Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப் படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்தன. 

இந்த வேளையில் லெப். கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது சிறிலங்காக் கடற்படையினரின் டோறாக் கலங்கள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர் அக்கடற்புலிகள். சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் லெப். கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்திக்கொண்டிருக்க இவர்களுக்கு உதவியாக லெப். கேணல் பகலவன், மேஜர் ஆழியன் மற்றும் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி ஆகியோர்களின் வழிநடாத்தலில் ஒரு முறியடிப்புத் தாக்குதலை கடற்புலிகள் மேற்கொண்டனர். 

இத் தாக்குதலின் போது சமராடிக்கொண்டிருந்த சிங்களக் கடற்படைக்கு மேலதிக உதவியாக திருகோணமலையிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் வந்த டோறாப்படகுகள் மீதும் உக்கிர மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 

ஒருகட்டத்தில் டோறாப் படகொன்று கடற்புலிகளின் சுற்றிவளைப்பிற்குள் வந்து வசமாக மாட்டிக்கொண்டது. இதைக் கட்டளை மையத்திலிருந்து ராடர் மூலம் அவதானித்த சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆக்ரோசமான கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்த கடற்புலிகள் கடுமையாகச் சமராடி அவ்டோறாவை கனரக ஆயுதங்களாலும் பிற ஆயுதங்களாலும் தாக்கி மூழ்கடித்தனர். 

தொடர்ந்த மோதலில் கடற்படையினருக்கு உதவியாக விமானப்படையினரும் தாக்குதல்களைத் தொடுத்தனர்.

இவைகளுக்கும் மத்தியில் தொடர்ந்த கடும் கடற்சமரில் மற்றொரு டோறா சேதமடைந்து நின்றது. அவ்டோறா மீது தாக்குதல் நடாத்தி மூழ்கடிக்க முற்பட்டவேளையில் லெப். கேணல் ஆண்டான் உட்பட சில போராளிகள் வீரச்சாவடைந்தனர். இருந்தபோதிலும் ஏனைய கடற்புலிகள் விடாமல் தொடர்ந்து சமர்புரிந்து அவ்டோறாவையும் மூழ்கடித்தனர். 

பெரும் வெற்றியோடு ஏனைய சண்டைப்படகுகள் ஆண்டானின் சண்டைப்பகை மீட்டு தளம் திரும்பினர். 

ஆறு மணித்தியாலயமாக இடம்பெற்ற இவ் வெற்றிகரச் சமரில்,

  1. லெப். கேணல் ஆண்டான்
  2. மேஜர் அமுதப்பிரியா
  3. மேஜர் மதிவண்ணன்
  4. மேஜர் மருதா
  5. கப்டன் சோபனா
  6. கப்டன் சத்தியரூபி
  7. கப்டன் இளஞ்சேரன்
  8. கப்டன் குயில்மாறன்
  9. கப்டன் சேசிகா
  10. லெப். மதிவதனன்
  11. லெப். குட்டிக்கண்ணன்
  12. 2ம் லெப். கலைமுகிலன்
  13. வீரவேங்கை மதியழகன்

ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

 

https://www.thaarakam.com/news/135480

 

breaking

Edited by நன்னிச் சோழன்
  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இக்கடற்சமரின் போது சேதமடைந்த லெப். கேணல் ஆண்டானின் படகில் அவர் உட்பட சில போராளிகள் வீரச்சாவடைந்தும் சில போராளிகள் காயமுமடைந்திருந்தனர். அந்நேரத்தில் இரு பெண் போராளிகள் மட்டும் நல்லநிலையில் இருந்ததால் படகை பகைவரிடம் சிக்க விடாமல் இருக்க தம்மால் ஆன அத்தனையையும் முயற்சித்தனர். 

ஒரு பெண்போராளியின் தீரத்தால் படகு நிலையெடுத்து அசையத்தொடங்கியது. அவர் ஆழ்கடல் அலைகளுக்குள்ளால் படகை செலுத்தினார். அந்நேரத்தில் மற்றைய பெண் போராளி தம் படகை நெருங்கும் பகைக் கலத்திற்கு வலுவெதிர்ப்புச் சூடுகளை வழங்கினார். அதே நேரம் இவர் சண்டைவண்டியை சீர்படுத்துவது, படகின் நிலைமையை கவனிப்பது, விழுப்புண்ணடைந்தவர்களுக்கு துணிகட்டுவது என பல பணிகளை தனி ஒருத்தியாக செய்தார்.  

அன்றை இவர்களின் தீரத்தால் தான் அச்சண்டைவண்டி சேதமடைந்திருந்த போதிலும் கரையேறியிருந்தது.

-------> சுதந்திரப் பறவைகள் ஆவணி, 2000 பக்கம் 9

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.