Jump to content

உங்கள் மொபைல் ஃபோன் சூடாகாமல் தடுப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மொபைல் ஃபோன், பேட்டரி, வெப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பேட்டரிகள் சூடானால் விரைவாக சார்ஜ் இழக்கின்றன. அவற்றைக் குளிர்விப்பதும் கடினமாகிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மணீஷ் பாண்டே
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

வெளியே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டபடியே உங்கள் மொபைல் ஃபோனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

திடீரென உங்கள் மொபைல் திரையில், ஃபோன் மிகவும் சூடாகிவிட்டது, அதனால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்ற செய்தி பளிச்சிடுகிறது.

இன்ஸ்டாகிராம் இல்லாமல் இப்போது என்ன செய்வீர்கள்?

நண்பர்களோடு பேசுவீர்களா? காலாற நடந்து உங்கள் பகுதியைச் சுற்றிப்பார்பீர்களா?

 

மனிதர்களைப்போல மொபைல் ஃபோன்களுக்கு வேர்க்காது.

அது நமக்கு நல்லது, ஆனால் ஃபோன்களுக்கு நல்லதல்ல.

மின்னணு சாதனங்கள் ஏன் சூடாகின்றன? இதை எப்படித் தடுப்பது?

 

செல்ஃபோன் சூடானால், வேகம் குறையும்

அதிக வெப்பத்தில் நாம் வேகமாக வேலை செய்யத் திணறுவது போலவேதான் மொபைல் ஃபோன்களுக்கு உள்ளே இருக்கும் ப்ராசஸர்களும்.

ப்ராசஸர் என்பது மொபைல் ஃபோன்களுக்கு உள்ளிருக்கும் ஒரு ‘சிப்’ (chip). ஃபோனின் முக்கியமான செயல்பாடுகளை இதுதான் இயக்குகிறது.

“மின்னனு சாதனங்களின் இயங்க வைக்கும் உள்பாகங்கள், அவற்றின் செயல்பாட்டின் மூலமே வெப்பத்தை உண்டாக்குகின்றன,” என்கிறார் இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைகழகத்தின், மின்னணு பொறியியல் பேராசிரியரான ராஸ் வ்யாட் மில்லிங்க்டன்.

“இந்த சிப்கள் சூடாகும்போது, மேலும் சூடாவதைத் தடுக்கும் வகையில் மொபைல் இயங்கும் வேகத்தைக் குறைத்து விடுகிறது,” என்கிறார்.

பேட்டரி சார்ஜ் சீக்கிரம் குறைவது ஏன்?

மொபைல் ஃபோன், பேட்டரி, வெப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அதிக வெப்பத்தில் நாம் வேகமாக வேலை செய்யத் திணறுவது போலவேதான் மொபைல் ஃபோன்களுக்கு உள்ளே இருக்கும் ப்ராசஸர்களும்

மின்னணு சாதனங்கள் பொதுவாக 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன என்கிறார் பேராசிரியை ராஸ்.

“பேட்டரிகள் ஆற்றலைச் சேமித்து வைக்கின்றன. அவை குறிப்பிட்ட வெப்பநிலையில் வேலை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவை சூடாகச் சூடாக, அவற்றின் வேலைப்பளு அதிகரிக்கிறது. இதனால் அவை அதிக ஆற்றலைச் செலவிடுகின்றன,” என்கிறார்.

இதனால் பேட்டரிகள் விரைவாக சார்ஜ் இழக்கின்றன. அவற்றைக் குளிர்விப்பதும் கடினமாகிறது.

அதேபோல், நாம் வெளியே சூரிய வெளிச்சத்தில் இருக்கும்போது, நமது மொபைல் திரைகளின் வெளிச்சத்தைக் கூட்டுகிறோம். இதுவும் பேட்டரிகளின் செயல்பாட்டை பாதிக்கலாம், என்கிறார்.

மொபைல் திரை ஏன் பாதிக்கப்படுகிறது?

மொபைல் ஃபோன், பேட்டரி, வெப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உங்கள் மொபல்ஃபோனின் திரை திடீரென மாறியிருக்கிறதென்றால், வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம்

உங்கள் மொபல்ஃபோனின் திரை திடீரென மாறியிருக்கிறதென்றால், வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம்.

“குறிப்பாகப் பழைய ஃபோன்களில் ஒரு சிறிய சேதம் இருந்தால், வெப்பம் அதனைப் பெரிதாக்கிவிடும்,” என்கிறார் ராஸ்.

அதேபோல் நாம் மொபைல் திரைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் ‘tempered glass’ கவர்கள் உள்ளே அதிக வெப்பத்தைத் தேக்கி வைக்கின்றன, என்கிறார்.

மொபைல் ஃபோன்கள் சூடாகாமல் பாதுகாப்பது எப்படி?

  • அதிகமாக சார்ஜ் போடாதீர்கள் – சூடாக இருக்கும் ஃபோனை சார்ஜ் செய்தால், அது மேலும் வெப்பத்தை உண்டக்கும்.
  • வெயில் படும் இடத்தில் வைக்காதீர்கள் – நேரடியாக வெய்யில் படும் இடங்களில் மொபைல் ஃபோன்களை வைக்காதீர்கள். குறிப்பாகக் கார்களில் அவற்றை வைத்துவிட்டுச் செல்லாதீர்கள். முடிந்த அளவுக்கு அவற்றை நிழலில் வையுங்கள். முடிந்தால் ஒரு ஃபேனுக்குக் கீழே வையுங்கள்.
  • ஃபோனை இலகுவாக வையுங்கள் – உள்ளேயும் வெளியேயும். அதை கவரிலிருந்து வெளியே எடுத்து வையுங்கள்.
  • தேவையற்றச் செயலிகளை நிறுத்திவிடுங்கள். “உதாரணமாக நீங்கள் ஜி.பி.எஸ் பயன்படுத்தவில்லையெனில், வேறேதாவது செயலியைப் பயன்படுத்தவில்லையெனில், அவற்றை நிறுத்திவிடுங்கள். ஏனெனில், குறைவான செயலிகளைப் பயன்படுத்தினால், குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறீர்கள். அதனால் உங்கள் மொபைல் ஃபோன் குறைவான வெப்பத்தை உண்டாக்கும்,” என்கிறார் ராஸ்.
மொபைல் ஃபோன், பேட்டரி, வெப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நேரடியாக வெய்யில் படும் இடங்களில் மொபைல் ஃபோன்களை வைக்காதீர்கள்

  • Low Power Mode-ஐ உபயோகியுங்கள் – எவ்வளவு குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறீகளோ, உங்கள் மொபைல் அவ்வளவு நலமாக இருக்கும். “உங்கள் மொபைல் சூடாகித் திணறிக்கொண்டிருக்கிறதென்றால், அதனை சில நிமிடங்கள் ஆஃப் செய்துவிட்டு, அதன் வெப்பம் குறைந்ததும் ஆன் செய்யுங்கள்.”

 

  • ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்! – “உங்கள் ஃபோனை ஃப்ரிட்ஜிலோ, ஐஸ் கட்டிகளிலோ வைக்காதீர்கள். அது கண்டிப்பாக உதவாது.” சட்டென மாறும் வெப்பநிலைகள் ஃபோன்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஐஸ் கட்டியில் இருந்து வரும் நீர், ஃபோனில் தேங்கும் அபாயமும் உள்ளது. ஃபோன்களுக்குள் அதிக வெப்பத்தைத் தடுக்கும் வழிமுறை உள்ளது, இது அவை சேதமடைவதைத் தடுக்கும், என்கிறார் ராஸ்.

https://www.bbc.com/tamil/articles/c2qg7yr7zxpo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.