Jump to content

ஏன் இந்தியா? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தியா?

யதீந்திரா

 

தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள் ஆயுத இயக்கப் பின்புலம் கொண்டவர்கள். ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகுடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் இந்தியாவிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கோரியிருக்கின்றனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்திய தலையீட்டையே, அவர்கள் கோருகின்றனர். அவர்களது கடிதம் அந்த அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. அதற்காக தமிழர் தரப்பிலிருந்து நீண்டகாலமாக கோரப்படும் சமஸ்டித் தீர்வை அவர்கள் நிராகரிக்கவில்லை ஆனால் முன்னோக்கிச் செல்லுவதற்கான ஒரு ஏற்பாடாக, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். தர்க்கரீதியில் இது சரியானது.

அடுத்த நிலைப்பாடு சிக்கலானது. புத்திசாலித்தனமற்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இந்தியா சமஸ்டித் தீர்வை வலியுறுத்தவேண்டுமென்று கோரியிருக்கின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் அணுனுமுறையிலும் இவ்வாறான போக்கே தெரிகின்றது. கஜேந்திரகுமார் அவ்வாறானதொரு கடிதத்;தை எழுதியிருப்பதால், அதற்கு சமதையான நிலைப்பாட்டைத்தான், தாங்களும் எடுக்க வேண்டுமென்று சம்பந்தன் கருதியிருக்கலாம். தமிழர்களின் கோரிக்கையென்று ஒன்றை முன்வைக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்ற போது, இந்தியாவை புரிந்துகொண்டு, அதற்கேற்பவே அணுக வேண்டும். எங்களது விருப்பங்களை கூறுவது கோரிக்கையல்ல. கோரிக்கைகளை முன்வைக்கும் போது, அதில் தந்திரோபாயம் இருக்க வேண்டும். அதே வேளை, இந்தியாவினாலும் நிராகரிக்க முடியாத விடயமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாங்கள் பிறிதொரு நாட்டிடமே கோரிக்கையை முன்வைக்கின்றோம். இந்த இடத்தில்தான் இந்தியா எங்களுக்கு ஏன் தேவையனெனும் கேள்வி எழுகின்றது?

இதனை இரண்டு நிலையில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, இலங்கை அரசியல் நிலையிலிருந்து நோக்குவது. இரண்டாவது, சர்வதேச அரசியல் பின்புலத்திலிருந்து நோக்குவது. முதலில் இலங்கை அரசியலை புரிந்துகொள்வோம். இலங்கைத் தீவின் அரசியலென்பது சிங்கள மேலாதிக்க அரசியலாகும். தென்னிலங்கை மைய அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ள, சிங்கள அரசியல் சமூகம் தயாராக இல்லை. இன்றுவரையில் இந்த நிலைமை தொடர்கின்றது. இந்த இடத்தில்தான், இந்தியாவின் தலையீடு தேவைப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுத்துவரும் நிலையில்தான், இந்தியாவின் அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. இந்தியா எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்? எந்த அடிப்படையில் பிரயோகிக் முடியும்?

இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியான தலையீட்டைச் செய்த காலத்திலிருந்து ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதாவது, இலங்கையை துண்டாட அனுமதிப்பதில்லை. அடுத்தது, தமிழ் மக்கள் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கில் மாகாண அரசியல் நிர்வாக முறையின் கீழ் அதிகாரப்பகிர்வு. இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்துதான், இலங்கையின் உள் விவகாரத்தை இந்தியா அணுகி வருகின்றது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்த கொள்கையின் அடிப்படையில்தான் உருவானது. இதன் பின்னர் எதிர்பாராத திருப்பங்கள் சில அரசியலில் இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிற்கு எதிராக திரும்பியது. இந்தியாவை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதை ஒரேயொரு இலக்காகக் கொண்டே விடுதலைப் புலிகள் செயற்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை தந்திரத்தோடு கணித்துக் கொண்ட, பிரேமதாச விடுதலைப் புலிகளை அரவணைத்து, இந்தியாவை வெளியேற்றும் திட்டத்தை வகுத்தார். அவரது எதிர்பார்ப்பு இறுதியில் நிறைவேறியது.

spacer.png

இதன் பின்னர் இலங்கையின் அரசியல் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்யவில்லை. உண்மையில் இந்தியா இந்த விடயத்தில் அவமானகரமாகவே வெளியேற நேர்ந்தது. எந்த மக்களுக்கு இந்தியா உதவ முன்வந்ததோ, எந்த மக்கள் மீது பரிவுணர்வு கொண்டிருந்ததோ, எந்த இயக்கத்திற்கு பயிற்சியும், ஆயுதமும், உணவும் வழங்கியதோ, அவர்களே இறுதியில், இந்தியாவை அன்னிய சக்தியென்று கூறி, வெளியேறுமாறு கூறினர். அவ்வாறு கூறிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியர், அன்ரன் பாலசிங்கம், பின்னர், இந்தியா எங்களுக்கு தேவையென்று கூறினார். 2000ஆம் ஆண்டு, இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டார். 2006இல், மன்னிப்பு கோருவதன் மூலம் பழைய கசப்புனர்வை மாற்றியமைக்கவும் முயற்சித்தார். ஆனால் அப்போது, காலம் அதிகம் கடந்திருந்தது. இன்று யுத்தம் நிறைவுற்று 14 வருடங்களாகிவிட்டது. இந்த 14 வருடங்களில், ஏராளமான விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இந்த நிலையில்தான், இந்தியாவினால் தலையீடு செய்யக் கூடிய விடயமொன்றில், இந்தியாவை தலையீடு செய்யுமாறு கோர வேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது.

இந்தியா தலையீடு செய்யக் கூடிய, அதன் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரேயொரு விடயம், 13வது திருத்தச்சட்டம் மட்டும்தான். இலங்கைக்கு விஜயம் செய்த, இந்திய பிரதமர் மோடி, கூட்டுறவு சமஸ்டி முறைமையின் மீதான தனது ஈடுபாட்டை தெரிவித்திருந்தார். அதனை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு, இந்தியாவிடம் சமஸ்டியை வலியுறுத்தலாமென்று எண்ணுவது தவறு. ஏனெனில் இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடாக 13வது திருத்தச்சட்டமே இருக்கின்றது. அதிலிருந்து ஒரு கூட்டுறவு சமஸ்டியை நோக்கிச் செல்ல முடியுமென்றால், அது சிறப்பானது. அதற்கு நாங்கள் முயற்சிக்கலாம் ஆனால் அதனை இந்தியா தட்டில் வைத்து தரவேண்டுமென்று வாதிடுவதும், அதற்காக தற்போதிருப்பதை உச்சபட்சமாக பயன்படுத்திக்கொள்ள மறுப்பதும்தான் தவறானது.

இப்போது சர்வதேச அரசியல் பின்புலத்தில், இந்தியாவின் தேவையை நோக்குவோம். இன்றைய உலக அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. அன்று எதிரணிகளில் இருந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது ஒரணியில் இருக்கின்றன. அன்று, அமெரிக்காவுடன் இணைந்திருந்த சீனா, இன்று அமெரிக்காவிற்கு எதிர்நிலையிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் பிராந்தியத்தில் சக்தி மிக்க நாடுகளாக இருப்பவற்றின் முக்கியத்துவம் முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அதிகரித்துவிட்டது. ரஸ்ய -உக்ரெயின் யுத்தத்தின் போது, இந்தியாவின் அணுகுமுறை இதற்கு சிறந்த உதாரணம். உக்ரெயினுக்கு பக்கபலமாக மேற்குலகம் நிற்கின்றது.#

spacer.png

அமெரிக்கா தொடர்ந்தும் உக்ரெயினுக்கு உதவி வருகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கின்ற இந்தியா, இந்த யுத்தத்திலிருந்து தன்னை அதிகம் விலத்தி வைத்திருக்கின்றது. அமெரிக்கா ரஸ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்திருக்கின்றது. ஆனால் இந்தியாவோ, சுதந்திரமாக ரஸ்யாவுடன் வியாபாரம் செய்கின்றது. இது எவ்வாறு நிகழ்கின்றது? ஏனெனில், உலகம் அதிகம் பிராந்திய மயப்படுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் முன்னர் அவ்வாறில்லை. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த காலத்தில், அது சோவியத் யூனியனுடன் நட்பிலிருந்தது. சோவியத் யூனியனுடனான பாதுகாப்பு உடன்பாட்டை ஒரு கவசமாகக் கொண்டுதான், இந்திராகாந்தி, தெற்காசி அரசியலில் சுயாதீனமாக இயங்கினார். கிழக்கு காக்கிஸ்தானை உடைப்பதற்கான இந்திய நகர்வின் போது, அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கும் நோக்கிலேயே, சோவியத் யூனியனுடன், இந்தியா அவ்வாறானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. இன்றைய அரசியல் சூழல் தலைகீழாகிவிட்டது. சோவியத் யூனியனின் செல்வாக்கு வளையத்திற்குள் இருந்த காலத்திலேயே, இந்தியாவை மீறி, செயற்படாத, அமெரிக்கா எவ்வாறு இப்போது செயற்படும். அமெரிக்காவின் அசைவின்றி, மேற்குலகின் தலையீட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. இவ்வாறானதொரு சூழலில், இந்தியாவை தவிர்த்து, ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்விற்கான அழுத்தங்களை எதிர்பார்க்கலாமா?

எனவே இலங்கையின் அரசியல் பின்புலத்தில் நோக்கினாலும், இந்தியா எங்களுக்குத் தேவை. சர்வதேச அரசியல் பின்புலத்தில் நோக்கினாலும் இந்தியா எங்களுக்குத் தேவை. இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி, ஈழத் தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்போதுமே, ஏற்படப் போவதில்லை. இந்த விடயங்களை சரியாக புரிந்துகொண்டால், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது. இந்தியாவிடம் செல்லாமல் வேறு எங்கு சென்றும் பயனில்லை. இந்தியாவை தவிர்த்து இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அரசியல் தீர்வு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. இதனை நினைவில் நிறுத்திக்கொள்வது அவசியம்.

 

http://www.samakalam.com/ஏன்-இந்தியா/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
    • வோல்ஸ்ரிட் ஜெனர்ல்ட் இல் ட்ரம்பின் தற்காலிக போர் நிறுத்த முன்வடிவம் பற்றி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதன் படி அமெரிக்கா தொடர்ச்சியாக உக்கிரேனுக்கு அயுத வழங்கும் எனவும் அதற்கு கைமாறாக உக்கிரேன் 20 ஆண்டுகள் நேட்டோவில் இணையமாட்டேன் என உறுதிப்பிரமானம் எடுக்கவேண்டும் எனவும், அது தவிர இரஸ்சியா தற்போது ஆக்கிரமித்துள்ள பகுதிகளை இரஸ்சியா உரிமை கொள்ளலாம் இரண்டு நாட்டுக்குமிடையே 800 மைல்கள் உள்ள இராணுவ அற்ற வலயத்தினை அமெரிக்க கூட்டாளிகள் கண்காணிப்பார்கள். இதனை உக்கிரேன் ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கான ஆயுத வழங்கல் நிறுத்தப்படும், மறுவளமாக இரஸ்சியா ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கு அதிக ஆயுதம் வழங்கப்படும். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://meduza.io/en/news/2024/11/07/wsj-reports-that-trump-is-reviewing-ukraine-peace-plan-options-that-cede-all-occupied-territory-to-moscow-suspend-nato-expansion-and-create-dmz https://kyivindependent.com/trump-ukraine-plan-wsj/ இதனை இரஸ்சியா ஏற்றுக்கொண்டால் இலங்கையில்  நோர்வே பேச்சுக்காலத்தில் ஒரு தரப்பினை பலப்படுத்தி அதற்கான கால அவகாசத்தினை பேச்சுவார்த்தை என்பதன் மூலம் பெற்றுக்கொண்டு பின்னர் போரினை ஆரம்ம்பித்து மறு தரப்பினை தோற்கடித்தது போல ஒரு சூழ்நிலை உருவாகும்.  மறுவளமாக இரஸ்சியா 2022 முன்னர் செய்த ஒப்பந்தத்தினை ஏற்று கொள்ள விரும்பும் அதற்காக தற்போது கைப்பற்றிய இடங்களையும் விட்டுக்கொடுக்கும், உக்கிரேன் நிரந்தரமாக நேட்டோவில் இணைய கூடாது உக்கிரேன் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேணப்பட வேண்டும் எனும் நிபந்தனைகளை வலியுறுத்தலாம். அது உக்கிரேனும் அணுகூலம் இரஸ்சிய பாதுகாப்பிற்கும் அனுகூலம் எல்லையில் மேற்கு நாட்டு அமைதி படைகளை அனுமதிப்பது என்பது இரு நாடுகளுக்கும் ஆபத்தான விடயமாகும். இவற்றை பார்க்கும் போது போர் முடிவடையாது இன்னும் மோசமாக தொடர்வதற்கே வாய்ப்பு அதிகம், பைடன் அரசினை விட ட்ரமின் ஆட்சிக்காலத்தில் போர் மேலும் உலகெங்கும் தீவிரமடையலாம்.
    • இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!
    • அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின்(Donald trump) பதவியேற்பதற்கு முன்னதாக, உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையுடன், ஜோ பைடன்(Joe Biden) ஜனவரி மாதம் பதவி விலகுவதற்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பிலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கீழ் ஜனாதிபதி உக்ரைன் வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்கான ஆதரவின் எதிர்காலம் தொடர்பிலும் கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். பைடனின் உதவி இதில் உக்ரைனுக்கான பைடனின் உதவியை ட்ரம்ப் மேற்கோள்காட்டியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு இடம்பெற்ற சந்திப்பொன்றில் உக்ரைன் - ரஷ்ய மோதல் அமைதிபெற ஜெலன்ஸ்கி விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். உக்ரைன் அரசாகங்ம் எனினும் அதை உக்ரைன் அரசாங்கம் மறுத்திருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகளை புதிய அமெரிக்க ஜனாதிபதி கட்டுபடுத்தினால் உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://tamilwin.com/article/us-ready-to-provide-aid-to-ukraine-1730957383#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.