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்க காத்திருந்தும் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

பிபிசியிடம் பேசிய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், நான் 200 கி.மீ. தொலைவில் இருந்து இந்தப் போட்டியைக் காண வந்திருக்கிறேன். டிக்கெட் விலையை அதிகமாகக் கூறுகின்றனர். அப்படியும் டிக்கெட்டை வாங்க முடியவில்லை. ஒருவேளை இலங்கை கிரிக்கெட் வாரியம் டிக்கெட்டை அடிக்கவில்லையா என்று தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலமே டிக்கெட்டை பெற முடிவதாகவும் நேரடியாகச் சென்றால் டிக்கெட் கிடைப்பது இல்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் டிக்கெட் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 3000 இலங்கை ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டின் விலை சற்று முன்பு முதல் 480 மற்றும் 960 இலங்கை ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

https://www.bbc.com/tamil/articles/cyrjjp1j0xpo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கோப்பை 2023: கோலி, கே. எல்.ராகுல் அபார சதம் - இலக்கை எட்டுமா பாகிஸ்தான்?

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இன்று நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

இன்றைய போட்டியில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு 356 ரன்களை சேர்த்துள்ளனர்.

விராட் கோலி 122 ரன்களும், கே. எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து இருவரும் சேர்ந்து 233 ரன்களை எடுத்துள்ளனர். ஆசியக் கோப்பையில் ஒரு ஜோடி சேர்த்த அதிபட்ச ரன்கள் இதுவாகும்.

இது விராட் கோலியின் 47ஆவது சதமாகும். கே எல் ராகுல் ஒரு சிறப்பான கம் பேக் கொடுத்து தனது ஏழாவது சதத்தை எட்டியுள்ளார்.

இதன்மூலம் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது பாகிஸ்தான் அணி.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மேன் கில் ஆகிய இருவரும் முறையே 49 பந்துகளுக்கு 56 ரன்களும், 52 பந்துகளுக்கு 58 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணியில் ஷதாப் மற்றும் ஷஹீன் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை விட்டதும் சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் விடாமல் மழை பெய்ததால், ஆட்டம் திங்கள்கிழமைக்கு (ரிசர்வ் டே) ஒத்திவைக்கப்பட்டது. இன்று பிற்பகலும் கொழும்பில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் ஒரு வழியாக மாலை 4:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 
கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாபெரும் இலக்கை எட்டுமா பாகிஸ்தான் அணி?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான், 357 ரன்கள் என்ற இலக்கே பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரும் அழுத்தத்தை தரும் என்கிறார். அதேசமயம் விராட் கோலி மற்றும் கே. எல். ராகுல் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே. எல் . ராகுல் ஜோடி நேரம் செல்ல செல்ல ருத்ர தாண்டவம் ஆடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாகிஸ்தானை பொறுத்தவரை ஆரிஸ் ரோஃப் உடல் நலக் குறைவு காரணமாக விலகியதால் அவரால் மீதமுள்ள 5 ஓவர்களை வீச முடியவில்லை. இது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய இழப்புதான்.” என கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

“இந்த மைதானத்தின் வரலாற்றை எடுத்து பார்த்தால், இரண்டாவதாக விளையாடிய அணி இதுவரை 300 இலக்கை தொட்டதில்லை. எனவே இந்த இலக்கு பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாகதான் இருக்கும். அதேபோல 357 ரன்கள் இலக்கு என்பதும் பாகிஸ்தான் அணி மீது ஒரு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மழை வந்தால் அதுவும் பிரச்னையாகும்.” என்றார் அப்துல் ரகுமான்.

மழை காரணமாக சாதகமற்ற நிலை காணப்பட்டப் போதிலும் இந்திய அணியால் எப்படி இத்தனை ரன்களை குவிக்க முடிந்தது?

மைதானம் வழக்கத்திற்கு திரும்பிவிட்டது என்பதை ஆட்டத்தை பார்த்தவுடன் தெரிந்தது. ஆனால் பிட்சை பொறுத்தவரை பந்து வீச்சாளர்களுக்கு எந்த வித சாதகமான நிலையும் ஏற்படவில்லை.

இதே பிட்ச், பாகிஸ்தான் அணிக்கும் சாதகமாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இணைந்து வேகமாக ரன் குவித்தால் மட்டுமே பின்னர் வரக்கூடிய வீரர்கள் மீது எந்த அழுத்தமும் செல்லாது என்றார் அப்துல் ரகுமான்.

 
கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழையால் பாதிப்பு ஏற்பட்டால்?

இந்த போட்டி மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டால், போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படும். அவ்வாறு குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கு 187 ரன்கள் இலக்காக வைக்கப்படும். ஆனால் இந்தியாவுடனான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அந்த அணி இறுதிச் சுற்றுக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும்.

இலங்கை அணியும் இந்த சுற்றில் ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது வெற்றிக் கணக்கை இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/c0x561q65d6o



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.